Saturday, December 11, 2010

சொன்னாங்க! சொன்னாங்க!!


மாபெரும் தர்மவான் தோழர் மாதவராஜ்

"போங்கய்யா.. நீங்களும் உங்க பத்திரிகைதர்மமும்!" என்று உதறி அறைகூவல் விட்டிருக்கின்றார் தோழர் மாதவராஜ்.

அவர் சொல்லிருக்கும் விடயத்திலே எனக்கேதும் மாறுபாடில்லை. ஆனால், ஏடெட்டுப்பின்னூட்டப்பொறுக்கலுக்கான இதே கூவலை இந்தாள் என்றைக்காவது இந்துவுக்குச் சொல்வாரா? மாட்டார். கட்சி கோபித்துக்கொள்ளும். கொள்கை கொல்லைப்புறத்தினாலே கொல் கையாயிடும். பஞ்சாயத்துக்கூடி ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஒதுக்கிவைக்கப்பட்டவர் ஆறுகுளம் தேடி அலைந்தொழிந்த பின்னால், பின்வரும் தோழர்கள் பேரறிக்கை விடுவார்கள். ஒரு சில இளைஞர்கள் துணிவாகப் போட முயன்ற கூட்டத்துக்குப் பயந்து இந்து ராம் 'இராஜபக்சவின் இரண்டாம் ஆட்சி'க்கூட்டத்தைத் தவிர்க்கின்றார். இவர்கள் இவை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்.

துணிவிருந்தால், அடுத்ததடவை கட்சியைவிட்டு வெளியே வந்து சமூகநியாயம் தேடும் மனுசனாக இந்து ராமை "இப்படியெல்லாம் இராஜபக்சே சார்பிலே நீரே ஒரு செவ்வியையும் எடுத்து, நீரே பதிலையும் போட்டுக்கொடுப்பதெல்லாம் பத்திரிகாதர்மமுமேதானா? போங்கய்யா.. நீங்களும் உங்க பத்திரிகைதர்மமும்!" என்பாரா இவர்? லெனினும் மார்க்ஸும் எங்கும் அதற்குள்ளே ஓடிப் போய்விடமாட்டார்கள். சிவப்புப்புத்தகத்துள்ளேயும் கட்சிக்கொடிகளிலுமே வழக்கம்போல தூசு, மழை காற்று அறைகூவல் எல்லாம் சகித்துச்சுகித்துத் தூங்கிவழிந்துகொண்டிருப்பார்கள். வந்து திரும்பப் பைக்குள்ளே வைத்துக்கொண்டு கையை விசுக்கி விசுக்கிப் புகழ் பரப்பலாம்.

அண்மையிலே ராடியா ஒலித்துண்டின்பின்னாலே, "Headlines today" இலே போட்டி ஐந்தாம்தூண் பிரபு சாவ்லா திரும்பி, பாரதப்பத்திரிகாதர்மத்திலே அவிர்ப்பாகப்பங்கு கொடுத்தாரே கேட்டாரே, ""All editors give advice;the way N. Ram gives advice to Sri Lankan government." இதுபற்றியெல்லாம் மாதவராஜோ வேறெந்த சிபிஎம் சப்ளாக்கட்டையுமோ பதிவும் போடாது; போடும் பதிவுக்குப் பதிலும் போடாது; போடும் பதிலையும் ஊடுபுகவிடாது.

போலிகளுள்ளேயே அசலான போலிகள் இவர்கள். அமெரிக்காவையும் முதலாளித்துவத்தையும் திட்ட விக்கிலீக் மணற்கடிகாரம் ஒரு வலிதுடுப்பு; வேகும் அசானின் நிழலிலே நின்று கூடைப்பந்தாட்டம். அவ்வளவே! தன் கட்சிமுன்றலிலே ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடிபிடித்து வாய்தா வாங்கும் பத்திரிக்கைத்தர்மத்தைக் கேட்கமட்டும் வாயிலே கொழுக்கட்டையும் கையிலே கட்சிக்கொடியும் அரிவாளும். இதற்குள்ளே பாரதியார் பாடல் ஒரு கேடு. "நெஞ்சில் உரமுமின்றி..." என்று வரிகளை எடுத்து வேறு யாராவது பதிற்பாடல் போட்டால் வியப்பில்லை. சே!

"கட்சிக்காரர் பத்திரிகைகள்மீது இந்தப் பதிவுத்தோழர்களுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். அசானின் எழுச்சியை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, இந்துவின் ஸ்ரீலங்கா அரசுசார்ந்த செவ்விகளையும் செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? பதிவுலக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.

போங்கய்யா.. நீங்களும் உங்க பத்திரிகைதர்மமும்!" 

------------------

இலக்கியம் என்பது இலக்கு உய்ய என்பதாம்!

/விளக்கு இன்னமும் தன் இலக்கில் இருந்து விலகவில்லை. ஆனால் இயல் முற்றிலும் திரிந்து பல்கலைக்கழக கொடுக்கல் வாங்கல் ஆட்டங்களுக்கு களமாகிவிட்டது. /

திண்ணையை நடத்துகின்றவர்கள் (இன்றைய) 'விளக்கு' விருதுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள். ஜெயமோகன் விளக்கேந்தும் கட்டுரை வருவது சுபமும் சுலபமும் என்பதை நாஞ்சில்நாடன் அறியவேண்டும். தமிழை, தமிழரை முறித்தால், சிறப்பு. வெறுமனே வழிகாட்டிகளின் துணையை நம்பிவந்து அமெரிக்காவிலே அரசியலையும் நிலையையும் நடப்பு இலக்கியமென்று பதியும் ஜெயமோகன் போன்றவர்களை முன்னிலைப்படுத்துவது, நாஞ்சில்நாடன் போன்ற முதிர்ச்சியான எழுத்தாளர்களுக்கு அழகல்ல. அண்மையிலே அமெரிக்கா வந்து விளக்கு சார்ந்த சிலருடனும் அவர்கள் நண்பர்களுடனும் தங்கி உலாப்போன ஜெயமோகன் இவர்களுக்குத் தாங்கிப் பிடிப்பதேதும் அதிசயமானதல்ல.

'இயல்', புலம்பெயர்ந்த கனடாவாழ்தமிழர் கொடுப்பது. இதிலே ஜெயமோகனை மாமனுசனாக மதிக்கும் ஆசாமிகளும் உள்ளடக்கம். இத்தனைக்கும் இதே ஆட்களின் 'கால'த்திலேயே ஜெயமோகனின் வால் வேதசகாயகுமார் ஈழச்சிறுகதைகளைக் கிண்டல் செய்து வளரவில்லை என்பார்; ஜெயமோகன், ஈழக்கவிதைகள், பெண்கவிதைகள் அரசியல் ஒப்பாரி என்பார். இத்தனைக்கும் பின்னால், இயல் விருதை ஜெயமோகன்போல ஈழத்தமிழர்களின் செத்தவீட்டிலே காந்தியம் போதிக்கும் ஆட்களை மகிழ்ச்சிப்படுத்தக் கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அ. முத்துலிங்கம் போன்ற தமிழ்நாட்டின் மேட்டுக்குடி மாமாக்கள், மாமிக்களின் கால்களுக்குச் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கும் ஆட்களும் ஏதோவகையிலே சார்ந்ததுதான் இது. சொல்லப்போனால், 'இயல்' கும்பல், தமிழக எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பதே தவறு. இன்னமும் தமிழக முத்திவெடிச்ச கலைஞானக்குஞ்சாமணிகட்கு எப்போதும் கோவணமாக இலக்கியம் ஆடும் விளையாட்டு வெறுப்பேற்றுகிறது.

ஜெயமோகனுக்கு விளக்கு நன்றாகத் தெரிகிறதாம்; இயல் மட்டும் தடுமாறுகிறதாம். திண்ணையின் அரசியல் நிலைப்பாடும் அதிலே எழுதுகின்றவர்களின் வட்டமும் எல்லோருக்கும் தெரியும். இவை எவ்வகையிலும் ஜெயமோகனின் அரசியல், தத்துவ, தேசிய வட்டங்களைக் குறிக்கிடாதவை; உள்ளடங்கியவையாகலாம். இயல், எப்போதும், அப்படியாக இருப்பதில்லை. அவ்வப்போது, இலங்கைசார்ந்த - சமயங்களிலே இந்தியமுரண்கொண்ட- ஆட்களுக்கும் விருதினைக் கொடுத்துவிடும். அதனாலேதான், ஜெயமோகனாருக்கு ஆகிவரவில்லை. நாஞ்சில்நாடனுக்கு என்ன கேடு? ஜெயமோகன் என்று தன் போருக்கு அடுத்தாரை உசுப்பேற்றும் பாம்பட்டியைப் பற்றி நாஞ்சில்நாடனுக்குப் புரியவில்லையா? அல்லது, புரிந்தும் "ஆயிரம் பொற்காசாச்சே!" என்று உசாத்துணைவிடுகின்றாரா?

அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும்விட கேடுகெட்ட ஆட்கள் இந்த இலக்கியவாதிகள் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகின்றது. இலக்கிய அரங்கக்கண்ணாடியாக இல்லாமல் அவுரங்கசீப்பாக இருக்கின்றவர்கள் உத்தமர்களென்பேன். இத்தனை மண்டகப்படிக்கதைகள் எழுதின இவர்களைவிட 'சோளகர்தொட்டி' என்ற ஒற்றைத்துண்டம் முறிந்தமொழியில் எழுதின பாலமுருகனுக்கு ஆயிரம் விருது கிடைத்திருக்கவேண்டும்.

(தமிழ்மணம் விருதுகள் உட்பட்ட பதிவு விருதுகள் உட்பட்ட எந்த) விருதுக்காகவும் வெளியீட்டுவிழாவுக்காகவும் மட்டும் கவிதையும் கதையும் எழுதி... தூ! என்ன இலக்கியக்காரர்களோ!

எனக்கென்ன! என் காசா, கலையா! கொடுத்துவிட்டுப்போங்கள்! போய், இலக்கியவாதியை ஏளனம் செய்கிறான் என்று விளம்பரப்பலகை போட்டுக்கொண்டு பிச்சை எடுங்கள்.

Sunday, November 14, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு: மண்டகப்படிகள், மண்டையோடுகள், மண்டையுடைவுகள்

பேஸ்புக்கிலே அள்ளிப்போட்டு நண்பர் ஒருவருக்குப் பின்னூட்டங்களாக எழுதிய அவியல் அள்ளிக்குவிப்பான பதிற்குறிப்பின் நீட்சி கருதி வாசிக்கவேண்டிய ஒருவருக்காக, இங்கே


நடத்துகின்றவர்களின் நோக்கங்கள் எவையென்றாலும் நன்றே என்றுதான் முடிவின்றி வாதாட நேரமும் பொறுமையுமின்றி விட்டுவிடுவோம். இம்மகாநாட்டினை ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு தன் 'சமரசம் உலாவச்செய்யும் களமானது எம்நாடு' என பிறருக்குக் காட்டச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டி இதிலே கலந்து கொள்ளவேண்டாமென்று கேட்பது என் தரப்பு நிலை.



எச்சூழலிலே எவரிடையே என்ன சாதகமான கலாசார நல்லிணக்கப்பரிவர்த்தனை நிகழ்வுகள் சாத்தியமாகியிருக்கின்றன என்று சொல்லுங்களேன். அரசை விமர்சிக்காத பொதுவுடமைவாதிகளினதோ புலியெதிர்ப்பாளர்களினதோ புத்தக, பதிப்பவெளியீட்டு விழாக்கள்தானென்றாலுங்கூட, சிங்களமக்களிடையே இந்நிகழ்வுகள் எடுத்துச்செல்லும், சென்ற சேதிகள் என்ன?



யாழ்ப்பாண நூலகத்திலே இரு வாரங்களுக்கு முன்னாலே நிகழ்ந்ததைப் பற்றி எடுத்துச்சொல்லப்படுகிறதா? இன்றைய பிபிஸி சந்தேச சிங்கள செய்தியிலே வந்த பத்தாண்டுகளுக்கும்மேலாக அடையுண்டிருக்கும் தமிழ்க்கைதிகளைப் பற்றிப் பேசப்படுகின்றதா? இந்நிலையிலே எங்கே போருக்குப் பிந்தித் தொடங்கிய சாதகமான நல்லிணக்கப்பரிவர்த்தனை வருகின்றது?கேட்கமுடியாது முடங்கிக்கிடக்கவேண்டிய அவலத்தின் முனகலிலா? "அரிசியை நாம் கப்பமாய்க் கொணர்கிறோம்; உமியை நீவீர் ஒருபிடி கொணர்க; ஊதி ஊதி இருசாராரும் உண்போம்" என்பதிலா? இத்தனை பேர் நாய்கள் மாதிரியாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அதைக் கேட்பாரில்லை; அதை 100% இழைத்தவர்கள் பிடிக்காத காரணத்தினாலே 200% இழைத்தவர்களுக்கு விளம்பரம் எடுத்துக் கொடுக்கப்போகத்தான் வேண்டுமென்பதுமாதிரியாகத்தான் எனக்கு இது தொடர்பாகப் போகவேண்டுமென்று லெ. முருகபூபதியை வைத்து செவ்வியரசியல் நிகழ்த்துகின்றவர்கள் யாரெனக் காணும்போது தோன்றுகின்றது. இஃது எவ்வகையிலும் போகாதே என்பவர்களிலே எல்லோரினதும் நியாயங்களையும் ஆதரிப்பதாக ஆகாது. துரோகிகள் என்பதாக இதுவரைநாள் நானெங்கும் எவரையும் எழுதியறியேன் - தன் பிள்ளைகளுக்கொரு நீதி, ஊரார்பிள்ளைகட்கொரு நீதி வைக்கும் மேதைகளைக்கூட அப்படியாகச் சொல்லவில்லை. அதனால், கூட்டத்துக்குப் போவோர் துரோகிகள் என்றெல்லாம் என் கருத்தில்லை. ('இப்போதெல்லாம் எம்மைத் துரோகிகள் என்று சொல்லுங்கள்" என்று அறிக்கை விடுவதெல்லாம் "நான் உங்களுக்காக உரோமர் சிலுவையிலே அறையப்படுகிறேன் பாருங்களேன்" என்பதுமாதிரியாகப் படங்காட்டுவதைக் காணுகையிலே எரிச்சல் வருகின்றதா சிரிப்புவருகின்றதா என்று எனக்கே தெரியவில்லை :-() ஆனால், ஸ்ரீலங்காவின் ராஜபக்ஷ அரசின் பிரசாரப்பீரங்கிகள் இவ்விழாவினை எப்படியாகப் பயன்படுத்தும் என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்துகொண்டும் இவ்விழாவினை நிகழ்த்துகின்றவர்களும் முட்டிமோதிக்கொண்டு அவ்விழாவினைத் தாங்கிப்பிடிக்கின்றவர்களும் 200% ஸ்ரீலங்கா அரசுக்கு விளம்பரம் கொடுக்கின்றோமென்பதை அறிந்துகொண்டே செய்கின்றார்கள். அவ்விளம்பரம் யாழ்ப்பாணத்தமிழ்த்தேசியவெள்ளாளமேலாதிக்கத்தைப் பெரிதும் பாதிக்காத, ஆனால், அப்பெருங்குடியினால் 'ஒடுக்கப்பட்ட' வன்னி, கிழக்குமக்களின் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறையினையும் பெருங்கொலைகளினையும் பேரழிப்புகளையும் மறைத்துக்காட்டி, அவ்வரசினை உலக அரங்கிலே ஒதுக்கிவைக்கவோ நீதிவழங்கலுக்குட்படுத்தவோ 200% உதவவிடாது செய்கின்றதென்பதாலே இவ்விழாவிலே கலந்துகொள்ளக்கூடாதென்பது என் தனிக்கருத்து. இத்துணை கொடூரநிகழ்வுகளையும் போருக்குப் பின்னான இனங்களுக்கிடையேயான கலாசாரப்பரிவர்த்தனையிலே கொழும்பிலே வைத்து எல்லோரும் கேட்கச்சொல்லமுடியுமென்று சொல்லுங்கள்; அப்படியான நேரத்திலே அடுத்தபக்கத்திலிருந்து இதனை என்றோ புரிந்துகொண்டிருக்கின்றோமென்று -இதுவரை நாள் பதினெட்டு மாதங்களாகியும் கேட்காத -ஆறுதலும் தேறுதலும் பகிரங்கமாகச் செய்திப்படட்டும்; 100% இம்மாநாட்டின் தேவையை ஒத்துக்கொள்கிறேன். 100% போருக்குப் பிந்தைய இலங்கையின் சாதகமான கலாச்சார நல்லிணக்கப் பரிவர்த்தனைகளில் மண்ணள்ளிப் போடுகிறது அறிவுசார் இறைமையறுசெயலென ஒத்துக்கொள்கிறேன்.



பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் வைத்துக்கொண்டு போரையும் இறையாண்மையையும் சுயநிர்ணயத்தினையும் கோடு வரைந்து கீறலின் எப்புறம் நாம் என்பதை வைத்துக்கொண்டு குதூகலிப்பதுதான் சாதகமான கலாசாரநல்லிணக்கப்பரிவர்த்தனையென்றால் அறிவுசார் இறைமையும் முழுமையும் நிறைந்த செயலென்றால் சொல்வதற்கில்லை.



இது நாடுகடந்த தமிழீழத்தார், தேசங்கடந்த ஸ்ரீலங்கர் என்பதல்ல பிரச்சனை. சர்வதேசத்தமிழர் என்றால் எவரும் மூக்கை நுழைக்கலாம். அதுவும் தமிழ் எழுத்தாளர் என்றால், எளுத்துப்பிலையோடு எழுதும் பிறபள பதிவார்களும் வாலை ஆட்டலாம். எதுக்கு எப்போதுமே புலிகளையும் நாடுகடந்தவர்களையுமே குற்றக்கூண்டிலே ஏற்றவேண்டும்? மாற்றுக்கருத்தாளர்கள் என்ன கேள்விக்கும் விமர்சனத்துக்கும் அப்பாலிருக்கும் கவசகுண்டலங்களுடனும் தொங்காட்டான்களுடனுமா பிறந்தார்கள்.



இத்தனைபேர் 100 மைல்கள் தொலைவிலே வன்னியிலும் கிழக்கிலும் செத்துக்கொண்டிருக்கையிலே கொழும்பு பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்திலே மறைந்துபோன மனித உரிமையாளர் பெயரை வைத்துக்கூட்டம் நடத்திக் மனிதத்தைக் காத்தபோது, இப்போது கூட்டம் கூட்டி எல்லோருக்கும் பண்பாட்டுப்பரிமாற்றம் செய்ய எண்ணும் நாம் ஒரு சொட்டுக்குரலையும் எழுப்பவில்லையே! அப்பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்திலே வரைமுறையற்று சுடுகலன்களின் எதேச்சைச்சரமாரிக்கு நிகழ்தகவின் அடிப்படையிலேமட்டும் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வாலும்வரியுமற்ற குழந்தைகளைப் பற்றிப் பேசாமல், எப்போதோ செத்துப்போன உறவின் பேரில் மனிதத்தை விற்று விளம்பரம் தேடியவர்கள் ஏன் அப்போது பண்பாட்டுப்பரிமாற்றம் வந்திருந்த மேற்தட்டு நுனிநாக்கு ஆங்கிலக்கறுவாக்காட்டுச்சீமான்களிடமும் சீமாட்டிகளிடமும் பண்ணமுடியவில்லை. நாமும் கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. அதே கூத்தே இங்கும் பரிமாற்றத்தின்பேரிலே அரங்கேறுமென்பதாலேதான் இதன் நிகழ்வின் -கொலைகார அரசியற்கலைஞர்களின் முகங்களைக் காக்கக்கூடிய- எதிர்காலப்பயன்பாடு பயத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்துக்கின்றது.



இப்படியான அடுத்தவரிடம் நாம் எதிர்பார்ப்பின்றி, கடந்ததின் 'ஞானம்' இன்றி நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது, பூனைக்கு மணிகட்டும் விளையாட்டு; நாயகன் பாணியிலே அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துகின்றேன் என்பதல்ல இங்கே நிகழ்வது. இங்கே நிகழ்வது இன்னமும் அழுத்தப்பட்ட நிலையிலே, நிகழ்ந்தவற்றுக்கெல்லாம் ஒரு பக்கத்தினை மட்டும் சாடிக்கொண்டு, மறுபக்கத்தினை எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தாது, அப்படியே நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு போவோமென்பது.... வெறும் பகவத்கீதை பாடிக்காட்டும் அறுதிமுழுச்ச்சரணாகதித்தத்துவமாகமட்டுமே எனக்குத் தோன்றுகின்றது. நம்பிக்கை என்பது வெறுமென கேள்வியற்றுத் தலையைச் சிங்கத்தின் வாய்க்குள்ளே வைப்பதாக ஆகாதென நினைக்கிறேன். இப்படியான நம்பிக்கை, நீங்கள் கூறும் அறிவுசார்ந்த இறைமைக்குட்படாது. கடந்தகாலத்தின் மழைப்பொழிவுகளை வைத்துக்கொண்டே, எதிர்காலத்தினை எதிர்கூறமுடிகின்றது.நம்பிக்கையைமட்டும் வைத்துக்கொண்டால், அறிவியலும் ஏரணமும் தேவையில்லை; வெறும் சந்திமரத்தடிக்கிளிச்சாத்திரியாரின் பறவை இழுக்கும் ஓலையே மழைவீழ்ச்சியைச் சொல்லப்போதுமானதாகிவிடுமே! இத்தனைநாட்கள் புரியாமலிருந்ததற்குப் புலிகள்தான் காரணமா? இன்றைக்கு நம்பிக்கை துளிர்விட்ட நேரத்திலே எத்தனை மறுபக்கத்திலிருந்து இப்பக்கத்துப்பார்வைகளிலே இருக்கக்கூடிய நியாயங்களையும் பயங்களையும் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்? அல்லது, புரிவார்களென்ற நம்பிக்கை உங்களுகிருக்கின்றது? இதனை நீங்கள் முதிர்ச்சியினை என்பது - சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் - உங்கள் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகின்றது. திரிபரசியல் இங்கே செய்கின்றவர்கள் யார்? "விடுதலைப்புலிகள் தலித்துகளையும் கம்யூனிஸ்டுகளையும் அடக்கி ஒழித்துத்தள்ளினார்கள்" என்று சொற்களை மிகநேர்த்தியாக விற்பனைக்கேற்பத் தேர்ந்து இந்திய ஆங்கிலப்பத்திரிகைக்குச் செவ்விகாணும் ஒருவரைவிடவா திரிபரசியலை நாம் எம் கண்முன்னே நிகழ்த்திவிடமுடியும்? இப்படியான ஒருவர் இம்மகாநாடு நடந்தேயாகவேண்டுமென்கின்றபோதுதான், 200% எனக்கு இம்மகாநாடு ஸ்ரீலங்கா அரசின் கோரமுகத்துக்குக் காப்பிடும் திரிபரசியலின் நீட்சியாகத் தோன்றிப் பயமுறுத்துகின்றது.



இலங்கை இனங்கள் ஒன்றுபட்டுப்போவதிலோ இலக்கிய, சளாப்பிய, சல்லாபக்கூட்டங்கள் நடப்பதிலோ எனக்கேதும் வருத்தமில்லை; மகிழவேண்டியவிடயமே. ஈழம் என்று பிரிந்துதான் விடுதலை என்றில்லை; புவியரசியற்காரணங்களாலே என்றும் அது நிகழுமென்றும் நான் எதிர்பார்த்ததில்லை. சொல்லப்போனால், அந்நாட்டிலே நான் வாழப்போவதுமில்லை. ஆனால், கோடரி கொண்டு வெட்டிய கைப்புண்ணுக்கு மருந்திடாது, அழகிய காப்பினைப் போட்டு அழகுபார்ப்பது நல்லுள்ளத்தின் செயலென நம்பமாட்டேன்; அஃது என்னைப் போன்றவர்களின் முதிர்ச்சியினமை என்றால் இருந்துவிட்டுப்போகட்டும். இழைக்கப்பட்டவற்றுக்கு உண்மையறிதலில்லாது இன்னமும் அழுத்திக்கொண்டு இணைந்து பேசிப் பரிமாறிப்புரிந்துகொள்வோமென்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இதுதான் நம்பிக்கை வளர்க்கும் முதிர்ச்சியான செயற்பாடென்றால், அறிவியல்சார் வருமழை எதிர்கூறுவானாக நான் முதிர்ச்சியற்றே இருக்கவிரும்புவேன் :-( தென்னிலங்கை மக்களுக்குப் போய்க் கன்னியாய், குருநகர், நாவற்குழி, மணியம்தோட்டக்குடியேற்றங்களைப் பற்றிப் புரியவைத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்போமென்றோ, சர்வதேசத்தமிழ் எழுத்தாளர் மகாநாட்டிலே சிங்கள இலக்கியவாதிகளை அரைமணிநேரம் கூட்டிப் பண்பாட்டுப்பரிவர்த்தனையிலே எல்லாம் புரியவைப்போமென்றோ நம்பிக்கை கொள்ளும் முதிர்ச்சி என்னிடமிருக்கமுடியாது..

மாநாடு நடப்பதால் குருதிசிந்துவதற்கான இன்னொரு நிர்ப்பந்தம் இல்லாதொழியுமென்பது நிகழுமென நம்பிக்கை தர முன்னாதாரத்துடன் சொல்லுங்கள். நிச்சயமாக சொல்கின்றவர்களுன் அப்படியே ஒத்துக்கொள்வேன். அப்படியான என் வாழ்விலே காணாச் சமரசம் உலாவுமிடமே எனக்குமான கனவென்பேன்; எல்லோருக்குமான கனவென்பேன். குருதி சிந்தாதிருத்தல் என்பது முக்கியமானதே. ஆனால், நாம் தவிர்ப்பதனாலே மட்டும் ஏதோ வகையிலே குருதி சிந்தும் நிர்ப்பந்தம் ஒழிந்துவிடுமா? வேண்டுமானால், சிறிதுகாலத்துக்கு ஒளிந்துவிடலாம். தமிழீழக்கனவென்பதெதையும் நான் விற்கவில்லை; விற்கவும் போவதில்லை. அதற்கான ஆயுதக்கிட்டங்கிகளிலே கனவுகளைப் புதைக்கவுமில்லை. ஆனால், சுயநிர்ணயமென்பதும் சமநிலையிலே சகமனிதனைப்போல வாழ்வதென்பதும் மிகவும் அவசியமானது. நான் பேசும்மொழிக்காக நான் தண்டிக்கப்படும்போது, நான் பிறந்த என்னிடம் என்னிடமிருந்து எப்போதும் கவரப்படலாமென்கிறபோது, குடியேற்றங்களை நியாயப்படுத்திக்கொண்டு பரிவர்த்தனைப் பரிமாற்றங்களைச் செய்வது குருதியைச் சிந்தச்செய்யாது, இனி வரப்போகும் என் குழந்தைகளுக்குச் ('என்' என்றால் மற்றவர்கள்போல அமெரிக்காவிலிருக்கும் உன்னுடையதா என்று கேட்கமாட்டீர்களெனத் தெரியும்) சரியானதைச் செய்யுமா? செய்தவற்றின் நியாயங்களை நியாயமாகக் கேட்காது, இன்னும் அழுத்திக்கொண்டு பேச்சுப்பரிவர்த்தனை செய்கின்றவர்களிடம் எனக்குப் பெற என்ன 'ஞானம்' இருக்கப்போகின்றது? இன்று குருதி சிந்தாது என்பது சரி; ஆனால், சிந்திய குருதிக்கான சரியான கேள்விகளைச் சம்பந்தப்பட்ட அத்தனை பேரிடமும் நிறுத்திக்கேட்காது, 100% பழியை ஒருவரிடம் போட்டுவிட்டு, 200% மற்றைய தரப்பினை மறைமுகமாகக் காப்பாற்றும் செயலுக்கு எவ்விதம் துணை போவது? இதைப் புரிந்து கொள்ளப் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ளும் மேதமையும் தேவையில்லை. ஸ்லோவேனியப்புதுச்சிந்தனையாளர்களைப் பின்பற்றவும் தேவையில்லை. இருக்கும் பட்டற்றிவினைச் சிறப்பாகப் பயன்படுத்துதலே போதுமானதெனப்படுகின்றது.

மீதிப்படி, இலக்கியச்சந்திப்பு என்பது கொழும்பிலே நிகழ்ந்தாலென்ன, ரொராண்டோவில் ஓடினாலென்ன, சென்னையிலே மிதந்தாலென்ன, பிரான்ஸிலே தவழ்ந்தாலென்ன, தான் தோன்றிமந்திகளின் மாந்தோப்பில் மாந்திக்குதிக்கும் களியென்பது என் தனிநம்பிக்கையாதலால், சொல்வதற்கேதுமில்லை.அடுத்தவன் விடாய்க்கு ஒரு கோப்பை தண்ணீரும் கொடுக்க வக்கணையற்ற இலக்கியம் தன் திமிர்த்த நானுக்கும் அடங்காவிடாய்களுக்கும் சொட்டு நிரப்பமட்டுமே உத்தமப்படுவது இலக்கியசந்திப்பு.



என் கருத்து; திணிக்கவில்லை; ஆனால், இப்படித்தான் விமர்சனபூர்வமாக அணுகமுடிகின்றது; நான் விடுமுறைக்காக அப்போதும் போகவில்லை; இப்போதும் போகவில்லை; இனிமேல் போகமாட்டேன் என்று அறிக்கையும் விடப்போவதில்லை; இலங்கையிலே முதலீடிடக் கையேதும் நிதியுமில்லை. அதற்காக இத்தனை நாள் புலிகளை நோக்கி நாவற்கிளை சாய்த்துக் கையைக் காட்டிக் கொண்டிருந்துவிட்டு அடங்கிய இந்தியதேசியப்புளிகளைப்போலவோ, மாற்றுக்கருத்துக்கு மாற்றுடையில்லாமல், இன்னமும் செத்தபுலிவாலிலே வரியிலே சிதிலம் சுரண்டி இன்னமும் 'முன்னைய புலி உறுப்பினர்' அடைப்பம் பெயர் முன்னிடும் பசித்த காயசண்டிகைகளைப் போலவோ விற்றிருப்பவர்கள்போலவோ சொல்கட்சி சார்ந்து சாயாது பந்தாடிக்கொண்டிருக்கவும்போவதில்லை.

இயன்றவரை கடந்த ஈராண்டுகளாக நானும் இப்படித்தான் இலாயக்கற்றவனென எஃதெப்படியோ நமக்கென்னெண்டிட்டுண்டிருமென்று தவிர்த்துக்கொண்டிருப்பேன். எப்படியாவது, எங்கேனும் உள்ளே ஓர் அச்சிலிசுக்குதிநரம்பு மேதமையாக இழுத்துக்கொள்ளும் ;-)

நாம் நிற்றல் பெரும்பான்மையற்ற பொழுதெல்லாம் உண்மையிலே பேச்சின்றியிருப்பது பெருநிம்மதி... என்ன, 'பேசவேண்டிய நேரத்திலே பேசாமல் விட்டுவிட்டோமே' என்று பிறிதோர் அவப்பொழுது மீள்தோன்றி நெருங்காலம் நெருக்கியறுக்கும். அதனாலே, அச்சிலிச்சுக்குதிநரம்பு நெம்ப ஆடவேண்டியதாகின்றது :-)

அவ்வளவே.

Saturday, September 04, 2010

பலே பாண்டியா ஸாங்ஸ் டவுண்லோட்டு பண்ண


































நல்ல படம்.
நல்ல நகைச்சுவை; நகைச்சு வை
கொஞ்சம் நீளம்.
ஹீரோ ட்ரிபிள் ஆக்ட், கதாநாயகி, காமெடியன் டபிள் ஆக்ட், சைட் ஹீரோ-ஹீரோயினுக்கு ஒண்ணரைப்பாட்டு.
ஸாரி, ரிவியூ கொஞ்சம் லேட்டு.
ஹீரோவ தமிழ்ப்படவுலகம் பொதுவிலே இன்னமும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று டவுண்லோட்டு பண்ணின மூவிய விட்டு வெளியே வந்தபின்னால் இன்னமும் ஆழ்ந்த துயரத்தோடும் கவலையோடும் ஏக்கத்தோடும் தும்மலோடும் (ஏசி இல்லீங்க; தட்டின தூசு) எண்ணவைக்கும் படம்.

மறக்காம நம்ம குரூப் உங்க சூப்பர்கருத்துக்கள பாராட்டி எழுதுங்க.
காப்பி பண்ணி பத்திரிகை சஞ்சிகைக்கு அவுங்களே டீ பண்ணமுன்னாடி அனுப்புங்க.
தமிழ்மணம், தமிழிஷ், வர்ர போவுற சட்டசபை, மிட்டேர்ம் எலெக்சனுல பிளஸ் ஓட்டு போடுங்க..
காலைப் புடிச்சி கையைக் கடிச்சி கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.
09.05.2010

Friday, June 25, 2010

தமிழ்ப்பதிவுலகின் அதி(சுய)விளம்பரப்பிரியர் யார்?

எதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்!

"தமிழ்ப்பதிவுலகின் அதி(சுய)விளம்பரப்பிரியர் யார்?" என்று கேட்டால், யாரைச் சொல்வீர்கள்?

Wednesday, May 19, 2010

செம்மொழி மகாநாட்டுப்பாடல் வெளியீட்டுவிழா விழியம்





செம்மொழி மகாநாட்டுப்பாடல் வெளியீட்டுவிழா அண்மையிலே நிகழ்ந்தது இதுபற்றிய மேலதிக செய்திகள், விழியங்களை யூரியூப் தளத்திலே காணலாம்

Wednesday, April 28, 2010

வேலியிலோடும் விஷப்பாம்பைப் பிடிச்சு வேட்டிக்குள்ளே ஆட்டுவது

நம் இரத்தத்தின் இரத்தம் உண்மைத்தமிழன் அண்ணன் அசுரனுக்குப் பணிவாகப் பதில் சொல்லப்போனதிலே, ஆண்டுக்கொரு வரும் பதிவுத்திருவிழாவிலே நான் மீண்டு(ம்) ஒரு முறை வசந்தமண்டப உற்சவநாயாக்கப்பட்டிருக்கிறேன். அடுத்தவர் புரட்சியாளராக, ஆரேனும் தர்மசத்திரத்தகதி, காப்பரேட்டு, கவ்வாத்து, காவாலி ஆகியே பில்போர்ட் பிரமாண்ட போஸ்ரரிலே குத்துமன்னையோடு ஆகவேண்டுமென்பது கோலிவுட்டுக்கோழிகள் கிளறுவிதியென்பதாலே, என்னைப்போன்ற அக்கால(கண்ட) நகைச்சுவைநடிகரையெல்லாம் அபூர்வசகோதரர்கள் வில்லன், அம்பனாக்கி அம்பாரியிலே ஏத்தியிருக்கின்றார்கள்.

செம்மொழியால் எழுத்துருவரையும் இரத்தத்தமிழன் பின்னூட்டப்பெட்டியோ பதிவில் விட்டாலும் பதிலை,
----------------------
We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

* Describe what you were doing when you got this error.
* Provide the following error code and additional information.

bX-6rscy0
---------------------

என்று உதைத்துத் தள்ளுகிறது. இப்பெயரிலிவேதாளத்துக்கே முருங்கைமரமேறி அலுத்துப்போனதால், முருங்கைமரத்திலேயே விக்கிரமாதித்தன் கேள்விக்குப் பதில் கீழே கிளையிற் தொங்குகிறது.

"இப்படியான வம்புகள்தான் வேண்டாமென்று அஞ்ஞானம் பீச் மரத்துக்குக் கீழே பனிவிழ வந்து என்பாட்டுக்கே போய்க்கொண்டிருக்கிறேன்; விடுங்களேண்டா; எதுக்குத் திரும்ப பதிவுக்கொரு புள்ளி தந்து குருதிப்புனலோட ஆரைசுத்தி வட்டமடிக்க வைக்கிறீர்கள்?" :-(


/"அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை."

"அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் 'வீராங்கனை' பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது."

"/

உண்மைத்தமிழன் எதுக்கு இப்படியெல்லாம் கீரனுக்குக் குளத்திலே தோன்றின இலையாட்டம் பாதி உண்மைத்தமிழனாகவும் மீதி உன்மத்தத்தமிழனாகவும் போஸ்டுகிறீர்கள்? ;-)


நாய் மாதிரி சனங்களெல்லாம் ஆயிரக்கணக்கிலே போன காலத்தையும் கடந்தபின்னால், "தமிழச்சியா? லீனாவா? பெண்ணியமா? புண்ணியமா?" என்றெல்லாம் விதண்டாவாதம் செய்வது பதிவுலகிலும் அதிலே பிடுங்கிப்பிழைக்கும் பதிப்புலகிலும் புரட்சிச்செம்மல்லர்களாக்கலாம். ஆனால், அன்றைய பாட்டுக்கு நிம்மதியைத் தரப்போவதில்லை. மனுசனே சாணியாக மிதிக்கப்பட்டிருக்கையிலே யோனி என்று எழுதுவதே பெண்ணினத்தை உய்வித்துவிடுமென்றால், அப்படியேயாகட்டும். சொல்வதற்கேதுமில்லையென்றில்லை; சொல்வதற்கு ஈடுபாடில்லை.

இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்த மட்டும் இங்கே:

திரும்பத் திரும்ப -/பெயரிலி. என்ற கிழட்டுமாட்டைத் தமிழ்மணம் என்ற நெட்டைப்பனைமரத்திலே கட்டிப் பதிவுப்புல்மேயாதீர்கள். -/பெயரிலி.யோடு தமிழச்சி சண்டைபோட்டதாலேதான் தமிழ்மணம் தமிழச்சியை நீக்கியது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வதாலே நீங்கள் பொய்த்தமிழனாகவே உங்களை நிறுவமுடியும்.

எனக்கும் தமிழச்சிக்கும் ஏழெட்டுப்பரம்பரைகளாக நிலத்தகராறோ, புலத்தகராறோ இல்லை. தமிழச்சிக்காக வாளெடுத்த புரட்சிச்செம்மல்களிலே பாதிக்கும் எனக்கும் முன்னரே ஆயிரத்தி முப்பத்தியிரண்டு புள்ளி நான்கு ஆறு எண்ணிக்கை தகராறு. மீதியிலே பாதிக்கு தோழரோடு போஸ் கொடுத்தால், நாமும் புரட்சிச்சிங்கங்கள் அவரசம். மிஞ்சியிருக்கும் காற்பகுதி குறைந்தபட்சம் என்ன சொல்லவருகின்றேனென்று என் குதறிய கொடுந்தமிழையும் கொஞ்சம் நோண்டிப் பார்த்தபிறகு பேசியிருக்கலாம். தமிழச்சி டவுசரைக் கழட்டுவேனெனக் கைதட்டும் தோழர்ச்செம்மல்களுக்கு 'கழட்டினாலென்ன? காபரே ஆனாலென்ன?' என்று திரும்பிக்கேட்டால்மட்டும் பெண்ணியக்காவாலித்தனம் ஆண்குறிகளிலே வியர்த்துவிடுவது தமிழகமேடைகளிலும் இலக்கியவிழவுழவுலகிலுமே சாத்தியம். 

நிற்க; தமிழச்சி பெண்ணியப்புரட்சியிலே யோனியைப் போட்டதற்காகத் தமிழ்மணம் நீக்கியதாக நீங்களெல்லோருமே திரும்பத் திரும்ப உருப்போட்டுக்கொண்டிருந்தால், உங்கள் விருப்பம். ஆனால், தமிழச்சியே, "ஒழுங்காக (ஒத்தி & ஒட்டி) அனுப்பிக்கொண்டிருந்தபோது, எவரும் வாசிக்கவில்லை; இப்படியாகத் தலைப்புகளைப் போட்டாலே வாசிக்கவருகின்றார்கள்" என்று சொல்லிப் போட்டாரென்று என் கடுகுமூளைக்கு ஞாபகம். இரத்தத்தின் இரத்தமே, அத்தோடு சண்டைபோடும் உடன்பிறப்புகளே, நடிகை போஸ்ரர்கள் மார்பு தெரியப்போடாத மீதிக்காலங்களிலே பெண் ஈய(த்)தோழர்களாகப் பிறப்பெடுக்கும் புரட்சிச்செம்மல்களே, கொஞ்சம் பதிவுகளைக் கிண்டிப்பாருங்கள். இப்படியான நிலை ஒரு தவறான முன்னுதாரணமாக வேண்டாமென்றுதான் தமிழ்மணம் -கேட்டுக்கொண்ட பிறகு - நீக்கியதாக எண்ணம். இதுக்கு மேலே கிண்டவோ, தோண்டவோ, அடிமுடி, மேல்மூடி காணவோ எனக்கு ஈடுபாடில்லை.

அவ்வப்போது, நாளொரு திரைப்படம், பொழுதொரு புரட்சியாக பதிவர்கள் பெருகி, அவர்கள் பதிப்புலகிலேயும் கால்பரப்பி ஜன்மசாபல்யமடையவும் இப்பிறப்பின் பேற்றினை முற்றாகப் பெறவும் வாழ்த்துகிறேன்.

யாழி சுழித்ததால் தமிழ்ச்சிறுகதை வளரவுமில்லை; யோனி பொறித்ததால் தமிழ்க்கவிதை வளரவுமில்லை. ஆக, நம்மவாவினதோ நம்மவர்களினதோ 'படைபூ' ஆச்சேன்னு போஸ்ரர் ஒட்டிக்கொள்வதையும் அதைக் கிழித்துக்குதறுவதையும் தொடர்ந்தும் செய்து தமிழிலக்கிய உலகிலே புரட்சியும் பொங்கலும் ஓங்கச்செய்க. நானென்ன சொல்ல இருக்கு? ஆனால், திரும்பத் திரும்ப உங்கள் புரிதல்களையும் விழைவுகளையும் என் செய்கைகளாகவோ நோக்குகளாகவோ நிறுவமுயற்சிக்காதீர்கள்.

உண்மைத்தமிழன், இப்போது, இங்கே யார் யார் பின்னூட்டமிடுவார்கள் என்ற பட்டியலை உங்களுக்குத் தனிப்பட அனுப்பி வைக்கவா?  அச்சொட்டாக, அப்படியே காண்பீர்கள்; உங்கள் அப்பன் முருகன் தன் வல்வேலால் உங்களையும் என்னையும் தமிழக இலக்கிய, புரட்சி, உலகசினிமாதன் கீச்சுநாயகர்களிடமிருந்து காத்தருளட்டும்.
----------------

அ(வ)சம்பந்தமான இடுகைகள்
1. தமிழச்சி மீதான சொல்வன்முறைகளும் தமிழச்சியின் கருத்துச்சறுக்கல்களும்

2. மாசிலா, இரயாகரன், தமிழச்சி இன்னார் பிறர் & புரட்சி

3. கொன்றால் பாவம்; தின்றால் போச்சு; இதுதான் என் கட்சி

4..

Tuesday, April 27, 2010

அவலநாடகத்தின் உச்சக்கட்டம்: நவரசநாயகனின் தீவட்டியாளர்

பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி முதலமைச்சரைச் சந்தித்து வேண்டுகோள்

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்

தூ!

தானாகத் 'தனிப்பெருந்தமிழர்தலைவ'னென தன்னூடகங்கள் தள்ளியுயர்த்தாமல் பெயரெடுத்துக்கொள்ளமுடியாத உங்கள் நவபார்ப்பனியநாயகனை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழர்தலைவன் என்று நிறுவ உங்களுக்குப் பிரபாகரனின் பெயரை நவபார்ப்பனியநாயகனின் பெருவிரலிலே ஊடகங்களறிய தமிழ்மக்கள்முன்னாலே மிதித்துக்காட்டவேண்டுமில்லையா? ஊடகங்களைக் கையிலே வைத்தாடியபோதும் சாத்தியமாகாத அந்நிலைக்கு, பிரபாகரன் தாயை அவர் இறைஞ்சுவதுபோல தலைகுனியவைப்பது ஒன்றுதான் இன்றைக்குச் சாத்தியமாக்கப்படக்கூடியதில்லையா? வரிகளுக்கிருமுறை உழற்றும் சுயமரியாதை என்ற பதத்துக்குக் கொஞ்சமேனும் மரியாதையிருப்பின், அவ்வயோதிபரை விற்காமல், விலைபேசாமல், அவருக்குரிய சுயமரியாதையுள்ள (காலில் விழும் அச்சுயமரியாதையல்ல) மூதாட்டியாகச் சாகவிடுங்கள்.

எந்நாட்டுவீதியிலே ஏதிலியாய்ச் செத்துப்போனாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசுக்குச் சாமரம் இன்னும் தமிழகத்தின் நிழலிலே தன்மரியாதைகெட்டிடப் பார்வதி அம்மையாரை மீண்டும் ஒதுக்கக்கூடாதென்று அவரின் காப்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களைக் கூடிக்கொன்ற காயமும் குருதியும் ஆறமுன்னால், கூரையும் கூறையும் குரவையுமிட்டு ஓலம் மறைத்து ஒய்யாரஞ்செய்யும் செம்மொழிமகாநாடென்ற விமரிசைக்கூத்தாட்டத்தினையும் தமிழிணையமகாநாடென்ற விளம்பரக்குரங்காட்டத்தையும் புறக்கணிப்போம்.


Monday, April 19, 2010

அத்தோடு இத்தும் வர்து

இவ்விரு "மகாநாடு மறுப்போம்" பதாகைகளையும் தம் வலைப்பதிவுகளிலே நிரந்திரமாகச் சேர்த்துக்கொள்ளவிரும்புகின்றவர்கள் என்னிடம் கீழிறக்கிக்கொள்ள அனுமதி கேட்டத்தேவையில்லை.

Friday, March 12, 2010

நவநாவலந்தீவு மணிமேகலர்


அடங்காப்பிள்ளையெல்லாம்
அன்றலரக் காத்திருந்து
எல்லோர்க்கும்
அச்சாப்பிள்ளை வந்தார்
பிட்சாபாத்திரமாய்

கச்சாப்பொருள்:
கார்ல் மார்க்ஸ்

Tuesday, February 23, 2010

பக்கங்களைப் புரட்டப் புரட்ட, புரட்டு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கனல் எரிகிறது

Layers of Lies & lairs who lay them

"புரட்டுலைன் சிறப்பிதழின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, புரட்டு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கனல் எரிகிறது. என்ன மாதிரியான ஒரு காலனை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்."
பொதுமக்கள், சொந்தப்பிழைப்புதன் நாளாந்த வாழ்போக்கிலே சங்கம் வைத்துத் தம்பிழைப்பு நடத்த நேரமில்லாதவர்கள்

Friday, February 19, 2010

மாதவராஜ் என்ற சிபிஐ(எம்) பாசிச வலையடியானுக்கு

வழக்கம்போல தீராதபக்கவாதம் என்ற பதிவினை வைத்திருக்கும் சிபிஎம் பாசிசவாதி இலவச ஆலோசனை சாத்தூர் முகாம் குந்திலிருந்து கொண்டு தருகிறார்.

/ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்./

கடலுக்கு அந்தப்புறம் சில நாய்கள் வண்டியேறி, கல்லடிபட்டுச் செத்ததிலே உமக்கென்ன தீடீர் கரிசனை தோழர்? இன்றைக்கு நீர் சார்ந்த மார்க்ஸிசப்போர்வை போ(ர்)த்த பாசிசவலதுசாரிக்கட்சி மேலிடம் இரண்டு வரி போடச் சொல்லி அனுமதி தந்ததா? அதிகாரத்துடன் கட்டளையிட்டதா?

ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்புக்குக் கொண்டு வரப்படும்போது, எங்கே இந்த மயிராண்டிகளும் அவர்களின் கட்சிக்குண்டர்களும் தமிழ்மணத்திலே + குத்திடும் அக்கா பொண்ணு, அண்ணா பையன்களுக்கும் போனார்கள்? மிஞ்சிப்போனால், மூணுமாசத்துக்கொரு தடவை விலக்கு வந்து வழவழாவென்று "அஹோ! கேளும் பிள்ளைகாள், ஈழத்தமிழர்களே!" என்று தொடங்கி இனவாதத்தை அடக்குமுறையை ஒத்துக்கொண்டிருங்களென்றோ, ஸ்ரீலங்காவிலே அனைவரும் இரவுபகலாய் மகிழ்வாய் *த்துக்கொண்டிருங்களென்றோ இலவச அட்வைசு வினைல் ரெக்காட்டு (உ)டான்சு ஆடிக்காட்டிக்கொண்டிருந்தீர்கள்.

வழக்கம்போல, சிங்களத்தோழர் ஜேவிபி வாழ்க என்றோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ராஜபக்ஷ தோழர் வாழ்கவென்றோ கூவிவிட்டு அடங்காமல், இன்றைக்கு எதற்காக ஈழத்தமிழருக்காக அழுது உருகி நாடகம் காட்டுகின்றீர்கள்? நந்திக்ராம் மக்களுக்காக ஒரு சொட்டு உதிர்க்காத உங்களுக்கு எதற்கு இன்றைக்குத் திடீரென்று ஈழத்தமிழனின் பிரதிநிதித்துவம் பற்றிக் கவலை? அதே அரிதாரக்கவலையைத்தானே முந்தநாள் நீங்கள் கேள்வி கேட்கும் திருக்குவளை முத்துவேல் கருணைநிதி முகம் பொங்க 10^10ஆம் தடவை ராஜபக்சவுக்கு விசிலடித்து வேண்டி கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்காமலே கேட்கிறார்! கேட்கிறவனையும் பார்க்கிறவனையும் எத்தனை நாட்களுக்குத்தான் நீங்களெல்லோரும் கேனையர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள்?

இத்தனைநாள் வாயை மூடிக்கொண்டு எல்லோரும் ஒன்றாயிருக்கத் தத்துவம் பேசிவிட்டு இப்பொய்க்கண்-நீரெல்லாம் இப்போது ஈழத்தமிழருக்காக உதிர்க்காமலிருந்தாலே போதுமானது. சி பி ஐ (எம்) குண்டர்கள் (அதிகாரமமைக்கும் தோழர்கள் என்று வாசிக்கவும்) இதே கருணாநிதியுடன் தேர்தலிலே கூட்டாடவில்லையா? ஈழத்தமிழர்கள் சாகும்போது கூத்தாடவில்லையா?

ஈழத்தமிழருக்கெதிரான ஸ்ரீலங்கா ஆதரவு இந்தியாவின் செயற்பாடுகளை நீர், தமிழ்ச்செல்வன், இந்து ராம், ஆதவன் தீட்சண்யா எல்லோரும் எதுநாளும் விமர்சித்ததில்லை - நியாயப்படுத்துதலன்றி; இதற்குப் பின்னாலும் எந்தப்புலியைக் காட்டிக்கொண்டு பின்னாலே பதுங்கப்போகின்றீர்கள்? பாசிசத்தின் உச்சத்திலே இணையத்திலே கைதட்டல்களுக்காகப் பேசுங்கள். உங்கள் மனைவியின் தங்கையும் தம்பியரும் கட்சித்தோழர்களும் உச் கொட்டி மகிழ்ந்துவிட்டு சாத்தூரின் தோழர்தான் மானிடத்தைச் சாகாது காக்கும் மகாத்மா என்று சொல்லிவிட்டுப் போகட்டும். மானிடத்தைத் தீராது சீரழிக்கும் பக்கவாதங்களின் உதிரும் சிறகுகள் + மயிருகள் + சருகுகள் சிலவே நீரெல்லாம்.

ஈழத்தமிழர்களை இதுவரைநாள் நீங்கள் காக்கவில்லை; இனியும் காப்பதுபோல அவிழ்த்துப்போட்டு ஆடவும் வேண்டாம். வாயை மூடிக்கொண்டிருந்தாலே கொஞ்சமேனும் தார்மீகம் மிஞ்சும். வேண்டுமானால், உங்களின் பொங்கலிடும் குழந்தைகள், யாரேனும் மூக்குமுட்டக் குடித்தவன் கண்மூடி ஓட்டும் வாகன்விபத்திலோ வேட்டைநாய்களின் கடிகளிலோ சாகும்போது வேண்டுமானால், என்னிடம் வாருங்கள். வேட்டையாடுதலை விளையாடுதலென்று அச்சிடுவதாலேமட்டும் நிரூபிக்க அலையும் வெறிநாய்களுடன் வெகுவாகக் கூடி எவர் தெருவினதோ விளக்குக்கம்பத்தில் ஒன்றாக ஒண்டுக்கடிப்பது எப்படி என்று இலவச ஆலோசனைமுகாமிட்டு ஒரு நாள் முழுக்க அறிவுரைக்கிறேன்.


நேற்றுவரை வாயை மூடிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசுசார் புலம்பெயர் இலங்கைத்தமிழர்கையிருப்பிலே உலகம் சுற்றிய ஜெயமோகன் என்ற வலதுசாரிபாசிசநார்சிசவாதி உலோகம் எழுதுவதற்கும் ஈழத்திலே செத்தவர்கள் கதையை விற்பதற்காக எழுதிய என்டிரிவி நிருபரை பத்ரிகாத(க)ர்மத்தின் தலைவன் என்பதாக உலம்பிப் பதிவிடுவதற்கும் உங்களின் சிறுவரிப்பெருங்கருத்தா(ட்)டல்களுக்கும் எவ்விதமான வேறுபாடுமில்லை.


உங்களுக்கெல்லாம் நீங்கள் சாணி உருண்டையாக உருட்டி விவாதிக்க ஏதேனும் கருப்பொருள் உருப்படியாக வேண்டுமென்றால், உங்கள் குடும்பங்களிலே கருக்கட்டியிருக்கும் பிரச்சனைகளிலே விவாதித்துக் கொள்ளுங்கள்; அல்லது கருக்கட்டவைத்துக் கொல்லுங்கள். எதுக்கு இன்றைக்கு மட்டும், உங்களுக்குக் கொம்பு முளைக்க நாம்? இதற்கான நேரத்தைக் குடும்பத்தை விட்டு ஓடிப் போய் ஒளித்துக்கொண்ட கட்சியின் மத்தியகுழுத்தோழர்களைத் தேடுவதிலே செலவழிக்கவேண்டுமென்று பரஸ்பர நலம் கருதி நாமும் உமக்கும் உம்மைச் சார்ந்து வாசிக்காமலே தமிழ்மணத்திலே + குத்தும் இந்துவின் வளர்ச்சி கண்டு கண் துளிர்க்கும் நீர்(த்த)கட்சித்தோழர்களுக்கும் கருத்தினைச் சொன்னவர் சிங்களப்பெண்ணா, முஸ்லீம் பெண்ணா என்றுகூட வித்தியாசம் தெரியாமல் மாமா சொன்னாரே என்று தமிழாக்கி ஈழத்தமிழர்களுக்கு ஒற்றுமை அறிக்கை விடும் நும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

கைதட்டுத்தான் உமக்கெல்லாம் முக்கியமென்றால், சந்துமுக்கிலே சராயைக் கழற்றி விட்டுக்கூட ஆ(ட்)டலாமே? எதுக்கு ஈழத்தமிழன் தோலிலே இன்னொரு தடவை செருப்பினைத் தைத்து உலாவரும் எண்ணம்?

"நீரு யாருய்யா எவனுக்கு எவர் பிரதிநிதித்துவம் பண்ணுவது படுத்துவதென்று திறந்த விவாதம் நடத்த அறிக்கைவிடுவதற்கு? மாமனா? மச்சானா? தோழனா? ஆண்டையேதானா? தண்டத்தே தம்தொழிலாய் தத்துவ வித்துவ தகவற்ற ஆலோசனை மொத்த விற்பனையிலே தர ஆஜராகி லைனுல மொதலுல வந்துட்டானுங்க. முதலிலே ஒழுங்காக உமது கட்டுக்'கோப்பு'க்கட்சிக்குள்ளே, உமது பதிவுப்பின்னூட்டத்திலே திறந்த விவாதத்துக்கும் வெறுங்காற்றுக்குமாவது இடமிருக்கின்றதா என்பதைப் பாரும்" என்று, -என்னைக் கேட்டால்- இலவச சவப்பரிசோதனையாலோசனை சொல்வேன்.

இதையும் வழக்கம்போலவே கட்சிசார்பிலே விடாமல் பின்னூட்டத்திலே அமுக்கிவிடுவீரென்பதாலேயே, இங்கே போட்டுத் தொலைக்கவேண்டியிருக்கின்றது.

கட்சி நமக்குச் சாப்பாடு போடுவதில்லையாதலால், வேலை அனுமதிக்கும் நேரம் கிடைக்கும்போது, இவ்விடுகை தொடரும்.

இவண் இவன்
..... காலங்காலத்தாலே சவுண்டு வுடும் சாவு கெராக்கி(ங்க)

பிகு: (இழவு, தமிழ்ப்பதிவர்களுக்கு கூற்றுமறுப்பினைப் போட்டால் மட்டுமே இடுகை சரிவரச் சமித்துக் கழிறது) இது தனிப்பட்ட தாக்குதலென்று காந்தீயவாதிகள், கருணாநிதிநேயர்கள், தான்தோன்றிமனிதநேயர்கள், வரட்டுக்கம்யூனிச+கம்யூனிட்டிசக்காவலர்கள், கூகுள்_சுப்பன்கள் கருதினால், அதே. அவ்வளவுதான்; பசப்பும் பசலையும் நீங்கி நீங்கள் சுகமும் சுகரும் பெற என் உளம் கடிந்த வாட்டு.