Monday, October 08, 2007

சின்னத்தோழர் சொன்ன பின் - நவீனத்துவக்கதை

உது இங்கை என்ரை வீட்டுச்சின்னத்தோழர் & தொந்தரவாளர். வேறையொண்டும் நினைக்கக்கூடாது.

போன மாசம் என்னட்டையிருந்து தாய்க்காரி லப்ரொப்பைப் பறிச்சுப்போட்டா; அப்ப அப்ப கண்ணிலை வெள்ளீயமூடியையோ மூடிக்கட்டும் கறுப்புலெதர்ப்பையையோ (தர்ப்பை இல்லை; லெதர்ப்பை) காட்டினா உண்டு. இல்லாட்டி ஒரு அறப்பழசான டெஸ்க்ரொப்தான்; டெஸ்க்ரொப்பெண்டு சொல்லுறதிலும்விட ரெக்ஸ்டவுண் எண்டு சொல்லுறதுதான் சரியாயிருக்கும். கொஞ்சம், நாலு பந்தி அடிக்க விறைச்சுப்போய்ப் பாரீசவாதக்காரன் மாதிரியா மொனிட்டரும் மினுக்காமல் மவுசும் சிமிட்டால் ஐயோண்டு கிடக்கும். அப்பிடியாக் கணிப்பிச்சையெடுக்கிறன் பெருமாள் எண்டிருக்கிறவனிட்டை பிடுங்கித் தின்னுற அனுமாரா இப்பக் கொஞ்ச நாளாய்ச் சின்னத்தோழர். மவுசைப் போட்டு அடிக்கவேணுமெண்டு விளங்குது. ஆனா, அதுக்காண்டி குசினிக்குள்ளை ஓடுற சின்ன எலிக்குத் தும்புத்தடியால அடிக்கிறதுமாதிரி அடிக்கக்கூடாதெண்டு ஆளுக்கு விளங்குதில்லை. மவுஸைப் பிடிச்சு அடிச்சு என்ன செய்யப்போறாய் எண்டால், காயூ (Cail Lou) விளையாடப்போறன், Poowa & Kwala பாக்கப்போறனெண்டு விளக்கம். மாட்டனெண்டால், ரீவியை அமத்திப்போடுவானெண்டு, "சரி தோழர்" எண்டு விட்டு, அப்பப்ப யூரியூப்பிலை சின்னப்பிள்ளையள் கார்ட்டூன் காட்டி கதையும் சொல்லுறது வழக்கம். மூண்டு கிழமைக்கு முன்னாலை ரெட் ரைடிங் ஹுட் கதைப்புத்தகத்தை எடுத்து வந்து படம் காட்டிக் கதையைச் சொல்லிப் போட்டு, இன்ரநெற்றிலையும் போய் 1700 இலிருந்து ரெட்ரைடிங் ஹூட் கதைச்சித்திரங்கள் & கதைமுடிவு மாறி மாறியிருக்கும் படமெல்லாம் காட்டி, "அப்பம்மாவுக்குச் சாப்பாடு கொண்டுபோன ரைடிங் ஹூட்டோட கதைச்ச ஓநாய் விசயம் கேட்டுப் போய் அப்பம்மாவை விழுங்கினது" எல்லாம் சொல்லி முடிச்சாச்சு.

முந்தநாளிரவு.

"அப்பூ படுத்து நித்திரை கொள்ளனணை"

"சன் போகட்டும்"

"சூரியன் போயிட்டுது; போய்ப் பட்றா" - (எரிச்சல்; "டேய்ய்! லப் ரொப் வெள்ளியிரவு மேசையில சும்மா கிடக்குதடா!! போய்ப் படுடா! இல்லை மேலை போய் அம்மாவையாச்சும் தொந்தரவு பண்ணனடா")

"சீ, இங்கை" - அறைலைட் வெளிச்சத்தைக் காட்டுறான்.

"டேய், அது லைற்றெடா" (லைற் எண்டால் எலக்ரிக் லைட்; லோக்கலெண்டால் கூடாத சாமான்; நடுச்சென்ரர் எண்டால், நடுச்சென்ரர்தான் லெப்டுமில்லை, ரைட்டுமில்லை எண்ட பேருண்மையள் சின்னத்தோழருக்கு இன்னும் விளங்கத்தொடங்கையில்லை)

"ரெல் மீ எ ஸ்ரோரி; கதை சொல்லுங்கோ" - வி. எஸ். மணியன் கதையைப் பாலச்சந்தர் இயக்கி சுந்தரராஜன் வசனம் பேசினது மாதிரி இங்கிலீசில சொல்லி, எனக்கு விளங்காதெண்ட (சரியான) சந்தேகத்தில தமிழில வேற. ரெண்டு மொழி கதைக்குதெண்டு புளுகிறதோ (போன கிழமைதான் டெட்லாங்குவிஜ் பற்றிப் புத்தகம் எழுதினவர் ஒருவர் ரிவியில எல்லா ஸோவிலையும் வந்து, இரண்டு மொழி தெரிஞ்சால், மூளை விரியும், அல்ஸைமர்ஸ் குறையும் எண்டு சொல்லினதால சந்தோசந்தான்), இல்லை, குழப்பிறானெண்டு பயப்பிடுறதோ (தங்க்யூவுக்கு ஸ்பனிஷ் என்னவெண்டு டோரா கார்ட்டூனைப் பாத்துப் போட்டுக் கேட்டபிறகு) தெரியேல்லை. தமிழை மட்டும் எங்கை கண்டாலும் இங்கிலிஸிலையிருந்து பிடிச்சுப்போடுறான் (தமிழ்ப்பாட்டு கேட்டால்) அல்லது பிரிச்சுப்போடுறான் (சைனீஸ் ஸ்ரோரிலை தாய்லாந்து அரிசிச்சாக்கிலை ஆடிக்கிடக்கிற பொம்பிளைப்படத்துக்கும் வேர்ச்சுவல்தமிழ்யூனிவசிற்றி வெப்சைட்டில கிடக்கிற சின்னச்சிலைக்கும் தமிழ்முடிச்சுப்போட்ட முதலாவது ஆள் சின்னத்தோழர்தான்).

"இண்டைக்கு நீ சொல்லு" (லப் ரொப்பே கண்ணை நிரப்பிக்கொண்டிருக்குது; பெரிய இன்ரர்நெற் புரட்சித்தோழற்றை புரட்சிமுட்டைப்பொரியற்பதிவைக் கண்டதிலையிருந்து நாலைஞ்சு கேள்வியள் காலைமையிலிருந்து சூடான ரீயாப் போடோணுமெண்டு கை அரைவாசியில கனக்ஷன் அறுந்துபோகாத கொம்பியூட்டருக்காய் அலையுது; "ராசா நீ உன்ரை பாட்டுக்குக் கதை சொல்லு, நான் தட்டித்தட்டி ஓமோம் சொல்லுறனாம்")

"ஓகே" (வாழ்க நீ எம்man)

"லிற்றில் ரைடிங் ஹூட் கதை"

"புக் வேணும்" (வாசிச்சுக்கிழிச்சவங்களைப் பாத்திருக்கிறன்; வாசிக்காமலே புத்தகத்தை நானறிய மூண்டு வயசில கிழிச்சவங்கள் இவனும் இவன்ரை மாமியுந்தான்)

"இந்தா" (ஏதோ ஒரு புத்தகம் - வின்னி த பூவோ? காயோ?)

"ரெத் ரைடிங் ஹூட் புக்..." (டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! வாசிக்காமலே கிழிக்கிறவனே சரியான புத்தகம் கேக்குதா? பொம்மை, களிமண், கார், பந்து, பில்டிங் புளொக், பயர் எஞ்சின், தொமஸ் ரெயின் எல்லாம் விரித்து மூஷிகமாய் அடி தேடிக் குளிச்சுக் களைச்சு ஹூட் பாதி கிழிஞ்ச ரைடிங் ஹூட்டை எடுக்க உற்சாகம் தந்தது மேசைக்கெட்டியும் விரலுக்கெட்டாத லப்ரொப்பின் (நி)தரிசனமே)

"சொல்லு" (லப்ரொப்புக்குத் தாவ, அவன் என் லப்புக்குப் புத்தகத்தோட தாவுறான்; இனியொரு பொல்லாப்புமில்லை; இது எப்போதோ முடிந்த காரியம்)

"சொல்லப்பூ" (கதைக்கான படங்களைச் சரி பார்த்துப் பக்கம் பிரட்டப்படுகிறது)

"ஒரு ஊர்ல ரெத் ரைட்ங் ஹூட்"

"பிறகு.."

"ரெத் ரைடிங் ஹூட் என்ன செய்யுது?"

"நீயெல்லொ சொல்லோனும். என்ன செஞ்சது?"

"அப்பம்மாக்கு ..."

"அப்பம்மாக்கு?"

"அப்பம்மாக்கு அப்பிள், கிரேப்ஸ் பாஸ்கற்றுக்கை..."

"பாஸ்கற்றுக்கை போஒட்டுஉ..."

"பாஸ்கற்றுக்கை போட்டு என்ன செய்யுது?"

"நீ சொல்லு; என்ன செய்யிறது?"

"கொம்பூட்டர்ல ஈமேல் அனுப்பீற்று."

ம்க்!! ...... "என்ன?"

"அம்மாட்ட அப்ஸ்ரையர்ஸ்..."

புத்தகத்தை லப்ரொப்பில விசிறிப்போட்டுத் தோழர் பாஞ்சிறங்கித் தாவியேறிப்போனார்.

மூடாத புத்தகத்தினுள் ஓநாயும் திறக்காத லப்ரொப்பின்முன் நானும் நல்லாக் குழம்பிப்போய்க் கொஞ்சநேரம் குந்தியிருந்தம்.

19 comments:

மு. மயூரன் said...

உங்கட சின்னத் தோழர் ஒரு பாசிஸ்டாகவோ அலது குட்டிப் புலிப் பினாமியாவோ இருக்க வாய்ப்பிருக்கு.

மலைநாடான் said...

//உங்கட சின்னத் தோழர் ஒரு பாசிஸ்டாகவோ அலது குட்டிப் புலிப் பினாமியாவோ இருக்க வாய்ப்பிருக்கு.//

100%

லக்கிலுக் said...

முழுவதும் படித்தேன். நல்ல பதிவு.



ஆனால் ஒரு வரி கூட புரியாமல் தாவூ தீர்ந்து, டவுசர் கிழிந்துவிட்டது :-((((

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இதமாய் இருக்குது. இனிமையும். லப்போ டப்போ என்று அடித்துக் கொண்டு உம் வேதனையை வேடிக்கையாய்ச் சொல்லியிருப்பது சுவையாகவும் இருக்கிறது. சின்னத்தோழரின் செயற்பாடுகளை உணர்ந்து மகிழ முடிகிறது. வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.
இனிய காலைக்கு நன்றி.

Kasi Arumugam said...

அமெரிக்காவில 4 வருஷம் ஒரு சின்னப்பெண்ணை வளர்த்த நினைவுகளை மீள் எழும்பச் செய்துவிட்டார் சின்னத் தோழர். வாழ்க!

(பக்கத்திலிருப்பவர் இந்த ஆள் என்னத்தைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார் என்று முழிப்பதில் ஒரு சந்தோஷம்)

இளங்கோ-டிசே said...

ம்...பிள்ளையும் அப்பா போல ஆவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன என்பதைத் தவிர வெறென்னத்தைச் சொல்ல? எங்களுக்குத்தான் உங்கள் படைப்புக்களை வாசித்து தலைமயிர் உதிர்கின்றதென்றால், அடுத்த தலைமுறையிலும் இது தொடர்ப்போகின்றது போலக்கிடக்கே...என்ன கொடுமை இது நித்திலன் :-).
....
Happy Thanksgiving Day!

Sri Rangan said...

உங்கள் சின்னத் தோழர் நிச்சியமாக மனிதராக உயர்வதற்கும்-நீண்ட வாழ்வுதனைத் துய்ப்பதற்கும் வாய்ப்புகள் நிச்சியமுண்டு!இதற்காகத்"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்"என்று நம்ம கிழவர் சொன்னதை நீங்களும் உழவாரத்தொண்டில் ஆங்கிலப் படுத்தியதைப் புறூவ் பார்த்ததாக ஞாபகம்.
எல்லாம் அவன் செயல்.

அவனை வாழ்த்துகிறேன,; நலமுடன் வாழ!

Anonymous said...

நல்ல சுவாரசியமா எழுதியிருக்கிறியள்.

//உற்சாகம் தந்தது மேசைக்கெட்டியும் விரலுக்கெட்டாத லப்ரொப்பின் (நி)தரிசனமே)//

இதுக்குள்ள நிதர்சனம் ஏன் வந்தது?
பாத்தியளே உங்களுக்கும் நிதர்சனத்துக்கும் சம்பந்தமில்லையெண்ட மாதிரி வண்டில் விட்டுப் போட்டியள்.
ரயாகரன் அண்ணை அறிஞ்சால்.....

தமிழ்நதி said...

எனக்கு உண்மையிலை சந்தோசமா இருந்தது. கன பேரை முழிபிதுங்க அடிக்கிறவரை திக்குமுக்காட வைக்க ஒருத்தர் இருக்கிறாரெண்ட சந்தோசந்தான் அது.:)

மு. மயூரன் said...

மகனைப் பார்த்துத்தான் அப்பா எப்பிடி இருப்பார் என்று ஊகிக்க முடியுது.

அப்பாட முடியா மகனுக்கும்?

Anonymous said...

சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்....

சும்மா சொல்லக் கூடாது ஜூனியர் செம கலக்கலாயிருக்கார்

இங்கே நீர் செய்கிற அழிச்சாட்டியத்துக்கு வீட்டிலே ஒருத்தர் இப்படித் தேவையாகத்தான் இருக்கிறது..... :-)

சுந்தரவடிவேல் said...

:))
இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க. அப்பா இந்த வெப்சைட்டுக்குப் போங்கன்னு சொல்லுவார்!
படுறேன்.
வாழ்க மக்கா!

SnackDragon said...

பெயரிலி,

முன்னத்தான் ஒழுங்க படிக்கலை, இப்பவாச்சும் ஒழுங்கா சின்னத்தோழரிடமிருந்து கட்டுக்கொள்ளுங்கோ ..

கிளாசெல்லாம் பலமாத்தான் இருக்காக்கும்

மலைநாடான் said...

சின்னத்தோழர் பிரபலமாகிறதைப் பாத்தா, ஆரும் வாரிசு உருவாக்கப்படுகிறார் எனப்பதிவு போடப்போகினம் :)

-/சுடலை மாடன்/- said...

//இங்கே நீர் செய்கிற அழிச்சாட்டியத்துக்கு வீட்டிலே ஒருத்தர் இப்படித் தேவையாகத்தான் இருக்கிறது..... :-)//

இதத்தான் இப்ப எழுத இருந்தேன். பிரகாஷ் அதுக்குள்ளயும் எழுதிட்டார் :-)

//அப்பிள், கிரேப்ஸ் பாஸ்கற்றுக்கை போட்டு கொம்பூட்டர்ல ஈமேல் அனுப்பீற்று.//

இப்பதான் பின் - நவீனத்துவமே முழுக்கப் புரிஞ்சிருக்கு :-)

-/பெயரிலி. said...

நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. பிரச்சனைகளுக்கு எவ்விதம் எதிர்பாராத விதங்களிலே குழந்தைகள் தீர்வுகள் காண்கின்றன என்பது சுவையாகவும் சில சந்தர்ப்பங்களிலே பயனுள்ளதாகவும் இருக்கின்றன.

மயூரன் & மலைநாடன், தோழர் இப்போதைக்குப் பீடியாசுகர் பாலிஸ்டாத்தான் இருக்கிறார். வளரத்தான் பினாமியாயோ அநாநியாயோ விளைவார் என்பது வெளிச்சம். மயூரன், அப்பருக்கு முக்கால் முடி, மகருக்கு கால் முடி; ஆனால், ரெண்டு பேருக்குமே சொந்தமாய்க் குந்தச் சிம்மாசனம் இல்லையெண்டதுதான் அரசகட்டுக்காடங்கா நிலை(யின்மை). :-)

லக்கிலுக், முன்னரும் ரெண்டு தடவை டவுசரெண்டு இங்கே கிழித்துப்போட்டீர்கள்; ரெண்டாம் முறை போட்டத்தைப் பார்த்தால், கௌபீனம்; இப்ப கிழிஞ்சது பிருஷ்டத்தோலோ தெரியேல்லை. பொய் சொல்லாதிரும் :-) (இது தோவன்னா இல்லன்னா, தோல். இப்பவெல்லாம், தோவன்னா இழானா போட்டாலே comroyalty கட்டவேண்டியதாகக் கிடக்குது நிலை)

செல்வராஜ், காசி, ஸ்ரீரங்கன் தோழருக்கான வாழ்த்துக்கு நன்றி. இரண்டு பேருக்கும் மூட் நல்லாகவிருந்தால், சுவையாகத்தான் இருக்கின்றது; ஒருத்தருக்கு அந்த மனநிலை குலைந்தாலே, போச்சு; அமெரிக்காவுல வாரு பாருதான் :-)

டிசே, ஆரையும் மொட்டையடிப்பதென்றால், நமக்கு அதுபோதும்.

அநாமதேயமே, ரெண்டு உதை வாங்கும் இடுகைகளுக்கிடையே கொஞ்சம் சஞ்சலமில்லாமப் பதிவு போடுவமெண்டு பாத்தால், கோயிலிலைபோயும் கொடுமை ஜிஞ்சினாசானா ஆடினது மாதிரி நிதர்சனம் காட்டுறீரே? நியாயமா?

பிரகாஷ், தமிழ்நதி & சுடலைமாடன்,
ஏதோ தாய் புண்ணியம் பாதி மகன் புண்ணியம் மீதி என்று கையிற்கு கணணி வராமலே தப்புகிறீர்கள். எனக்கெண்டொரு கணணி வருவா! எனக்கெண்டொரு கணணி வருவா!!

சுந்தரவடிவேல், பயப்படுத்தாதையும்.

கார்த்திக்கு ராமதாசா, நமக்கென்றொரு அட்வைஸ் காலம் வராமலா போகப்போகிறது? அப்போதைக்கு உமது பின்னூட்டத்தைச் சேமித்து வைத்துக் கக்கிவிடுகிறேன்.

Anonymous said...

I wish he could hack your blog :)

Anonymous said...

எனக்கு உண்மையிலை சந்தோசமா இருந்தது. கன பேரை முழிபிதுங்க அடிக்கிறவரை திக்குமுக்காட வைக்க ஒருத்தர் இருக்கிறாரெண்ட சந்தோசந்தான் அது.:)



It is all in the genes :).

Anonymous said...

இங்கே நீர் செய்கிற அழிச்சாட்டியத்துக்கு வீட்டிலே ஒருத்தர் இப்படித் தேவையாகத்தான் இருக்கிறது..... :-)

I beg to differ, one is necessary
but not sufficient :)