Sunday, February 05, 2017

பிரிப்போம் சந்தி போம்

பிழையான நாளிலை சந்திப்பாய்ப் போச்சு.

முன்னவர் கேட்டார்:
"சசிகலா பின்வாசலாலே வந்தவரென்றால், சுமந்திரன் எவ்வாசலாலே வந்தவர்?"

மற்றவர் முறுகினார்:
"சுமந்திரன் பின்வாசலாலே வந்தவரென்றால், விக்கியர் எவ்வாசலாலே வந்தவர்?"

நடுவிலையிருந்தவர் பின் கதிரையிலை இருந்தவரிடம் திரும்பி முணுமுணுத்தார்:
"இரண்டும் சத்தமில்லாமல், எல்லாம் முடிஞ்சபிறகு கொழும்பிலையிருந்து வந்திறக்குமதியானதும் இறங்கினதுமேதானே?"

முன்னவரும் மற்றவரும் எட்டிக் கூட்டாய்,"கஜனும் கொழும்பிலையிருந்துதானே வந்து குதிச்சவர்?"

இராதை மாண்டாலும் கோதை ஆண்டாலும் நமக்கொரு குவளை இல்லை.

நான் எழும்பிப் பின்வாசலாலே இறங்கிப் படியிலே இருந்து பார்க்க, பனிப்புகாருக்குள்ளையும் சின்னப்பிள்ளையள் "சீ-ஸோஅப் & டவுன்" என்று விளையாடிக்கொண்டிருக்கிறது பார்க்கக் குழப்பமில்லாமலிருந்தது.

கையிலே கிடைத்த நேரத்தை வீணாக்கக்கூடாதென்று சுப்பிரமணியசுவாமியும் மணிசங்கர ஐயரும் எந்த வாடிவாசலாலே தமிழகத்தின் பிரதிநிதிகளாய் டெல்லிக்குப் போனவர்கள் என்ற ஈழத்தின் முதலாம்தேசியக்கேள்விக்குத் தாடியைச் சொறிந்துகொண்டு பதிலைத் தேடத்தொடங்கினேன்.

ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்திருப்பது ஒன்றும் பேசாதிருத்தற்காம்.

No comments: