Tuesday, July 12, 2005

கவின் - 5


D'ou venons nous? Que sommes nous? D'ou allons nous? (where do we come from? What are we? Where are we going?), 1897-98, Museum of Fine Arts, Boston


'05 ஜூலை, 03 ஞாயி. 14:28 கிநிநே.மனிதர்(கள்) ஒங்க ஆத்தா ஒன்னோட பொண்டாட்டி, ஒங்க அக்கா, ஒன் மைத்துனி என விரும்பியவாறு ஒன்பது வசனங்கள் எழுதலாம். ஆட்சேபணையில்லை. ஆனால், பத்தாவது வசனம், படத்தலைப்புக்குச் சம்பந்தப்படும் வகையிலே, "இப்படியான ***** தான் ஒன்னோட #%^& ****" என்பதுபோன்றும் எழுதவேண்டுமென்று விழைந்து கேட்டுக்கொள்கிறேன். (அப்படி எழுத, தெரிந்த ஞானத்தினை ஒரு நனோமீற்றர் விரித்தாலே போதுமானது; அதிகம் எதிர்பார்க்கிறேனோ? :-( )

;-)

10 comments:

சன்னாசி said...

தலைவா இந்த ஓவியம் அங்கேயா இருக்கிறது? காகினின் ஓவியங்களில் மிகப் பிரபலமான ஓவியம் இது. தாஹிதித் தீவுகளில் அவர் தங்கியிருக்கையில் தீட்டப்பட்டது - பெயர் தான் நினைவுக்கு வரவில்லை. இதுமாதிரி வேற்றுக்கலாச்சாரங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களில் ஒரு சுற்றுலாவாசியின் கண்ணோட்டமாயில்லாமல் அசல் அனுபவமாகவே தோன்றும் ஓவியங்களை வரைந்த வெகு சிலரில் காகினும் ஒருவரென்பது என் அபிப்ராயம். ஆங்கிலோ-சாக்ஸன்களின் பார்வையும், அவர்களைத் தவிர்த்த பிற ஐரோப்பியர்களின் பார்வையும் இவ்விஷயத்தில் வேறுபட்டிருப்பது வெகு எளிதாகக் காணக்கிடைக்கிறதென்றே நினைக்கிறேன். நேரில் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும் ஓவியங்களில் இதுவுமொன்று. துண்டு துண்டாக எடுத்து photo stitching உத்தியைக்கொண்டு சில படங்களைத் தைக்க முயன்று பார்த்தேன் - ஓரளவு ஒழுங்காகத்தான் வருகிறது. இதுமாதிரிப் பெரிய ஓவியங்களைப் பார்க்க நேர்கையிலாவது எனது புகைப்பட அறிவைக் கொஞ்சம் கூர்தீட்டிக்கொள்ள வேண்டுமென்று தோன்றும்.

சன்னாசி said...

அடடா, படத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மேலே தலைப்பு போட்டிருப்பதைக் கவனிக்கவில்லை. மன்னிக்க...

படத்தை இட்டதற்கு நன்றிகள்.

-/பெயரிலி. said...

முதலிலே மாண்ட்ரீஸர் அவர்கள் பெண்களின் சாமுத்ரிகா இலட்சணம் பற்றி ஏதும் சொல்லாமல், தலைப்புக்கேற்றவாறு கருத்துச் சொன்னதையிட்டு வன்மையான கண்டனத்தினை மனிதர்(கள்) சார்பிலே -/பெயரிலி. தெரிவித்துக்கொள்கின்றான் (அல்லது, முகமூடி அவர்களின் திருப்திக்காக, தெரிவித்துக்கொள்கிறாள்) ;-)

பாம்பரே, அதுதான் அன்றைக்கே சொன்னேனே, உமது ஞாபகமாக சில ஓவியங்களைப் பிடித்துக்கொண்டேனென. இதுவும், வான்கோ, மொனே, ரம்ப்ராண், டிகா ஆகியோரினதும் அடங்கும். சில ஒழுங்காக வரவில்லை (ஒளிக்குறைவும் அடாபுடாவென ஆட்கள் நடமாட்டமும்). இதைப் பிடிக்க, ஐந்து நிமிடங்கள் நிற்கவேண்டியதாகிற்று. டிகாவின் ஓவியங்கள் நியூ ஓர்லியன்ஸிலிருக்கும்போது அங்கே காட்சிக்கு வந்தன (டிகா சில வருடங்கள் நியூ ஓர்லியன்ஸிலிருந்து பருத்திக்கடை எல்லாம் கீறியிருக்கின்றார் என்பது பாம்பு அறிந்ததே).

குகேனின் ஓவியங்கள் என்னைக் கவர்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நீங்கள் சொல்லும், /இதுமாதிரி வேற்றுக்கலாச்சாரங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களில் ஒரு சுற்றுலாவாசியின் கண்ணோட்டமாயில்லாமல் அசல் அனுபவமாகவே தோன்றும் ஓவியங்களை வரைந்த வெகு சிலரில் காகினும் ஒருவர்/
அவர் அங்கேயே கல்யாணம் செய்து தங்கியுமிருந்தார் அல்லவா? அதனாலேதான் பால்வினைநோயுக்குமாளானார் என்றும் வாசித்தேன். சரியாகத் தெரியவில்லை.

KARTHIKRAMAS said...

/where do we come from? What are we? Where are we going?/
பெயரிலி எல்லாம் இருக்கட்டும்; இதுக்கு பதில் சொல்லுங்க முதலில். :-)

-/பெயரிலி. said...

அறிஞ்சால் எனக்கும் பதில் சொல்லு ராசா.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

இறக்கியாச்சு. நன்றி.

Thangamani said...

நல்ல படம். காகினின் படங்களும் எனக்குப் பிடிக்கும். வான்கோவின் படங்களையும் பிடித்தீர்களா?

க்ச்க்ட்ட்ச்ஃட்ப்fஒ ம் ன்வ் ;ல்ச்ட்fநெGFJள்:ள்:ற்YஊஈஓPஞ்HJfக்ஹ்ஜ்க்ல்கெநொபென்வ்ப்வ்வ்ப்ச்ந்பொஇஎந்fயெஉfஎந்fஜ்fல்க்ந்ல்f;ர்fருரூய்டிஒண்CVஸ்Vண்V;ஆளேHG

மேற்கண்ட மறைபொருள் விரும்பியவாறு பொருள்விரியும் தேவபாஷையில் சாமுத்திரிகா இலட்சணந்தொட்டு அத்துவித அரும்பொருள் வரை பொருள் கொள்ளத்தக்கது என்பதறிக. இது மனிதர்கள், தேவர்கள், கின்னரர், கந்தர்வர் இப்படி 18 சாதி உலகங்களில் வாழ்வோரின் பயன்கருதி கருடபுராணம் அருளிச்செய்த சின்னத்தம்பி செய்கு பாவலர் அவர்களால் அவரது முக்கிய சீடன் சுப்பிரமணியத்துக்கு குறிப்பால் உணர்த்தப்பட்டது. சுப்பிரமணியம், சூரியனுக்கும், சூரியன் பிருகு மகரிஷிக்கும், பிருகு அத்வானிக்கும், அத்வானி செம்புலப்பெயல் நீர் சுந்தரலிங்கத்துக்கும், சுந்தரலிங்கம் அர்ஜுனனுக்கும் சொன்னது. இதில் சிந்திப்பவர்களுக்கான செய்தியும் புளிப்பு மிட்டாயும் இருக்கிறது. இதை வாசிப்பவர்களும், வாசிப்பதை கேட்பவர்கள், வாசிக்கப்பட்ட இடத்தில் கிடந்து உருளுபவர்களும், அந்த மெளசையாவது உருட்டியவர்களும் பரமபதவி அடைவது திண்ணம் என்றறிக. அவ்வாறன்றி இதை அலட்ச்சியப்படித்தி வாசிக்காமல் விட்ட ஒருவர் (சின்னக் கொலம்பியா பட்டியில் வசிப்பவர்)அவரது இரண்டு மாடுகளையும் ஒரு கம்ப்யூட்டரையும் வைரசுக்கு இழந்தார். இதை கேலி செய்த வாசிங்டன் பிள்ளையார் கோவில் தெரு சீனர் ஒருவரை கன்பூச்சி கடித்து துன்பத்துக்குள்ளானார். எனவே மேற்கண்ட படத்தை 28 உரு செய்து பிரதிதினமும் வாகட மணி மந்திரத்தை காலை மாலை டிபன் செய்யும் போது செபிப்பவர் சித்தியடைதல் என் குருவின் மேலாணை.

-/பெயரிலி. said...

/வான்கோவின் படங்களையும் பிடித்தீர்களா?/
பிடித்தேன்; ஆனால், சொல்லுமளவுக்குத் தெளிவாக வரவில்லை (முன்னாலே நின்ற அம்மணியோ அண்ணாச்சியுடையதோ தலை தவிர்த்து)

/என் குருவின் மேலாணை./
குருவிலே ஆணை வைத்தால் மட்டும் போதாதென்றால், விரும்பி சுக்கிரன்மேலும் ஆணை வையுங்கள். பெண்ணை மட்டும் விட்டுவிடுங்கள். ;-)

KARTHIKRAMAS said...

/அந்த மெளசையாவது உருட்டியவர்களும் பரமபதவி அடைவது திண்ணம் என்றறிக. /
:-)))))

டிசே தமிழன் said...

என்னவோ எல்லாம், எனக்குப் புரியாத மொழியில் எல்லோரும் பேசுகின்றீர்கள் :-(. காகினின் இந்தப்படம் பிடித்திருந்தது. படத்திற்கு காகின் இட்ட தலையங்கம் கூட நன்றாக இருக்கிறது.