Friday, October 05, 2007

மாசிலா, இரயாகரன், தமிழச்சி இன்னார் பிறர் & புரட்சி

கரைவு - 13

ஆடியவன் காலும் பாடியவன் நாவும் எவ்வளவுதான் கோணலென்றாலும், நிற்காது. யாராவது 'தக்கிட'த் தொடங்கினால் துமித்து நுனி விரலையாவது அடிக்க வைக்கப் பார்க்கிறது. நீட்டி முழக்க நேரம் வாய்ப்பிலை. அதனால், சிலருக்குச் சில கேள்விகள்


இரயாகரன்:

"மாதிரி வகையாறுகளுக்கு நாம் பொழுது போக்காக பதிலளிக்க எமக்கு நேரம் கிடையாது. இதனால் இது போன்றவற்றை நாம் அனுமதிக்க முடியாது" என்று சொல்லி அசுரன் (& உங்கள்) இற்கான எனது (புலிப்பாசிசபினாமிமாபியா) பின்னூட்டத்தைத் தவிர்த்திருக்கின்றீர்கள்;

1. இப்படிச் சொல்லும் உங்களுக்கும் ட்ரொட்ஸ்கியைக் கலைத்துக் கொன்ற ஸ்டாலினுக்கும் இராயகரன்/விஜிதரனின் வாய்களை மூட எண்ணியவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

2. இதே மனப்பான்மையோடு நான்கூட 2002~2005 இலே உங்களின் மடல்களை வைத்துச் செயற்பட்டிருக்கமுடியாதா?

3. உங்களின் கருத்துகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களெல்லாம் புலிப்பினாமிபாசிஸ்டுகள் என்கிற உங்களின் போபியாவுக்கும் இந்து இராம், அவருடைய சகலை, சம்பந்திகளின் போபியாவுக்கும் என்ன வித்தியாசம்?

4. இராஜீவ் காந்தி கொலை, ஈழத்தின் அரங்கிலே தியாகிகள்-துரோகிகள் இவர்கள் கட்டமைப்புகள், புலிகளின் மீறல்கள் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு என்ன தெரியும்?

5. நீங்கள் சொன்னதையே /..../ என்று அசுரன் பின்னூட்டமாக உங்கள் பதிவுக்கு இடுவதைப் போல, நானுமிட்டால், அதை மாதிரி வகையறாக்கள் என்று சொல்லமாட்டீர்களென்று நம்பலாமா?

6. மக்கள் புரட்சி... என்பதிலே பு என்பதை எழுத அருளரின் லங்காராணிமுடிவு ஞாபகத்துக்கு வந்து என்னுள் முரண் சிரிப்பது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்கேனும் புரிகிறதா என்று கேட்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணம்_வைத்தியசாலையிலே உளமருத்துவராகவிருந்த தயா சோமசுந்தரம் நேற்று பிரசுரித்த கட்டுரையிலே (Collective trauma in northern Sri Lanka: a qualitative psychosocial-ecological study) சொல்லப்படும் மக்களுக்குப் போய், தரகுமுதலாளித்துவத்தினைப் பற்றி இன்றைய நிலையிலே சொல்லி, முழு அகிலப்புரட்சிமுட்டைப்பொரியல் போடலாமென்று மெய்யாகவே நம்புகின்றீர்களா?

7. நான் உங்களின் பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியாவிலேயிருந்து தப்பி, மக்கள்புரட்சிக்காரனாக (அமெரிக்க ஏகாதிபத்திய இருப்புக்கும் பங்கம் வராமல்) மாறிப் போராட என்ன செய்யவேணும்? ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியத்திலேயிருக்கும் உங்களுக்குக் கட்டாயம் தெரியுமென்ற நம்பிக்கையிலேயே கேட்கிறேன். ஓய்வு நேரத்திலே காண்ட், அல் தூஸர், பூக்கோ, இந்ரா நூயி, வோல் மார்ட் எல்லாரைப் பற்றியும் எல்லாத்தைப் பற்றியும் இடையறாது கூகுல் செய்து, இந்து ராம் போன்ற இடதுசாரிகளை மேடையேற்றிப் பேசும் பெரும் சுதந்திரப்பல்கலைக்கழக நூலகங்களிலே வாசித்துச் செயற்படத் தயாராகவிருக்கிறேன் என்பதையும் முன்னேற்பாடாக அறியத் தருகிறேன்.

(பிகு: இதற்குப் பதில் சொல்லி புரட்சி நேரத்தை நீங்கள் செலவழிக்கத்தேவையில்லை. அதனாலே, என் கணித்திரையிலேயே கேள்விகள் துகள்மின்னாய்த் தெறித்துவிட்டுப்போகட்டும்)


ஸ்ரீரங்கன்:

யோகன் போன்ற இழிபிறவிகளுக்குத் தமிழச்சியின் பதிவுப்பின்னூட்டத்திலே திட்டியிருக்கின்றீர்கள்.

1. தமிழச்சியின் இடுகைத்தலைப்பினைச் சரியாகப் பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்கள் கொஞ்சம் நிதானமாக என்ன எது என்று பார்த்து வாசிப்பீர்களென்று நான் எதிர்பார்ப்பது தவறா?


தமிழச்சி:
பரிஸிலே தமிழ்வகுப்பொன்றிலே நடந்த சிக்கலைப் பற்றி எழுதியிருந்தீர்கள்

1. இவ்விடுகையிலே தமிழீழவிடுதலைப்புலிகளை நீங்கள் விமர்சித்திருப்பதாக (எழுதும்போதோ, இப்போதோ) கருதுகின்றீர்களா? தமிழ்ச்சோலை என்று நீங்கள் விடுதலைப்புலிகள் என்ற அர்த்தத்திலேயே சொன்னீர்கள்?

2. பரீஸிலே உங்களைத் தொலைபேசியிலே திட்டியவர் ஈழத்தமிழர்தான் என்று நிச்சயமா? (நிச்சயமாக, அப்படியாகத் திட்டக்கூடிய தறுதலை ஈழத்தமிழர்கள் நிறையப்பேர் பரீஸிலே மட்டுமல்ல, பாரெல்லாம் பரந்திருக்கின்றார்கள் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. தமிழ்ப்பித்தன் என்ற பதிவுப்பேர்வழியே இதற்குச் சிறப்பான எடுத்துக்காட்டு. புலிகளை ஆதரிக்கும் ஒரு பகுதியிலே இருக்கும் வெள்ளாளத்திமிர், பெட்டையெண்டால் தூசணத்தை வச்சே அமுக்கலாமெண்ட ஆணாதிக்கத்திமிர் (தமிழ்மணத்திலிருந்து வேலையே செய்யாமல் காலையாட்டிக்கொண்டிருந்துவிட்டு, பெண்களின் உழைப்பினை உறுஞ்சிக்கொண்டு, கலைத்துவிடும் என் ஆணாதிக்கத்திமிரிலும்விட இதெல்லாம் குறைவுதான் என்றபோதிலுங்கூட :-)) கொண்ட பதினைந்து ஈழத்தமிழரையாவது நான் உடனடியாகப் பட்டியலிடுவேன். அதனால், ஈழத்தமிழர் உதெல்லாம் செய்யமாட்டாரென்பதல்ல இங்கே நான் சொல்ல வருவதென்பதைப் புரிந்திருப்பீர்களென நம்புகிறேன்)

3. ஈழத்தின் சாதிக்கட்டமைப்புக்கும் தமிழ்நாட்டின் சாதிக்கட்டமைப்புக்குமான புரிதலோடுதான் துண்டுப்பிரசுரக்"கலகத்தை" நீங்களும் மாசிலாவும் மேற்கொண்டீர்கள்? இந்தக்கோயில் கோதாரியிலெல்லாம் எனக்கொன்றும் பிடிப்பில்லை. புலம்பெயர்ந்த பெரும்பான்மையான ஈழத்தமிழ்ச்சமுதாயத்தின் இந்த "பண்பாடு" காவும் மந்தைத்தனத்திலே எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், பெரியாரின் தமிழ்நாட்டுக்கான (இந்தியாவுக்கான) தேவையின் புரிதலோடுமட்டும், வேறான அமைப்பினைக் கொண்ட ஈழத்தமிழ்ச்சமுதாயத்திற்கு நீங்கள் துண்டுப்பிரசுரம் கொடுத்தால், உங்கள் பிரசுரத்திலே நீங்கள் சொல்லாத புலிகள் குறித்து(ம் தமது அரிப்புக்குச் சேர்த்துச்) சத்தியக்கடதாசி வாசிக்கச் சிலருக்கு உதவும். ஆனால், உங்கள் "கலகம்" எத்துணை வெற்றி பெற்றதென்பதினை நீங்கள் அதன் பின்னாலே அறிந்துகொண்டீர்களா? (உந்தப்புலம்பெயர் ஆரம்பரக்கூத்துகள் அப்படியாச்சும் நின்றால், மிக்க மகிழ்ச்சியே)
(கலகம் என்பதை "" உள்ளே போட்டிருப்பதற்கு மன்னிக்கவும்; இப்படியான செயற்பாடுகளுக்கெல்லாம் 'கலகம்', 'புரட்சி' என்று அடை(மொழி) போட்டு மென்று கொண்டால், பத்தாம் வகுப்பிலே, நான் நண்பனுக்காகக் கொண்டுபோய்க் கொடுத்த கொப்பித்தாள் லவ்லெட்டரும் அந்நேரத்துஈழச்சமூகத்திலே ஒரு கலகமே; 81 இலே பள்ளிக்கூடச்சுவரிலே கரித்துண்டாலே, "ஏப்ரல் 29 பாராளுமன்றத்திறப்பினைப் பகிஸ்கரிப்போம்" என்று எழுதியதும் புரட்சியே. 'பார்லே பீர் சாப்டுவதே பாரியபூகம்பக்கலகம்' என்பதாகக் காட்டிக்கொள்ளும் சூழலிலே மட்டுமே இது கலகமாக எடுபடும்)


சத்தியக்கடதாசிக்காரர்கள்:

1. பரீஸிலே தமிழச்சி துண்டுப்பிரசுரம் விநியோகித்ததிலே புலிகள் குறித்த உங்கள் விமர்சனமும் பதிவிலே வந்திருக்கின்றதே; இதுதான் தமிழச்சியின் கருத்துமா? உங்கள் கருத்துமட்டுமா?

2. பரீசின் பெரியாரியப்போராளிக்குழுவிலே நீங்களும் அடக்கமா?

3. ஈழத்தின் அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத்தொகுதிக்கு மாலன் அணிந்துரைப்பதற்கும் ஈழத்தின் தலித் சிறுகதைகளுக்கு மார்க்ஸ் முன்னுரை எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்? (நிச்சயமாக, உள்ளூர்விபரங்களை நன்கு நேரடியாக அனுபவித்து அறிந்தவர்கள் முன்னுரை எழுதுவதுதான் முறை;-) என்றாலும்....)


கூல் (Hoole):

மனிதநேயவிருதினைப் பெற்றிருக்கின்றீர்கள்; அஞ்சாமலே செயற்படுவதற்கு வாழ்த்துகள். எல்லாப்புறத்துக்கெடுதல்களையும் உங்களுக்கு விரும்பியவரை, இயன்றவரை வெளிக்கொணர்ந்திருக்கின்றீர்கள். நன்றி.
ஆனால்,

1."IPKF was victim of vile LTTE propaganda" என்று சொல்லியிருக்கின்றீர்களென இந்துஸ்தான் டைம்ஸ் பி. கே. பாலச்சந்திரன் சொல்லியிருக்கின்றாரே? இது நகைச்சுவையா? நாகச்சுவையா? [இம்மண்ணுண்ணிப்பாம்புக்கூற்று, இந்திய+ஸ்ரீலங்கா ஊடகங்களிலே என்னென்ன விதங்களாக மலைப்பாம்புக்கூற்றுகளாக உருமாறி வரப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்த்து இரசிப்போம்.]


மாசிலா:

ஈழத்து அகதிகளாலே பரீஸிலே புதுவைத்தமிழர்களுக்கு இழுக்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இனி, ஈழத்தமிழர்-புதுவைத்தமிழர் என்று பிரித்துச் சொல்லவேண்டுமென்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அதிலே சிக்கலில்லை. பல இடங்களிலே அப்படியான தேவையுள்ளதே.

1. புதுவையிலே பிரெஞ்சு குடிமைகளாக இருந்ததாலே பரீஸிலே உங்களுக்கு அதிதி அந்தஸ்து வந்திருப்பதாகவும் ஈழத்தமிழர்கள் அகதித்தமிழர்களென்று வந்திருப்பதாகவும் கருதிக் கொண்டு எழுதும் உங்களுக்கு,

அ. பெரியாரைப் பற்றிப் பேச அருகதையிருப்பதாக நினைக்கின்றீர்களா?

ஆ. தமிழச்சியின் (நீங்கள் உடன் தொத்திக்கொண்ட) பெரியாரிஸ்டுக்கலகத்தினை ஆதரித்துப் பதிவு போட்ட, சத்தியக்கடதாசிக்காரர்கள் (ஷோபா சக்தி, சுகன் என்று நினைக்கிறேன்) இவர்களும் இதே அகதிகளாகத்தான் வந்தார்கள். அவர்களும் உங்களிடம் சான்றிதழ் பெற்றபின்னாலேதான் பரீசிலே உலாவ வேண்டுமா?

இ. உங்களுக்கும் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டிலே போகின்ற ஈழத்தமிழர் எனும் பத்திரிகையாளருக்கும் ஈன அகதிக்கழுவிநாயே என்கிற மூர்த்திக்கும் என்ன வித்தியாசமிருப்பதாகக் கருதுகின்றீர்கள்?

2. ஈழத்தமிழர்கள் வேறு என்று சொல்கின்ற புதுவை(க்கு)த் (திரும்பவிருப்பதாகச் சொல்லும்) தமிழர் நீங்கள் எதற்காக, ஈழத்தமிழர்களின் ஆடம்பரக்கோயில்களின் கூத்துகளிலே "துண்டுப்பிரசுரக்கலகம்" செய்யப்போகின்றீர்கள்? பரிசிலே வாழும் புதுவைத்தமிழர்கள் அப்படியாக ஆடம்பர அலங்கோல அலங்காரம் செய்பவர்களில்லை என்றால், என்னை மன்னிக்கவேண்டும்.

3. தமிழச்சிக்குத் தொலைபேசித்திட்டியவர் நிச்சயமாக ஈழத்தமிழரென்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவிலே/தமிழ்நாட்டிலிருந்தும் யாரோ திட்டினார்கள் என்கிறார். அவர்களுக்கும் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களாக இருக்குமோ?

4. எப்போதோ கேட்கவேண்டுமென்று வைத்திருந்த கேள்வி; இப்போதுதான் வசதிப்பட்டது; ஸ்பெஷல்-ஆப்பு.கொம்மிலே ஒரு முறை மூர்த்தி யாரைப் பற்றியோ வழக்கமான அன்புததும்பும் உடற்கூற்றியல் மொழியிலே பார்ப்பன்னர் என்று திட்டியபோது, எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று வியந்து, வேறு ஒருவரின் பதிவு முகவரி கொடுத்து, அவரைப் பற்றியும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போடு என்று அன்போடு கேட்ட உங்களுக்கு எப்படியாக சென்ற மாதம், மூர்த்தியினை இந்த மாதிரியாகக் கடிந்துகொள்ளும் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் வீரத்துணிவும் பிறந்தது? (இப்போது, அந்த ஸ்பெஷல்-ஆப்பு பதிவு இல்லாததால், உங்களுக்கு இப்போதைக்கு அப்படியாகச் சொல்லவில்லை என்று மறுக்கும் வாய்ப்பு உள்ளது - என்னுடைய கணணியிலே அவ்விடுகையும் பின்னூட்டங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்)




இவற்றுக்கெல்லாம் எவருமே பதில்களை, அவரவரது புரட்சி, கலக நேரங்களை வீணாகச் செலவு செய்து தரத்தேவையில்லை என்பதையும் அப்படியாகத் தராமல் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தினைப் உங்கள் புரட்சிக்கான/கலகத்துக்கான என் பங்களிப்பாகக் கொள்ளவேண்டுமென்றும் அன்புடனும் தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்


"எம்மிடம் கேள்விகள் மட்டுமேயுள்ளன; பதில்களைத் தாருங்கள்" - யாரோ புலம்பெயர் ஈழத்தமிழ்ப்பின்-நவீனத்துவஇலக்கியவாதப்புரட்சியாளர் சொன்னதாக என் நண்பரொருவர் சொன்னது. மெய் பொய் தெரியாது. ஆனால், இங்கே என் நிலைக்கு இக்கோள் பொருந்துவதாலே எடுத்துப் போட்டிருக்கிறேன்.


இவ்வண் இவன்,
பாசிசப்புலிப்பினாமிபோபியாக்களின்கண்ணிடைமாபியா

35 comments:

Anonymous said...

தோழர் தமிழிச்சி தனது பதிவொன்றில் அவருக்குத் தொல்லை கொடுப்பவரைப் பார்த்து நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனாயிருந்தால் நேரே வாடா என்கிறார்.

இதன் மூலம் யாரோ ஒருவரின் அம்மாவைக் கேள்விக் குள்ளாக்குவதன் மூலம் தன்னை தொந்தரவு செய்பவருக்கு கனதியான பதிலைக் கொடுக்க முடியும் என நம்புகிறார்.

உடலுறவு ரீதியில் பெண்களை இழிவுபடுத்துவது வழமையாக ஒரு ஆணாதிக்க சிந்தனை தான். இங்கே வழமை மாறியிருக்கிறது.

எனது கேள்வி என்னவெனில் பெரியாரின் பெண்விடுதலை குறித்துப் பேச தமிழிச்சிக்கு அருகதையுள்ளதா ?

மாசிலா said...

உங்கள் பதிவை பார்த்தேன் நண்பரே. படித்த பிறகு பதில் சொல்வேன்.

கொழுவி said...

புரட்சி செய்யும் நண்பர்கள் எம்கேள்விகளுக்குச் சொல்லும் விதங்களில் விரிந்து கிடக்கும் அலட்சியங்கள் திமிருகள் உனக்கொண்ணும் தெரியா போ என்ற நிலைப்பாடுகள் வன்முறைகள் இவற்றைக் கருத்திலெடுத்துப் பார்த்தால்

முன்னாள் போராளிகளான இவர்களின் கரங்களின் அதிகாரங்கள் போயிருந்தால் புலிகளை விட மோசமானவர்களாய் இருந்திருப்பார்களோ என்று எனக்கொரு கேள்வி எழுகிறது.

(புலிகளை மோசமானவர்கள் என்றே கொள்வோம்)

கொழுவி said...

//மாசிலா, இரயாகரன், தமிழச்சி
இன்னார் பிறர் அன்ட் புரட்சி//

அடடே.. தலைப்பு கவிதை மாதிரி இருக்கே .. (கனநாளுக்குப் பிறகு கணணியில இருக்கிறன். அதனால உங்கட பதிவில விளையாடிக்கொண்டிருக்கிறதுக்குச் சொறி )

Anonymous said...

//இவற்றுக்கெல்லாம் எவருமே பதில்களை, அவரவது புரட்சி, கலக நேரங்களை வீணாகச் செலவு செய்து தரத்தேவையில்லை என்பதையும் அப்படியாகத் தராமல் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தினைப் உங்கள் புரட்சிக்கான/கலகத்துக்கான என் பங்களிப்பாகக் கொள்ளவேண்டுமென்றும் அன்புடனும் தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்//
இது பின்னூட்டம் போடுகின்ற எங்களை போன்றவர்களுக்கும் பொருந்துமா :))

Sri Rangan said...

//ஸ்ரீரங்கன்:

யோகன் போன்ற இழிபிறவிகளுக்குத் தமிழச்சியின் பதிவுப்பின்னூட்டத்திலே திட்டியிருக்கின்றீர்கள்.

1. தமிழச்சியின் இடுகைத்தலைப்பினைச் சரியாகப் பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்கள் கொஞ்சம் நிதானமாக என்ன எது என்று பார்த்து வாசிப்பீர்களென்று நான் எதிர்பார்ப்பது தவறா?//



பெயரிலி,வணக்கம்.

தங்கள் கேள்விகளிற் தொக்கி நிற்கும் விழிப்பேற்றும் கருத்துக்களை நான் மறுப்பதற்கில்லை.

நீங்கள் சுட்டிக்காட்டியபோதுதாம்"யோகன்"என்ற இழிபிறவிக்கு என்பதும்(யோகன் என்ற நாமத்தைச் சொன்னவன் என்பதாகவும் குறித்து நிற்கும்(...)ஒரு மனிதரைச் சுட்டும்)அதைத் தொடர்ந்த கருத்துக்களில் தூக்கலாக வந்துவிழுந்த கருத்துக்கள் யோகன் பாரீஸ்க்கு அளவான தொப்பியாகிப் போனதும் உண்மையே!அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதும் உண்மையே!

தமிழச்சியின் பதிவின் தலைப்பை மட்டுமல்ல பதிவினுள் ஒரு உண்மையும் நான் ஊன்றிக் கவனித்திருந்தேன்.யோகன் என்றவர்(யோகனாகத் தன்னைச் சுட்டியவர்) தொடர்ந்து தமிழில் உரையாட முடியாது பிரஞ்சிய மொழியில் உரையாடும்போது,நிச்சியமாக அவர் யோகன் பாரீஸ் இல்லையென்பது நிரூபணமாகிறது.ஒழுங்காகத் தமிழ் பேசவராத தலைமுறையானது நமது மூன்றாந் தலைமுறையே.எனவே,பிரான்சில் இரண்டாவது உலக மகாயுத்துக்கு முதலே இராணுவத்தில் சேர்ந்து,"பெரிய படிப்புப் படித்தவர்களின்" வாரீசுகளே அதைச் செய்திருப்பதென்பது எனக்குத் தெரியும்.என்றபோதும்,நான் விளித்த முறைகள் மிக நேர்த்தியாக யோகன் பாரீஸைத் தாக்கிறதாகப் பொருள் குறித்து நிற்பதால்,அதையொட்டி நான் மனம் வருந்துகிறேன்.

எனை நோக்கிய தங்கள் கேள்வி நியாயமானது.

அதை நான் மறுப்பதற்கில்லை.


..."தோழமையோடு,அன்புடன்"... உண்மைதாம்!(:-))) )


அந்தந்த வார்த்தைகளின் அர்த்தம்(...)குட்டு வலிக்கிறது பெயரிலி.எதுக்கும் இப்படிக் குட்டினால் ஏலவே மண்டை வெடித்துக் கண்ணின் முன் கரும் புள்ளிவேறு தாண்டவம் ஆடும்போது... எனக்கு ஏதாவது பக்க விளைவுகளைத் தராது இருக்க எல்லாம் வல்ல எங்கள் கொழுவியை வணங்கி,நித்திரைக்குப் போகலாமா?

தமிழ்பித்தன் said...

///ஈழத்தமிழர்கள் நிறையப்பேர் பரீஸிலே மட்டுமல்ல, பாரெல்லாம் பரந்திருக்கின்றார்கள் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. தமிழ்ப்பித்தன் என்ற பதிவுப்பேர்வழியே இதற்குச் சிறப்பான எடுத்துக்காட்டு///

மிகப் பெரிய குற்றத்திற்க்கு இன்று என்னை உதாரணமாக்கியிருக்கிறீர்கள்

அப்படி எனது பதிவில் நீங்கள் கண்ட கெட்ட வார்த்தை என்ன?
மனது என்னது தானே
இப்படி பார்த்தால் தமிழில் முக்கால் வாசி வார்த்தைகளுமே கெட்டவைகள் தான்
வேறு ஏதும் புதிதாக கெட்ட வார்த்தைகள் இருந்தால் தெரிய படுத்துங்கள் பதிவில் தவிர்க்க உதவும்
சந்தர்ப்பத்தின் முன் நான் இன்று குற்றவாளி

வெற்றி said...

/*நீட்டி முழக்க நேரம் வாய்ப்பிலை. */

உங்களுக்கு வருசம் 365 நாளும் இந் நிலை தொடர பிரார்த்திக்கிறேன். :-)) அப்பதான் உங்கடை பாணிக்கு மாறாக கொஞ்சம் நீளமில்லாத பதிவுகள் வரும் :-))[இது கூட நீளம்தான் :-))]

/* கூல் (சகோதரர்கள்): */
இவர்களின் பெயரை அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்திலும் போட்டால் உடனடியாக விளங்கிக் கொள்ளலாம்.

மலைநாடான் said...

//தமிழச்சியின் பதிவின் தலைப்பை மட்டுமல்ல பதிவினுள் ஒரு உண்மையும் நான் ஊன்றிக் கவனித்திருந்தேன்.யோகன் என்றவர்(யோகனாகத் தன்னைச் சுட்டியவர்) தொடர்ந்து தமிழில் உரையாட முடியாது பிரஞ்சிய மொழியில் உரையாடும்போது,நிச்சியமாக அவர் யோகன் பாரீஸ் இல்லையென்பது நிரூபணமாகிறது.ஒழுங்காகத் தமிழ் பேசவராத தலைமுறையானது நமது மூன்றாந் தலைமுறையே.எனவே,பிரான்சில் இரண்டாவது உலக மகாயுத்துக்கு முதலே இராணுவத்தில் சேர்ந்து,"பெரிய படிப்புப் படித்தவர்களின்" வாரீசுகளே அதைச் செய்திருப்பதென்பது எனக்குத் தெரியும்//




சிறிரங்கன் தொட்டிருக்கும் புள்ளி சரியென்றே எண்ணுகின்றேன். தமிழிச்ச்சியின் பதிவுகளில் உள்ள பினூட்டங்களாலும் ஓரளவு இதைப்புரிய முடிகிறது. நிலமை இவ்விதமாக இருக்க மாசிலாவின் பொத்தம் பொதுவான அவசரக்குற்றச்சாட்டும், இந்தப்பிரச்சனைக்குள் புலிப்பெயரை இழுத்துவிடுவதும், இத்தகைய சூழலை உருவாக்க முனைபவர்களுக்கே சாதகமாக அமையும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கவனத்திற் கொள்வது நல்லது.

மேலும் இந்தப் பிரச்சினைக்குள் ஒரு நல்ல மனிதனின் பெயர் பாவிக்கப்பட்டிருப்பது வருந்தத் தக்கது. தமிழிச்சி அது அவரல்ல என்பதை தெளிவாகப்புரிந்து கொண்டு செய்திருப்பின், தலைப்பில் அவரது பெரை சுட்டாமல் கூட தெரிவித்திருக்கலாம். உங்கள் அவசரங்களால் நல்ல உள்ளங்கள் காயப்படுகின்றன. பின்னர் மறுதலிப்புக்களாலும் மன்னிப்புக்களாலும் அவை ஆறிவிடக் கூடியன அல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

வெற்றி said...

/* அப்படியாகத் திட்டக்கூடிய தறுதலை ஈழத்தமிழர்கள் நிறையப்பேர் பரீஸிலே மட்டுமல்ல */

ஹிஹி... தறுதலை எண்ட பெயரிலும் ஒரு பதிவர் இருக்கிறார். :-))இனி அவரும் நீங்கள் அவற்றை பெயரை எழுதினதுக்காக பதில் பதிவு போடப் போறார். :-))

Anonymous said...

//எனவே,பிரான்சில் இரண்டாவது உலக மகாயுத்துக்கு முதலே இராணுவத்தில் சேர்ந்து,"பெரிய படிப்புப் படித்தவர்களின்" வாரீசுகளே அதைச் செய்திருப்பதென்பது எனக்குத் தெரியும்.//

சிறிரங்கத்தார்,
அப்ப உது அதிதியாக வந்த புதுவைத் தமிழர் எண்டு சொல்லிறியளோ?
தேவையில்லாமல் சிண்டு முடியப்பாக்கிறியள் எண்டு சொல்ல எச்சரிக்கிறன். ;-))

மாசிலா பல நேரங்களில் கோணங்கித்தனமாக உளறுவதைப் பார்த்து வந்திருக்கிறோம். இரண்டொரு சந்தர்ப்பங்களைச் சுட்டி பெயரிலியும் கேள்வி கேட்டிருக்கிறார்.
இன்னும் மாசிலா இவ்விடுகையை வாசித்து முடிக்கவில்லையாதலால் அவரின் பதிலுக்குப் பொறுத்திருக்கிறோம்.

மற்றும்படி எல்லோருமே சொல்வதொன்று செய்வதொன்றாகவே இருக்கிறது.
'ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தால் வாடா" என்று அழைக்கும் தமிழச்சி தொடக்கம் பாசிசத்தை எதிர்ப்பதாகப் புரட்சி பேசும் ரயாகரன் வரை இது தொடர்கிறது. (பெயரிலியின் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதை மட்டும் சொல்லவில்லை)

லக்கிலுக் said...

அனல் பறக்குது :-))))

என்னைக்காவது என்னை கேள்வி கேட்டுடுவீங்களோன்னு பயமா வேற இருக்கு!!!!

அற்புதன் said...

தமிழ் மணத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கோ,

ம் அதிகம் சிந்தனை இல்லாமால் நடந்த சிறு உரையாடல் சம்பந்தமான முரண் ஒன்றை இவ்வாறு ஊதிப்பெருக்கி ,புலிகள் மேல் வைக்கும் விமர்சனமாக்க இணையப் புரட்ச்சியாளர்களுக்குத் தான் முடியும்.தமிழ்ச் சோலை நடாத்துபவர்கள் புலிகள்,ஈழத் தமிழர் என்பதற்கும் அப்பால் மனிதர்கள்.மனிதர்கள் தவறு இழைக்கக் கூடியவர்கள்.மனிதர்கள் பலவீனமானவர்கள் இவ்வாறான சிறு சிறு முரண்பாடுகள் அன்றாடம் வேலைத் தளங்களிலும் ,பாடசாலைகளிலும் எல்லா இனத்தார் மத்தியிலும் நடக்கின்றன.இவற்றிற்கு ஈழத் தமிழர் புலிகள் என்று முத்திரை குத்தி வலைப் பதிவுகளில் வியாபாரம் செய்வது நியாயமான செயல் அல்ல.

தோழர் தமிழச்சி தனது பதிவை மீள் பரிசோதனை செய்து இரு பக்கக் கருதுக்களையும் தெளிவாக விளக்க வேண்டும்.ஈழ விடுதலைப் போராட்டத்திற்க்கு என தனித் தன்மையான அரசியற் காரணங்கள் உண்டு.தமிழ் நாட்டின் அரசியற் சூழலும் ஈழத்தின் அரசியற் சூழலும் வேறு வேறானவை.இரண்டு தளங்களிலும் பிரதான முரண் என்பது வேறு வேறானது.ஆனால் சாதியம் என்பது பொதுவானது.புலிகள் பெரியாரியத்தில் எவை எவை எமது சூழலுக்குப் பொருந்துகின்றனவோ தேவையாகின்றதோ அவற்றையே பிரயோக்கிகின்றனர்.இதனைத் தோழர் தமிழச்சி புரிந்து கொள்ள வேண்டும்.பெரியார் படத்தைப் போட்டு வெங்காயங்கள் என்று எழுதுவதால் நீங்கள் பெரியாரைப் புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம் அல்ல.பெரியாரை இன்னும் நீங்கள் ஆளமாகப் படிக்க வேண்டும்.பெரியார் என்பவர் கடவுளோ அவர் கூறியவை ஒரு சமயமோ அல்ல.இவை பற்றி விரிவாக ஒரு பதிவு போட வேண்டிய தேவை உருவாகி இருப்பதை உணருகிறேன்.

இப்படிக்கு அன்புடன் ஒரு புலிப் பினாமி,புலிப் பெரியாரிஸ்ட், மற்றும் இன்ன பிற வசவுகளும்.:-)

Sri Rangan said...

//சிறிரங்கத்தார்,
அப்ப உது அதிதியாக வந்த புதுவைத் தமிழர் எண்டு சொல்லிறியளோ?
தேவையில்லாமல் சிண்டு முடியப்பாக்கிறியள் எண்டு சொல்ல எச்சரிக்கிறன். ;-))//




வசந்தகால வரவுக்காக நான் ஏங்கும் தரணங்களில் புயற்காற்றாய் அடித்துக் கடுமழை பொழிந்து... கழுத்தறுப்பதில் இயற்கை பலவேளை...

தமிழச்சிக்கு(பெண் என்பதால் என்னைப் போன்ற பேயும்...)மிக ஆர்வக்க காரணங்களால் எதிர்ப்பால் ஆர்வங்களைக் கொட்டிக் கேட்கப்படும் உடலுறுவுப் பெருந் தேட்டங்களை(காமசூத்திரம்-இதைத் தமிழனால் படைக்கப்பட்டதென்று கூறுவார்கள்.நான் இதைப்படித்துப் பார்த்துப் பெருமைப்பட்டு...அதுவும் உலகம் பூராகவும் மொழிபெயர்த்து...உருவங்களை அப்படியே போட்டு...இந்தவொரு முக்கியமான துறையில் என் மூதாதையர்கள் ஐயன் ஸ்ரையினை வென்றவர்கள் என்பதால் சேட்டுக் கொலரை இழுத்துவிட்டு,இல்லை,இல்லை நான் "பெனியன்"போட்டிருக்கிறேன்.என்றபோதும்,பெருமைப்பட்டு,நெஞ்சு நிமிர்த்தியிருப்பவன்.)கொச்சைப் படுத்தப்படும் நிலையிலும்,அந்த நிகழ்வினு}டாகத் தமிழிச்சியை அவமானப்படுத்தும்"அறிவு"த் தனத்துக்கும் எவர் காரணமோ-எந்த இனங்கள்(ஈழத் தமிழினம்-தமிழகத் தமிழினம் சமன் இரண்டும் வெவ்வேறு தேசிய இனங்களென்று அடித்துதைத்துக் கூறி)காரணமோ அதையொட்டி நான் வெட்கப்படாமல் "அறுப்பான்களே-அறுப்பாள்களே!ஒரு கடைக்குப் போய் இப்படிப் புத்தகங்களை வேண்டி எல்லா அறுப்பையும் பார்த்துத் தொலையுங்கோவன்ரா(டிடீடீ) என்றும்,ஒரு ஐம்பது யுரோவைக் கொடுத்து விதம் விதமான பாலுறுப்புகளைப் பார்த்தும்,சுவைத்தும்,சுதிபெற்று இன்புற்றிருங்கோவன் என்றிடித்துச் சொல்லி-உங்களைப்போன்ற சக மனிதரிடம் இதைப் பிரயோகிக்கமால் அடங்கி,அடக்கி,அமுக்கிப் பிடியுங்கோவன் என்றும் (இப்போதுரைத்து...)சொல்வதற்கும் எவரையும்"சிண்டு"முடியத் தேவையில்லை.

இதை எவர் ஆற்றிடினும் இடித்துரைப்பதற்கு வசந்தத்துக்கும்,இலையுதிர்காலத்துக்கும் உரிமை(!!??)உண்டென்ற "எங்கள் எழுதாத சட்டத்தின் முன்னே சமம்" என்றாகுக.

ஏனெனில்,பால்வினைப் பண்புகள் அனைத்து "இனங்களுக்கும்"பொதுவானது.அதை மற்றவர்கள்மீது அத்துமீறி ஏவுவது(ஸ்ரீலங்கா இராணுவத்தின் மல்றிபரல் ஏவுகணைகள் போன்று)மகத்தான"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய"இனத்துக்கு அற்பத்தனமானது என்றே சுட்டினேன் என் செல்லமே!

மற்றும்படி... குட்டையைக் கலக்கி நல்ல அழகான காத்திரமான குஞ்சுகளைப் பிடிப்பதல்ல நோக்கம்.அன்றித் தடியெடுத்துக் கொடுத்து"இந்தா பிடி நீ,இந்தா பிடி நீ"என்று தங்களுக்குள் அடிபட்டு உலகத்தில் இருந்த இடமே தெரியாது போக நான் ஆற்றும் அளப் பெரிய "அறிவும்"இதற்குள் இல்லை,இல்லை,இல்லை!!!:-))))))))

என்னை விடுங்கோடா தம்பிமாரே!வேண்டுமென்றால் உங்கட காலில விழுந்து அப்படியே பிரதட்டை செய்து...கைலாசத்துக்கே போய்விடுறேன்.

Anonymous said...

பெயரிலி,
மாசிலா, இரயாகரன், தமிழ்ச்சி வரிசையில மயூரனை விட்டுடீங்களே..!!!
இந்த வரிசையில மயூரனுக்கு தானெ முதல் இடம் கொடுக்கணும்.

Anonymous said...

//என்னைக்காவது என்னை கேள்வி கேட்டுடுவீங்களோன்னு பயமா வேற இருக்கு!!!!//

பெரியவங்க பேசற எடத்துல ஒனக்கென்ன வேலை...சின்னப் புள்ளையா லட்சணமா 2 கடலைமிட்டாய் தின்னுட்டு கருணாநிதி வாழ்கன்னு கோஷம் போட போனா ஒரு பிரியாணி கிடைக்கும், அதப் பாரு மொதல்ல............

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு:

தழுவி, நீங்கள் சொன்னது வாசிக்கும்போது, எனக்கும் உறுத்தியது,

மாசிலா, காத்திருக்கிறேன்

கொழுவி, ஓரளவுக்குத் துயருக்குரிய உண்மை (சொந்த -தாய்- இயக்கத்துக்காரருக்கே பயந்து திரிந்த புரட்சி பேசிய இயக்கத்துக்காரர்களைக் கண்டிருக்கின்றேன்; கேள்விப்பட்டிருக்கின்றேன்).
கவிதை?...... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தாளிக்கும் பறக்கும்பாம்பே, சொல்லாமலே புரிந்துகொள்பவர் பெரியோர் ;-) [பெரியார் என்று வாசித்துத் தொலைத்துக் குழப்பம் காட்டாதையும்]

ஸ்ரீரங்கன், என்னையும் மன்னிக்கவேண்டும்; நீங்கள் இங்கே எழுதியதற்குப் பிறகுதான் தமிழச்சியின் பதிவிலே சென்று பார்க்கையிலே உங்களின் இரண்டாவது விளங்கிக் கொண்டு போட்ட பின்னூட்டத்தைப் பார்த்தேன். அதை முன்னரே பார்த்திருந்தால், இக்கேள்வி இங்கே வந்திருக்காது.

தமிழ்பித்தன், தறுதலை என்று சொன்னது கொஞ்சம் அதிகமேதான். ஆனால், தறியாத தலை என்று சொல்வதிலே அர்த்தமில்லையே :-( விநாயகசதுர்த்தி குறித்து உமது கருத்துகளைச் சொல்ல இருக்கும் உரிமை உம்முடையது. அதிலே எனக்கென்ன பிரச்சனை வர? ஆனால், நீர் அதை எடுத்துவிட்டுக்கொண்டிருந்த விதமும் சொற்களும் வாசிக்கின்றவர்களை எப்படியாக உம்மைக் கருத வைத்ததென்று கொஞ்சம் எண்ணிப்பாரும். நிற்க, விளக்கமாக உமது கடைசி இடுகையிலே பேசியாகிவிட்டது... புலிகளின் சார்பிலே சாதித்தனத்தினையும் சேர்த்துப் பேசும் ஒரு சிலரைச் சொன்னேன் அல்லவா? ஆளைக் காட்டும் என்கிறீர்... உணர்வுகள் என்பவரின் பதிவுகளைப் பார்த்ததுண்டா? [வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழகத்தின் பிள்ளைமாரையும் சேர்த்துக் குழப்பியடித்து, தமிழகத்தின் புலி ஆதரவாளர்கள் சிலர் பிள்ளைமார் பற்றுதலுடனேதான் பிரபாகரனுக்கு ஆதரவு என்று எழுதும் இந்தியாவின் ஈழவிரோதசகதிகளுக்கு, அடித்து ஆடத் தொடர்களம் பதிவுப்பின்னூட்டத்திலே அமைத்துக் கொடுத்த பெருமை உணர்வுகள் ஆரூரனுக்கும் உமக்குந்தான் சேரமுடியும் :-(]. சாராமல் ஒன்று; கம்பர்மலையைப் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் - எனக்கும் உடுப்பிட்டியிலே ஒரு காலடியிருப்பதால்.

மலைநாடான், தமிழச்சியின் பதிவுகளும் கருத்துகளும் அவர் எண்ணாத விதத்திலேயே/அறியாமலே, சிலராலே திசைதிருப்பப்படுகின்றனவென்று படுகிறது; சத்தியக்கடதாசியிலே அவரின் "சதுர்த்தித்துண்டுப்பிரசுரக்கலகம்" "புலியெதிர்ப்புப்புரட்சி"யாக்கப்படுகிறது; இரயாகரன், நீட்டி முழக்கி தமிழச்சிக்குத் தொலைபேசி வருவதற்கு மூன்றாம் காரணமொன்றினை தமிழ்ச்சோலையிலிருந்து பிடுங்கியெடுக்கிறார். இந்த ஆற்றிலே இழுத்துச்செல்லப்படும் ஓட்டத்தினைத் தமிழச்சி கண்டு கொள்கிறாரா தெரியவில்லை.

வெற்றி, ஆர் அந்தத்தறுதலை? ;-) பிடிச்சு, தறி தலை

அற்புதன், பொறி எங்கே பத்திக்கொள்ளுமெண்டு தெரியாதமாதிரி, ஒவ்வொருத்தரும் தமிழச்சியின் பதிவிலே அவரவை பதிவுலைக்குத் தணல் அள்ளியிருக்கினம்; பாருங்கோ ;-)

லக்கி லுக், கோச்சி ஓடோணுமெண்டால், கரியள்ளிக் கொட்டி, அனல் பரத்தத்தான் வேணும் ;-)

ஸ்ரீரங்கன், உங்கட எழுத்து என்ரை தலையையே சுத்துது ;-) அய்யா புரியாமலே போத்திக்கட்டி எழுதுவதிலே நீர் புலவர்; நானில்லை இல்லை...

அநாமதேயம் - 1, மயூரனை எதுக்கப்பு இதுக்குள்ளை இழுக்கிறீர்? அவர் இரயாகரன் அளவுக்கு, பிடிச்சது புலிதான் எண்டோ, பிடிச்ச புலிக்கு ரெண்டு வால் எண்டோ நிற்கிறதில்லை. நிதர்சனத்தை நானுந்தான் திட்டுறன் ; ஆனால், இராயகரன் அளவுக்கு புரட்சிகரமாகத் திட்டவில்லை கண்டியளோ? ;-) மயூரன், உந்தளவுக்குக் கண்ணை மூடிக்கொண்டு, கடிவாளமில்லாமலே களத்திலே தடத்தின் வழி பந்தயம் ஓடப்போகிறதில்லை.

அநாமதேயம் - 2, லக்கி லுக்கோடான உமது சதுரங்க ஆட்டத்துக்கு இதுவோ களம்? ;-)

nayanan said...

//ஈழத்து அகதிகளாலே பரீஸிலே புதுவைத்தமிழர்களுக்கு இழுக்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இனி, ஈழத்தமிழர்-புதுவைத்தமிழர் என்று பிரித்துச் சொல்லவேண்டுமென்றும் சொல்லியிருக்கின்றீர்கள்.
//

தமிழ் வலைப்பதிவு உலகம் இப்படிப்
போவது அலுப்பைத் தருகிறது.
தமிழிய உணர்வு
கொண்டவர்களே இப்படியாகப்
பேசுவது சரியல்ல.

இதனால்தான் சிங்கள
இரத்தினங்கள் எல்லா
இடத்திலும் நம்மை
எளிமையாகப் பலி போட்டு
விடுகிறார்கள்.

மாசிலா அப்படி எழுதியிருப்பது
எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.
இது மிகத் தவறான போக்கு.

மாசிலாதான் இப்படி எழுதிவிட்டார்
என்றால், நண்பர் இரமணி

//அதிலே சிக்கலில்லை. பல
இடங்களிலே அப்படியான தேவையுள்ளதே.//

இப்படி எழுதியதைத்
தவிர்த்திருக்கலாம். இதற்கு
மாறாக மாசிலாவையும்
இக்கருத்து கொண்டோரையும்
கடுமையாக சண்டை போட்டிருக்கலாம்.

வலைப்பதிவு மிடையத்தில் இந்தப் போக்கு பெருகாமல் இருக்க வேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

-/பெயரிலி. said...

/
நண்பர் இரமணி

//அதிலே சிக்கலில்லை. பல
இடங்களிலே அப்படியான தேவையுள்ளதே.//

இப்படி எழுதியதைத்
தவிர்த்திருக்கலாம்.

/

இளங்கோவன்
நான் சொன்னதிலேயுள்ள நக்கலை நீங்களுமா புரிந்துகொள்ளவில்லை? இப்படியாக, புதுவைத்தமிழர் - ஈழத்தமிழர் என்று பிரித்துச்சொல்லும் மாசிலா போன்றவர்களிலிருந்து மற்றத் தமிழர்களைப் பிரித்துக் காட்டவேண்டிய அவசியமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்ற விதத்திலே நக்கலாகச் சொல்லியிருந்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலி!
மாசிலா, எல்லா அகதித் தமிழரையும் குறிப்படவில்லை என நம்புவோம்.
ஆனால் இந்த அகதித்தமிழன் தான் பாரிசில் ஏன்? முழுப்பிரான்சிலும் தமிழன் யார் என்று காட்டியவன்.
எந்தத் துறையை எடுத்தாலும், இந்த அகதித் தமிழனின் பிள்ளைகளும் இப்போ பலதுறையிலும் பயில்கிறார்கள். பிரகாசிப்பார்கள்.
ஒரு பாண்டிச்சேரி அன்பர் கூறுவார்.
' லா சப்பைய் என்பதை லா சப்பல் எனப் பிழையாக உச்சரித்து, அந்த இடத்தையே தமிழர் பகுதியாக்கியது இந்த அகதித் தமிழனே...
ஒவ்வொரு அகதித் தமிழனும் இதையிட்டுப் பெருமைப்படவேண்டும்.
அகதித் தமிழன் வருமுன் பாரிசிலிருந்த தமிழன் பிரான்சியன் புறாவுக்குப் போடும் அரிசியே வாங்கிச் சாப்பிட்டான்.
இன்று குட்டிச் சென்னை, குட்டி யாழ்ப்பாணத்தில் வாழும் நிலைக்குக் காரணம் இந்த அகதித் தமிழனே!!!
அகதித் தமிழனின் மூதாதையரின் அறிவு ,அன்று வந்து ஆண்டுவிட்டுப் போனவன் ஆமிக்கு சாகக் கூப்பிடுமளவுக்கு இன்றி அதிகமாக இருந்துள்ளது.
அதனால் நம் மூதாதையர் ஆமிக்கு வரவில்லை.
பெருமைப் படுகிறோம்.
ஒரு சிலர் இந்தச் சமுதாயத்தின் கீர்த்திக்கு பங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
அவர்கள் இனித் திருந்துவார்கள் என நம்புவோம்.

SnackDragon said...

The last one is shocking: “On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message, emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He [Rajiv Gandhi] has given those instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’ The next morning I received a call from Lt. Gen. B.C. Joshi, the then Director General Military Operations, who supported my stand on Dixit’s directive. However, the COAS, Gen. Sundarji, expressed his annoyance.” In fairness to Rajiv Gandhi, Dixit’s claim that he spoke on his behalf must be rejected. Dixit was prone to bragging and braggadocio.



இதற்கு ஹூலே என்ன சொல்வார் என்று யோசித்தால் கொஞ்சம் வாய்விட்டுச்சிரிக்கலாம்.

பிரபாகரன் தானே தன்னை சுடச்சொல்லிட்டி மீட்டிங்‍க்கு போயினம். :)

பெயரிலி விசயம் தெரியாமல் இருக்கிறியளே :0)

Anonymous said...

தமிழ்மணவய்யா,

மாசிலா ஒருஅப்பாவி. அவர் கமெண்ட் போடுற பதிவில என்ன எழுதியிருக்கோ அத அப்படியே ஏத்துகிட்டு தலையாட்டி கமெண்ட் போட்டுட்டு வந்துடுவாரு. தானா யோசிக்க மாட்டாரு. அவர விடுங்கய்யா. அப்புடி தலையாட்டிக்கிட்ருந்தப்ப அவர யாரோ எடுத்த போட்டோவத்தான் அவர் புரொபைலில் போட்டுவச்சிருக்காரு. அவர போயி புதுவைக்கித் திரும்ப முடியாதுன்னு பயமுறுத்துறீங்களேய்யா. பாவம் அவர் பயந்து போயிருப்பார்.

ரவி said...

பதிவை படிக்கும்போது என்னுடைய மடிக்கணினி கொதிக்கிறது...

பாட்டரி லைனை புடுங்கிவிட்டால் சூடு தணியும்...

இங்கே கோக்கனட் ஆயில் கிடைத்தால் ஊற்றி சூடு தணிக்கலாம் இந்த கணினி மீது :))

//பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியாவிலேயிருந்து///

அப்பா, எவ்ளோ பெரிய வார்த்தை...

ஒரு பதிவை எழுத எவ்வளவு நேரம் பிடிக்கும் உங்களுக்கு ? அதாரம் பாதாளம் என முழுமையாக அடிச்சு தூள் கிளப்புறியளே...

(என்னைக்குறித்து எந்த கேள்வியும் நீங்கள் எழுப்பாததால் நான் பதிவுக்கு பதில் சொல்லப்போவதில்லை :))

kiddy ppl said...

//பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியாவிலேயிருந்து///

நானும் இந்த வார்த்தையைக் கண்டு பிரமித்துப் போய் இருக்கின்றேன். பெயரிலி ப்ளீஸ் எனக்கு தமிழ்
கற்றுக் கொடுக்க முடியுமா?

-/பெயரிலி. said...

/பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியா/

எல்லாப்புகழும் அண்ணன் இரயாகரனுக்கே;
அந்த வல்லான் ஒருவன் வகுத்ததுக்கே
;-)

We take credits only for what we do

-/பெயரிலி. said...

/பெயரிலி ப்ளீஸ் எனக்கு தமிழ்
கற்றுக் கொடுக்க முடியுமா?/

1. 'பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியா' என்பது தமிழ்ச்சொல்லல்ல (என்றே நினைக்கிறேன்)

2. 'ப்ளீஸ்' என்பதற்கு 'தயவு செய்து', 'தயைகூர்ந்து' என்றே பயன்படுத்திவருகிறேன். ஆனால், 'தயை' என்பது தமிழல்ல என்றே உணர்கிறேன். தயாபரம் கொண்டு யாரேனும் நற்றமிழ் வல்லுநரிடம் கற்றமிழுங்கள்

;-)

Anonymous said...

We take credits only for what we do

yes, as and when necessary

Anonymous said...

Peryarili
do you have nothing better to do in life ?
dont ask me the same :)

Anonymous said...

ஒரு பதிவை எழுத எவ்வளவு நேரம் பிடிக்கும் உங்களுக்கு ?
10 minutes for him to write
100 minutes for you to read
no time limit to understand because its beyond your comprehension

-/பெயரிலி. said...

அண்ணன் இரயாகரன் பாசிட்டுக்களையும் கதைக்கிளிகளையும் கவிக்குயில்களையும் நோக்கி, மீண்டும் தன் முயற்சியிலே தளராமல் உரைச்சாம்பாரை வாசகக்கோப்பையிலே வார்த்திருக்கின்றார்
தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது

நேரத்தை நோக்கி, சில கேள்விகளை எழுப்பப்போயே இரண்டு நாட்கள் போயிற்று. இதுக்கும் பதிலான எனது கார உரைக்குழம்பை வாசகர் கோப்பையிலே ஊற்ற உடனடி நேரமில்லை. மாலன் தொடக்கம் இரயாகரன், தமிழச்சி வரைக்கும் நீண்ண்ண்ண்ட ஆயாசப்பதில்கள் கோவிந்தசாமி தொடக்கம், பாஸிஸப்பாயாசம், அரசியல்வரை தர ஒக்ரோபர்கடைசி தாண்டட்டும். அதுவரைக்கும் இராயகரனுக்கு மயூரனின் பின்னூட்டமே எனது பின்னூட்டமாகவும் அண்ணர் இரயாகரன் கருதிக்கொள்ளவேண்டும்.

இன்ஷா அல்லா!
(இப்ப இப்பிடி போடுறதுதானாம் பஷன். அங்கையிங்கை பாக்கயில்லையோ?)

பிகு: "ஈழத்தமிழர் மத்தியில் ஒரேயொரு மாற்றுக் கருத்துத்தளம், தமிழ்மணம் மட்டும் தான் (http://www.thamizmanam.com/) இன்று எஞ்சியுள்ளது. அதை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடத்துவதால்,
...." என்று நீட்டிச் சொல்லியிருக்கும் அண்ணருக்கு நன்றி சொல்வதா, குழப்பாதீங்கோ என்றுன் சொல்வதா, தேனி, ரிபீசி (அண்ணை ஸ்ரீரங்கன் உங்கட ரயாவுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோவன்) என்பன் மாட்டுத்தளங்கள் என்றா சுட்டாமற் சுட்டுகிறாரென்பதா என்று குழப்பச்சங்கிலி நீண்டுகொண்டே போகிறது....

பாஸிஸ்ட்/பினாமி/மாபியா/புலி எதுவும் சொல்லட்டும். பிரச்சனையில்லை. ஆனா, இரவுக்கழுகு சொன்ன குற்றச்சாட்டோ, அல்லது -/பெயரிலி. 'வலதுசாரி' எண்டோ சொன்னா, அதுக்குப் பிறகுதான் நான் இன்ரநெற்புரட்சிமுட்டை பொரிப்பன். ஓமோம் :-)

கொழுவி said...

ஐயோ அண்ணை - தமிழ்ணத்தை ஈழத்தமிழர்கள் நடாத்தபடியால் அது மாற்றுத்தளமாகவே இருந்து விட்டு போகட்டும். நானும் கொடுப்புக்குள் சிரித்து விட்டுப் போகிறேன். ஏதாவது குழப்பி

அவரை புலிகளின் தமிழ்மணம் எனத்தொடங்கி பாசிசம் என முடியும் எந்தவொரு கட்டுரையையும் எழுத வைக்க முயலாதீர்கள் என அன்பாக கேட்கின்றேன்.

தவிர அவரது பாசிச லிஸ்ட்டுக்குள்ளை சிறிரங்கன் வருவதற்குரிய சாத்தியங்களும் இருக்கு. வந்தால் மகழ்ச்சி . அறிந்தவர் தெரிந்தவர் அருகிலிருப்பதால் கதைச்சி சிரிச்சு காலத்தை கழிக்கலாம் தானே..

Sri Rangan said...

//அண்ணை ஸ்ரீரங்கன் உங்கட ரயாவுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோவன்//


"........................."என்ன ரீ.பீ.சீ.,தேனீ போன்றவையும் மாற்(ட்)று(டு)த் தளமென்றெங்கள் பெயரிலி சொல்கிறார்(;-)))(...) போலக் கிடக்கு,அதனால் கொஞ்சம் யோசிச்சு,அவையளையும்...ஏனென்றால், ஸ்ரீரங்கனும் ரீ.பீ.சீ.யை அப்பிடியிப்பிடியென்றெழுதிச்(...) செல்வதால்...காலத்துக்கும், அது தரும் சூழலுக்குமொப்பக் காரியமாற்றுந் தரணங்கைளைக் கைவிடாதாற்றும் புரட்சியே இறுதியிலேற்றப்படும் செங்கொடிக்கு அர்த்தம் பகருமென்றா இரமணி?:-)))))


ஐயனே!,Take without pride what you receive,let go without grief what you lose.இவ்வளவுதாம் எனது வாழ்க்கையின் கண்ணோட்டம்.இதற்குள் எத்தனையெத்தனை முரண் நகைகள்?

theevu said...

இன்ஷா அல்லா!

கொண்டோடி said...

அண்ணை, நீங்கள் எழுதிற இந்தப் பதிவுகளை 'கவிதை' எண்டு எங்கயாவது வகைப்படுத்தியிருக்கிறியளோ? அல்லது லேபிள் ஏதாவது குடுத்திருக்கிறியளோ?

ஏன் கேக்கிறனெண்டால் 'கவிதை எண்டால் என்ன?' எண்டு ரயாகரன் புதுசா ஒரு தத்துவக் கட்டுரை போட்டிருக்கிறார்.

-/பெயரிலி. said...

கவி தைக்கிறதெல்லாம் கவிதைதான்
(குதிக்கிறதும் அடக்கம்)

[உங்களுக்கு அவரிலை ஒரு நக்கலாப் போச்சுது என்ன? மெய்யாயே அந்தாள் தானும் தன்ரை புரட்சியும் எண்டு எழுதிக்கொண்டிருக்க ஆள். தேவையில்லாத சோலி சுரட்டுக்குப் பக்கத்துப்பதிவுக்குக்கூடக் கொப்பி பண்ணப் போகாது. மற்றவை என்ன சொல்லியிருக்கலாமெண்டதைக்கூட ஒரிஜினலாய் தானே விளங்கி எழுதுற ஆளெண்டால், அவரின்ரை நேர்மையை நீங்கள் பாக்கோணும். அவரோட மூண்டு பிளேவரிலை மட்டும் சுயிங்கம் தின்னுற சக்குச்சக்குச்சத்தம் தாங்க முடியாமத்தான் தேவையில்லாம, போன வெள்ளி போய்க் கதவைத் தட்டியிட்டனோ எண்டு படுகுது :-( எனக்குத் தேவையில்லாத வேலைதானே?)