Monday, May 16, 2005

கணம் - 464

சச் சச் சச்

சச்சரித்துக்கொண்டிருந்தன எலிகள் - விட்டால்,
பற்கள் பெருகிச் செத்திடுவோம் என்னுமாப்போல்,
தம் முலகிற் சஞ்சரித்து, தலை
தட்டுத் தடவெனத் தாளமிட்டுக்
கை கொட்டிக் கொட்டிக்
குதூகலமாய்க் கூட்டம்போட்டு.

வழவழத்தோடி, வழி சறுக்கி, சொற்சலம் பெருக்க, ஒட்டித் தூக்கினேன் கால்;
கொழகொழத்து வெளிக்கொட்டாமல், பல்லிடுக்கு ஒட்டிய துளிச் சொற்கள்
எகிறி, எட்டிக் குந்தின என்மீதும் குத்தின கூர்ந்தம்பால்.

சிற்றெலி சிதறப் பொறுக்கி வாய்
பேரெலி போட்டுப் போட்டதொரு பேரொலி கேட்டுப்
பார்த்தால், மிச்ச எலியெல்லாம் பேரொலி பிரித்துப்
பிளந்தன; பேசின; பின்னெல்லாம், பிய்த்த எச்ச சொச்ச
எதிரொலியிருந் தெழுந்தும் பிறந்தன பறந்தன பெரிதென,
பெயர், வினை, எச்சம்; எச்சத்துப் பிறவினை; வினையணை பெயர்...
... பல் தத்திடத் தடங்கிட, தாளம் சொல்......சச்சிட; சச் சச்;
சச் சச் சச்; சட சச்; சச் சச்; ச் ச் ச்; சச் சட் சட சட..

நிறுத்தம் வந்தது; இருக்கை வெளிக்க, எட்டினேன்; இறங்கினேன்.
தரித்தொரு கணம், முறித்து, தலை திருப்பிப் பார்த்தேன்;
முண்டியடித்துள் ஏறின மூவருள், சொல்லெலிச்சச்சரவால்
எட்டு வரியேனும் எவர் எழுதுவார் இனிக் கவி?

'05 மே, 16 திங். 15:20 கிநிநே.

10 comments:

SnackDragon said...

சச் சச் சச்; சட சச்; சச் சச்; ச் ச் ச்; சச் சட் சட சட.. :-)

இளங்கோ-டிசே said...

//முண்டியடித்துள் ஏறின மூவருள், சொல்லெலிச்சச்சரவால்
எட்டு வரியேனும் எவர் எழுதுவார் இனிக் கவி?//
:-)))

சுந்தரவடிவேல் said...

ஆருமிலா வெளியெனில் 'அச்சச்சோ
மௌனப் பூனை பாய்ந்து
மேல்விழுந்து பிராண்டு' தென்பீர்!
வாரக்கடை சுட்ட கோழி
வெட்டுநகம் நட்டசெடி
கத்தரித்து விட்ட மயிர்
பேசிப் போனாலெலியாம்
சச்சச்சாம், அச்சச்சோ பெயரெலியே:))

-/பெயரிலி. said...

எழுதியதை வைத்துப்பார்த்தால், சுந்தரவடிவேலரும் அதே எலிகளிடம் ஏதோவொரு சமயத்திலே அகப்பட்டிருப்பது தெள்ளெனத் தெளிவாகிறது. :-)

சச் சச் சச்! சட சச்!!

சுந்தரவடிவேல் said...

//ஏதோவொரு சமயத்திலே//
தினம் சாரே, பொழுது விடிஞ்சா பொழுது போனா. இப்போ எனக்கு யாராரு வீட்டுப் பூனைக்கு என்ன பேரு, நாய்க்கு என்ன பேருன்னு தெரியுமாக்கும்!

-/பெயரிலி. said...

அதாவது பரவாயில்லை; எனக்கு சீனாவிலே ஒரு குக்கிராமத்திலே எந்தப்பொடியன் எந்தப்பெட்டையைக் கட்டியிருக்கிறான், எப்ப பிள்ளை பிறக்கப்போகுது எண்ட வேண்டாத தரவெல்லாம் தலைத்தரவுத்தளத்துக்குள்ளை நுழையுது. பிள்ளை பிறந்தால், நான் வாழ்த்துமடல் அனுப்ப முகவரி தெரியாததுமட்டுந்தான் குறை ;-)

SnackDragon said...

எலிக்கென்ன ?
பெயரிலி கண்டு சடுதியில்
பெயரவேண்டும் என்ற கிலியோ?
என்ன ஜோலியோ ?
சரியாத்தான் கேட்டீரா ?
சப்தஸ்வரத்தையும்!!
சங்கீதமோ சச்சரவோ?
சரிநிகராய் கவிபாட சம்மதமோ?
சல்லாபத்துக்கொரு அவசரமோ?
எலியாரே எலியாரே ஏது சொல்வீர்
மானுடன் நின்று கொல்வான் என்ற
நீதி போதம் சொல்லும் பெருமொழியோ? :))

SnackDragon said...

//அதே எலிகளிடம் **ஏதோவொரு சமயத்திலே** அகப்பட்டிருப்பது தெள்ளெனத் தெளிவாகிறது. :-)//

சுந்தர் சொல்வது:

அருமை என் நண்ப
கருமைநிற எலி நண்ப!
என்னாசை பத்தினியோ அருகில்லை
காதலிலே எனக்கிங்கே உறக்கமில்லை;உணவில்லை
ஆதலாலே தருவாயோ ?
உனக்கிட்ட ஒரு துண்டு
தேன் தடவிய தேங்காய் பத்தை?
உன் கூண்டு உன் சொத்து;
எனக்கோ வாழ்க்கைச் சிறைக் கூண்டு
எனக்கும் உனக்கும் பசி போக்கவென்
பத்தினி வரவேண்டும் என்று வேண்டு; சுளுவில். :-)))))

SnackDragon said...

Testing comment 1 2 3 சச் சச் சச்;

-/பெயரிலி. said...

செர்ரீ, வேலை செய்யுது. கவலைப்படாதையுங்கோ