Monday, July 11, 2005

குவியம் - 7

தென்னையைக் கொத்திய மரங்கொத்தி வாழையும்...

இன்று மதியத்திலிருந்து தொடர்ந்து இந்த அலைஞனின் அலைகள்: குவியம் பதிவிலே தொடர்ந்து தமிழ்வார்த்தைகளிலே என் மனைவி பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டுக்கொண்டு வருகிறது. முதலிலே மெக்ஸிக்கோவிலிருந்து இயங்கும் alestra (AT&Tஇன் பகுதி) ஊடாக முகக்காவலோடு (proxy)வந்தது. பெயரின்றி போடுவதைத் தவிர்த்தபின்னால், மனிதனாகக் கூர்ப்புப்பெற்று வருகின்றது. குறிப்பாக, பெயரிலி என்று போட்டால், ஆளடையாளம் தெரியாது போய்விடுமென்று நினைத்துப் சொந்தப்பெயரைச் சுருக்கமாகப் போட்டே அர்ச்சிக்கின்றார் (இப்படியாவது, தமிழிலே அர்ச்சனை நடந்தாற் சரி ;-)).


VISITOR ANALYSIS
Referring Link Hidden Referrer
Host Name host-207-248-240-118.block.alestra.net.mx
IP Address 207.248.240.118
Country Mexico
Region Chihuahua
City Ciudad Juarez
ISP Lacnic
Returning Visits 7
Visit Length 1 hour 31 mins 57 secs
VISITOR SYSTEM SPECS
Browser Firefox 1.0
Operating System Windows XP
Resolution 1024x768
Javascript Enabled

Navigation Path
Date Time WebPage
11th July 2005 14:45:45 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 14:46:26 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 14:47:54 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 15:05:40 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 16:00:19 wandererwaves.blogspot.com/2005/07/45.html
www.thamizmanam.com/tamilblogs/userpanel.php
11th July 2005 16:00:51 wandererwaves.blogspot.com/2005/07/45.html
www.thamizmanam.com/tamilblogs/userpanel.php
11th July 2005 16:01:22 wandererwaves.blogspot.com/2005/07/45.html
Hidden Referrer
11th July 2005 16:17:42 wandererwaves.blogspot.com/2005/07/14.html
Hidden Referrer


இதுதான் சிக்கலே; என்னைப் பார்த்து அங்கம் அவயம் சொல்லித்திட்டினால், "சர்தான் போடா, கூவத்துக்குப்பையே" என்று என்பாட்டுக்கு அடுத்த பதிவுக்குப் போய்விடுவேன் என்பது தெரிந்ததால், நண்பர் மனைவியினைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். மனைவியும் கண்டுவிட்டு நண்பர் தனக்குத் தெரிந்த பதங்களிலே மட்டும் ஏதோ சொல்லியிருக்கின்றார் என்று விட்டுவிட்டுப்போய்விடுவாள். அடுத்ததாக, என் அக்காவை அழைக்கத்தொடங்குவார். என்ன சிக்கலென்றால், இந்தப்பதிவு, நானும் என் மனைவியும் வலைப்பதியும் நண்பர்களும் மட்டுமே பார்த்துப்போவதென்றால், சிக்கலானதில்லை. ஆனால், இரண்டுபேரையும் சார்ந்த வலைப்பதியாத குடும்பத்தினரும் நண்பர்களும் எப்போதாவதிருந்துவிட்டுப் பார்த்துத் தொலைப்பது. வன்புணரப்பட்டவளைப் பார்த்து கற்பிழந்தவள் என்று சொல்லித் திட்டும் சமூகத்துக்குப் பயப்படும் ஆட்கள் அவர்கள். அவர்களை நோக வைக்க விருப்பமில்லாததால், பதில் எழுதுவதை சில மணிநேரங்களுக்குத் தடை செய்திருக்கின்றேன். மனிதனுக்கு நேரம் கைவசப்பட்டால் -/பெயரிலி.க்கும் இருக்காதா? :-)

பேராதனைப் பல்கலைக்கழக ராகிங் ஊடாகப் போய்வந்தவன் நான்; அக்காவைத் திட்டி என்னை முடக்கலாமென்று மனிதன் யோசித்தால், கஷ்டம். ஆக, மிஞ்சினால், கவலைப்படும் நண்பர்களினையும் குடும்ப அங்கத்தினரையும் பார்க்காதீர் என்று சொல்லிவிட்டு, வலைப்பதிவினைத் திறந்தே விடுவேன்.

ஆனால், ஆச்சரியமான விடயமென்னவென்றால், இத்தனை நாட்களும் இருந்துவிட்டு, இன்று தொடர்ந்து என் மீது பாய்வதேனோ? மாலனின் பதிவிலே பின்னூட்டம் தொடர்பாகப் பின்னூட்டம் கொடுத்ததுதானோ? :-) அடுத்ததாக, எனக்கு இந்தப்பின்னூட்டச்சொற்களஞ்சியத்தைத் தந்த மாமனிதன் என்னைப் போன்ற கருத்துநிலைப்பாடு உள்ளவர்களைமட்டுமே தாக்குகின்றார் என்றே நினைக்கிறேன். போன வாரங்களிலே சொற்களஞ்சியம் விட்ட வாலி, காலிகளுக்கும் இவருக்கும் சம்பந்தமிருக்குமென்றும் நான் நினைக்கவில்லை.

ஆனால், இப்போதுங்கூட, இந்த மாமனிதப்பின்னூட்டப்பிரச்சனையை வைத்து, அநாமதேயமாகப் பதில் எழுதுகின்ற உரிமையை எவருக்கும் மறுக்கவிரும்பவில்லை. முன்னால், இங்கு எழுதியதிலிருந்து எந்த விதமாற்றமும் என் கருத்திலில்லை.

தென்னையைக் கொத்தினால், மரங்கொத்தி கொத்திய அலகை வெளியே எடுத்துக்கொள்ளமுடியும்; வாழையைக் கொத்தினால், .... ;-)

பிற்சேர்க்கை:
நண்பர் 207-248-240-118.block.alestra.net.mx என் பழைய நண்பர், 66.57.72.203 அவர்களாகத்தான் இருக்கமுடியுமென நினைக்கிறேன். அவர் பயன்படுத்தும் பதங்களிலே ஒற்றுமை. கூடவே சில சொற்களைப் பயன்படுத்தும்போது அவர் போடும் அடைப்புக்குறி ஒற்றுமைகளும் இருக்கின்றன. [(சு)ரம்..]
வாங்க தலைவா.
என்ன இன்றைக்கு host-148-244-150-57.block.alestra.net.mx இலே வந்திருக்கின்றீர்கள்? இந்தப்பதிவிலே தொடர்ந்து உங்கள் படைப்புச்செய்திகள் பற்றி பதிவு செய்கிறேன். கண்டு கொள்ளவில்லையே என்று நீங்கள் கவலைப்படக்கூடாது.
12, ஜூலை 12:43

13 comments:

-/பெயரிலி. said...

நண்பரே வருக;
"பெயரிலியின் அக்கா.." என்று தொடங்கி உங்கள் மனிதன் பதிவிலே தேவாரப்பாடல் தருக ;-)

Anonymous said...

piyarili don' giv up 2 theZ guyZ. U no who he is
send me a mail @yahoo

OC

-/பெயரிலி. said...

நன்றி ஓசி(?)
இதிலே கிவ் அப்புமில்லை. தேயுவுமில்லை. எல்லோருக்கும் வலைப்பதிய ஆவல்; தங்களுக்குத் தெரிந்ததைத்தான் எழுதமுடியுமென்பதாலே, இப்படியான பின்னூட்டங்கள் வருகின்றன. அதுவும் நல்லதுக்குத்தான். சட்டிக்குள் இருப்பது அள்ளிமுடிந்தால், காற்றைத்தான் அள்ளிப்போடமுடியும்.
நண்பர் முகமூடிவேறு நான் பயந்துபோய்விட்டது குறித்து மிகவும் வருந்தியிருந்தார். எனக்கு இரவு இந்தப்பயநடுக்கத்திலே காய்ச்சல்வேறு. மனிதன், முகமூடி என்று புலம்பிக்கொண்டிருந்தாகவும் வீட்டிலே சொல்கிறார்கள். இப்போதுதான் இரண்டு தைலனோல் போட்டுக்கொண்டு பதிந்துகொண்டிருக்கிறேன். அப்போதும் நடுங்குகிறது.

;-)

வசந்தன்(Vasanthan) said...

நீர் என்ன எழுதிறீர் எண்டு 'ஆர் ஆய்ந்து' முடிக்கவே நேரம் போகுது. இந்தமுறை பின்;னூட்டத்தில மினக்கெட்டுட்டன்

-/பெயரிலி. said...

/நீர் என்ன எழுதிறீர் எண்டு 'ஆர் ஆய்ந்து' முடிக்கவே நேரம் போகுது./ ;-)
ஆர் என்று ஆய்வதுதான் முக்கியம். அதுவும் நல்லதுதான்

வசந்தன்(Vasanthan) said...

என்னையா 2115 பின்னூட்டங்கள் எண்டு தமிழ்மணத்; திரட்டியில காட்டுது.

-/பெயரிலி. said...

??
அவனுக்குத்தான் தெரியும். அதன் ஆரம்பமும் அதன் முடிவும். இதிலே பகிடி என்னவென்றால், இதை நிலையைத்தான் வேறு மனிதர்(கள்) போன கிழமை மூர்த்திக்கும் உண்டாக்கியிருந்தார்(கள்).
எல்லாம் நல்லதற்கே.

என்ன இன்னும் மனிதர்களை இந்தப்பக்கம் அக்கா, மச்சாள் சுகம் விசாரிக்க வரக் காணவில்லையே? :-( அப்பு, -/பெயரிலி.யை நீங்களாச்சும் மறந்திடாதீங்கோ ராசா.

தொட்டி விரித்தேன்; குப்பை போட ஆளைக்காணமே? :-((((

கறுப்பி said...

//தொட்டி விரித்தேன்; குப்பை போட ஆளைக்காணமே? :-(((( \\

அட நான் பெயரிலி மிக நல்ல விடையம் ஏதோ எழுதி விட்டார் பின்னூட்டம் எகிறிக் குதிக்குது எண்டு பார்த்தால் இதுவா மாட்டர்?

-/பெயரிலி. said...

மாட்டர் இல்லை மாடம், மாடரேட்டர் இல்லை. மர்டர்.
வர வர நீங்களும் கருணாகரமூர்த்திபோல ஆகியிட்டியள். பாதி இலங்கைத்தமிழ், பாதி தமிழ்நாட்டுச்சஞ்சிகைத்தமிழ். ஐயோ!!! இப்ப மனிதர்(கள்) வந்து உங்களுக்கும் சேத்து அருஞ்சொல்லகராதி தந்துபோட்டுப்போவார்(கள்). ஆயத்தமா இருங்கோ. அழிக்கக்கிழிக்கக் கேக்கக்கூடாது. இப்பவே சொல்லிப்போட்டன் ;-))

KARTHIKRAMAS said...

பெயரிலி முதலில் எல்லாம் 100 அடித்துக்கொண்டிருந்தீர்கள். இப்பெல்லாம் ஆயிரக்கணக்கில் உங்க ப்ளொக்கிலெயே அடிக்க ஆரம்பித்து விட்டீர்கள். :-P

-/பெயரிலி. said...

தம்பீ, ஸீரோக்குத்தான் வல்யூ இல்லை எண்டாச்சுதே. எத்தினையத்தான் ஒண்டுக்குப் பின்னாலை சேத்தாத்தான் என்ன?

குமரேஸ் said...

என்ன இத்துடன் இது மூன்றாவது தடவையா?

"இது தமிழ்மணத்தில் நிகழ்வது முதற்றடவையல்ல. முன்னொருபொழுதும் நிகழ்ந்திருக்கின்றது. நிரலினாலே நிகழ்ந்திருக்கக்கூடுமென்று காசி சொல்லியிருந்தார் என்பதாக நினைவு"

-/பெயரிலி. said...

குமரேஸ், அப்படியாகத்தான் தெரிகின்றது. இது நேரடிக்காரணத்தினைப் பார்த்தால், நிரல்சார்ந்த சிக்கல்தான் என்று தோன்றுகிறது.