Saturday, March 08, 2008

சந்நதி முருகனுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் அரோகரா!

புலம் - 27

'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய்க் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா?

[இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் எவரோ அவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் கொட்டும் குண்டுகளாலே மழலைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றது. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது]

"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. ('தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.

அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்).

தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே, 'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. ('க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள்.

அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த - அவருக்கு நன்றி. [இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை ['கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.

மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....
..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.

40 comments:

குழவி said...

//"சோராமாலன்"//

அட.. அடடா :)

மு. சுந்தரமூர்த்தி said...

முந்தைய இடுகையில் பின்னூட்டம் எழுதிய பிறகு தான் இதை வாசித்தேன். நல்ல அலசல்.

//அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது ... //

//"சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்"//

சில ஆண்டுகளுக்கு முன் 'முரசொலி அறக்கட்டளை' யின் சார்பில் சுஜாதாவுக்கு விருது கொடுக்கப்பட்டது என்று நினைவு.

'கணிப்பொறி' என்ற சொல்லை எண்பதுகளின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தியவர் வா. சே. குழைந்தைசாமி என்று நினைவு. சொல்லப்போனால் அச்சொல்லை சுஜாதா கிண்டல் செய்துக்கேட்டிருக்கிறேன். ('அறிவியல் தமிழ்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற ஐ. ஐ. சி. தமிழ்ப் பேரவையில் அழைத்திருந்தோம்) 'கேட்க 'எலிப்பொறி' மாதிரி தமாஷா இருக்கு. கம்ப்யுட்டர்னே எழுதலாம்' என்று குறிப்பிட்டார். எதற்கு எல்லாவற்றுக்கும் தமிழில் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்? இந்திய மொழிகளில் கலைச்சொற்களை உருவாக்கும்போது சொற்களுக்கு பதிலாக வரையறைகளை பதிலீடு செய்துவிடுகிறோம் என்ற ரீதியில் விளக்கி தமிழ், இந்தியிலிருந்து சில உதாரணங்கள் கொடுத்தார் (இந்திய அரசு இந்தியில் அறிவியல் நூல்களை எழுத அமர்த்தப்பட்டவர்கள் சில மின்னியல் சொற்களை எப்படி அபத்தமாக மொழிபெயர்த்திருந்தார்கள் என்பதை சுவாரசியமாக எடுத்துச்சொன்னார்).

-/சுடலை மாடன்/- said...

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவைப் பற்றிய சரியான பார்வை.

எண்பதுகளில் சுஜாதா "ஏன், எதற்கு, எப்படி" என்ற அறிவியல் வினா-விடைத் தொடரை ஜூனியர் விகடனில் எழுதினார். அதைத் தொடர்ந்து படித்து வந்தவன் நான். அதில் ஒரு வாசகரின் கேள்வி - 'computer'-க்குத் தமிழ்ச்சொல் என்ன? சுஜாதா சொன்ன பதில் - 'கம்ப்யூட்டர்' என்பதே. அதே கேள்வியில் 'கணிப்பொறி' என்று சிலர் குறிப்பிடுவதை நையாண்டி செய்திருந்தார். அக்கால ஜூவி இதழ்களைத் தேடிப்பிடித்தாலோ அல்லது அவருடைய தொடர் பின்னர் நூல் வடிவில் வந்திருந்தாலோ இந்தத் தகவலை உறுதி செய்துகொள்ளலாம்.


நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

சற்றுப் பிந்திய பதிவு என்றாலும் பலர் சொல்லாமல் விட்ட விடயங்களை சொல்லிச் சென்றிருக்கின்றீர்கள். உதாரணமாக இந்திய இலக்கியவாதி ஒருவரை இந்தியாவில் இருந்து பார்க்கும் ஒருவருக்கும் இலங்கையில் இருந்து பார்க்கும் ஒருவருக்கும் பல விடயங்களில் வித்தியாசம் இருப்பதாகவே நினைக்கின்றேன்.

சுஜாதா என்ற பெயரை எனது 11 ஆவது வயதில் முதன் முதலில் கேள்விப்பட்டேன். அக்காலத்தில் ராணி காமிக்ஸ் மற்றும் ராணி முத்து என்பதில் இருந்து விடுபட்ட காலம். முதலில் அவர் ஒரு பெண் என நினைத்தேன். ஆயினும் அவர் ஒரு ஆண் என தெரியவர எனக்குச் சில காலங்கள் பிடித்தது. ஆயினும் அவரது கதைகளில் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது எனக்கூற முடியாது. ஏனெனில் அவ்வயதில் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்த துப்பறியும் கதைகளை வேறு பலர் எனக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், சுபா போன்றோர். ஆகையால் 'வாசிப்பு பேராசையால்' அவதிப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு கிடைக்கும் போதெல்லாம் சுஜாதவையும் விடாமல் வாசிப்பேன். சிறிது காலங்களின் பின்னர் அவரது இரட்டை அர்த்த வசனங்களால் கவரப்பட்டு அவற்றைக் களவாக ரசிக்க தொடங்கியிருந்தேன். ஆயினும் அவை எனக்கு போதுமாய் இருக்கவில்லை. ஆயினும் அதன் பின்னான காலங்களில் அதில் இருந்து சற்று வித்தியாசமான எழுத்தாளர்களின் பால் கவனம் திரும்பியது. உதாரணமாக ஸ்டெல்லா புரூஸ், ஆர்னிகா நாசர் போன்றோர் மேற்கூறியோரை விட சற்றுப் புத்திசாலைகள் போல எனக்குத் தென்பட்டார்கள். எனக்குச் சற்றுச் சவாலாகவும் விளங்கினார்கள். அத்துடன் குற்றங்கள் தொடர்பாக அதன் மனநிலையை நேர்மையாக முன்வைத்தது போல் தோன்றியது. ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், சுபா மற்றும் சுஜாதா போன்றோரின் நாவல்களின் போக்கு குற்றங்கள் தொடர்பில் மிகவும் சினிமாத்தனமானவை. குற்றவாளியை கட்டமைக்கும் வன்முறை கொண்டவை. குற்றவாளி உருவாக்கத்தில் மிகவும் மோசமான வன்முறையை கையாள்பவர்கள். குற்றவாளிகள் தொடர்பில் பொதுச்சமூகவெளி கட்டமைக்கும் மனநிலையை மேலும் வலுப்படுத்தும் கேவலமான வேலையை தமது வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் செய்தே தொலைத்தார்கள். விளிம்பு என்பதை பொதுச்சமூகவெளிக்கு அப்பாற்பட்ட நிராகரிக்கப்படவேண்டிய தளமாக கட்டமைப்பதில் பெரும்பங்காற்றுபவர்கள் என்றவகியில் அவர்கள் தொடர்பில் எனக்கு தற்போது இருக்கும் உடன்பாடின்மைகள் மிகப்பெரியவை. இவை தொடர்பில் எமது சமூகத்தின் அவலத்திற்கு இவர்களின் பங்கும் கணிசமான அளவென்பது எனது நிலைப்பாடு. இதனைப் பிராமணிய மனநிலை என்று கூறலாம். அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட 'எல்லாவற்றையும்' கொண்டாடுவதின் ஊடாக மற்றமையை நிராகரித்தல் என்பது இவர்களின் பொது நிலைப்பாடாக இருந்தது. அவர்களின் வியாபாரத்திற்கும் தேவையாக இருந்தது.

சில காலங்களில் சுஜாதாவை மறந்துவிட்டேன். அவர் எனக்குத்தேவைப்படவும் இல்லை. வாசிப்பு வேறு பக்கத்திற்கு திரும்பிவிட்டது. ஆயினும் 15 ஆவது வயதில் சுஜாதா வின் 'ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து' என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. அது எனக்குள் ஒரு புதிய பாதையை திறந்தது போன்ற பார்வையை ஏற்படுத்தியது. அது நவீன பௌதீகத்தையும் சைவ சித்தாந்தத்தையும் இணைத்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு நூலாகும். அந்நூல் மிகச்சிறிய நூல் என்ற போதும் அந்தவயதில் எனக்குள் சில வித்தியாசமான கிளர்ச்சியை உருவாக்கியது. அன்றில் இருந்து நான் மதம் தொடர்பான விடயங்கள் வரும் போதெல்லாம் அந்நூலை நினைஇகுமளவிற்கு எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அந்நூல். அந்நூலை என்னுடன் பல காலம் காவித்திரிந்தேன். பலமுறை வாசித்திருக்கின்றேன்.

சில வருடங்கள் உருண்டோடிய பின்னர் 18 ஆவது வயசில் , மதங்கள் மீதான அவநம்பிக்கைகளுடன் இருந்த காலத்தில் ஒரு முறை மூன்றாவது மனிதன் இதழ் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில் மு.பொ காப்ராவின் நூல் ஒன்றைப்பற்றி எழுதி இருந்தார். அதன் பெயர் தாவோ பிசிக்ஸ் என்பதாகும். அதில் மு.பொ காப்ரா பற்றிய சிறிய குறிப்பு ஒன்றை எழுதி உள்ளதோடு காப்ராவினது பார்வை பௌதீகவியல் ஆய்வுக்கு முக்கியமானதெனவும் குறிப்பிடுகின்றார். அதில் காப்ரா சின்ன பொடியங்களைப் போல புழுகி இருப்பதாக எனக்குப் பட்டது. ஏனெனில் சிவனது நர்த்தனம் தனக்கு மூலக்கூறுகளைன் இயங்குகையை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன் தான் இப்புத்தகத்தை எழுதும் இவ்வேளை தான் இதை எழுதுவதாக உணராமல் யாராலோ எழுதப்படுவதாக உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

அதற்கு சில காலங்களுக்கு பின்னர், அறிவியல்- அதிகாரம்- ஆன்மீகம் என்ற நிகழ் கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதில் ஈழத்து எழுத்தாளர் ராம் பிரேமிள் பங்கு பற்றிய விவாதம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பிரேமிள் சுஜாதாவிற்கு நெருப்படி கொடுத்திருந்தார். அதுவும் எனது ஆஸ்தான புத்தகமான 'ஒரு விஞ்ஞான பார்வையை' முன்னிறுத்தி.. தற்போது இந்த புத்தகத்தை வைத்திருக்கின்றேன். அதிலிருந்து சில விடயங்கள்..
...........ஒருவர் இன்னொருவருக்குப் பரிசோதனை வடிவத்தில் நிரூபிக்கக்கூடியதை மட்டுமே ஒப்புக் கொள்ளவேண்டும்.- இது தான் விஞ்ஞான மனோபாவம் இருவருமே பரிசோதனையினை ஏற்றுக் கொள்கிற மன ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தாக வேண்டும் என்பது வெளிப்படை. விஞ்ஞான மனோபாவம் இந்த மனவொழுக்கத்தையே சார்ந்தது. கல்வியையோ படித்துப் பெற்ற பட்டத்தையோ அல்ல, விஞ்ஞானக் கல்வி பெற்றிராத சிலரிடம் இந்த மனஒழுக்கத்தைச் சந்திப்பது போலவே விஞ்ஞானக் கல்வி பெற்ற பட்டதாரிகளிடம் இந்த மனஒழுக்கம் இல்லாத நிலையை நாம் அவ்வப்போது காணலாம். ஒரு விஞ்ஞானப் பார்வையில் இருந்து என்ற நூல் இதில் மனஒழுக்கம் இல்லாத ஒரு விஞ்ஞானப்பட்டதாரியை நமக்குக் காட்டுகிறது. ...... இந்நூல் விஞ்ஞான அடிப்படைகளை அறிந்த ஆன்மிவியலாளர்களுக்கு ஒரு புறமும், விஞ்ஞானிகளுக்கு மறுபுறமும் அருவருப்பைத் தரக்கூடியது இது... புலன்கள் மூலமும் புலன்கள் சார்ந்த அறிவின் மூலமும் பிரபஞ்சத்தை ஆராய்வதே விஞ்ஞானம். இந்த முறை பிரபஞ்சத்தை அறிய உதவாது என்று உணர்பவனே ஆன்மவியலாளன், இன்றைய பௌதீகத்திற்கும், அதன் அடிப்படையான கணிதக் கோட்பாடுகளுக்கும் தந்தையான ஐசக் நியூட்டனிடத்தில், ஒரு கட்டம் ஆன்மீகத் தேடலாகவும் இருந்திருக்கிறது. இந்த இரண்டுமே ஒரே உண்மையைத் தான் பேசுகின்றனவா என்று நியூட்டன் கவலைப்படதே இல்லை. ஏன் கவலைப்படவில்லை?- இந்த கேள்வியை எழுப்பினால்தான், அங்குள்ள காப்ராக்களும், இங்குள்ள சுஜாதாக்களும் உண்மையில் விஞ்ஞானத் தேடல் காரர்களும் அல்ல என்று உணர முடியும். இவர்கள் நவீன விஞ்ஞானத்தின் விளைவான வசதிகளையும், விஞ்ஞானத்தை அனுசரித்துப் பேசுவதன் மோஸ்தரையும் கௌரவிப்பவர்கள், அதேநேரம் தங்கள் பூர்வீக மரபுகளை விட்டுக் கொடுக்க விரும்பாதவர்கள் உண்மையான விஞ்ஞனப் பார்வையிலும் சரி, ஆன்மீகப்பார்வையிலும் சரி மோஸ்தருக்கோ பிடிவாதமான பாதைகளுக்கோ இடமில்லை.............
என்று கூறுகிறார் ராம் பிரேமிள்.

இதனால் எனக்கு குவாண்டம் பிசிக்ஸ் இல் இனம்புரியாத விருப்பம் ஒன்று இருந்துகொண்டேயிருந்தது. பல்கலைக்கழகத்தில் குவாண்டம் பிசிக்ஸை எனது விருப்ப பாடமாக தெரிவு செய்யும் போது சுஜாதா, மு.பொ மற்றும் பிரேமிள் மூவரும் கண்முன்னே தோன்றினார்கள். மிகவும் விருப்பட்டு அப்பாடத்தை தெரிவு செய்தேன். ஆயினும் செமிஸ்ரர் பரீட்சைக்கு முதல் நாள் நோர்வேயில் இருந்து வந்திருக்கும் நண்பர் ஒருவர் பெரிய பார்ட்டி ஒன்று வைப்பதாகவும் அதில் பல முக்கியமான பாதாள உலகக் கோஸ்டிகள் வர இருப்பதாகவும் என்னை நண்பர் அழைத்ததின் பேரில் போய்விட்டு உடனடியாக வருவோம் என்ற நினைத்தவாறு பார்ட்டிக்கு சென்றேன். ஆயினும் பார்ட்டி உச்சத்திலும் பாதாள நண்பர்களின் 'புரட்சி'ப் பேச்சிலும் மயங்கிய நான் அதிகாலை 5 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் அரைக்கணை மூடியபடி வீடு போகும் போது சுஜாதா, மு.பொ மற்றும் பிரேமிள் மூவரும் கண்முன்னே தோன்றினார்கள். மதியம் 12 மணியளவில் முழிப்பு வந்த போது எக்சாம் முடிந்திருக்கும் என நினைத்து சந்தோசப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை..

சில காலங்களின் பின்னர் நண்பர் ஒருவர் தாவோ பிசிக்ஸ் என்ற புத்தகத்தை தனது புத்தக அலுமாரியில் வைத்திருக்க கண்டு அதனை மிகவும் விருப்பத்துடன் எடுத்துக் கொண்டுபோய் வாசித்தேன். கீழைத்தேய தத்துவங்கள் தொடர்பிலான அறிமுகங்களே என்னை ஆகர்சிக்கவில்லை. அதன் பின்னர் குவாண்டம் பிசிக்ஸ் தொடர்பான விடயங்களும் மிகவும் அடிப்படையானவையாக இருந்தன. ஆயினும் படிக்க வேண்டும் என்பதற்காகப் படித்தேன். அதன் பின் கீழைத்தேய தத்துவங்களையும் நவீன பௌதீகத்தையும் இணக்கும் பகுதிக்கு வந்திருந்த போது எனது கிராமத்து வீட்டில் எனது அறைக்கு அருகே இருக்கும் மல்லிகைவாசத்தை உணர்ந்தேன். மரங்கொத்தி மரத்தை கொத்தும் ஓசை எனக்கு கேட்கத் தொடங்கியது. எனது கிராமம் என் முன் விரிந்து வாசிப்பதற்கு இடையூறை ஏற்படுத்தியது.
ஏனெனில் சுஜாதாவின் புத்தகத்தை நான் எனது கிராமத்தில் எனது அறையில் இருந்தே வாசித்திருந்தேன். அத்துடன் இரண்டும் புத்தகங்களும் ஒரே மாதிரி இருந்தது எனக்கு வியப்பளிக்கவில்லை ஏனெனில் சுஜாதாவின் சில கட்டுரைகளை உயிர்மையிலும் சுஜாதாவின் படங்களை தியேட்டரிலும் பார்த்தாகிவிட்டது.

ஆயினும் தாவோ பிசிக்ஸ் பற்றி ஒரு முறை பெயரிலியுடன் உரையாடியிருந்தேன். அப்போது பெயரிலி அதற்கு பின்னே அதன் ஆசிரியர் தனது நூலை மறுத்து எழுதியதாக கூறினார். பின்னர் நானும் இணையத்தில் தேடிப்பார்த்த போது அது பௌதீகவியலாளர்களால் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியதாக அறியக்கிடைத்தது. தாவோ பிசிக்ஸ் என்ற புத்தகம் 1975 இல் வெளிவந்துவிட்டது. அதன் பின்னர் அதன் மீள்பதிப்பு 1982 வந்தது. இரண்டினது முன்னுரைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதெனச் சொல்லப்படுகின்றது. காப்ரா தனது கருத்தை மறுத்திருப்பதாகவும் அறியக்கூடியதாக இருந்தது. ஆயினும் சுஜாதா தனது இக்கருத்தை- காப்ராவிடன் கடன் வாங்கிய- கருத்தை மறுத்ததை நான் அறியேன். பிரேமிள் சொன்னது போல தமது மரபுகளை பேணுவதற்காக அவர் விஞ்ஞானத்தை ஒரு கருவியாக்கினார்.

ஆயினும் ஈழம் தொடர்பாக சுஜாதா பெரிதாக எதுவும் கூறியதாக நான் அறியேன். சில விடயங்கள் கொஞ்சம் நெகிழ வைத்தது. ஒருமுறை எங்கோ கேள்வி- பதில் பகுதியில் "நல்ல தமிழைக் எங்கே கேக்கலாம்?" என்ற கேவிக்கு "ஒரு கடலையும் சில குண்டுச் சத்தங்களையும் தாண்டிப் போக வேண்டும்" எனக்கூறியதாக நினைவு. வேறு விடயங்கள் சொல்வதானால், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் உள்ள மைத்ரேயி இனது 'முகம் மறுக்கப்பட்டவர்'கள் கவிதையை தற்கொலைப் போராளி வாசித்துக் காட்டுவதாக ஒரு காட்சி மற்றும் கன்னதில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஈழம் தொடர்பான சில திரைக்கதை வசனங்கள், அவர் ஒருவித அறியாமையினூடான உயர்வு அபிப்பிராயத்தை வைத்திருந்தார் என நினைக்க தூண்டின.. உச்சமாக சிவாஜி படத்தில் ரஜனி தமிழ்ப்பொண்ணு வேணும் எனக் கேட்க விவேக் சொல்லுவார் "நீ கேட்கிற பொண்ணுக்கு நாம யாழ்ப்பாணம் தான் போக வேண்டும்." என. இவ்வாறாக ஈழம் தொடர்பாக அறியாமையூடாக ஈழம் மற்றும் ஈளமக்கள் தொடர்பாக உயர்வு(!?) அபிப்பிராயம் ஒன்றை அவர் வைத்திருந்திருக்க கூடும் என நினைக்க தோன்றுகின்றது.- இது மேம்போக்கான தளம்-

ஆயினும், அவர் இந்திய தேசியவாதத்தை பலமாக ஆதரித்த ஒருவர். அதனூடாக தனது சார்ப்புத் தேசியவாதத்திற்கு விட்டுக் கொடுக்க முடியாத அராஜக மனப்போக்கைக் கொண்டிருந்தார். அதற்கு போய்ஸ் படத்தில் நக்சலைட்டுக்களுடனான சில உரையாடல்கள் மற்றும் ரோஜா படத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அந்த தீவிரவாதம் கூடாது எனக்கூறும் உரையாடல் வரும் பகுதிகள் உதாரணங்களாகும். புரட்சிகளையும் போராட்டாங்களையும் நசுக்கும் மனநிலை கொண்ட அதிகாரவர்க்கத்திற்கு சார்பான உரையாடல்கள் அவை. இன்னும் இந்திய தேசியவாதம் கேள்விக்கு உட்படாமல் பூஜிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையை பொதுச்சமூக மனவெளியெங்கும் விதைத்திருப்பவை அவை. பிராமணிய மனநிலைக்கு ஒப்பானவை அவை.

இந்திய தேசியவாததின் ஒதுக்கலுக்கு உள்ளாக்கும் திராவிட தேசியவாதம் பற்றியதும் அது சார்பானதுமான பதிவர்களுக்கும் நக்சலைட் நடவடிக்கைகள் மூலம் செயற்பாட்டுத்தளத்தை தகவமைத்துக் கொண்ட பதிவர்களுக்கும் சுஜாதா நிச்சயம் எதிர்க் கருத்தாளர் மட்டுமல்ல சமூகத்தில் அதிகாரத்தில் நின்றவாறு தமது குரல்களைக் கேவலப்ப்டுத்தியவர் என்ற மனநிலையும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அவர்கள் அநிலையில் நின்று அவரை விமர்சித்திருப்பார்கள். ஆயினும், 'சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு' என்ற பூச்சுத்தல் எமக்கு தேவை இல்லை நண்பா.. ஈழத்து பதிவர்கள் சுஜாதா வின் மறைவு தொடர்பாக உணர்ச்சிவசப்படுவது அவர்களின் அறியாமையால் வந்த வினையே.. சுஜாதாவின் இழப்பு மனுஸ்யபுத்திரனுக்கும் சங்கருக்கும் வேண்டுமென்றால் பேரிழப்பாக இருக்கலாம். தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்று சொல்பவர் தமிழ் இலக்கியம் என்று எதைக் கருதுகின்றார் என்பதை நினைக்கும் போது பதிவர்கள் மீது அனுதாபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், தூக்கணாங்குருவிகள், துடைப்பக்குச்சிகள், சங்குகள், சாமரைகள், ஆலவட்டங்கள், ஜால்ராக்கள், கைப்புள்ளைகள், தூக்குச்சட்டிகள், ...........................................

-அமீபா-

Anonymous said...

நல்லதொரு அலசல்.
.....
ஈழத்துக் கப்புறாளைகளுக்கு (?) இப்போது எது சொன்னாலும் விளங்காது; காலம் கற்பிக்கட்டுமென வாளாவிருக்கவேண்டியதுதான்.
.....
சுஜாதா, சிலவருடங்களுக்கு முன் விகடனில் (பிராங்க்போர்ட்) றஞ்சினியின் கவிதைத் தொகுப்புப் பற்றி சிறு குறிப்பு எழுதியதாகவும், ஏதோ ஓர் ஆண்டு முடிவில் அந்த ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்பு (2006?)என 'விருது' கொடுத்தாயும் நினைவு.

கொண்டோடி said...

//கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், //


அண்ணை, ஒண்டை விட்டிட்டியள்.

"தமிழ்ப் பண்பாட்டோட பொம்பிளை தேவையெண்டா யாழ்ப்பாணம்தான் போக வேணும்" எண்டு புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தாரிட்ட பணம் புடுங்கவெண்டே சேர்க்கப்பட்ட சிவாசி வசனத்தை மேற்கோளிட்டு
'தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது' என்று புழுகுக் குணத்தில் இடுகையெழுதியவர்கள் இதே பூசாரிகள் என்பதையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் தெம்பா இருந்திருக்கும்.
====================

எண்டாலும், உங்களைப் போய் கட்டுரை எழுத வைச்சிருக்கிறாங்கள் பாருங்கோ...
அங்க நிக்கிறாங்கள் பெடியள்.

ஈழநாதன்(Eelanathan) said...

இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லாத விடயமாகிய செல்வச் சந்நிதியானை தலையங்கத்திலேயே இட்டு கன நாளா மறைந்திருந்த ஊர் போய்வரும் ஆசையை திரும்பக் கிளறி எனது நிம்மதியைக் கெடுத்ததற்காக உம் மீது இணையத் திரட்டிச் சட்டத்தின் கீழ் வழக்கு கிழக்குத் தொடுக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்

அற்புதன் said...

அமீபாவின் பின்னூட்டத்தை வெகுவாக ரசித்தேன்.அமீபா நீங்கள் சொந்தப் பதிவு எழுதுவது இல்லையா?அல்லது இது உங்கள் பின்னூட்ட முகமூடியா?

உண்மையில் நான் சுஜாதா சம்பந்தமான எந்தப் பதிவையும் படிக்கவில்லை. தமிழ் டிவி சீரியல் பார்க்கிற நினைப்பு வரும் என்பதால்.

நமக்கு இருக்கும் ஊருப்பட்ட பிரச்சினைகளை விட்டு விட்டு சிலர் இப்படியு படம் காட்டி இருகிறார்கள் என்பதை நினைக்கும் போது, x குருப்பின் பதிவுகள் பேசிய ,படு கொலைகள் நாளந்தம் நடக்கும் அச்சமான சூழ் நிலைலும்,கொழும்பில் லட்சங்கள் செலவழித்து தமிழ்ப் படம் எடுக்கும் புண்ணியவான்கள் தான் கண் முன் வருகிறார்கள்.

வைகை said...

வழக்கம்போல உங்கள் எள்ளல் ஈர்த்தது. இந்த அமீபாவுக்கு வலைப்பூ கிடையாதா...? விசயம் தெரிந்தவராக இருப்பார் போலிருக்கிறது.

கொழுவி said...

அமீபாவை (அமீபாக்குஞ்சென்றுதான் அழைப்போம் :) வலைப்பதிவில் அழைத்து வர ரொம்பநாளாவே முயற்சிக்கிறோம். :) ஒரு சில அண்ணைமாருக்கு அவர்கள் பாணியில் பதிலடி தர அவர் தேவை.. அமீபா வருவார்..

Anonymous said...

/நமக்கு இருக்கும் ஊருப்பட்ட பிரச்சினைகளை விட்டு விட்டு சிலர் இப்படியு படம் காட்டி இருகிறார்கள் என்பதை நினைக்கும் போது, x குருப்பின் பதிவுகள் பேசிய ,படு கொலைகள் நாளந்தம் நடக்கும் அச்சமான சூழ் நிலைலும்,கொழும்பில் லட்சங்கள் செலவழித்து தமிழ்ப் படம் எடுக்கும் புண்ணியவான்கள் தான் கண் முன் வருகிறார்கள்./

படம் எடுத்துட்டு அதை திரையிடுறதுக்கு ஓடி திரியுறாங்களாம். கொழும்பிலிருந்து பதிபவர்களைப் பார்த்தால் தெரியுதே..! அவங்களே சுஜாதாவுக்கு பூசை பண்ணேக்கை மற்றவங்கள் படம் எடுக்கிறது பெரிய விசயமே அற்புதன் அண்ணை? படம் எடுத்த வவுனியா பொடியர் ஒருத்தர், ஒரு பிரச்சனையில சொன்னாராம் "நாங்கள் புளொட் காம்பில இருந்து தான் வந்தனாங்கள் எண்டு.." புளொட் காம்பில இருந்தவர் கில்லி மாதிரிதானே படம் எடுப்பார்.

http://x-group.blogspot.com/2008/03/blog-post_08.html
http://x-group.blogspot.com/2008/03/blog-post.html

Anonymous said...

vazkkam pOla 'dictator' pArvai.

Anonymous said...

JK-vukku kasaiyum J.Mo-vukku vasaiyum illamal ‘choramalan’ –vakaiyarakkaLai kalnthu katti adikAmal pathikL muzumai adaivvathillayE…

Ithu ippadi irukka – manam pisakiyavaraip pOla, moorkamAka thAkuvathaiyE thozilakak kondiruntha kavi- tharumu sivaram piremiL tamil Elam patRi ezuthiyathu than enna? Atahrkellam avarkku nEram irunthatha?

-/பெயரிலி. said...

அய்யா அநாமதேயம்,
தமிழிலேயே அடித்திருக்கலாமே? உரோமன் குறி (இது வேறு குறி ;-)) பெயர்க்கமுன்னால், முழிபெயர்ந்திடுகிறது.

வழக்கம்போல, டிக்டேட்டர் வகையென்றால், அதுதான். யாரோ டிக்டேட் பண்ணினதைத் தட்டினமாதிரியில்லாமல், டிக்டேட்டராய் எழுதுவதுதான் நல்லது. வேண்டினால்,எடுத்துக்கொள்க; அல்லது, ஒதுக்கிச்செல்க ;-)

ஜெயக்காந்தன் ஈழத்தமிழர் பற்றிய அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி 87 இலிருந்து அங்குமிங்கும் சொல்லியாகிவிட்டது. ஜெயமோகன் ஈழ அரசியலிலே ஏதுமே புலம்புவதில்லை.

தர்மு சிவராமு ஒரு போதும் தன்னை ஈழத்துக்கவிஞர் என்று இனம் காட்ட முற்பட்டதாகத் தெரியவில்லை என்பதை, தளையசிங்கம் முதல் பல ஆனை, குதிரைகள் எல்லாம் சொல்லி விட்டார்கள். (ஆனாலும் அவர் கடைசிக்காலங்களிலே எழுதிய "ஈழ" நூல்கள் உண்டே?)

Mohandoss said...

//இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் எவரோ அவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; //

தலைமை வாத்தியார் பதிவிங்கிறது சூப்பர் ஸ்டார் பதவி மாதிரி நிறைய பேர் போட்டி போடலாம் ஆனா ரிப்ளேஸ்மென்ட்டே இல்லாத பதவி அது. வாத்தியார்னா மாணவர் ஏத்துக்கணும் இல்லையா?

//அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள்,//

:(

//அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.//

சொட்டுன செட்டுல நானும் உண்டுன்னா, தலையால பிறந்ததப் பத்தி 'நான்' இன்னொரு முறை யோசிச்சுப் பார்க்கணும் என்று நினைக்கிறேன்.

//பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். //

நான் இருக்காதுன்னு நினைக்கிறேன் எனும் பொழுதே இது சரி என்றே நினைக்கிறேன்.

//அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது//

மற்றபடிக்கு நன்றிகள்

Sundar Padmanaban said...

Post-னு சுட்டியை அமுக்கிட்டு 'அப்பாடா'ன்னு நிமிர்றதுக்குள்ள 'ஐயோ'னு சொல்ல வச்சிட்டீங்களே!

எது எப்படியோ - அடிதடிப் பதிவுகள் (இரு சாராரிடமிருந்தும்) மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன.

பெரும்பாலும் மெளனமாக இருப்பதே நல்லது என்ற எண்ணம் மேன்மேலும் வலுப்படுகிறதேயொழிய வாயைத் திறந்து பேசுவோம் என்ற எண்ணமே எழாதிருக்கிறது.

பதிவில் நீங்கள் சுட்டியுள்ள - முதற்சில பத்திகளின் 'அவரவர் காரணங்கள் அவரவர்க்கு - யாருக்கும் மற்றவரைச் சுட்ட உரிமையில்லை' என்பதிலிருந்து - யாரும் ஒழுங்கில்லை என்று முடித்ததுவரை - எல்லா கருத்துகளுடனும் ஒத்துப்போகிறேன்.

நடுநிலை என்ற ஒன்றே கிடையாது போல.

நன்றி - சுஜாதாவின் சித்திரப் படத்திற்கும் சேர்த்து!

வெற்றி said...

/* DJ said...
நல்லதொரு அலசல்.
.....
ஈழத்துக் கப்புறாளைகளுக்கு */

கப்புறாளைகள் எண்டால் என்ன பொருள் எண்டு தயவு செய்து சொல்லுவீங்களோ?

கப்புறாளைகள் = மோடன்கள்/விசரன்கள்????

பி.கு:- சுஜாதவின்ரை படைப்புகள் எதையும் இதுவரை படிக்கேல்லை. கலைஞர், கண்ணதாசன், அறிஞர் அண்ணா, திருமுருக கிருபானந்த வாரியார் ஆக்கள் எழுதின கொஞ்சப் புத்தகங்கள் படிச்சதோட சரி என்ரை தமிழ்ப் புத்தக வாசிப்புக்கள். சுஜாதா குறிச்சோ அல்லது தமிழ் இலக்கியங்கள் குறிச்சோ, அல்ல்து உங்கடை பதிவு பற்றியோ பறைய எனக்குத் திறமையோ தகுதியோ இல்லை.

மு. சுந்தரமூர்த்தி said...

//ஆனாலும் அவர் கடைசிக்காலங்களிலே எழுதிய "ஈழ" நூல்கள் உண்டே//

தமிழீழம், உதயகீதம் என்று இரண்டு பாடல்கள் அவருடைய முழுக்கவிதைத் தொகுப்பில் உள்ளன. முன்னது தேசியகீதமாகவும், பின்னது புலிகளைப் புகழ்ந்தும் எழுதப்பட்டது.

Anonymous said...

சுஜாதா என்பவர் கணினி பற்றி சினிமாப் பத்திரிக்கையில் எழுதினார் அவ்வளவுதான். வாக்குப்பதிவு யந்திரத்தை வடிவமைத் கும்பலில் அவரும் ஒருவர் சரி தலைவர் என்டேகூட சொல்லு. அம்பலத்தில் அரட்டை அடித்தார். அந்த அம்பலத்திலகூட எதைப்பற்றி அரட்டை அடித்தார். அறிவியல் ம்.... இல்லையே. சினிமாவும்...........அப்படியே தமிழாக்கமும்தானே

எல்லாத்தையும் விடு நைனா.

அவர் கணினி தொடர்பில் எழுதிய எந்தப் புத்தகத்திற்கு அரசு இல்லை யாராவது விருது கொடுத்திருக்காங்களா? ஏன் கொடுக்கவில்லை?

ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன். பல இடங்களில் கோவில் கோபுரத்திற்கு, கும்பாபிஷேகத்திற்கு ஏதோ ஒரு கோவில் செலவிற்கு பணம் திரட்டுவதற்கு கச்சேரி வைச்சு காசு சேப்பாங்க. மோளம் வரும், சின்ன மோளம் வரும், கச்சேரியும் நடக்கும். ஆட்டு மந்தைக் கூட்டமும்( யாருப்பா... அது நம்ம மக்கள்தான்) வரும். துட்டும் சேரும். பத்தும் பத்தாததுக்கு புரவலர்களிடம் கையேந்தி கோபுரமும் கோவிலும் புதிதாக கட்டப்படும்.

இப்ப, அந்த மோளமும், சின்ன மோளமும் வந்து நாங்கதாங்கோவ் கோபுரம் கட்டிக்கொடுத்தோம் என்றால் நீ ஏத்துக்குவியா?

யோசி மவனே யோசி.

அதுபோலத்தான் அய்யாவோட கணினியும். அறிவியலும்.

அவரோட ஒப்பிடேக்க, தேனி எழுத்துரு - உமர்தம்பி, தமிழ்மணம் - காசி, சங்கரன், சுரதா யாழ்ப்பாணன், முகுந்த், ஆவரங்கால் ஸ்ரீநிவாஸ், முரசு நெடுமாறன், கோபி, விருபா அப்புறமா மாஹிர் இவிங்க எல்லாம் செஞ்சது எனக்கு மேலாத் தெரியுதுப்பா. இது தான் உண்மை.

சரிப்பா...

"கப்புறாளை" என்னா?

ஈழநாதன்(Eelanathan) said...

//கப்புறாளைகள் எண்டால் என்ன பொருள் எண்டு தயவு செய்து சொல்லுவீங்களோ?//

கப்புறாளை என்றால் ஐயர் இல்லை ஆனால் ஐயர் மாதிரி என்று அர்த்தம்.கதிர்காமத்தில் வாய்கட்டிப் பூசை செய்யும் பூசகர்களை கப்புறாளைகள் என்பர்

Anonymous said...

Yeah…even I feel difficult to read that post again, sorry about that but no other go I don’t have access to tamil editor at this moment.

Otherwise - ungaLin ezuthu 8 varudathirku munpu padithhathu pOl than irrukirathu. Oru visayathin meethana ungalaiLin paarvai epaadi virium enpathai nanRaka ookika mudikiarathu(experience helps;-). adaimozikaLodu neengaL jk & jm-ai archanai seyvathai katharithu vittu padikum pOthu ingE pothuvaka solli irukkum visayam kuraivuthan – just my view ;-)

matRapadi, tamil nAttu pathrikaiYaLarakaL, ezuthAlarkaLin Ezaham kuritha purithal meethana vimarasanam varumpOthu , Ezahathai thAy nAdakak konda oruvar, vandi vandiyaka saka ezuthALarkaLai patRi, matRa eallathaiyum patRi ezuthi thaLLiya oruvar( I mean premiL ) Ezham patRi ennavithamAna pArvai kondirunthAr..athai engavathu pathivu seythirukkirAra endru KeLvi varuvathum thavirkka mudiyAthahu. Verum irandu kavithaikaL thAna? Sujathavin ezhham meethana pArvai “uyarvu manapAnmai” endRu sollupavarkaL inatha kavithaikaLai eppadip pArkiRarkaL?

Ithu kuRithum, sujatha patRiyum innum konjam pEsa Asai than- ingE ‘tamil’ illai. vAyppu kidaithhAl varukiRen.

Thanks for your time :-)

ஜோ/Joe said...

புரிஞ்சவங்களுக்கு - என்ன அசாத்திய நடை

புரியாதவங்களுக்கு - இதை விட மண்டை காய வைக்க முடியாது.

லக்கிலுக் said...

தமிழில் கண்டிப்பாக மொழிபெயர்க்கப்பட வேண்டிய கட்டுரை!

-/பெயரிலி. said...

Lucky look
thanks for the comple(i)ment. When you certify one write up that should be "translated into Tamil," i really feel good about my write up style and the contents. ;-)

Anyway, Ayyanar "explained" better than myself. ;-)

உண்மைத்தமிழன் said...

தமிழ் என்ற மொழியில் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் இக்கட்டுரையை 'உண்மையான தமிழ் மொழி'யில் யாராவது மொழி பெயர்த்து எழுதியனுப்பினால் நான் இலவசமாக டைப் செய்து அனுப்புகிறேன்.

எனது வாத்தியார் திரு.சுஜாதா அவர்களைப் பற்றி இப்பதிவில் 'ஏதோ' எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அந்த 'ஏதோ' என்பது நல்லவிதமாகவா, அல்லது கெட்டவிதமாகவா என்பது நேற்று முதல் தொடர்ந்து படித்து வந்து, இப்போது பின்னூட்டம்வரையிலும் தோண்டித் துருவியும் என் அறிவுக்குப் புலப்படவில்லை.

உண்மையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தால்தான் நானும் ஏதாவது கொமெண்டு போட முடியும்..

உதவுவீர்களா..?

-/பெயரிலி. said...

உண்மைத்தமிழரே உங்கள் பின்னூட்டத்தினாலே, லக்கி லுக்கருக்குச் சொன்ன காரணத்தின்படி, இன்னும் மேலொரு படியேறிப் பெருமிதம் அடைகிறேன். ;-)

ஒருவர் ஒன்றில் நல்ல விதமாகவும், அன்றேல் கெட்டவிதமாகவும் மட்டுமேயிருக்கமுடியும் என்பதுதான் நியதியென்றால், இந்த இடுகையை மேலும் வாசித்து, உங்கள் நேரத்தையும் மூளையையும் வீணாக்க வேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ;-)

என்னப்பன் முருகன் உங்களையும் அந்துமணி லக்கி லுக்கரையும் காத்தருள நன்றியுடன் வேண்டுகிறேன்

theevu said...

//நேற்று முதல் தொடர்ந்து படித்து வந்து, இப்போது பின்னூட்டம்வரையிலும் தோண்டித் துருவியும் என் அறிவுக்குப் புலப்படவில்லை.//

உண்மைத்தமிழன் சார் படிக்கமுதல் படி எடுதது ஒவ்வொரு 2 வரிகளுக்குமிடையில் பந்தி பிரித்து அதன்பின்னர் படியுங்கள் பிரியும் புரியும்.

ம் அளாதிமுகவிற்கும் புரியலையாம் தினாமுகவிற்கும் புரியலியாம்.என்ன கொடுமை இது பெயரிலி?

வசந்தன்(Vasanthan) said...

அண்ணை,
லக்கியாருக்கும் உண்மைத்தமிழனுக்கும் நல்ல பதில் குடுத்திருக்கிறியள்.
(உண்மைத் தமிழன்: "உங்கட" அக்களே நீர் எழுதிறது விளங்குதில்லையெண்டு அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறாங்கள். இதுக்க உங்களுக்கு விளங்கிற மாதிரி "எங்கட" ஆக்கள் எழுதிறத எப்பிடி மொழிபெயர்க்கிறது?)

இன்னும் செந்தழல் இரவி வரவில்லையென்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சிலவேளை இதை விளங்கிக் கொள்ளும் வல்லமை கிடைத்துவிட்டதோ என்னவோ?
;-)

எதற்கும் இவர்கள் "காமடி" பதிவுகளைப் படிக்காமலிருப்பது நன்று.

Sundar Padmanaban said...

//ஒருவர் ஒன்றில் நல்ல விதமாகவும், அன்றேல் கெட்டவிதமாகவும் மட்டுமேயிருக்கமுடியும் என்பதுதான் நியதியென்றால், இந்த இடுகையை மேலும் வாசித்து, உங்கள் நேரத்தையும் மூளையையும் வீணாக்க வேண்டாமென்று //

நெத்தியடி! இதுவாவது புரியும் என்று நம்புகிறேன்.

இதைவிட உரித்துச் சொல்ல தோல் பாக்கியில்லை. பழத்தைத் தான் பிய்க்கவேண்டியிருக்கும். இதுவும் புரியவில்லையென்றால் தனியஞ்சல் அனுப்பவும். இதற்கு கோனார் நோட்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். :-)

வெற்றி said...

ஈழநாதன்,
கப்புறாளைக்கான விளக்க்திற்கு மிக்க நன்றி.

உண்மைத்தமிழன் said...

//ஒருவர் ஒன்றில் நல்ல விதமாகவும், அன்றேல் கெட்டவிதமாகவும் மட்டுமேயிருக்கமுடியும் என்பதுதான் நியதியென்றால், இந்த இடுகையை மேலும் வாசித்து, உங்கள் நேரத்தையும் மூளையையும் வீணாக்க வேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ;-)//

இதுவே எனக்குப் புரியவில்லை.

இலங்கைத் தமிழை அதிகமாக படிக்க ஆரம்பித்தது வலைத்தளத்திற்கு வந்துதான்.. இன்னமும் உங்களுடைய பாஷை எனக்குப் பிடிபடவில்லை. அதனால்தான் கொஞ்சம் கிண்டலாக கமெண்ட் செய்திருந்தேன். அவ்வளவுதான்..

அதற்காக மறுபடியும் அதேபோல் ஒரு பதிலா..

கொடுமை பெயரிலி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//உண்மைத்தமிழன் சார் படிக்க முதல் படி எடுதது ஒவ்வொரு 2 வரிகளுக்குமிடையில் பந்தி பிரித்து அதன் பின்னர் படியுங்கள் பிரியும் புரியும்.//

தீவு அண்ணே.. இப்ப முயற்சி பண்றேன்.. இது மாதிரியே உங்க பெயரிலி அண்ணனும் பதில் சொல்லியிருக்கலாமே..?

//அளாதிமுகவிற்கும் புரியலையாம் தினாமுகவிற்கும் புரியலியாம்.என்ன கொடுமை இது பெயரிலி?//

இதென்ன புதுக் கதை..? அளாதிமுக யார்? தினாமுக யார்..? என்ன கொடுமை தீவுண்ணேன்..

உண்மைத்தமிழன் said...

//வசந்தன்(Vasanthan) said...
அண்ணை, லக்கியாருக்கும் உண்மைத்தமிழனுக்கும் நல்ல பதில் குடுத்திருக்கிறியள்.
(உண்மைத் தமிழன்: "உங்கட" அக்களே நீர் எழுதிறது விளங்குதில்லையெண்டு அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறாங்கள். இதுக்க உங்களுக்கு விளங்கிற மாதிரி "எங்கட" ஆக்கள் எழுதிறத எப்பிடி மொழிபெயர்க்கிறது?)//

அப்படியா? யாருங்கண்ணா அப்படிச் சொன்னது? யாராச்சும் இப்படிக் கேட்டிருந்தா புரியற மாதிரி இன்னொரு 15 பக்கத்துல எழுதிருக்க மாட்டேன்..

கிண்டலடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. அப்புறம் எதுக்கு லிமிட்டுங்குறீங்க.. ம்.. ஓகே.. ஓகே.. நல்லாயிருங்க..

என் அப்பன் கதிர்காமம் முருகன் அருளால் உங்கட தமிழாச்சும் எனக்கு வெளங்கட்டும்..

உண்மைத்தமிழன் said...

///வற்றாயிருப்பு சுந்தர் said...
//ஒருவர் ஒன்றில் நல்ல விதமாகவும், அன்றேல் கெட்டவிதமாகவும் மட்டுமேயிருக்கமுடியும் என்பதுதான் நியதியென்றால், இந்த இடுகையை மேலும் வாசித்து, உங்கள் நேரத்தையும் மூளையையும் வீணாக்க வேண்டாமென்று //
நெத்தியடி! இதுவாவது புரியும் என்று நம்புகிறேன்.
இதைவிட உரித்துச் சொல்ல தோல் பாக்கியில்லை. பழத்தைத் தான் பிய்க்கவேண்டியிருக்கும். இதுவும் புரியவில்லையென்றால் தனியஞ்சல் அனுப்பவும். இதற்கு கோனார் நோட்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.:-)///

சுந்தர் ஸார்.. கோனார் நோட்ஸ் ப்ளீஸ்..

ஈழநாதன்(Eelanathan) said...

இன்னா நைனா நல்லாக்கீதுபா கதை அவம் பாட்டுக்கு எளுதினது பிரியலைன்னுப்புட்டு நீ பாட்டுக்கு புச்சு புச்சா ஏதோ சொல்லிக்கினு கீறே.

//என் அப்பன் கதிர்காமம் முருகன் அருளால் உங்கட தமிழாச்சும் எனக்கு வெளங்கட்டும்.//.
அப்டின்னா இன்னாபா?

மு. மயூரன் said...

சில நாட்களுக்கு முன்னர் தமிழ்க்கணிமையின் வரலாறுதொடர்பான தகவலுதவிகள் தேவைப்படுவதாக விக்கிபீடியாவின் கட்டுரை ஒன்றினைத்தொடுத்து உங்களுக்கு மின்னஞ்சல் இட்டிருந்தேன். அம்மின்னஞ்சல் உங்களை வந்தடைந்ததா என்று அறிய ஆவல்.

கிடைத்திருக்காவிடில்,

அம்மடல் வருமாறு,


இரமணி,

தமிழில் முதல் எழுத்துருவை உருவாக்கியவர் மட்டக்களப்பைச்சேர்ந்த ஓர் ஈழத்தமிழர் என்ற தகவல் ஒன்று இருக்கிறது. முத்து நெடுமாறன் கூட நேர்காணல் ஒன்றில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

நண்பரொருவரும் இத்தகவலை உறுதிப்படுத்தியதுடன், அவர் மட்டக்களப்பைச்சேர்ந்த பிரபல இலக்கியவாதி ஒருவரின் மகன் என்ற மேலதிக தகவலையும் தந்தார். மேற்கண்ட நபர் கனடாவில் இருப்பதாகவும் சினிமாத்துறையில் ஆர்வமுடையவர் என்றும் அறியப்பெற்றிருக்கிறேன்.

இவரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?

முதல் எழுத்துருவையும் முதல் தமிழ் மென்பொருளையும் வடிவமைத்தவர் கனடாவில் தற்போது வசித்துவரும் சிறீநிவாசன் என்றொரு தகவலும் உண்டு. சிறீநிவாசன் தொடர்பாக இணையமெங்கும் தகவல்பெறக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேற்கண்ட ஈழத்தமிழர் தொடர்பில் தகவலெதும் இல்லை.

அத்தோடு, தமிழ்க் கணிமை தொடர்பான வரலாறுத்தகவல்களைப் பதிவு செய்யும் நோக்கில் தமிழ் விக்கிபிடியாவில் காலக்கோடு ஒன்றினை உருவாக்கி வருகிறேன். அங்கு இடம்பெறத்தக்க செய்திகள், சம்பவங்கள், குறிப்புக்கள் ஏதேனும் உங்களால் தரப்படமுடிந்தால் தந்துதவவும்.

கட்டுரை


(தமிழ்க் கணிமைக்காலக்கோடு ஒன்றினை உருவாக்குவது வெட்டி இணையப்புரட்சியாக உங்களால் கருதப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன் ;-))


நன்றி.


தோழமையுடன்

மு.மயூரன்

-/பெயரிலி. said...

மயூரன்,
அஞ்சலேதும் கிடைக்கவில்லை. ரவிசங்கரின் பதிவூடான பின்னூட்டம் ஒன்றுமட்டுமே விக்கிபீடியா தொடர்பாக இரண்டு வாரங்களின்முன்னே கிடைத்தது. எனக்கு விபரம் தெரியவில்லை. பாமினி எழுத்துருவுக்கு முதலோ அல்லது அதே காலகட்டத்திலோ ஸ்ரீனிவாஸனின் எழுத்துரு வந்துவிட்டதென்று எண்ணுகிறேன். ஆனால், அதற்குமுன்னமே, வேறு எழுத்துருக்கள் இருந்திருக்கின்றன். விசாரித்துப்பார்க்கிறேன்.

மு. மயூரன் said...

நன்றி பெயரிலி.

மேற்கண்ட விடயம் தொடர்பில் , காலக்கோட்டுக்கு உதவக்கூடிய வகையில் தகவல்களெதுவும் கிடைத்தால் அறியத்தாருங்கள்.

உண்மைத்தமிழன் said...

//என் அப்பன் கதிர்காமம் முருகன் அருளால் உங்கட தமிழாச்சும் எனக்கு வெளங்கட்டும்.//.
அப்டின்னா இன்னாபா?//

எந்த ஊரில் குடியிருந்தாலும் அவன் என் அப்பன் முருகன்தானே.. அதுதான்.. கேட்டேன்..

'உங்கட தமிழ்' என்றால் 'உங்களுடைய தமிழ்' என்று அர்த்தம்..

'வெளங்கட்டும்' என்றால் 'புரியட்டும்' என்று அர்த்தம்.

வேறு ஏதேனும் விளக்கம் வேண்டுமா ஈழநாதன் ஸார்..?

Anonymous said...

//ஒருவர் ஒன்றில் நல்ல விதமாகவும், அன்றேல் கெட்டவிதமாகவும் மட்டுமேயிருக்கமுடியும் என்பதுதான் நியதியென்றால், இந்த இடுகையை மேலும் வாசித்து, உங்கள் நேரத்தையும் மூளையையும் வீணாக்க வேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ;-)//

//இதுவே எனக்குப் புரியவில்லை.//

உண்மைத்தமிழன் அய்யா, இது கூட புரியலைன்னு சொன்னீங்கன்னா என்னத்தை உங்க வாத்தியார்கள் தமிழ் சொல்லிக் குடுத்தாங்களோ. உங்களுக்கு புரியற மாதிரி எழுதிப் பாப்பமா.

ஒருத்தனைப்பத்தி பாசிட்டிவா (நல்லா) மட்டும் இல்லை நெகட்டிவா (லொள்ளா) மட்டும்தான் எழுத முடியுங்கிறதுதான் உண்மைத்தமிழன் அய்யாவின் நம்பிக்கைன்னா அது ஸ்டுப்பிடிட்டி (முட்டாத்தனம்). இந்த ப்ளாக்கு (இடுகை) அப்படிக் கிடையாது, அதனால இதை வாசிச்சு உண்மைத்தமிழன் அய்யா அவரோட டைமையும் (நேரத்தையும்) பிரெயினையும் (மூளையையும்) வேஸ்ட்டாக்க (வீணாக்க) வேண்டாமுன்னு ரெஸ்பெக்டுடன் (அன்புடன்) கேட்டுக்கொள்கிறேன்.

இப்ப, பிராக்கெட்டுக்குள்ள (அடைப்புக்குறி) கொடுத்ததை தூக்கிட்டு உங்களுக்கு புரியற லங்குவேஜில (மொழியில) எழுதுனா இப்படி வரும்:

ஒருத்தனைப்பத்தி பாசிட்டிவா இல்லை நெகட்டிவா மட்டும்தான் எழுதமுடியுங்கிறதுதான் உண்மைத்தமிழன் அய்யாவின் நம்பிக்கைன்னா அது ஸ்டுப்பிடிட்டி. இந்த பிளாக்கு அதை சொல்ல வரலை. அதனால இதை வாசிச்சு உண்மைத்தமிழன் அய்யா அவரோட டைமையும் பிரெயினையும் வேஸ்டாக்க வேண்டாமுன்னு ரெஸ்பக்டுடன் கேட்டுக்கறோம்.

இந்த தமிழாச்சும் புரியுதா அய்யா. இந்த தமிழிலயே எல்லாரும் ரைட்டுனா ஓக்கேவா. வாள்க தமிள்.