Monday, February 27, 2017

பாடகர் சாந்தன்

விடுதலைப்புலிகளின் எழுச்சிப்பாடல்களுக்குக் குரலாகவிருந்த ஈழத்தின் பாடகர் சாந்தன் மறைந்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயிருந்த பகுதிகளிலே வாழ்ந்திராத நான், அவரைக் குறித்து 2003 இன் பின்னாலே இணையத்திலேதான் வாசித்தறிவேன்; அவரினைப் போன்ற சுகுமார், மேஜர் சிட்டு ஆகியோரையுங்கூட. பாடல்களை எவர் பாடியதெனப் பார்க்கும் வழக்கமில்லாததாலே, அவர் பாடியவை எவையெனவும் அறியேன்.  

2009 இன் பின்னர் அவர்மீது டக்லஸ் தேவானந்தாவின் ஆதரவு மேடையிலும் பாடினார் என்று தமிழ்த்தேசியத்தின் ஒரு கூறு விமர்சித்தபோது, போராட்டத்துக்காகத் தன் இரு பிள்ளைகளைக் கொடுத்த ஒருவர் நொருங்கியிருக்கையிலே நெருக்கப்பட்டால், என்ன செய்யச்சொல்கின்றீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றியது. ஊரார் பிள்ளைகளுக்கு வந்தபோதெல்லாம் கவிதை புனைந்துவிட்டு, தம் பிள்ளைகட்கென்று வந்தபோது, அந்நியர் ஏடுகளுக்கு "அரசியலிலே பிறழ்ந்தவனுக்குக் கூற்றம் வரும்" என்பதுபோல நிறம் மாற்றிக்கொண்டு கட்டுரைகள் எழுதி அரசு ஆதரவு மேடைகளிலே ஏறி இணக்க அரசியலின் தேவை பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கிருந்த வாழ்க்கை சாந்தன் போன்றோருக்கு வாய்க்க அவர்கள் தேடிக்கொண்டிருந்ததில்லை என்றே தோன்றுகிறது. இவ்வெண்ணம், அவரை அறியாதபோதும் பிபிஸியிலே அவர் மனைவி சென்ற ஆண்டு கொடுத்த செவ்வியொன்றிலே உள்ளே நோகவும் குற்றவுணர்வு ஏற்படவும் கேட்க நேர்ந்தபோது தோன்றியது. இதுபோன்ற கணங்களிலே அரசியல் பேசாத ஆமையாக ஓட்டுள்ளே முடங்கிவிட மட்டுமே முடிகிறது.


அந்த மண் எங்களின் நொந்த மண் 
அதன் எல்லைகள் மீறி யார் வராதவன்?


Saturday, February 25, 2017

எப்போதோ முடிக்கப் பட்ட காரியம்; இனியொரு பொல் ஆப்புமில்லை

உகந்தை முருகன்
ஈழத்தவர் இயக்கம், அமைப்புகளைக் கடந்து ஈஷாவினை ஆதரிப்பதாக யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார். 

அக்குறிப்பின் பின்னாலான கருத்துகள், ஈழத்தமிழருக்கு மதமே வலி தீர்க்கும் மருந்தானது (த்தை ஆற்றுப்டுத்த, தம் என்கேளா ஞ்சாவா, ன்மாகக் கள்மின்றி இறக்கு-தி செய்யப்ட?) என்பது முதல் இந்த மத வியாபாரத்திலே அவர்களுக்கும் வரும்படியிருக்கின்றது என்பதுபோலான வழிகளிலே எழுதப்பட்டிருந்தன. 

ஆனால், ஈழத்தவரை இவ்வகையிலே பொதுமைப்படுத்த முடியாதென்று பார்த்தவகையிலே சொல்வேன். 

இந்து சமயம், சிவசேனை, லக்ஷ்மிநாராயணர், ஹனுமார், சாஸ்தா என்ற வடிவுகளிலே ஈழத்தின் மரபுவழியார்ந்த (இன்னமும் ஆறுமுகநாவலரின் வெள்ளாசா(த்)தியம் ழச் செறிந்திருந்தாலும்) சைவத்தின் திருவுக்கு ஶ்ரீ சேர்க்கும் ஹிந்(திய)த்துவா மேலாதிக்கத்தையும், பறை என்ற பேரிலே தமிழகத்தின் "ரபான்" பறையினை நுழைத்து ஈழத்தின் பறை வடிவினைக் கெல்லிப் பெயர் பெயர்க்கும் இந்திய ஊடுருவலின் இன்னோர் ஒத்தோடு வடிவினையும் அமைப்பு+அரசியலிலே பிளந்திருந்தாலும் எதிர்க்கும் ஈழத்தவரையும் சுற்றிப்பார்த்தால், அதேயளவிலே காணலாம். இதைத் தொடர்ச்சியாக இணையத்திலே எழுதிக்கொண்டிருப்பவர்களைக் காணமுடியும். 
பொங்கல், காளிகோவில், திருகோணமலை

இன்னொரு கோணத்திலே பார்த்தால், சாதாரணமாக அரசியலின் கூறாக சமயத்தினைக் காணாத ஈழத்தமிழரொருவருக்கு இப்படியான சமய (அதாவது தமிழகத்தின் பயன்படுபதத்தினைப் போட்டால், "மத") உள்நுழைப்பு, ஊருடுவல் பற்றிய அருட்டலும் விழிப்பும் ஏற்படவேண்டிய தேவை இருப்பதில்லை; பேசுமொழி, அதுசார் நிலம், தேசம், தேசியம் அளவிலான ஒடுக்குதலுக்கு உள்ளானதாலே மொழி நுழைப்பினைப் பற்றிய அருட்டலும் எச்சரிக்கை உணர்வும் கொண்டிருப்பவர்களுக்கு மதம் சார்ந்து இதுவரை நாள் இருந்ததில்லை. 
கிளிநொச்சி

இன்றைக்கு, தென்னாடுடைய சிவனே போற்றியிலிருந்து உணராமலே ஹிந்துத்துவாவின் ஷிவசேனாவுக்குள் ழுக்கப்பட்டிருக்கிறபோதிலே, முதலீட்டுச்சாமியார் கால்களிலே வீழ்கின்ற நிலையிலே அதை உள்நாட்டிலேயும் போன நாடுகளிலேயும் பெரும் மற்றைய மதம் சார்ந்த "அச்சுறுத்தலுக்கு" மாற்று அமைப்பாகவே தம்மை நிலைபடுத்தக் காண்கின்றார்கள் என்பேன். ஈழத்திலே, குறிப்பாகக் கிழக்கிலே, மொழிசார் நில & தேசியப்பிரச்சனை, மதம்சார் பாதுகாப்பைத் தனக்குக் கருவியாகக் கொள்ளும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அரசமரத்தை வெட்டுவதுமுதல், பழங்காலத்துச்சிவாலயங்களைத் தேடிக்கண்டு புனருருத்தாரணம் செய்வதுவரை தம்மிருப்பினை நிலைப்படுத்துவதற்கான தந்திரோபாயமாகவே கொள்ளப்படுகின்றதாகத் தெரிகிறது. திருகோணமலை, மூதூர் மாவட்டங்களிலே இதனைத் தெளிவாகக் காணலாம். 

சிவசேனை ஈழத்தின் கிழக்கிலேயே அழுத்திக் காலூன்றி வளர்வதாகத் தெரிகின்றது; வடக்கிலல்ல. ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் என்ற வடிவிலே ஒடுக்கப்படுவதற்கு எதிர்ப்பினைக் காட்டாமல், தமிழர்களே ஒடுக்குகின்றார்கள் என்ற வகையிலே பேசிக்கொண்டிருக்கும் தலித்திய, கிழக்குப்பிரிவினைவாத ஒத்தோடிகளும் ஶ்ரீலங்கா, அகண்ட்பாரத் அரசுகள்கூடச் சேர்ந்து மறைமுகமாக இப்படியான சிவசேனாக்களிலே வளர்ச்சிக்கு உரம்போட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், மிகையல்ல. 

அண்மையிலே, மட்டக்கிளப்பிலே தமிழர் நிலம் பறிபோவதுபற்றியும் தமிழ் அரசாங்க ஊழியர்மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் பற்றியும் யாழ்ப்பாணவெள்ளாளச்சைவமேலாதிக்கம் பற்றி மட்டுமே அறிக்கைவிட அமைக்கப்பட்ட ஶ்ரீலங்கா/இந்திய அரசுகளின் தேவ ஊழிய அமைப்புகள் வாய்களையே திறக்காமலிருப்பதுதான் இப்படியான சிவசேனாக்களைக் காலும் வேரும் ஊன்ற வைக்கின்றதென்பதைக் காணவேண்டும்.
கேதீஸ்வரம்

புலம்பெயர்ந்த பொருளாதார வசதிகொண்ட ஈழத்தமிழரின் பணக்காரச்சாமியார்மோகம், சாயிபாபாவிலே அவர்கள் கொண்டிருந்த அந்தக்காலத்து மோகத்தின் தொடர்ச்சியாகவே கொள்ளவேண்டும். என்ன கார் கொண்டுபோய்க் கண்ட யோகர் சுவாமிகளிலிருந்து புட்டபர்த்தி விஜயம்+ வியாழன் பஜனை சாயிபாபா ஊடாக கணியுகப்பெருஞ்சல்லிச்சாமியார்ஜிகளுக்கு விரிந்திருக்கின்றது. அவ்வளவே! ஈழத்திலேகூட, சிவசேனைக்கு முன்னாலேயே, வாழ்தலுக்கான வழியைச் சொல்கிறேனென்று இரவிசங்கர் புகுந்துவிட்டார். ஆனால், நம் ஒத்தோடி அரசுப்போராளிகளுக்கு, அடிக்க அப்பாரத் மஹானிலும்விட, தமிழ்த்தேசியத்தைப் பேசிக்கொண்டிருந்த சச்சிதானந்தத்தின் போசகத்திலேயான சிவசேனா வசதியான ஒரு கல்லில் பல மாங்காய்கள். அவ்வளவுதான். இதிலே திட்டும், திட்டுவாங்கும் எல்லோருக்கும் இயக்கும் நாதனான நட்ட கல் அகண்ட இந்தியாதான் என்பதுதான் முரண்நகை. 

இங்கு இன்னொரு முதன்மையான விடயத்தைக் குறிப்பிடவேண்டும். தமிழ்நாட்டிலேயே, ஹிந்துத்துவாவின் கோரத்துக்கு ஈடான அயோக்கியத்தன்மை பொருந்திய அரசியல் இஸ்லாம், பௌத்தம், அரசுசாராநிறுவனக்கிறீஸ்தவம் இவற்றின் அகோரங்களை இந்துத்துவாவை எதிர்க்கிறேன் பேர்வழி என்ற பேரிலே விமர்சனமின்றி ஆதரிக்கும் முற்போக்குக்கூட்டணிகளைப் பெருமளவிலே நாம் விமர்சிப்பதில்லை. அகண்ட பாரதத்திலே ஹிந்துத்துவாவின் அரசியற்பலத்தை எதிர்க்க எதிர்மத அடிப்படைவாதத்தை விமர்சிக்காமலிருப்பதுதான் இப்போதைக்குச் செய்யும் சரியான முடிவு என்பவர்கள், சிங்கத்துக்குப் பதில், கரடிகளைக் கட்டிக்கொள்கின்றார்களென்பேன். 
புதுக்குடியிருப்பு

அ. மார்க்ஸ் போன்ற யோக்கியர்கள் இப்படியாள குளறுபடித்திரிபுவாதிகள்.  அடிப்படைவாத இஸ்லாத்தினை விமர்சனமின்றி ஆதரிக்கும் அ.யோக்கியர்களையும் அம்பேத்கார் பேரிலே கொடுமையான அரசியற்பௌத்தத்தினையும் ஆதரிக்கும் தலித்தியப்போராளிகளையும் முற்போக்கு நற்போக்கடிப்பாளர்களைச் சுட்டுகிறேன். விமர்சனமற்ற என் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற பேரிலே இந்த ஆதரிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இப்படியான விமர்சனமறுமலட்டுத்தன்மை திராவிடக்குஞ்சுகளிலிருந்து தமிழ்த்தேசியக்குருமான்களைவரை பரவியிருப்பது இன்னமும் மோசமான நிலமை.  இந்நிலமை ஈழத்தவரிலே அல்ல, தமிழ்நாட்டிலேதான். விரலை அங்கேயும் சுட்டவேண்டும். வெறுமனே, "சாதியம் = தமிழ்த்தேசியம்", "தமிழ்த்தேசியம் = இந்துத்துவா" என்ற வகையிலே  சமனிலியான சமன்பாடுகளைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் தமிழ்நாட்டின் திராவிட, முற்போக்கு, தலித்திய அணிகள் தம்மைத்தாமே சிந்தனைப்புற்றுநோய்க்குச் சோதனை செய்து பார்க்கவேண்டும்.

இவ்விடத்திலே இதற்குச் சமாந்திரமான  ஈழத்தவரின்மீது தமிழகத்தின் முற்போக்காளர்களாலே வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டினையும்  மறுதலிக்கவேண்டும். 

ஜெயமோகனின் காலிலேயும் காலச்சுவடு, கிழக்கு கைகளிலும் மாலன் அரவணைப்புகளிலும் சாநிக்குச் சரக்கு வாங்கிக்கொடுப்பதிலும் முண்டியடித்துக்கொண்டிருக்கும் ஈழத்து/ஶ்ரீலங்காவின் சிகாமணிகளுக்கு எதிர்நிலையிலே குரலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் (புலம்பெயர்) ஈழத்தவரும் இருப்பதைத் தமிழகத்தின் முற்போக்காளர் என்று சொல்கின்றவர் மறந்தும் ஏன் சுட்டுவதில்லை?  


சாதிறுப்பு, றுங்ளை புரட்சிவிழாக்ளும் புதுமைச்செய்திளுமாக இன்மும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் மித்தின் முற்போக்காளர்கள் விரைவிலே விமர்னக்ரையேவேண்டும்

எப்போதோ முடிக்க, பட்ட காரியம்; 
இனியொரு பொல் ஆப்புமில்லை 
- புல்லுமில்லை.

Wednesday, February 15, 2017

மட்டக்கிளப்பு எழுக தமிழ்


கண்டதைச் சொல்லுகிறேன்

மு.கு.: இலங்கைப்பிரச்சனை குறித்து எழுதுவதானால், இலங்கையிலேதான் #போராளீஸ் ஆக இருக்கவேண்டுமாம்; அல்லது, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் புலம்பெயர் சேர்டிபைட் #ரியல்மனிதப்போராளீஸ் ஆக இருக்கவேண்டுமாம். தமிழக அரசியல், அரசியியல், சிரியியல், சீரியல் பற்றிப் பேச அப்படியேதும் கட்டம் கட்டின க்வாலிபிக்கேஷன் சட்டமேதுமில்லாததாலே, ப்ரீயா #இன்ரநஷனல்ஓல்பேர்ப்பஸ்போராளி மாமேன் உட்ட பத்தி, காலம் இது. கண்மணி அம்போடு கடல்கடந்தவன் நான் எழுதும் காலமே... 😛

அம்மா செண்டிமெண்டல் தமிழன் 😜

அம்மா ப்கர் ஒவ்வொரு தமிழன் அரசியல் வாழ்க்கையிலும் அப்பாகூடப் பேச்சு வார் த்தை நடத்த முக்கியம். அம்மா செண்டிமெண்டல் தமிழன்😜


Sunday, February 05, 2017

Maryam Mirzakhani

Maryam Mirzakhani, an Iran born mathematician, is the First Woman to Win the the Fields Medal (‘Nobel Prize Of Mathematics’).

It does not mean that she is the first brilliant woman mathematician, but is the one first given.

The timing is very intriguing though like it was in 90's when the Indian beauty pageant contestants suddenly found themselves as Miss Universe and Miss World in the mid of globalization era.

Whatever the reason for delaying this award to be bestowed on a female mathematician, congratulations!

It is no wonder; even in engineering, I find female students do and focus far better than their male counterparts. However, when it comes to getting the right jobs (and salaries), things for "unknown reasons" work the other way. Sad State Of Affairs!

பிரிப்போம் சந்தி போம்

பிழையான நாளிலை சந்திப்பாய்ப் போச்சு.

முன்னவர் கேட்டார்:
"சசிகலா பின்வாசலாலே வந்தவரென்றால், சுமந்திரன் எவ்வாசலாலே வந்தவர்?"

மற்றவர் முறுகினார்:
"சுமந்திரன் பின்வாசலாலே வந்தவரென்றால், விக்கியர் எவ்வாசலாலே வந்தவர்?"

நடுவிலையிருந்தவர் பின் கதிரையிலை இருந்தவரிடம் திரும்பி முணுமுணுத்தார்:
"இரண்டும் சத்தமில்லாமல், எல்லாம் முடிஞ்சபிறகு கொழும்பிலையிருந்து வந்திறக்குமதியானதும் இறங்கினதுமேதானே?"

முன்னவரும் மற்றவரும் எட்டிக் கூட்டாய்,"கஜனும் கொழும்பிலையிருந்துதானே வந்து குதிச்சவர்?"

இராதை மாண்டாலும் கோதை ஆண்டாலும் நமக்கொரு குவளை இல்லை.

நான் எழும்பிப் பின்வாசலாலே இறங்கிப் படியிலே இருந்து பார்க்க, பனிப்புகாருக்குள்ளையும் சின்னப்பிள்ளையள் "சீ-ஸோஅப் & டவுன்" என்று விளையாடிக்கொண்டிருக்கிறது பார்க்கக் குழப்பமில்லாமலிருந்தது.

கையிலே கிடைத்த நேரத்தை வீணாக்கக்கூடாதென்று சுப்பிரமணியசுவாமியும் மணிசங்கர ஐயரும் எந்த வாடிவாசலாலே தமிழகத்தின் பிரதிநிதிகளாய் டெல்லிக்குப் போனவர்கள் என்ற ஈழத்தின் முதலாம்தேசியக்கேள்விக்குத் தாடியைச் சொறிந்துகொண்டு பதிலைத் தேடத்தொடங்கினேன்.

ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்திருப்பது ஒன்றும் பேசாதிருத்தற்காம்.

Demicrazy

இங்கிவளை நீ பெறுதற்கே
என்ன தவம் செய்தனையோ
#தமிழகம் !


Thursday, February 02, 2017

ஆனந்தம்

காந்தி மாஸ்ரரும் ஆனந்தமும் உப்புவெளியின் தபோவனமும் கோயிற்றிருவிழாக்காலங்களிலே அவரின் புத்தகக்கடைவிரிப்பும் '70. & '80 களின் முற்பகுதியிலே திருகோணமலையின் ஒரு மாறாக்காட்சி.

எச்சைவச்செத்தவீட்டுக்கும் தேவாரம், திருச்சுண்ணம் நிகழ்த்த ஒரு சேமக்கலத்தோடு, பண்டிதர் வடிவேல், இராமலிங்கம் மாஸ்ரரோடு காந்தி ஐயா நிற்பார். வடிவேல் மாஸ்ரரும் இராமலிங்கம் மாஸ்ரரும் 72, 73 இலே எனக்கு ஆசிரியர்கள். காந்தி ஐயா எனக்கு ஆசிரியரில்லை. ஆனால், அவரின் மனைவியார் கந்தையா மிஸ் தந்த தமிழ் மொழியடியும் கவளமும் எம்மிலே இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் எழுத்துப்பிழையின்றி தமிழையும் சமயநம்பிக்கையற்றுப்போனாலுங்கூட, இன்றும் வரி தவறாது நவபக்திமான்கள் சறுகும்போதும், தேவார திருவாசகங்களைப் பிறழாது பேசவும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

காந்தி ஐயா, கந்தையா மிஸ், அவர்களின் மகன் முருகன், வளர்ப்புமக்கள் சாரதா வீதியிலே இருக்கும்போது, அடிக்கடி பாடசாலை நிகழ்ச்சி விடயமாகவோ அல்லது வேறேதோ விடயமாகவோ போகவேண்டி வரும். வீட்டுவாசலிலே தயங்கித் தட்டும்போது, நூல்களைப் பரப்பி வைத்துக்கொண்டிருப்பவர் பார்த்துவிட்டு, "ஆனந்தம்" என்பார்; திரும்பி உள்ளே பார்த்து, "அம்மா!" என்பார் (சென்ற ஆண்டு இலண்டனிலே பத்மநாப ஐயரின் அறையிலே அண்மையிலே நூல்கள் பரவிக் கிடக்கப் பார்த்தபோது, அதற்கு நான்கு நாட்களின்முன்னாலே பார்த்துவிட்டு வந்த காந்தி மாஸ்ரர் பரப்பிவைத்திருக்கும் நூல்கள்தாம் ஞாபகம் வந்தன). அவருடைய "ஆனந்தம்!" கூறலைவைத்து ஊருக்குள்ளே உலாவிவந்த பகிடிகள் பாடசாலைக்காலத்திலே எமக்குள் ஒரு பகுதி. (வீடெரிந்து போய்விட்டதென்று ஓடிவந்த ஒருவர் சொல்ல, காந்தி மாஸ்ரர், வழக்கம்போல, "ஆனந்தம்!" என்றார் என்பதாகவெல்லாம் ஆளுக்காள் கதையைக் கட்டிக்கொண்டிருப்பார்கள்).

காந்தி மாஸ்ரர், இராமலிங்கம் மாஸ்ரர், திருகோணமலையின் சைவாலயங்களைப் பற்றித் தொகுத்து ஒரு நூலைத் தந்த பண்டிதர் வடிவேல், காந்தி மாஸ்ரரின் மைத்துனரான புலவர் சிவசேகரம், சிவன்கோவிலின் தர்மகர்த்தாவாகவிருந்த கணேசலிங்கம் இவர்களெல்லாம் ஏதோ வகையிலே திருகோணமலையினை சைவம் என்ற அடையாளத்தினூடாக, தமிழ்ப்பகுதியாக அரசியல் பேசாதே அடையாளப்படுத்தியவர்கள். (காந்தி மாஸ்ரரைப் பற்றி காந்தியத்தின் அடிப்படையிலான அமைப்பு தொடங்கும்போது, சந்தித்ததை டேவிட் ஐயா ஒரு செவ்வியிலே (சயந்தன் எடுத்த எழுநா செவ்வி?) கூறியிருந்தார்).

காந்தி ஐயாவினையும் கந்தையா மிஸ்ஸையும் 1996 இலே ஊருக்குப்போன நேரத்திலே அதேநேரத்திலே திரும்பியிருந்த, -கந்தையா மிஸ்ஸிடம் என்னோடு படித்த- இரு நண்பர்களோடு சென்று முத்துக்குமாரசாமி கோவிலுக்கு முன்னாலே தேர்முட்டியருகேயிருக்கும் வீட்டிலே சந்தித்து ஆசிரியருக்கு நன்றி பகிர வாய்த்தது. ஓர் ஆசிரியருக்கு அப்பாலுமான கருணையோடு எப்போதுமே எம்மைக் கவனித்துக்கொண்டவர் கந்தையா மிஸ்.

இவ்வாண்டு திருகோணமலைக்குச் சென்றபோது, திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன்னால், ஆவணி ஐந்தாம் திகதி காலை முத்துக்குமாரசாமி கோவிலுக்குப் போனபோது, முன்னாலே இருக்கும் அவரின் வீட்டுக்கும் போனேன். மார்புப்புற்றுநோயிலே கந்தையா மிஸ் மறைத்த பின்னாலே மகன் முருகனோடு தனியே இருப்பவரை வயது நொடித்திருப்பதைக் காணமுடிந்தது. முற்றாக ஆளடையாளம் கண்டுகொள்ளமுடியாதவராக இருந்தார். என்னை ஞாபகப்படுத்தியபோதும் ஞாபகமிருக்கவில்லை. ஆனால், சற்றே பேசியபின்னாலே போகப்புறப்படுகையிலே, வந்தவர்களைச் சும்மா செல்லவிடக்கூடாதென்று சொல்லி, அங்குமிங்கும் தேடி, "இராமகிருஷ்ணவிஜயம்" ஓர் இதழை அளித்தார்; மிகவும் நெகிழ்ச்சியான தருணமிது. அதை வாசிக்கப்போவதில்லை என்றபோதுங்கூட இங்கே கொண்டு வந்தேன். ஒரு சஞ்சிகையை வாசிப்பதினாலேமட்டுமா பலன் கிட்டப்போகிறது? அதை தருகின்றவரின் அன்பினை அதனைத் தொடுதலாலேகூட திரும்பத் திரும்பத் திறக்காமலே வாசித்துக்கொண்டிருக்கமுடியாதா, என்ன?

சில நாட்களின் முன்னாலே, உடல்நலக்குறைவாலேயிருந்ததாக பேஸ்புக்கிலே செய்தியிருந்தது; இன்று மறைந்திருக்கின்றார். இவரோடு திருகோணமலையின் ஒரு நீட்சி முடிவுக்கு வந்திருக்கின்றது; ஞாபகக்கயிறுகள் நீண்டு தொடர்கின்றன.

"ஆனந்தம்" என்று சொல்ல முடியாத நிலையிலேயிருக்கின்றேன்.