Friday, December 31, 2004

புலம்

உணர்ந்ததை உரைக்கிறேன்

கடந்த ஒரு கிழமையாக எனக்கு நேரே இளைய தம்பி திருகோணமலை சமூக-பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு (SEDOT) ஊடாகவும் மருத்துவராகவும் பெற்ற அனுபவத்தினைச் சொல்ல, அதிலே நான் கிரகித்துக்கொண்டது கீழுள்ளவற்றிலே அடங்கும். ஏற்கனவே செய்தியூடகங்களிலும் மற்றைய நண்பர்கள் அறிந்து எழுதியவற்றினையும் நான் அறிந்த அளவிலே சொன்னது சொல்லல் வேண்டாததாலே தவிர்த்திருக்கின்றேன். இக்கருத்துகள் நான் புரிந்து கொண்டவை சரியானால், என் தம்பியின் தனிப்பட்ட அவதானிப்புகளின் விளைவானவையேயொழிய SEDOT இன் கருத்துகளையோ அவன் தொழில்புரியும் திருகோணமலை ஆதாரவைத்தியசாலையின் கருத்துகளையோ பிரதிபலிப்பனவல்ல. அதனாலே, தகவலைச் சொல்லும் விதத்திலே கொஞ்சம் தனிப்பட்டதான தொனிகூட இருக்கக்கூடும்.

சிதறல்

குவியம்

Outter Harbor View(s) from Orr's Hill

.Vs. Vs
1945 July (P. Barrett) 1996 Dec.29 (-/peyarili.) 2004 after Dec.26 (mauran)


View(s) From Inner Harbor Road

Vs
1992 Sep.(-/peyarili.) 2004 after Dec.26 (mauran)


Opposite views of Trincomalee Konesar Temple (Rock Hill): From Beach & From Uppuvelli

Vs
1996 Dec. 25(-/peyarili.) 2004 after Dec.26 (Grace Educarion Center)

கந்தை

Thursday, December 30, 2004

படிவு

யாழ் பரியோவான் கல்லூரி, சுண்டுக்குக்குளி மகளிர் கல்லூரி ஆகியவை (பிரித்தானியாவிலே இருப்பவர்களுக்கு) விடுத்திருக்கும் வேண்டுகோள்
http://www.csjppa-uk.org/
http://www.stjohnscollegejaffna.com

அமெரிக்காவின் நியூ-இங்கிலாந்துப் பகுதியிலே இருப்பவர்கள் நியூ இங்கிலாந்தின் பொஸ்ரன் தமிழ்ச்சங்கத்தின் ஊடாக உதவி செய்ய விரும்பினால், தொடர்பு கொள்ள
http://www.bostonthamil.com/disaster.html

பொஸ்ரன் நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் இன்றைய நிதிசேகரித்தலுக்கான Bedford லே நிகழ்ந்த அவசரக்கூட்டம், பொஸ்ரனின் CBS செய்தியின் இரவு 11:00 செய்தியிலே காட்டப்பட்டது (தமிழ்க்கூட்டமைப்பு என்று சொல்லப்பட்டு; நேற்றும் முந்தநாளும் பொஸ்ரன் நியூ இங்கிலாந்து ஸ்ரீலங்கா கூட்டமைப்பின் செவ்விகளும் கூட்டங்களும் காட்டப்பட்டன)


=====

இலங்கையின் கிழக்கிலே, இன்று பெய்யும் கடும்மழை, இன்னும் பல சிரமங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, சில தேவைகள்: நிவாரணப்பொருட்களை ஏற்றிச்செல்ல, கனரக வாகனங்கள், தங்குமிங்களுக்குக் கூரைத்தகடுகள், மின்சாரமோ ஒளிவசதியோ அற்றுப்போனதால், மின்பிறப்பாக்கிகள் (generators), சமைப்பதற்கான பாத்திரங்கள்


சிதறல்

படிவு

SRI LANKA/Tsunami Relief and status of minority victims

Date: Wed Dec 29, 2004 8:06 pm
Raveen Satkurunathan

I flew back from Sri Lanka just yesterday. Given the geo political and local ethnic situation the only real money and help that will reach the minority Tamil and Mulsim people in Sri Lanka can only be through the NGO Tamils Rehabilitation Orgainsation (TRO)and other impartial NGOs. The National Govt. cannot be expected to work impartially at all given their past and current record.

Many NGOs are staffed by Sri Lanka's majority community who are mostly kind hearted and willing to help but some even under such tragic circumstances are not impartial as can be seen by the diversion of UNICEF food relief from affected minority Tamil and Muslim areas to majority Sinhalese areas by low level UNICEF empoloyees against management wishes. (Confirmed by Canadian Broadcasting Company Radio News 12:00 Noon EST Dec 29, 04 but unconfirmed by UNICEF)

TSUNAMI ... by all the top cartoonists!

குவியம்

இப்போது இந்தியாவில் தெற்குப்பகுதியிலே கன்யாகுமரியிலே மீண்டும் சுனாமி(? - aftershock? In such case, it won't be that much of big as it was on 26th) என்று சக்தி வானொலியிலே கூறுகின்றார்கள்.

(11:00 AM SL Time) நாகப்பட்டினம், கேரளாவிலே நடந்துதொடர்பாக, இலங்கை வளிமண்டவியற்றிணைக்களத்திடம் சக்தி வானொலி கேட்டதற்கு, ஆங்கிலத்திலே அல்லது சிங்களத்திலேயெனில் சொல்லவிடலாம்; ஆனால், தமிழிலே வானொலியிலே சொல்வதற்குத் தடை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, சொல்ல இருந்த வளிமண்டவியலாளரைத் தடை செய்திருப்பதாக, சக்தி சொல்கிறாது. காலியிலும் சிறிதளவு கடற்றண்ணீர் உட்புகுதிந்திருக்கின்றது. ஆனால், பதட்டமடையாமல் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்கப்பட்டிருக்கின்றது.

(1:15 பிப இலங்கை நேரம்) ஈழத்தின் கிழக்கு-காத்தான்குடியிலே அலை காலையிலிருந்ததிலும்விட, பத்து அடி கூடுதலாக அடிப்பதாக (உறுதிப்படுத்தப்பட்ட தகவலென) சக்தி வானொலி சொல்கிறது. இலங்கை அரசும் தமிழ்நாட்டு அரசுபோல, கடற்கொந்தளிப்பினைக் குறித்த அபாய அறிவிப்பினை வெளியிட இருப்பதாகத் தகவல்.

[BBC]: Last Updated: Thursday, 30 December, 2004, 07:21 GMT: India tsunami alert sparks panic

(1:35 பிப இலங்கை நேரம்) இந்திய வானிலையறிவிப்பு நிலையம் இப்போது ஊழியலை, நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதாலே அச்சப்படத்தேவையில்லை என்றும் ஆனால், பாதுகாப்பினைக் கருதி முன்னெச்சரிக்கையுடன் நாட்டுள்ளே நகரும் வண்ணம் சொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி

(1:40 பிப இலங்கை நேரம்) கிழக்கிலே பாண்டிருப்பிலே, ஊழியலை வந்துவிட்டதாக வதந்தி; தேவையற்ற வதந்திகளினாலான பதட்டம் ஏற்படுத்தும் அநர்த்தம் குறித்து, வதந்திகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி வேண்டுகோள்.

(1:55 பிப இலங்கை நேரம்) தென் ஈழத்திலே வதந்தியின் காரணமாக, மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் அங்குமிங்கும் ஓடுவதாலே, ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது; பலரிடம் வானொலி தற்சமயம் இல்லை; வாகனங்களுடன் உள்ளவர்கள் ஓட, மீதியானோர் அதற்கிடையிலே இடைப்பட்டு விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

(2:05 பிப இலங்கை நேரம்) சென்னையிலிருந்து சக்தி வானொலியோடு தொலைபேசிய சுஜாதா என்ற பெண் சொன்னதாவது, "காலையிருந்து சிறிது பதட்டமாக உள்ளது; மக்கள் கடலைப் பார்க்கப்போகவேண்டாமென்று சொல்லப்படிருக்கின்றது. ஆனால், திரும்ப ஊழியலை வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவே என்று சொல்லப்பட்டிருக்கின்றது."

(2:25 பிப இலங்கை நேரம்) மன்னாரில் பள்ளிமுனை என்ற இடத்திலே சிறிது நீர் உட்புகுந்ததாகவும் வடக்கிலே மாதகல், குருநகர் போன்ற பகுதிகளிலே நீர்மட்டம் சற்றே அதிகமாக இருப்பதாகவும் செய்தி. (ஆனால் அதிர்வின்பின்னான எதிரொலி அலைகள் அதிக உயரம் எழா வாய்ப்பதிகமில்லையென்பதாய் என் அந்நாட் கடலியல், நிலநுட்பக்கல்வியின் கற்கை மற்றும் தரவனுபவம்)

Wednesday, December 29, 2004

புலம்

எழுத்துக்கத்தையுட் பதுங்கும் கழுதைப்புலி

சற்று நேரம் முன்னாலே கண்ட ஒரு பதிவு மிக வெறுப்பினையும் ஆத்திரத்தினையும் ஏற்படுத்தியது. அதற்குச் சரியான விதத்திலே பதில் கொடுப்பது மிகச்சுலபம். ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வலைப்பதிவின் பின்னூட்டப்பெட்டியிலே நிகழ்ந்த வலைச்சண்டையின் பின்னாலே, சில விடயங்கள் தொடர்பாக எதையுமே இனிமேல் பேசுவதில்லை என்றும் மிதமிஞ்சிய உயர்வுமனப்பிறழ்வினாலே பாதிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சில கறுப்பு-வெள்ளைமட்டுமே காண் கண்களுள்ள மேலாதிக்கவாதிகள் சிலருடன் எதையுமே எப்போதுமே பேசுவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

படிவு

தமிழ்நாடு, ஈழத்திலே நடந்தது, நடப்பது பற்றி

[பதிவுகள்]: சுனாமி! - ஜெயமோகன்

[PBS]: The Newshour With Jim Lehrer: Real Audio:
An L.A. Times reporter describes the scene in India, where the death toll has reached more than 11,000.[நாகர்கோவில் வீதிகளிலே அரசுசார்பற்ற அமைப்புகள் அதிகம் காணக்கூடியதாக இருப்பதாகவும் காணவே முடியாதவர்கள், அரசுசார் ஊழியர்கள் என்றும் கூறினார்]

Tuesday, December 28, 2004

சிதறல்

உணர்வு1997 இல் வேறொரு சந்தர்ப்பத்திலே எழுதியது இன்றைக்கு

CNN தலைப்புச்செய்தி


சங்கதி தெரியுமெண்டோ?
சி என் என் இலை தலைப்புச்செய்தியெல்லோ?
நயோமி சம்பொல் எல்லோ குளிசை குடிச்சிட்டாள்.
என்ன! பெடிச்சி ஆரெண்டோ?
பேய்க்கேள்வி உதுவெல்லே?
பசியால விலாவொட்டிக் கொங்கை வற்றி, பரலோகம் போய்ச்சேர்ந்த
பாரீசவாதக் கொங்கோ கிழவி போலை, பார்வைக்கு எண்டாலும்
கறுத்தஇளங்குமரியின்ரை,
ஒடிச்சு வத்தப் போட்ட ஒடியலுடம்புக்கு
ஒண்டுமண்டெடியோ, பரிஸில,
ஓரங்கிழிஞ்ச உடுப்புப்போட்டு
நடத்திப் பாக்க உள்ள கூட்டம்.


புலம்

எதேச்சையாய் எண்ணங்களும் அலையும்

ஊழியலை திருகோணமலையைத் தாக்கியது தமிழ்நெற்றில் அறிந்தது தொட்டு, குடும்பத்தினரின் நிலை அறியும்வரையுமானவற்றினை உள, களநிலையை விரித்தால், ஒரு புதினம் தேறும்; அதனாலே, அதைப் புதினமாகவே எழுத வைத்துக்கொள்கிறேன்.

இந்தப்பேரலை-அழிவின் பின்னாலே படும் செய்திகளின் அடிப்படையிலே இப்போதைக்குச் சில எண்ணங்கள்


Monday, December 27, 2004

சிதறல்(1997-1999 இல் ஒரு பெருநிலநடுக்கத்தின்போது எழுதியது, இன்றைக்கும் பொருந்துமென்பதால்)

மீளப் பிறந்தேன் மனிதனென...


இயற்கைத்
துயர் கொண்ட நிகழ்வுகளை
நான் நேசிக்கின்றேன்;
அவை என் கண்முன்னே நகரட்டும்;
காதுவழி விழு சங்கதியாய் அமையட்டும்..
.... நான் அறியாப்
பிறருக்கு
நேரும்
துயர் கொண்ட நிகழ்வுகளை
நான் நேசிக்கின்றேன்;


படிவு

இலங்கையிலே பேரலைப்பின்விளைவுச்செய்திகள்

ஈழத்திலே பேரலையின் விளைவுப்படங்கள்

ஈழவிஷன்
தமிழ்நாதம்

இலங்கையிலே பேரலைவிளைவாகத் தொடர்பற்றுப்போன உறவினர்களைத் தேடுகின்றவர்கள் தம் தகவல்களைக் கொடுத்துத் தகவல்களை அறியத்தரும்வண்ணம் சக்தி (இணையஒலி/வானொலி) நிகழ்ச்சியினை நடத்துகின்றது


Thursday, December 23, 2004

துத்தம்


பிறநாடுகளைப் பொறுத்தமட்டிலே தனியே ஜனரஞ்சக துள்ளிசைமட்டுமே தம் இசைக்கூறு என்ற தோற்றபாட்டினைத் தந்திருந்தாலுங்கூட, அமெரிக்கக்கூட்டுமாநிலங்களின் இசையின் பரப்பு துள்ளிசைக்கு அப்பாலும் விரிந்ததும் ஆழமானதுமாகும். தமிழர்பின்புலத்திலே, தாலாட்டு முதல் ஒப்பாரி வரையென்று நாட்டுப்புறப்பாட்டுகளிலிருந்து சாமி, போர், தொழில் என்பவற்றின் கூறுகளை உள்ளடக்கி பாடலும் இசையும் உணர்த்து ஊடகமாகவும் ஊட்டமாகவும் ஊடாடியிருப்பதைப் போல சமாந்திரமான ஒரு சூழ்நிலையை அமெரிக்காவிலும் காணலாம்.

சிதறல்

படிமம்

Monday, December 20, 2004

சிதறல்கணம்


நார்சீசதேசம்

முக்கலுடன்,
தற்காமச்சந்துகளில் நாமிடுங்கிக்கொண்ட அவலம்.

தன் தேகத்தை, தேசத்தை, நினைவை,
குறியை, குடியை, குலத்தொழிலை மட்டும்
உள்ளபொழுதெல்லாம் ஒருமித் துணத்தி யுலர்த்தி
கசங்கக் கொடி போட்டலைந்து திரியும் விதைகளம்,
மணம் காயா வெயில் மனம்.


படிமம்

சிதறல்Sunday, December 19, 2004

புலன்

இரண்டு மாதங்களுக்குமுன்பு, ஒரு சனிக்கிழமை தனது குழந்தைகளைத் தமிழ்வகுப்புக்கு அழைத்துச் சென்ற நண்பனோடு நானும் தொத்திக்கொண்டேன். வயதிற் பரந்து நான்கிலிருந்து பன்னிரண்டு வரை எண்ணிகையிலே இருபது பிள்ளைகள்; ஆகச் சிறிய பிள்ளைகளிலே சிற்றுண்டி தின்னும் ஆர்வமும் சக பேச்சொத்த நண்பர்களைச் சந்தித்த சந்தோஷமும் மின்ன, கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளின் கண்களிலே மிரட்சி, வெறுப்பு, நக்கல் எல்லாம் கலந்து பெற்றோரின் கட்டாயத்துக்கு வந்து நாற்காலிகளின் நுனிகளிலே எப்போதும் முடிந்தோடுவோமென்று குந்தியிருக்கும் நிலை தெரிந்தது; பெற்றோர்கள் மிகவும் உற்சாகமாகத் தமிழ்மொழியின் பண்பாட்டின் எதிர்காலத்தினைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியோடு, இலங்கை அரசியலையும் அமெரிக்க உதைபந்தாட்டத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஓங்கி உதைத்தடித்துக்கொண்டிருந்தார்கள்.

விரிவும் தொடர்வும்~

சிதறல்

À¢ì §¸ Á¡÷ð

Thursday, December 02, 2004

கந்தை

கந்தை: கோல்மன் & லெவினுடைய 'உணவுக்கீடான எரிபொருள்' திட்டம்
ஆடிய காலும் பாடிய நாவும் என்பதுபோல, அலைந்த வலையும் என்பதான நிலை. இணையம் கிட்டத்தட்ட இரவுநேரத்திலே மலைப்பாதைப்புகையிரத்திலே ஓர இருக்கையிலே பயணிப்பதுபோல எனக்கு ஆகியிருக்கின்றது என நினைக்கிறேன்; எட்டியிருந்து அதன் அழகை இரசித்துக்கொண்டு என் பாதையிலேயே இலக்கினை நோக்கிச் செல்வதாக இருக்கின்றது. இந்தநிலையிலே உள்ளத்துக்குக் கிஞ்சித்தும் பிடிக்காதபோதும், இந்தக்கூடிக்காணும் காட்சியின் தேவைக்காக, ஒரு காரியம் பண்ணவேண்டியதாக இருக்கின்றது; என் துறை சார்ந்த மீதிப்பதிவுகளின் குவியமான இந்தப்பதிவினை இதுவரை காலமும் தகுதரத்திலேயே நிறுத்திவைத்திருந்தேன்; அதை விரும்பாமலே, காலத்தின் கட்டாயமாக யூனிக்கோட்டுக்கு இன்றுமுதல் மாற்ற எண்ணியிருக்கின்றேன்.