".... ஆங்கே அல்குல் அகல..."
கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,
1.
எனக்குப்
பெண்குழவியில்லை.
2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.
கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.
கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?
சுதர்ஷனி ஆவி அறிக;
நான் நெபுயேவின் 'லொலிட்டா' விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.
ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலை இழுத்துக் கட்டியிருக்கவேணும்.
உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.
அதுவரையில்.....
நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;
இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;
நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........
..........." ............ ஆங்கே,
காம அல்குல் அகல,
ஒல்கு இடைவிரிந்து
ஒசிந்து தான் உருள,
துள்ளித் தெறித்து
எண்துண்டாய் விழுந்தது,
பொறிபடத் தரையில்
பெண் பூண்
பொன் மேகலை.... "
'99/07/15 வியாழன்
டெடிசடெட் டொ டும்ப் & டும்பெர்ஸ் :-( coNverTsation is very much needed
11 comments:
என்னே பெயரிலி?
எல்லாத்தையும்-எல்லோரையும் அம்மியில் வைத்து இப்படி அரைக்கும்போது,ஒப்புவமை குரங்கின் கை ப+வோ இராசா?
அங்கால கோணேஸ்வரி வெடிச்சத்தம்!
ஊகூம் பேசமால் வந்தவழி திரும்பி எஸ்கேப்...
/ஒப்புவமை குரங்கின் கை ப+வோ இராசா?/
ஸ்ரீரங்கத்தார்
நான் என்ன கிளியோசியமே மொழி விளங்காமல் வருங்காலத்துக்குத் துண்டெடுத் தாற கிளியை வைச்சு நடத்திப்போட்டன்? ஆக, குரங்கின்ரை கையிலை பூவைக் குடுத்தன். அது கலரைப் பாத்து பிச்சுத்தான் கொட்டும்; மிஞ்சினால், நாறுதோண்டு பிச்சதை மணந்து பாக்கும். அவ்வளவுதான். உதுக்கேன் கவலைப்படுகிறியள்?
உங்களுக்கும் "டெடிசடெட் டொ டும்ப் & டும்பெர்ஸ் :-(" சொல்லி "coNverTsation is very much needed" எண்டு எழுதவேணும் போலை கிடக்குது. :-(
அவங்கள் கொழுத்தினது காணாதெண்டு இன்னும் கொழுத்துகினம். 'பொத்திக்கொண்டிருத்தலே புத்தி'என்றொரு புதுமொழி தோன்றுது. இதில் நீங்கள் வேறு உப குசும்பு...:)
//உங்களுக்கும் "டெடிசடெட் டொ டும்ப் & டும்பெர்ஸ் :-(" சொல்லி "coNverTsation is very much needed" எண்டு எழுதவேணும் போலை கிடக்குது. :-( //
என்ர ராசா நானிருக்கும் இன்றைய நிலையில உங்களோட ஓடிப்பிடிச்சு விளையாடத் தெம்பு இல்லை!
நம்ம வயதொத்தவர்கள் பலர் ஒவ்வொன்றாக விசா எடுத்துக்கொண்டிருக்கிறான்கள்...
சனிக்கிழமை என் கண்முன்னாலேயே என்ர நண்பன் காத்தாப் பறிந்திட்டான்.எல்லாம் விஸ்க்கித்தாண்டவக்கோன் வினைப்பயன்.நானும் கொஞ்சம்... அதிர்கிறேன் .இப்பவெல்லாம் ஏனோதானே என்றபடிதான் மேய்கிறன்.உங்களை அப்படியொன்றும் நோகலையே நெஞ்சே!
அண்ணை குரங்கு கையிலை பூவைக் குடுத்தா பிச்சு மோந்துதான் பார்க்கும் ஆனால் காலிலை பீ பட்டால் ஆகக் குறைந்தது மூன்று இடத்திலை தேய்க்குமாம்.
ஸ்ரீரங்கன்,
இதுக்குத்தான் நான் விஸ்கிறேல்லை. (எல்லாம் அந்தக்கந்தையன் கருணை). ஆனா, அதால, பின்னவீனத்துவப்புரட்சித்தோலராகவும் காட்டிக்கொள்ள ஏலாமப்போச்சு :-(
தமிழ்நதி,
ஓணான் தவளையைக் கிடத்தி வைத்துப் பகுப்பாய்வது பற்றி ஒரு கவிதை எழுதலாமெண்டுதான் முதலிலை யோசிச்சன். ஆனா, கவிதை எழுதினால், அதுக்கும் நெற்றிலை டவுசர் அவிழ்த்துக் குண்டு கட்டிப்போடுவினம் எண்டுதான் குரங்கு பூ மோந்த படம் போட்டிருக்கிறன். படம் போடத்தான் எனக்குத் தெரியும்.
இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னாலை என்னோட ஒருத்தன் படிச்சவன். இண்டைக்கு வந்து "பூனை எண்டால் என்ன? ஊருக்குள்ளை கதைக்கினம்" எண்ட மாதிரிக் கேப்பான். "பூனையெண்டால், இதுதான்" எண்டு படம் போட்டு விளங்கப்படுத்திச் சொன்னால், அடுத்தநாள், மாஸ்ரருக்கும் அஞ்சாறு பொடியள்பெட்டையளுக்கு முன்னாலை சொல்லிக்குடுத்தவைக்கும் வீட்டிலை ஆறேழு பூனையள் வச்சிருக்கிறவைக்குமே, "பூனையெண்டால் இதுதான்" எண்டு யானை பாத்ததிலை ஒரு குருடன்போல, பூனையை விளங்கப்படுத்துவான். இப்ப உவன் அடிக்கடி ஞாபகத்துக்கு வாறான்.
ஈழநாதன்,
நான் பழசை எடுத்துப் போட்டதை நக்கல் பண்ணுறீர் என்ன? உப்பிடிக் கேட்டால், நான் டெம்பிளேட் பொயற்றி எழுத வெளிக்கிட்டுவன்.
வீரத்தைப் பற்றி ஒரு கவிதை
"வீரத்தைப் பற்றி நூறு கவிதைகள்
எழுதியவன் நூறுமுறை அழுகிறான்
வீரத்தைப்பற்றி ஒரு பேச்சுப் பேசாதவன்
நாளும் வீரமாய் வாழ்வதோ லட்சம்தடவைக்கும் மேல்.
வீரத்தைப் பற்றிப் பேசாது விழும் குண்டுக்குள் வாழ்பவனை
வாளைப் போல வாழ்கிறான் என்பதா,
இரு அழுகை மழை இடைவெளிக்குள்லே வீரத்தைப் பற்றி எழுதியவனை
வீரத்தைப் பொருந்தியவன் என்பதா?
பொருந்திய பாவனையைப் பொருத்துகிறவன் என்பதா?
"
எண்டும்
வெட்டிப்பேச்சைப் பற்றி அதே வார்ப்புருவில் இன்னொரு கவிதை
"யோனிக்குண்டைப் பற்றி நூறுகவிதைகள்
எழுதியவள் ஒருமுறைகூட குண்டைப் புணர்ந்ததில்லை.
யோனிக்குண்டைப் பற்றிப் பேசக்கூடாதென்பவள்
யோனிக்குண்டை உணர்ந்ததோ கோடிதடவைக்கும் கீழே.
யோனிக்குண்டைப்பற்றிப் பேசாது குண்டைப்புணரத் திணிக்கப்பட்டவளைக்
குண்டைக் யோனியுட் கவிதையைப் போலப் ருசித்துப் புணர்ந்தாள் என்பதா,
குண்டைக் கண் காணாமலே மண்டூகமாய் யோனிக்குண்டுபற்றி எழுதியவளை
குண்டைப் புணர்ந்தவள் என்பதா?
குருதியை உணர்ந்தவள் என்பதா?"
எண்டும் டெம்பிளேட் கவிதை ரத்தம் சொட்டச்சொட்ட எழுத வெளிக்கிட்டுப்போடுவன். கவனம். எனக்கும் கவிதை எழுதக் கற்றுக் கொல்லவேணுமெண்டு நிறைய சின்னச் சிந்தும் ஆசை; சிரங்கரிக்கும் ஆசையுண்டு
பிகு: வேண்டிய இடங்களிலே வேண்டிய அளவுக்கு :-) தூவி வாசிக்கவும்.
அண்ணை - படத்தில குரங்கின்ர கண்ணைப் பாக்க அதுக்கு ஒரு மண்ணும் தெரியாத மாதிரியும் ஆனா கையில கிடைச்ச பூவை வைச்சு ஏதாவது செய்ய வேணும் எண்டு யோசிக்கிற மாதிரியும் கிடக்கு -
வடிவா அதின்ர கண்ணைப் பாருங்கோ - பாவமா இருக்கோ இல்லையோ -
//(எல்லாம் அந்தக்கந்தையன் கருணை).//பெயரிலிக்கும் கந்தன் கருணைக்கும் தொடர்பு அவரது வாதங்களை வைத்துக் கொண்டே எங்களால் நிறுவ முடியும் தோலர்கள் அரைகூவல்
//அண்ணை - படத்தில குரங்கின்ர கண்ணைப் பாக்க அதுக்கு ஒரு மண்ணும் தெரியாத மாதிரியும் ஆனா கையில கிடைச்ச பூவை வைச்சு ஏதாவது செய்ய வேணும் எண்டு யோசிக்கிற மாதிரியும் கிடக்கு - //
கொழுவி,
குரங்கின் வால் குரங்கறியும்??
பெயரிலி!நீங்கள் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கொரு கதை ஞாபகம் வந்துது. இந்தப் பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ தெரியாது. இப்ப சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதினாத்தானே எடுபடுகுது.
ஒருத்தர் வெளிநாட்டில போய் இருந்துபோட்டு கனநாள் கழிச்சு ஊருக்கு வந்தவராம். பக்கத்து வீட்டிலை போய் இருந்து கதைச்சுக்கொண்டிருக்கேக்கை அந்த ஆச்சி கேட்டாவாம். 'மேனே!தோசை சாப்பிடுறியோ'எண்டு. அதுக்கு அவன் கேட்டானாம். 'தோசை எண்டா எப்பிடியிருக்கும்... றவுண்ட் றவுண்டா ஓட்டையெல்லாம் விழுந்து இருக்குமே அதுவா கிரான்ட்மா'எண்டு. அதுக்கு ஆச்சி சொன்னாவாம். 'எட இடிவிழுவானே!அந்த றவுண்ட் றவுண்டைச் சுட்டு வித்துச் சேத்த காசிலைதான் கோத்தை உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பினவ'எண்டு. இப்பிடிப் போகுது கதை. அவனுக்கு தோசை எண்டா என்னெண்டு விளங்காத மாதிரித்தான் இஞ்சை சில விசயம் நடக்குது. விளங்கப்படுத்த வெளிக்கிடுறது விசர் வேலை. பேசாமல் உங்களைப் போல குரங்கு பூவை வைச்சு மணக்கிற 'படம்போட்டிட்டு' வாளாதிருப்பதே உத்தமம்.
//சனிக்கிழமை என் கண்முன்னாலேயே என்ர நண்பன் காத்தாப் பறிந்திட்டான்.எல்லாம் விஸ்க்கித்தாண்டவக்கோன் வினைப்பயன்.நானும் கொஞ்சம்... அதிர்கிறேன் .இப்பவெல்லாம் ஏனோதானே என்றபடிதான் மேய்கிறன்..// -சிறீயர்
//இதுக்குத்தான் நான் விஸ்கிறேல்லை. (எல்லாம் அந்தக்கந்தையன் கருணை). ஆனா, அதால, பின்னவீனத்துவப்புரட்சித்தோலராகவும் காட்டிக்கொள்ள ஏலாமப்போச்சு :-(// -கந்துசன்
அப்ப,
சிறீயர் பீன்னவீத்துவப்புரட்சித்தோலரோ !!!???
விஸ்கிறபடியாத்தான் கேக்கிறன்...
அண்ணை. நீங்க என்ன செய்யப் போறியள் ?
Post a Comment