Wednesday, May 11, 2005

அரைகுறை - 3

செம்மஞ்சட்சரக்கின் விளைவு

சுந்தரவடிவேலின் செம்மஞ்சள் சரக்கு பதிவிலே வாசனுக்குப் பதிலாகக் கொடுத்த பின்னூட்டம் போக மறுப்பதால் (நீண்டுவிட்டதோ?), இங்கே.

இப்பதில் அவசரமாக எழுதப்பட்டதால், இலக்கணத்திருத்தங்களும் மேலதிக இணைப்புகளும் கொடுக்கப்படவில்லை. பின்னொரு முறை விரிவாக எழுத முடியுமென நம்புகிறேன்.


=================================

லூயிஸியானா, மிஸிஸிப்பி, அலபாமா மாநிலங்களிலே இந்த வியட்நாம் போர் காலத்து மாசு வேதியலாயுதங்கள் மூடித் தாழ்க்கும் இடங்களாப் பயன்படுவதையிட்டு இன்னமும் சின்னச் சின்ன சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பெரிதும் வெளியே பேசப்படுவதில்லை. இதிலே இனஞ்சார் நச்சுத்தன்மை (racial toxicity) உம் ஒரு பெரிய விடயம். இது தனியே இப்படியான செம்மஞ்சட்சரக்குகளாலே மட்டுமல்ல, மருந்து தொடக்கம் வேறுபல வேதியல் உபவிளைவுகளினான உபாதையுங்கூட. உலூஸியானாவிலே நியூ ஓர்லியன்ஸுக்கும் மாநிலத்தலைநகர், பட்டன் உரூச்சுக்குமிடையே இருக்கும் இப்படியான தொழிற்சாலைப்பிரதேச நெடுஞ்சாலையை, Cancer alley என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், இதிலே பாதிக்கப்படுகின்றவர்களைப் பார்த்தால், கறுப்பினத்தவர்களும் வருவாய் குறைந்தவர்களுமே அதிகம். அப்படியாகத்தான் இடம் பார்த்துச் செயல் நடக்கின்றன. ஆனால், மூன்றாம் உலகநாடுகளும் ஏன் இந்தியா சீனா போன்ற தொழில்நுட்பத்தின் எதிர்காலமெனச் சொல்லப்படும் நாடுகளுங்கூட, இதே மாதிரியான அபிவிருத்தியடைந்த நாடுகளின் கழிவுகூடங்களாகச் சத்தமின்றி மாறிவருகின்றன. மற்றும்படி, அமெரிக்காவிலே, ஹட்சன் ஆற்றின் படுக்கை வண்டலிலே dioxin தொடக்கம் பல குளோரினேற்றப்பட்ட நச்சுக்கள் விதைக்கப்பட்டிருந்தன. ஆனால், அமெரிக்காவின் Superfund திட்டத்தின்கீழே பெருமளவிலே இவையெல்லாம் நீக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், டயோக்ஸின் நச்சு அண்மையிலே பெரிமளவு பேசப்பட்டது தனிமனிதர் ஒருவருக்காக; உக்ரேனினின் விக்ரர் உயூசெங்கோவிற்கு ஊட்டப்பட்டிருக்கலாமென்பதற்காக.... எத்தனையோ மனிதர்கள் பிற இடங்களிலே சத்தமின்றி இறந்து கொண்டிருக்கின்றார்கள் :-(

=============================

1. Chemical Weapons Disposal and Environmental Justice

2. Beyond the Chemical Weapons Stockpile: The Challenge of Non-Stockpile Materiel

3.Alabama town wants chemical "hoods" Army's incineration of deadly gases creates national debate

4. Army begins chemical weapons burn

5. cancer Alley

6. PBS: Point Of View: http://www.pbs.org/pov/pov2002/fenceline/index.html இந்த விவரணத்தினை நான் பார்த்திருந்தேன். மிகவும் விரிவாக வறுமைக்கோடு/இனஞ்சார் நச்சுப்பரவல் குறித்து சிறப்பான நேர்முகத்தோடான விவரணம்

7. GE's Hudson River PCB (Arochor) dumping is an well known issue. A sort of informative link can be EPA's Hudson clean up site. ஹட்சன் குறித்து ஒரு விவரணமும் PBS இலே இருந்தது; அதிலே பழைய GE தலைவர் Jack Welch தங்களிலே பிழை என்பதை முழுக்க மறுப்பார் (இத்தனைக்கும் அவர் வேதியற்பொறியியலிலே கலாநிதிப்பட்டம் பெற்றவர்). கூடவே, நாடோடிப்பாடகர்(!), பீற் ஸீகர் (அண்ணாத்தைக்கு இங்கே ஒரு சலூட்டு), ஹட்ஸனைக் காப்பாற்றுவது குறித்த ஓர் அமைப்பே வைத்திருப்பவர், அது குறித்து, ஹட்ஸனிலே ஓடத்திலே சென்று குறித்துக் காட்டுவார். AMERICA'S FIRST RIVER தனிப்பட்ட அளவிலே, ஹட்ஸன் ஆற்றுப்படுக்கையிலே குளோரினேற்றப்பட்ட பல்பகுதிய மாசுக்களின் (Aroclor என்ற வணிகப்பெயர் கொண்ட PCB) பரம்பல் குறித்ச் சில ஆண்டுகள் வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இருந்ததால், அது குறித்த கணிசமான உசாத்துணைக்கட்டுரைகளைச் சேகரிக்கவேண்டி வந்தது. அவற்றிலே, சுருக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கும் பகுதியை எடுத்து சமயம் கிடைத்தால் இடுகிறேன். [ஆனால், நான் முன்னர் குறிப்பிட்டதிலே தெளிவாகப் பிரித்துச் சொல்லியிருப்பதுபோல, ஹட்ஸன் பல்பகுதியங்களுக்கும் வேதியலாயுதங்களுக்கும் ஏதும் சம்பந்தமில்லை]

8. பிற நாடுகளுக்கு முன்னேறியநாடுகள் அணு/வேதியற்கழிவினை அனுப்புவது குறித்து, நிறைய இணையத்திலே இருக்கின்றது.

ஒரு விடயமென்னவென்றால், அமெரிக்காவிலே Love Cannel சிக்கலுடனும் 1967 Rachel Carson இன் Silent Spring என்ற புத்தகம் (பறவை முட்டைகளின் கோது மெலிதாதல் குறித்தது) வெளிவந்ததோடும் (கூடவே 60 & 70 களின் நாட்டுநிலைகளோடும்) சூழல் குறித்தொரு விழிப்புணர்வு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த SUPERFUND என்ற CERCLA வரைவு, நச்சு, அதிசேதமான சூழலைச் சீர்திருத்தவும் தடுக்கவும் முயன்றதால், கடந்த இருபதாண்டுகளாக நாட்டிலே சூழல் சரியான திசையிலேதான் சென்று கொண்டிருந்தது. மேற்கூறிய CERCLA இலே பின்னாலே கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்கள், SARA போன்றவை அதிகேடான நச்சுக்களும் வேதிமப்பொருட்களும் தயாரிப்பது தொடக்கம், அதை அழிப்பதுவரையும் சரியான கணக்கு (காசிலே என்பதல்ல, இரசாயன, பௌதீகப்பண்புகளிலும் அளவீடுகளிலும்) அரசுக்குக் காட்டும் தேவையைக் கொண்டு வந்தன. ஆனால், புஷ் இளவல் வந்ததுடன், அறிவியலும் அரசியலும் முன்னைக்கு அதிதீவிரமாகக் கலந்துபோய்விட்டன. (ஐதரசன் வண்டி எல்லாம் கூட்டத்துக்கு நன்றாக இருக்கும்; செயற்படுத்த??) பாரமூலங்கள் நீரிலே இருக்கும் எல்லை தொடக்கம் எல்லாவற்றினையும் கிட்டத்தட்ட இச்சைப்படி அரசியற்பலமுள்ளவர்கள் மாற்றுகின்ற நிலை வந்தது. அம்மணி Christie Whitman னே அண்மையிலே தன் EPA வேலை தொடர்பாக தன் கட்சிக்காரர்களை NOW நிகழ்ச்சியிலே குறை சொன்னார் (அலாஸ்கா எரிபொருள் தொடர்பாக). ஆனால், ஐரோப்பா &கனடா, அமெரிக்காவிலும்விடக் கூடுதலான சூழலுணர்தலைக் கொண்டிருக்கின்றதென்பது என் உணர்தல்.


'05 மே, 11 புத். 18:24 கிநிநே.

9 comments:

KARTHIKRAMAS said...

நன்றி பெயரிலி.

வாசன் said...

நன்றி பெயரிலி உங்களுடைய இந்த இடுகைக்கு.
மேலெழுந்தவாரியாக பார்த்த அளவில்,சுட்டிகள் காட்டுமிடங்கள் எல்லாம் இடதுசாரி பறையறிவிக்கும் சீஎன் என்,பிபீஎஸ் போன்றவைகளாக உள்ளன என்பது தெரிகிறது.

உள் நுழைந்து படித்து,பார்த்து ஏதேனும் சொல்லத் தோன்றினால் நிச்சயம் சொல்வேன்.

நன்றி.

-/பெயரிலி. said...

வாசன்,

சமூகம்சார் கருத்தமைவு அளவிலே என் பார்வை இடம் சாய்ந்தே எப்போதுமிருக்கின்றது; ஆனால், நெறியான அரசியல் ஊடுருவாத அறிவியல் ஆய்வுகள் தரும் முடிவுகளை இடம்-வலம் என்று பார்த்து ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முயல்வதிலே விழைவில்லை. (அதன் காரணமாகவே, காலத்தோடு சூழல் கெடுகின்றது என்று தொடர்ந்து ஓலமிடாமல், அமெரிக்காவிலே இருபதாண்டுகள் (1980~2000) குறிப்பிட்டவளவு சூழல் முன்னைக்கெடுதல்களிலிருந்து திருத்தப்பட்டிருக்கின்றதென்றும் புதிய கெடுதல்கள் முன்னேற்பாட்டுடன் தடுக்கப்பட்டிருக்கின்றதென்றும் கூறுகின்றேன்).

நான் தந்திருப்பவற்றிலே நிகழ்வுகளைக் கண்டுகொண்டு மிகுதியை நீங்களே தீர்மானிக்கலாம். வேண்டுமானால், அமெரிக்க இராணுவ, கடற்படை இணையத்தளங்கள், வலதுசாரி வானொலிகள் (அவைதானே அமெரிக்காவிலே மிகுந்தவை) ஆகியவற்றின் தளங்கள் ஆகியவற்றிலே, அடுத்த பக்கத்தினையும் நீங்கள் காணலாம். கருத்தும் பார்வையும் வேறாக இருக்கலாம்; ஆனால், நிகழ்வுகள் ஒன்றாகத்தான் - திருத்தமாகப் பதியப்பட்டிருப்பின் - இருக்கமுடியும்.

சீஎன்என் இடதுசாரிப்பறையா என்று எனக்குச் சந்தேகம். ரெற் ரேனர் ஓரளவுக்கு விழுமியங்கள்சார்ந்த அளவிலே சுயாதீனமானவர்; ஆனால், சிஎன்என் + ரைம்வோனர் ஆக, விற்பனையைமட்டுமே முன்வைத்துச் செயற்படுகின்றவை. வேண்டுமானால், Fair & Balanced Fox இற்கு இடதுசாரி எனலாம். பிபீஎஸ் ஒப்பீட்டளவிலே இடதுசாரிகள் என்று ஒத்துக்கொள்வேன்.குறிப்பாக, Now + Frontline இடம் சாய்கின்றவர்கள் (சொல்லப்போனால், சாய்ந்தவர்கள்). ஆனால், தற்போது, செய்திகளிலே கண்டிருப்பீர்கள்; PBS + NPR ஆகியவற்றின் கடிவாளத்தினைக் கொண்ட CPB (Coorporation for Public Broadcasting) முழுக்க முழுக்க வலதுசாரிகளைக் கொண்டிருப்பதும். அதன் காரணமாக, PBS + NPR இரண்டும் வலதுசாரி நிகழ்ச்சிகளை அதிகம் தரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருப்பதும் (Tucker Carlson இன் நிகழ்ச்சி ஓர் உதாரணம்; அவருடைய தந்தை, VOA இன் பழைய பொறுப்பாளர், CPB செயற்குழுவின் ஓர் உறுப்பினர்), அதன் காரணமாக, Arthur போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடந்ததும்.

மு. சுந்தரமூர்த்தி said...

//PBS + NPR ஆகியவற்றின் கடிவாளத்தினைக் கொண்ட CPB (Coorporation for Public Broadcasting) முழுக்க முழுக்க வலதுசாரிகளைக் கொண்டிருப்பதும். //

Newt Gingrich காலத்தில் CPB ஐ ஒரேயடியாக இழுத்துமூட முயற்சிக்கப்பட்டதே!

-/பெயரிலி. said...

/Newt Gingrich காலத்தில் CPB ஐ ஒரேயடியாக இழுத்துமூட முயற்சிக்கப்பட்டதே!/
நீயூட் கிங்க்ரிச் குறிவைத்ததே NOW இன் முன்னைய தயாரிப்பாளர் Bill Moyers (ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸனின் மக்கள் தொடர்பாளர்) in NOW இனைக் குறி வைத்தே. இப்போது, முறையை மாற்றியிருக்கின்றார்கள். வெல்லமுடியாவிட்டால், உள்நுழைந்து சேர்த்துக்கொள்(ல்) என்ற விதத்திலே. பௌத்தம், இந்துமதத்தின் பிரிவானது போல ;-)

அருள் செல்வன் கந்தசுவாமி said...

நல்ல பதிவு ரமணி. உங்கள் ஆய்வான நீர்நிலை/நிலம் மாசு பரவ்ல் பற்றியும் எழுதினால் படிக்க நல்லா இருக்கும்.
அருள்

-/பெயரிலி. said...

அருள் முயற்சிப்பேன்.
சுந்தரமூர்த்தி, இன்றைய PBS-CPB-Bill Moyers-NOW குறித்த இன்றைய விசாரை தொடங்க இருக்கும் செய்தியைக் கேட்டீர்களா?

-/பெயரிலி. said...

Bill Moyers on CBP

-/பெயரிலி. said...

Taking Back Our Town