Glued to the Blue Screen
படங்களைப் பொறுத்தமட்டிலே எந்தப்படமென்றாலும் அலுக்காமல் இருந்து முடிவுவரை பார்ப்பேன் என்ற நம்பிக்கையும் பெருமையடிப்பும் என்னிடமிருந்தது. இருந்ததென்று ஏன் சொல்கின்றேனென்றால், எழுபதுகளிலே ஈஸ்ட்மென் கலர், டெக்னிக்கல் கலர் வண்ணப்படங்களாக சிவாஜி, ஜெமினி நடித்த சில படங்களை அண்மையிலே பார்க்கும் துர்ப்பாக்கியம் கிட்டியது. ஆறுபதுகளின் கருப்புவெள்ளைகளிலே சிவாஜி, ஜெமினி நடித்த படங்களைப் பாடல்களுக்காகவும் நகைச்சுவைக்காகவும் மிகவும் விரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, இது பெரியதாக்கத்தைத் தந்ததென்பதிலும் விடத் தூக்கத்தைத் தந்தது.
தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....
5 comments:
எங்கேடா முகப்பில் தெரியும் எழுத்தை காணோமே என்று தேடினேன்.
ப்ரோ, படம் அருமை!
...........
//எங்கேடா முகப்பில் தெரியும் எழுத்தை காணோமே என்று தேடினேன். //
கார்த்திக், அது உம்மைப்போன்ற சின்னபிள்ளைகளின் கண்ணுக்குத் தெரியாது :-). உமக்குத்தானே Stich இருக்கிறதே :-).
எல்லாரும் என்ன நினைச்சண்டு இருக்கிறியள் எண்டு தெரியேல்ல. சும்மா சும்மா படம் போடுறதும். போட்டுக் கொஞ்ச நேரத்திலை அதுகளை எடுக்கிறதுமாக.. உங்கட தொல்லையள் தாங்கமுடியுதில்லை ப்ரோ & ப்ரோவின் அண்ணரே.
படம் போடுறதுதான் போடுறியள். போட்டுட்டு எடுக்காதீங்கோ. தமிழ்மணத்திலை வந்து என்ன போட்டிருக்கிறியள் எண்டு எட்டிப்பார்த்தா பதிவையே எடுத்திட்டாங்கள் துலைவாஙள் எண்டு ப்ளொக்கர் சொல்லுது.
சரியான கடுப்பிலதான் எழுதுறன்.
-மதி
ஏம்ப்பா இப்படியெல்லாம் பண்ணுறீங்க?
/ஏம்ப்பா இப்படியெல்லாம் பண்ணுறீங்க? /
எல்லாம் ஒரு திட்டத் தோடைதான்
Post a Comment