பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி முதலமைச்சரைச் சந்தித்து வேண்டுகோள்
பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?
பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்
தூ!
தானாகத் 'தனிப்பெருந்தமிழர்தலைவ'னென தன்னூடகங்கள் தள்ளியுயர்த்தாமல் பெயரெடுத்துக்கொள்ளமுடியாத உங்கள் நவபார்ப்பனியநாயகனை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழர்தலைவன் என்று நிறுவ உங்களுக்குப் பிரபாகரனின் பெயரை நவபார்ப்பனியநாயகனின் பெருவிரலிலே ஊடகங்களறிய தமிழ்மக்கள்முன்னாலே மிதித்துக்காட்டவேண்டுமில்லையா? ஊடகங்களைக் கையிலே வைத்தாடியபோதும் சாத்தியமாகாத அந்நிலைக்கு, பிரபாகரன் தாயை அவர் இறைஞ்சுவதுபோல தலைகுனியவைப்பது ஒன்றுதான் இன்றைக்குச் சாத்தியமாக்கப்படக்கூடியதில்லையா? வரிகளுக்கிருமுறை உழற்றும் சுயமரியாதை என்ற பதத்துக்குக் கொஞ்சமேனும் மரியாதையிருப்பின், அவ்வயோதிபரை விற்காமல், விலைபேசாமல், அவருக்குரிய சுயமரியாதையுள்ள (காலில் விழும் அச்சுயமரியாதையல்ல) மூதாட்டியாகச் சாகவிடுங்கள்.
எந்நாட்டுவீதியிலே ஏதிலியாய்ச் செத்துப்போனாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசுக்குச் சாமரம் இன்னும் தமிழகத்தின் நிழலிலே தன்மரியாதைகெட்டிடப் பார்வதி அம்மையாரை மீண்டும் ஒதுக்கக்கூடாதென்று அவரின் காப்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழத்தமிழர்களைக் கூடிக்கொன்ற காயமும் குருதியும் ஆறமுன்னால், கூரையும் கூறையும் குரவையுமிட்டு ஓலம் மறைத்து ஒய்யாரஞ்செய்யும் செம்மொழிமகாநாடென்ற விமரிசைக்கூத்தாட்டத்தினையும் தமிழிணையமகாநாடென்ற விளம்பரக்குரங்காட்டத்தையும் புறக்கணிப்போம்.
5 comments:
அகதி நாயே லூசு பொத்திகிட்டு போடா உன்னால முடிந்தான்ல் கூட்டிகிட்டு போய் வைத்தியம் பாரு இல்லை என்றால் பொத்திகிட்டு போடா பரதேசி
அடுத்தவன் பிணத்திலே தர்ப்பைப்புல்லும் தவிசும் பண்ணுகிற பிறவிகளைவிட அகதியாகப் போதல் ஒன்றும் கெடுதலில்லை; அகதியாகப் போகவேண்டிவந்தாலும் இந்தியப்பண்ணையார்தேசத்திலே காலடிவைக்கப்போவதில்லை. உம்மாலே முடியாதென்று திருப்பி அனுப்பியபிறகு என்னால் முடியுமா என்று கேட்கும் தினவு பண்ணையார்வீட்டுச்சுதேசிகளுக்குத்தான் ஆகிவரும். நான் சுதேசியல்ல பரதேசிதான். அதை நீர் சொல்லியா மற்றோர் அறியவேண்டும்? ஒரு இத்தாலியப்பரதேசி நாட்டை ஆட்ட ஆடிக்கொண்டிருக்கும் பண்ணைத்திண்ணைமொன்னைச்சுதேசிஜென்மங்களுக்கு இந்த வாய்க்கொழுப்புமட்டும் போகவில்லை :-)
//பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம் //
சுப.வீரபாண்டியன் பேசும் போது இலக்கணமாக பேசுகிறார். ஆனால் செயல் :(
இன்னும் 'வீர'பாண்டியன் தானான்னு நெனைக்க எரிச்சலும் ஆற்றாமையும் தான் மிஞ்சுது. பேசாம அவரு திமுகவில் எம் எல் ஏ பதவி வாங்கி செட்டில் ஆகிவிடலாம்
சென்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் பம்மிய பம்மலிலேயே வீரபாண்டியன், வெறும் பண்டியன், இல்லை பாண்டியன் ஆகிப் போனார்.....
அரசியல் நீக்கம், மத நீக்கம் என்று எப்ப்சுவது போல, சுயமரியாதை, பகுத்தறிவு, கம்யூனிஸ்ட், எல்லாம் கருணாநிதி காலத்தில் “அர்த்தம் நீக்கப்பட்ட” சொற்கள்.....
வீரபாண்டியன் கிட்டத்தட்ட அவரின் உடன்பிறப்பு எஸ். பி. முத்துராமன் திரைப்படங்களிலே செய்யும் ஸ்டண்டுகளை, சாகசங்களை வாயாலே இப்போது செய்கிறாரெனத் தோன்றுகிறது :-(
Post a Comment