Monday, May 02, 2005

चिन्तय

काते कान्ता कस्ते पुत्रः
संसारोऽयमतीव विचित्रः ।
कस्य त्वं कः कुत आयातः
तत्त्वं चिन्तय तदिह भ्रातः ॥८॥


काते =
कान्ता
कस्ते
पुत्रः
संसारः
अयं
अतीव
विचित्रः
कस्य
त्वं
कः
कुतः
आयातः
तत्त्वं
चिन्तय ;-) = think well; consider ;-)
तदिह
भ्रातः



Lunch on Steps


Lunch time @ Northeastern
'05 May 02, 12:37 EST


22 comments:

SnackDragon said...

கேள்வியின் நாயகனே உந்தன் கேள்விக்கு பதிலேதடா!!

சுந்தரவடிவேல் said...

அதை ஏன் இங்கே போட்டிருக்கிறீர்களென்று மரச்சிந்தையிலே ஏறவில்லை!

-/பெயரிலி. said...

चिन्तय ;-)
எல்லாம் தமிழ்மணக்கவேண்டுமென்ற ஆசையிலேதான்; படங்களுக்குச் சுருக்கமாகத் தமிழிலே தலைப்பினைப் போட்டால், தமிழ்மணம் மோப்பம் பிடிப்பதாகத் தெரியவில்லை; பேசாமல், அருமையாகத் தமிழினை உச்சரித்த எழுதின நமது சௌந்தரராஜன், வெங்கட்ராம் பெயரைச் சொல்லி சௌராட்ஸ்ரமொழியிலே போட்டேன்; தமிழ்மண மோப்பம் பிடிக்கப்பட்டுவிட்டது. ;-)

Mookku Sundar said...

எனக்கே இரண்டு மூன்று நாட்களாக இதைக் கண்டு எரிச்சலாக இருந்தது. முன்னர் ஒரு முறை இதைப் போல இன்னொரு பதிவைப் பற்றி காசியிடம் கேட்டபோது, தமிழ்மணத்திலே வருகின்ற எல்லாம் தமிழிலே வர வேண்டியதில்லை என்ற ரீதியில் பதில் சொன்னார். ( பெங்களூர் - கார்த்திக்கின் விஜயநகரம் வலைப்பதிவு)

நமக்கெதற்கு வம்பு என மூடிக்கொண்டு பேசாதிருந்து விட்டேன்.

கறுப்பி said...

அட என்ன இது பெயரிலியின் புளொக்கில் துணி தோச்சுக் காயப்போட்ட மாதிரி எதுவோ தொங்குதெண்டு பாத்தா? (*_*)

நல்லா விளங்குது. இப்பிடியே தொடந்தும் நிறம்ப எழுதுங்கோ.


மூக்கன்

//முன்னர் ஒரு முறை இதைப் போல இன்னொரு பதிவைப் பற்றி காசியிடம் கேட்டபோது, தமிழ்மணத்திலே வருகின்ற எல்லாம் தமிழிலே வர வேண்டியதில்லை என்ற ரீதியில் பதில் சொன்னார்.\\
ஆ அப்பிடிச் சொன்னாரா காசி?

//நமக்கெதற்கு வம்பு என மூடிக்கொண்டு பேசாதிருந்து
விட்டேன்.\\ he he he காசி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தமிழ்மணத்தில் இப்போது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அல்லது 99% ஆங்கிலப் பதிவுகள் தெரிவதில்லை. என்னுடைய கடைசிப்பதிவும்
[http://mathy.kandasamy.net/musings/2005/04/30/189 ] தமிழ்மணத்தில் தெரியவில்லை. ஏனைய மொழிகளில் [உதா: ஹிந்தி] பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காசி வழி செய்வார். அதுவரை இந்த உதவி அட்மின்கள் நீக்குவார்கள். பிற மொழிப்பதிவுகளைக் கண்டால் கொஞ்சம் அந்த சிவப்பு x ஐப்பயன்படுத்தி உதவுங்கள். காசி ஊரில் இல்லாததால், இன்றைய குழப்பத்துக்கு நான் பொறுப்பு!

ரமணி: புகைப்படம் மட்டும் இல்லாமல் ஏதாவது கூட எழுதி அனுப்புங்கள். காசி இதைப்பற்றிய எழுதிய பதிவைத் தேடிப் பார்த்துவிட்டு எழுதுகிறேன். பிறகு கண்டு பிடித்தால் சேர்க்கிறேன்.

தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது வலைப்பதிவிலோ, தமிழ்மணம் 'மன்றம்'இலோ இதைப்பற்றிய பதிவு இருக்கும். மூக்கன் பழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழைய வி்ஷயத்தை ஞாபகம் வச்சுட்டு இருக்கீங்க. கொஞ்சம் updatedஆ இருக்கலாமோ இல்லியோ?

மூக்கன், உங்களுக்கும் தனியாகச் சொல்லிவிடுகிறேன். thamizmanam.com/tamilblogs இல் ஒவ்வொரு பதிவுக்கும் பக்கத்தில் இருக்கும் சிவப்பு நிறக்குறியீட்டை அழுத்தி வி்ஷயத்தைத் தெரியப்படுத்தினால் கூடியசீக்கிரம் செய்ய முடியும். பிற மொழிப் படைப்புகளைக் கண்டால் அறியத் தாருங்கள்.

மிச்சமீதி, காசி வந்து சொல்வார்(என்று நினைக்கிறேன்).

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Ramani,

could you please edit the post and add something in Tamil?

thanks Ramani

-/பெயரிலி. said...

மூக்கரே,
காசி அண்ணன் எனக்கு முதுகிலே பதிந்து கொல்லமுன்னால், இதைப் பதிந்துகொள்கிறேன் ;-)
காசியின் தன்னார்வத்தமிழ்மணத்திலே தமிழ்ப்பதிவு என்ற எண்ணம் நியாயமானதும் அவசியமானதும்; அதேநேரத்திலே ஆங்கிலம் தவிர்ந்த மற்றைய மொழிகள் (சில பதிவாளர்களின் theமுள், ஜெர்மன், சௌராஷ்டம், பிரெஞ்சு உள்ளக்கடமாக) இதனுள்ளே வருவதைத் தடுப்பதும் மிகக்கடினம். எல்லாவற்றுக்கும் பார்த்து நிரலி எழுதுவது இன்றைய நிலையிலே கடினம். வேண்டுமானால், மற்றைய மொழியிலும் பதியும் பதிவாளர்கள், தாமாய்ப் பார்த்து அடுத்த மொழிக்கு இன்னொரு பதிவு என்று ஆக்கிக்கொள்ளுதலே சிறப்பு (ஆனால், நாம் வற்புறுத்தமுடியாது). காசி தமிழ்ப்பதிவு குறித்த விளக்கமும் வாசித்திருந்தேன். ஆனால், படங்களுக்குத் தலைப்பினைப் போடும்போது, தமிழ்மணத்திலும் சேரவேண்டுமென்பதற்காக, விரித்துபோட உள்ளம் (அனிச்சம்பூவிலும் மெலிந்ததாம் என்னுள்ளம்) இடம் கொடுக்கவில்லை. அதற்கேதாவது நாம் செய்தாகவேண்டும். யோசிக்கிறேன், யோசிக்கிறேன், யோவ் சித்துக்கொண்டிருக்கிறேனில்லை பித்தே கொண்டிருக்கிறேன்......... போகிறபோக்கிலே, படத்துக்குக் கதைவசனமும் மேலே எழுதிப்போடலாமா என்றதாகவும் எண்ணம் கொண்டு யோசிக்கிறேன், யோசிக்கிறேன், யோவ் சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்

Anonymous said...

உங்களை மாதிரி படம் போடுறது கடினம் தான் பெயரிலி. எப்பிடி எடுக்கிறனிங்கள் எண்டு தெரியேல்லை. நான் போட்ட பதிவு ஒரு பம்பலுக்கு செய்தது தான்

-/பெயரிலி. said...

மதி,
நன்றி. என் முன்னைய உள்ளிடுகையைக் காணவும். இது காசிக்குப் போட்ட பதிவில்லை. காசில்லாமல் மீதி மொழிப்பதிவாளருக்குச் சாடைமாடையாகச் சொன்ன சஜஸன் :-)

/என்னுடைய கடைசிப்பதிவும் [http://mathy.kandasamy.net/musings/2005/04/30/189 ] தமிழ்மணத்தில் தெரியவில்லை./
அப்படியா? அப்படியே இனி எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே போட்டுவிடுங்களேன் :-)))

Anonymous said...

//யோசிக்கிறேன், யோவ் சிரித்துக்கொண்டேயிருக்கிறேன//்
:D :)

-/பெயரிலி. said...

/நான் போட்ட பதிவு ஒரு பம்பலுக்கு செய்தது தான் /
நான் போட்ட பின்னூட்டமும் பம்பலுக்குப் போட்டதுதான். ஆளை விடுங்கோ குழைக்காடரே... நல்ல பெயர் குழைக்காடர்; பேசாமல் தழைவனாந்திரன் வால்வானரனெண்டு நானும் இன்னொரு பேரை வைக்கப்போறன்.

Mookku Sundar said...

அவசரத்திலே ரமணியின் பதிவுக்கு நேரே உள்ள "தடை செய்க" சின்னத்தை அமுக்கி விட்டேன். ( நல்ல காரியமோ..?!!!) பழைய இந்திப் பதிவுகளைக் காணவில்லை. மறுமுறை கண்டால் சரியான பதிவில் பொத்தானை அமுக்கி விடுகிறேன்

காசியைக் குறை சொல்ல முயலவில்லை. பழைய விஷயம் ஞாபகம் வந்ததால், அனிச்ச மனசுக்காரருக்கு உபயோகமாகுமே என சொல்லத் தோன்றிற்று. காசி ஊரில் இல்லாததும் தெரியாது. இருந்தால் இப்படி நடந்திருக்குமா.?? :-). யாரப்பா(ம்மா) Backup admin..?? :-)

-/பெயரிலி. said...

மூக்கரே, உம்முடைய படத்தைப் பதிலிலிலே போட்டும் வருகிறதே ;-)
என்னது! காசி ஊரிலே இல்லையா? அடச் சே! ஆமைமாதிரி தலையை உள்ளுக்கு எடுக்காமல் துணிந்து ரெண்டு திட்டாவது திட்டியிருப்பேனே :-)

Anonymous said...

\\விடுங்கோ குழைக்காடரே... நல்ல பெயர் குழைக்காடர்; பேசாமல் தழைவனாந்திரன் வால்வானரனெண்டு நானும் இன்னொரு பேரை வைக்கப்போறன். \\என்ன இப்படி சொல்லுறீங்க.............கறுப்பி சிவப்பி பெட்டை பொடிச்சி டுபுக்கு எண்டைல்லாம் பெயர் இருக்கு தானே.................இதுகளில நம்மடை பெயர் பறுவாயில்ல போல

SnackDragon said...

இந்த மாதிரிதான் எதையாவது போஸ்ட் பண்ணி, மொத்த ப்ளாக்கர்.கொம்-ஐயே கெடுத்துவிடுவது.
பெயரிலி நீங்க செய்வது கொஞ்சம் கூட நல்லால்லே. ;-)

SnackDragon said...

என்னது! காசி ஊரிலே இல்லையா?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பெயரிலி, நீங்கள் எதற்காக இந்தப் பதிவை இட்டிருப்பீர்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

சிறிதும் சம்பந்தம் இல்லாத வேற்றுமொழிப் பதிவுகள் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப் படும் என்றாலும் அது முழுதும் தானியங்கியாய் நடைபெறுவதில்லை. ஆங்கிலப் பதிவுகளுக்குத் தானியங்கியாய் வேலை செய்யும்படி (பெரும்பாலும்) நிரலைக் காசி அமைத்திருக்கிறார்.

மற்றபடி மதி கூறியது போல் "நீக்கு" பொத்தானை வலைப்பதிவர்கள் இதற்குப் பயன்படுத்தலாம். அதுவும் கூடத் தானாக நீக்காது - நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு வருவது மட்டுமே அதன் வேலை. எப்போது அவர்கள் கவனிக்கிறார்களோ அப்போது 'கவனிக்கப்படும்'.

உங்களின் இந்தப் பதிவைக் கூட ஒரு இணை நிர்வாகி நீக்கியிருப்பார். :-) ஆனாலும் இதற்கும் தமிழுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று பொதுநலம் கருதி விட்டுவிட்டார் ! :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஹேய்! பேசாம இருங்கப்பா. எனக்கு திட்டு வாங்கித் தந்திட்டுதான் ஓய்வீங்க போலருக்கு!

அக்னிநட்சத்திர ஜனகராஜ் தோத்துப்போற அளவுக்கு சந்தோ்ஷப்படுறீங்க...

===

//தமிழ்மணத்தில் தெரியவில்லை./
அப்படியா? அப்படியே இனி எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே போட்டுவிடுங்களேன் :-)))

ரமணி: ஹிஹி விளங்குது. விளங்குது. ஆனா புங்குடுதீவு பனங்காட்டு நரியெல்லாம் இப்பிடிச்சொன்னாத்தான் கூட ஃபிலிம் காட்டும். ;)

-மதி

-/பெயரிலி. said...

"என்சாய்!" .......................... எவர் சாய்யோ குடிச்சிட்டுப்போறேன். காசி ஊருக்குப் போய்ட்டாரா? நல்லது, விரும்பினபடி சிங்களம் வங்காளம் வண்டவாளமெல்லாம் எழுதப்போகிறேன். எடுதி, தமிழிலே மணத்த கையோடு சிவப்புப்பொத்தானிலே Dr. Strangelove ஆகப்போறேன். துணை மாடு ஏற்றாளர்கள் படுங்கம்மா பாடு; படுங்கைய்யா பாடு. :-)

நான் சொல்லவருவது இரண்டு விடயங்கள்

1. தமிழிலே சுருக்கமான தலைப்பென்றாலும் தமிழ்மணம் எடுத்துக்கொள்ளும் வண்ணம் (ஆங்கில உட்பதிவு இல்லாதபோது) செய்யும்வண்ணம் முயற்சிக்கவேண்டும்; முடியாதபோது, மதி சொன்னதுபோல, படங்களுக்கு முன்னாலேனும் பின்னாலேனும் ஏதாவது வலைப்பதிவாளர்கள் எழுதுதல் உத்தமம். (சின்ன விட்டுக்கொடுப்பு)

2. தமிழ் வலைப்பதிவாளர்கள், இயன்றவரை தமிழ்மணத்தின் குவியப்படுத்துதலை முன்வைத்தாவது, தமது வேற்றுமொழிப்பதிவுகளுக்கு ஒரு தனிப்பதிவு வைத்திருக்க மனது வைத்து முயற்சிக்கலாம்; அவ்வாறான பதிவுகளுக்குத் தமது தமிழ்ப்பதிவுகளிலே இணைப்பினைமட்டும் கொடுக்கலாம். இது நீண்டநோக்கிலே தமிழ்ப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

aathirai said...

இதே நோக்கில் நான் போட்ட சஞசோபில் மொழி கவிதையை தமிழ்மணம் ஏற்காமல் எறிந்துவிட்டது.
செளராஷ்டிர பதிவை ஏற்றுக் கொள்கிறது.

இது என்ன நியாயம்?