Saturday, September 10, 2005

கந்தை - 39





அண்மையிலே 'சிரித்திரன்' சிவஞானசுந்தரத்தின் சுயசரிதை போன்றதாகச் சொல்லப்பட்ட புத்தகத்தினை வாசித்தேன். சின்னப்புத்தகம்; ஒரு புறம் அவரது கருத்துச்சித்திரங்களும் மறுபுறம் துணுக்கு வடிவிலேயே சம்பவங்களும். அவரின் கருத்துச்சித்திரப்பாத்திரங்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மிஸ்டர்& மிஸிஸ் டாமோடரன், கருத்தும் கானமும் ஆகியனவற்றுக்குக் கருத்துக்கொடுத்தவர்களையும் சம்பவங்களையும் குறிப்பிட்டிருந்தார். தான் பம்பாயிலே கட்டிடக்கலை படிக்கப்போனதிலிருந்து வானரசேனையின் குதியாட்டம் காரணமாகத் தான் சிரித்திரனை நிறுத்தவேண்டி வந்தது வரை எல்லாமே சம்பவத்துணுக்குகளாகச் சொல்லப்பட்டிருந்தன. சில கருத்துகள் மிகவும் சிறுபிள்ளைப்பார்வைகள்போலத் தோன்றினாலுங்கூட, சிரித்திரன் இலங்கைச்சமூகத்தின் - குறிப்பாக, யாழ்ப்பாணச்சமூகத்தின் ஓர் இருபதாண்டுக்காலத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைக் காணவும் MAD போன்ற சஞ்சிகைகள்போல, அதை எள்ளி நகையாடவும் மிகவும் உதவியது. தனியே நகைச்சுவைமட்டுமன்றி, கதை, செவ்வி ஆகியனவும் சிரித்திரனூடாகப் படைத்து அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள் பலர். தன் இறுதிக்காலத்திலே, மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலே, வலப்புறக்கை வாதத்தினாலே செயலற்றுப்போகவும் இடது கையினாலே வரைய முனைந்திருக்கின்றார், 'சிரித்திரன்' சுந்தர் என்று அறியப்பட்ட சிவஞானசுந்தரம்.

14 comments:

Jayaprakash Sampath said...

சிரித்திரன் இதழ்கள் களஞ்சியமாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றதா?

-/பெயரிலி. said...

பிரகாஷ் தொகுக்கப்பட்டிருக்கின்றதா என்று சரியாகத் தெரியவில்லை. தொகுக்க முயற்சியொன்று நடந்தது என வாசித்திருக்கின்றேன். ஆனால், அதிலே வந்த செவ்விகள் ஒரு நூலாக வந்திருக்கின்றன.

பத்மநாப ஐயர் போன்று கூடுதல் விபரம் தெரிந்தோர்தான் சொல்லவேண்டும்.

Anonymous said...

I think one is SuRaa? Who is the other?

.:dYNo:.

-/பெயரிலி. said...

ஐயோ ஐயோ! .:டினோ:., நான் பொதுவாகச் சொன்னேன்... இதே பாணியிலே சிவஞானசுந்தரம் சில கருத்துச்சித்திரங்கள் போட்டிருக்கின்றார் என்பதாலே.

ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி நீங்கள் குறிப்பிடும் நூல் கார்ட்டூன் உலகமும் நானும் என்கிற நூல்தானே அதனை நானும் வாசித்திருக்கிறேன்.முன்னைநாளில் சிரித்திரனின் வாசகனும் சுந்தரின் ரசிகனும் இருந்த காரணத்தினாலே நல்லதொரு மீட்டலுக்கு உதவியது.சிரித்திரன் இதழை மறுபடியும் கொண்டுவருவதற்கு சிலர் முயன்று ஓரிரு இதழ்கள் மீளவும் வந்திருக்கின்றன.ஆனால் பலதும் அவரது முன்னைய கருத்தோவியங்கள் மறுபிரசுரம் செய்யப்பட்டவையாக உள்ளதால் உறுத்துகிறது.

இதழ்கள் தொகுப்பாக வந்திருக்கின்றனவா இல்லையா என்று தெரியாது.ஆனால் சுந்தரின் கருத்தோவியங்கள் நூலாக வெளிவந்திருக்கின்றன.வாங்கி வந்திருக்கிறேன்.அனுமதிக்காகச் சிலருடன் பேசியிருக்கிறேன் அனுமதி கிடைத்தால் இணையத்தில் தரலாம்.

Anonymous said...

இனஒழிப்பை எதிர்த்து தனக்குக் கிடைத்த விருதை (சாகித்திய அக்கடமியோ ஏதோ) நிராகரித்தவர் சுந்தர்.
எழுத்தாளர்களுள் மாமனிதர் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே என நினைக்கிறேன்.

arulselvan said...

விரிவாக யாராவது யாழ்காரர்கள் எழுதுங்களேன். முன்பு மதியோ யாரோ எழுதிப் படித்த நினைவு. சிரித்திரனைப் பற்றிய ஒரு புத்தகம் இங்கே பார்த்தேன். வாங்க வேண்டும். (ரமணி, anti-alias இல்லாமல் வண்ணம் நிரப்பினால் கார்ட்டூன் இன்னும் நல்லா வரும்)
அருள்

ஈழநாதன்(Eelanathan) said...

அருள் இணையத்தில் இருந்தது உங்களுக்காக

http://members.tripod.com/kanaga_sritharan/siriththiran.htm#top

ஈழநாதன்(Eelanathan) said...
This comment has been removed by a blog administrator.
Jayaprakash Sampath said...

ஈழநாதன் : thanks for the link

arulselvan said...

ஈழநாதன், நன்றி. நல்ல சுட்டி அது.
அருள்

Anonymous said...

நன்றி பெயரிலி, ஈழநாதன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

படத்தைப் பார்த்தால் அது
பெயரிலி - இன்று
பெயரலி - நாளை
பெயரிலி - நாளை மறுநாள்
என்று தோன்றுகிறது
சிரிப்பான் குறியை இங்கு இடவும்

-/பெயரிலி. said...

அண்ணே "நேற்று இன்று நாளை" போட -/பெயரிலி. எல்லாம் புரட்சித்தலைவரா?

/சிரிப்பான் குறியை இங்கு இடவும்/
இப்படியே அசிங்கமாக எல்லோருடைய பின்னூட்டங்களிலும் குறியாகக் குறி குறித்து எழுதிக்கொண்டிருந்தீர்களென்றால், சிரிப்பான் எல்லாரும் சிரிப்பிலிகளாகப் போகிறார்கள் ;-)