BeLier Which Project
எல்லாருந்தான் குறும்படம் எடுக்கினமே, நாங்கள் மட்டுமேன் விடுவான்?" எண்டு காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் போன மாசத்தின்ரை பூரணையொண்டிலை தீடீர் யோசனை வந்துது. கவனிச்சுப் பாத்தியளெண்டால், காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் இப்பிடியாக் கலையார்வமும் கடும்யோசனையும் வர்ற நாள் எண்டைக்குமே பூரணை நாளாத்தான் இருக்கு. பொக்கற்றுக்குள்ளை இருக்கிற காசுக்குள்ளை படமெடுத்திடோணுமெண்டு வீட்டுப்பினாஞ்சியர் காம்கோடர், கஸெட் தந்து ஓடர்போட்டுச் சொன்னதாலை, Blair Witch Project பிளானிலை குரூரப்படம் எடுப்பமெண்டு தீர்மானிச்சம் (தீர்மானிச்சமென்ன தீர்மானிச்சம்? தீர்மானிச்சான் காட்டான்குட்டி). ரைற்றில், எண்டில் எல்லாம் போடவெண்டால், ரைம் நல்லா ரைற்றில நிக்குது. அதால, கேக்கிறவைக்கு, "இது வாலுக்கு, தலைக்கும் முண்டத்துக்கும் பின்னாலை வருகுது; அதுதான் இதை ஓப்பினெட்டடாயிலே எடுத்தம். மிச்சத்தை பார்ட் ரூ எடுத்து, குழம்பாக்குவம்" எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறம்
17 comments:
அடடா இது Baby's day out இல்லையோ?
நான் தான் படம் எடுப்பேன் என்று அடம் பிடிப்பவரின் கையில் கேமிராவை கொடுக்காமல் தவிக்க விடுவதை வண்மையாக கண்டிக்கிறேன்.
it is coming, one more blog from peryarili for short film adventures :)
இப்பொழுதுதான் கவனித்தேன்.
இந்த தளத்தில் எல்லாமே கறுப்பு வெள்ளை..
அட...!
தமிழ்மணம்.. புளொக்கர் சின்னம் எல்லாமே....
நல்ல யோசனை.
உண்மையாகவே நல்லாயிருக்கு இந்த யோசனை...
பாராட்டுக்கள்.
படம் இறங்குது..
பார்க்கிறேன்
இப்பதான் படந்தின் இணைப்பை கணுடு பிடித்து பாத்தன்.
நல்ல குறும் படம். கமராவ ஒருக்கா குட்த்து பாத்திருக்கலாமே
:)
Nithilaa..podu raasaa...
appadi pottu thaakinaaththaan, `blair witch project` management adangum.
:) :)
சன்னாசி, இல்லை... Papa's Camcorder Out! என்பதுதான் சரி;-)
நவன் பகவதி. பாதிக்கப்பட்ட இயக்குநரை, தயாரிப்பாளரை விட்டுவிட்டு நடிகருக்காக நீங்கள் பேசிக்கொண்டு வருவதை நான் தண்மையாகக் கண்டிக்கிறேன்
ஸ்ரீ நீ வாசு, இட்டபோதே நினைத்தேன்; சொல்லியிருக்கிறீர்
மயூரன், இது யோசனையில்லை; செயற்பாடு
குழைக்காடரே, காட்டான்குட்டியிற்றை கமராவைக்குடுக்கலாந்தான்..... உம்முடையதாய் இருந்தால். ஏற்கனவே என்ரை ப்ளொக்கைக் குடுத்துப்போட்டுப் பட்டிருக்கிறன் பாடு
ஆஹா, வாருமையா பாரி வள்ளலே, இன்னும் ரெண்டு வருசத்திலை ஒருத்தனுக்கோ ஒருத்திக்கோ சொல்லுறதுக்கு இந்த வசனத்தைப் பத்திரப்படுத்துறேன். அப்ப, பதிலைச் சொல்லும்.
;-)))))
பாட்டும் பைட்டும் சூப்பர்!!
இளையதிலகம் மிரட்டுகிறார்!!
ஐயோ பாவம், குழந்தையை இப்படி அழவிட்டு வேடிக்கைப் பார்க்கிறீங்களே :-) பரவாயில்லே.... பெரிய டைரக்டராக வருவதற்கு இப்பவே சொல்லிக் கொடுக்கிறீங்க போலிருக்கு. இளமையில் கல்.... அதுசரி. :-)
என்னால் பார்க்க முடியவில்லையே! என்ன செய்யவேண்டும்
நித்திலன் அருமையாக இருக்கின்றார். என்றாலும் நானும் கார்த்திக்கும் அப்பாவுக்கு உதைக்க கற்பித்த WRESTING யை சரியாய் உபயோகிக்கவில்லைப் போலப்படுகின்றது. அடுத்தமுறை பொஸ்ரனுக்கு வந்து வடிவாய் கற்றுத்தருகின்றோம்; கவலைபடவேண்டாம்.
குட்டிச்சடையனைக் கூப்பிட்டுக் கதைக்கலாமென்றால் ஆருமில்லை
ரமணி : பாதி படத்திலே இப்படி காமிராமேனோடு சண்டை பிடித்தால், அடுத்த படத்திலே வாய்ப்பு கிடையாது என்று முன்கூட்டியே ஹீரோவிடம் சொல்லி வெச்சிடுங்க :-)
//ROSAVASANTH said...
என்னால் பார்க்க முடியவில்லையே! என்ன செய்யவேண்டும் //
ரோசா : quick time player ஐ இறக்கி அதிலே படத்தை பார்க்கவும். முதல் பத்து நொடி.. கலைப்படம் மாதிரி மெதுவாப் போகும். அடுத்தது ஆக்ஷன் ப்ளாக். கடைசிலே நெஞ்சை உருக்கும் கண்ணீர் காவியம்...மிஸ் பண்ணிடாதீங்கோ...
பின்னூட்டங்களுக்கு நன்றி.
வசந்த், quick time player அல்லது real player இலே தோன்றுமே. நான் மிகவும் முக்கிய படம். தவறவிடாதீர்கள் ;-)
தங்கமணி, நீங்கள் இளைய திலகம் என்கிறீர்கள்; வைத்தியர் என்னவென்றால், பையன் நிறை சராசரிக்கும்கொஞ்சம் கீழே என்கிறார் ;-)
அருணா, 'இளமையிலே கல்' என்றால், அதை என் தலையிலேதான் எடுத்துப்போடப் பார்ப்பான். யோசனை கொடுக்காதீர்கள்.
ஈழநாதன், சனிக்கிழமையென்பதால், முன்னுக்கு நண்பர்வீட்டிலே சன்ரிவீ பார்க்கப்போனேன்.
பிரகாஷ், கமராமென்னோடு சண்டை போட்டுப் பயனில்லையென்பதால், இப்போது பினாஞ்சியரை வைத்துப் பயமுறுத்திப்பார்க்கிறான். நடக்காது.
டிசே, ப்ரோ, நீங்கள் எடுத்த ஆனை-பூனை-எலி படத்துக்கு, சொல்லிக்குடுத்த மல்யுத்தமே பரவாயில்லை ;-)
சரியா டயல் அப்பிலே இறங்க மாட்டேங்குது. :-(. ஒரு நாள் கழித்துப் பாக்கறேன்.அதுக்குள்ளே தூக்கிடாதேங்கோ.
அருள்
அண்ணே , ஹீரோவுக்கு அப்படியே ஒரு காதலியும் இருந்திருந்தா நல்லா இருக்குமே? சரி முடியவில்லை என்றால் ஒரு தங்கச்சியாவது போட்டு , "தங்கைக்கோர் ஃபைட்டு" எடுத்திருக்கலாமே ;-)
/சரி முடியவில்லை என்றால் ஒரு தங்கச்சியாவது போட்டு , "தங்கைக்கோர் ஃபைட்டு" எடுத்திருக்கலாமே ;-)/
இன்னா கிண்டலா வாத்யாரே,
"தங்கைக்கோர் கீசல்" இன்னு அவனு ஒத்தப்பல்லாலே அந்தக்கொயந்தைக்கு கீசினா நீயா பொலிஸிகிட்டே பேசுவே
Post a Comment