Friday, August 17, 2007

விலை - யூரியூப்பிலே கண்ட குறும்படம்

அள்ளல் - 10

போரினது தேவையையும் அசைபடமொன்று செய்யக்கூடிய பிரசாரத்தினையும் இங்கே விட்டுவிடுவோம். போராளிகள்_பயங்கரவாதிகள் போன்ற அரசியல் நுழைந்த சொற்கூட்டுகளையும் விட்டுவிடுவோம்.

இப்படங்கள் அவற்றினைத் தயாரிப்பதற்கிருக்கும் பொருளாதார, தொழில்நுட்ப இடைஞ்சலுள்ளும் அவை சொல்லவேண்டியவற்றைச் சுட்டும் திறனுக்காகப் பாராட்டப்படக்கூடியன.

ஜிகினாக்கோடி கொட்டித் தயாராகும் கோடம்பாக்கத்திரைப்படங்கள் இலங்கையிலே சிறப்பாக ஓடுவது குறித்தும் அரசியலை மூச்சிலுங்கூட வெளிவிடா ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம்வாழும் எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவிடும் தமிழகச்சஞ்சிகைகள் இப்படியான ஈழத்திலிருந்து வெளிவரும் குறும்திரைப்படங்கள், இசைவட்டுக்கள், படைப்புநூல்கள் குறித்தும் துணிச்சலோடு அறிமுகமும் திறனாய்வும் பார்வையும் விரைவிலே தந்து இவற்றினை "அங்கீகரிக்கும்" என நம்புவோம்.


விலை

=============================
ஈரமண்
Thursday, August 16, 2007

உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு இன்னும் தொடரும் பயனற்ற விவாதம்

புலம் - 24

"...மக்கள் என்று நாம் யாரைச் சொல்கிறோம் என்று தெளிவாக விளங்கிக்கொள்வது மிகவும் அவசியம். வசதிகள் படைத்தோரையும் சமூகத்தில் அதிகாரவர்க்கத்திலிருப்போரையும் தவிர்ந்த ஏனையோரையே நாம் மக்கள் என்று குறிப்பிடுக்கின்றோம். இந்தச்சமூகத்தில் அதிகாரமில்லாத அவர்களே பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். அதிகார வசதி படைத்தவர்கள் அவர்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றார்கள். ஆனால், அவர்களிடம் சென்று பேசமாட்டேன் என்கின்றார்கள். ஆட்டு மந்தையைப்போல அந்த மக்களை வழிநடத்தவும் அந்த மக்களைப் பற்றித் தாங்களே முடிவெடுக்கவும் வசதி படைத்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். சாதாரணமக்கள் முடிவெடுக்குமளவுக்கு அறிவு படைத்தவர்களாகக் கருதப்படுவதில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் மக்களைப் பற்றி ஒரே மனப்பாங்கு உடையவர்களே. மக்களின் நன்மை என்பது அவர்களைப் பொறுத்தமட்டில், இரண்டாம் பட்சமே. பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் 97.5 வீதமானோர் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர். அவர்கள் உடல் உழைப்பை நல்குபவர்கள்...." - குன்றின்குரல், மலர் - 7, இதழ் -8, ஆகஸ்ட், 1987 பக் 1இலே எழுதப்பட்டதாக, 'மலையகத்தமிழ் இலக்கியம்' நூலில் க. அருணாசலம்.

மாலன் பட்டறைக்குச் சம்பந்தமில்லாத விவாதத்துடனே மூட்டையைக் கட்டிவைத்துவிட்டாலுங்கூட, மிச்சமிருக்கும் என் ஓரிரு பதில்களிலே ஒன்றுக்கான ஆறி அவலாகுமுன்னான என் அவசரப்பதில்

மாலனின் இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் நிலையினை இலங்கைத்தமிழரோடு பிணைத்துப்பேசியதை இப்பதிலி/விலே பேசமாட்டேன். அதற்கு மிக நீண்டதான பதில் தேவைப்படும். இலங்கைத்தமிழர் என்பவர்கள் யார்? இலங்கையிலிருந்த இந்தியத்தமிழர்கள் என்பவர்கள் யார்? ஒவ்வொரு குழுவுக்குள்ளும் அடங்கியிருந்த கூறுகளான குழுக்கள் யார்? அக்கூறுகளின் சிறுபான்மை மேல்மட்டக்கூறுகள், தமக்குக் கீழ்மட்டத்திலேயிருந்தவர்களை நடத்திய தன்மை எப்படியாகவிருந்தது? இந்தியத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தவர்கள் யார்? அப்போது பலம்வாய்ந்த இந்திய அரசினதும் ஜவகர்லால் நேருவினதும் எதிர்வினைகள் என்ன? வேறுநாடுகளிலே குடியேறிய வட இந்தியர்களுக்கு இப்படியாகக் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்களின் எதிர்வினையென்ன? திருப்பி அனுப்பப்பட்ட இந்தியத்தமிழர்களைத் தமிழகமும் அதன் பத்திரிகை,செய்தியூடகங்களும் என்ன மாதிரியாக நடத்தின? நடத்துகின்றன? தமிழர்விடுதலைக்கூட்டணி, ஈழத்தமிழ்விடுதலையியக்கங்களின் இந்தியத்தமிழர், அவர்களின் நிலப்பகுதி குறித்த நிலைப்பாடுகள் என்ன? ஈழவிடுதலையியக்கங்களிலே இந்தியவழிவந்த தமிழர்களின் பங்களிப்பு என்ன? சந்திரசேகரன் போன்றோர் தொண்டமான் ஆகியோரை மறுதலித்துப் புதுத்தலைமையை இளைஞர்கள் மத்தியிலே மலையகத்தமிழர் முன்னணி கொண்டு வந்ததற்கென்ன காரணம் (சி. சிவசேகரம் என்றே கருதப்படும் கோகர்ணனின் பத்தி)? சந்திரசேகரன் போன்றோருக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவு எப்படியானது? - இவை பற்றி விரிவாகப் பேசவேண்டும். அதற்கு இஃதல்ல இடம்; நேரம். ஆனால், ஒரே ஒரு வரியினை மட்டும் சொல்லிவிடவேண்டும். ஆனால், டி. எஸ். சேனநாயக்காவின் சிங்களப்பெரும்பான்மை அரசு கொண்டு வந்த இந்தியத்தமிழர்களின் குடியுரிமையை மறுத்தலினை, "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்." என்பதாக பட்டறையோடு முடிந்து முடிக்க மாலனால் மட்டுமே முடியும். இலங்கைத்தமிழர் தலைமையென்று இருந்தவர்கள் ஜிஜி பொன்னம்பலம் . எதிர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்று இரண்டாக உடைய, இந்தியத்தமிழர் குடியுரிமைமறுப்பினாலான விவாதமே காரணமென்று சொல்லப்படுகின்றது. ஜி.ஜி. பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்றும் செல்வநாயகம், tamil nation.org சத்தியேந்திராவின் தந்தை நடேசன் ஆகியோர் அதனை எதிர்த்தார்களென்றும் சொல்லப்படுகின்றது (இந்தியத்தமிழர் குடியுரிமையை மறுக்கச் சட்டம் கொண்டு வந்தவர் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை என்பதையும் மாலனின் கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன்).

இக்குறிப்பு எவ்வகையிலும் 'யாழ்ப்பாணத்தமிழர்.எதிர்.மலையகத்தமிழர்.எதிர்.கொழும்புத்தமிழர்.எதிர்.வன்னித்தமிழர்.எதிர்.மட்டக்கிளப்புத்தமிழர்' என்ற பார்வையினையோ, ஒவ்வொரு குழுவினரும் மற்றவரைப் பார்க்கும் தன்மையையோ ஆய்வதல்ல. வெறுமனே, மாலன் சொல்லிய "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதைமட்டுமே உடனடியான சில இணையத்திலே கிட்டும் தரவுகளோடு எதிர்கொள்வதாகும்.

மாலன், பிரமிளையும் சிவசேகரத்தையும் தனது இந்தியத்தமிழர் குடியுரிமை நிலையிலே யாழ்ப்பாணத்தலைமையின் நிலைப்பாடு குறித்துச் சொல்லச் சுட்டியிருக்கின்றார்.

பிரமிள், ஒருவகையிலே அவரே ஆங்கிலத்திலே "..While Dr. Pound goes over Italy's air Endrosing the Century's anti-Semitic pair. You who warned the poet not to be viewy, Slipped though it was far afield of your trade, into a very unpoetic view, held by centuries of myopia That just this race was Usura's chosen children..." கவிதை பாடின எஸ்ரா பவுண்டினைப் போன்றவரே. பவுண்ட் சிறந்த கவிஞர், விமர்சகராகவிருந்தபோதும், அவரது "பொருளாதாரக்கொள்கைகள்"+"யூதர்" குறித்த கருத்துகள் பெரிதும் அறிவுபூர்வமற்ற, அரைவேக்காட்டுத்தனம் நிறைந்தவை; "வன்னியாழ் கோணைபுத்தளம்மட்டு நகரோடு மன்னார் அம்பாறையும் நிமிர அதிரும் முத்திசைக்கடல்நடுநெற்றியாய் ஒளிர்வது கற்றவர் நிறையுமிந்நாடு. வர்க்கவர்ணங்களை சிந்தை செய்திறனால் வென்றது நம் தமிழீழம்" என்று ஈழத்துக்கான தன் தேசிய கீதம் பாடிய பிரமிளும் சிறந்த கவிஞர் விமர்சகராகவிருந்தபோதுங்கூட, அரசியலைப் பொறுத்தமட்டிலே பவுண்டைப் போலவே தரவுகளோடும் உணர்வுகளறுத்துக் கருத்துக்கூறும் தன்மையைக் கொண்டவரல்ல என்றே நினைக்கிறேன். அவரின் நூலைத் தரவாக்குவது எத்துணை சிறப்பானதெனத் தெரியவில்லை. பிரமிளின் எதிர்க்கட்சிக்காரர் சிவசேகரத்தின் கருத்துகளை அவருடைய விவாதங்களின்போது சீனச்சார்பு பொதுவுடமைச்சாய்வினைக் கண்டுகொள்ளாமல் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" வரிகளிலேயிருக்கும் ஒரு திருத்ததைச் சொல்லவேண்டும். 1947 இன் தேர்தல் முடிவின்படி, இலங்கை இந்திய காங்கிரஸிற்கு வாக்களித்தோர் ஆறு பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து 72,230 வாக்குகளுடன் அனுப்பினர். இலங்கை தமிழ்க்காங்கிரசுக்கு வாக்களித்தோரும் ஏழு பிரதிநிதிகளை 82,499 வாக்குகளுடன் மட்டுமே அனுப்பினர். 1947 இலங்கைத்தேர்தலிலே வாக்களிக்கும் வயதுள்ளவர்களிலே மொத்தமாக வாக்களித்தோரே பத்தொன்பது இலட்சத்தினரே. ஏழாவதாக ஒருவர் இருந்தாரா அல்லது வாக்குவீதத்தின்படி மேற்சபைக்கு நியமிக்கப்பட்டாரா தெரியவில்லை.

கீழே தரப்பட்டிருப்பவை, இக்குடியுரிமை பறிக்கப்பட்ட காலத்தின் போதிருந்த நிகழ்வுகள்/நிலைமை (மட்டும்) குறித்த சில இணைப்புகள் சில; அதன் பின்னான அரசியலை இங்கே சுட்ட இடம், நேரம் கொடுக்காது.

முதலிலே 'இலங்கையிலேயிருந்த, இருக்கின்ற இந்தியத்தமிழர்கள் எல்லோருமே தோட்டங்களிலே வேலைசெய்யவந்தவர்கள், அவர்கள் எல்லோரும் பொருளாதாரநிலையிலே ஒரே வகையினர்' என்ற எண்ணம் பலரிடம் நிலவுகின்றதாகத் தெரிகின்றது. அப்படியல்ல. தோட்டத்தொழிலாளர், அவர்களுக்கான வர்த்தகம் செய்யவந்தவர்கள், வெள்ளைச்சட்டை வேலைகள் செய்யவந்தவர்கள் என்று வகையிருந்தனர். தோட்டத்தொழிலாளர்களிலுங்கூட இருந்த வகைப்பாடுகளை, வி. இராதாகிருஷ்ணன் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதியாக இருந்தவர் என்று ஞாபகம்) எடுத்தாண்டு சொல்வது இது. (விக்கிபீடியாவிலேயும் இது சுட்டப்பட்டிருக்கின்றது; by the way, there is a name mistake in englsih wikipedia. It/He is NOT Bertram BastiaNpillai, but Bertram BastiaMpillai)

Caste orientation of a plantation
The social structure of the Plantations strongly resembles the South Indian rural social structure. This community rigidly bound by caste system. In a Plantation the Tea factory is the center of activities. It stands majestically in the Central Part of the plantation. The office adjoins this and these are surrounded by the quarters of the Staff Members (Such as clerks, Tea makers, Conductors, Kanakka Pillais, and Supervisors). The Bungalows of the planter and his assistants are in an isolated but peaceful area. These will be in close proximity to the office. The dwellings of the labourers called ëLine Rooms are situated a little further away from the factories. Those who are considered to be of higher castes (Such as Pillai, Ahambadiyar, and Mukkkulathore) occupy the first row of line rooms. They perform respectable jobs (such as factory work and grinding of Tea. They work as minor employees too) Even though they belong to the labour category they are influential among conductors, Tea Makers, Kanganies and other officials. The labourers considered low castes live in the dwellings that are away from the center and these dwellings are called ‘distant / Lower Lines'. This group consists of Pallar, Parayars, Barbers, launders and scavengers. The yard sweepers and changers of clothes are in the lowest rank. Even today they receive very meager facilities from the Management.


இவர்களிலே மேற்தட்டினருக்குக் குடியுரிமை பறிக்கப்பட்டதா என்பதையோ, குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களுக்காக இம்மேற்றட்டிலேயிருந்த இலங்கையின் இந்தியத்தமிழர்களிலே பெரும்பான்மையானோர் போராடினார்களா என்பதைக்கூட (தன் வசதிக்காகவோ என்னவோ) மாலன் பேசவில்லை. பின்னாளிலே வந்த மேற்தட்டு இந்தியர்களிலே பலர் குடியுரிமை பெற்றார்கள்; அவர்களின் பிள்ளைகள் அன்றும் இன்றும் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளுக்கூடாகவோ அதே காலத்திலே யாழ்ப்பாணத்திருந்த ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமைக்கூடாகவோ போகவேண்டியிருக்கவில்லை.

மாலனின் சுந்தரலிங்கம் ராஜினாமா செய்தது எப்போது என்பது பற்றி tamilnation.org இலே வாசித்துக்குழம்பியதற்கு, அதே தளத்திலிருக்கும் PLANTATION TAMILS DEPRIVED OF VOTE AND CITIZENSHIP - 1948/50 பக்கத்திலிருந்து அவருக்கு ஆதரவான கருத்து உண்டு (ஆனால், ஜீஜீ பொன்னம்பலம் குறித்து மாற்றான கருத்து) என்பதை நாம் சுட்டிக்காட்டலாம்

While a battle was on in the Parliament, over the Citizenship Act, certain interesting developments, in respect of certain Tamil members of the then Parliament, took place. When the Ceylon Citizenship Act was passed in 1948, C. Suntharalingam, who was a Minister in the (UNP) Government of D.S. Senanayake, voted for the Citizenship Act, while G.G.Ponnambalam (Sr), who was then, the leader of the Tamil Congress, voted against the Act, and so did Ponnambalam's Tamil Congress Party. But, by the year 1949, G.G. Ponnambalam joined the Sinhala dominated Government of D.S.Senanayake.

When the Indian and Pakistani (Residents) Citizenship Bill came before the Parliament there were two Tamil Ministers in Cabinet of D.S. Senanayake. On the issue of this Bill, namely the Indian and Pakistani (Residents) Citizenship Bill, there was a split between the Tamil Members of the then Parliament. G.G.Ponnambalam, despite the pledge he had signed with the party representing the Plantation Tamil interests (i.e. the Ceylon Indian Congress as it was then known) in respect of Citizenship for the persons of Indian origin, voted for the Bill, while C. Suntharalingam voted against the Bill, and resigned his portfolio. The Tamil Congress broke into two and Mr. S.J.V.Chelvanayagam, with his supporters formed the Federal Party....


இனி, மாலனின் "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதன் மேலாக.....

மகேந்திரன் என்பவர் சங்கம்.ஓர்க் இலே எழுதியிருக்கும் Plantation Tamils – The Oppressed People of Sri Lanka கட்டுரையின்படி,

Developments after independence

The granting of independence to Ceylon was a tragedy for the Tamils. The Ceylon government dominated by the Sinhalese gave them step-motherly treatment. The Upcountry Tamils were living in extremely difficult conditions, but the Sinhala-dominated government completely neglected them.

The Ceylon Indian Congress led by Thondaman secured 8 seats in the first Parliament out of a total of 101. Thondaman was elected to the Nuwara Eliya seat. The block Upcountry Tamil votes influenced 12 other electorates in favour of leftist parties.

Then, like a bolt from the blue, came the terrible betrayal of the Tamils by Prime Minister D.S. Senanayake and the U.N.P. In the very year of independence, the Upcountry Tamils, who numbered over a million, were rendered stateless. In a blatant act of perfidy, D.S. Senanayake passed the Ceylon Citizenship Act ,depriving citizenship to the Upcountry Tamils (over half the Tamil population) who had lived in Ceylon for several generations. This loss of citizenship was followed in the next year by the Ceylon Elections Amendment Act depriving voting rights to those Estate Tamils, who constituted about 13% of the population. As a result, in the next elections in 1952, not a single Tamil member was elected from the Upcountry, where half the Tamils in Ceylon lived.

Ceylon Tamils fail to support Upcountry Tamil brethren

This was the first blow to the Tamils in Ceylon, and was to be followed by numerous serious acts of discrimination by the Sinhalese majority against the Tamils by successive governments creating a permanent division between the two communities. D.S. Senanayake who started these anti-Tamil policies can be called the father of Sinhala racism. The Tamils, even in this time of peril, failed to take united action. To the dismay of the Tamils, G.G. Ponnambalam who posed as the champion of the Tamils and minorities, voted in support of these discriminatory acts against fellow Tamils to enable him to continue in the cabinet. The Plantation Tamils, who were already living in sub-human conditions, were left without any political voice.

The honour of the Tamils was partly salvaged by S.J.V. Chelvanayagam, who voted against those despicable Acts of discrimination and broke away from the Tamil Congress Party of G.G. Ponnambalam over this issue. In 1949 S.J.V. Chelvanayagam formed the Federal Party to agitate for a federal constitution to safeguard Tamil rights. He was the first Tamil leader to alert the Tamils to the dangers of unitarianism and Sinhalese hegemony. At that stage he only agitated for a federal form of government and did not ask for a separate state for the Tamil minority.


இதை மறுதலித்து ஜி ஜி பொன்னம்பலத்தின் பக்க நியாயத்தைச் சொல்வதாக, ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளிலேயிருந்தது, கொலை செய்யப்பட்ட அப்பாத்துரை விநாயகமூர்த்தி, -மாலன் அடிக்கடி சுட்டிக்காட்டும் tamilnation வலைத்தளத்திலே- ஜி ஜி பொன்னம்பலம் அப்படியாகச் செய்யவில்லை என்று வாதாடும் பகுதி கீழே:

"...His (G. G. Ponnambalam's - -/peyari.) political opponents carried on a persistent campaign of vilification and character assassination against him stating he was responsible for the disfranchisement of several Indian Tamils in 1948. This is absolutely incorrect. The act which disfranchised the Tamils of Indian origin was the Ceylon Citizenship Act No. 18 of 1948 and the All Ceylon Tamil Congress and its Leader Mr. G. G. Ponnambalam vehemently opposed this act and voted against it. When this Act was passed Mr. Ponnambalam was in the opposition. Later when Tamil Congress decided to give responsive co-operation to the UNP Government it did so only after getting an undertaking from late Mr. D. S. Senanayake that he would consult the then Indian Prime Minister late Mr. Jawaharlal Nehru and bring a bill in Parliament to give citizenship rights to those who were deprived of their citizenship by the earlier Citizenship Act.

The subsequent piece of legislation known as the Indian and Pakistani Residents Citizenship Act which was passed in Parliament was the outcome of the undertaking given by late Mr. D. S. Senanayake to late Mr. Ponnambalam. Mr. Ponnambalam only supported this legislation which gave citizenship rights to Indian Citizens.


From 1930 onwards it was late Mr. G.G. Ponnambalam who fought for the rights of the Indians and safeguarded their self respect. When Sir Jackson Commission was appointed when Govindan was shot dead at the famous Mooloya Estate incident and when Nefsumoyar Estate was taken over it was G.G. Ponnambalam which spoke on behalf of the Indian Tamils and fought for their rights. Out of three days allotted to the Tamil Congress by the Soulbery Commission late Mr. G.G. Ponnambalam set apart one full day to represent matters relating to the rights of the Indian Tamils before the Soulbery Commission and as a result Soulbery Commission has recommended that 14% of the seats in Parliament be reserved for the Indian Citizens..."

இதிலே விநாயகமூர்த்தி, "பொன்னம்பலம், சேனநாயக்கா, நேருவுடனான கலந்தாலோசித்தபின்னரே செயற்படவேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்" என்பதோடு தொடர்பாக நேருவினது செயற்பாடுகளினைப் பற்றி வலையிலே ஓரிடத்தில் வாசிக்கக்கிடைப்பது இது, "CITIZENSHIP AND FRANCHISE RIGHTS OF INDIAN TAMILS IN SRI LANKA":

"..The issue of Indian Tamils had serious ramifications both within Sri Lanka and internationally. Nehru's global perspective was a serious impediment to the resolution of the Citizenship status of Indian Tamils in Sri Lanka. This global perspective blinded him to the particular aspects associated with the Indian Tamils in Sri Lanka. To Nehru, and to other host countries such as Kenya and Uganda, they were collectively all nationals of India who had migrated. To Sri Lanka on the other hand, because they were predominantly ethnic Tamils, their presence in Sri Lanka in large numbers had adverse political, social, and economic consequences. Furthermore, Sri Lanka could not afford financially to accommodate all the Indian Tamils who wished to seek Citizenship in Sri Lanka. Consequently, Sri Lanka looked to reduce the number of Indian Tamils in the interests of the indigenous population. To do so was in the national interests of Sri Lanka.

Statements by Nehru such as "So far as we are concerned, strictly, legally and constitutionally it is not our problem. They (Indian Tamils) are not our nationals" (Sahadevan," India and Overseas Indians", 1995, p. 67) [சகாதேவன், இன்னும் டில்லியிலேயே இருக்கின்றார் என்று நம்புகிறேன்; மாலன் அவருக்கு ஒரு தொலைபேசி போட்டு உறுதிப்படுத்திக் கேட்டுக்கொள்வது மிகவும் இலகுவானது], are hollow in the light of V.K.Krishna Menon words to the effect "Nehru knew the burdens that we would have to carry (their absorption into Indian economy)..." (Ibid, p.150). Undoubtedly, India's perspective was influenced entirely by her self interest. The Indian Tamils in Sri Lanka and elsewhere became other people's problems because India made it difficult for them to return as Indian nationals through the mechanism of Articles 5 and 8 of the Indian Constitution.

Indians emigrated overseas because employment prospects throughout the rest of the British Empire were better than the prospects at home. Britain offered inducements and India sought safeguards for this labour. Between them the resources of countries like Sri Lanka were exploited. When it was time to leave at the end of the colonial era, BOTH BRITAIN AND INDIA DISASSOCIATED THEMSELVES FROM THEIR RESPECTIVE RESPONSIBILITIES. It was obligatory on the part of Britain to have resolved the questions relating to the Indian Tamils being left behind in Sri Lanka. Instead, Britain abandoned her responsibilities and left it to Sri Lanka and India to resolve it bilaterally.

Like India, Britain also did not want to face the prospect of thousands of Indians descending on her shores. Britain's attitude to Overseas Indians was revealed when she refused entry to those Indians from Kenya and Uganda who had British passports, despite internationally recognized customs. India asserted that entry into U.K. was a fundamental right that every British citizens was entitled to, and any attempt to deny such a right was an act of racial discrimination against them (Sahadevan, 1995). Britain remained undeterred. She too was acting in her self-interest.

All three countries Sri Lanka, India, and Britain, acted in their self interests. Of the three countries Sri Lanka was the least obligated. The Indian Tamils were in Sri Lanka at the behest of the British to facilitate British colonial adventure in Sri Lanka, and India benefitted financially from the remittances of these workers. In addition, from India's perspective, this emigration was a relief to her economy. The national self interest of Sri Lanka called for a solution that would ease the financial, social, and political burdens imposed upon her by the presence of such a large number of Indian Tamils.

Within Sri Lanka, their presence in large numbers had serious political ramifications. The Sinhalese realized that it would erode their political base to an extent that the indigenous Sinhalese would go unrepresented. To the Sri Lankan Tamils, they represented a political base that would double their influence with negative consequences on the Sinhala political base. To the political Left, they represented a solid block of labour votes that would strengthen their political base. Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions.

Under these circumstances, the Sri Lankan government acted responsibly, while protecting the interests of the larger Sri Lankan nation."

பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" என்ற கருத்தினை, மாலன், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று கண்முன்னேயே தன் தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டதை மேலே ஒரு சிங்களக்கட்டுரையாளர், "Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions" என்று சொல்வதோடு உரசிப் பார்க்கவேண்டும்.

மாலன், அந்நேர இந்தியத்தலைமை - குறிப்பாக, ஜவகர்லால் நேரு ("In spite of the lucidity and analytical clarity of one of India's greatest thinkers, the question why he did not involve himself more deeply to bring about an early solution to the problem of Indian Tamil plantation labour in Ceylon foxes the reader. Perhaps, it may best be answered by the gentlemanly norms of the Nehruvian era of Indian politics. At one time, Nehru was willing to believe that the Indians might be to blame for their own worsening situation in Ceylon. "I have no doubt that the Indians there have not been behaving well and have made a mess of things... we should stop all unregistered labour to Ceylon," he wrote to Vallabhai Patel in 1939." - Madam Nirupama Subramanian reviews "Nehru and Sri Lanka", edited by Gopal Krishna Gandhi)- இலங்கையிலிருந்த இந்தியத்தமிழருக்காக, அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது என்ன செய்தது - செய்தார் - என்பது பற்றி எக்கேள்வியும் எழுப்பாமல், எல்லாத்துயருக்கும் காரணம், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதாக முடித்துவிடுகின்றார். [இன்னமும், இதே போக்கிலே பிஜியிலே மஹேந்ர சௌத்ரியிலும் அவரைப் போன்ற புலம்பெயர் வடஇந்தியர்களின் வழிவந்தோரிலே இந்திய அரசு காட்டும் அக்கறையை புலம்பெயர் இந்தியத்தமிழர்களின் வழிவந்தோருக்குக் காட்டுவதில்லை என்பதுதான் நிலைமை :-(]. ஈழத்திலே இந்திய இராணுவத்தின் இராணுவ, அமைதிப்படைச்செயற்பாடுகளுக்கு மாறான மனிதத்தன்மையற்ற பல செயற்பாடுகளை இதுவரை மாலன் எங்கேயும் கேள்வி கேட்டதாகத் தெரியாததுபோலவே, இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, ஜி ஜி பொன்னம்பலம், டி. எஸ் சேனநாயக்காவைப் பேசும்படி கைகாட்டியதாகச் சொல்லப்படும் நேருவும் அவரின் அரசினது செயற்பாடுகளும் குறித்து மாலன் கேள்வி கேட்கமறுக்கின்றார். அவருக்குத் தேவைப்படுவதெல்லாம், ஈழத்திலே இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளுக்குக் காரணம், விடுதலைப்புலிகள் என்பதுபோலவே, இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிபோனதற்குக் காரணமெல்லாம், யாழ்ப்பாணத்தலைமையென்பதுதான். மணலுக்குள் தலையை மறைப்பது தீக்கோழிக்கும் (அதுகூட உண்மையிலே அப்படிச் செய்வதில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது ஒரு புறமிருக்கட்டும்) கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது பூனைக்கும் அவை விரும்பிக்கொண்ட காரணங்களுக்காகவும் திருப்திக்காகவும் வசதிப்படலாம்; ஆனால், மெய்யான காரணங்கள் அவையல்ல என்பது அவற்றுக்கே மிகவும் தெளிவாகத் தெரிந்தேயிருப்பன. வேண்டுமானால், விபரம் புரியாத, கதை கேட்க மட்டும் விரும்பும் குழந்தைகளுக்குக் கண்ணை விரித்துக் காதை அகட்டிக் கேட்கப் பயனாகவிருக்கும். மாலன், இந்திய இராணுவத்தின் ஈழ நடவடிக்கைகள் குறித்தோ, நேரு அரசின் இந்தியத்தமிழர் குடியுரிமை பறிப்பினைக் குறித்தோ கேள்வி கேட்காமல், ஈழத்தமிழர்களை நோக்கி விரலை நீட்டுவதற்கு, அவரே மனம் விட்டுக் கேட்கும், "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?" என்பதுதான் காரணமென்றால், தன் தேசத்திலும் தன்னவர்களிலும் விமர்சனமிருக்கக்கூடாதென்ற அர்த்தப்பட்டு எனக்குத் தோன்றும் அவரின் அக்காரணத்தினை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்கின்றவர்களையிட்டுக் கவலையும் பரிதாபமும் கொள்கிறேன்.

சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம், பொன்னம்பலம் புத்திரர்கள், அவர்களைச் சூழ்ந்தவர்களின் "யாழ்ப்பாணத்தலைமை"யின் தங்கள் (இனசனம், சாதி) நலம் பேணும் பிற்போக்கான எத்தனையோ பண்புகளிருந்திருக்கலாம். இவர்களிலே எல்லோரும் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார்களா கொழும்பிலே இருந்தார்களா என்பதைவிட்டுவிடுவோம்; அவர்களின் யாழ்ப்பாணத்தலைமை, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான மற்றையத்தமிழர்களை எப்படியாகப் பிரதிபலித்தது என்பதை விட்டுவிடுவோம். யாழ்ப்பாணத்துக்குள்ளேயே சிறுபான்மை மகாஜனசபை ஏற்படும் வகையிலே முழு யாழ்ப்பாணத்தவரையும் பிரதிபலித்ததா என்பதையும் விட்டுவிடுவோம். இவர்களின் யாழ்ப்பாணத்தலைமையை இலங்கைத்தமிழர்தலைமையென்பதும் சத்தியமூர்த்தி, ராஜாஜியைத் தமிழகத்தலைமையென்பதும் ஒன்றே என்று ஒப்புநோக்கி வாதாடக்கூடிய இலகுநிலையையுங்கூட இங்கே விட்டுவிடலாம். இவர்களுக்கு இந்தியத்தமிழர்கள் மேலே தனிப்பட்ட, எமக்குத் தெரியாது பிடிப்பின்மைகூட இருந்திருக்கலாம் - இதுவரை அதற்கான ஆதாரங்களைக் காணமுடியவில்லையென்றபோதுங்கூட. (விநாயகமூர்த்தி பொன்னம்பலம் இந்தியத்தமிழர்களுக்காக ஜி ஜி பொன்னம்பலம் வாதாடினார் என்றுதான் தன் தலைவரைக் குறித்து வாதாடுகின்றார் என்பதைக்கூடத் தொண்டர் அபிமானம் என்று இப்போதைக்கு விட்டுவிடுவோம்; சி. வி. வேலுப்பிள்ளை, 'வீடற்றவன்' தன் குறுநாவலின் முன்னுரையிலே, பொன். அருணாசலமே 1921 இலே தோட்டத்தொழிலாளிகளின் ஒப்பந்தக்கூலி என்ற கொடுமையை ஒழிக்க வழி செய்ததாகச் சொல்கிறார்.).

ஆனால், இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது, அந்நேரச்செயற்பாடுகள் என்னவென்பதை சம்பவங்களின் கோர்வையாகப் பார்த்துக் கருத்துச் சொல்லவேண்டும். வெறும் மேம்போக்கான 'எடுத்தார்-கவிழ்த்தார்' கருத்துகளைத் தவிர்த்து விட்டு, ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்களின் கருத்துகளைத் தர்க்கபூர்வமாக அணுகியபின்னால், பாராளுமன்றத்திலே சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகளை, வாக்குப்பதிவுகளை, ஹன்ஸார்ட் பதிகுறிப்புகளிலிருந்தே பார்த்தே நிகழ்வுகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு, எங்கோ ஒரு பட்டறையிலே "பயனற்ற விவாதங்களால் உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு" ராமின் மகளுக்கும் -/பெயரிலி.யின் பாஸ்போர்ட்டுக்கும் முடிச்சுப்போடப்போனது, சிக்கிவிட, கவனக்குலைப்பாக, வலைப்பதிவின் இந்தியத்தமிழ்வாசகர்களை உணர்வுபூர்வமாக(த்) (திசை) ஈழத்தமிழர்களுக்கெதிராகத் திருப்பிவிட, "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று அப(பா)யக்கூற்றிடுவது முற்றிலும் அநாவசியமானதும் நியாயமற்றதுமானது.

நன்றி: நூலகம் குழுவினருக்கு இலங்கைத்தமிழ்நூல்களை இணையப்படுத்துவதற்கும் இணைப்புக்குதவிதற்கும்

Sunday, August 12, 2007

இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?

புலம் - 23

இது எவ்வகையிலும் ஒரு புதிய இடுகை அல்ல. என் me, myself, my ego இடுகையின் பின்னான என் இரு பின்னூட்டச்செருகுதல்கள், தமிழ்மணத்தின் சூடான இடுகைகளிலே இடம் பிடிப்பதற்காக இங்கே ஓர் இடுகையாகப் போடப்படுகின்றன என்றும் கொள்ளவேண்டாம் :-) [அப்படியிருந்தாலும், மகிழ்ச்சியே] பின்னூட்டங்களின் நீட்சி காரணமாக, இடுகையினைத் திறக்கமுடியவில்லை என்று சொல்லும் நண்பர்களின் கருத்துக்கிணங்கி இங்கே ஓர் இடுகையாக.

பேரில்லாத பேமானிக்கு ஆண்டுமுடியும்வரை புதிய இடுகைக்கென்று எழுதும் நோக்கமில்லை. எல்லோரும் காமிக்ஸ் வாசித்து இன்புற்றறிவது அல்லால், வேறேதும் அறியேன் பராபரமே!! வாழ்க வளமுடன். பின்னால், வந்து I will (hell)bend & (de)fend

"இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?" தலைப்புக்கு நன்றி: 'ஒரு தீப்பொறி' அந்தனி சில்
------------
1.
மாலன் தன் பக்க விளக்கத்தைப் போட்டிருக்கின்றார். Out of context இலே ஆரம்பித்து தான் என்ன சொன்னேன் என்று தெரியமுன்னால் தன்னை வசைபாடுவதுதான் நோக்கம் என்று நகர்கின்றார். [அவர் என்ன சொன்னார் என்று சரியாகத் தெரிவதற்காகக் காத்திருந்தேன் என்பதையும் தவறுகள் ஏற்பட்டால், திருத்திக்கொள்வேன் என்பதையும் அவருடைய பேச்சினை யாராவது தந்தால் பொருத்தமாகவிருக்குமென்றும் பட்டறையிலே மாலன் பேசியது குறித்த என் முதலாவது பதிவிலே சுட்டியிருந்தேன். இவ்விடுகையிலே, அவர் பேசியதிலே எமக்குத் தேவையான பகுதியினை அப்படியே எடுத்தும் ஒலித்துண்டமாகப் போட்டிருக்கின்றேன். பதில் சொல்லச் சொன்ன ஆளில்லாத இடத்திலே ஒரு வரியினை out of context இலே எடுத்து எதுக்கோ உதாரணமாக்கி அரசியல் வியாக்கியானம் பண்ணும் ஒருவரிலும்விட மிகவும் நிதானமாகவும் நியாயமாகவும் நான் நடந்திருக்கின்றேன் என்பதை என்னைப் பிடிக்காத மாலனின் ஆதரவாளர்கள்கூட இங்கே வந்து இதுவரை வாசித்திருந்தால் ஒத்துக்கொள்வார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்]

இவரின் ஒவ்வொரு வரிக்கும் ஆதி முதல் அந்தம் வரை உடைத்துப் பதில் தரமுடியும்.. நான் செல்வநாயகியின் பதிவிலே சொன்ன, ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இனைத் தான் out of context ஆகக்கூட அங்கே புரிந்து கொள்ளமுடியாமல் ஏகடியமென்று சொல்லிவிட்டு, என் மூன்று தரத்து to the context ஆன விளக்கங்களையும் "சீ நாயே" (இன்றைக்கென்று மாலனுக்கும் இட்டலிவடைக்கும் இடையிலே தமிழ்மணத்திலே பலகாலம்பின்னாலே பட்டையின்றி நிர்வாணமாய் முளைத்திருக்கும் நாய்க்கவிதையைச் சொல்லவில்லை :-)) என்றும் கவனிக்காமல்விட்டு, பட்டறையிலே போய் மட்டும், "சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள் அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின் பெண் என்ன செய்தார்?" என்று அவுட்டோ அவுட்டென்று ultra out of context இலே என் இராம் மகள் வரிகளைச் சுற்றித்திரி வைத்துச் சொன்னவருக்கு, out of context ஆகத் தன்னைக் கருதிக்கொண்டோமென்று வருத்தம் வருகிறதாம். வருந்தம் என்ன சிலருக்கு மட்டுமா வம்சம் வம்சமா வாழையடி வாழையா வரும்? :-(

1. (மீண்டும் தன் முயற்சியில் மனம் தளராத) நான் (அமெரிக்க எதிர்ப்புள்ள, கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சார்ந்த) சந்திப்புக்கு இவ்வரிகளை எடுத்துச் சொன்னதன் அர்த்தம், "சீன அரசின் சார்பாக தீபெத் மீதான அதன் அத்துமீறலையும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு மார்க்ஸியச்சித்தாந்தத்திலே நம்பிக்கையுள்ள பத்திரிகையாளர், தன் மகளை அப்படியான சீனப்பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிப்பதைக் காணாமல், முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றிலே பத்திரிகைத்துறையிலே கற்கப் பார்த்திருப்பது, தந்தைப்பத்திரிகையாளரின் முரண்பாடும் & பொய்த்தன்மையும் நிறைந்த செயல்" என்ற அர்த்தத்திலே. சந்திப்போடு, செல்வநாயகியின் பதிவிலே பேசிக்கொண்டிருந்தது இப்பின்புலத்திலேதான், in this context. மாலன், இதை எடுத்துக்கொண்டுபோய், out of context இலே பட்டறையிலே தனிமனிததாக்குதலோடு கொண்டு வந்து no context இலே பனைமரத்திலே மாடு கட்டுவதுபோலக் கட்டி, பதிவர்களை மனம் விட்டு (எங்கே?), பேசச் சொல்கிறார். யார் எங்கே எதை out of context ஆக எடுத்துப்போடுவது?

2. சரி அப்பால் நகர்வோம். தனிப்பட்டமுறையிலே தாக்கி எழுதுதலென்று சொன்னாலும், "பொண்ணு என்ன பண்ணும்" என்பதுதான் அவர் தன் உதாரணமாகச் சொல்லும் 'இராமின் மகளை நான் தாக்குகின்றேன்' என்று கொண்டால், கொஞ்சம் நில்லுங்கள். ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற இந்த வசனத்திலே பொண்ணை என்ன சொல்லியிருக்கின்றேன். தமிழிலேதானே எழுதியிருக்கின்றேன். வாசிக்கின்றவர்கள் எவராவது சொல்லுங்கள் பொண்ணை என்ன தாக்கியிருக்கின்றேன். 'பொண்ணு ராங்க் வாங்கினதுகூடாதென்றோ ராங்கா போயிருக்கணும்ன்னோ' எதுவாச்சும் சொல்லியிருக்கிறேனா? இதிலே என்ன தாக்குதல் இருக்கின்றது? இதுவென்ன அநியாயவாதம்? நான்தான் சிந்திக்கத்தெரியாதவன்; புரிந்த எவரேனும் சொல்லுங்கள்; நான் சொன்னது அப்பெண்ணின் பொதுவாழ்விலே மும்முரமாக இயங்கும் தந்தை பற்றிய முரண் ஒன்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண விமர்சனமா? தனிமனிதத்தாக்குதலா? [இத்தனைக்கும் இந்துவிலே Pol Potist என்று பிரபாகரனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வரும்; மாலனின் தனிமனிதத்தாக்குதல் வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், இந்துவின் தனிமனிதத்தாக்குதலுக்கு மானநஷ்டவீடு இந்தியா வரமுடிந்தால், பிரபாகரன் போடலாம்]

3. சரி, அதற்கும் அப்பால் நகர்வோம்; பட்டறையிலே பேச எடுத்துக்கொண்டது தனிநபர் தாக்குதலைப் பற்றி; அதைக்கூடச் சரியாகப் பொருத்திக் காட்டக்கூடிய உதாரணத்துடன் காட்டாமல் சொன்னதை மேலே ஏன் பிழையென்று காட்டியிருக்கின்றேன். மேற்கொண்ட விவாதத்துக்காகமட்டும் அது தனிப்பட்ட தாக்குதலென்றே எடுத்துக்கொள்வோமே? சரி பெண்ணைத் தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டுப் போனார் என்றே சொல்லி விட்டுப்போயிருந்திருக்கலாம். ஆனால், அவர் வலைப்பதிவுப்பட்டறையின் தேவைக்கப்பால்,

அ. இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதினை மட்டுமே ஒன்றைரை நிமிடங்கள் நியாயப்படுத்துவதெல்லாம் எதற்காக?

ஆ. அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் உதாரணங்கள் ராஜாஜி-பெரியார் தவிர, மிகுதியானதெல்லாம், "இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க?" பத்திரிகையாளராகவும் செய்தியாளராகவும் விளங்கும் அவருக்கு, குறைந்தபட்சத்தேவைகளுக்கான கூட்ட(த்த)ணிகளாக ஒவ்வொரு மாநில,மத்திய, உள்ளூராட்சித்தேர்தலிலும் முளைக்கும் காவிபட்ட மஞ்சட்துண்டு, கைபட்ட இரட்டை இலை, துருப்பிடிக்காமலிருக்க கைப்பிடி நெல்லாச்சும் அறுவடையானாற் சரி என்று இடம் பார்த்து அலையும் அரிவாளும் சுத்தியலும் தோன்றுவதில்லை; ஆங்கு இலங்கைத்தமிழரே தாம் தோன்றி நிற்கின்றார்கள். இலங்கைத்தமிழரே இல்லாத பட்டறையிலே இராமின் மகள் சீனாவிலே படிக்காமல் அமெரிக்காவிலே படிப்பதை நியாயப்படுத்த இலங்கைத்தமிழர்களினை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வது எதேச்சையானதா, இல்லையா என்று பட்டறையிலே குந்தியிருந்தவர்கள்கூடவேண்டாம், இங்கிருந்து வாசிக்கும் எவருமே சொல்லிவிடலாம். அவரின் இராமின் பெண் சார்பான பதில் சொல்லும் மனநிலையின்போது, முன்னே சபையிலிருந்த்த தமிழகத்தமிழ்ப்பாண்டவ,விதுர,துரோண,பீஷ்மாச்சாரியர்களோ கர்ணன்களோ கூடத் தோன்றவில்லை; இலக்குவைத்துப் பேசியிருக்கவேண்டிய வலைநெறிக்கிளியோ கிளையோகூடத் தோன்றவில்லை; எங்கோ குந்திக்கொண்டு, "இராமின் பொண்ணு கொலம்பியாவிலே படிப்பது" பற்றிப் பேசிய துரியோதனப்பெயரிலியும் அவனின் தொண்ணூற்றொன்பது (விகர்ணன் உட்பட) ஈழகௌரவர்களுமே சிந்தையிலே தோன்றி விரிந்திருக்கப் பதில் சொல்லியிருக்கின்றார் என்பதுதான் நமக்கு எல்லோருக்குமே புரிகின்ற அந்நேரத்து யதார்த்தம். அந்தளவுக்கு அவருக்கு இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதுபற்றி இராமினை எப்படி ஈழத்தமிழன் நான் விமர்சிக்கலாம் என்பதுதான் இத்துணை உளத்தாக்கத்தினை ஏற்படுத்துவற்கு என்ன காரணமென்று எனக்கு இன்னுமே புரியவில்லை. இராம் விமர்சனத்துக்கு மேலானவர் என்று கருதுகின்றாரா? :-(

இ. அவரின் குறைந்தபட்ச இலங்கைத்தமிழர் உதாரணங்களைப் பாருங்கள். "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை; ஆனால், இந்தியாவுக்கு வரத்தானே போகத்தானே செய்கின்றார்கள்?" - சம்பந்தப்படாமல் ஒரு கேள்வியை முதலிலே வைத்துவிடுவோம்; "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை" என்றால், இலங்கைத்தமிழருக்கு எதிராகத்தான் இந்தியா செயற்படுகின்றது என்பதுதானே அர்த்தம். பின்னால், இந்தியா, இவர், இந்து ராம் ஆகியோர் முன்னிலைப்படுத்தும் (செத்த அமிர்தலிங்கம், பத்மநாபா, நீலன்), கருணா, ஆனந்தசங்கரி, டக்லஸ் ஆகியோரெல்லாம், India's 'Our Men Flints in Sri Lanka' என்றா ஈழத்தமிழர் அர்த்தப்படுத்தவேண்டும்? ஆக, ஈழத்தமிழரின் மாற்றுத்தலைமைகளென இந்தியா முன்வைக்கும் கருணா, டக்ல்ஸ், ஆனந்தசங்கரி ஆகியோர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்களல்லர்; அதுதானே அர்த்தம்?

இனி, இந்தியா இலங்கைப்பிரச்சனையில் தமக்கு எதிர்நிலையிலேயிருக்கும் இலங்கைத்தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லையென்றால், அஃது இந்திய அரசினதும் அதன் வெளியுறவுக்கொள்கையிலே அழுத்தம் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட 'சகூனி' நாராயணர்கள் சிலரினதும் கருத்தா? இல்லையென்றால், மாலன் சொல்வதுபோன்று அமெரிக்க அரசின் நிலைக்கு எதிர்நிலைகூடக் கொண்டிருக்ககூடிய அமெரிக்கப்பல்கலைக்கழகங்கள் போன்ற இந்திய அரசினதும் அதனது 'ஆலோசகர்களினதும்' அரசியற்கட்சிகளினதும் கருத்துக்களோடு பெரியளவு சம்பந்தம் கொண்டிராத, இலங்கைத்தமிழர் வந்து கலந்து போகக்கூடிய தமிழகமக்களின் கருத்தா?

இலங்கை அரசை எதிர்த்துப்போராடும் இலங்கைத்தமிழர்கள் இலங்கைப்பாஸ்போட்டுல போவதும் இந்து இராமின் மகள் சீனாவுக்குப் பத்திரிகைத்துறைக்குப் படிக்கப்போகாமல் (இந்தியாவிலேயே தன்னார்வச்சேவை செய்யாமல், ஓராண்டு சீன மக்களுக்குத் தன்னார்வச்சேவை அவர் செய்தவர் என்பதைப் பேசுவதற்குச் சம்பந்தமில்லையென்பதாலே இங்கே விட்டுவிடுவோம்) அமெரிக்காவுக்குப் போவதும் ஒரே வகைதானா? என்ன முட்டாட்டனமான வாதம். முதலாவது நிலையிலே தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அம்மக்களுக்கில்லையே. இராமின் மகளின் நிலையிலே அவர் என்ன அமெரிக்க அரசினையா எதிர்த்துப் போராடினார் என்ற கேள்வியை விட்டுவிட்டுப் பார்த்தாலுங்கூட, அவருக்கு வேண்டிய எதையும் தேர்ந்தெடுக்க வசதியும் சுதந்திரமுமிருக்கின்றதென்பதில்லையா உண்மை? "தமக்குத் தேர்ந்தெடுக்க இருக்கும் சுதந்திரம்" பற்றி ஒரு குழந்தைக்குக்கூடப் புரிந்துகொள்ளும் அடிப்படைத்தெளிவினை மாலன் புரிந்துகொள்ள முடியாமற்போனதற்கு அவருக்கு ஈழத்தமிழருக்கு வியாக்கியானம் பட்டறையிலே கொடுக்கவேண்டுமென்ற மதி மீறிய அவா காரணமென்று சொல்லலாமா? இதைத்தானே வலைப்பதிவுகளிலே எல்லோரும் சுட்டிக்காட்டி எதிர்த்துக்கொண்டிருந்தனர். "விருப்பப்பட்டு" ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் எதற்காக, போயிறங்கும் இடங்களிலே அதைக் கிழித்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையோ அல்லது வேறெந்தப் பாஸ்போர்ட்டினையோ எடுத்துக்கொள்ள வசதியின்றி இருக்கின்றார்களென்பதோ உங்களுக்குப் புரியவில்லை; இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் எத்தனையோ பேர் சந்தர்ப்பம் கிடைத்தால், அமெரிக்க பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு, இந்தியப்பாஸ்போர்ட்டிலிருந்து தம்மைக் கழற்றிக்கொடுக்க ஆயத்தமாகவிருக்கின்றார்களென்று பாருங்கள்.

சின்னக்குட்டி, அற்புதன், சசி ஆகியோர் இதனைத்தானே தம் பதிவுகளிலே எடுத்துச் சொல்லியிருந்தார்கள். தமிழர்களின் மாதச்சம்பளத்திலே அவர்களின் மண்மேலேயே தாக்குதல் நிகழ்த்த பாதுகாப்புநிதியாக அரசுவெட்டிக்கொள்ள என் வருமானத்திலிருந்தும் மாதம் மாதம் துண்டு ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுத்த நான் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழிக்காமலேதான் வைத்திருக்கின்றேன்; அமெரிக்க, கனடிய, அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு ஒன்றினை எடுத்துத்தாருங்கள்; உடனே ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழித்தெறிந்துவிட்டு, NRI அமைப்புகள் இந்தியாவுக்கு உதவுவதுபோலவே, ஈழத்துக்கும் எனக்குக் கல்வி தந்த ஈழத்திலில்லாத ஸ்ரீலங்காவின் பல்கலைகழகத்துக்கும் கையிலே துட்டிருந்தால், உதவி செய்யத்தயாராகவிருக்கின்றேன். "கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்; புரியாமல் எதிர்த்தார்கள்; சொல்லப்பட்ட context இனைக் கவனிக்காமலே எதிர்த்தார்கள்" என்று அழுகுணியாட்டமல்லவா ஆடுகின்றீர்கள், மாலன். அவர்கள் கேட்டதெல்லாம், சொன்னதெல்லாம், "ஈழத்தமிழரென்ன விரும்பியா இலங்கைப்பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றார்கள்? இதைப் போய் நீங்கள் எப்படி இராமின் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதற்கோ அல்லது இஃது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கொள்கிற உறவு என்று (அவமதிப்பாக உணரும் வகையிலே) எளிமைப்படுத்தவோ செய்ய முடிகின்றது?" உங்களுக்கு வலைப்பதிவிலே உங்களை எல்லோரும் வசை பாடுவதாகவே தெரிகின்றதென்ற அடிப்படைப்பார்வையோடு பார்க்கத்தொடங்கும்போது, குறைந்தபட்சம் மற்றவர்களின் அவமதிப்பு உணர்வு தோன்றும் அச்சிலசின் குதிக்கால்மனப்புள்ளிகளைக் கண்டுகொள்ளமுடியாதென்றே தோன்றுகின்றது.

4. இவை எல்லாவற்றினையும் விட்டுவிடுவோம். ஆனால், என் கருத்தினை நீங்கள் புரிந்த வகையிலே ஓரிடத்திலே -என்னைத் தெரிந்தவர்களும் நிறைந்த அவையிலே- நெறி பிறழ்தல் என்பதற்கு உதாரணமாகச் சொல்லும்போது, அவ்விடத்திலே என் கருத்தினைச் சொல்ல நான் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதுதான் முறை. உங்கள் கருத்துக்கு உங்கள் பதிவிலில்லாமல், வேறெங்கோ பின்னூட்டிவிட்டேன் என்று குறை கண்ட நீங்கள் இதிலே செய்தது அதைவிடப்பெரிய வலைநெறிப்பிறழ்வல்லவா? :-(

5. வலைப்பதிவிலே தனிமனிதத்தாக்குதலுக்கு எத்தனையோ மிகமிகமிக மோசமான காலாகாலமாக அலையும் பதிவு செய்யப்பட்ட திமிங்கல உதாரணங்களெல்லாம் இருக்க, இப்படியான கையில் ஒட்டினாற் தட்டிக்கொள்ளும் மினுங்கற்காக்காய்ப்பொன் உதாரணமே உங்களுக்கு அங்கே ஞாபகத்துக்கு வருகின்றதென்றால், இத்துணை நாள் வலைப்பதிவுகளிலே பங்காற்றி, தனித்தாக்குதலினாலே பதம் பார்க்கப்பட்டு, பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அப்பட்டறையின் கேட்போராகவிருந்திருந்தால், நீங்கள் ஒரு பழைய கணக்கினைப் பதிவர்களை மனம் திறந்து பார்த்துத் தீர்த்துக்கொள்வோமென்று தனிப்பட்ட தாக்குதலினை மேற்கொண்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளமாட்டாதவர்கள் என்றா கணிப்பிட்டிருந்தீர்கள்? அத்துணைதானா சக/காபதிவர்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு? :-(

6. ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இதிலும் விட எனக்கு மிகவும் தனிப்பட்ட தாக்குதலாகத் தெரிவது, நீங்கள் அனுமதித்திருக்கும், "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது." என்னைப் போன்றோரிலே நீங்கள் மறைமுகமாக அங்கீகரிக்கும் தனிப்பட்ட தாக்குதல் இது. பதிவின் தலையிலே "பெரியோர் எனில் வியத்தலும் இலமே சிறியோர் எனில் இகழ்தலும் இலமே" வலைக்கோளாகக் கொண்ட நீங்கள் இப்படியான பின்னூட்டங்களை அனுமதிப்பது அறிந்துகொண்டே மறைமுகமாக உற்சாகமூட்டும் தனிப்பட்ட தாக்குதல் என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. அப்படியான நீங்கள் எப்படி என் சாதாரண வரிகளிலே இப்படியான அர்த்தத்தினைக் கண்டுகொண்டீர்களென்பது என் வியப்பிற்குரியதாகவேயிருக்கின்றது.

பட்டறை அமைப்பாளர்களை எண்ணி மெய்யாகவே நான் சங்கடமடைகின்றேன். ஒரு புறம் நானும் என்னைப் போன்றவர்களும் மறுபுறம் அவர்களின் மதிப்புக்குரிய நீங்கள். இந்நிலையிலே இருபுறங்களிலும் பிய்த்துக்கொள்ள நடுவிலே ஒருவர் படும் பாட்டினை உணர, பாற்கடல்கடை கயிறான ஆதிஷேசனுக்குக்கும், விடாதுகருப்புவின் பதிவினையோ, விட்டதுசிகப்பினது பதிவினையோ திரட்டிகளிலிருந்து "நீக்கு/நீக்காதே" என்ற இருபுறஆட்களின் பிய்த்தெடுப்புக்கும் ஆளாகும் திரட்டி நிர்வாகிகளுக்குமேதான் முடியுமென நம்புகிறேன் :-) வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இந்தப்பக்கம், நாங்கள் முதலிலே கத்திவிட்டோமேயென்று மட்டுமேதான் ஆட்சேபணைப்பதிவுகளையிட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்பவில்லையென்றபோதுங்கூட, அவர்களினை அப்படியாக வெளிப்படையாகவே செய்யும்படி மூலைக்குத் தள்ளிவிட்டதால், அநாவசியமாக உங்களின் மனத்தாங்கலுக்கு உள்ளாக்கிவிட்டோமோ/டேனோ என்று உண்மையாகவே சங்கடமாகவிருக்கின்றது. இப்படியாகுமென்று எண்ணவில்லையென்றாலுங்கூட, இது தவிர்க்கமுடியாதது; ஆனால், 'When a giant tree falls, the earth below shakes" என்றமாதிரியாக கொடூர அர்த்தத்திலே நான் சொல்லவில்லை. இத்துணை கஷ்டப்பட்டு பட்டறை அமைத்து உழைத்த அமைப்பாளர்களுக்குச் சங்கடம் வருமே என்று பேசாமலே விடுவதா, அல்லது உங்களின் பேச்சின் பொருந்தாமையைச் சுட்டிப் பேசிப் பெரிதாக்கி விண்டு பார்ப்பதா என்பதிலே, இரண்டாவதே முக்கியமாகத் தோன்றியது. அதற்காக, மாலன் அவர்களோடு மனத்தாங்கல் ஏற்படும் வகைக்கு உள்ளாகியதற்கு என் வருத்தத்தைத் தெரிவிக்கும்போது, என் (என்னைப்போன்றோர்) நிலையினையும் அமைப்பாளர்கள் புரிந்துகொள்வார்களென நம்புகிறேன்.

மாலனின் மற்றைய வரிகளிலே எனக்குப் பிய்த்துப் பிய்த்துச் சொல்லும் தேவை இப்போதைக்கு இல்லை. அநாவசியமாக இழுத்துக்கொண்டு போவதாகவிருக்கும்.

~~~~~

2.
மாலன் அவர்கள் பட்டறையிலே -/பெயரிலி._இராம்_ஈழம் பற்றிப் பேசியதன் நுண்ணரசியலைப் பேச முற்பட்டேன். அதன், ஒரு கூறாக அங்கே மட்டுறுத்துனர், அமைப்பாளர்களின் பொறுப்பினைப் பற்றிக் (கேள்வி) கேட்டிருந்தேன். ஆனால், அதுவோ அதற்கான பட்டறை அமைப்பாளர்களின் பதில்களோ மாலனின் வருத்தத்தைப் பட்டறையாளர்களிலே இத்துணை ஏற்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்கவில்லை. வேண்டாப்பக்கவிளைவு என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, மேலும் பட்டறை அமைப்பாளர்களை "என் கேள்விக்கென்ன பதில்?" என்று கேட்பதோ அவர்களுடன் விவாதத்தினை வைப்பதோ எவ்வகையிலும் நான் செய்யும் நல்ல செயலாக அமையாது; ஓர் எல்லைக்கப்பால், நான் இன்னும் அதனையே பிடித்து அவர்களுடன் தொங்கிக்கொண்டிருப்பது, பட்டறையாளர்களின் உழைப்பினையும் நோக்கினையும் நான் அவமதிப்பதாகவே எனக்கே தோன்றும். அதனால், இனி பட்டறையாளர் பற்றி எதையும் பேசமாட்டேன்.

மேலும், "நான் அவ்வுதாரணத்தினைச் சொன்னதன் சூழலைக் கண்டுகொள்ளவில்லை", " நுண்ணரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்" என்று தன் மேற்சட்டையின் முதலாம் இரண்டாம் தறிகளிலே கைவைத்து ஆடையவிழ்ப்பு நடனம் தொடங்கும் மாலன், "நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்", "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?","அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,விமானம் பிடித்து அயலகங்களுக்குக் குடியேறுகிறவர்கள்" என்று போர்த்திருந்த ஒவ்வோர் ஆடையினையும் களைந்து, தன் பின்னூட்ட இறுதியிலே உள்ளாடையையும், "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்ற முற்றிலும் பொய்யான வரலாற்றுத்திரிபினை அது தூண்டக்கூடிய வீச்சம், களம் அறிந்து களைந்தெறிந்து நிர்வாணமாக நிற்கின்றார். என்ன, ஒரேயொரு வித்தியாசம்; இந்நடனத்தின் இறுதிநிர்வாணநேரத்தின்போது, இங்கே விளக்குகள் அணையவில்லை. கண்கூசத் தெறிக்கின்றது உட்குரூரமும் நுண்ணரசியல்நோக்கும்.

நேரடியாகவே, "ஈழத்தமிழரை வரப்போகவிடும் ஈழத்தமிழரை ஆதரிக்காத இந்தியாவினை எனது தேசமென்று கொண்ட நான், இந்தியத்தேசத்திலே உள்ள இராமின் மகள் அமெரிக்காவிலே கற்பது பற்றி, "வெளிநாட்டிலே குடும்பத்துடன் வசதியுடன் வீடுகட்டி" -இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன்- வாழும் இந்தியாவுக்கு அந்நியனான -/பெயரிலி. என்ற ஈழத்தமிழன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா? நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா?" என்பதுதான் இங்கே பிரச்சனை" என்று சொல்லுமாறு சொல்லி அம்மணம் தெரிய நிற்கிறார். ஈழத்தமிழர், இந்தியா, இந்தியத்தமிழர், நாவலர், இந்து, புலிகள், ஈழத்தலைமை, மாற்றுத்தலைமை, யாழ்ப்பாணத்தமிழர், இலங்கையிலே இந்தியத்தமிழர் என்பன தொடர்பாக மாலனின் ஒவ்வொரு கருத்தும் இப்படியான இவரது தேசத்தினையும் தேசத்தின் சகமனிதர்களையும் விமர்சிக்கின்ற அன்னியரை எதிர்கொள்ளும் கல்லற்ற மெல்லிய(?) உணர்வுள்ள மனதினூடாகவே காணப்படவேண்டுமென்றே அவர் மிகவும் தெளிவாக தன் பின்னூட்டங்களிலே அறுத்து உறுத்து மெல்லிய உணர்வுள்ள மனம் பதறத் தேசப்பற்றுடனும் சகதேசத்தவர் பற்றிய நேசத்துடனும் சொல்கிறார். வாருங்கள், நாங்கள் போய் கண்மூடித்தனமான விடுதலைப்புலி ஆதரவாளர்களின் பாசிசத்தை விமர்சிப்போம் :-(

எல்லோரும் காண, பெரியார் மீது தனிமனிதத்தாக்குதல் என்ற பேச்சின் பின்னாலே, இராம்_மகள்+-/பெயரிலி.+ஸ்ரீலங்கா பாஸ்போட்_ஈழத்தமிழர்+இந்தியாவின் ஈழத்தமிழருக்கான ஆதரவின்மை இவை வந்ததற்கு அடியிலே இத்துணை சாம்பல்பூத்த தணல் இருப்பதினை நுண்ணரசியல் என்றில்லாமல் என்னவென்று சொல்வதாம்? அமுக்கிவைத்த முயற்குட்டிகள் இவ்வாறு குழி தோண்டி வளை தாண்டி அடங்காமல் பரந்தோடும் நிலையை எல்லோரும் பாருங்கள். இத்தனையையும் சுருக்கி, "வரப்புயர" என்று "-/பெயரிலி.யின் இராம்(மகள்) மீதான விமர்சன"த்துக்குள் இழுத்ததஉ நுண்ணரசியல் இல்லாவிட்டால், நானோவரசியலாகமட்டுமே இருக்கமுடியும். இதற்கு சற்றுமுன்னேதான் சிறிலைக் காட்டிக்கொடுக்கும் வலைநெறிப்பிறழ்வு வேறு (சிறில், இன்னமும் சயந்தனின் இடுகையின் பின்னாலே, -/பெயரிலி. சொன்ன அந்த 'ரேப்' உதாரணத்தினாலே மனம் நொந்து போயிருக்கின்றீர்களென்று தெரிகின்றது. :-) அதைக்கூட, வேண்டுமானால், வலைநெறிப்பிறழ்வு, தனிமனிதத்தாக்குதலுக்கு மாலன் அவருக்குமட்டும் தனியே ஆழத்தைத்துவிட்ட, மற்றவர்களுக்கு உப்புச்சப்பற்ற முரண்சொல்லும் " -/பெயரிலி._இராம்(மகள்)" உதாரணத்துக்குப் பதிலாகக் காட்டியிருக்கலாம் :-(). "-/பெயரிலி. குடும்பமாக வெளிநாட்டிலேயிருக்கின்றாரா? அவர் குட்டி சமஸ்தானத்துமஹாராஜா போல வசதியோடு இருக்கின்றாரா? இந்தியத்தமிழர்_இலங்கைத்தமிழர் உறவுநிலை, அரசியல் குறித்த வரலாற்றின் சரியான தரவுகள் எங்கே? யாழ்ப்பாணத்தலைமை என்றால் என்ன? எக்காலத்திலே அது எவரால் எவரைப் பிரதிநிதிப்படுத்தியது? (அப்படியான யாழ்ப்பாணத்தலைமையைக் கடிகின்ற மாலன் அதேதலைமையின் வழிப்பட்ட காலத்தே உருவாகிய அசல் யாழ்ப்பாணத்தார் அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி புத்தகத்துக்கு 1996 இலே முன்னுரை எழுதியது முரண்நகை :-)), இராம் மகள் மார்க்ஸியவாதியா என்று கேட்கும் இவர் எப்படி -/பெயரிலி. குடும்பம் வெளிநாட்டிலேயிருக்கின்றதென்று கருதிக்கொள்கின்றார்?" என்பதுபோன்ற பெரும்பட்டியற்கேள்விகளை இன்னொரு பொழுதுக்கு, நான் சொன்னதுபோலவே, என் இறுதிப் பின்னூட்டத்திலே பின்னொரு முறை வைத்துக்கொள்ளலாம்.

அதனால், இப்படியான நுண்ணரசியல், மண்ணரசியல் நிறைந்த (வி)வாதத்துள்ளே இவற்றுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிப்பட்டறை அமைப்பாளர்களை இழுத்து, இவ்வாதக்கிரகணம் பட்டறையின் நன்னோக்கினையும் அமைப்பாளர்கள் & பங்குபற்றியோரின் உழைப்பினையும் மறைத்து மறக்கடிக்க வைத்துவிட்டதற்காக வருந்துகின்றேன். இப்படியான விரிவு கொள்ளும் என்று எண்ணவில்லை. ஆனாலும் தவிர்க்கமுடியவில்லை. மேற்கொண்டேனும், அப்படியான எதிர்விளைவுகளைப் பட்டறைக்கும் அமைப்பாளர்களுக்கும் நான் மோசமாக்க ஒரு காரணமாக என் பதில்களிருப்பதை நான் விரும்பவில்லை. மாலன் பட்டறையமைப்பாளர்களோடு மனம் வருந்தக்காரணம் ஆகிவிட்டேன் என்பதற்காக, பட்டறை அமைப்பாளர்களிடம் (மட்டும்) என் வருந்தம் கலந்த தார்மீகமன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். பட்டறை அமைப்பாளர்கள் குறித்து இனியேதும் இங்கே பேசப்போவதில்லை.

Thursday, August 09, 2007

me, myself & my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?


படம் நன்றி: sangam.org

இவ்விடுகை நான், எனது, என் 'தான்' எந்திரத்தைப் பற்றிய புகைபோக்கல் மட்டுமே. வேறில்லை. ஈழம், டிஎம்ஐ, வேழம், டிஎம்எஸ் பற்றி வா சிக்கவென்று எவரையும் நான் அழைக்கவில்லை. வந்து சிக்குவதும் செருகுவது அவரவர் உத்தம, உன்மத்த மத்தளமனதைப் பொறுத்தே என்றாகுக.

வலைப்பட்டறையிலே நான் 'கலந்து' கொண்டிருந்தாலும், என் படம் எப்பதிவிலுமே தோன்றாததாலும் சித்தஞ்சிதறிச்சட்னிவடை எல்லோருக்கும் படம்போட்டுப் பதிவு போட்டாலும் எனக்குப் படம் போடாமலே பதிவு போடுவதாலும், இங்கே என் படமும் பட்டறை/றிந்தார்படப்பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கின்றது. இது, இவ்விடுகையை, என் ஈகோவை, சட்னிவடையை, வலைப்பதிவர்பட்டறையை முழுமைப்படுத்துமென்பதிலே மகிழ்ச்சியடைகிறேன்.


காலச்சுவடு 1996 செப்ரெம்பரிலே சிவசேகரம் அளித்த நேர்காணலுக்கான அ. யேசுராசாவின் எதிர்வினையிலே ஒரு பகுதி:
1. "தமிழ்த்தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களைவிடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல" என்கிறார்.

சிங்களப்பேரினவாதிகளால் நீண்ட காலமாகவே உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும் தமிழ்மக்கள், தமது உரிமைகளை மீட்டெடுக்கப்போராடுகின்றனரே தவிர, சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கப் போராடவில்லை; ஆனால், தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராடும்போது, "தமது நலன்கள் பறிபோகப்போவதாக" சிங்களப்பேரினவாதிகள் தவறாக ஓலமெழுப்புகின்றனர்.

2. "'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை" என்று சொல்லும் சிவசேகரம், அதன் பின்னணியைச் சரியாகப் பார்க்கவேண்டும். தம்ழிஅர்களின் 'பாரம்பரியத் தாயக'க்கோட்பாட்டை நிராகரிக்கும் பேரினவாதிகள் எப்போதுமே, தமிழர்களை "வந்தேறு குடிகளாகவும்", சொந்த அரசொன்றை ஒருபோதுமே இலங்கையில் கொண்டிராதவர்களாகவுமே சித்தரித்து வந்துள்ளனர். இச்சித்தரிப்பை இலங்கையின் பொதுவான வரலாறும், குறிப்பாக 'யாழ்ப்பாண இராச்சியம்' பற்றிய வரலாறும் பொய்ப்பிக்கின்றன. பேரினவாதத்தை எதிர்கொள்ளவே "ஆண்ட பரம்பரை" என்ற தொடர் சிலரால் கையாளப்பட்டது. தமிழர்கள் தம்மைத்தாமே ஆளவேண்டுமென்கின்றனரே தவிர, சிங்களவர்களையும் தாம் ஆள வேண்டுமென என்றுமே சொல்லவில்லை. 'ஆண்ட பரம்பரை' என்பதைச் 'சாதி மேலாண்மை உடையோர்' என்பதாகத் திரித்து, சிவசேகரமும் அவரைப் போன்ற இடதுசாரிகள் பலரும் முன்னர் கருத்துகளைப் பரப்பியமையையும் சுட்டுதல் இங்கு பொருத்தமானது.


=========================================

மாலனின் வலைப்பதிவர்பட்டறையின் பேச்சுக்கும் தொடர்ந்த கேள்வி-பதில்களையும் ஒலிக்கோவையாக இணையத்திலே இட்ட பத்ரிக்கு நன்றி. மேலும், அதிலே எனக்குத் தேவையான மாலன், -/பெயரிலி.+இராம்+மகள்+ஈழம்+ஸ்ரீலங்கா+இந்தியா பற்றிப் பேசிய துண்டத்தினைப் பிரித்தெடுத்து ஒலிக்கோப்பேற்ற கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தினைக் கைக்கொள்வதற்கும் நன்றி.

குறிப்பிட்ட ஒலித்துண்டம் இங்கே இணைத்திருக்கின்றேன்முழுதாக மாலன் என்ன பேசியிருக்கின்றார் என்று இப்போது (இரைச்சலூகவேனும் ஓரளவுக்குத் ) தெரிகின்றபோதிலே, மாலனின் இப்பேச்சுமேலே ஈழம்_இந்தியா_ஸ்ரீலங்கா பற்றி விபரமாகப் பின்னால்.

இப்போதைக்கு, வெறுமனே நான் இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதைச் சொன்னதை, தன் வலைநெறி பிறந்து எழுதுவதற்கு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டதைப் பற்றி. முதலாவது ஒரு வரி, நான் பெரியாரும், இராம் இராஜாஜியும் அல்ல; நான் டேவிட்டும் இராம் கோலியாத்தும் அல்ல; நான் ஈழத்திலே என் குடும்பத்தைக் கொண்ட தமிழ் அடையாளத்தோடிருப்பவனும், இராம் இலங்கா இரத்னா என்ற ஸ்ரீலங்கா அரசின் நன்னடத்தைப் பதக்கத்தைப் பெற்று ஸ்ரீலங்கா அரசுசார் "சமாதானக்"கூட்டங்களை இந்தியாவிலே நடத்திக்கொண்டிருக்கும் அரசியற்பலமும் பொருந்திய மாலனின் நண்பயுமாவார். குறைந்தபட்சம் ஒற்றுமையென்பதும் நானும் இராமும் நாற்பது வயதுதாண்டிய ஆண்கள் என்பதுமட்டுமே (இருவருக்கும் பேசுமொழி 'தமிழே' என்ற ஒற்றுமையைக் கொண்டு வராதீர்கள். குறைந்தபட்சம் இரண்டுபேர் ஒரே மொழியிலே ஆளையாள் புரிந்துகொள்ளும்போதுதான், ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று நான் கருதுகிறேன். நீங்கள் அப்படியாகக் கருதாவிட்டால், நான் ஒன்றும் செய்யமுடியாது)

இனி, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற செல்வநாயகியின் பதிவின்பின்னான என் ஒரு வரி எப்படியாக, அதே பதிவுப்பின்னூட்டத்திலே மாலனினால், ""உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று பெயர் சொல்லிப் பொருள் விரிக்கப்பட்டு, பின்னால், சென்னைப்பட்டறையிலே வலைநெறி பிறழ்ந்தற்கு உதாரணமாகப் போய் நிற்கின்றது.

(என் பின்னூட்டத்திலே குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகள் என்று சொன்னதை இந்து இராம் என்று நேராகவே போட்டெழுதுவதிலேகூட எனக்கேதும் தடையிருந்திருக்காது. ஆனால், அவ்வரிகளிலே அந்நேரத்திலே தோன்றவில்லை. அதனால், அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்றே வாசித்துக்கொள்வதிலேதும் எனக்குத் தடையில்லை - மாலன்தான் 'அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்று முதலிலே அடையாளம் கண்டு குறிப்பாக அதே வலைப்பதிவின்பின்னூட்டத்திலே பெயர் சொல்லி எழுதினார், அதனாலேயே "சாதாரண மாலன் வாசகர்களுக்கு " நான் பேசுவது இந்து இராம் + மகள் பற்றி என்று புரிந்திருக்கலாம்' என்று சொல்லி ஒரு தார்மீகமற்ற, ஆனால் தர்க்களவிலே எனக்குப் பாதுகாப்பான கவசத்தின்கீழே நான் மறையலாம் என்றானாலுங்கூட, தார்மீகமற்றதும் கோழைத்தனமானதுமான வாதமாகவே அஃதமையும்)

நான் எழுதிய அந்த ஒரு வரி எங்கே எதற்காகப் பயன்பட்டிருக்கின்றதென்று புரிந்துகொள்ளாதவர் அல்லர் பத்திரிகையாளர் மாலன். ஜீன் அரசநாயகத்துக்கு "தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய்." என்ற இரு வரிகள் எதற்காக ஜீன் அரசநாயகத்தின் நூல் பற்றிய "அடையாளங்களுக்கு அப்பால்.. " என்ற கட்டுரையிலே எதற்கு எழுதினாரோ, அதற்கும் மேலான ஒரு தேவையுடனேதான் இந்து இராமின் மகள் பற்றி நான் சொன்ன கருத்தின் தேவை அமைந்தது. நான் பேராதனையிலே படிக்கும் காலத்திலே, ("தஸ்புஸ்கிஸ்" மேல்மட்ட நுனிநாக்கு ஆங்கிலம் வாசமேயற்ற) எங்களையறியாத பார்வதியிலே பொழுதுபோக்காக ஒரு வயதுக்கோளாற்றுத்தூரத்துப்பார்வை வைத்திருந்த நண்பனோடு மதிய உணவுக்கு கலைப்பீட உணவகத்துக்குச் சாப்பிடப்போனதுபற்றியோ, அரசநாயகம் அவர்களிடம் அந்நேரத்திலே MIRJE பாலகிருஷ்ணனின் கட்டுக்கல பேராதனைவீதி அலுவலகத்திலே வேறு சில நண்பர்களோடு இரண்டு மாதங்கள் வாரம் மூன்றுமுறை மாலையிலே தடவைக்கு ஒன்றரை மணிநேரம் ஆங்கிலம் கற்றது பற்றியோ அர்த்தமற்ற தனிப்பட்ட விபரங்களையெல்லாம் சேர்த்து எழுதினாலேதான், பேச்சுக்குச் சம்பந்தமில்லாத அநாவசியமாகியிருக்கும். ஆனால், நான் சொன்னது மிகவும் தெளிவான வாதம்.

நான் இந்து இராமின் மகளைப் பற்றி எதற்குச் சொன்னேன் என்று சென்ற இடுகையிலே விளக்குமாறு கொண்டு விளக்கிவிட்டேன். அதனால், சொன்னதை மீண்டும் "ஓர் ஒன்று ஒன்று; ஈர் ஒன்று இரண்டு" சொல்ல எவ்வகையிலும் எனக்குத் தெம்பில்லை; இதுவரை சொன்னதையே வாசித்துப் புரிந்துகொள்ளமறுக்கும் மாலனுக்கு அதற்காக நேரம் செலவு செய்யவும் விருப்பமில்லை. வேண்டுமானால், மீண்டும் வலைநெறி வளைநெறி பின்புலத்தையும் முதலாவது காரணத்தையும் வாசித்துப்பார்க்கவும். வேண்டுமானால், நான் எழுதியதினை மிகவும் பரந்துபட்ட, விரிந்த அதற்கு ஒத்தமை உதாரணமாக நான் சொல்லக்கூடியது கீழே வரும் நிகழ்வு.

சில வாரங்களுக்கு முன்னால் நடந்த அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதிவேட்பாளர்களின் விவாதமேடையிலே "பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா? பொதுப்பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா?" என்று விவாதமட்டுறுத்துனர் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேட்டார். அவர்களுக்கும் ஆறுதலாகப் பதில் சொன்னார்கள். விவாதமட்டுறுத்துனர் என்ன நெறியோடு வேட்பாளர்களின் தேர்தலிலே சம்பந்தப்படாத பிள்ளைகளைப் பற்றிக் கேட்கிறார் என்று அவரிடம் எவருமே கேட்பதில்லை. அது வெறுமனே வேட்பாளரின் சொல்லுக்கும் செயலுக்குமான ஒத்துப்போகும் தன்மையைக் காணவே கேட்கின்றார் என்று புரிகின்றது.

அவ்விவாதத்தின் எமக்குத்தேவையான உரைப்படி இங்கே கீழே:
---- சிஎன்என் யூரியூப் விவாத உரை உட்செருகல் -------
QUESTION: Hey, I'm Mike Green from Lexington, South Carolina. And I was wanting to ask all the nominees whether they would send their kids to public school or private school.
(APPLAUSE)
COOPER: The question is public school or private school. We know, Senator Clinton, you sent your daughter to private school. Senator Edwards, Obama and Biden also send your kids to private school. Is that correct?
CLINTON: No.
COOPER: No?
CLINTON: No, it's not correct.
COOPER: OK.
(LAUGHTER)
(CROSSTALK)
EDWARDS: I've had four children, and all of them have gone to public school. I've got two kids...
(APPLAUSE)
... who are actually here with me in Charleston tonight, two kids, Emma Claire and Jack, just finished the third grade in public school in North Carolina, and Jack just finished the first grade in public school in North Carolina.
COOPER: Senator Clinton?
CLINTON: And Chelsea went to public schools, kindergarten through eighth grade, until we moved to Washington. And then I was advised, and it was, unfortunately, good advice, that if she were to go to a public school, the press would never leave her alone, because it's a public school. So I had to make a very difficult decision.
COOPER: Senator Obama?
CLINTON: But we were very pleased she was in public schools in Little Rock.
COOPER: Senator Obama?
OBAMA: My kids have gone to the University of Chicago Lab School, a private school, because I taught there, and it was five minutes from our house. So it was the best option for our kids. But the fact is that there are some terrific public schools in Chicago that they could be going to. The problem is, is that we don't have good schools, public schools, for all kids. A U.S. senator can get his kid into a terrific public school. That's not the question. The question is whether or not ordinary parents, who can't work the system, are able to get their kids into a decent school, and that's what I need to fight for and will fight for as president of the United States.
(APPLAUSE)
COOPER: I want to ask this question of everyone.
Senator Biden?
BIDEN: My kids did go to private schools, because right after I got elected, my wife and daughter were killed. I had two sons who survived. My sister was the head of the history department. She was helping me raise my children at Wilmington Friends School.
BIDEN: When it came time to go to high school when they had come through their difficulties — I'm a practicing Catholic — it was very important to me they go to a Catholic school, and they went to a Catholic school. My kids would not have gone to that school were it not for the fact that my wife and daughter were killed and my two children were under the care of my sister who drove them to school every morning.
COOPER: Congressman Kucinich?
KUCINICH: My daughter, Jackie, went to the Columbus public schools and got a great education. And I want to make sure that that commitment that sent her to public school is a commitment that will cause all American children to be able to go to great public schools.
(APPLAUSE)
COOPER: Senator Gravel?
GRAVEL: My children went to public school and private school, and I'm recommend that we need a little bit of competition in our system of education. Right now, we have 30% of our children do not graduate from high school. That is abominable, and that is the problem of both parties.
(APPLAUSE)
COOPER: Senator Dodd?
DODD: My daughter goes to the public school as a pre-school — kindergarten. But I want to come back to the No Child Left Behind.
DODD: Because I think remedying this — and I understand the applause here — accountability is very important. This is one country — we've got to have the best prepared generation of Americans that we've ever produced in our educational system. No other issue, in my view, is as important as this one here. And getting the No Child Left Behind law right is where we ought to focus our attention here so that we have resources coming back to our states. You measure growth in a child. You invest in failing schools. But I would not scrap it entirely. Accountability is very important in this country. We ought not to abandon that idea.
COOPER: Let's try to stay on the topic.
The next question comes from Pennsylvania.
QUESTION: Hi. My name is Anne, and I work at a Planned Parenthood in Pennsylvania. My question is, we here at Planned Parenthood support comprehensive sex education and I'd like to know if any of you as candidates have talked to your children about sex and used medically accurate and age-appropriate information?
COOPER: Senator Edwards?
EDWARDS: Well, Elizabeth and I have had sort of an unusual experience for parents, because Elizabeth likes to say that was made a member of AARP when she was pregnant with Jack, our last child.
EDWARDS: We have had four children. Our two youngest children are now nine and seven. So we have been through the whole experience, including kids who have grown up. Yes, the answer is we have taught our younger children when they were young how to look for the signs of wrong touching, any kind of what would be sexual abuse, inappropriate touchng. And we have taught our children as they got older, all — I think, using medically appropriate terms — all that they needed to know to be properly educated.
COOPER: Senator Obama, Mitt Romney has accused you this week of saying that 5-year-old children should be getting sex education. Was he right?
OBAMA: Ironically, this was actually a proposal that he himself said he supported when he was running for governor of Massachusetts.
OBAMA: Apparently, he forgot.
(LAUGHTER)
And it makes the exact point that John made. I've got a 9-year-old daughter and a 6-year-old daughter. And I want them to know if somebody is doing something wrong to them, encroaching on their privacy, that they should come talk to me or my wife. And we've had that conversation, but not every parent is going to have that conversation with their child, and I think it's important that every child does, to make sure that they're not subject to the sexual predators.
COOPER: All right.
---- முற்று------
மேலும், கனிமொழி குறித்து இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு...... என்ற நீண்ட பத்தியைச் சிங்கப்பூர்த்தமிழ்முரசுக்கு எழுதியவர், குடும்பங்களை அளை/ழையாமலா, அப்பத்தியினைப் பொதுவாசகர்களுக்குத் தந்திருக்கின்றீர்களென்று நினைக்கின்றீர்கள்? நான் குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் கொலம்பியாவிலே மின்னுதல்' என்ற அர்த்தப்பட நான் எழுதியதை, முதலிலே தனிப்பட்டவரின் குடும்பம் மீதான ஏகடியம் என்று அதே பதிவுப்பின்னூட்டத்திலே பேசிவிட்டு, அதன் பின்னால், மூன்றிடங்களிலே நான் விளக்கியபின்னாலும், சென்னைப்பட்டறையிலே போய் சம்பந்தமில்லாததைப் பேசுதல் என்பதற்கு உதாரணம் எடுப்பதென்பது ஒன்று புரிந்துகொள்ளும் திறனில்லாததால் நிகழக்கூடியது; இரண்டாவது, மற்றவர்களின் கருத்தினை வாசிக்கவோ செவிமடுக்கவோ செய்யாமல், வெறுமனே தான் மற்றவர் என்ன சொன்னார் என்று நினைக்கின்றாரோ அவ்வர்த்தத்திலேயே மற்றவர் சொன்னார் என்று சொல்லும் திமிர்த்தனத்தின் (வார்த்தைக்கு மன்னிக்கவேண்டும்;அதுதான் உள்ளவற்றிலே நெறியானதும் பொருத்தமானதுமாகத் தெரிகின்றது) விளைவாகத் தோன்றக்கூடியது; மூன்றாவது, வேண்டுமென்றே ஒருவரைப் பற்றிய தவறான கருத்தினைக் குறிப்பிட்ட குழுவிடையே ஏற்படுத்தவேண்டுமெனச் சொல்லக்கூடியது (அது யார் "ஆமாம் சார்"" மாலனுக்குப் போட்டதென்று இன்னமும் தெரியவில்லை :-)). மாலன், நிச்சயமாகப் புரிந்துகொள்ளும் திறனற்றவர் அல்லர். அப்படியானால், எதற்குத் தொடர்ந்துமே வலைப்பட்டறைக்கூட்டமொன்றிலே வலைநெறிக்கு ஒவ்வாதது என்பதற்கான விளக்கமாக என் கூற்றினை எடுத்துச் சொல்லி, மேலும் பேசிக்க்கொண்டிருக்கும் நெறிபிறழ்வுக்கருத்துக்குச் சம்பந்தமில்லாத விளக்கமாக/வில்லங்கமாக, இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்தும்விதமாக, ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பதுவரைக்கும் இரண்டரை நிமிடங்களை எடுத்துக்கொண்டு, கடைசியிலே மட்டுறுத்துனருக்கு மற்றவர்கள் அவரிடம் கேள்வி கேட்க வழங்க நேரத்தினைத் தராமற் போகின்றாரென்று புரியவில்லை.

இதற்குமேலும் புரிந்துகொள்ளமுடியாவிட்டால், இக்குறிப்பிட்ட ஒரு வரி தொடர்பான (விதண்டா)வாதத்திலே எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இந்துவிலே வெளியான கொலம்பியா பல்கலைக்கழகத்திலே சிறந்து விளங்கும் மாணவி பற்றிய செய்தியின் அடிப்படையிலே வாதத்துக்குச் சுட்டிய என்னை வலைநெறிபிறழ்ந்ததாகக் கண்டிக்கும் நீங்கள், பிரபாகரனின் மகன் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் போகின்றார் என்று "அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி" உலகமே நம்பும் India's National Newspaper இந்து இட்ட பத்திரிகைச்செய்தியையும் பத்திரிகைநெறிப்படி தவறு என்று பத்திரிகை நெறியிலே மேற்படிப்பும் பட்டறிவும் பெற்று வலைப்பட்டறைகளிலே வலைநெறி பற்றி (ஆளில்லாதபோது, உதார் ரணம் காட்டும்) பத்திரிகையாளர் நீங்கள் அச்செய்தி வெளியான நேரத்திலேயே கண்டித்திருப்பீர்களென்று இவ்விடுகையை வாசிக்கும் எல்லா வாசகர்களையும்போல நானும் நிச்சயமாக நம்புகிறேன். இத்தோடு, அடுத்துவரும் மாலடியார் அஞ்ஞானக்கும்பி மறுப்பு 1ஆ பகுதியிலே என் கூற்று நான்குக்கு இங்கே சொன்னதையும் முழுமைக்காகச் சேர்த்துக்கொள்வதைத் தவிர, வேறெங்கும் *தனிப்படத் தொட்டதன்* அளவிலே உங்கள் வலைப்பட்டறைப்பேச்சினைப் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. மேலும் பேசுவது வெறும் சோர்வைத்தான் தருகின்றது. மாலனைப் போன்றும் புரிந்தும் புரியாததுபோலவே பேசிக்கொண்டு போகின்றவர்களுக்குத் தனிப்பட விளக்கம் கொடுக்கும் இந்நேரத்துக்கு யாரேனும் புத்தாலோ புல்வீனோ நளினத்திலே ஒரு சிறுகதையெழுத முயற்சித்திருந்தாலுங்கூட, என் சட்டைப்பதக்கம்போல, நானே குத்திக்கொண்டிருந்திருக்கலாம் :-(

====================================================

சிந்தாநதி, வெற்றி:
மிகவும் அன்புடன் என் முன்னைய பதிவின் பின்னூட்டங்களிலே சொல்லியிருக்கும் நண்பர்கள் நீங்கள். பொதுவிலேயே பல விடயங்களிலே உடன்பாடு கொண்டுள்ளவர்கள் நாம் (வெற்றியின் ஆறுமுகநாவலர் இடுகைக்கருத்தினைக் குறித்துப் பிறகொரு முறை சண்டை போட்டுக்கொள்ளலாம் :-)). அதனால், நான் நீங்கள் சொன்னதிலேயிருக்கும் கருத்துகளோடு உங்களுடன் நான் முரண்பட்டால் புரிந்துகொள்வீர்களென்று நிச்சயமாக நம்புகிறேன். ஏற்கனவே சொன்னதை விரிவாக, எழுதத் தெம்போ விருப்பமோ இல்லை.

வேண்டுமானால், சில கேள்விகளை மட்டும் இப்போதைக்குக் கேட்கிறேன்; பொதுவாக, இப்போதெல்லாம் எதைப் பற்றி நான் *தனிப்பட்ட என் கருத்தை என் பதிவிலே* பேசினாலுங்கூட, வேண்டுமென்றே ஈழத்தவரின் கருத்தென விரிப்பதுவும் தமிழ்மணம்/பூங்காவினைக் குறிவைத்துத் தாக்கி அடக்கமுயல்வதும் நிகழ்கின்றதைக் கண்டிருப்பீர்கள். ஈழத்தவருக்கு விரிப்பதைப் பற்றிக்கூட எனக்குப் பெரிய கவலையில்லை. ஈழம் என்பது எவராலும் இன்னமுறைப்படி இருப்பவர் இன்னார் என்று, பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பல்ல (வலைப்பதிவர்களின் நாடுகளில் ஒன்று என்று பதிவாளர்கள்கூட்டமைப்பொன்று பதிவு செய்ததைச் சொல்லவில்லை :-)); அதனாலே, எதையும் சேதப்படுத்தாது.

ஆனால், தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றிலே வைக்கும் தாக்குதல்கள் அப்படியானவை அல்ல; அதனாலேயே நான் கருத்தளவிலே என் *சொந்தக்*கருத்தினை. *என் தனிப்பட்ட ப்ளொக்ஸ்பொட்" பதிவிலே சொல்லத் தயங்கத்தேவையில்லையென்றபோதிலுங்கூட, நடைமுறையிலே என்னையும் தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றினையும் சேர்த்து எழுதி வாசிப்பவர்களுக்கு என் கருத்து இவ்வமைப்பின் கருத்து என்பதாக மயக்கம் ஏற்படுத்தி அவற்றுக்கெதிராகச் செயற்படத்தூண்டும் சிலரின் அடாவடித்தனம் என்ற மறைமுகமான தாக்குதலுக்கு - வெட்கமின்றி வெளிப்படையாகச் சொன்னால் - ஓரளவுக்கு -இவற்றின் நன்நோக்கங்கள் நிலைத்து இலக்குகள் எய்யப்படவேண்டுமென்பதற்காக-அஞ்சுகிறேன். இத்தனைக்கும் இந்துவைப் போல அதன் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தும் பத்திரிகையின் உத்தியோக பூர்வமான கருத்தும் ஒன்றே என்பதுபோல (..The Tigers' turning on the Indian Peace Keeping Force, the heavy casualties suffered by the Indian soldiers in the North and East of Sri Lanka, the withdrawal of the IPKF from the island in early 1990 and the Tigers' policy of assassinating any leaders opposed to it, resulting in Rajiv Gandhi's calamitous death in a suicide bomb blast near Madras in 1991, all made not only Ram, but also The Hindu take a strong anti-LTTE line. In this sense, the newspaper mirrored official India's policy course and turns...-The Hindu, Saturday, Sep 13, 2003) எங்குமே பூங்காவோ/தமிழ்மணமோ/டி எம்ஐஓ அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் பதிவுகளையும் தமதென்று சொல்வதில்லை. இல்லை, தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ இவற்றைத் தாக்கியே என்னைப் பயமுறுத்துவீர்களென்றால் (சித்தம் சிதறிய சட்னிவடைக்கு அல்ல இந்த அறிவிப்பு; அதனால், தொடர்ந்து நீர் பதிவும் நானே, பின்னூட்டமும் நானே என்று விளையாடலாம் :-)), சில மாத அவகாசம் தாருங்கள். என் சொந்தக்கருத்தினை, என் சொந்தப்பதிவிலே சொல்ல நான் டிஎம்ஐ இலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமா என்று தீர்மானித்து முடிவெடுத்துக்கொள்ள அவகாசமுடனான வாய்ப்பாகவிருக்கும். I do not have to endure some people's nonsenses and slurs personally towards me only because I do some voluntary tasks for TMI. My ego is important to me more than anything I see, encounter and mix in the net. (இலங்கைத்தமிழ்தான் புரியாது; இதுவேனும் -நான் எழுதியிருக்கும் english grammer ரைட்டா? :-(- புரிந்தால் சரி) இதனைப் புரிந்துகொண்டு, மேலே நீங்களும் வாசிக்கின்றவர்கள் எல்லோரும் என் கேள்விகளை வாசிப்பீர்களென்று நம்புகிறேன்.


வலைப்பதிவர்பட்டறையிலே அக்கணத்திலே சொல்லப்பட்டதையோ தடுக்கமுடியாத மட்டுறுத்துனர் மற்றவர்கள் குறித்தோ எனக்கேதும் வருத்தமில்லையென்றே நீங்கள் கொள்ளலாம். நான் வருத்தப்படுவேனா என்பது பற்றி வலைப்பட்டறை அமைப்பாளர்கள் மெய்யாகவே கவலைப்படுகின்றவர் அல்லர் என்றுதான் எனது எதிர்பார்ப்பு. இதற்கான காரணங்களை வலைப்பதிவு அமைப்பாளர்களிலே சிலருக்கும் எனக்குமிடையே வலைப்பதிவிலே ஏதோ ஒரு புள்ளியிலே தொட்டுக்கொண்டு விட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களை நான் சுட்டிக்காட்டலாம். வலைப்பதிவு ஆட்களையும் அரசியலையும் கையாளும் திறன் கொண்ட அதிமேற்றிராணிகளும் சந்திரசுவாமிணிகளும் கணித்திரைமறைவிலே செயற்படும்வரை அப்படியான வருத்தங்கள் மெய்யாகவே அவர்களிடம் தோன்ற வாய்ப்பில்லை என்றே நிச்சயமாக நான் நம்புகிறேன். அப்படியல்ல என்று அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை; எவரது நம்பிக்கையும் தவறு என்று இன்னொருவர் நிறுவுவதும் கடினம். ஆனால், அதுவல்ல இங்கேயுள்ள பிரச்சனை. வேண்டுமென்றே மட்டுறுத்தும் நிலையிலிருந்த சிவக்குமார் மாலனைப் பேசச்சொல்லியிருப்பார் என்றோ அல்லது அப்பட்டறைக்கூடத்திலேயில்லாத (இன்னமும் சென்னையிலேயே இல்லாத நீங்கள் உட்பட) மற்றைய பட்டறை அமைப்பாளர்களும் வேண்டுமென்றே இதைச் செய்ததாகவோ கேள்வி எழுப்பமுடியாது. அப்படியான கேள்வி எழும்பினால், அது கேட்பவரின் தன் தேவைக்காகத் திரிக்கின்ற போக்கினைத்தான் காட்டும். தவிர, தனிப்பட்ட அளவிலே, என்னை மாலன் அங்கே இப்படியாகக் குத்தினாரென்றால், அதற்கு எங்கே அவருக்குக் குத்தும்படி குத்தவேண்டுமென்று எனக்குத் தெரியும். அப்படியாகத்தான் இணையத்திலே என் செயற்பாடுகள் இதுவரையிருக்கின்றன. அதனால், எதிராளியின் அதே சண்டித்தனத்தோடு கோதாவிலே இறங்கும் என்னைப் பற்றியதல்ல எவ்வகையிலும் இப்பிரச்சனை. என் "பெண்களைத் தமிழ்மணத்திலிருந்து பெண்கள் வாரத்திலே துரத்தி அவர்களின் சேவைகளையெல்லாம் எனதென்று காட்டிக்கொள்ளும் ஆணாதிக்கத்தன்மை பொருந்திய, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அதேநேரத்திலே திராவிடத்தமிழர்களையும் அய்யங்கார்களையும் ஒரே நேரத்திலே எதிர்க்கும், புரியாமலே இலங்கைதமிழ் எழுதும், எழுத்தாளர் சல்மாவுக்கும் சல்மா அயூப்புக்கும் வித்தியாசம் தெரியாத" வானவிற்பண்புகளைத் தாமாக உணர்ந்தவர்களோ இடைத்தரகிகள் ஊடாகப் பாடங்கேட்டவர்களோ பாதிப்பேர், என்னையே அறியாத புதுப்பதிவர்களாக ஆகக்கூடியவர்கள் மீதிப்பேர் கொண்ட நான் போயேயிருக்காத சென்னையிலே மாலன் போகிறபோக்கிலே வைக்கும் மூன்றரை நிமிட நுண்ணரசியல் எவ்விதத்திலும் என்னைத் தனியாளாகப் பாதிக்கப்போவதில்லை. அதனால், இங்கே வாதம் என்னைப் பற்றியதல்ல; ஆனால், பட்டறையினர் -குறிப்பாக, மா. சிவக்குமார் - அதற்குப் பின்னாலே, இந்தக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எப்படியாகக் கையாண்டார்கள் என்பதுதான் *எனது தனிப்பட்ட, வலைநெறிப்பட்ட பார்வையிலான* கேள்வி.

இக்கேள்வியினை நான் மிகவும் தெளிவாக என் முன்னைய பதிவிலும் பின்னூட்டங்களிலும் பிரித்துக்காட்டிய, வலைப்பதிவுப்பட்டறை குறித்த என் மதிப்பிலிருந்தும் அதன் அமைப்பாளர்களின் உழைப்பு குறித்த என் மதிப்பிலிருந்தும் வேறாகப் பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டுமென மீண்டும் இங்கே அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், மாலன் பற்றி என்னைப் போன்றவர்கள் கேட்பதையெல்லாம், வலைப்பட்டறைக்கு எதிரானது போலவே திரும்பத்திரும்பப் பேசும் வகையிலே ஓரிருவர் கிளம்பியிருக்கின்றரோ என்று தோன்றுகின்றது. அப்படியல்ல; வலைப்பதிவர்பட்டறைகள் அவற்றின் உடனடி விளைவுகள் எவையாக ஆரம்பத்திலேயிருந்தாலுங்கூட, தொடர்ந்தும் சென்னை வலைப்பதிவுப்பட்டறை அமைப்பாளர்களின் நோக்கினதும் உழைப்பினதும் பாதையிலே விரிந்தெங்கும் நடக்க, பேரளவு வலைப்பதிவர்கள்போலவே பார்வையாளனாக நானும் மிகவும் ஆவல்கொண்டிருக்கின்றேன்; அப்பட்டறை அமைப்பாளர்களின் நற்செயற்பாடுகளுக்குக் வலைப்பதிவுப்பார்வையாளனாக கடப்பாடும் கொண்டிருக்கின்றேன்" இதைப் புரிந்துகொண்டு மேலே வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.

என் கேள்விகள் சில:

1. மாலனின் இடத்திலே நானும் என்னிடத்திலே மாலனுமிருந்திருந்தால், மா. சிவக்குமாரோ மற்றைய அன்றைய நாள் அங்கேயிருந்த வலைப்பதிவு அமைப்பாளர்களோ என்ன செய்திருப்பார்கள்?

கேள்வி கேட்கும் விவாதங்களிலே புல் முளைக்கின்ற விளைவுமில்லாதபோது, எதற்காகப் பட்டறையிலே "கேள்வி நேரம்" என்ற என் சிறுபிள்ளைத்தனமான வாதத்தை இங்கே விட்டுவிடுகிறேன். "ஆமாம் சார்" என்று மாலன் சொல்வதற்குத் தலையாட்டுகின்றவர் கேட்கும் மாலனின் பேச்சின் போதான ஒலிப்பதிவிலே, பட்டறை முடிந்தபின்னால், அமைப்பாளர்களோ மா. சிவக்குமாரோ மாலனிடம் இதைப் பற்றிச் சுட்டிக் காட்டினார்களா என்பது கேட்காதென்ற நிதர்சனநிலையையும் ஒத்துக்கொள்கிறேன்.

2. மாலனின் பேச்சினைக் குறித்து மோகன்தாஸ் கேள்வி எழுப்பாவிட்டால், அதன் பின்னால், அதைக் குறித்து ஓரிரு இடுகைகள் வந்திராவிட்டால், மாலன் விவாதத்துக்குரியதாகப் பேசியது "தணிக்கை செய்யப்பட்டே" வந்ததுபோலவே எல்லாம் முடிந்திருக்குமா? மற்றைய வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இதற்காக ஓர் இடுகை எழுதியிருப்பார்களா?

3. திருவின் பத்திரிகையாளர் மாலனுக்கு... பதிவுக்கு ஈழத்தவனாக நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்; அதே நேரத்திலே, தனிப்பட்ட ஆளாக ஒரு கேள்வி, அங்கே வந்திருக்கும் பின்னூட்டத்தின்பின்னான பின்னூட்டம் இது,

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//இதோ தாய் தமிழகத்தில் இருந்து முழங்குகிறோம்

"ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங்கள் ரத்தம் "

எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயர் கண்டு கலங்கக்கூட உரிமையில்லையா ?
//

ரிப்பிட்டேய்..
8/09/2007 02:17:00 PM


யெஸ். பாலபாரதி வலைப்பதிவு பட்டறையின் 'தல'யான ஓர் அமைப்பாளர்; இங்கே ரிப்பிட்டேய் என்று குரல் தருவதை ஈழத்தவனாக நன்றியுடன் ஏற்றுக்கொள்கையிலே, பட்டறை முடிந்தபின்னால், மாலனிடம் அவரின் ஈழத்தவரும் ஸ்ரீலங்கா பாஸ்போர்டும் என்பது நெறிக்கு அப்பாலான பேச்சாக அலைந்தது பற்றிய கருத்துப்பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை (ஆட்சேபமென்று அல்ல) கேட்டாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்; நிச்சயமாக, -/பெயரிலி.யின் பெயர் சொன்னதைப் பற்றித் தனிப்பட்ட அக்கறைப்படவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களிலே நிகழ்ந்தவற்றினை உணர்ந்திருக்குமளவிலே அப்படி அவர் கேட்டிருந்தால்மட்டுமே எனக்கு சில நிகழ்வுகளைத் திரும்பி மீள்பார்வை பார்க்கும் தேவையை வைத்திருந்திருக்கும்.


4. புதியவலைப்பதிவர்கள் (ஆகப் போகின்றவர்கள்) என்ன நினைப்பார்களோ, வலையிலே இதைத்தான் முதலிலே வாசித்துவிடப்போகின்றார்களோ என்று கவலைப்படுகின்றீர்கள்; மாலன் பேசியதை வைத்து, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கே கவலையில்லாதபோது (முதலாவது, இதையெல்லாம் அவர்கள் கவனித்தார்களா என்பது பெரியதொரு விடயம்; நாங்கள் அதைக் கவனிக்கவில்லை; கவனித்தார்கள் என்றே கொண்டு பேசுகின்றோம் :-)), நீங்களும் என் "பெயரை"ப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. ஆனால், வலைநெறி என்பது தவறான கருத்தினை ஒருவர் பரப்பியபின்னால், வலைப்பட்டறை அமைப்பாளர்கள் (எதிர்ப்பென்று அதற்கு ஏற்படாவிடத்து, அதைப் பெரிதுபடுத்தாததுகூடப் பெரியவிடயமில்லை; ஆனால்,) எதிர்க்கருத்தென்று ஒன்று வலையிலே எழுப்பப்படும்போது, அதைப் பேசாதிருத்தலே வலைநெறி என்று கற்றுக்கொள்வதுதான் இதனால் ஆகுமென்பதிலே உங்களுக்குச் சம்மதமென்றால், சொல்ல ஏதுமில்லை.

5. சிவக்குமார், பூர்ணாவின் இடுகையிலேதமிழ்புளோக்கர்ஸ்.ஆர்க்கின் பதிவுகள் அல்லது தளத்தில் வருவன அனைத்தும், பட்டறை அமைப்பாளர்கள் அனைவரின் மொத்த கருத்தே.. சிவகுமாரின், பாலபாரதியின், ரவிசங்கரின், சிந்தாநதியின், விக்கியின், லக்கிலுக்கின் மற்றும் பூர்ணாவின் இடுகை அது என்ற இடுகையிலே..


நான் மோகன்தாசுக்குச் சொன்னது
“அத்தகைய விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து.”
இத்தகைய விவாதங்களை இந்தப் பட்டறையில் நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொருளில்தான். அதில் எனது சொற்பயன்பாடு அடாவடியாக தவறாகப் பொருள் படும்படி இருந்து விட்டதை உணர்ந்து வருந்துகிறேன்.


இங்கே சொல்லப்பட்டிருக்கும் விதத்திலே அவரின் வரிகளோடு எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மாலனிடம் அவர் இதைப் பற்றி ஏதாவது சொன்னாரா? பதிவர் பட்டறைவின் நிகழ்வுகளென்று அவர் "தணிக்கை" செய்து எழுதிவைப்பதுதான் சரியான முன் மாதிரியா? சிவக்குமார் மன்னிக்கவேண்டும்; ஏனென்றால், அவர் எப்போதுமே எவரிடத்திலுமே அவரைப் பற்றிய தவறான கருத்து ஏற்படாதிருக்க மிகுந்த கவனத்தோடு செயற்படுகின்றவர் என்பதே தமிழ்நெற் காலத்திலிருந்து எனது புரிதல் (அரவிந்தன் நீலகண்டனுடனான விவாதம் போன விதங்கூட அதை உறுதிப்படுத்தியது); இப்படியாக, isolationists ஆக இல்லாமலே Mixing with crowd ஆக இருக்கும் நேரத்திலேயே தங்களைப் பற்றிய நல்ல கருத்தினை எல்லோரிடத்திலும் தக்கித்துவைத்துக்கொள்கின்ற வலைப்பதிவிலிருக்கும் சிலரிலே எனக்கு உள்ளூர மிகப்பொறாமையுண்டு என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும். [அட, நம் சித்தஞ்சிதறிச்சட்னிவடை என்னையும் இன்னும் சிலரையும் அன்போடு அ தட்டியெழுதிய பின்னூட்டத்தைக்கூட, சட்னிவடை கோச்சுக்கக்கூடாதென்று கொஞ்ச நேரம் நேற்றிரவு தன் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் இடுகையின்பின்னாலே, 'me'தக்கவிட்டிருந்தாரென்றால் பாருங்கள் :-)]


6. இந்து இராம்_அவர் மகள் பற்றி நான் & மாலன் எழுதிய குறிப்புகளையும் விளக்கங்களையும் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் வாசித்தவர்களோ (புரிந்துகொண்டவர்களோ) - மோகன்தாஸ் பொதுவிலே வேறுகோணத்திலே தொட்டுக் கேள்வியெழுப்பியிருந்தாலுங்கூட - அப்பட்டறைக்கூ(ட்)டத்திலே இருக்கவில்லையா? இதுதான் தனிப்பட எனக்குப் பெரிய தாக்கமாகின்றது :-( மாய்ந்துமாய்ந்து மாலனின் தாமே பொலபொலக்கும் வாதங்களைப் பிய்த்துவைத்துக்கொண்டிருக்கின்றேன் என்று எண்ணிக்கொண்டு அரைமைல் நீள இடுகைகளை நேரம், சத்தி (இன்னும் வெளியே சொல்லமுடியாத, தேவையற்ற சில) விட்டு பதிவிலே இட்டுக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் அத்தனை பதிவர்களும் வாசிக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையிலே... அங்கே போய் மாலன் ராம் பொண்ணை அநாவசியத்துக்கு -/பெயரிலி. இழுக்கின்றார் என்று வலைநெறி புகட்ட, "ஆமாம் சார்", 'மௌனமே சம்மதம் சாமி' என்று இருந்தால், மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு எழுதுவதைவிட்டுவிட்டு, அய்யனார், தமிழ்நதி வழியிலேயே "கதை, கவிதை" என்றோ அல்லது சிவபாலன், குமரன், வடுவூர் குமார் வழியிலே, "மினியாபொலிஸ் பாலம் உடைந்ததின் பின்னான தொழில்நுட்ப & நிர்வாகக்கோளாறு" & "கத்தரினா புயலிலே அணைக்கட்டு உடைந்த மண்மர்மம்" என்றோ, டிசே, சன்னாசி வழியிலே "அண்டார்ட்டிக்கா திரைப்படவிழாவிலே பார்த்த ஆபிரிக்கத்திரைப்படம் திருடிய ஆர்ஜெண்டீனியச்சிறுகதை" என்றோ எனக்கேனும் என்ன பேசுகின்றேனென ஓரளவு தெரிந்தார்தீவிலே இறங்கித் துன்புறுத்துவேன். அந்த வேதனை வலைப்பதிவுக்கு வேண்டுமா? :-) (இதையாவது நீங்கள் புரிந்து வாசிக்கும்படி புரிந்து எழுதுகின்றேனா?) :-( அல்லது மாலன் போன்ற வலைப்பதிவைக் கண்டெடுத்து வழி நடத்திய முன்னோடிகளிலே அடங்காத சாதா ரண சகபதிவர் என்றுகூட பதிவுகளிலே ஓரிருவர் துளைக்கும்வரை தோன்றாத உங்களுக்கும் உங்கள்
பட்டறைக்கு ஊடகவிளம்பரம் கிடைக்கச்செய்யும் மாலன் சாருக்கும் (லக்கி லுக், நெஜமாலுமே உண்மை மாலன் சாரை பேட்டி கண்டாங்களா? மாலன் சார் பட்டறையிலே தான் என்ன சொன்னார் என்று பட்டறையிலே மாலன் பேசியபோது இல்லாத நீங்கள் ஏதாவது அறிந்துகொண்டீர்களா? :-)) தொல்லையில்லாமல் வலைப்பதிவை விட்டுப்போய்விடட்டுமா? அது வலைநெறிக்குள்ளே ஓக்கேயாகுமா?


வலைநெறி பேசிய மாலனிடம் யாரேனும் "சார், சல்மா அயூப், போலி டோண்டு, இரவுக்கழுகார் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? வலைப்பதிவு நெறியிலே இதன் விளைவைவிடவா, இராம் பொண்ணு பேரை நீங்களேதான் உடைத்துச் சொன்னது பெரிதாகிவிட்டது?" என்று ஏன் கேட்கவில்லை என்ற கேள்வியும் என்னிடமிருந்தாலுங்கூட, அதை unconference வலைப்பட்டறை அமைப்பாளர்களிடம் நான் கேட்பது கேட்பது முற்றிலும் பொருந்தாது என்பதாலும், அந்நேரம் வலைப்பட்டறையிலே அமர்ந்திருந்து கேட்டிருக்கக்கூடிய பங்காளிகள் யார் என்று தெரியாததாலும் இங்கே நான் ஏழாவது கேள்வியாக எழுப்பவில்லை


ஆனால், இங்கே இக்கேள்விகளைக் கேட்கவேண்டுமென்று தோன்றியது. கேட்டுவிட்டேன். பதிலினை எவரிடமும் நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக எக்காரணம் கொண்டும் தம் நேரத்தினைச் செலவு செய்து பெரிய இடுகைகளை, பட்டறை தன்னார்வத்தோடும் நன்னோக்கோடும் நடத்திய "குற்றத்"துக்காகத் தரவேண்டாமென்றே தாழ்மையுடனும் மெய்யான அன்புடனும் கேட்டுக்கொள்கிறேன்.......

........... ஆனால், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், ஆம், இல்லை என்று வலைப்பட்டறை அமைப்பாளர்கள் பதில் தந்தால் நன்றியுடையவனாவேன்...

"இத்தனைக்கும் பின்னால், மாலனிடம் நேரடியாக மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ அவர் பதிவிலோ அவரின் பேச்சின் இப்பகுதியைக் குறித்து கண்டனவரி ஒன்றையேனும் எந்த அமைப்பாளரானாலும் இதுவரை தெரிவித்திருக்கிறாரா?"


இவையெல்லாம் நான் மண்துகளை வைத்து மலையாகக் காட்டும் ஒரு குரூரக்கோணங்கிநிகழ்வு காட்டுவதாகத் தோன்றுமென்ற அச்சத்திலேயே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கின்றது. ஆனால், எனது கருத்து என் தனிப்பட்ட, மாலனின் -/பெயரிலி. என்ற பெயர் பயன்பட்டதன் பின்னான, கேட்க வேண்டுமென்று தோன்றாத, ஆனால், வெற்றி, சிந்தாநதி ஆகியோரின் பின்னூட்டங்களினாலே வெளிப்படையாகக் கேட்டாக வேண்டிப்போன கேள்விகள் மட்டுமே. ராமின் மகளைப் பற்றிய நான் பேசியது வலைநெறி பிறழ்ந்தாக வலைப்பட்டறையிலே சிலாகித்துப்பேசவேண்டிய பெரியவிடயமென்றால், நான் இந்த மேட்டிலே ஏறி நின்று மலைப்பிரசங்கம் செய்வதும் தவறில்லை என்று நண்பர்கள் உணர்வார்களென்று நிச்சயமாக நம்புகிறேன். ஈழம் குறித்த மாலனின் கருத்தினை (ப் புலம்பெயர்ந்த) ஈழப்பதிவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பார்த்துக்கொள்ளட்டும். புலம் பெயர்ந்த ஈழப்பதிவர்களிலே நானும் அடக்கம் :-))

கடைசியாக, திரு அற்புதனின் வலையிடுகையிலே சுட்டிக்காட்டிய ஒரு வரியோடு இவ்விடுகையை முடிக்கிறேன் (வரிகள் அப்படியே ஞாபகமில்லாததால், கருத்து அப்படியே வரும்படி மட்டுமே தந்திருக்கின்றேன்): "இலங்கைத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்கும் இடையே பிரித்தாளும் "அரசியல்" இனை நடத்துகின்றதைப் புரிந்து" கொண்டு நாம் செயற்படவேண்டும். இவ்விடுகையை வாசித்தவர்களிடமும் இவ்விடுகையை அப்படியான பார்வையோடு மட்டுமே பார்க்கும்படி கேட்டிருந்தேன்; கேட்கிறேன். இது சென்னை வலைப்பதிவர் பட்டறை மீதானதோ, அதன் அமைப்பாளர்களின் உழைப்பின் மீதானதோ விமர்சனம் அல்ல; அப்பட்டறையிலே மாலனின் கருத்துவெளிப்பாட்டோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்த விமர்சனம் மட்டுமே.

இவ்விடுகைக்கான ஆனந்தக்கும்மிகள் இடுகையின் நோக்கத்தினைத் திசைதிருப்ப மற்றோருக்கு வசதிப்பட்டுவிடுமென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா; கும்பியிலே அடிக்கிறகும்மிகள் வலைநெறியோடிருப்பின் வருக வருகவென்று வரவேற்கப்படுகின்றன.

"எல்லோரும் in புற்றிருப்பதன்றி வேறேதும் yam அறியோம் பராபரமே!!"நான் வலைப்பதிவிலிருந்து குறைந்தது சில மாதங்களுக்கேனும் விலகியிருக்கவேண்டியதாக தனிப்பட்ட வாழ்க்கைச்சூழல் நிர்ப்பந்திப்பதால், இங்கே பதிவிடச் சாத்தியங்கள் மிகக்குறைவு.

எல்லோருக்கும் இவ்வாண்டு முடியும்வரைக்குமான பண்டிகைகள் அனைத்துக்கும் சேர்த்து முன்கூட்டிய வாழ்த்து.

Wednesday, August 08, 2007

புலம் - 21


படம் நன்றி: The Hunger Project

"தமிழ் தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களை விடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல. ஈழத்தமிழன் என்ற சுய அடையாளத்தை நான் மறுக்கமுயல்வது அபத்தம். ஆயினும், அந்தச் சுய அடையாளத்தைப் பேண எனக்குள்ள உரிமை, தனது சுய அடையாளத்தைப் பேண, வேறு எவருக்கும் இருக்கவேண்டாமா? இங்கேதான் 'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை ஒரு மார்க்ஸியவாதியின் மொழிப்பற்றின் முன்னும் இனப்பற்றின் முன்னும் தெளிவாகிறது. தமிழர் ஒடுக்கப்பட்டால் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதோ போராடுவதோ, தமிழர் மேம்பட்டோர் என்பதனாலே அல்ல, எல்லோரும் சமமென்பதாலேதான். வியற்னாம் விடுதலைப்போரின் தேசியத்தன்மைகூடச் சமத்துவ அடிப்படையிலானதே ஒழிய, இன மேம்பாடு கோரும் முறையிலானதல்ல"
- சி. சிவசேகரம் நேர்காணல், காலச்சுவடு இதழ் 15 (1996)


மேலேயும் வாசிக்க எண்ணமும் பொறுமையும் கொண்டவர்கள் வாசித்துக்கொள்ளவேண்டிய எனது மறுதலிப்புக்கூற்றுகள்

1. இவ்விடுகை தனி(ப்)பட்ட -/பெயரிலி. என்ற எனது கருத்துகளின் தொகுப்பு மட்டுமே; என் மொழி, நாடு, அமைப்பு, கதிரைக்கால், குதிரைவண்டி சார்ந்த வேறெவருக்காகவும் பிரதிநிதியாகச் சொல்லப்படுவதல்ல; அதனால், ஈழம்.எதிர்.இந்தியா, ஈழத்தமிழர்.எதிர்.தமிழகத்தமிழர்.எதிர்.புலம்பெயர்தமிழர், பார்ப்பான்.எதிர்.திராவிடன் புரிதல்களெல்லாம் அநாவசியமாக நான் சொல்வதைத் திசைதிருப்புவதாக அமையுமென்று நம்புகிறேன். அவ்வழி புக்கி, முக்கி வரும் 'அகதி, 'பார்ப்பான்' வகைப்பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டா

2. அண்மையிலே நடந்த சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே மாலன் பேசிய வலைநெறி, அதனுடன் சம்பந்தப்பட்டு வலைப்பட்டறை நெறிப்படுத்துனர் மா. சிவக்குமார் (மற்றும் வலைப்பட்டறை அமைப்பாளர்கள்) நடத்துமுறை, வெளியிட்ட கருத்து ஆகியற்றினை மட்டுமே மையப்படுத்தி வரும் இடுகை இது. ஆனால், இஃது எவ்விதத்திலும் வலைப்பதிவர்பட்டறையினைக் குறித்த விமர்சனமாகக் கருதப்படக்கூடாது; அவ்வாறு விவாததைத் திசை திருப்பும் வகையிலே திரிக்கப்படவும் கூடாது. வலைப்பதிவர் பட்டறை குறித்த மிகுதி செயற்பாடுகளிலே எனக்குக் கருத்தினைத் தெரிவிக்க எதுவிதமான விழைவோ தேவையோ அறிதலோ, அதைக் கேட்க மற்றவர்களுக்கும் எதுவிதமான விழைவோ தேவையோ இல்லை. [அதனால், இங்கே பேசுவதற்குச் சம்பந்தமில்லாத வலைப்பதிவர் பட்டறை தொடர்பான அநாமதேய, அன்னியோன்யநேய(ர்)ப் பின்னூட்டங்களும் என் இவ்விடுகையின் தேவைக்கும் என் சொந்தத்தேவைக்கும் அநாவசியமானவையென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா]

3. இங்கே இவ்விடுகைக்குப் பயன்படுத்தியிருக்கும் தரவுகளைத் தந்த நண்பர் தன் பெயரை வெளியிடலாமென அனுமதி தந்திருந்தாலுங்கூட, அநாவசியமாக நான் வெளியிடவிரும்பவில்லை. என் தரவுகளிலே தவறென எதுவிருந்தாலுங்கூட, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்படும்போது, வழக்கம்போல திருத்திக்கொள்வேன்.

4. என் தொடரான "அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு" உடன் தொடர்புள்ளதென்றாலுன்கூட, அதன் பகுதியாக இவ்விடுகை எழுதப்படவில்லைபின்புலம்


கோ. சுகுமாரனின் ஆனந்தவிகடன் செவ்வியொன்றினை மேற்கோளிட்டு, "மக்கள் பங்கு பெறாத புரட்சியினால் பயனில்லை" எனச் செல்வநாயகி இட்ட இடுகையின் பின்னூட்டத்திலே, பதிவர் சந்திப்புக்குப் பதிலளிக்கும் வகையிலே, இந்தியா/தமிழ்நாட்டின் மரபுசார் மார்க்ஸியக்கட்சியின் தலைமைப்பீடங்கள்-தொண்டுத்தோழர்கள் இடையேயான வித்தியாசத்தினைச் சுட்டிக்காட்டும்போது, இந்து இராம் அவர்களின் சீனச்சார்பு மார்க்ஸியம்.எதிர்.அமெரிக்காவினைப் பயன்படுத்துதல் என்ற இரட்டைத்தன்மையைச் சுட்ட "......இப்போதுதான், செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே? இது காலகாலமாகத் தவங்கிடந்து பெற்ற புரட்சியில்லையா? இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? நீங்கள் ஐம்பதாண்டுகள் பண்ணிக் கிழிக்காததைத்தான் நக்ஸலைட்டுகள் கடந்த பத்தாண்டுகளேனும்..." என்று எழுதியிருந்தேன்.
இதற்கு, மாலன் வலைநெறிவசப்பட்டு, "அந்த சூழ்நிலைகளில் அவனது கருத்தை தங்களது மாற்றுக் கருத்துக்கருத்துக்களை வைத்து ஆராய்வது, விமர்சிப்பதுதான் முறையானது. ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில், தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது என்றால், அந்த அறிவுஜீவியை அவனது சொந்த வாழ்க்கை, குடும்பம், ஜாதி இவற்றின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களைத் (இந்த்த் தாக்குதல் வசையாகத்தான் இருக்க வேண்டியதில்லை, எள்ளலாகக் கூட இருக்கலாம்) தொடுத்து அவர்களை devalue செய்கிற முயற்சி நடக்கிறது. அப்படி devalue செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்யலாம் எனவும் சிலர் கருதிக் கொள்கிறார்கள். அதை உங்களைப் போன்றவர் அனுமதிப்பதும் வியப்பளிக்கிறது. உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?" என்று செல்வநாயகியிடம் கேட்டு எழுதியிருந்தார்.

செல்வநாயகி அவ்விடுகை திசைதிரும்புவதாகக் கருதியதாகத் தெரிவதால், மேற்கொண்டு பின்னூட்டங்களை நிறுத்திவைப்பதாகக் கூறினார். அதன் பின்னால், என் உதாரணத்துக்கான காரணத்தை, செல்வநாயகியின் "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் இடுகையின் பின்னால், "மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்." என்று விரிவாகத் தந்து, என் இடுகை கரைவு -9 இன் பின்னூட்டத்திலும் தந்திருந்தேன். மீண்டும், என் கரைவு - 10 இடுகையிலே கூற்று 4 ஆக, "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி" வரும் இடுகையிலே இன்னும் விளக்கிச் சொல்வேன் என்றும் எழுதியிருந்தேன். இத்தனைக்குப் பிறகும், மாலன் என் இடுகைகளை வாசிக்கின்றார் என்றே கருதியிருந்தேன்.

ஆனால், சென்னைப்பல்கலைக்கழகத்திலே களமிட்டு நடந்த ஒருநாள் வலைப்பதிவர் பட்டறையிலே, வலைநெறி (வலைநன்னடத்தை என்றும் சில பதிவுகளிலே குறிப்பிடப்பட்டிருந்தது) பற்றி மாலன் பேசியிருக்கின்றார்; வலைப்பதிவுகளிலே இணையப்போகின்றவர்களுக்கு நல்லதும் அவசியமானதுமான தலைப்பு - இணையத்துக்கு அப்பாலான பெருமளவிலே ஒற்றைவழி தகவற்செலுத்துகை ஊடகங்களிலேயே பட்டறிவுமிக்க மாலன் நிகழ்த்தியிருந்தாலுங்கூட. அப்பேச்சின்போது, "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்" என்று சுட்டி, மேற்கொண்டு அது தொடர்பாகவும் அதற்கப்பால், ஈழத்தமிழர்கள் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பது பற்றியும் பேசியிருக்கின்றார். இஃது அவருக்கான எனது பதில்களையெல்லாம் குமுதம், இந்தியா ருடே ஆசிரியர்களுக்கான கடிதங்களாகக் கருதிக்கொண்டிருக்கின்றாரோ என்று எண்ணவைக்கின்றது. "நான் பேசுவதை மாற்றாமலே பேசிக்கொண்டிருப்பேன்; நீ வாசித்து வை; நீ என்ன சொல்கின்றாயென்று நான் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் நினைக்கின்றேனோ, அதையே நீ நினைப்பதாக அகப்படும் என்னை நம்பக்கூடியவர்களுக்கு என் பெயரையும் விலாசத்தையும் வைத்துச் சொல்லிக்கொண்டிருப்பேன்" என்பதாகத்தான் அவரின் செயற்பாடுகள் செய்யவைக்கின்றன.

இவை குறித்து 'ஓசை' செல்லா அவரது இடுகையொன்றிலே, மாலனின் உரையினையும் ஒலிப்பதிவாகப் பிறகு இடுவேன் எனக் குறிப்பிட்டிருந்ததாலே, பயன்படுத்தப்பட்ட சரியான வரிகள் கிடைக்குமென்று அவர் இடும் வரைக்கும் ஒன்றரை நாள் பார்த்திருந்தேன். ஆனால், இதுவரை செல்லா இட்டதாகத் தெரியவில்லை. ஏற்கனவே மோகன்தாஸும் மா. சிவக்குமாரும் இது குறித்து சிவக்குமாரின் இடுகையொன்றின் பின்னான பின்னூட்டங்களிலும் லக்கி லுக், பதிப்பெழுத்தாளர்கள், இணையத்திலில்லாதிருத்தல் பற்றி மாலனிடம் அவரின் பதிவுப்பின்னூட்டத்திலும் பேசிய பின்னால், மாலன் பேசியவை, ஒலிப்பதிவாகவோ, முழுமையாகவோ இணையத்திலே எல்லோரும் கேட்கவென வருமென்ற நம்பிக்கை குறைந்திருக்கின்றது. மேலும், மா. சிவக்குமாரின் "எவரைப் பற்றி இவர் இப்பட்டறையிலே வலைநெறி உரையிலேகூடச் சொன்னால் எனக்கென்ன?" என்பதுபோலவே அர்த்தம் தரும் ""கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்ற அலட்சியத்தன்மையுடனான வரிகள் உள்ளெழுப்பிய ஆத்திரமும் உடன் எழுதத்தூண்டுகின்றது. ஆனாலும், இனியுங்கூட, செல்லாவோ பட்டறைக்குச் சென்று மாலனின் வலைநெறி உபன்நியாசத்தினைக் கேட்ட எவராவது அவரின் உரை, தொடர்ந்த கேள்விமறுப்பு என்பன உட்பட்ட ஒலிப்பதிவினைத் தர முடியுமானால், நன்றி.

இங்கே இரண்டு விடயங்கள் பற்றி எழுத விரும்புகிறேன்.

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு;
2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு:

மேலே நான் ஏன் இந்து ராமின் மகளினைக் குறிப்பிட்டேன் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அது புரியாவிடின், மாலனின் வாதத்தினைச் சரியென ஒரு பேச்சுக்குக் கொள்வோம். அந்நிலையிலுங்கூட, இவ்விடுகையின் எல்லையயும் நோக்கையும் கருத்திலே கொண்டு, மாலனுக்கு மிகவும் எளிமையான கேள்வி; "வலைநெறி என்று பேசுகின்றவர், வலையிலே உங்களுடன் முரண்பட்ட நான் இல்லாதவிடத்து எதற்காக என் பெயரை வலைக்கு புதியவர்களிடம் உதாரணத்துக்கு எடுக்கவேண்டும்?"

மாலனின் எட்டு இடுகையிலே கோவிந்தசாமி பற்றிக் குறித்திருந்தை நான் செல்வநாயகியின் இடுகையின் பின்னூட்டத்திலேயும் என் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலேயும் சொல்லியிருந்ததற்கு மாலன் தன் "அன்புள்ள பெயரிலி" இடுகையிலே, எள்ளலாக, "என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப் பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்ததற்கு, நான் ஏன் பின்னூட்டங்கள் சிலரின் பதிவுகளிலே இடுவதில்லையென்பதையும் சொல்லியிருந்தேன் (1. பதிலுக்கு, "பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு வேளை என் பதிவில் பின்னூட்டம் பிரசுரமாவதில் சங்கடங்கள் இருக்குமானால், அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு அனுப்புங்கள். இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதால் அவை மற்றவர் பார்வைக்குப் போகாது. அல்லது நீங்கள் எனக்கு மின்னஞல் அனுப்பலாம். நீங்களே சொல்வது போல அடுத்தவரின் அந்தரங்கம் கூட அறிந்து வைத்திருக்கும் பதிவுலகில் என் மின்னஞச்ல் முகவரி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இராது. உங்கள் பதிவிலேயே அதை நீங்கள் வெளியிட்டுக் கொள்வதும் கூட முறையானதுதான். ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், அதனைக் குறித்த தகவலைப் பின்னூட்டப் பெட்டியிலோ, மின்னஞ்சலிலோ தெரிவித்துவிட்டால் நலமாக இருக்கும்" என்று அவர் எழுத அதற்கு, "நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ என அஞ்சுகிறேன். நான் பின்னூட்டமிடப் பயப்படவில்லை. ஆனால், ஒருவர் ஒரு பின்னூட்டம் இடுகை இட்டவருக்கு மாற்றாக இட்டபின்னால் அப்பதிவிலே அதைத் தொடர்ந்து பலர் ஏன் எமக்கு வம்பு என்று தம் சொந்தக்கருத்துகளையும் தெரிவிக்க அஞ்சுவதைத்தான் சொல்கிறேன் :-) ஓர் உதாரணத்துக்கு, உங்கள் முன்னைய பதிவுகளிலே பின்னூட்டம் இட்டவர்களிலே எத்தனை பேர் இங்கே பின்னூட்டியிருக்கின்றார்களெனப் பாருங்கள். இந்த இடுகை கொஞ்சம் விவகாரமான இடுகை என்று எண்ணிக்கொண்டு தள்ளி நிற்பார்கள். அதன் காரணமாகவே பல பதிவுகளின் "சமநிலை"யைக் குழப்பவேண்டாம் என சொந்தப்பெயரிலோ பெயரில்லாமலோகூடப் பின்னூட்டுவதில்லை. அதைத்தான் சொன்னேன்." என்று நான் எழுதியிருந்தேன். இப்படியாக, இருவரும் உலாவும் வலையிலேயே தன் பதிவிலே சொல்லப்பட்டதற்குப் பதில் தனக்கும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற வலைநெறியை முன்வைத்தவர், நான் இல்லாத சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே போய் என் பெயரைக் குறிப்பாகச் சொல்லி, நான் பதில் அளிக்கமுடியாதவகையிலே நான் விளக்கங்களையோ சொல்லப்பட்ட பின்புலத்தினையோ சொல்லாமல், தன் கருத்தைச் சொல்வது - அதுவும் வலைநெறியைப் பற்றிச் சுட்டுவதற்குச் சொல்வது எவ்வகை நெறி?

சரி; இனி நான் இந்து இராமின் மகளைச் வலைச்சந்திக்கிழுத்து ஏளன சுய மந்தஹாஸம் உதிர்த்ததாகவே மாலன் வைக்கும் குழந்தைப்பிள்ளை வாதத்தைச் சரியென்றே வைத்துக்கொண்டு, அந்தக்கோட்டிலேயே பார்ப்போமே? "125 ஆண்டுப்பழமை இந்துவையா அல்லது விடுதலைப்புலிகளையா உலகம் நம்பும்?", "ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் கொடுத்தனுப்பினோம்" இவற்றிலே இல்லாத ஏகடிய ஹாஸ்யமா, அல்லது அதற்கும்மேலாக, அதே வலைநெறியிலே அவர் தொடர்ந்து சொன்ன "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள்" என்பதிலேயில்லாத குரூரம் ஊடோடும் எள்ளற்பரிஹாஸமா நான் சொன்னதிலேயிருக்கின்றது? அதைக்கூட விடுவோம்; செய்தியாக வந்த இராமின் மகளின் கதையை நான் பேசியிருக்கக்கூடாதென்றால், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் எடுக்க முயற்சிப்பதாக, இந்து மட்டும் செய்தி வெளியிடலாமா? இங்கே அப்பனுடனான தகராறுக்கு மகனை ஏன் இழுக்கின்றீர்கள் என்று மாலன், நரசிம்மன் ராமிடம் கேட்டுச் சொல்வாரா? நியாயப்படுத்தத்தான் செய்வாரா?
இதைக்கூட விட்டுவிடுவோம். வலைநெறி விரிவுரையிலே இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்துவதற்கும் அதற்குச் சம்மந்தமில்லாமல், ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா கடவுட்சீட்டுடன் அலைவதைப் பற்றியிழுப்பதற்கும் எந்த நெறியேனும் இடம் கொடுக்குமா? மாலன் ஆசிரியராகவிருந்தபோது குமுதத்திலே நடிகைகள் பற்றியும் பெண்கள் பற்றியும் வந்த தரத்துக்கான சஞ்சிகைநெறியினையும் (சிம்ரனுக்கு நெருக்கமானது உள்ளாடை: லைட்ஸ் ஆன் ரங்கராஜன்) சன் தொலைக்காட்சியிலே திமுக சார் செய்திகளைமட்டுமே புகைபோக்கிபோல ஆற்றுப்படுத்தித் தந்துகொண்டிருந்த தார்மீகநடுநிலைநெறியினையும் விடவா இராமின் மகள் கொலம்பியா பல்கலைகழகத்திலே படிப்பதைச் சுட்டிய தீநெறி தேய்ந்துபோயிருக்கின்றது?

-/பெயரிலி.யை வலைநெறி வழுவியவன் என்று காட்ட எத்தனையோ கட்டற்ற உதாரணங்கள் இருக்க, உப்புச்சப்பற்ற இந்து ராம் மகளினைக் கோடி காட்டிவிட்டான் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எடுப்பதிலேதும் உள்நோக்கிருக்கின்றதா, மாலன்? நான் போகாத சென்னையிலே என் "கல்யாண குணாம்சங்களை" ஏற்கனவே தெரிந்த நாற்பதுபேருக்கும் யாரோ ஒரு மூஞ்சி தெரியாத வாலும் வரியும் நிறைந்த காட்டுவிலங்கென்றுமட்டும் உங்களின் விபரிப்பினை வைத்துப் புரிந்துகொள்ளக்கூடிய புதுப்பதிவர்கள் நாற்பதுபேருக்கும் வலைத்தர்மோபதேசம் செய்வதனாலே எனக்கேதும் பாதிப்பில்லை; தெரிந்தவர்களின் என் மீதான கருத்திலே உங்களின் பாதிப்பில்லை; தெரியாதவர்களின் என் மீதான கருத்திலே எனக்கு - அவர்கள் இணையத்திலே சேர்ந்து அறியாதவரைக்கும் - பாதிப்பில்லை. இஃது உங்களுக்கும் தெரியும். ஆனாலும், நீங்கள் அங்கே இந்து ராம் மகள், ஈழத்தமிழர், ஸ்ரீலங்கா விசா என்று பூதத்தைக் கிண்ட முயன்றது, தனியே என்மீதான உங்கள் காழ்ப்புணர்விலேயில்லை என்றே நினைக்கிறேன். வந்திருப்பவர்களிலே இணையத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றிய தவறான கருத்தினைப் பதிய வைக்க விரும்பியிருக்கலாம். இல்லாவிட்டால், மிகச் சிறந்த பொருத்தமான, வலைப்பதிவர் பட்டறைக்கு வந்திருந்த, முன் நின்று நடத்திய பலருமே தெளிவாகச் சாட்சியம் கூறியிருக்கக்கூடிய சல்மா அயூப் விவகாரம் எப்படியான வலைநெறி பிறழ்வென்று உங்களாலே காட்டியிருக்கமுடியாதா, என்ன? சல்மா அயூப் என்பவர் வலைப்பட்டறை நிகழ்வினை முன்நின்று நடத்திய ஒருவரைப் பாதித்ததைவிடவுமா, சந்திப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்திலே ராமின் மகள் படிக்கின்றார் என்று நான் சொன்னது உங்களுக்கு மிகவும் நெறிபிறழ்வாகப் போய்விட்டது? நிச்சயமாக, இத்துணை பத்திரிகைப்பட்டறிவுள்ள உங்களுக்கு அது தெரிந்திருக்கும். அதன் பிறகும் நீங்கள் இந்து_இராம்_அவரின் மகள்_ஈழத்தமிழர்_இணையம்_ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் என்ற சொற்களினாலே மத்தியதட்டுப்புதுப்பதிவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் தமிழகத்திலே உருவாக்க முயன்றீர்களென்றால், அது நிச்சயமாக எதேச்சையானதல்ல; இந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுக்காக, ஈழத்தமிழரைப் பற்றித் தமிழக மத்தியதட்டின் மூளைக்குள்ளே நுழைத்துச் செய்து வரும் அதே தந்திரப்பூச்சாண்டியைத்தான் நீங்களும் உங்களுக்கு வாய்ப்பான இடங்களிலெல்லாம் எப்படிச் செய்கின்றீர்கள் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றீர்கள். எதற்கு உங்களுக்கு ஈழத்தமிழர்கள்மீது இத்துணை காழ்ப்புணர்வு?

2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

தமிழ்நாட்டிலேயிருக்கும் பெரும்பான்மையான தமிழ்ப்பதிவர்களுக்கு என்னைப் பற்றி (ஏற்படுத்தப்பட்டு) இருக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்கிறேன். அதனால், பட்டறையிலே மாலன் பேசியபோது, அதனைத் தட்டிக்கேட்கவேண்டிய அவசியமின்றி, "நமக்கேன் வம்பு?" என்றோ "நன்றாகச் சொல்லட்டும்" என்றோ இருந்துவிட்டுப் போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதையும் புரிந்துகொள்கிறேன். இது கூடல் (conference) அல்ல, குலை(த்)தல் அல்லது கூடாமை (unconfernce) என்பதாலே, அமைப்பாளர்களுக்குப் பேசப்போகின்றவர்கள் இதைத்தான் பேசப்போகின்றோமென ஆரம்பத்திலேயே சுருக்கம் கொடுத்திருக்கவேண்டிய நிலைமையுமில்லை என்பதையும் புரிந்துகொள்கிறேன். மாலன் பேசியபின்னால், அது பதிவாகி வராதுபோனால், அதைப் பற்றி மாலன் கூறிய தனியாளோ, குழுவினரோ அறிந்துகொள்ளவேண்டிய அவசியமோ சிக்கலோ எவருக்குமில்லையென்றே மட்டுறுத்துனரும் அங்கே கூ(ட்)டத்திலே இல்லாத, பின்னாலே அறிந்திருக்கக்கூடிய மற்றைய அமைப்பாளர்களும் பட்டறையின் நல்ல விளைவுகளிலேயே கருத்தினைச் செலுத்தி, நம்பிக்கையைப் பரப்பும் தேவையிருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், மாலனைத் தொடர்ந்து பேசவிட்டுவிட்டு, அவரிடம் கேள்வி கேட்க முயன்றவரை மட்டும் மட்டுறுத்துனர் தடுப்பது எவ்வகை வலை(ப்பதிவர் பட்டறை)நெறி? குறைந்தபட்சம், அது தவறென்றாவது எழுதியோ அல்லது மாலனிடம் சுட்டிக்காட்டியோ இருந்திருந்தால், வலை(ப்பதிவர் பட்டறை) நெறி பற்றி புதுப்பதிவர்களுக்கில்லாவிடினும், அமைப்பாளர்களின் சக பழைய பதிவர்களுக்கேனும் ஏற்பட்டிருக்குமல்லவா? திட்டமிட்டே இதையெழுதக்கூடாததுபோல, எந்த அமைப்பாளரும் சுட்டவில்லை. சரி, சுட்டி ஒருவர் வலையிலே காட்டியபின்னுங்கூட, "கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்பது கொஞ்சம் நிர்த்தாட்சணியமற்ற அராஜகவலைநெறிக்கூற்றாகப்படவில்லையா? இதற்கெல்லாம் மேலாக, வலைப்பதிவுகளிலே சக ஈழத்துப்பதிவர்களின் நாளாந்த (எனக்கே புளித்தோ விறைத்தோ போன) சாதாரண சா ஓலத்துக்கும் கூடவிருந்து ஒப்பாரி வைத்தோ ஆறுதல் சொல்லியோ பின்னூட்டம், முன்னூட்டம் தரும் தமிழகவலைப்பதிவர்களிலே மோகன்தாஸ், செல்லா, இராம.கி போன்ற ஓரிருவர் தவிர மீதி எவருமேகூட, மாலன் கூறுவதை அவ்விடத்திலே நிறுத்தியோ அல்லது அதன்பின்னாலே சுட்டியோ அவரின் வலைநெறிமீறலையும் சொந்த அரசியல் ஊசிகுத்தல்களையும் வந்திருக்கும் புதுப்பதிவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கமுடியாமற்போய்விட்டது? இப்படியான சூழல்களிலே தமிழகத்தின் சக மக்களிடம் ஈழத்தமிழர்களின் நியாயமான பக்கத்தினை மாலன், இராம் போன்றவர்களின் ஊடகவலிமையையும் மீறிச் சொல்லமுடியாதிருக்கும் நண்பர்கள், வலைப்பதிவிலே மட்டும் ஆறுதல் சொல்வதாலே நடைமுறையிலே என்ன பலன் கிட்டுமென்று நினைக்கின்றீர்கள்? எல்லாவற்றுக்கும்மேலாக, வலைப்பதிவர் பட்டறைகள் இப்படியான செயற்பாடுகளினால் புதிதாக வரக்கூடிய பதிவர்களின் மூளைப்பதிவுகளிலே வலைப்பதிவுகள் பற்றித் தவறான கருத்துகளை ஏற்படுத்தி,, தம் கால்களிலே தாமே சுட்டுக்கொள்ளும் விளைவினையே ஆகின்றன என்று தோன்றவில்லையா ? இவை பற்றி எனக்குக் கவலையில்லை. அது பட்டறை அமைப்பாளர்களின் கவலை; நாளைக்கு இன்னோர் இடத்திலே பட்டறை வைப்பவர்கள், இதே மாதிரியாக வலைநெறியைப் பேசக் கேட்க, சென்னையிலே மீறப்பட்ட வலை(ப்பதிவர் பட்டறை)நெறியையே உதாரணம் எடுத்து யாராவது புதுப்பதிவர்களுக்கு வலைநெறிமீறலைச் சொல்கின்றபோதுதான் பட்டறை அமைப்பாளர்களாலே புரிந்துகொள்ளப்படுமெனத் தோன்றுகின்றது.

வலைப்பதிவர் பட்டறையைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பதென்பது மிகவும் சிக்கலான, பொறுப்புமிகுந்த, பன்நோக்குடனான காரியமேதான்; அதிலே இப்படியான ஒரு வலைநெறிமீறல் ஒரு பெரிதான அலட்டிக்கொள்ளும் விடயமேயல்ல; அதனால், இதனைப் பெரிதுபடுத்தி, இவ்விடுகையை இட்டதாக எண்ணக்கூடாது. தவிர, தனிப்பட மாலன் என்னை நான் இல்லாத இடத்திலே இழுத்துப்பேசியது குறித்தும் எனக்கு வருத்தமில்லை; தினசரி சட்னிவடை உறவினர்கள், நண்பர்களின் நலன் கேட்டு அனுப்பும் பின்னூட்டங்களைவிடவா மாலன் பெரிதாகத் தொந்தரவு கொடுக்கின்றார்? :-) சொல்லப்போனால், அவரின் பொய்யான முகத்தோலை மேலும் உரித்துக்காட்ட வாய்ப்பென்று மகிழ்ச்சியே. ஆனால், இனியேனும், வலைப்பதிவர் பட்டறை அமைப்பாளர்கள் இப்படியான ஈழத்தமிழர்களை ஏகடியம் செய்யும் மாலனின் உரை போன்ற நெறி போதிக்கும் போர்வையுரைகளைத் தவிர்க்கும்முகமாகப் பேசப்போகின்ற உள்ளடக்கங்களைக் கேட்டுக்கொள்வது பயனானதும் நியாயமானதுமாகும். ஏற்கனவே தமிழகத்தமிழர்கள் மத்தியிலே இந்தியா ருடே, சன் டீவி, தி இந்து போன்றவை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஈழத்தமிழருக்கு வாலும் வரியுமிட்ட விலங்குவடித்தினை இன்னமும் பயமுறுத்தும்வகையிலே மாலன் போன்றவர்கள் செய்ய அனுமதிப்பது எவ்வகைப்பட்டறை நடத்தும் தர்மத்தின் அடிப்படையிலுங்கூட நியாயமாகாது.