Thursday, October 11, 2007

டங்குவாரின் டசின் கொய்ஸன் டைம்

அரை குறை -

டங்குவாரின் டசின் கொய்ஸன் டைம்
அல்லது
(Dozen Ways of Looking at a TamilBlog)

சரியான விடையின் மேல் வெளிச்சக்கற்றை பாய்ச்சுக

வினா 1
பாசிசத்தை அதன் பினாமிக்காதிலே முறுக்கி மார்க்சிய முறத்தால் அடித்துப் புறவால்காட்டி ஓட விரட்டியவர்
1. டொச்சுலாந்து மாபியா வழுவிக் காலையும் புரட்சி தழுவி மாலையும் போராளி்
2. அமெரிக்க மாபியாஸோல்சர் காப்கா
3. பிரெஞ்சுப்பகுத்தறிவாளர்கள், சத்தியவசனக்காரர்கள்
4. தமிழரங்கிடதுகாற்றூக்கியகலயகிலநடமாடிகள்

வினா 2
ஆதியிலே பிறந்தது
1. புலி
2. புரட்சி
3. முறம்
4. வீரம்

வினா 3
பிரான்சின் சைவக்கோவில்கள் சமூகத்திலே முக்கியத்துவம் பெறுவது
1. தெருவெல்லாம் தேருக்குத் தேங்காய் உடைப்பதால்
2. பகுத்தறிவுத் துண்டுப்பிரசுரம் பெறுவதால்
3. தமிழரங்கிலேகூட துணுக்காக இடம் பிடித்துக்கொள்வதால்
4. மேற்கூறிய அனைத்தும் அல்லது கருவறையால்

வினா 4
ஏகாதிபத்தியநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிலே ஏகாதிபத்தியத்தியங்களை விமர்சிக்க ஏகபோக உரிமை பெற்றவர்
1. பினாமிமாபியாபுட்சோல்சர்
2. பகிரங்கமடலி்
3. தமிழரங்காடி
4. மேற்கூறிய எவருமில்லர் அல்லது மேற்கூறிய எல்லோரும்

வினா 5
தீவாரின் மறைமுக & முக்கிய நோக்கம்
1. தமிழ்மணப்பதிவுகளை முகர்ந்து சுவை, ஊறு, ஒளி, ஓசை, நாற்றம் அளவிடுவது
2. புடவைத்தொழில் முதலாளிகளின் சிறந்த பனியன், டவுசர் விற்பனைப்பிரநிதியாவது
3. ஆதித்தகரிகாலனின் பிரேதத்தைத் தோண்டி, டிஎன்ஏ பரிசோதனை செய்து கொலையாளியைக் கண்டு பிடிக்கும் "Secrets of the Dead" இணையத்தமிழ்நிகழ்ச்சி நடத்துவது
4. புடுங்காத தீவுகளுக்கும் புடுங்கும் தீவுகளுக்குமிடையே சேது சமைப்பது (அல்லது உடைப்பது)

வினா 6
கோனார் நோட்ஸ் என்பது
1. க்ளிவ் நோட்ஸின் இந்தியப்பினாமி
2. அநாநி பிராங்கின் அடுக்களைக்குறிப்பு
3. புரியாதவர்களால் புரியாதவர்க்கு புரியாமலே புரியப்படுவது
4. ஒரு டசின் ஒரு லீட்டர் ஆட்டுப்பாற்புட்டி கேஸ்

வினா 7
பதிவுகளில் பகுத்தறிவு என்பது
1. பகுத்தறிய வேண்டியது
2. அடுத்தவனுக்குப் பகுத்தறிவு இல்லையென்பது
3. பகலவன்பாசறைக்குப் போட்டிப்பாசறை தொடங்கி பார்ப்பனியத்துக்கும் பிள்ளையாருக்கும் பால் வார்த்துப் பழமும் வழங்குவது
4. முழுமுனைப்பாக பெரியாரைக் கேலிப்பொருளாகக் காட்சிப்படுத்துவதும் தயிர்ச்சாத ஊறுகாயாகத் தொட்டுக்கொள்வதும்

வினா 8
பதிவுகளில் பார்ப்பனியம் என்பது
1. வாளைத் தூக்காமலே தன் போரை அடுத்தவனைக் கொண்டு நடத்தவைப்பது
2. பின்னூட்ட பா(வா)லாக்களாகப் பிறந்து திரிவது
3. எல்லோருக்கும் ஏழடி மேலே ஏறியிருந்து கொண்டு வாழைப்பழத்திலே ஊசியேற்றுவது
4. மேற்கூறிய எல்லாம்

வினா 9
பின்-நவீனத்துவம் என்பது
1. பதிவர் ஒருவர் மற்றவருக்குப் புரியாமல் எழுதும் வன்பொதி
2. வாசகர் ஒருவர் தனக்குப் புரியாத எல்லாவற்றையும் தள்ளிக் கட்டும் மென்பொதி
3. பின-நவீனத்துவத்தை விளக்குகிறேன் என்று எழுதப்படுகின்ற எதையும் தவிர்ந்த அனைத்தும்
4. சூடான இடுகைகளிலே ஏ(ற்)றிக்கொள்ள, கிண்டலென்று எழுதுகிறவரும் அவரின் பின்னூட்டிசகாக்களாலும் நம்பப்பட்டு எழுதப்படும் எதுவுமே

வினா 10
ஈழத்தின் விடிவுக்காகப் புரட்சியும் புலிச்சியும் முழுநேர வார் த் தைப்போராட்டம் நடத்தும் முன்னணிக்களம்
1. லா சப்பே
2. தமிழ்மணம்
3. தமிழரங்கம்
3. த இந்து

வினா 11
இணையப்படைப்புக்கு முக்கியமானது
1. வாசகர்கள்
2. நண்பர்கள்
3. வாசிக்காதவர்கள்
4. வன்பர்கள்

வினா 12
வலைவினாடிவிடைப்போட்டியென்பது
1. வேலையற்றவன் சவரவேலை
2. கோனார் நோட்ஸுக்கு உகந்த நீண்ட பதம்
3. (stat)counter கலாசாரத்தை இலக்காக கொண்டது
4. தமிழ்மணத்தில் எப்போதும் சூடா(க்)கக்கூடிய ஆயாவின் இராத்திரி ஆப்பக்கடை சமாசாரம்

33 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

எனக்கு வினாடிவிடை தெரியாது வினாடி வினா தான் தெரியும் ஆகவே வினா

இனி வரவிருக்கும் பின்னூட்டங்களுக்கு (புராண) முன்னுதாரணம்

1) திரிபுர தகனம்
2) காண்டவ தகனம்
3) லங்காதகனம்

ஈழநாதன்(Eelanathan) said...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=10710047&format=html

பதிவுக்குச் சம்பந்தமில்லாத அலட்டலுக்கு மன்னிக்க. முத்துலிங்கத்தின் இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.எனக்கென்னவோ பின்னவீனத்துவக் கதை எழுதுவதிலும் முத்துலிங்கம் தேர்ந்துவிட்டதாகப் படுகிறது

theevu said...

சிறீரங்கன் பற்றிய கேள்வி லீக்காகி அதற்கான பதிலோடு வந்தனான்.கடைசிலை அந்தக்கேள்வியை
தூக்கிப்போட்டியள் போலை.


தமிழச்சி பதிவிலை கொழுவியார் அளாப்பி என்று ஒரு பதம் பாவித்திருக்கிறார்.இதன் அர்த்தம் என்ன?

Anonymous said...

வலைவினாவிடைப்போட்டிகள் உருவாகக்காரணம்
1. சொற்சேர்த்தெழுதுவதன்கண்ணண்மையிலேற்பட்ட பிரமை
2. மேலதிகாரிகள் கவனமின்மை
3. இணையப்புரட்சி உச்சக்கட்டமடைந்தமை
4. நாலிலொன்றெனின் நாலிலொன்றுக்காவது புரிந்தும் புரியாமற் போகலாமென்ற நம்பிக்கை

அற்புதன் said...

வன் மோர் கொஸ்ஸன்

தலித்தியம் என்பது,

1) அய்யோ நான் பிறப்பால் வெள்ளாளன் என்று சொல்வதற்கான சந்தர்ப்பம்.

2)தமிழ் நாட்டில் சந்தையைப் பிடிப்பதற்கான புது பிராண்ட்.

3)புலத்து தேச மறுப்பாளர்களின் புது முகமூடி.

Boston Bala said...

---புரியாதவர்களால் புரியாதவர்க்கு புரியாமலே புரியப்படுவது---

:)

--பின்-நவீனத்துவம் என்பது....---

:))

பின்னூட்டமென்பது:
1. ஏதோ புரிகிற மாதிரி நடிப்பது
2. எலிக்குட்டி சோதனையில் பூனைக்குட்டியாக பதுங்குவது
3. வலைப்பதிவின் தலைப்பில் விளித்தழைப்பது
4. சிரிப்பான் இடுவது

Anonymous said...

ஒரே பதிவு மீண்டும் மீண்டும் முகப்புக்கு வரக் காரணம்
1. சொல்ல வேறேதும் இல்லாதிருப்பது
2. ரைப்பிஸ்ட் இரண்டுமுறை கொப்பி பேஸ்ட் செய்வது
3. பின்னூட்டமேதுமில்லாமற் தவிப்பது
4. பகுத்தறிவிலிகளுக்காக

Anonymous said...

பதிவுக்குத் தொடர்பற்ற பின்னூட்டம் வரக்காரணம்
1. பதிவெம்மொழியிலெழுதப்பட்டதென்பதயேயுய்த்துணரமுடியா மொழிநடை
2. நாங்களும் இருக்கிறம்ல என்ச்சொல்லிப்போவது
3. பதிவுக்குத் தொடர்பற்ற நவீன விடயம் சொல்லல் பின்நவீனத்துவம் என்ற புரிதல்
4. அளாப்பிக் குழாப்பி வேலை

Anonymous said...

கேள்விகேட்டவருக்கே கேள்வி நான் எழுதிக் கொண்டிருக்கக் காரணம்
1. டவுசர் இன்னும் கிழிஞ்சும் கிழியாமலிருப்பது
2. இணையப்புரட்சிக்கான புதிய உத்தியை அறிவிக்க நினைப்பது
3. முள்ளை முள்ளாலெடுத்தேனும் நிம்மதியா நித்திரை கொள்ள
4. பின்னூட்டப்பாசிசக்கயமை

பி.கு: பெயரிலியென்ற பெயர்சூடிக் கொண்டே பெயரிலியாகவருமனானிகளுக்குப் பதிலளிக்காமற் தவிர்க்கும் போக்கைக் கண்டித்து இக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்நான்காவது கேள்விக்குப் பதிலளிக்காவிட்டால் தாவு தீர்ந்து டவுசர் கிழியும்வரை கேள்விகள் தொடரும் என இத்தால் சகலருக்கும் அறியத்தரப்படுகிறது.

Sri Rangan said...

இரமணி,சில வேளைகளில் கருத்தாடலென்பது வெறுமனவே உட்பொருளகற்றிய உட்குத்தற்போக்கினுவமைகொண்டென்றாகுதலைக் குறித்தெழுதும் போக்குள் நீங்கள் மண்டிக்கிடக்கின்றீர்களோவெனச்சம் கொள்வதாகத்தாம் படுகிறது.எந்தவொரு விஷயத்தின்பாலான ஒருவகைப்(பன்முகத்தன்மையெனப் பாவிப்பது) புரிதலை மட்டுப்படுத்தும் குட்டாஞ்சோற்றுக் கவனக் குவிப்பில் உங்கள் இடுகைகள் தாறுமாறாய் கீறப்படுவது அவ்வளவு ஆரோக்கியமல்ல.இது ஒரு போக்காக வளர்வதற்கானவொரு முகாந்திரத்தைத் தொடக்கிய "பெருமை"உங்களுக்குண்டென்றொருகுண்டையிங்கெவர் கூறிடினும் ஆச்சரியப்படுவதற்கில்லை.என்றபோதும்,பெயரிலி குறித்துரைக்க விரும்பும் கருத்தாற்காவுகொள்வதென்ற மனக்கோலத்தை விட்டு,எதிர்கொள்ளும் கருத்துக்களைச் செம்மையுற வீழ்த்துவதற்கான கருத்தியற்பலத்தின்பாலும்,அதனூடாக் கட்டமுனையும் நியாயங்களும் அவசியமில்லையா?

உங்களது எழுதுக்கு முன்மாதிரியானவொரு போக்கைக் கடைப்பிடித்த பரமாத்துவாக இன்றைக்கும் தன்னைக் குறித்தானவற்றைத் தாக்குதற்தளத்துக்கு எடுப்பவர் திருவாளர் எஸ்.பொன்னுதுரை.எழுபதுகளின் முற்பகுதியில் உங்களது போக்கின் அதீத எல்லையைத் தொட்டவர் எஸ்.பொ.அவரது சாயலையொத்த விவாதமென்பது சுயவிமர்சனத்தை எதிர்கொள்ளும் பண்பின் மாறுகோணமென்றாக விரியுதே பெயரிலி!இதுகுறித்து நான் வருந்துவதைவிட இரமணிதரனிடமிருந்து இத்தகைய கூளங்களை எதிர்பார்த்திருக்கவில்லை.மாறாகத் தங்கள்மீது எவரொருவர் வீசியடிக்கும் கருத்துகளுக்கு தார்மீகத் தன்மையின்பொருட்டுக் கருத்தாடுதெலென்ற கற்பிததைத்விட்டு,சமூகத்தின் இருப்பில்(அதவாது நீங்கள் ஒரு அங்கத்தவர் மனிதக் கூட்டில்)நிலவுகின்ற போக்கக்குள் மடைதிறந்தபடி கொட்டப்படும் கற்பிதங்களின் அதீத மதிப்பீடுகளுக்குள் நீங்கள் எங்ஙனம் உங்கள் இருத்தலை மையப்படுத்துகிறீர்கள்-அதன்பொருட்டான"தெரிவில்"இரமணிதரன் "எந்த ஸ்த்தானத்தில் இருக்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டவற்றிலிருந்து புரிந்துகொள்"என்றான போக்கில் கருத்தாடுவதற்கான எல்லையில் ஏன் கட்டுப்பட்டுக்கிடக்கிறீர்கள்?இதிலிருந்து ஒரு அரிய(!?) விவாதத்தைத் துவக்குவதற்கான "தெரிவை"உடைத்தெறிவதற்கான புனைவே இன்றைய உங்கள் எழுத்தின் நிலை.

எஸ்.பொன்னுத்துரையின் "?"பிரதியில் பக்கம்:15."அசையும் ஊர்த்தியிலிருந்து காணுநருகுச் சூழவுள்ள அசையாப்பொருள்கள் அசைவதாகத் தோன்றுமென்ற பத்தியைப் படிப்பதற்கும்,உங்களின் இந்த இடுகையைப் படிப்பதற்கும் எனக்கவ்வளவாக வித்தியாசங்கொள்ளத்தக்க தரணமொன்றிதில் இல்லை.

Anonymous said...

பதிவுக்குத் தொடர்பற்ற பின்னூட்டம் வரக்காரணம்
1. பதிவெம்மொழியிலெழுதப்பட்டதென்பதயேயுய்த்துணரமுடியா மொழிநடை
2. நாங்களும் இருக்கிறம்ல என்ச்சொல்லிப்போவது
3. பதிவுக்குத் தொடர்பற்ற நவீன விடயம் சொல்லல் பின்நவீனத்துவம் என்ற புரிதல்
4. அளாப்பிக் குழாப்பி வேலை

DJ said...

/http://www.thinnai.com/?module=displaystory&story_id=10710047&format/
அண்ணை ஈழநாதன் உந்தக்கதை ஆ.வியில்தான் முதலில் வந்திருந்தது. இடம், பொருள், ஏவல் பார்த்துத்தான் நீங்கள் கதையெழுதவேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் சிறந்த கதைசொல்லியல்ல. ஏதோ அ.முவால் 'பின்' நவீனத்துவம் விகடன் வாசகர்களுக்கும் பரவலாய்ப் போய்ச்சேர்ந்தால் நல்லந்தானே :-).

'பின்' நவீனத்துவம் பற்றிய மேலதிக விளக்கத்துக்கு, அ.முவின் சொற்களிலிருந்து...
கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவாள். பின்னைக் கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பி வந்ததும் பின்னை சொருகி இடுப்பிலே அணிந்து கொள்வாள். கிரனேட்டின் ஆயுள் ஐந்து செக்கண்ட்தான்.
இதிலிருப்பதெல்லாம் புளுகு என்று ஒரு வாசகர் எடுத்துக்கொண்டால் அவருக்கு magical realism தெரியவில்லையென்றே எடுத்துக்கொள்ள்வேண்டும் :-).

வெற்றி said...

தீவு,

/* தமிழச்சி பதிவிலை கொழுவியார் அளாப்பி என்று ஒரு பதம் பாவித்திருக்கிறார்.இதன் அர்த்தம் என்ன? */

கொழுவி என்ன அர்த்தத்தில் அச் சொல்லை அங்கு புழங்கினாரோ எனக்குத் தெரியாது.

எங்கடை ஊரிலை இச் சொல்லை ஏமாற்றுபவர்/பொய் சொல்லுபவர் எனும் பொருளில் புழங்குவோம்.

இச் சொல் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பந்தயங்களில் மட்டுமே பயன்படுத்துவர் என நினைக்கிறேன்.

சக போட்டியாளர் ஏமாற்றினாலோ அல்லது போட்டியின்/பந்தயத்தின் விதிமுறையை மற்ற போட்டியாளருக்குத் தெரியாமல் மீறினாலோ அல்லது போட்டி/பந்தயத்தில் ஏதாவது சுத்துமாத்துச் செய்தாலோ, அப்படிச் செய்பவரை நாங்கள் "அளாப்பி" என்று அழைப்போம்.

எ.கா:
1.அவன் சரியான அளாப்பியடா
2.டேய் நீ அளப்பாதை!

வெற்றி said...

அளாப்பி = cheater எனலாம் என நினைக்கிறேன்.

aaru said...

அளாப்பி என்றால் ஏமாத்துகின்றார் என்று அர்த்தம். தெரியாமத்தான் கேட்டிர்களா அல்லது இது ஏதாவது பகிடியா?

வவ்வால் said...

//கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவாள். பின்னைக் கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பி வந்ததும் பின்னை சொருகி இடுப்பிலே அணிந்து கொள்வாள். கிரனேட்டின் ஆயுள் ஐந்து செக்கண்ட்தான்.
இதிலிருப்பதெல்லாம் புளுகு என்று ஒரு வாசகர் எடுத்துக்கொண்டால் அவருக்கு magical realism தெரியவில்லையென்றே எடுத்துக்கொள்ள்வேண்டும் :-).//

கிரானேட் எரி குண்டின் பின் எடுத்து விட்டு பின்னர் மாட்டினாலும் வெடித்து விடுவதை தடுக்க முடியாதே! தமிழ் சினிமாவில் வேண்டுமானால் அப்படி செய்யலாம்!

அப்போ இதுவும் "அளாப்பி" விளையாட்டு தான்!

செந்தழல் ரவி said...

அய்யா சாமீ...

டவுஸர் உண்மையிலேயே கிழிஞ்சிருச்சு...!!! பட்டையை கிளப்புகிறீர்...உவ்வளவு சிறந்த கும்மியாளராகிய நீர் இவ்வளவு நாள் அதிகம் எழுதாமல் வாசர்கரை ஏமாற்றிய குற்றத்துக்காக தண்டணை பெறப்போகிறீர்..

அப்புறம் 'அளப்பி'....

ரவி: சத்தியமா தம்மடிக்கவேயில்ல தெரியுமா ? சும்மா மிண்ட் சாக்லேட் திங்குறேன்..

கேள்பிரண்டு: ஹே சும்மா 'அளக்காத'..அஞ்சுரூவா மட்டும் எடுத்துக்கிட்டு கீழ இறங்கி போயிவந்திருக்க...வேற யாராது தலைக்கு மேல கொண்டை போட்டவக்கிட்ட போயி இந்த 'உடாண்ஸ்" விடு...

இப்போ ஓக்கேவா தீவு..

அப்புறம் இன்னொரு விஷயம்...என்ன காமெடி செய்தாலும் இந்த சிரீ ரங்கன் வந்து சீரியஸாவே மொக்கை போடுறாரே ? வடிவேலு ஜோக் பார்த்தாலும் மூஞ்சியை உம்மெண்டு மங்கி மாதிரி வெச்சுப்பாரோ ? சிரீ ரங்கன்...உடனே எனக்கு பதில் அளிக்கவும்...

ஆப்ஷனை எல்லாம் படிச்சுட்டு நானும் ஒரு நாலு ஆப்ஷன் தரலாம் என்று தான் நினைத்தேன்...ஆனால் இந்த க்வாலிட்டி வராம வெறும் மொக்கையாக போயிருமோ எண்டு பயந்து அடங்கிக்கொண்டேன்...

அனானி ஒருவர் பட்டைய கிளப்புகிறார்..அவருக்கு வாழ்த்துக்கள்..!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வெளிச்சக் காற்று வீச்சும் விடைகளின் எண்

வினா 1
பாசிசத்தை அதன் பினாமிக்காதிலே முறுக்கி மார்க்சிய முறத்தால் அடித்துப் புறவால்காட்டி ஓட விரட்டியவர்
விடை : 4. தமிழரங்கிடதுகாற்றூக்கியகலயகிலநடமாடிகள்

வினா 2
ஆதியிலே பிறந்தது
விடை : 1. புலி

வினா 3
பிரான்சின் சைவக்கோவில்கள் சமூகத்திலே முக்கியத்துவம் பெறுவது
விடை : 2. பகுத்தறிவுத் துண்டுப்பிரசுரம் பெறுவதால்

வினா 4
ஏகாதிபத்தியநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிலே ஏகாதிபத்தியத்தியங்களை விமர்சிக்க ஏகபோக உரிமை பெற்றவர்
விடை : 1. பினாமிமாபியாபுட்சோல்சர்

வினா 5
தீவாரின் மறைமுக & முக்கிய நோக்கம்
விடை : 1. தமிழ்மணப்பதிவுகளை முகர்ந்து சுவை, ஊறு, ஒளி, ஓசை, நாற்றம் அளவிடுவது

வினா 6
கோனார் நோட்ஸ் என்பது
விடை : 3. புரியாதவர்களால் புரியாதவர்க்கு புரியாமலே புரியப்படுவது

வினா 7
பதிவுகளில் பகுத்தறிவு என்பது
விடை : 4. முழுமுனைப்பாக பெரியாரைக் கேலிப்பொருளாகக் காட்சிப்படுத்துவதும் தயிர்ச்சாத ஊறுகாயாகத் தொட்டுக்கொள்வதும்

வினா 8
பதிவுகளில் பார்ப்பனியம் என்பது
விடை : 1. வாளைத் தூக்காமலே தன் போரை அடுத்தவனைக் கொண்டு நடத்தவைப்பது

வினா 9
பின்-நவீனத்துவம் என்பது
விடை : 1. பதிவர் ஒருவர் மற்றவருக்குப் புரியாமல் எழுதும் வன்பொதி

வினா 10
ஈழத்தின் விடிவுக்காகப் புரட்சியும் புலிச்சியும் முழுநேர வார் த் தைப்போராட்டம் நடத்தும் முன்னணிக்களம்
விடை : 3. தமிழரங்கம்

வினா 11
இணையப்படைப்புக்கு முக்கியமானது
விடை : 3. வாசிக்காதவர்கள்

வினா 12
வலைவினாடிவிடைப்போட்டியென்பது
விடை : 1. வேலையற்றவன் சவரவேலை

பெயரிலி, இதைத்தானே கதைக்க வந்தீங்களென்டு நினைத்து நானும் அமசஞ்சா சொல்லிப்புட்டேன்..

வசந்தன்(Vasanthan) said...

சிறிரங்கன் சொல்வதில் உண்மையில்லாமலில்லை.
ஆனால் பெயரிலி முற்றிலும் இப்பாணியைக் கைவிட வேண்டுமென்பது கண்டிக்கப்பட வேண்டியது. பெயரிலியால் இது தொடரப்பட வேண்டும்.
ஆனால் எல்லாவிடுகைகளுமிப்படி விளங்கிகொள்ளப்படக்கூடியவேதுநிலைகளிருப்பதால் (விளங்கிக் கொள்வதென்றது கருத்தை உள்வாக்கிககொள்வதென்ற கருத்திலன்று) இதற்கொரு மாற்றுவழிமுறை காணப்படவேண்டியதவசியமாகிறது.

'ரமணிதரன் தான் இவர்' என அறிவித்துக்கொண்டு இரண்டொரு வேறுவேறு பெயர்களில் வலைப்பதிவு வைத்திருப்பது சாலப்பொருத்தம். ஒருபெயரினூடு இப்(போர்)முறையும் மற்றதினூடு சிறிரங்கன் எதிர்பார்க்கும் வழிமுறையுமெனத் தொடரலாம்.

பெயரிலி இன்று நேற்றென்றில்லாமல் நீண்டகாலமாக இவ்வழிமுறையைச் செய்துவருவதும் நாம் அதை இரசித்து வருவதும் உண்மை. "கூளனுக்குப் பத்துக்கேள்விகள்" உட்பட நிறைய காட்டுக்கள் காட்டலாம்.
மாங்கு மாங்கென்று ஆயிரக்கணக்கான சொற்களில் விளக்கப்பதிவுகள் போட்டு முறிவதைவிட (பதில் சொல்லமுடியாத அல்லது எதிர்கொள்ள முடியாத பட்சத்தில் உங்கள் எழுத்து விளங்கவில்லையென்று ஒரேபதிலைச் சொல்லி நழுவிச்செல்வதை அனுமதிக்கிறதென்றளவில் எதிராளிகளுக்கு இது வாய்ப்பானதும்கூட) நாலு கேள்விகள் இப்படிக் கேட்பது மிகுந்த பலனளிக்குமென்பது பட்டறிவு.
அதுவும் தமக்கு மட்டுமே நக்கல் நையாண்டி கைவருமென்று சில குஞ்சுகள் இன்றும்கூட நின்றாடும்வேளையில் இவ்விடுகைகள் போன்று ஏராளம் வெளிவரவேண்டிய தேவையுள்ளதென்பதைச் சுட்டுகிறேன்.

தொடரட்டும் பெயரிலி பணி.

வசந்தன்(Vasanthan) said...

முத்துலிங்கம் எழுதியது கதையா அல்லது உண்மைச் சம்பவமா?
ஏனென்றால் இறுதியில் வரும் 'உணர்வுபூர்வமான' கதைகள் நடந்திருக்கச் சாத்தியமில்லை. பிணங்களுள் மகளைத் தேடிதெல்லாம் முழுக்கமுழுக்கக் கற்பனையாகவே இருக்கச் சந்தர்ப்பமுண்டு.

//போர் ஓய்ந்த நிலையில் எங்களை கோட்டைக்குள் அனுமதித்தார்கள். நானும் மகனும் மட்டும்தான் போயிருந்தோம். கோட்டை முற்றிலுமாக பிடிபட்டபோதிலும், போராளிகளின் சடலங்கள் அங்கங்கே விழுந்த இடத்திலேயே கிடந்தன. அவை சதைகள் எல்லாம் உருகி அழிந்துபோய், அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்டன. மேலே கழுகுகள் வட்டமிட்டன. அடங்கலும் இலையான்கள் மொய்த்தன; நாற்றம் காற்று முழுவதும் வியாபித்திருந்தது.//

கோட்டை பிடிபட்டபோது சண்டை நடக்கவில்லை, போராளிகள் சாகவில்லை. பிணங்கள் கிடக்கவில்லை. (அட இராணுவத்தின் பிணங்கள்கூட). எல்லாமே சுமுகமாக நடந்து முடிந்திருந்தது.
நிற்க போராளிகளின் உடல்களை இப்படி விட்டுவிட்டுப் புலிகள் அடுத்தவேலை பார்த்ததில்லை.
யாழ்ப்பாணக் கோட்டையடியில கழுகுகள் வட்டமிட்டதெல்லாம், ஏற்கனவே இருக்கிற ரெம்பிளேட் வசனங்களைக் கடன்வாங்கியதால் வந்த பிரச்சினைகள் என்பதால் மன்னித்துவிடுவோம்.
"ஈழத்து" எழுத்தாளர் முத்துலிங்கம் திலீபன் உண்ணாவிரதம், வீரச்சாவு, அவரின் மூன்றாமாண்டு நினைவுநாளன்று யாழ்.கோட்டை புலிகளிடம் வீழ்ந்தது என்பவற்றை அறிந்திருக்கிறார் என்பது ஒருவகையில் திருப்திதான்.

ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார் வகையறாக்கள் வெடிப்பொருட்களைப் பற்றி விடும் றீல்களைப்போலவே முத்துலிங்கத்தாரும் எழுத வெளிக்கிட்டிட்டார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அளப்பி என்பதற்கு வெற்றி கூறுவதே சரியான விளக்கம்.விதி மீறல், விதியை ஏற்றுக் கொள்ளாமை
செந்தணல் ரவி கூறும் அளக்காதே என்பது புழுகு; பொய்; கட்டுக்கதை , காதில் பூ பாணியில் கதை சொல்வது.
இதை பெயரிலி ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன்; அளப்ப மாட்டார் என நினைக்கிறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணை டிசே பெயரிலிதான் கதைக்கமாட்டாராம் இதை இதோடை விடுவம் என்று பார்த்தா நீர் வந்து மாட்டினீர் ஆக இன்னும் கொஞ்சம் கதைக்கலாம்.வழக்கமான முத்துலிங்கம் கதைகள் மாந்திரீக யதார்த்தத்திற்கும் யதார்த்தவாதத்திற்கும் இடையில் ஊடாடும் கதைகள் என்பது எனது எண்ணம்.இது யதார்த்தமோ என்று வாசிப்பவரையே குழப்பும் அளவுக்கு அதில் நம்பமுடியாத விடயங்களையும் போட்டு சரிவிகிதத்தில் கலந்து எழுதுவதில் அவரது பாணி தனியானதொன்று.ஆனால் இந்தக் கதையில் அவரது பாணியையும் மீறி இன்னொன்று தொக்கி நிற்கின்றது.நான் வாசித்தவரை ஈழப்போராட்டத்தையோ போராட்ட சம்பவங்களையோ தொட்டுச் செல்லும் கதையை முத்துலிங்கம் எழுதுவது இதுவே முதன் முறை என நினைக்கிறேன்(இது தவறாக இருக்கலாம்)மற்றைய நாடுகளில் நடப்பதாக கதைக்களனை அமைத்து எழுதிய கதைகளை வாசிக்கும் போது யதார்த்தத்தையும் அதிபுனைவையும் கதாசிரியர் கோர்க்கும் இடங்களில் இருக்கும் அட என்கின்ற ஒரு ஆச்சரியம் இந்தக் கதையில் எனக்கு ஏற்படவில்லை ஒருவேளை கிரனேட்டை முன் பின் பார்த்தறியாத தமிழக நண்பர்களுக்கு அந்த ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம்.

ஈழப்போராட்டக் கதைக்களன் முத்துலிங்கத்தின் கதை பின்னலுக்கு ஏதுவாக வரவில்லை இந்தக் கதையே இன்னும் கொஞ்சம் சமநிலை தவறினால் ஈழப்போராட்டத்தினை கிண்டலடிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது

ஈழநாதன்(Eelanathan) said...

அதுக்குள்ளை வசந்தத்தாரும் வந்திட்டார்.அப்பு முத்துலிங்கம் பாணியே நடக்க முடியாததை நடந்ததாக எழுதுவதுதான்.அது இந்த விடயத்தில் கிண்டலாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயமிருக்கிறது.

பதினாறு வயது தாண்டாத கிளி என்கிறார் தாய் அப்ப பிள்ளை 14 வயதில் இயக்கத்திற்குப் போய் பதினாறு வயதில் முப்பது பேர் கொண்ட அணியொன்றை தலைமை தாங்கிச் சென்றாள் என்பது உட்பட

-/பெயரிலி. said...

/டிசே பெயரிலிதான் கதைக்கமாட்டாராம்/

பின்னை, சொல்லிக்கொள்ளாமக் காணாமப் போறவையோட என்ன கதைக்கக் கிடக்குது?

முத்துலிங்கத்தின்ரை கதையை வாசிக்கேல்லை. முத்துலிங்கத்தை ஏன் அரசியற்கதைகள் எழுதவில்லை என்று பகிரங்கமாக கேட்டவர்கள், "ஏன் கேட்டோம்" என்று இப்போது கேட்டவர்கள் யோசிக்கும் வண்ணம் முத்துலிங்கம் பதிலடி கொடுத்திருக்கிறார் :-) வேறென்ன சொல்வது? அவரை ஈழத்து எழுத்தாளர் என்று அடக்கி அவரின் சுடரைக் குடத்துக்குள் அடக்கக்கூடாது. அவர் அகிலத்தமிழெழுத்தாளர் :-)

ஆனால், ஒன்று. பிற்காலத்திலே அவர்தான் ஈழத்தமிழ்எழுத்தாளராக வரலாற்றிலே நின்றுபிடிப்பார். நீங்கள் எல்லாம் திட்டித்திட்டியே சாவீர்கள். :-(

ஈழப்பிரச்சனையால் நாட்டைவிட்டு வெளியேறிய எழுத்தாளர் என்று தீராநதியோ காலச்சுவடோ அவரின் செவ்விக்கு முன்னால், விபரித்திருப்பினம். அவர்தான் கோட்டையைப் பிடிக்கக் கொமாண்ட் பண்ணிப்போனார் எண்டதைச் சொல்லாமல் மறைத்த தன்னடக்கத்தைப் பாராட்டுவியளோ, அர்ஜுன்படம் மாதிரி லொஜிக்கோட எழுதிப்போட்டரெண்டு நக்கலடிப்பீங்களோ? ஒருவேளை கொஞ்சம் ரீசனபிளா நடக்கிறதை நடக்கிறமாதிரி எழுதினால், அடுத்தமுறை அமெரிக்கா, இந்தியா போகேக்கை பட்ரியோரிட், தடாவில உள்ளைபோட்டுடுவாங்களோ எண்டு எச்சரிகையோட எழூதியிருப்பாரோ தெரியேல்லை.

வசந்தன்(Vasanthan) said...

நக்கலெண்டு நினைக்கக்கூடாது.
யாழ். கோட்டையைச் சுத்தி புலிகள் அமைச்சிருந்த காவலரண் தொடரில தொலைத்தொடர்புக் கோபுரத்தடி அரணுக்கு 'முத்து' எண்ட பேரில ஒருத்தர்தான் கொஞ்சக்காலம் பொறுப்பாயிருந்தவர்.
யாழ்.கோட்டை முற்றுகைச்சமரில ஒரு குண்டுவீச்சு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த முத்தண்ணையின்ர பொயின்ரில வைச்சுத்தான் .50 கலிபரால அதை அடிச்சதாகவும் கேள்விப்பட்டோம்.

இப்ப டி.சே சொன்னதைப் பார்த்தபிறகுதான் (டி.சே பகிடிக்குச் சொல்லேல எண்டு நினைக்கிறன்) இந்தத் தொடுப்புப் பற்றி யோசிக்கிறன். ஒருக்கா அவரிட்ட கேட்டுச் சொல்லுவியளோ?

மற்றும்படி நீங்கள் கதைக்கிற இசங்களொண்டும் எனக்கு விளங்கேல.
விளங்கினது பின்னவீனத்துவம் ஒண்டுதான், அதுவும் கும்பரோ பூஜேயின்ர நேர்காணலைக் கேட்டபிறகுதான்.

வசந்தன்(Vasanthan) said...

ஐயையோ....
அது டி.சே சொல்லேல பெயரிலி சொன்னது.

வற்றாயிருப்பு சுந்தர் said...

//அளாப்பி = cheater எனலாம் என நினைக்கிறேன்.//

எங்கவூர்ல (மதுரை) 'எடைல புகுந்து ஒளப்பிட்டாண்டா' என்று ஒரு வழக்கு இருக்கிறது. இடையில் புகுந்து குழப்புவதை 'ஒளப்புவது' என்று சொல்வோம். ஒரு வேளை ஒளப்புதல் அளப்பியின் மருவிய வார்த்தையோ?

- இப்படி எதையாச்சும் சொல்லி ஒளப்பக்கூடாதுதான். இருந்தாலும் எழுந்த ஐமிச்சத்தைக் கேட்டுத் தெளிவுபெறும் ஆசையில் இப்பின்னூட்டம்! :-)

வற்றாயிருப்பு சுந்தர் said...

'டங்குவார்' வார்த்தையின் முழு வாக்கியப் பிரயோகம் 'டிங்கு டமாலிக்கு டங்கு வாரை அத்துப்புடுவோம்' என்பதே.

ஒரு தகவலுக்காக!

வற்றாயிருப்பு சுந்தர் said...

அற்புதன்

//தலித்தியம் என்பது,

2)தமிழ் நாட்டில் சந்தையைப் பிடிப்பதற்கான புது பிராண்ட்.//

'தமிழ் நாட்டில் சந்தையையும், மந்தையையும் பிடிப்பதற்கான புது பிராண்ட்' என்று திருத்திக் கேட்கவும்.

வெற்றி said...

பெயரிலி,
பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம். மன்னித்துக் கொள்ளவும். உங்கள் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்பவல்ல. அறிய வேணும் எனும் ஆவல்.

வற்றாயிருப்புச் சுந்தர் :

ஐமிச்சம் எனும் சொல் உங்கள் ஊரிலும் புழக்கத்தில் உண்டா?

/* எங்கவூர்ல (மதுரை) 'எடைல புகுந்து ஒளப்பிட்டாண்டா' என்று ஒரு வழக்கு இருக்கிறது. இடையில் புகுந்து குழப்புவதை 'ஒளப்புவது' என்று சொல்வோம். ஒரு வேளை ஒளப்புதல் அளப்பியின் மருவிய வார்த்தையோ? */

சுந்தர், ஒளப்புவது, அளாப்புவது ஏதாவது ஒன்றில் இருந்து ஒன்று மருவி வந்திருக்கலாம்.

நான் தமிழ்மணத்தில் இணைந்த பின் அவதானித்த ஒரு விடயம், ஈழத்திலும் தமிழகத்திலும் ஒரே அர்தத்தில் புழங்கும் சில சொற்கள் முதலெழுத்து மட்டும் மாறுபட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டாக,
தமிழகத்தவர் மெனக்கெட்டு என்று எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். நான் அச் சொல்லை மினக்கெட்டு என்றுதான் எழுதுவது வழக்கம். அது போல இப்ப நீங்கள் குறிப்பிட்ட அளாப்பி/ஒளப்பியும். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.:-))

சயந்தன் said...

அந்தக் கதையை நானும் ஆவியில் வாசித்தேன். குரும்பட்டியில் கிரேனைட் செய்து விளையாடும் போதே இரண்டு செக்கன்களுக்குமேல் கிளிப்பைக் கழட்டி வைத்திருந்தால் அளாப்பி ஆட்டம் என்று விதிமுறையிருந்தது.

DJ said...

ஈழநாதன் & வசந்தன்:
நானும் அ.முவிற்கு இது வேண்டாத வேலையென்றுதான் கொஞ்சம் பகிடியாக சொல்லவந்தேன்; பிசகிற்றுப்போல. மிச்சத்தைப் பெயரிலி சொல்லிவிட்டார். ஈழநாதனின் சுட்டியைப் பார்த்தவுடன், பெயரிலிமாதிரி, அ.மு இந்தக்கதையை எழுத நான்கு காரணங்கள் எதுவாயிருக்குமென ஒரு MCQ ஆரம்பத்தில் எழுதிப்பார்த்தேன். ஆனால் நேற்று இணையத்திற்கு வரச்சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடிய ஒரு நண்பர், அ.முவிற்கு விமர்சனமாய் ஏதோ எழுதினாயாமே என்று கேட்டு அதற்கு விளக்கம் கொடுத்தபின், எனக்கெதற்கு தேவையில்லாத வேலை என்று இப்படிச் சொல்வதோடு நிறுத்திவிட்டேன். எனக்கென்னவோ அ.மு ஈழப்பிரச்சினை பற்றி எதுவும் எழுதவில்லையென்ற கேள்விகளால் இந்தப்பரிசோதனைக்கு வெளிக்கிட்டு 'டவுசர் கிழிந்து' நிற்கின்றார் எனத்தோன்றுகின்றது மற்றது ஆ.வியில் வந்த கதை எனக்குறிப்பிட்டதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன்னும் ஒரு கதை அ.மு, ஆ.வியில் எழுதியிருந்தார். அந்தக்கதையை ஆ.விக்காரர்கள் வெட்டினார்களோ அல்லது அ.மு ஆ.வி வாசகர்களை மனதில்வைத்து எழுதினாரோ என்ன இழவோ தெரியாது கதை அரைகுறையில் முடிந்தமாதிரி தெரிந்தது. ஒரு நிகழ்வில் அந்தக்கதையைப்பற்றி இன்னொரு நண்பரோடு உரையாடிக்கொண்டிருக்க அந்த நண்பரும் தனக்கும் இப்படித்தான் அரைகுறையில் முடிந்ததுமாதிரி தோன்றியது. 'வா, அங்காலை நிற்கின்ற அ.முவிடமே நேரடியாக விளக்கம் கேட்பம்' என்று கூட்டிக்கொண்டு போக, எனக்கேன் வம்பு என்று இடைநடுவில் நழுவிவிட்டேன். ஆ.வியில் எழுதும்போது - விமர்சனங்கள் இருந்தாலும்- இயல்பாய் மற்ற இடங்களில் சுவாரசியமாய் எழுதும் அ.மு காணமற்போய்விடுகின்றார் என்பதே இன்னும் சோகமானது. வவ்வால் போன்ற போரோடு நேரடித்தொடர்பில்லாத நணபர்களுக்கே கிரனைட் பற்றிய உண்மைகள் தெரியும்போது, கதையெழுதும்போது ஒரளவாவது சொல்லும் சென்சிட்வான விசயங்களுக்கு அ.மு உண்மையாக இருக்காலாமே?

வற்றாயிருப்பு சுந்தர் said...

//ஐமிச்சம் எனும் சொல் உங்கள் ஊரிலும் புழக்கத்தில் உண்டா?//

ஐயோ வெற்றி. செந்தழலாதவனின் பெயரிலி கோனார் நோட்ஸ் பதிவில் நீங்களிட்ட பின்னூட்டத்திலிருந்து நான் ஆட்டையைப் போட்டதுதான் ஐமிச்சம்.

புதிதாக ஒரு வார்த்தையைக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் உபயோகித்துப் பார்த்தேன் - அவ்வளவே. நன்றி.