Saturday, September 17, 2005

குவியம் - 15


படம் பார் படங்கீறியவரைச் சொல்

தமிழ்ப்பதிவுகளிலே படத்தைப் போட்டு, 'ஆளைக் கண்டுபிடியுங்கள்' விளையாட்டினை ஆரம்பித்திருக்கின்றார்கள். வாத்துகள், காட்டுப்பன்றிகள் மறைய, பதிவுக்கூர்ப்பிலே அடுத்தகட்டமாக, இந்த "ஆளைக் கண்டுபிடி-அகதியைக் கண்டுபிடி" விளையாட்டினை ப்ரோக்கள் செய்கின்றார்கள். மாறுதலாக, எமது பங்களிப்பாக, படம் போட்டவரைக் கண்டுபிடியுங்கள் என்று அவரின் படத்தினையும் போட்டுச் சொல்கிறோம்.



ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், மேலுள்ள படங்களைக் கீறியவரின் படமும் பக்கத்திலே தரப்பட்டிருக்கின்றது; பொஸ்ரனில் வாழும் சண்(முகலிங்கம் துரைசாமி) இன் மலையாளப்பாவை பல்வேறு விடயத்தொகுப்பிலே, இந்தப்படங்கள்-படம் கீறியவர் குறித்து வந்திருக்கின்றதைத் தந்திருக்கின்றோம்.

படம் வரைந்தவரின் பெயரைப் பற்றி(யும் மேலோட்டமாக 'மலையாளப்பாவை' குறித்தும்) பின்னால்.

37 comments:

arulselvan said...

அந்தப் பெயர்மாறிப் பி......?
Really!?
அருள்

Anonymous said...

பெயரிலி (அ)
டிசேதமிழன் (அ)
கார்த்திக்ரமாஸ (அ)்
பாலாஜி-பாரி (அ)
குலக்கட்டன் (அ)
ரவி ஸ்ரிநிவாஸ் (அ)
தங்கமணி (அ)
ப்ரோ (அ)
ஈழநாதன் (அ)
நானில்லை

-/பெயரிலி. said...

அருள், அதே! அந்தப்பலபெயர் பிடாரிதான் ;-)

-/பெயரிலி. said...

உங்களுக்குத் தெரியாததா, சுந்தரவடிவேல் பெயர் வராமற்போனது ;-)

Jayaprakash Sampath said...

அபூர்வமான படம். சென்ற வார ஆனந்த விகடனிலே, எஸ்.ராமகிருஷ்ணன். எழுதியிருந்தார். இவர் ரொம்ப நாளைக்கு முன்பே இறந்துவிட்டார் என்று நினைத்திருந்தேன். 1997 இலே தான் இறந்தாராம். நான் இவர் படைப்புக்களை வாசித்ததில்லை. கொஞ்சம் குண்ட்ஸான ஆசாமி என்று பிற இடங்களிலே படித்திருக்கிறேன். ரோசாவசந்த், சென்னை வந்திருந்த போது, டிஸ்கசனிலே இவரைப் பற்றி பேச்சு வந்தது. கொஞ்சம் விரிவாகப் போகுமுன்னால், இளையராஜா வந்து விவாதத்தை ஹைஜாக் செய்துவிட்டார், வழக்கம் போலவே...-)

Anonymous said...

// சுந்தரவடிவேல் பெயர் வராமற்போனது ;-) //

மன்னிச்சுடுங்க மாசக்கா.. அடுத்த தடவை இந்த தப்பு நடக்காம பாத்துக்கறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பிரமிள் பாநுசந்த்ரன் என்கிற தருமு அருப் பீர்மீள் என்கிற தருமு சிவராமு என்கிற பிரமீள்.இன்னும் பல பெயர் உண்டு, ஆனால் அதில் பெயரிலி என்ற பெயர் நிச்சயமாய் இல்லை :)

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
ரவி ஸ்ரீநிவாஸ் said...

நான் இவர் படைப்புக்களை வாசித்ததில்லை.

பிரகாசரே இப்போது அவரது எல்லா எழுத்துக்களும் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். நியு புக் லாண்டிஸில் முயற்சி செய்யும். கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் தொகுப்பு நூல்களாக கிடைக்கின்றன.

-/பெயரிலி. said...

/ஆனால் அதில் பெயரிலி என்ற பெயர் நிச்சயமாய் இல்லை/

பிரமிள் அரூப் சிவராமு என்ற தருமு சிவராமு இனி உயிரோடு வந்து எண்சாத்திரம் பார்த்து -/பெயரிலி. இனை வைத்துக்கொள்ளமுடியாது. அதனால், அவர் வழ்ந்த வீதியின் அடுத்தமூலையிலே வாழ்ந்த -/பெயரிலி. வேண்டுமானால், பிரமிள் ஜோய்ஸ் காப்கா என்று வைத்துக்கொண்டால் சரியாகிவிடுமென்கிறேன். என்னநினைக்கிறீர்கள் சிரி நீ வாசூ? ;-)

Anonymous said...

//அவர் வழ்ந்த வீதியின் //

ஹிஹிஹி. ஒண்டுமில்ல.
உங்களிட்ட ஓர் எழுத்துப்பிழை பிடிக்க வேணுமெண்டு கனநாள் ஆசை.
இதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதாக சொல்லமாட்டியளெண்டு நினைக்கிறன்.

ஈழநாதன்(Eelanathan) said...

அச்சச்சோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லுவமெண்டால் பெரியாக்கள் முந்தீட்டினம்.
பிரகாஸ் பிரமிளின் கவிதைகள் தனியாகவும் கவிதையல்லாத பிற கட்டுரைகள்,கதைகள் தனியாகவும் கால.சுப்ரமணியத்தினால் தொகுக்கப்பட்டுள்ளன.பின்னையது அடையாளம் வெளியீடு.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Some suggested names :)
Brmil Joyce Kaffka Che
Brmil Che Joyce Siddarth
Brmil Peyarili Che
Che Peyarili Siddharth
Brmil Aroop Kafka Peyarili Sivaramu
Aroop Dharmu Peyarili Che Siddarth

ரவி ஸ்ரீநிவாஸ் said...

அதனால், அவர் வழ்ந்த வீதியின் அடுத்தமூலையிலே வாழ்ந்த

அதனால், அவர் வாழ்ந்த வீதியின் அடுத்தமூலையிலே தவழ்ந்த :)

மு. சுந்தரமூர்த்தி said...

தர்மோத் அப்ரூப் ஜீவோராம் இன் இன்னொரு பெயர் (அச்சில் பார்த்திருக்கமாட்டீர்கள்) பெருமாள்.
"பெருமாள் ன்னு ஒருத்தரு கவிதையெல்லாம் எழுதுவாரே.."
"பெருமாளா, எனக்கு தெரிஞ்சி அப்பிடி யாரும் கவிதை எழுதின மாதிரி தெரியலையே!"
"பெங்களூர்ல மகாலிங்கம் வீட்டுக்கு வந்திருந்தாரே. நாமகூட பாத்திருக்கோம்.."
பெருமாள் பெயர் உபயம் என் மனைவி. இன்னும் கொஞ்சநாள் போனால் பெருமாள் "பெத்த பெருமாள்" ஆனாலும் ஆகலாம்.

இளங்கோ (எ) கோணங்கிக்கு எண்கணித முறைப்படி இளங்கோணங்கி என்று பெயர் வைத்ததாகக் கேள்வி. ரவி, உங்களுக்கு என்ன பெயர் வைத்தார்? பரவாயில்ல கூச்சப்படாம சொல்லுங்க :-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

அவர் சொன்னது ஒன்றுதான், பெயரில் இறுதியில் இன்னொரு ஸ்.
ravi srinivass
அதைச் சேர்த்தால் எனக்கு மனம்
நிலையாக இருக்கும் என்றார். அதைச் சேர்த்து என் பெயரைப் படித்தால் வாஸ்ஸ் என்று பயமுறுத்தும் ஒலி எழும் என்பதால் என் நன்மையை விட உலக நன்மையே முக்கியம் என்று பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. :) உங்கள் பெயரைக் குறித்து என்ன சொன்னார்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இளங்கோ (எ) கோணங்கிக்கு எண்கணித முறைப்படி இளங்கோணங்கி என்று பெயர் வைத்ததாகக் கேள்வி
அப்படியானால் முதுகோணங்கி யாராம்

SnackDragon said...

அ..ஆ ;-)

-/பெயரிலி. said...

முதுகோணங்கி.... சாட்சாத் லா. ச. ராமாமிர்த்தமேதான் ;-)
[வேண்டுமானால், கடைக்கோணங்கி என்று எங்கள் சன்னாசிப்பாம்புக்குக் கொடுக்க உத்தேசம் ;-)]

-/பெயரிலி. said...

/இதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதாக சொல்லமாட்டியளெண்டு நினைக்கிறன். /

ம்............. அர்த்தம் இருக்குது; அப்படியாப் பிழை பிடிச்செண்டாலும், பின்னூட்டம் ஊட்டமாக வளரட்டுமேயெண்ட நோக்கத்திலேதான்... மீசை நிலம்பட விழுந்ததும் ;-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//வேண்டுமானால், கடைக்கோணங்கி என்று எங்கள் சன்னாசிப்பாம்புக்குக் கொடுக்க உத்தேசம் ;-) //

nalla idea!

-Mathy

ரவி ஸ்ரீநிவாஸ் said...

idaikonaki = peyarili :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

இடைக்கோணங்கி இடைக்கோவண ஆண்டி எல்லாம் வேண்டாம்; நமக்கு வேண்டுமானால், முதற்குறளி
என்ற பெயரைத் தரும்படி கேட்டுக்கொல்கின்றேன்.

அதுசரி, யாரதங்கே. சாட்டோடு சாட்டாக, பழிக்குபழிபோல, போட்ட பின்னூட்டத்தை அப்படியே ஒத்தி அழித்துக்கொண்டுபோவது.. நல்லாகவா இருக்கிறது இச்செயல்

Anonymous said...

//வேண்டுமானால், கடைக்கோணங்கி என்று எங்கள் சன்னாசிப்பாம்புக்குக் கொடுக்க உத்தேசம் ;-)//

வசிஷ்டர் வாயால் பிரம்மஹத்திப் பட்டம் ;-)

கோணலெல்லாம் கோணங்கி அல்ல என்பது என்னவோ உண்மை!!

arulselvan said...

மாசுமாடலர் வீசுவிரிசடையர் முழுமுதற்குறளியர் காண:
http://tinyurl.com/cag5b

-/பெயரிலி. said...

/கோணலெல்லாம் கோணங்கி அல்ல என்பது என்னவோ உண்மை!! /
சன்னாசி, அதைச் சொல்லுங்கள்.

அதேநேரத்திலே, கோணங்கியினைக் கோணல் என்பதை மென்மையாகக் கண்டிக்கின்றேன். அவரின் படைப்புகள் புரியாதிருப்பினும், புரியும்படி பட்சணம் பலகாரம் பொரிக்கும் பல readymade தமிழ்ப்படைப்பு-ஆளிகள் நினைத்தாலும் முயன்றாலும் எட்டாத தொலைவிலே அவரின் படைப்புகள் உள்ளனவென்பது எனது கருத்து. அதிலே சொற்கள் வந்து வீழ்ந்து அமைந்துகொள்ளும் கோர்வைத்தன்மையின் காரணமாக வரும் ஈர்ப்பினால், அவரின் அந்தப்புரியாமையே (என்னைப் பொறுத்தமட்டிலே) ஒரு வெற்றிதான்.

அருளரசே, உமது கருத்தோவியக்காரரின் அந்தத்'தலைமுடி'வு கோணங்கித்தனமாகவல்லோ இருக்கிறது ;-)

arulselvan said...

---
>>
தலைமுடி'வு கோணங்கித்தனமாகவல்லோ இருக்கிறது
-------

பின்னெ எப்படி இருக்குமோ. அதுவல்லவோ இப்போ டாபிக்கு

SnackDragon said...

இந்தக் கோணங்கிகளுக்கு நடுவில் ரெண்டெழுத்து நேரா எழுதுனா எடுபடவா போகுது :-?

SnackDragon said...

எச்சூஸ்மி! கோன் - இன்கி கள் சொல்ல வந்தேன் சிலிப் ஆயிடுச்சு.

arulselvan said...

சரி சரி, சிறு வயசுக்காரர்கள் வடிவாக் காணணும் போல. இந்தாங்கோ.
http://tinyurl.com/ajk9s

-/பெயரிலி. said...

ஆ! குஞ்சியழகில்லாமல் கிராப்புடன் கோணங்கியா? இஃதென்ன கோரம்!! ஒரு கோணல் மைப்புட்டிக்காரருக்காக கோணங்கியின் மயிரழகைக் கத்தரித்த அருள் ஒழிக!!

-/பெயரிலி. said...

/Abstract, materials and methods, results, discussion, acknowledgements எழுதுவதில் ஆர்வம் கூடிக்கொண்டே வருகிறது/
விரைவிலேயே Permanant head Damage ஏற்படட்டுமென்று பதிவாளர், வாளாதார் சார்பிலே வாத்துகிறோம். க்வா! ;-)

Anonymous said...

உடனுக்குடன் collateral damageம் நடக்குமென்று எச்சரிக்கிறேன். க்வாக் க்வாக் ;-)

இளங்கோ-டிசே said...

எதோ பெயரிலிக்கும் சன்னியாசிக்கும் இடையில் நடைபெறுகிறது என்பது மட்டும் புரிகின்றது. அதற்கப்பால் எதுவும் புரியவில்லை. சிலவேளைகளில் அவர்களும் இந்த நிலையில் இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் நானும் இந்தச் சூழ்நிலைக்கு என்னை மாற்றிவிட்டு விரைவில் திரும்பி வருகின்றேன்.

SnackDragon said...

பகவானே.. தெரியாத்தனமா இந்தபக்கம் வந்ததுக்கு இவ்வ்வ்வ்வ்வ....ளவு பெரிய தண்டனையா?

அப்பறம் eccentrin- க்கானா ஆளு logocenticism பேச ஆராம்பிச்சான்னா நீங்கள்ளாம் தாங்க மாட்டீங்க... பிச்சான்னா பிச்சிடுவான் சாக்கிரதை. :-)

-/பெயரிலி. said...

சன்னாசியின் பின்னூட்டமொன்று அவரின் வேண்டுகோளுக்கிணங்க அகற்றப்பட்டிருக்கின்றது.