Still I know no title
'05 ஜூலை, 03 ஞாயி. 14:28 கிநிநே.
தமிழ்ப்பாம்பினைத் துணைக்கழைக்கிறேன். இந்த அரூபத்துக்கு என்ன அர்த்தமென்று இன்றைக்கோ என்றைக்கோ நீரோ அல்லது கூட காட்சியகம் வந்தவரோ சொல்லித்தான் ஆகவேண்டும். இதுக்கெல்லாம், அருளின் இன்றைய பதிவினைப் பார்த்து பயந்து போய்விட்டேன் என்று அர்த்தமில்லை; அருளிடம் அடிவாங்காமலிருக்க, ஹார்வாட் முன்னால் தெரு ஓவியம் படம் ஒன்றையும் பிடித்து வைத்திருக்கிறேன். போட்டாப் போச்சு. ஹி ஹி ஹி!! சரியான வௌவாலாக்கும் நான்]
12 comments:
காதோடு கேட்கிறேன்: யாரப்பா இது? டி கூனிங் -கா? :-)
அருள்
அல்லது 'Big dripper' ஜாக்ஸன் போலக்கா? பெயரிலி, ஏதோ எனக்கு ஏற்படும் 'மன எழுச்சி' யோடு நான் சந்தோஷமாக இருப்பதை இப்படி மிரட்டிக் குலைத்துப்பார்க்க முயல்வது நியாயமா? ;-)
" இரண்டிலொன்று நீ என்னிடம் சொல்லு .."
என்று வைர சூட்கேஸோடு ஸர்ஃப் ப்ரேக்கர்களைப் பார்த்து அலறிக்கொண்டிருக்கும் ...
மிருகக்காட்சிசாலை. வரைந்தவர் மூனா.
பாம்பு படத்தின் மீது ஊரமுன்னர் நானும் இரண்டுவரி சொல்லலாம் என்று பார்த்தால் அதற்குள் பாம்பு படமெடுக்கதொடங்கிவிட்டது ;-).
//எனக்கு ஏற்படும் 'மன எழுச்சி' யோடு நான் சந்தோஷமாக இருப்பதை இப்படி மிரட்டிக் குலைத்துப்பார்க்க முயல்வது நியாயமா? ;-)//
எங்களுக்கு எல்லாம் வாரயிறுதிகளில்தான் (அதுவும் அத்தி பூத்தாற்போல) இந்த 'மனஎழுச்சி' ஏற்படும். பாம்பாய் இருந்தால் தினமும் குதூகலம் போல :-)
அருள், பாம்பு ஊதியது சரியே. போலாக்கின் Number 10. (கூட இணைப்பிலிருக்கும் படம் ஆடிவிம்பம்போல மறுபக்கமாகப் போட்டிருக்கின்றார்கள் போல இருக்கின்றது ;-))
ஓர் அம்மணி இஃது 10 என்ற எண்ணாலே வரையப்பட்ட ஓவியமென்கிறார். நான் கவனிக்கவில்லை :-(
பாம்பு, போலாக் ஆக, Ed Harris நடித்து வந்த படம் பார்த்திருக்கின்றீர்களா? முக்கால்வாசி Bravo அலைவரிசையிலே இலே ஒரு நாள் பார்த்தேன். Ed Harris அருமையாகச் செய்திருக்கின்றார்.
"ஓர் அம்மணி இஃது 10 என்ற எண்ணாலே வரையப்பட்ட ஓவியமென்கிறார்" என்பதை "ஓர் அம்மணி Number 10 எண்ணாலே வரையப்பட்ட ஓவியமென்கிறார்" என்று வாசிக்கவும் :-(
பார்த்துள்ளேன் பெயரிலி - டிவிடியில் பாதிவரை. சொந்த முயற்சியில் எட் ஹாரிஸ் கஷ்டப்பட்டு எடுத்த படம் எனினும், உருவத்தோற்றம் போலக்குக்குப் பெருமளவு ஒத்துப்போனாலும், எட் ஹாரிஸின் விரல் கணுக்கள் பொருந்தாமல் முண்டுமுண்டாக இருந்தது ஏதோவொருவகையில் உறுத்தியதால் அத்தோடு நிறுத்தியாயிற்று. நானாயிருந்தால் எட் ஹாரிஸின் குரலை நிறுத்திவிட்டு வேறு யாரையாவது டப்பிங் கொடுக்கச் சொல்லியிருப்பேன் (Jeremy Irons?) - நிஜ போலக்கின் குரலைக் கேட்டதில்லை எனினும் - எல்லாம் கற்பனை தானே? ஓவியங்களைப்பற்றி வரும் டிவிடிக்களே சமீபத்தில் சுமாராகப் பார்த்தேன் - Toulose-Lautrec பற்றிய ஒன்று, இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்களைப் பெருமளவு ஆதரித்த Medici குடும்பத்தினர் பற்றிய PBS ஆவணப்படமொன்று, புனித பீட்டர்ஸ்பர்கின் Hermitage அருங்காட்சியகத்திலுள்ள கலைப்படைப்புக்களைப் பற்றியது என்று. தமிழக, ஏன், இந்திய சமீபகால ஓவியங்கள் எப்படியிருக்கிறதென்று பார்ப்பதற்காவது யாரேனும் தேடினால் உதாரணத்துக்குக்கூட ஒரு வலைத்தளம் கிடையாது இங்கே! (இல்லை நான் தான் கவனிக்கவில்லையோ? தெரிந்திருப்பின் சொல்லவும்...). இதுபோன்ற சுரத்தின்மையைக் கண்டுதான் அவ்வப்போது எரிச்சலடைவது.
ம்ம்.. ஆரம்பிச்சுட்டீங்களா? சந்தோஷமா இருங்க ..வவ்வவ்வவ்
/த்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்களைப் பெருமளவு ஆதரித்த Medici குடும்பத்தினர் பற்றிய PBS ஆவணப்படமொன்று/
இது நல்ல ஆவணம். சென்ற ஆண்டின் ஆரம்பத்திலே பார்த்தேன். Merici குடும்பத்துப்பாப்பரசர்களைப் பற்றிப் பேசுவதுதான் நோக்கமென்றாலுங்கூட, மைக்கேல் ஆஞ்சலோ குறித்து விரிவாகப் பேசினார்கள். கூடவே, கல், கலை அமைத்ததுபற்றியும். படத்தின் செறிந்த/அடர்ந்த படப்பிடிப்பு இன்னும் பொருத்தமாக இருந்தது.
எட் ஹரிஸ் குறித்து நீங்கள் சொல்வது பொருந்தக்கூடும். நான் அவதானிக்கவில்லை. எட் ஹரிஸ் இந்தப்பாத்திரத்திலும், Of Mice and Man இலே Gary Sinese உம் [John Malkovich உம் கூட] சிறப்பான நடிக நாயகர்களாக நடிக்கவும் இயக்குநர்களாக இயக்கவும் கூடுமெனக் காட்டினார்கள் என்பது என் அபிப்பிராயம். நல்ல காலம்; மின்னும் நட்சத்திரங்களாக அவர்கள் முழுதாக ஆகாதது.
தமிழக/இந்தியப்படைப்புகளுக்குத் தளங்கள் இருக்கின்றன. மீனாக்ஷி ஸ்ரீகாந்த் தான் புகழேந்தியின் ஓவியங்களை வைத்திருந்ததைச் சொல்லியிருந்தாரே. தவிர, தமிழக ஓவியர்களுக்கான தளமொன்றிருப்பதைக் கண்டிருக்கின்றேன். என் வீட்டுக்கணணியின் "விரும்பிகளிலே" கிடக்கின்றது. பின்னால், அனுப்பிவைக்கிறேன்.
இலங்கை ஓவியர்களின் தளமொன்று இங்கிருக்கின்றது. தமிழன்பர்களினதை appaal-tamil இலே இணைக்க முயல்கின்றனர். இலங்கையின் பறங்கியின ஓவியரான George Keyt உம் மஞ்சுஸ்ரீயும் எனக்குப் பல்கலைக்கழகக்காலத்திலே பிடித்த ஓவியர்கள்.
/வவ்வவ்வவ்/
வள் வள் வள் வள்
-/தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் தமிழ்நாய்.
கடிநாய் கவனம்
Post a Comment