Wednesday, April 28, 2010

வேலியிலோடும் விஷப்பாம்பைப் பிடிச்சு வேட்டிக்குள்ளே ஆட்டுவது

நம் இரத்தத்தின் இரத்தம் உண்மைத்தமிழன் அண்ணன் அசுரனுக்குப் பணிவாகப் பதில் சொல்லப்போனதிலே, ஆண்டுக்கொரு வரும் பதிவுத்திருவிழாவிலே நான் மீண்டு(ம்) ஒரு முறை வசந்தமண்டப உற்சவநாயாக்கப்பட்டிருக்கிறேன். அடுத்தவர் புரட்சியாளராக, ஆரேனும் தர்மசத்திரத்தகதி, காப்பரேட்டு, கவ்வாத்து, காவாலி ஆகியே பில்போர்ட் பிரமாண்ட போஸ்ரரிலே குத்துமன்னையோடு ஆகவேண்டுமென்பது கோலிவுட்டுக்கோழிகள் கிளறுவிதியென்பதாலே, என்னைப்போன்ற அக்கால(கண்ட) நகைச்சுவைநடிகரையெல்லாம் அபூர்வசகோதரர்கள் வில்லன், அம்பனாக்கி அம்பாரியிலே ஏத்தியிருக்கின்றார்கள்.

செம்மொழியால் எழுத்துருவரையும் இரத்தத்தமிழன் பின்னூட்டப்பெட்டியோ பதிவில் விட்டாலும் பதிலை,
----------------------
We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

* Describe what you were doing when you got this error.
* Provide the following error code and additional information.

bX-6rscy0
---------------------

என்று உதைத்துத் தள்ளுகிறது. இப்பெயரிலிவேதாளத்துக்கே முருங்கைமரமேறி அலுத்துப்போனதால், முருங்கைமரத்திலேயே விக்கிரமாதித்தன் கேள்விக்குப் பதில் கீழே கிளையிற் தொங்குகிறது.

"இப்படியான வம்புகள்தான் வேண்டாமென்று அஞ்ஞானம் பீச் மரத்துக்குக் கீழே பனிவிழ வந்து என்பாட்டுக்கே போய்க்கொண்டிருக்கிறேன்; விடுங்களேண்டா; எதுக்குத் திரும்ப பதிவுக்கொரு புள்ளி தந்து குருதிப்புனலோட ஆரைசுத்தி வட்டமடிக்க வைக்கிறீர்கள்?" :-(


/"அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை."

"அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் 'வீராங்கனை' பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது."

"/

உண்மைத்தமிழன் எதுக்கு இப்படியெல்லாம் கீரனுக்குக் குளத்திலே தோன்றின இலையாட்டம் பாதி உண்மைத்தமிழனாகவும் மீதி உன்மத்தத்தமிழனாகவும் போஸ்டுகிறீர்கள்? ;-)


நாய் மாதிரி சனங்களெல்லாம் ஆயிரக்கணக்கிலே போன காலத்தையும் கடந்தபின்னால், "தமிழச்சியா? லீனாவா? பெண்ணியமா? புண்ணியமா?" என்றெல்லாம் விதண்டாவாதம் செய்வது பதிவுலகிலும் அதிலே பிடுங்கிப்பிழைக்கும் பதிப்புலகிலும் புரட்சிச்செம்மல்லர்களாக்கலாம். ஆனால், அன்றைய பாட்டுக்கு நிம்மதியைத் தரப்போவதில்லை. மனுசனே சாணியாக மிதிக்கப்பட்டிருக்கையிலே யோனி என்று எழுதுவதே பெண்ணினத்தை உய்வித்துவிடுமென்றால், அப்படியேயாகட்டும். சொல்வதற்கேதுமில்லையென்றில்லை; சொல்வதற்கு ஈடுபாடில்லை.

இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்த மட்டும் இங்கே:

திரும்பத் திரும்ப -/பெயரிலி. என்ற கிழட்டுமாட்டைத் தமிழ்மணம் என்ற நெட்டைப்பனைமரத்திலே கட்டிப் பதிவுப்புல்மேயாதீர்கள். -/பெயரிலி.யோடு தமிழச்சி சண்டைபோட்டதாலேதான் தமிழ்மணம் தமிழச்சியை நீக்கியது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வதாலே நீங்கள் பொய்த்தமிழனாகவே உங்களை நிறுவமுடியும்.

எனக்கும் தமிழச்சிக்கும் ஏழெட்டுப்பரம்பரைகளாக நிலத்தகராறோ, புலத்தகராறோ இல்லை. தமிழச்சிக்காக வாளெடுத்த புரட்சிச்செம்மல்களிலே பாதிக்கும் எனக்கும் முன்னரே ஆயிரத்தி முப்பத்தியிரண்டு புள்ளி நான்கு ஆறு எண்ணிக்கை தகராறு. மீதியிலே பாதிக்கு தோழரோடு போஸ் கொடுத்தால், நாமும் புரட்சிச்சிங்கங்கள் அவரசம். மிஞ்சியிருக்கும் காற்பகுதி குறைந்தபட்சம் என்ன சொல்லவருகின்றேனென்று என் குதறிய கொடுந்தமிழையும் கொஞ்சம் நோண்டிப் பார்த்தபிறகு பேசியிருக்கலாம். தமிழச்சி டவுசரைக் கழட்டுவேனெனக் கைதட்டும் தோழர்ச்செம்மல்களுக்கு 'கழட்டினாலென்ன? காபரே ஆனாலென்ன?' என்று திரும்பிக்கேட்டால்மட்டும் பெண்ணியக்காவாலித்தனம் ஆண்குறிகளிலே வியர்த்துவிடுவது தமிழகமேடைகளிலும் இலக்கியவிழவுழவுலகிலுமே சாத்தியம். 

நிற்க; தமிழச்சி பெண்ணியப்புரட்சியிலே யோனியைப் போட்டதற்காகத் தமிழ்மணம் நீக்கியதாக நீங்களெல்லோருமே திரும்பத் திரும்ப உருப்போட்டுக்கொண்டிருந்தால், உங்கள் விருப்பம். ஆனால், தமிழச்சியே, "ஒழுங்காக (ஒத்தி & ஒட்டி) அனுப்பிக்கொண்டிருந்தபோது, எவரும் வாசிக்கவில்லை; இப்படியாகத் தலைப்புகளைப் போட்டாலே வாசிக்கவருகின்றார்கள்" என்று சொல்லிப் போட்டாரென்று என் கடுகுமூளைக்கு ஞாபகம். இரத்தத்தின் இரத்தமே, அத்தோடு சண்டைபோடும் உடன்பிறப்புகளே, நடிகை போஸ்ரர்கள் மார்பு தெரியப்போடாத மீதிக்காலங்களிலே பெண் ஈய(த்)தோழர்களாகப் பிறப்பெடுக்கும் புரட்சிச்செம்மல்களே, கொஞ்சம் பதிவுகளைக் கிண்டிப்பாருங்கள். இப்படியான நிலை ஒரு தவறான முன்னுதாரணமாக வேண்டாமென்றுதான் தமிழ்மணம் -கேட்டுக்கொண்ட பிறகு - நீக்கியதாக எண்ணம். இதுக்கு மேலே கிண்டவோ, தோண்டவோ, அடிமுடி, மேல்மூடி காணவோ எனக்கு ஈடுபாடில்லை.

அவ்வப்போது, நாளொரு திரைப்படம், பொழுதொரு புரட்சியாக பதிவர்கள் பெருகி, அவர்கள் பதிப்புலகிலேயும் கால்பரப்பி ஜன்மசாபல்யமடையவும் இப்பிறப்பின் பேற்றினை முற்றாகப் பெறவும் வாழ்த்துகிறேன்.

யாழி சுழித்ததால் தமிழ்ச்சிறுகதை வளரவுமில்லை; யோனி பொறித்ததால் தமிழ்க்கவிதை வளரவுமில்லை. ஆக, நம்மவாவினதோ நம்மவர்களினதோ 'படைபூ' ஆச்சேன்னு போஸ்ரர் ஒட்டிக்கொள்வதையும் அதைக் கிழித்துக்குதறுவதையும் தொடர்ந்தும் செய்து தமிழிலக்கிய உலகிலே புரட்சியும் பொங்கலும் ஓங்கச்செய்க. நானென்ன சொல்ல இருக்கு? ஆனால், திரும்பத் திரும்ப உங்கள் புரிதல்களையும் விழைவுகளையும் என் செய்கைகளாகவோ நோக்குகளாகவோ நிறுவமுயற்சிக்காதீர்கள்.

உண்மைத்தமிழன், இப்போது, இங்கே யார் யார் பின்னூட்டமிடுவார்கள் என்ற பட்டியலை உங்களுக்குத் தனிப்பட அனுப்பி வைக்கவா?  அச்சொட்டாக, அப்படியே காண்பீர்கள்; உங்கள் அப்பன் முருகன் தன் வல்வேலால் உங்களையும் என்னையும் தமிழக இலக்கிய, புரட்சி, உலகசினிமாதன் கீச்சுநாயகர்களிடமிருந்து காத்தருளட்டும்.
----------------

அ(வ)சம்பந்தமான இடுகைகள்
1. தமிழச்சி மீதான சொல்வன்முறைகளும் தமிழச்சியின் கருத்துச்சறுக்கல்களும்

2. மாசிலா, இரயாகரன், தமிழச்சி இன்னார் பிறர் & புரட்சி

3. கொன்றால் பாவம்; தின்றால் போச்சு; இதுதான் என் கட்சி

4..

Tuesday, April 27, 2010

அவலநாடகத்தின் உச்சக்கட்டம்: நவரசநாயகனின் தீவட்டியாளர்

பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி முதலமைச்சரைச் சந்தித்து வேண்டுகோள்

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்

தூ!

தானாகத் 'தனிப்பெருந்தமிழர்தலைவ'னென தன்னூடகங்கள் தள்ளியுயர்த்தாமல் பெயரெடுத்துக்கொள்ளமுடியாத உங்கள் நவபார்ப்பனியநாயகனை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழர்தலைவன் என்று நிறுவ உங்களுக்குப் பிரபாகரனின் பெயரை நவபார்ப்பனியநாயகனின் பெருவிரலிலே ஊடகங்களறிய தமிழ்மக்கள்முன்னாலே மிதித்துக்காட்டவேண்டுமில்லையா? ஊடகங்களைக் கையிலே வைத்தாடியபோதும் சாத்தியமாகாத அந்நிலைக்கு, பிரபாகரன் தாயை அவர் இறைஞ்சுவதுபோல தலைகுனியவைப்பது ஒன்றுதான் இன்றைக்குச் சாத்தியமாக்கப்படக்கூடியதில்லையா? வரிகளுக்கிருமுறை உழற்றும் சுயமரியாதை என்ற பதத்துக்குக் கொஞ்சமேனும் மரியாதையிருப்பின், அவ்வயோதிபரை விற்காமல், விலைபேசாமல், அவருக்குரிய சுயமரியாதையுள்ள (காலில் விழும் அச்சுயமரியாதையல்ல) மூதாட்டியாகச் சாகவிடுங்கள்.

எந்நாட்டுவீதியிலே ஏதிலியாய்ச் செத்துப்போனாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசுக்குச் சாமரம் இன்னும் தமிழகத்தின் நிழலிலே தன்மரியாதைகெட்டிடப் பார்வதி அம்மையாரை மீண்டும் ஒதுக்கக்கூடாதென்று அவரின் காப்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களைக் கூடிக்கொன்ற காயமும் குருதியும் ஆறமுன்னால், கூரையும் கூறையும் குரவையுமிட்டு ஓலம் மறைத்து ஒய்யாரஞ்செய்யும் செம்மொழிமகாநாடென்ற விமரிசைக்கூத்தாட்டத்தினையும் தமிழிணையமகாநாடென்ற விளம்பரக்குரங்காட்டத்தையும் புறக்கணிப்போம்.


Monday, April 19, 2010

அத்தோடு இத்தும் வர்து

இவ்விரு "மகாநாடு மறுப்போம்" பதாகைகளையும் தம் வலைப்பதிவுகளிலே நிரந்திரமாகச் சேர்த்துக்கொள்ளவிரும்புகின்றவர்கள் என்னிடம் கீழிறக்கிக்கொள்ள அனுமதி கேட்டத்தேவையில்லை.