Tuesday, May 03, 2005

சிதறல்-98


Climbing Down


ஓக் க்ரோவ் தொடர்வண்டி நிலையம்
'05 மே, 02 19:19 கிநிநே.


எழுது எழுது எதையாவது எழுது;
இரயில் பயணத்திற் களித்தேன் என்றெழுது - கசந்திருந்தால்
இறங்கிப் படிகளிற் களைத்தேன் என்றாவதெழுது.
எழுதினால் இருப்பு - இல்லையேல், பார்
எடுத்த படமெல்லோ மறைப்பு! ;-)


4 comments:

Vijayakumar said...

ஹலோ பெயரிலி! இந்த மாதிரி படம் போடுறது. நல்லாயிருக்கே.என்கிட்டேயும் நிறைய படம் இருக்குதே. எழுத போரடிக்கும் போது/நேரமில்லாத போது படம் போட்டு தாக்கலாம் போலேயே. ஐடியா கொடுத்த நீவீர் கேமிராவுடன் பல்லாண்டு வாழ்க.

வசந்தன்(Vasanthan) said...

'கிறக்கமா' இருக்கு.
கனபேருக்கு ஒரு 'வழி' காட்டிறீர் போல.

SnackDragon said...

அடுத்து , வருது வருது விலகு விலகு , வேங்கை வெளியே வருது என்றா?

-/பெயரிலி. said...

/என்கிட்டேயும் நிறைய படம் இருக்குதே. எழுத போரடிக்கும் போது/நேரமில்லாத போது படம் போட்டு தாக்கலாம் போலேயே./

"சட்டியிற் சோறு இருப்பவர் அகப்பையில் அது தாரீர்;
அஃதில்லார், அகப்பையையாவது ஆலவட்டமாய்ச் சுற்றி ஆசியும் ஆண்டவன் காட்சியும் தாரீர்" என்ற பாதையிலே போகிற ஆள் நான். அகப்பையைச் சுத்திக்கொண்டேயிருக்கிறேன்.

கிறக்கமோ வேங்கையோ தெரியாது; உறக்கமும் வெறுங்கையும் தெரியும்; ஆராவது ஒருத்தன் ஒருத்தி ஒரு நாளைக்கு "ஏன்ரா என்ரை பின்பக்கத்தைப் படமெடுக்கிறாய்?" எண்டு தர்மத்துக்கு ரெண்டு அடி குடுக்காதவரை கிறக்கமும் வேங்கையும் நடக்கும் :-)