Friday, September 16, 2005

கணம் - 477


'Che' Incorporated


'05, செப்., 16 வெள் 17:34 கிநிநே.


தோரோ கடனட்டைக்காய்த்
தவளைக்குளம் தூர்த்தார்
ஐயன்ஸ் ரீன் பென்சில் விற்க
வகுப்பு இரண்டுக்குப் போனார்
உலூதர் கிங் வாய் பொறுக்கி
விற்றார் கடித்த அப்பிள்.

பின்னால்,
ஆடி வெக்கை மதியத்தில்
ஒரு கோகாகோலாவுக்காய்
ஒளிந்திருந்து விரல்காட்டிக்
கொடுக்கப்பட்டான்
என் ஐயன்.

வேறாய்ச் சிந்தி!





வேறேதும் சிந்தி!!

'05, செப்., 16 வெள் 18:00 கிநிநே.

5 comments:

Thangamani said...

Is it a photograph that you created or an add?

-/பெயரிலி. said...

இரு படங்களைச் சேர்த்து உருவாக்கினதுதான்

ஈழநாதன்(Eelanathan) said...

புரட்சிக்கோலாவா.படம் காட்டினாலும் ரசிக்கத் தக்கதாகத் தான் காட்டுறீர்

SnackDragon said...

ஆஹா.. சிகப்புக்கும் சேவுக்கும் என்னப்பொருத்தம்.

-/பெயரிலி. said...

விஜயகாந்த் கட்சி தொடங்கினாலும் தொடங்கினார்; புரட்சிக்கோலா வந்தாலும் வரும்.

காமாசு, காராசேவுக்கும் சிவப்புக்கும் சம்பந்தமில்லை