Wednesday, January 29, 2014

வெள்ளைவானரங்கள் துள்ளும் சந்துவெள்ளைவானரங்கள் துள்ளும் சந்து


வெள்ளைவானரங்கள் துள்ளும் சந்தொன்றில்
விழி பிதுங்கி வாழச் சபிக்கப்பட்டார்
என்னார்; காய உலர்ந்தவர்
பழந்தோப்பு
கருகிக் கவி கண்பட்டு.

கையகட்டி,
காலகட்டிக்கொள்ளைவானரங்கள்
கையைக்கட்டிக் காலைக்கட்டி – வேக
வெள்ளை வான்ரதங்கள்
வெறிகொண்டுலாவக் கண்டார்,
தம்முன்றில், தெருமுக்கில்
பொழிநிலவெச்சத்தில், எரிகதிர்வெளிச்சத்தில்.

~~~~

“எரியெண்ணெய்ப்பூதங்கள் போயின” என்றெண்ணி
மடல் விழிமூட முன் தாவின, சுள்ளிவால் சுழன்றாடக்
கொள்ளிக்கலம்பகம் கொண்டோம் நாமென்று சாய
வெள்ளைவானரங்கள் விரிந்து தோப்பெங்கெங்கணும்.

முன்னே மொழி கொண்டு
எள்ளியதை நுணாவின;
நுணாவியதை நுள்ளின;
நுள்ளியதை அள்ளின;
அள்ளியதை துள்ளியகற்றின.
வெள்ளியது பள்ளிமெல்ல எழ
தோப்பில் சத்தம் செத்திருக்கும்
சொட்டி,,,,
……………… துளி இரத்தமும் அற்றதுவாய்
வாய்பொத்திக்காற்றும்
மொழிபொத்திநாவும்
வழிபொத்திவிழியும்
-    சத்தமின்மையே சான்றாகும்.

~~~~

கதையும் கவிதையும்
கட்டுரையும் தத்துவமும்
கூட்டுக்கலவிக்குரங்குகள்
நாறற்பீயெனக் கழியும்
வான் இரதம் தரிக்கும்
இடைவெளியில்.,
வசப்பட்ட திரை, அரங்கில்.
~~~~

சாயங்கலைந்து இன்னொரு காலை
மீள மானுடராய்ப் பின்கூர்ந்து காலை
நிலம் பாவி பாவக்கதைகேள் வேளை
இதுவென வரும் முன்வெள்ளை
வான் இரதமுலாவிய கள்ளவானரங்கள்.

வந்து குந்தி,
வாய்பொத்திக்காற்றையும்
மொழிபொத்திநாவையும் 
வழிபொத்திவிழியையும்
சான்றாய் சத்தமின்றியிருந்தற்கு
மெச்சி, மாந்துமொந்தைமதுச்சேனை
மீண்டிடாதழித்த தோப்புக்காய்
“துன்புற்றோம் நும்மோடு தோழர் நாம்”
விண்டு விசனித்து மீண்ட
மறுவேளை பையப் பறக்கும்
வெள்ளை வான் இரதம்,
வந்த வழி மீந்தது
முகர்ந்துண்ண…..

தோப்பு மேலொரு முறை
யோனி கிழியக்
………………………………………..கதறவுங்கூடாமல்
குருதி கழியும்
நிணநிலத்தில்.

~~~~


கள்ளச்சூரியனோ நிலை
காணான்போற்சென்று பொல்லா
வன்கலவி பிரித்துப் புரிந்து
கொன்றான் வெண்மதியை!

12/10/13

Tuesday, January 28, 2014

rgryfffssfy5y5u6i7o29 ஜனவரி 2009

2


இறந்தார் என்றார்
திறந்த குறிப்பில்
பிறந்தாராயில்லை.

இறந்தார் குறிப்பில்
பிறந்திருந்தேனா?

எழுந்திடாப் பிறப்பும்
மறைந்தார் இறப்பும்
திறந்தொரு குறிப்புரைக்கா.

28 ஜன. 2014

போராட்டப்பாடகன்

Tuesday, January 21, 2014

1இல்லாத ஒருவனைப் போல் என்னை அழித்துப்போகிறாய்.
காற்றாகிப் போனானென்று விரித்துக் கை விசுக்கிப்போகிறாய்
காவோலைக்கிழமென்றோ கைக்குழவியென்றோ
எண்ணிக்கடக்கின்றாய் முன்னால்?
அடங்குகுடத்துப்பூதம் அவிழக்கண்டு
மூர்ச்சையாகு காலம் உன்முன் எழமுன்
ஆங்கே நில்!
சொல்வேன்!
அறியாய் நீ!
பெயரிலி என்பதுவும்
ஒரு பெயர்தான்;
கடைகிழிய, பெருவாயால் உயிருறுஞ்சி
பிள்ளைதின்று சடைச்சிரசு முள்ளால்
புவிநடந்த பொல்லாப்பழம்பேயொன்றின்
இல்லாதிருத்தலில் இருக்கும் பெயர்தான்.
புரிதலின்போது புரிவாய்
வரும் காலம்
வருங்காலம்.

01/21/2012 செவ். 00:28 கிநிநே