A Painting & A Sculpture
'05 ஜூலை, 03 ஞாயி. 12:47 கிநிநே.
கீழே சொல்லப்பட்டது கவனக்கூற்று மட்டுமே; "கவி தை"க்கப்பட்டதெனக் கொள்ளற்க
நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள்:
பிள்ளைகள் தின்னும் புழைக்கடைமுனிகளை எண்ணி அஞ்சும் பெற்றோர்
ஆபாசப்பின்னூட்டங்கள் குறித்துப் பாசமாக கனவிலும் நனவிலும் வருந்திக்களைத்தவர்கள்
பண்பாட்டுக்காவலர்கள் எ. கலாசாரகமிஸார்
"பாலியல்வதை
திரும்பித் திரும்பத் தேர்ச்சில்லுட் செருகியும்
இத்திசை சாமி முலை எறிந்து எரியத் தினவு.
எண்ணிப்பார்த்தால், எண்ணெய்க்காப்பெல்லாம் கை
தடமிழுத்திழுத்துத் தனக்குடம் தடவிய கற்கருஞ்சிலை.
இந்திரியம் தித்தித்துத் திரியத் திரிய
தந்தம் முளைத்துத் தள்ளும் தாந்திரீகம்.
இறைவி குமரியானால், இதுதான் கஷ்டம்.
~17, ஜூலை '03 14:07 மநிநே."
இனைக் கழிப்பறைக்குள்ளே மட்டும் படிப்பவர்கள்
8 comments:
Sculpture தெளிவாக இல்லை. அதுவும் ஒரு ஆணா? குதிரை போலவும் உள்ளது. சரி போனீர்கள் படம் எடுத்தீர்கள். ஏதாவது ஒன்றை வாங்கினீர்களா? (*_*)
(முதலாவது கருத்து உங்களுடையதாகத்தான் இருக்குமென்று போடும்போதே நினைத்தேன்);-) வந்தீர்கள். நூற்றிரண்டு வயது.
வாங்கினேன். பொஸ்ரன் நுண்கலைக்காட்சியகம் குறித்த இரு புத்தகங்கள்.
ம்.. காரணம் அறியலாமா? உங்கள் நம்பிக்கைக்கு எப்போதும் நான் துரோகம் செய்யமாட்டேன்.
;-))
/ம்.. காரணம் அறியலாமா?/
நிச்சயமாக. பதிவிலே அநேகமாக, தன் ஒவ்வொரு பதிவிலும் ஆண்கள்-பெண்கள் என்றே பகுத்துக் கருத்தினைச் சொல்கின்றவர்களிலே, இப்படியான "ஆபாசப்படம்" குறித்து வெளிப்படையாகத் தன் கருத்தினை எழுதுகின்றவர்களிலே நீங்கள் மட்டுமே என் பதிவிலே பின்னூட்டம் இட முன்வருகின்றவர். (இதை உங்களின் + ஆகத்தான் சொல்கிறேன். பின்னாலே, அதுக்கும் வாலை நீட்டி, பின்னூட்டத்தை லங்கா தகனம் செய்யவிட்டுவிடாதீங்கோ)
ம்.. ஆபாசம். என்னவோ போங்கள். என் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
//இதை உங்களின் + ஆகத்தான் சொல்கிறேன்.\\ Thanks (*_*)
ஆபாசம் ≠ "ஆபாசம்"
ம்.. காரணம் அறியலாமா? உங்கள் நம்பிக்கைக்கு எப்போதும் நான் துரோகம் செய்யமாட்டேன்
sounds like a dialog from a tamil
film of the 50s and 60s.
Post a Comment