Tuesday, March 25, 2014

கல்யாண்ஜியின் அப்பா

   இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்

அடிப்படைப்படங்களுக்கு நன்றி

சாயல் 

என் சின்ன வயதில்
சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்.
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால் அப்பா
எப்படியோ இருக்கிறார்.
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல.
-கல்யாண்ஜி

தமிழிலே கட்சிசார் கலை இலக்கிய சஞ்சிகைகளின் படைப்புகள், திறனாய்வுகளின் கறுப்பு ஆழத்திலும் வெளுப்பு விரிவிலும் நம்பிக்கை இருந்தகாலமும் உண்டு; அறியாக்காலம். கைலாசபதி, சிவத்தம்பியின் வெளிக்கட்சி இலக்கியம் போற்றும் வக்கினைத் தூற்றும் ஜெயமோகன், வேதசகாயகுமாரின் உட்கட்சி இலக்கியத்திறனாய்வின் அரசியலும் தலைகீழும் புரியாக்காலம்; தாமரைகளும் எதிர்ச்செந்தாமரைகளும். ஒற்றைப்படி ஆத்மீகதரிசனத்துக்கும் தட்டையான பொதுவுடமைப்பரப்புரைக்கும் அகப்படாது அப்பாற்பட்டுத் தானாய் நிற்பது அசல் இலக்கியம்.

தி.க. சிவசங்கரன் எப்போதுமே அவரின் கட்சிசார்ந்த எழுத்துச்சேவைக்கும் படைப்பாளியை ஊக்குவிக்கும் அன்பான மொழிக்குமாக விதந்துபோற்றப்படுகின்றவர். ஆனால், படைப்பாளியை நோக்கிய அன்பான மொழியும் ஊக்குவிப்பும் ஒரு மனிதரின் தனிப்பட்ட நற்பண்பைக் காட்டலாம்; ஆனால், சரியான திறனாய்வாகுமெனச் சொல்லமுடியவில்லை. ஆனாலும், நுண்ணிய பார்வையையும் மென்மையான சொற்களையும் திகட்டாமல் ஒரு காலத்திலே கொண்டிருந்த கல்யாணசுந்தரம் என்ற நல்ல படைப்பினைத் தந்தவராகச் சிவசங்கரனை வியந்து நினைவுகூரமுடிகின்றது.

தந்தையின் இறப்பினைக்கூட எரித்தபின்னரே அறிந்துகொண்டவன், தாயினை பதினைந்தாண்டுகளாகக் காணாமலேயிருக்கின்றவன் என்றளவிலே, வண்ணதாசன் தந்தையோடு இருப்பதற்காகவே திருநெல்வேலிக்கு மாற்றலாகிப் போனார் என்று முன்னொருமுறை போகின்றபோக்கிலே வாசித்தது பதிந்துபோயிருக்கின்றது. மரத்திலே கிளைநிறைந்து சொரிவதாய் எத்தனையோ குருவிகளும் கிளிகளும் வன்னப்பறவைகளுமிருக்கும்போதுங்கூட, அவற்றின் வண்ணம், விரிந்த சிறகு, கூவும் கீதம் இவை கொண்ட பறவைகளிலும்விட, எனக்கு வாய்க்கா வகையிலே கழுத்தைவெட்டிச் சொடுக்கும் நளினம் வாய்த்த ஒரு பறவை ஈர்த்துவிடுகின்றதைக் கண்டிருக்கின்றேன்; அப்பறவையின் நிறங்களின்கூட்டமைதி, எழுப்பும் இசைந்த குரல், சிறகு விரிந்தெழும் ஒய்யாரம் எல்லாமே இச்சின்ன கழுத்துவெட்டுப்பார்வை முன்னாலே தொலைந்துபோவதை உணர்ந்திருக்கின்றேன். இதுபோலத்தான்,  சொற்செட்டு, நுண்ணுணர்வு செறிந்த கல்யாண்ஜியின் கவிதைகளிலும்விட, அவரின் "அப்பாவோடு இருப்பதற்காகத் திருநெல்வேலி மாறிப்போனேன்" என்ற ஒரு வரி நினைவிலே நின்றுபோயிருக்கின்றதென எண்ணுகிறேன்.

எதற்கும் பொருள் ஈட்டும் தேவை, இருப்பின் வாழ்க்கையிலே சுகம் கண்ட தன்மை இவற்றினை மழைக்காலத்தின் தேயிலைச்செடியிலிருந்து காலிலே ஒட்டி உதிரத்தை உறுஞ்சும் அட்டையென்று பிய்த்துப்போட்டுவிட்டுப் போய் பெற்றவரோடு இருக்கமுடியாத, குறைந்தளவு கண்டுவரவேனும் செய்யும் உளநிலை -நாட்டுநிலைக்கப்பாலுங்கூட- வாய்க்காத நிலையிலே கல்யாண்ஜி உள, வாழ்புலநிலையிலே கொடுத்துவைத்தவர். பெற்றோர்கள் இல்லாதுபோங்காலத்திலே, மிகுந்த தன் காலம் நெடுக்க குற்றவுணர்வினாலே குமையவேண்டிய கொடுமை அவருக்கில்லை.

ஃபீல்ட் மார்ஷல் என் மோடி

Thursday, March 20, 2014

குஷ்வந்த் சிங்


1975-1980 காலகட்டத்திலே திருகோணமலையின் திருமுருகானந்த சங்க வாசிகசாலையிலே எடுக்கப்பட்ட இந்தியச்சஞ்சிகைகளிலே அகலமாகத் தமிழிலே வந்தவை, தினமணிகதிர் (சுருங்கமுன்னால்), அலிபாபா, ராணி, பொம்மை (மங்கையர்மலர் அந்த அளவிலேதான் வந்ததா என்ற ஞாபகமில்லை). ஆங்கிலத்திலே The Illustrated Weekly, Filmfare, Sportstar. ஆங்கிலத்திலே வந்தவற்றை வாசிக்குமளவுக்கு ஆங்கிலமோ ஆர்வமோ இருந்ததில்லை. ஆனால், சும்மா படங்களைப் புரட்டி, The Illustrated Weekly இலே ஆர். கே. லக்ஷ்மணின் கேலிச்சித்திரங்களைப் பார்த்துவிட்டுப்போவேன்.


Source: Khushwant Singh's Journalism
ஆனால், குஷ்வந்த் சிங்கின் முகம் அவர் ஆசிரியராகவிருந்தபோது, கேலிச்சித்திரமான படத்தோடு பத்தியிருந்தாகவிருக்கும். நடிகை மே வெஸ்ற் இறந்த சமயம், காந்தி கொல்லப்பட்ட சமயம் தான் மே வெஸ்றின் நாடகத்தை இலண்டனிலே பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தைக் குறித்தெழுதியது ஞாபகமிருக்கின்றது அவருடைய ஓரிரு சிறுகதைகளைப் பின்னாலே வாசித்திருக்கின்றேன். ஆனால், அவருடைய பேசப்பட்ட நூல்களை வாசித்ததில்லை. அவருடைய நிறங்கொண்ட வாழ்க்கைக்குறிப்புகளை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். ஆனால், கேலிச்சித்திரமாகக் கண்ட அவரின் படம் எப்போதுமே அவரினை ஏனோ வெறுமனே நகைச்சுவை நடிகரைப் போன்ற பிம்பத்தினையே இன்றும் என்னுள்ளே பதியவைத்திருக்கின்றது.

 Thank God he's dead, the son of a gun!

Thursday, March 13, 2014

அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்

அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்

இம்முறையும் மறக்காமல்
"காணாமற்போனவர்கள் பற்றி என்ன செய்கிறாய்?"
-கேட்கிறார்கள்.
இதுவரைநாள், தொடராய்த்
துன்பக்கதை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இன்று
கதை எழுதுவதை நிறுத்தி, துண்டுத்
துயர்கவிதை எழுதத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறேன்.

காணாதாரைக் கண்டாரும்
காணாமற்போங்காலத்தின்
ஒருகாலை, துயர்
கவிதையும் குமிழாய்
குப்பென்றொரு வெப்ப ஊதலில்
பட்டென்று வட்டமுடைந்து
தொலைந்துபோகலாம்,
யார் கண்டார்?

Monday, March 10, 2014

Salman Kurshid: "India offers help to trace missing Malaysia plane"

Salman Kurshid: "India offers help to trace missing Malaysia plane"


வெண்ணிற ஆடை மூர்த்தி: "தம்ப்ப்ரீ! ஜோதிடம் பாத்தேன்னா, காணாம போன மலேஷியன் பிளேனை கண்டு புடிச்சிடுவனாக்கும்"


ரோட்டுல போகிறவன்: "மொதலிலே போபர்ஸ் பீரங்கி போன பொந்த இப்போவாச்சும் அடைக்கற வழிய பாருங்கப்பா!"


Sunday, March 09, 2014

"தமிழ் வாழ்கவெனக் காத்தாடுவோமடா!"

தாய்மொளி அமுல் ஆக் கல் திட் டம்
"தமிழ் வாழ்கவெனக் காத்தாடுவோமடா!"





கருத்துந்தலுக்கு நன்றி:

http://www.tharavu.com/2014/02/blog-post_6978.html
https://www.facebook.com/media/set/?set=a.10153983200735019.1073741890.51233740018&type=1

Friday, February 21, 2014

வரலாற்றுக்கு வாய்பிளத்தலும் வீணீர் வடித்தலும்

அடிப்படைப்படம்: ஹப்ஃஃபிங்டன் போஸ்ற்
வரலாற்றோடு மல்கம் எக்ஸினையும் பிடல் காஸ்ரோவினையும் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியையும் ஏர்னெஸ்ரோ 'சே' குவேராவினையும் சாவேஸினையும் மாவோவினையும் மார்க்ஸினையும் ஸ்டாலினையும் ஹோசிமினையும் அபு நிடாலினையும் நெல்சன் மண்டேலாவினையும் ஏன் கடாபி, சதாமினைக்கூட விமர்சனமின்றி கோஷங்களின் நாயகர்களாக, எமக்குள்ளேயான எதிர்ப்புணர்வின் அடையாளங்களாக விலங்கோ வில்லங்கமோவின்றி விடுதலை செய்யும் நமக்குங்கூட நம்காலத்தின் நடத்திக்காட்டிகளை விருப்புவெறுப்பின்றி விமர்சிக்கக்கூடமுடியவில்லை. கோஷங்களுக்காவும் கையிற் பிடித்திருக்கும் சட்டத்தின் விளிம்புவெள்ளிமுலாம் உள்ளத்துக்குப் பிடித்திருக்கின்றதென்பதற்காகவும் அவற்றுள்ளே பொருந்துகின்றவைமட்டுமே சரியானவை என்று கொள்ளும் தன்மை, தேக்கமும் புதியனவற்றை உள்வாங்கி இருப்பதோடு பொருத்தமாகக் கலந்துண்டு செரிப்பதற்கான பெரும்பயமுமின்றி வேறென்ன?

அண்மையிலே ஒரு தொலைக்காட்சி விவரணம்; "Dear Mandel
a" தென்னாபிரிக்கத்தேசியக்காங்கிரசின் குண்டர்படை "சிவப்பு எறும்புகள்" எப்படியாக சேரியிலே வாழுகின்றவர்களின் அபாலாலி இயக்கத்தினை வாழிடமின்றி நெடுங்காலமாக நெல்சன் மண்டேலா வாழுங்காலத்திலிருந்தே நசுக்குகின்றார்கள் என்பது பற்றியது.

விமர்சனமின்றி எல்லோரும் போன மண்டேலாவுக்காக (தசாப்தங்களாக அடைத்துவைத்திருந்த எதிரிகளை மன்னித்த அவர் தனிப்பட எப்படியாக வின்னி மண்டேலாவை மன்னிக்கவேயில்லை என்பதும் தற்போது பேசப்படும் ஒருவிடயமானாலுங்கூட, அஃது அவரின் தனிவாழ்க்கையென விட்டுவிடலாம்) அழுது தொலைத்த நாம், இவற்றினை விமர்சிக்கவோ, ஆபிரிக்கக்காங்கிரசின் எட்ஸ் இல்லையென்று தம்போ பிடித்த பிடியினை விமர்சிக்கவோ முயலவில்லை. ஏன், சிறிலங்கா அரசுக்கு மீண்டும் ஜெனீவாவிலே மனித உரிமையினை நிலைநாட்டுவதின்பேரிலே கியூபா உதவப்போகின்றது என்பதைக்கூட நாம் விமர்சிக்கத் தயாரில்லை. "சே" குவேராவின் ஒரேபாலீர்ப்பாளர்கள்மீதான வெறுப்பினையும் விமர்சிக்கத்தயாரில்லை. பாளம்பாளமாய் பாகம்பாகமாய் வரிவிமர்சனமின்றியே கார்ல் மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ், ரோஸா லக்ஸம்பேர்க் புகழ் கக்கவும் மறுப்பில்லை. ஆனால், நாம் சார்ந்த எல்லாவற்றையுமே நாமே தவறு செய்தோம் என்பதாக சுயகாழ்ப்பிலும் அவமானத்திலும் குன்றிக் காறித்துப்பித் துடைத்து மீண்டும் காறிக் கொண்டேயிருக்கின்றோம்.

கடந்த காலத்தின் அரசியல்களையும் புரட்சிகளையும் காலம் புள்ளடி போட்டு நொய்யவைத்த கொள்கைகளையும் வெறுமனே பெருங்காதல்மயக்கத்திலே முயங்கிக் காமுற்று என்ன பயன்?

மல்கம் எக்ஸ் மடிந்தது அமெரிக்காவின் கறுப்பினத்தவர் சார்ந்த போட்டி இஸ்லாம் தழுவியவர்களின் அமைப்புகளிடையே நிகழ்ந்த சகோதரப்படுகொலையிலே; வெள்ளையினவெறியிலேயல்ல. இதை வெளிப்படையாக விமர்சிக்கத்தயங்கியபடி, "சகோதரத்துவத்தினை முன்னிலைப்படுத்தும் இஸ்லாத்திலே சேர்ந்தார்" என்று அவரினை மேன்மைப்படுத்துவதாக எண்ணி எழுதும்போது, அவரையும் மிதவாதஇஸ்லாத்தினையும் வாசிக்கின்றவர்களின் கிரகிக்கும் ஆற்றலையும் ஒன்று சேரப் பகிடிபண்ணுவதுபோலத்தான் தோன்றுகின்றது.

தூரத்திலிருந்து பார்க்கும்போதும் தாம் சம்பந்தப்படாத காலத்திலிருந்து பெருங்காதல்கொள்கின்றபோதும், புரட்சிகளும் பெருந்தலைவர்களும் அளவுக்குமீறின அண்டப்பிளவுப்பெருநிகழ்வுகளாகவும் விண்+பூமி+பாதாளம் விரிந்த வாமனர்களாகவுமே தோன்றுகின்றனர். எனக்கென்னவோ நாம் வாழும் சூழலுக்கு, மல்கம் எக்ஸின் இராமாயணங்களைவிட எம். ஆர். ராதா எத்தனையோ கீமாயணங்களைச் சாதித்துக்காட்டியிருக்கின்றாரெனத் தோன்றுகின்றது.



எம் ஆர் ராதா


Thursday, February 20, 2014

Muteman.....!


MUTEMAN .........................from Planet Krapton To save the Country

"இவன் ரொம்ப நல்லவேண்ண்ண்ண்ண்டா அ! அ! அ! அ!"

எழுவர்விடுத்லை குறித்த ஜெயலலிதாவின் அரசியலை மறுக்கமுடியாது. இதிலே எவர்தான் அரசியல் செய்யவில்லை? கருணாநிதி, சிதம்பரம் உட்பட எல்லோருமே "வரவேற்கிறோம்", "மகிழ்ச்சியில்லை என்று சொல்லமாட்டேன்" வகை அறிக்கை தொடக்கம், விஜயராணி, "ஜப்பா த ஹட்" ஞானதேசிகன் "உர்ர்ர்! பொதுமக்கள் வாக்கெடுத்தாயா? வருங்காலப் பிரதமரின் அம்மாவுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?" வகை அலறுகைவரை அரசியல்தான்.

ஆனால், எல்வாற்றையும் மிஞ்சிய சாக்காட்டுச்சவம் தோண்டி மருத்துவக்கற்கைக்கு விற்கும் அரசியலிலிருந்து பிரிகின்ற நிறமே தனி.... தமிழ்நாட்டு எல்லைக்கப்பாலான, பெரும்பான்மையான காங்கிரஸ், மற்றும் (குறிப்பாக,  அப்சல் குருவின் மரணதண்டனையை எதிர்த்த தமிழர்களையே அப்சல் குருவுக்கும் காஷ்மீரமக்களும் எதிரானவர்களாகக் காட்டி, அப்சல் குருவைத் தூக்கிலே போட்டதாலே, இந்த மூன்றுபேரையும் போட்டால்மட்டுமே காஷ்மீர்மக்களின் தேசியப்பிரச்சனை தீரும் வகையிலே வட இந்திய ஆங்கில ஊடகநிகழ்ச்சிநடத்துனர்களுக்கு ஈடாக நாட்டுப்பற்றையும் நீதியின் நெறிவிளக்கின் மின்கலத்தினையும் பையுக்குள்ளே வைத்திருக்கும்) வலதுசாரிக்கட்சிகளின் கருத்துக்குவியலை முன்னே போட்டு,
"திரளும் முன்பே கலைகிறதா மூன்றாவது அணி?

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் விதித்த மூன்று நாள் கெடு எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிட்டது மட்டுமின்றி அதிமுக தலைவியின் பிரதமர் கனவிலும் தண்ணீர் தெளித்துவிட்டதா?"

என்று மிகவும் தெளிவாக எக்கட்சியினதும் எவரோடும் கூட்டுக்கான சாத்தியச்சந்தர்ப்பவாத அரசியலை உணராதவர்போலவே அசந்தர்ப்ப அரசியல் பாய்ச்சும் அண்ணேன் ரவிக்குமார் ரொம்ப நல்ல வேர்!

ஜெயலலிதா இந்தியத்தலையமைச்சராக வரவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருப்பாரென நம்பவில்லை. அவருக்கு அவரின் எல்லை தெரியும். அடுத்தாள் கையைப் பின்னால்மடக்கி எத்துணை முறுக்கிக் கக்குவதைக் கக்கவைக்கலாம் என்பதிலேமட்டுமே தன் முதலைப்பிடி இறுக்கமாகவிருக்கமுடியுமென்பதை முழுமையாக அவர் அறிவாரென்றுதான் தோன்றுகிறது. ஒருபோதும், கையை முறுக்க்கொடுக்கும் இடத்திலே தன் காலைக்கொண்டுபோய் நிறுத்தக்கூடியவர் அவரல்ல. அவருக்குத் தமிழகத்திலே எத்துணைப்பெரும்பலத்தினைத் தான் கொண்டிருக்கின்றேனோ அதுவே தலைநகரிலே தனக்கான பால் கறக்கும்வலிமையை, பொம்மலாட்டும் திரிநூலைப் பெருமளவிலே தீர்மானிக்கும் என்பதையுணர்ந்தே, "ஐந்துநாட்களிலே விடுதலை" என்ற அறிக்கையை விட்டிருக்கின்றார். அவருக்கே இது உடனடியே சாத்தியமில்லாததென்றோ வடக்கிலே முடக்குவாத நோயாளிகளும் எல்லாம் அம்மாவின் சொற்கிருபையாலே உடனடியாய்ச் சொஸ்தமடைந்து கண்டன அறிக்கைவிட்டுச் செயற்படுவார்கள் என்று தெரிந்தே விட்டிருக்கின்றார். இன்னமும் ஆங்கிலத்தொலைக்காட்சியிலே அப்சல் குரு என்றாலே ஆவ் ஊவ் என்று துள்ளும் பாஜக கருத்தாளர், ஜெயலலிதான் கருத்துக்குப் பம்முவதைத்தான் காணமுடிகின்றது. பாஜகவும் மோடிசார்ந்த ஆதரவாளர்களும்  தமிழ்நாட்டிலே தன் வாக்கினை உணர்ச்சிப்பலத்திலே (இராஜீவ் செத்தபோது சென்று பதவிக்கு வந்த வழிக்குச் சரியான எதிர்த்திசையிலே சென்று) பதவிக்கு வர, அறிக்கையாலே உறுதிப்படுத்திவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர இன்னும் முயற்சிப்பார்கள் என்பதே உண்மை.  இதையெல்லாம், அறியாதவர் இல்லை நம் ரொம்ப நல்ல வேன்.  அவருக்கு அவருடைய சொந்தத்தொகுதி நிலைக்குமா என்ற முன்யோசனையிலே கவலையோ என்னமோ? டி ஆர் பாலுவும் கனிமொழியும் அவர் கட்சித்தலைவர் திருமாவளவனும் ராஜபக்‌ஷவைச் சென்று சந்தித்தபோதுகூட வராத தேர்தலின் பெருங்கவலை.

 இதற்கு அவர் வேறொன்றையுமே கவனிக்கத்தேவையில்லை; தமிழகத்திலேயே பொதுவாக, ஈழம்-தமிழ்த்தேசியம் சார்பான எவ்விவாதத்திலுமே |வெளிப்படையாகக்| கலந்துகொள்ளாதோ அல்லது மறைமுகக்குத்தலும் கருவலுமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் -பொதுவிலே பாஜக, காங்கிரஸ் இவற்றினை ஆதரிக்கும்- குழுமங்கள்கூட, பத்திரிகையாளர்களூட ஜெயலலிதாவின் விடுதலை குறித்த அறிக்கைகளையிட்டுப் பெருமளவிலே குத்தலாகவோ கோபமாகவோ சொல்லவில்லை. சொல்லப்போனால், ஜெயலலிதாவுக்கு மற்றையமாநிலங்களிலே (பாகஜ தவிர்ந்த) எதிர்ப்பு எழுந்த இன்றைக்கு மெலிதான ஆதரவுக்குரலை (கட்டாயமாக, மூவர்|எழுவர் விடுதலை பற்றி ஒரு சொல்லேயில்லாமற்றான்) இணையச்சமூகத்தளங்களிலே ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். இத்தகைய நிலையைத்தான் ஜெயலலிதா எதிர்பார்த்து, தன் முடிவினை வெளியிட்டாரென்றே நம்பலாம்.

உதிரியான உணர்வின்பாற்பட்டும் தாம் சார்ந்த இனம்சார்ந்த நலன் குறித்தும் அரசியற்கட்சியாகச் செயற்படாது ஈடுபடும் ஒரு சில குழுக்களைத் தவிர மீதி எல்லோருமே அரசியலிலே மூவரின்|எழுவரின் விடுதலை எத்துணை தமக்கு வாகனமோட்ட எரிபொருள்தருமென்பதையே கண்வைத்திருக்கின்றார்கள்.

இவை சாராமல் இன்னொரு பயம் தரும் விடயமென்றை நேற்றிரவு(|இன்று அதிகாலை :-) ) ஒரு நண்பருடன் பேசியபோது சுட்டிக்காட்டினார்; மூவரோ எழுவரோ விடுதலையாகி வருகின்றவர்களுக்கு உடனடியாக அரசியல் அடையாளமொன்றைத் திணித்து, அவர்களை எவர் அவர்கள் இல்லையென இப்போது சொல்லிக்கொண்டிருக்கின்றோமோ, அப்படியானவர்களே அவர்களென்பதுபோல, கதைகளை உருவாக்கி எம் அரசியலை அவர்கள்மீது திணித்து, எமது ஆதாயத்துக்காக, அவர்களின் எதிர்காலத்தினை இன்னமும் நிலையற்றதாக்கிவிடக்கூடாது. வெளிவருகின்றவர்களை அடுத்த அரசியற்பிரச்சனையொன்று நமக்குக் கிடத்தவுடன் மறந்துவிட்டு நகராமல், அவர்களுக்கு நிலையான, |அமைதியான|. |அரசியலின்பாற்பட்ட தொந்தரவில்லாத| வாழ்க்கைகளை அமைக்க உதவுவது எத்துணை அவசியமோ அதைவிட அவசியமானதும் பொறுப்பானதும் நியாயமானதும் அவர்களை வைத்து நம் அரசியலை முன்னெடுக்காமலிருப்பது. இதை இந்நேரத்திலே நாம் கருத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.

Tuesday, February 18, 2014

நீதியின் தீர்ப்பேயொழிய நீதிபதியின் நேயர்விருப்பல்ல

எல்லாம் மகிழ்ச்சிக்குரியதுதான் - சில வரலாறு காணாத....... இல்லை! இல்லை! வார வாரக் கண்ட நகைச்சுவைநிலைத்தகவல் உட்பட.

 எல்லாவற்றுக்கும்மேலாக, இத்தீர்ப்பு, எப்படியாக, சிதறியிருக்கும் தமிழர்நலன்கருதிய அமைப்புகள் கவனத்தை ஒருங்குகுவித்து, ஓரளவேனும் தனியரசியலைப் புறம் தள்ளிக்கூட்டாகச் செயற்பட்டால், சாதிக்கமுடியும் என்பதையும் காட்டியிருக்கின்றது என்பதையும் ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும்.

ஆனால், ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி, தன்னை வழிநடத்தும் சட்டத்துக்குப்பாற்பட்டு (அதன் கோரமும் ஓட்டைகளும் இருக்கட்டும்), ஒரு தீர்ப்பினை வழங்கும்போது, "தமிழன் நீதிமன்றம் பொறுப்பேற்றான்", "முகர்ஜிகளும் பட்டீல்களும் செய்யமறுத்ததை இன்று சூத்திரன் செய்துகாட்டினான்" என்று அறிக்கைகளை உணர்ச்சிப்பெருக்கிலே விடுவது, வழங்கப்பட்ட நீதியைக் கேலி செய்வதாகவும் அதற்குப் பங்கம் விளைவிப்பதாகவும் இந்நீதியை அரசியலுக்காகவே அன்றிலிருந்து மறுத்துக்கொண்டிருக்கும் சாமிகள், ஆசாமிகள் பலருக்கும் வாய்க்கு மெல்ல வடகம் கொடுப்பதாகவுமே அமையப்போகின்றது.

இப்படியாக, நீதிபதி சதாசிவத்தின் சட்டம்சார்ந்த தீர்ப்பினை, அவரின் தனிப்பட்ட தன்விருப்பின்பாலமைந்த முடிவென்பதுபோலக் காட்டும் நிலைத்தகவல், அறிக்கைகள் வருதல் வருங்காலநியாயத்துக்கே கேடாகலாம். ஆயுட்தண்டனை என்பதைத் தமிழ்நாட்டு அரசாங்கம் (எவர் ஆட்சிக்கு வந்தாலுங்கூட)  விடுதலை செய்யும்வரைக்குமான இடைநிலை என்பதாகமட்டுமே கொள்ளவேண்டும்.

அம்மாகூட்டு, அய்யாகூட்டு என்ற தேர்தலின்கூட்டுகளின் கூறுகள் சில, அவ்விடுதலையைத் தடுக்கவே முடிவானமுடிவான முயலும். பாகஜ சுசுவாமியும் காங்கிரஸ் ஞானதேசிகனுமே இச்சாம்பார்களிலிருக்கும் இரு பருப்புகளாக உதாரணம்.

ஆகவே, இப்படியாக நீதியைத் தனியே நீதிபதியின் விருப்பத்தேர்வாகக் காட்டும் நேயர்நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது அறிவுபூர்வமானதும் முறையானதுமாகும்.

 

An Event to Remember: அற்புதம் அம்மாளும் செங்கொடியும்

அற்புதம் அம்மாளும் செங்கொடியும்



She has fought longer than Irom Sharmila and tougher than Gorgy's Pelageya.

Probably, the real AMMA with a genuine personal cum public cause in the recent history of Tamilnadu.


  

Another to remember on this day....
death penalty actually murdered one, though

Monday, February 17, 2014

Truth stands hands in hands with respect and determination



Truth stands hands in hands with respect and determination, 
Not with the cheap political gimmicks.
A salute to Irom Sharmila

Sunday, February 16, 2014

"Oh Boy! Is it Presidents' Day or President's Day?"



"Oh Boy! Is it Presidents' Day or President's Day?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

".....Presidents Day, Sir?"

பாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு



காசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர்.

எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தமிழ்த்தேசிய இளவல்கள் சிறிமா அரசியற்காலத்திலே நாலாம்மாடியிலே விசாரிக்கப்பட்டோ சிறை சென்றோ வந்தவர்களே! மாவை சேனாதிராஜா இருக்கவேண்டிய இடத்திலே கட்சிக்குள்ளே படிப்பும் பதவியும் அதிகாரப் பின்புலமுமிருந்த சம்பந்தர் தான் எழுபத்தேழிலே தங்கத்துரையைத் தள்ளிவிட்டு திருகோணமலை பாஉ ஆக முன்னுக்கு வந்து நின்றதுபோல விக்கினேஸ்வரன் என்ற தான் சார்ந்த சமூகத்தின் பெரும்பான்மைக்கு ஒட்டாத ஒரு பேர்வழியை மற்றைய பெரும்பான்மைச்சமூகத்தினை முழுநிறைவு செய்ய ஆக்கிவைத்திருக்கின்றார். மாறாக, அதே எழுபத்தேழிலே இராஜதுரை-அமிர்தலிங்கம் இவர்களுக்கிடையேயான தனிப்பட்ட பலப்பரீட்சை, மட்டக்கிளப்பு-யாழ்ப்பாணம் என்பதுபோல கிளப்பிவிடப்பட செல்வநாயகம் இறந்தநிலையிலே, அமிர்தலிங்கம் மட்டக்கிளப்பு இரட்டைத்தொகுதி இரண்டாம் வேட்பாளராக நிறுத்த, பலிக்கடாவாகிப்போனவர் காசி ஆனந்தன். அதன்பிறகும், புலிகளோடு சேர்ந்தவர் என்று தன்னைக் காட்டிக்கொண்டாலுங்கூட, அவருக்கு அங்கே எத்துணை மதிப்பிருந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால், அவரின் சகோதரர் சிவஜெயம் அவ்வியக்கத்திலே 88 இலே மாண்ட ஒருவரென்பதாலே -அவரினைக் கிண்டல் செய்யும் மாமா, மச்சான், மனைவியின் அப்பா சகவாசத்தாலே தி(ருக்குவளை) மு(த்துவேல்) (ருணாநிதி) அண்மை வாய்த்த வட்டங்கள், பெருவட்டங்கள் இவர்களைவிட,- அம்மனிதர் நிறைய இழந்திருக்கின்றார். குறைந்தளவு மூன்றாண்டு இயக்கத்திலேயிருந்தேன் என்று கதைகவிதைகட்டுரைபண்ணிக்கொண்டே முப்பதாண்டுகள் அதைவிற்றே வாழ்க்கையை அவர் ஓட்டிக்கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பிரதேசவாதம்|சாதியம் இவற்றை முதல் பண்ணி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும், மறைமுகமாக எத்தனையோ பேரழிவு உட்பட்ட அடக்குமுறைகளை, தாம் சார்ந்த கட்சிக்காக, "குரூப்"புக்காக நியாயப்படுத்திக்கொண்டோ பேசிக்கொண்டே, "புரட்சி(யும்) நடத்துகின்றேன் பார் நான்" என்று பம்மாத்து அவர் காட்டியதாகவும் தெரியவில்லை - அவர் கொண்ட தமிழ்த்தேசியம் மிகவும் வரண்ட ஒற்றைத்தன்மை கொண்டதானபோதுங்கூட.  இலங்கை அரசு செய்யும் கொலைகளை அதர்க்கங்களாலே நியாயப்படுத்தும் மாற்றுக்கருத்து மெனிக்கேகளை, தங்களின் சீமான் | நாம் தமிழர் மீதான தனிப்பட்ட பிணக்குகள்காரணமாக முற்றுமுழுதாக நிபந்தனையின்றி "லைக்" இட்டு ஆர்ப்பரித்து ஆதரிக்கும் திமுக_தொண்டர்கள், ஆண்டாண்டுக்கு டெசோ மகாநாடு நடத்தமட்டும் எப்படியாக நூற்றெண்பது பாகையிலே வெட்கமேயின்றித் திரும்பி உரிமைக்குரல் எழுப்பிவிட்டு, மறுநாள் மீண்டும் திட்டித்தள்ளப்போகின்றார்கள் என்பதுதான் காணும் வலைவாழ்க்கையின் அற்புதம்.

நன்றி: நாம் தமிழர் தளம்
தன் -பெற்ற & பெறா -மக்களுக்காகவும்  கொள்கை வரலாறு|பாரம்பரியம் தெரியாத நடிகைகளுக்காகவும் கட்சியையே தொலைக்கத் தயங்காதவர்கள், சொந்த இழப்புகளையும் சொந்தமான மக்களையும் இழந்த நைந்த பலமற்ற மனிதர்களின் கீச்சுக்குரல்களைப் பற்றிச் சுயகேள்விகளேயில்லாமல், கண்டதுண்டமாகக் கிண்டல் செய்து கிழித்துவிட்டுப்போகலாமென்பதுதான் இந்த அலட்சியத்திலே பிறந்த நிகழ்வு.

நன்றி: நாம் தமிழர் தளம்
மெஷின்கண் என்றாலே ஒற்றை விஜயகாந்த் உப்புசத்தொப்பை வழிந்து சரியச் சரிய, இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு அந்தரத்திலே எம்பிச் சுழல, சத்தத்தோட்டா பீய்ச்சித்தள்ளும் நெகிழிப்பொம்மை என்ற உளக்கண்காட்சிக்கற்பிதம் உள்ளவர்களின் "நான்கு நாளில் ஈழம் எடுத்துக்கொடுக்கும்" நுண்விரத அரசியலிலிருந்து மிகவும் வேறானது, மெய்யாகவே இழப்பினைச் சந்திக்கச்செய்யும் அரசியலானது.

 ~~~~~~

விகடனிலே பத்திரிகையாளராக இருக்கும் ஒருவர் "சீமான்|காசி ஆனந்தன் பேசியது விகடம்" என்று கிண்டல் செய்கின்றார். ஒரு விகடன் பத்திரிகையாளர் தன் சஞ்சிகை மெய்யையே என்றும் நெற்குத்தும் எந்திரத்தின் பிளந்தவாயிலே கொட்டிப் பதர், உமி, தவிடு நீக்கிய வெண்ணரிசியைக் கீழ்க்குதத்தாலே கொட்டும் அரிச்சந்திர அமைப்பு என்பதுபோல, காசி ஆனந்தன் பாலுமகேந்திரா பற்றிச் சொன்னதை விமர்சிக்கத் தனக்கு நேர்மையிருக்கின்றதென்பதாக நினைக்கின்றார். வரவனை யானும் இப்படியாகச் சொல்லலாமா? முப்பதினாயிரம் பேர்களைக் கொன்ற ஓர் அரசின் அமைச்சருக்கு அதற்காக, "இலங்கை யெறிந்த கருணா கரன்றன் இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்; கலிங்க மெறிந்த கருணா கரன்றன் களப்போர் பாடத் திறமினோ" எனப் பரணிபாடி நன்றி தெரிவிக்கும் ஒர் இனப்படுகொலையின் கூட்டுக்கையாளன், மற்றவனைப் பிணந்தின்னி என்று சொல்லத் தனக்குத் தகுதியிருக்கின்றதென்று நினைக்கிறான். "பகிரங்கமாக ஆறு திருநங்கைகளைச் சுட்டுக்கொன்றார்கள்"என்று  அடித்துச்சொன்னவர், அதை இன்றுவரை ஆதாரத்துடன் நிரூபிக்கமுடியாதவர், இன்றைக்கு எதுவித கிலேசமுமின்றி காசி ஆனந்தன் பாலுமகேந்திரா பற்றிச்சொன்னதை, இருக்கமுடியாது என்று தான் தீர்மானித்துவிட்டதால், ஆனந்தவிகடன் பத்திரிகையாளர்கூடச் சேர்ந்து நக்கல் செய்யத் தனக்குத் தார்மீகத்தகுதியிருக்கின்றதென்று நம்புகிறார். "சிறிலங்கா அரசியலிலே என்றைக்குமே இனப்பிரச்சனையில்லவேயில்லை; இருப்பதெல்லாம், வர்க்கப்பிரச்சனையே; சுயநிர்ணய உரிமைக்கான வேண்டுகோள் இல்லாமலே சமதர்மப்பாட்டாளி அரசு உருவாகும்" என்று முதலாளித்துவ ஐரோப்பாவிலேயிருந்து கொண்டு, வரலாற்றை அமுக்கியும் திரித்தும் தன்னளவுக்கான சட்டைக்குத் துணிவெட்டிப் பொருத்தி எழுதுகின்றவர்கூட, "காசி ஆனந்தன் தமிழர்களின் வரலாற்றையே திரித்து எழுதுகிறார்" என்று அடித்துச் சொல்கின்றார்.

மேலோட்டமாக, நாமும் நக்கல் செய்துவிட்டுப்போனாலுங்கூட, கொஞ்சம் இருந்து நிதானமாகப் பார்த்தால், இது குஷ்பூ அம்மையார், "பெரியார் திருச்சியிலே பிறந்தார்" என்று பகிரங்கமாக ஆதாரம் தேடாமலே கேட்பவர்களுக்குக் கேட்டவுடனேயே வழுத்தெரியும் வரலாற்றின் பிறழ்குறிப்பினைப் போன்றதான "திறத்தலும் மூடலுமான" கருத்தில்லை என்பதாகத் தோன்றுகின்றது. (குஷ்பூ அம்மையார் சொன்னதை "இன்றிலிருந்து பெரியார் திருச்சியிலே பிறந்தார்" என்பதாகச் சொல்லவந்தாரென நிறுவித் தொலைக்க முயல்கின்றவர்கள்கூட, காசி ஆனந்தனிலே கல்லடித்துப்பார்க்கத் தயங்குவதில்லை)  "காசி ஆனந்தன் சொல்வது பொய்" என்று இவர்கள் அடித்துச் சொல்வது எத்துணை நம்பிக்கையின்மை என்ற கருதுகோளிலே வருகின்றதோ, அதைப்போலவே அவர் சொல்வதுதான் மெய் என்று இன்னொருவர் நம்ப இருக்கும் எடுகோளின் நம்பிக்கையளவுமிருக்கும். அவர் சொல்வது பொய் என்று கால|ஆள் ஆதாரங்களுடன் இவர்கள் நிறுவவேண்டும். ஆனால், இவர்கள் செய்வது அப்படியானதல்ல; வெறும் கிண்டல், குத்தல், "நமக்கு நம்பிக்கையில்லை", "சொல்வது சீமான்|காசி ஆனந்தன் இரட்டை" என்ற அடிப்படைகளிலே கட்டியெழுவது. இப்படியான தூசத்திவார மாளிகையமைப்பையே, சீமானும் காசி ஆனந்தனும் அவர்களின் ஆதரவாளர்களும் சுட்டிக்காட்டி, "பாலுமகேந்திரா இருந்திருந்திருந்தால், யாராவது கேட்டிருந்தால், நாங்கள் சொன்ன உண்மையைச் சொல்லியிருப்பார்" என்று சொன்னால், அதுவும் தூசத்திவார மாளிகைதானென்றாலுங்கூட, அதேயளவு ()சாத்தியத்தைத்தான் கொண்டதாகும். குறைந்தளவு "பாலு மகேந்திரா என்பவனை இவர்களும் திரைப்படவுலகும் அறியமுன்னால், மட்டக்கிளப்பிலே பாலநாதன் மகேந்திரனை நான் அறிவேன்" என்று காத்தமுத்து சிவானந்தன் சொல்ல காலம்|இடம்|ஆட்கள் சார்ந்த சாத்தியம் பெரிது; குறிப்பாக, "எங்கள் "லொல்லுசபா", "காமெடி டைம்" "குரூப்பு"கள் சார்ந்த நையாண்டிமேளத்துக்கடாக்களும் 'பஞ்ச் டயலாக்'குகளுமே காசி ஆனந்தன் பொய் சொல்கின்றார் என்பதற்கான வலுவான ஆதாரம்" என்று இவர்கள் வேண்டி நிற்பதனை, ஏரணத்தின்பாற்பட்டு ஒரு நம்புவதற்கான (அ)சாத்தியத்திலும்விட பெருஞ்சாத்தியமானது. "மீண்டும் மீண்டும் சொல்வதனாலே, ஒன்றை உண்மையாக்கிவிடலாம்" என்ற கோயாபல்ஸ், தி இந்து வகை விடாமுயற்சி இது. குழுமப்பண்பாடும் அரசியலும்மிகுந்த அவசர இணையசமூகத்தளங்களிலே "I invented the Internet - Al Gore" வகை வாதங்களே வருங்காலத்துக்கான ஆதாரங்களாக படிவுண்டு போகலாம். இத்தகா அவலச்சூழலிலேயே வாழ்கிறோம் நாம்."நுமக்கான ஆதாரம் என்பது நம் வாய்மொழிமட்டுமே என்பதே" என்பதான துயரத்தைத்தான் காசி ஆனந்தனும் அவரைக் கிண்டல்செய்து எதிர்ப்பவர்களும் ஒரே மாதிரியாகப் பிழிந்தெறிகின்றார்கள். ஆனால், இன்றைய நிலையிலே வலுவிழந்த வாழ்வுகொண்ட காசி ஆனந்தனை விமர்சிக்கும் நாம், இந்த விருதாத்தட்டச்சாளர்களை மேம்போக்கிலேயே நம்பிவிட்டுப்போகிறோம்.

மாவை & காசி #

இந்நிலையிலே, எழுபத்தேழாம் ஆண்டுப்பொதுத்தேர்தலிலே, திருகோணமலைச்சிவன்கோவில் முன்றலிலே, "தம்பி 'அண்ணா, சிறையிலே உங்களுக்கு என்ன உணவு?' என்று கேட்டான்; என்ன சொல்வேன் தம்பி! அடி! உதை! பாண்" சம்பல்!" என்று சொல்ல, விடாது கைதட்டைப் பெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிப்பேச்சாளர் ஒருவர் ஞாபகம் வந்து போகிறார். (இங்கே நான் காசி ஆனந்தனைச் சொல்லவில்லை; அப்படியாகச் சொன்னேன் என்று ஒரு பூதத்தைப் பின்னே கிளப்பாதீர்கள்; என் நினைவுக்கு எட்டியவரை, நான் சொல்லும் மனிதன், நேற்றைக்குக் கொழும்பிலிருந்து இறக்குமதியான வாசுதேவ நாணயக்காரவின் மேற்றட்டுப்பவிசுச்சம்பந்தியிடம் நாட்டின் பெரும்பான்மையையும் "படிச்ச உலகின்" நாகரீககனவான்களையும் நிறைவுபடுத்தத் தனக்கான இடத்தினைக் கொடுத்துவிட்டு ஓரமாக அடுத்தநிலையிலே நிற்கின்றான்). ஆனால், சொன்னவர்கூடச் சிறையிருந்தவர் காசி ஆனந்தன். மனைவியின் மாமா அமைச்சர் என்பதற்காக ஆபிரிக்காவிலே கூட்டாளிகூட பயன்படுத்தியின் தேவைக்கேற்ற படமுத்திரை அடித்துவிட்டு, கட்சித்தலைவரோடு படம்பிடித்து, "ஆபிரிக்காவே கட்சித்தலைமையை வியந்து முத்திரை அடித்தது"  என நம் கண், காது, நாசி, தோல், வாயென ஐம்புலனும் நோக நோக முன்னாலேயே பொய்யைச் சொல்லிவிட்டுப் பின்னாலே குண்டிமண்ணைத் தட்டாமலே போய், சீமானையும் காசி ஆனந்தனையும் நக்கல் செய்யத் தனக்கு அருகதையுள்ளதென்று எண்ணும் பிறவிகள் இவற்றை அறிவதேயில்லை; கேள்விப்பட்டாலும், உணரவேனும் இவற்றாலே முடியுமா என்றும் தெரியாது. எந்திரத்திலே தொகுதியாக நெகிழிப்பொம்மைகள் செய்கின்றவனுக்கு, களிமண்கொண்டு வனைவதன் நுட்பமோ கலையோ தனிப்பட்ட பிணைப்பினையோ அறிதல் பெருங்கடினம்; அதற்கான அடிப்படையறிவோ பட்டறிவோ பக்குவமோ இல்லை.

ஊரிலே போங்காலத்திலே தானுண்டு தன்வேலையுண்டு என அடங்கிக்கிடக்கும் எத்தனை கிழங்கள் இறந்தபின்னால், "அந்தக்காலத்திலே காதல்மன்னன், சந்திச்சண்டியன்" என்ற கதைகளைக் கேட்டிருக்கின்றோம் கண்டிருக்கின்றோம்; எழுபதுகளின் நக்ஸலைட்டுகளிலே எத்தனை பேர் நூற்றெண்பது பாகை சுற்றி வாழ்ந்து போனார்கள் என்பதை நாம் வாசிக்கின்றோம். கல்லக்குடித்தண்டவாளத்திலே கருணாநிதி தலையை வைத்தாரா என்று கேள்வியில்லாமலே நம்பிவிடுகின்றவர்களுக்கு காசி ஆனந்தன் சொல்வதற்குமட்டும் ஆதாரம் கேட்பது அசாத்தியமே!

மேலே சொன்னவற்றிலே எதுவுமே காசி ஆனந்தன் உண்மையைச் சொன்னார் என்பதாகவோ சீமான் அதனை மிகவும் பொறுப்போடு மேற்கோள்காட்டிப் பேசினார் என்பதாகவோ நான் நம்புகிறேன் என்பதாக அர்த்தம் கொள்ளப்படக்கூடாது. ஆனால், அவர்களை மறுதலித்து எள்ளி நகையாடுகின்றவர்களுக்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்சநஞ்ச ஆதாரங்கூட இல்லை என்ற அவமான உண்மையையும் அதைவிட மோசமான "நையாண்டி செறிந்த நம் அவநம்பிக்கையையே முற்றாக நம்புங்கள்" என்ற எடுத்தெறிந்த அயோக்கியத்தனமான சுயநிபந்தனைகளும் - குறிப்பாக, நையாண்டி செய்கின்றவர்கள் பலரின் அப்பட்டமான புளுகுகளை நாம் அனைவரும் கண்ட நகைமுரணான நிலையிலே- இவ்விடத்தே சுட்டிக்காட்டப்பட்டு, நாம் நிதானமாக எண்ணவேண்டுமென்பதே இக்குறிப்பின் நோக்கு. ஒரு சாதாரணனின் அன்றாடத்துயரைக்கூட, "புலி || புலியெதிர்ப்பு", "திமுக || நாம் தமிழர்", "பிரபாகரன் || கருணாநிதி" என்ற முரண்கோணங்களிலேயே பார்த்துத்தொலைப்போமென்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சமூகத்திலே இந்நிலைதான் தேங்கச்செய்யும்.

ஆனால், எஃது எப்படியிருந்தாலுங்கூட, பாலு மகேந்திரா அடையாளமாக நிலைத்து நிற்கப்போவது, அவரின் ஒளிப்படமாக்கலுக்கும் மேல்நாட்டுத்திரைப்படங்களை ஒத்தியெடுத்த படங்களுக்குமே... ஒருவேளை அவரின் முதுமையுறா மனத்தின் கறுத்த இளம்பெண்களின்மீதான காதலுக்குமாகலாம். ஆனால், ஒருபோதும், அவர் என்றோ ஒரு நாட்டுவெடிகுண்டு எறிந்தாரா இல்லையா என்பதற்கல்ல; எம்ஜிஆர் நினைவிலே நிற்பது, அவரின் மக்களைத் திட்டமிட்டு வசீகரித்துக்கொண்ட அரசியல்நுணுக்கத்துப்பிம்பத்துக்காக; குறியேடத் தாந்திரியின் தொடர்புக்காக ஸ்மார்த்தவிசாரத்துக்குட்பட்டு, நாடுகடத்தப்பட்ட மருதூர் கோபாலமேனனின் மகன் என்பதற்காகவல்ல.

எல்லாவற்றுக்கும்மேலாக, மன்னாரிலும் திருகோணமலையிலும் புதைகுழிகள் தோண்டப்பட்டும் யாழ்ப்பாணத்திலே மக்கள் தம்மிருப்பிடங்களுக்காக மறியல் செய்யவும் ஆன நாடொன்றின் நாளொன்றிலே பாலுமகேந்திரா அறுபத்தெட்டிலே ஒரு பின்கரியருள்ள பைசிக்கிள் வைத்திருந்தாரா என்பது 'காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிற சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்றாகாது!'* என்றுமட்டுமே சொல்லமுடிகிறது.








† - கலிங்கத்துப்பரணி
* - பிரமிளை முன்பின்னாகப் பெயர்த்தது
# - 1970 களில் மாவை சேனாதிராசா & காசி ஆனந்தன். நண்பனொருவனின் குடும்பப்படத்திலிருந்து வெட்டி எடுத்தது. நண்பனுக்கு நன்றி.