Wednesday, July 20, 2005

படிமம் - 159


Not a B-Movie Still


மெய்: '05 ஜூலை, 03 ஞாயி. 12:31 கிநிநே.
திரிபு: '05 ஜூலை, 20 புத. 12:20 கிநிநே.

Friday, July 15, 2005

கவின் - 8


A Painting & A Sculpture


'05 ஜூலை, 03 ஞாயி. 12:47 கிநிநே.


கீழே சொல்லப்பட்டது கவனக்கூற்று மட்டுமே; "கவி தை"க்கப்பட்டதெனக் கொள்ளற்க

நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள்:

பிள்ளைகள் தின்னும் புழைக்கடைமுனிகளை எண்ணி அஞ்சும் பெற்றோர்
ஆபாசப்பின்னூட்டங்கள் குறித்துப் பாசமாக கனவிலும் நனவிலும் வருந்திக்களைத்தவர்கள்
பண்பாட்டுக்காவலர்கள் எ. கலாசாரகமிஸார்

"பாலியல்வதை

திரும்பித் திரும்பத் தேர்ச்சில்லுட் செருகியும்
இத்திசை சாமி முலை எறிந்து எரியத் தினவு.
எண்ணிப்பார்த்தால், எண்ணெய்க்காப்பெல்லாம் கை
தடமிழுத்திழுத்துத் தனக்குடம் தடவிய கற்கருஞ்சிலை.
இந்திரியம் தித்தித்துத் திரியத் திரிய
தந்தம் முளைத்துத் தள்ளும் தாந்திரீகம்.
இறைவி குமரியானால், இதுதான் கஷ்டம்.


~17, ஜூலை '03 14:07 மநிநே."

இனைக் கழிப்பறைக்குள்ளே மட்டும் படிப்பவர்கள்

Thursday, July 14, 2005

கவின் - 7


Still I know no title


'05 ஜூலை, 03 ஞாயி. 14:28 கிநிநே.


தமிழ்ப்பாம்பினைத் துணைக்கழைக்கிறேன். இந்த அரூபத்துக்கு என்ன அர்த்தமென்று இன்றைக்கோ என்றைக்கோ நீரோ அல்லது கூட காட்சியகம் வந்தவரோ சொல்லித்தான் ஆகவேண்டும். இதுக்கெல்லாம், அருளின் இன்றைய பதிவினைப் பார்த்து பயந்து போய்விட்டேன் என்று அர்த்தமில்லை; அருளிடம் அடிவாங்காமலிருக்க, ஹார்வாட் முன்னால் தெரு ஓவியம் படம் ஒன்றையும் பிடித்து வைத்திருக்கிறேன். போட்டாப் போச்சு. ஹி ஹி ஹி!! சரியான வௌவாலாக்கும் நான்]

Wednesday, July 13, 2005

குவியம் - 8

முகமூடிகளின் தேடுகை

அவர்கள்
முதலில் தலித்துகளைத் தேடிக் கலைத்தார்கள்
நான் தொடங்கிப் பேசினேன்
நான் தலித் இல்லை

தொடர்ந்து
முஸ்லீங்களைத் தேடி வளைத்தார்கள்
நான் இன்னும் பேசினேன்
எனக்கு மதம் இல்லை

பின்னர்
தமிழைத் தேடி அழித்தார்கள்
நான் தொடர்ந்து பேசினேன்
நான் தமிழ்த்தேசத்திலேயே இல்லை

அடுத்து
மறையா மனிதர்களில் கறை தேடி வந்தார்கள்
நான் விடாமற் பேசினேன்
நான்தான் மனிதனே இல்லையே

கடைசியாக,
களைக்காமல் களை பிடுங்கிப்பேசுகிறவனுக்கு
புலி வரியிழுத்து வால் பூட்ட வந்தார்கள்
எனக்காகப் பேச அப்போதும் தெருவில்
கலைந்த தலித்துகள் இருந்தார்கள்
அழிந்த தமிழ்த்தேசியர் இருந்தார்கள்
வளைந்த முஸ்லீங்கள் இருந்தார்கள்
அடிபட்டும் அசையா
ஆயிரம் முழுமனிதர் நின்றிருந்தார்
முஷ்டி மடித்து முழக்கி,
"சங்கே முழங்கு!
பொங்கு மானுடத்துக்கு நன்றே வாழ்வென்று
முழங்கு வெண்சங்கே முழங்கூஉ!"

கவின் - 6


Four Paintings


'05 ஜூலை, 03 ஞாயி. 14:28 கிநிநே.

1. Self-Portrait in a Beret (Autoportrait au béret)
Paul Cézanne
1898-1900
oil on canvas

2. Madame Cézanne in a Red Armchair
Paul Cézanne
about 1877
oil on canvas; 72 x 56
44.776

3. Lullaby: Madame Augustine Roulin Rocking a Cradle (La Berceuse)
Vincent van Gogh
January 1889. Oil on canvas
48.548

4. Ravine
Vincent van Gogh
1889
52.1524

Tuesday, July 12, 2005

கவின் - 5


D'ou venons nous? Que sommes nous? D'ou allons nous? (where do we come from? What are we? Where are we going?), 1897-98, Museum of Fine Arts, Boston


'05 ஜூலை, 03 ஞாயி. 14:28 கிநிநே.மனிதர்(கள்) ஒங்க ஆத்தா ஒன்னோட பொண்டாட்டி, ஒங்க அக்கா, ஒன் மைத்துனி என விரும்பியவாறு ஒன்பது வசனங்கள் எழுதலாம். ஆட்சேபணையில்லை. ஆனால், பத்தாவது வசனம், படத்தலைப்புக்குச் சம்பந்தப்படும் வகையிலே, "இப்படியான ***** தான் ஒன்னோட #%^& ****" என்பதுபோன்றும் எழுதவேண்டுமென்று விழைந்து கேட்டுக்கொள்கிறேன். (அப்படி எழுத, தெரிந்த ஞானத்தினை ஒரு நனோமீற்றர் விரித்தாலே போதுமானது; அதிகம் எதிர்பார்க்கிறேனோ? :-( )

;-)

Monday, July 11, 2005

குவியம் - 7

தென்னையைக் கொத்திய மரங்கொத்தி வாழையும்...

இன்று மதியத்திலிருந்து தொடர்ந்து இந்த அலைஞனின் அலைகள்: குவியம் பதிவிலே தொடர்ந்து தமிழ்வார்த்தைகளிலே என் மனைவி பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டுக்கொண்டு வருகிறது. முதலிலே மெக்ஸிக்கோவிலிருந்து இயங்கும் alestra (AT&Tஇன் பகுதி) ஊடாக முகக்காவலோடு (proxy)வந்தது. பெயரின்றி போடுவதைத் தவிர்த்தபின்னால், மனிதனாகக் கூர்ப்புப்பெற்று வருகின்றது. குறிப்பாக, பெயரிலி என்று போட்டால், ஆளடையாளம் தெரியாது போய்விடுமென்று நினைத்துப் சொந்தப்பெயரைச் சுருக்கமாகப் போட்டே அர்ச்சிக்கின்றார் (இப்படியாவது, தமிழிலே அர்ச்சனை நடந்தாற் சரி ;-)).


VISITOR ANALYSIS
Referring Link Hidden Referrer
Host Name host-207-248-240-118.block.alestra.net.mx
IP Address 207.248.240.118
Country Mexico
Region Chihuahua
City Ciudad Juarez
ISP Lacnic
Returning Visits 7
Visit Length 1 hour 31 mins 57 secs
VISITOR SYSTEM SPECS
Browser Firefox 1.0
Operating System Windows XP
Resolution 1024x768
Javascript Enabled

Navigation Path
Date Time WebPage
11th July 2005 14:45:45 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 14:46:26 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 14:47:54 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 15:05:40 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 16:00:19 wandererwaves.blogspot.com/2005/07/45.html
www.thamizmanam.com/tamilblogs/userpanel.php
11th July 2005 16:00:51 wandererwaves.blogspot.com/2005/07/45.html
www.thamizmanam.com/tamilblogs/userpanel.php
11th July 2005 16:01:22 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 16:17:42 wandererwaves.blogspot.com/2005/07/14.html
Hidden Referrer


இதுதான் சிக்கலே; என்னைப் பார்த்து அங்கம் அவயம் சொல்லித்திட்டினால், "சர்தான் போடா, கூவத்துக்குப்பையே" என்று என்பாட்டுக்கு அடுத்த பதிவுக்குப் போய்விடுவேன் என்பது தெரிந்ததால், நண்பர் மனைவியினைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். மனைவியும் கண்டுவிட்டு நண்பர் தனக்குத் தெரிந்த பதங்களிலே மட்டும் ஏதோ சொல்லியிருக்கின்றார் என்று விட்டுவிட்டுப்போய்விடுவாள். அடுத்ததாக, என் அக்காவை அழைக்கத்தொடங்குவார். என்ன சிக்கலென்றால், இந்தப்பதிவு, நானும் என் மனைவியும் வலைப்பதியும் நண்பர்களும் மட்டுமே பார்த்துப்போவதென்றால், சிக்கலானதில்லை. ஆனால், இரண்டுபேரையும் சார்ந்த வலைப்பதியாத குடும்பத்தினரும் நண்பர்களும் எப்போதாவதிருந்துவிட்டுப் பார்த்துத் தொலைப்பது. வன்புணரப்பட்டவளைப் பார்த்து கற்பிழந்தவள் என்று சொல்லித் திட்டும் சமூகத்துக்குப் பயப்படும் ஆட்கள் அவர்கள். அவர்களை நோக வைக்க விருப்பமில்லாததால், பதில் எழுதுவதை சில மணிநேரங்களுக்குத் தடை செய்திருக்கின்றேன். மனிதனுக்கு நேரம் கைவசப்பட்டால் -/பெயரிலி.க்கும் இருக்காதா? :-)

பேராதனைப் பல்கலைக்கழக ராகிங் ஊடாகப் போய்வந்தவன் நான்; அக்காவைத் திட்டி என்னை முடக்கலாமென்று மனிதன் யோசித்தால், கஷ்டம். ஆக, மிஞ்சினால், கவலைப்படும் நண்பர்களினையும் குடும்ப அங்கத்தினரையும் பார்க்காதீர் என்று சொல்லிவிட்டு, வலைப்பதிவினைத் திறந்தே விடுவேன்.

ஆனால், ஆச்சரியமான விடயமென்னவென்றால், இத்தனை நாட்களும் இருந்துவிட்டு, இன்று தொடர்ந்து என் மீது பாய்வதேனோ? மாலனின் பதிவிலே பின்னூட்டம் தொடர்பாகப் பின்னூட்டம் கொடுத்ததுதானோ? :-) அடுத்ததாக, எனக்கு இந்தப்பின்னூட்டச்சொற்களஞ்சியத்தைத் தந்த மாமனிதன் என்னைப் போன்ற கருத்துநிலைப்பாடு உள்ளவர்களைமட்டுமே தாக்குகின்றார் என்றே நினைக்கிறேன். போன வாரங்களிலே சொற்களஞ்சியம் விட்ட வாலி, காலிகளுக்கும் இவருக்கும் சம்பந்தமிருக்குமென்றும் நான் நினைக்கவில்லை.

ஆனால், இப்போதுங்கூட, இந்த மாமனிதப்பின்னூட்டப்பிரச்சனையை வைத்து, அநாமதேயமாகப் பதில் எழுதுகின்ற உரிமையை எவருக்கும் மறுக்கவிரும்பவில்லை. முன்னால், இங்கு எழுதியதிலிருந்து எந்த விதமாற்றமும் என் கருத்திலில்லை.

தென்னையைக் கொத்தினால், மரங்கொத்தி கொத்திய அலகை வெளியே எடுத்துக்கொள்ளமுடியும்; வாழையைக் கொத்தினால், .... ;-)

பிற்சேர்க்கை:
நண்பர் 207-248-240-118.block.alestra.net.mx என் பழைய நண்பர், 66.57.72.203 அவர்களாகத்தான் இருக்கமுடியுமென நினைக்கிறேன். அவர் பயன்படுத்தும் பதங்களிலே ஒற்றுமை. கூடவே சில சொற்களைப் பயன்படுத்தும்போது அவர் போடும் அடைப்புக்குறி ஒற்றுமைகளும் இருக்கின்றன. [(சு)ரம்..]
வாங்க தலைவா.
என்ன இன்றைக்கு host-148-244-150-57.block.alestra.net.mx இலே வந்திருக்கின்றீர்கள்? இந்தப்பதிவிலே தொடர்ந்து உங்கள் படைப்புச்செய்திகள் பற்றி பதிவு செய்கிறேன். கண்டு கொள்ளவில்லையே என்று நீங்கள் கவலைப்படக்கூடாது.
12, ஜூலை 12:43

உயரம் - 14


Rounda


'05 ஜூன், 03 திங். 12:29 கிநிநே.
பொஸ்ரன் நுண்கலைக்கூடம்

துளிர் - 45


Da Green Monster


'05 ஜூன், 20 திங். 15:22 கிநிநே.

பொஸ்ரன் நீருயிரிக்காட்சியகம்

Saturday, July 09, 2005

புலம் - 15

ஒன்றாகிப் பலவாகிப் பலதே ஒன்றாகி

இன்று South Asia Tribune இனை மேற்கோள் காட்டி INAS உம் Hindustan Times உம் கே. ரி. இராஜசிங்கத்தின் Asia Tribune உம் India Daily இன் ஆசிரியர் கருத்தும் இன்ன பிற செய்தித்தாபனங்களும் சொல்வதாவது, "Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE) guerrilla group is providing military training to Nepal's Maoist insurgents in India's Bihar state near the Nepalese border."

வோஷிங்டன் டி.ஸி. யிலிருந்து நடாத்தப்படும் South Asia Tribune என்ற இந்த வலைஞ்சிகை அதன் செய்திகள், கருத்துகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் நலனை முன்னிறுத்திச் செய்தி வெளியிடுவதாகத் தோன்றுகின்றது. இங்கே நான் சுட்டிப் பேச முனையும் விடயத்தினை முன்னிறுத்துவதற்காக மேற்படிச்செய்தியின் முகப்பெறுமதியின்படியே, "விடுதலைப்புலிகள் நேபாள மாவோவாத கரந்தடிபோராளிகளைப் பயிற்றுவிக்கின்றார்கள்" என்றே எடுத்துக்கொள்வோம்.

அந்தச்செய்தியிலே /“The Maoists of Peru, Netherlands, Norway, France, Germany, Sri Lanka, Nepal and India participated in the meeting. The Tamil Tigers and rebels of the United Liberation Front of Assam (ULFA) were present as special invitees,”/ என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகள் என்றிலிருந்து மாவோவாதிகளானார்கள் என்பதை இவர்கள் விளக்கியிருக்கலாம். அப்படியாக ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற மாவோவாதக்குழு விடுதலைப்புலிகள் இல்லையெனில், இலங்கையிலிருந்து சென்ற மாவோவாதக்குழு எதுவென்றாவது விளக்கப்பட்டிருக்கலாம்.

அரச எந்திரத்தின் பயங்கரவாதக்கூ(ற்)றை, தேசியப்பற்று, தேசநலனென்ற குளிர்காயும் போர்வைகளின்கீழே நியாயப்படுத்துகின்றவர்கள், மக்கள்போராளிகளை, அவர்கள் எங்கே வாழ்கின்றவர்களாக இருக்கட்டும் -பீகாரிலே வாழ்கின்றவர்களாகட்டும் (sic) நேபாளத்திலே வாழ்கின்றவர்களாகட்டும் (sic), தெலுங்கானாவிலே வாழ்கின்றவர்களாகட்டும் (sic)- இன்னொரு நாட்டின் "பயங்கரவாதிகள்", தற்கொலைப்போராளிகளின் இந்நாட்டுத்தெறிப்புகளாக விகாரப்படுத்திக் காட்டுகின்றனர். அதிகாரத்திலிருக்கும் அரசுப்பிரச்சார எந்திரம் அரைத்துத் திரித்து ஊட்ட, வெறுமனே தம் விற்பனையை முன்னிறுத்தும் செய்தியூடகங்கள் பதித்துக் கொட்ட வரும் செய்திகளை நம்புகின்ற அவசரத்திலே வாழ்வையோட்டும் மக்களை இப்போர்வைமூடிகள் இத்தெறிப்புக்காட்டல்மூலம் இலகுவாகப் பயமுறுத்த முடிகின்றது. குறிப்பாக, இச்செய்திகளினை அவற்றின் மேலோட்ட வாசிப்புத் தரும் முகப்பெறுமதியோடு அப்படியே அள்ளி நம்பிக்கொள்ளும் வாசகர்களின் எத்தனை பேர் இச்செய்திகளின் நிரப்பப்படாத இடைவெளிகளிலே இட்டு முழுமைப்படுத்தக்கூடிய சொல்லாத சேதிகளை உணர்கிறோம்? குறைந்த பட்சம், "தீவிரவாதிகள்", "பயங்கரவாதிகள்" என்ற பதங்களுக்கிடையேயான பேதத்தினைக்கூட மழுப்பிமூடி, இரண்டும் ஒரே அர்த்தமுடையவை என்பதுபோலக் காட்டி, ஒரு கருத்திலே கூர்மையாக, தன் நிலை மாறாது நிற்கின்றவரைக்கூடப் பயங்கரவாதி என்று வாசிப்பவர் எடுத்துக்கொள்ளும் அவலநிலையை இப்படியான மேட்டிமைத்தனமான செய்தியாளர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இதன்மூலம், தம்மிஷ்டப்படி நிலை மாறக்கூடிய மிதவாதிகளல்லாத (சந்தர்ப்பவாதிகள் என்றும் வாசித்துக்கொள்ளலாம்) எவருமே பயங்கரவாதிகள் என்று ஓரங்கட்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும்போகும் நிலைமையைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சவுத் ஏசியா ட்ரிப்யூன் தன் செய்தியிலே நேபாள மாவோ போராளிகளின் குறியீடுகளாக, சயனைட்டினையும் விடலைப்பருவப்போராளிகளையும் மட்டுமே உருவகித்துச் சுட்டிக்காட்டி, அப்போராளிகள் உருவாகும் காரணங்களைப் பேசாமலே விடும்போது, இவ்வூடகமும் இதுபோன்ற குறியீடுகளைமட்டுமே உருவகிக்கும் பிற ஊடகங்களும் யாரின் நலனைப் பேணுகின்றன என்பதை எத்தனை பேர் யோசிக்கின்றோம்?

இச்செய்தி ஊடகங்கள், ஒரு மேல்நிலைத்தர்க்கரீதியான தளத்திலே இப்போது நேபாள மாவோ தீவிரவாதிகளுடன் இணைத்துப்பேசும் விடுதலைப்புலிகளுக்கும் இன்ன பிற ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசு இலங்கை அரசுக்கெதிராக ஆயுத உதவியும் பயிற்சியும் ஒரு கட்டத்திலே தாம் வழங்கியதையோ, இலங்கை அரசுக்கெதிராகச் சமவளவிலே ஆட்களைக் கொன்று தள்ளிய ஜேவிபியின் தலைவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிப்போக உதவியதையோ, இன்னொரு தெற்காசிய நாடான மாலைதீவுக்கெதிராக புளொட் இயக்கத்தினைக் கூலிப்படையாகப் பயன்படுத்த உதவியதிலே பங்கெடுத்ததையோ, கிழக்குப்பாக்கிஸ்தானின் சாந்திபாஹினி போராளிகளை மேற்குப்பாக்கிஸ்தானுக்கெதிராகப் பயன்படுத்தியதையோ, பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலே சிறிய அளவிலான சேதமேற்படுத்த முயன்றதையோ பேசுவதில்லை (இதேபோல, ஒவ்வொரு தென்னாசிய நாடும் தன்னையடுத்த நாட்டிலே சமநிலையின்மையை ஏற்படுத்த முயன்ற உதாரணங்களுண்டு); இன்னொரு கீழான உணர்வுநிலைத்தளத்திலே, "உதவிய இந்தியாவின் கரத்தினைத்துண்டித்த ஈழத்தமிழர்" என்ற வகையிலே பேசுவன. ஆனால், எந்நிலையிலும் இந்த இரு தளநிலைகளையும் ஒன்றாக முன்வைப்பதில்லை; அப்படியாக வைக்கமுடியாது. வைத்தால், இவர்களின் இரட்டைநிலை மேலோட்டமாக வாசிக்கும் ஒரு சாதாரண வாசகருக்கும் புரிந்துவிடும். இப்போது, அமெரிக்காவின் தலைநகரிலிருந்து செய்தி தயாரிக்கும் சவுத் ஏசியா ட்ரிப்யூனுக்கு ஈழம்-பெரு-நேபாளம்-இந்தியா-"பிரான்ஸ்" என்ற எல்லை கடந்த "பயங்கரவாதிகளின்" இணைப்புகளும் "மாவோயிசம்" என்ற பிசாசுக்கொள்கையும் மிக இலகுவாக பயங்கரவாதப்பூச்சாண்டிக்கு ஆளாகியிருக்கும் எந்நாட்டினதும் விளிம்புநிலைசாராத/அறியாத இடைநிலைமக்களை ('மத்தியதட்டு_நெறிக்கோவைவழிபேணும்/பேணமுயலும் மக்கள்' என்றும் வாசித்துக்கொள்ளலாம்) எதிர்ப்புநிலை கொள்ளவைக்கமுடியும். இந்நிலையிலே பெயர்சொல்லாத தகவல் தந்த நேபாளப்போராளித்தலைவர் யாரென்று கேள்வியை இந்த இடைநிலைமக்கள் கேட்கப்போவதில்லை.

தேசியக்கொடியின் கீழே தேசப்பற்றென்ற பெயரிலே எந்த நசுக்குதலையும் சிறுபான்மையினருக்கெதிராகவும் விளிம்புநிலைமக்களுக்கெதிராகவும் நடத்திவிட்டுப்போக, பெரும்பான்மையான இடைநிலைமக்கள் கண்ணை மூடிக்கொண்டும் காதை அடைத்துக்கொண்டும் ஒத்துழைப்பார்கள். குறியீடுகளான தேசியக்கொடியும் தேசப்பற்றும் ஒடுக்கப்படும் சகமனிதனின் உரிமைக்குரலிலும்விட, சுயநிர்ணய உரிமையிலும்விட, தான் வாழ்வதற்கான நியாயப்போராட்டத்திலும்விட முதன்மைப்படும்; அக்குறியீடுகளைக் காக்க எச்செய்கைகளையும் சட்டங்களாகவும் சடங்குகளாகவும் ஆக்கச் சமரசப்பட்டுக்கொள்கின்றார்கள். இதற்கு மிகவும் சிறந்த உதாரணம், "வீரப்பன்குழு.எதிர்.தமிழ்நாட்டு+கன்னடஅரசுஎந்திரங்கள்" கால நிகழ்வுகள். வீரப்பன் ஆதரவாளர்களோ சரி, அல்லது அரசுசார்செய்திகளை நம்பியவர்களோ சரி, இரு பகுதியினராலும் மலைவாழ்பழங்குடிகள் மத்தள அடிபட்டு நசுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; ஒன்றில், அடுத்த பகுதியினரால், மலைவாழ்மக்கள் பாதிக்கப்பட்டார்களென்று ('நசுக்கப்பட்ட'தென வாசிக்கவும்) சுட்டிவிட்டுப்போனார்கள்; அல்லது, மலைசசாதி மக்களின் நாளாந்தவாழ்க்கை குறுக்கிடப்பட்டது ('நசுக்கப்பட்ட'தென வாசிக்கவும்) நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நாளாந்தநெறிவாழ்க்கைக்கும் அவசியமென்று எழுதினார்கள். இந்த வகையிலே, மலைசாதிமக்களின் மீதான எந்த ஆதாரமில்லாத கைதும் பாலியல்வன்முறையும் கொலையும் பயங்கரவாதத்துக்கெதிரானதென வீரப்பனின் இறப்புவரை நியாயப்படுத்தப்பட்டது.

மேற்படியான செய்திகள் போல, பல செய்திகள், அநாவசியமான ஒப்பீட்டினால், பயப்பீதியினை எதிர்மறைவிம்பத்தினையோ இடைநிலைமக்களிடையே ஏற்படுத்தி தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றவை. இன்னோர் அண்மைய உதாரணம், இலண்டனின் இரட்டை ஏழு குண்டுவெடிப்பின்பின்னால், இலண்டனிலிருந்து விடுதலைப்புலிப்பயங்கரவாதிகளை வெளியேற்றுமாறு இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுனவும் ஜாதிக ஹெல உரிமயவும் கேட்டிருப்பதாகும். ஆயுதப்போராட்டத்தினை நான்கு ஆண்டுகளாக நிறுத்திவைத்துச் சமாதானப்பேச்சுவார்த்தைகளிலே இறங்கியிருக்கும் ஒரு குழுவினை அது சம்பந்தப்படாத, அதற்குச் சம்பந்தமேயில்லையென சின்னக்குழந்தையும் உணரக்கூடிய ஒரு நிகழ்வைச் சாட்டாக வைத்து இருபதாண்டுகளுக்கு முன்னாலே உண்மையிலேயே மனித இரத்தத்தினால் இலங்கை நதிகளைக் களங்கப்படுத்திய, இன்றைக்கும் சமாதானப்பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் இன்னொரு குழு கேட்கத் துணிகிறது. இவ்வேண்டுகோள் சரியே எனச் சொல்லக்கூடியவர்களும் எம்மிடையே இருக்கின்றார்களென்றால், அதற்கான காரணம், இந்த அநாவசியாமான ஒப்பீட்டுப்பயத்துக்கு அவர்கள் உள்ளாகும் தன்மையே. தாம் நம்ப விரும்புததைத் தவிர, வேறெதனையும் கேட்கத்தயாரற்ற இத்தகைய வாசகர்கள் இருக்கும்வரை இந்தமேட்டுமைச்செய்தியூடகங்கள் அழுத்தப்பட்டவர்களின் நியாயங்களினை மறுத்துக்கொண்டு, அரச எந்திர அரக்கர்களின் நலனைப் பேணிச் செய்தி வாசித்துக்கொண்டேயிருக்கும்.

'05 ஜூலை 09 சனி 18:24


Friday, July 08, 2005

அரைகுறை - 5வியாழன் காலை எழுந்து இணையத்தினைப் பார்த்தபோது, பிபிஸி தளத்திலே இலண்டனில் குண்டுவெடிப்பு என்றிருந்தார்கள். ஜி-8 நாடுகளின் கூட்டம் தொடர்பாக எதிர்ப்புக்காட்டும் அழிவுவாதிகளின் மொலடோவ் கொக்டேயில் வகையான சின்னதாகவிருக்குமென்று மற்ற வழமையான தளங்களைப் பார்த்தேன். எல்லாவிடத்திலும் இலண்டன் குண்டுவெடிப்பு. திரும்பி பிபிஸி வந்து பார்த்தால், 9/11 நியூயோர்க் வகையான வெடிப்பென்ற விபரம் விரிவாகத் தெரிந்தது. தொலைக்காட்சியைப் போட்டால், எல்லா அலைவரிசைகளிலும் மாறாமல், ஒரே படங்களையே காட்டிக்கொண்டிருந்தார்கள். நண்பரொருவரின் தொலைபேசி வந்தது; பேசிவிட்டு, வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டே பெரிமேஸனைப் பார்த்துவிட்டு, முதல்நாளிரவு ஜி-8 பற்றிக் கைகிறுக்கினதைப் போட்டேன். பின்னால், தொடர்வண்டிக்கு வந்து வேலைக்குச் செல்கை. வண்டியிலே சனம் குறைவாகவே இருந்தது; ஆனால், அஃது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை; வேலைநேரத்திலும் வலைப்பதிவுகளைப் பார்த்தேன்; இலண்டன் குண்டுவெடிப்புகள் குறைத்து நிறையப்பதிவுகள்; வாசிப்பு. வீடு திரும்பும்போது, சனம் வழக்கம்போல, நிறைந்தே வண்டி. பாதிநேரம் ஏதோ புத்தகத்தை வாசித்துக்கொண்டும் மீதி நேரம் தூங்கிக்கொண்டும் வீடுவந்தேன். வீடுவந்து தொலைக்காட்சிகளிலே மாறிமாறி CSI, Without a Trace ஆகியன பார்த்து, Charlie Rose, News Hour, BBC ஆகியவற்றினைப் பார்த்துக்கொண்டு மகனோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வலைப்பூக்களைப் பார்த்த பின்னால், நித்திரையாகிவிட்டேன். காலை எழுந்து, வலைப்பூ, பெரிமேஸன், கொஞ்சம் வேலைத்தர எழுத்துவேலை, வேலைக்குப் பயணம். பயணத்திலே வழக்கமான அளவுக்குச் சனம். பாதி வழியிலேதான் உறைத்தது......

........."இந்தக்குண்டுவெடிப்பு எந்தவிதமான பாதிப்பினையும் என்னுள்ளே எழுப்பவில்லை." "ஐயோ இத்தனை அப்பாவி மனிதர்கள் இறந்து விட்டார்களே" என்றோ "இவர்களின் அரசு செய்தவற்றுக்கு இப்படித்தான் நடக்கும்; நடக்கவேண்டும்" என்றோ கவலையாகவோ மகிழ்வாகவோ எந்த உணர்வும் எனக்கு ஏற்படவில்லை; ஆக, மிஞ்சிப்போய் எழுந்தது, "எத்தனை பேர் இறந்திருக்கின்றார்கள்?" "ஆகா, ஆக முப்பத்திமூன்று; இப்போது நாற்பத்தொன்பது. சரி." - ஒரு கிரிக்கட் விளையாட்டிலே மொத்த ஓட்டத்தொகை கேட்கும் விடுப்புணர்வுமட்டுமே எனக்குள். குறைந்த பட்சம், நேற்றோ இன்றோ தொடர்வண்டியிலே பயணம்போகையிலே, "இதற்குள்ளே குண்டிருந்து வெடித்துவிட்டால்?" என்ற அச்சங்கூட தொலைக்காட்சியிலே, மெட்ரோ பத்திரிகையிலே பொஸ்ரன் உள்ளான தினசரிப்பயணங்கள் குறித்துக் காட்டவும் கேள்விகேட்கவும் செய்யும்போது எழவில்லை. வழக்கம்போல, ஏறி, இருந்து, இறங்குகிறேன்....

....இந்தக்குண்டு வெடிப்புகள் எனக்கு ஏதாவது பயத்தினைத் தந்திருக்கின்றனவென்றால், அது என்னைக்குறித்த பயத்தினைத்தான். உலகிலே நிகழும் எந்த வெடிப்பும் இறப்பும் - குறிப்பாக, தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமாகாத & தம்மை விரும்பும் தம்மால் விரும்பப்படும் தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமில்லாத மனிதர்களைக் கொண்ட மனிதர்களின் இறப்பும்- என்னிலே எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்கும் என் மரத்த மனநிலை என்னைப் பயப்படுத்துகின்றது; அந்தளவிலே எனக்கு நானே பயப்படுகின்றேன்.

இந்நிலை ஏன் ஏற்பட்டதென்று சரியாகத் தெரியவில்லை; யோசித்துப்பார்க்கும்போது, குறைந்தது எண்ணும் விரல்களுக்கடங்காத காரணங்கள் தெரிகின்றன. இப்படியான செய்திகளைக் கேட்டுக்கேட்டு பத்தோடு இது பதினொன்றென அலுத்துவிட்டதாகவிருக்கலாம்; கொல்லப்பட்டவர்களினை நேரடியாகத் தெரியாததாகவிருக்கலாம்; இறப்பின் கோரத்தினை "அட இவ்வளவுதானா இந்நிகழ்விலே இரத்தமும் நிணமும் இறந்தார் எண்ணிக்கையும்" என்று ஒப்பீட்டளவிலே பார்க்கும்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவிருக்கலாம்; இவர்களின் அரசின் முற்பகற்செயற்பாடுகளுக்கான பிற்பகல்விளைவுகள்தானே என்ற உணர்வாகவிருக்கலாம்; "அங்கே கணக்குக் காட்டப்படாமலே செத்ததுக்கு இங்கே செத்த இந்தத்தொகை ஒரு பொருட்டா?" என்ற குரூரத்தன்மைக்குப் பழக்கப்பட்டுப்போய்விட்டதாகவிருக்கலாம். "கொன்றவனுக்கும் இதை நியாயப்படுத்துமளவுக்கு எதேனும் இழப்பு (எந்தளவுக்கு) இருந்திருக்கோ?" என்று இப்போதெல்லாம் இப்படியான நிகழ்வுகளைக் காணும்போது எழுகிற கேள்வி தந்த மரத்தன்மையாகவிருக்கலாம்; "இப்படியாக முன்னர் எத்தனை; இன்னும் இனியும் எத்தனையோ?" என்பதை எண்ணி இஃது என் கைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்ட விடயமென்று பெற்றுக்கொண்ட/என்னை நானே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுடலைஞானத்தன்மையாகவிருக்கலாம்; இப்படியானவை ஆக நிகழ்வுகளே, ஆனால், இவை விளைவிக்கும் அரசியல்மாற்றங்களும் இவை பற்றிய அரசியல்வாதிகளின் அரசுகளின் திரிப்புகளும் நுழைவுகளுமே வருந்தவும் மகிழவும் கருத்துக்கானவை என்றதுமாதிரியான வேறொரு ஏரணம்சார்தளத்திலே நின்று காணப் பழக்கப்பட்டுவிட்டிருக்கலாம். அல்லது, மீளமீள Grounddog Day இலே பில் முரே போய்க்கொண்டிருந்ததுபோன்ற, Star Trek இலே ஒரு மாறாக்காலத்துளிக்குள்ளே தொக்கிப்போனதுபோன்ற, ஒரே தினமே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதான கனவுநிலையென உள்ளே உணர்ந்து கொள்ளும் நிலையாகவுங்கூடும். எதுவென்று நிச்சயமாகத் தெரியவில்லை. அதனால், இக்குண்டுவெடிப்பினைக் குறித்து எதையுமே எழுத - எழுதப்பட்டவற்றிலே, சரி, பிழையென பின்னூட்டம் இடக்கூட- விழைவும் வரவில்லை.

எனக்குக் கேடேதும் விளைவிக்காத இன்னொரு மனிதன் - தனக்கென குடும்பம், கனவுகள், நடப்புகள் கொண்டிருக்கும் இன்னொரு மனிதன் - அநாவசியமாக அறியாக்காரணத்துக்காக, தான் அறியாதவர்களால், அவனைத்தானென்று குறி வைத்துக் கொல்ல வராது தம் கருத்தை, தம் அவலத்தினை உணர்த்துக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டவர்களாலே கொல்லப்படும்போது, அதற்காக இறந்தவனுக்காக வருந்தவோ கொன்றவனுக்காக மகிழ்ச்சியடையவோ முடியாமல், உள்ளே விறைத்துப்போய், இன்று மற்றுமொரு நாளேயென்பதுவாக நான் நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையை ஞானியர் போற்றலாம்; வேட்கையுறலாம்; ஆனால், மனிதனென வாழ விழைகின்றவன் என்ற அளவிலே, நான் எண்ணி அச்சமுறுகிறேன். சற்றுச்சற்றாக விடமேற்றி உடல் பழக்கி விடமாகவே ஆகிப்போன நீலகேசி-நாகநந்தி ஞாபகம் வந்துபோனார்; நானும் அப்படியாக ஆகிவிட்டேனா? தெரியவில்லை. இருக்கலாம். அஃது என்னைக் குறித்து என்னைப் பயமுறுத்துகின்றது
'05 ஜூலை, 08 வெள். 16:18 கிநிநே.

Thursday, July 07, 2005

துத்தம் - 6முதலிரண்டு பகுதிகளினை நான் எழுத முயலவில்லை; நான் ஆரம்பத்திலே குறிக்க எண்ணியதெல்லாம் எனக்குப் பிடித்த சில ஈழத்துப்பாடல்கள் ஏற்படுத்திய தவனத்தினைத்தான். பரராஜசிங்கம்-குலசீலநாதன் இருவரும் கூடிப்பாடிய "சந்தனமேடை எம் இதயத்திலே உன் சலங்கையின் நாதந்தான் கேட்குதடி" என்ற பாடலும் "அழகான ஒரு சோடி கண்கள்" பாடலும் "குளிரும் நிலவினிலே" பாடலும் நெடுங்காலத்தவனம் தந்தவை. எம். ஏ. குலசீலநாதனே இசையமைத்த "சந்தனமேடை எம் இதயத்திலே" ஆரம்பத்திலே ஒரு காதற்பாட்டு என்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்; பின்னர், பல்கலைக்கழகக்காலத்திலே நண்பன் ஒருவன் சுட்டிக்காட்டியபின்னாலேதான் அது சரஸ்வதி குறித்த பாடலென்று புலனானது. எம். ஏ. குலசீலநாதன், எஸ். கே. பரராஜசிங்கம் இருவருமே மரபுவழிச்சங்கீதப்பரீட்சயம் உள்ளவர்களென்று நினைக்கிறேன். குலசீலநாதன் சென்ற ஆண்டு பரிஸிலே மறைந்துவிட்டார். அதுபோல, "அழகான ஒரு சோடி கண்கள்" பாடசாலையிலே (சக மாணவி)கண்(/காதல்) வசப்படும் ஒரு மாணவன் அவள் கண்களைச் சுட்டும் வார்த்தைகளாக விழுவன. ஒவ்வொரு பாடநேரத்திலும் படும் இவன் துடிப்பினைச் சுட்டும் பாடல். மிகவும் அழகான சொல்லமைவும் இன்றைய காதற்பாடல்களிலே காணமுடியாத நாகரீகமும் நிறைந்த பாடல்.

"குளிரும் நிலவினிலே" என்னைப் பிடித்துக்கொண்டதன் காரணம் அந்தப்பாடலுக்குரிய கனத்தினையும் மெலிதான கரகரப்பினையும் கொடுக்கும் பரராஜசிங்கத்தின் குரல். சில பாடல்களைக் கேட்கும்போது, சில இடங்களும் காலமும் ஞாபகத்துக்கு வருவதுண்டு; பல சமயங்களிலே அந்நிலை ஏன் என்று தெரிவதில்லை; அப்படியான விசித்திரமான உணர்வினைத் தரும் பாடல்களிலே இதுவுமொன்று. திருகோணமலை - தொண்டமானாறு பேரூந்திலே இரவு ஏழு-ஏழரை அளவிலே பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை முடிந்து ஆனையிறவு உப்பளம் தொடங்கும் இடத்திலே பயணிக்கும் சூழலும் வழித்தடத்திலே சுற்றி வீடுகளிலே தெரியும் மங்கலான விளக்குவெளிச்சமும் பனையோலைகள் உராயும் சத்தமும் இந்தப்பாடலைக்கேட்கும்போதெல்லாம் எனக்கு உணர்வாகும். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கையிலிருந்து சீனா நான் பயணமாகும்போது, ஒரு மாலைநேரம் இசைநாடாவொன்றிலே நானும் தங்கையும் இப்பாடலின் கூறொன்றை இலங்கைவானொலியிலிருந்து கௌவிப்பிடித்தோம். வெகுகாலம் வீட்டுநினைவிலே சீனாவிலே இப்பாட்டின் ஒரு நிமிட இரைச்சலுடனான பதிவினைக் கேட்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளின் முன்னால், கனடாவின் அருவி வெளியீட்டகம், எஸ். கே. பரராஜசிங்கத்தின் பாடல்களை "குளிரும் நிலவு" இசைவட்டாக வெளியிட்டதினை அருவியின் தளத்திலே கண்டிருந்தேன். அந்நேரத்தில், வாங்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டவில்லை. பின்னால், அவர்களின் தளமும் அற்றுப்போய்விட்டது. ரொரொண்டோ போய்வந்த/வசிக்கும் நண்பர்களிடம் "ஈழத்துப்பாடல்கள்" பற்றிச் சொல்லிவிட்டபோது, அவர்களால், பொப்பிசைப்பாடல்களையே பெறமுடிந்தது. ஈழத்துப்பாடல்கள் என்ற வகைப்பட்ட இந்தப்பாடல்கள் கிட்டவில்லை. அண்மையிலே மேற்படி தவனம் பற்றிய முதலிரு குறிப்புகள் எழுதியதின்பின்னால், பத்மநாப ஐயர் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்தபோது, கொண்டு வந்த இசைவட்டுகளிலே "குளிரும் நிலவு" கிடைத்தது. "காஞ்ச மாடு கம்பில விழுந்ததுமாதிரி" போட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மேற்கூறிய மூன்று பாடல்கள் தவிர்ந்த மேலும் ஒன்பது பரராஜசிங்கம் இசைத்த பாடல்களை அருவி இத்தட்டிலே சகாப்தனின் எஸ். கே. பரராஜசிங்கம் குறித்த அறிமுகத்துடன் தந்திருக்கின்றது.1. அறிமுகம் - சகாப்தன்
2. தென்னை மரத்து - நாட்டார் பாடல்; இசை: எம். கே. ரொக்சாமி
3. சந்தனமேடை - எம். ஏ. குலசீலநாதனுடன்; பாடல்: என். சண்முகலிங்கம் & இசை: எம். ஏ. குலசீலநாதன்
4. வெள்ளிதழ் மல்லிகை - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
5. குளிரும் நிலவில் - பாடல்: என். சண்முகலிங்கம் & இசை: சொலையில் ரானா
6. அழகான ஒரு சோடி - பாடல்: பாவலர் பாசில் காரியப்பர்; இசை: எம். கே. ரொக்சாமி
7. நெஞ்சினில் ஊறும் - கோகிலா சிவராஜாவுடன்; பாடல்: கே. கே. மதிவதனன் & இசை: எம். கே. ரொக்சாமி
8. கிண்ணி போல் - நாட்டார் பாடல்; இசை: எம். கே. ரொக்சாமி
9. பாலைவெளி - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
10. கண்ணனின் கோயிலிலே - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
11. கங்கையாளே - கோகிலா சிவராஜாவுடன்; பாடல்: இ. முருகையன்; இசை: எம். கே. ரொக்சாமி
12. மணிக்குரல் - பாடல்: அங்கையன் கைலாசநாதன்; இசை: சிட்டிபாபு
13. உழைக்கும் கரங்கள்- பாடல்- ரி. பரமலிங்கம்; இசை: ரி. வி. பிச்சையப்பா

இவர்களிலே, எம். கே. ரொக்சாமி தமிழிலும் சிங்களத்திலும் கோலோச்சிய இசையமைப்பாளர். கண்ணன் - நேசம் இரட்டையர் யாழ்ப்பாணத்திலே மிகவும் அறியப்பட்ட இசையமைப்பாளர்கள். கண்ணன் இன்னமும் ஈழத்தமிழிசைக்குத் தன் பங்களிப்பினைத் தந்துகொண்டிருப்பவர். ரி. வி. பிச்சையப்பா, ஸ்ரீதர் பிச்சையப்பா என்று தொண்ணூறுகளிலே தென்னிந்தியத்திரைப்படப்பாடற்பாணியிலேயே இலங்கையிலே பாடியவரின் தந்தை. (திருத்தம்: கீழே காண்க; நன்றி: வதிரி இரவீந்திரன்)  "கங்கையாளே" என்று மகாவலிகங்கை குறித்த பாடல் எழுதிய முருகையன், மஹாகவி உருத்திரமூர்த்தியின் சமகாலமொத்த ஈழத்தின் மூத்த கவிஞர். கைலாசபதியுடன் "கவிதைநயம்" நூல் எழுதியவர். "பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்", "மரணத்துள் வாழ்வோம்" இவற்றிலே இவரின் கவிதைகளைக் காணலாம்.

அருவி போன்ற வெளியீட்டகங்களின் இப்படியான பாடல் வெளியீடுகள், ஈழத்தின் பண்பாட்டுக்கூறுகளை ஆவணப்படுத்தவும் எதிர்காலத்துக்குத் தன்னியல்போடு வேற்று நல்லியல்புகளையும் உள்வாங்கி நடக்க உதவுமென்பது என் நம்பிக்கை.

உதாரணச்சுவைக்காக இவ்விசைத்தட்டின் ஒவ்வொரு பாடலினதும் மிகச்சிறிய துண்டத்தினை இணைத்திருக்கிறேன். அதிலே அருவி வெளியீட்டகத்துக்கு மறுப்பிருக்குமானால், உடனடியாக நீக்கிவிடுவேன்.

அறிமுகம் & முதல் நான்கு பாடல்கள்
அடுத்த நான்கு பாடல்கள்
கடைசி நான்கு பாடல்கள்

'05 ஜூலை, 07 வியா. 18:35 கிநிநே.

"குளிரும் நிலவு"
வெளியீடு: அருவி வெளியீட்டகம்
வெளியீட்டு ஆண்டு: 1999
தொடர்பு முகவரி: 75 Brimley Road, Scarborough, Ontario, Canada
தொடர்பு தொலைபேசி: (416) 269-1701


கந்தை - 29


Chain Gang of Eight


நேற்றிரவு இதனைப் பதிவிலே போட முயன்று, Hello ஒத்துழைக்காததால் விட்டுப்போய், காலையிலே போட வந்தால், கீறியிருந்த ஒற்றை இரத்தத்துளிக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கிறது :-(

Wednesday, July 06, 2005

குவியம் - 6

இஃது ஒரு சோதனைக்காக மட்டுமே. பின்னால் பாடல் கழற்றிக்கொள்ளப்படும்


படம் & பாடல் நன்றி: அருவி வெளியீட்டகம் ("குளிரும் நிலவில்" அடரிசைத்தட்டு)

கவின் - 3


Painting, American West Era, MFA, Boston


'05 ஜூலை், 03 ஞாயி. 12:52 கிநிநே.

பொஸ்ரன் நுண்கலைக்காட்சியகம்
அமெரிக்க-மேற்குப்பிரிவு

ஓவியத்தின் சரியான தலைப்பு & மிகுதி விபரங்களைக் கவனித்துப் பின்னால் உள்ளிடுவேன்.

Tuesday, July 05, 2005

கவின் - 2


Victorian Britain Section, MFA, Boston


'05 ஜூலை், 03 ஞாயி. 14:07 கிநிநே.

பொஸ்ரன் நுண்கலைக்காட்சியகம்
விக்ரோரியன் பிரிட்டன் பகுதி

கவின் -1


Seated Buddha


'05 ஜூலை், 03 ஞாயி. 13:31 கிநிநே.

பொஸ்ரன் நுண்கலைக்காட்சியகம்
கி. பி. 9 ஆம் நூற்றாண்டு, தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, தென் இந்தியா