போரினது தேவையையும் அசைபடமொன்று செய்யக்கூடிய பிரசாரத்தினையும் இங்கே விட்டுவிடுவோம். போராளிகள்_பயங்கரவாதிகள் போன்ற அரசியல் நுழைந்த சொற்கூட்டுகளையும் விட்டுவிடுவோம்.
இப்படங்கள் அவற்றினைத் தயாரிப்பதற்கிருக்கும் பொருளாதார, தொழில்நுட்ப இடைஞ்சலுள்ளும் அவை சொல்லவேண்டியவற்றைச் சுட்டும் திறனுக்காகப் பாராட்டப்படக்கூடியன.
ஜிகினாக்கோடி கொட்டித் தயாராகும் கோடம்பாக்கத்திரைப்படங்கள் இலங்கையிலே சிறப்பாக ஓடுவது குறித்தும் அரசியலை மூச்சிலுங்கூட வெளிவிடா ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம்வாழும் எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவிடும் தமிழகச்சஞ்சிகைகள் இப்படியான ஈழத்திலிருந்து வெளிவரும் குறும்திரைப்படங்கள், இசைவட்டுக்கள், படைப்புநூல்கள் குறித்தும் துணிச்சலோடு அறிமுகமும் திறனாய்வும் பார்வையும் விரைவிலே தந்து இவற்றினை "அங்கீகரிக்கும்" என நம்புவோம்.
விலை
=============================
ஈரமண்
2 comments:
பெயரிலி ,
கண்டிப்பாக கவனிக்கபட வேண்டிய படைப்புகள் தான், முன்னர் கூட சுஜாதா(உங்களுக்கு அவர் மீது மாற்று கருத்து இருக்கலாம் , எனக்கும் அவரது சந்தர்ப்பவாதம் மீது உடன்பாடில்லை, ஆனால் படிப்பேன்) விகடனில் அவரது க.பெ வில் ஒரு ஈழ கவிதை தொகுப்பு பற்றி எரிபொருள் தட்டுப்பாட்டில் ஜெனெரேட்டர் உதவியுடன் கணிப்பொறி கொண்டு வெளியிடப்பட்ட நூல் என குறிப்பிட்டார்.
ஒரு நூல் வெளியிடவதே கடினம் எனும் போது குறும்படம் எடுத்து வெளியிடுவது எப்படி இருக்கும் எனத்தெரிகிறது! எனக்கு இணைய வேகம் வெகு குறைவு(இந்தியாவில் இணைய தொடர்பு அதிகம் மலிவாக கிடைக்கிறது ஆனால் வேகம் தான் கழுத்தறுக்கிறது எதாவது செய்யுங்கள் அரசியல்வாதிகளே) , எனவே தம் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக தான் பார்க்க வேண்டும் பார்த்து விட்டு சொல்கிறேன்!
பெயரிலி:
நல்ல படங்கள். நான் 'விலை' பார்த்தேன். தொழில்நுட்பநேர்த்தியும், இயக்கமும் நன்றாக இருந்தன.
பிரச்சாரம் மற்றும் கருத்துக்கும் என்ன பிரச்சனை! போலி தேசிய படங்களில் விஜயகாந்த் கற்பனை எதிரியைப் பார்த்து விரல்களை மடக்கிக் குமுறுவதும், அரவிந்தசாமி உருள்வதுமே கலையாகும் களத்தில் இதற்கென்ன குறைச்சல்?!
Post a Comment