Wednesday, September 07, 2005

துளிர் - 46


Noise Evaporation


வேக்பீல்ட் ஏரி, மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, ஜூலை இன் ஒரு மாலை
படக்கருவி உபயம்: டிஜே தமிழர்

13 comments:

kulakaddan said...

படம் அருமை

பரணீ said...

வண்ணத்தினை கொஞ்சம் உயர்த்தி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமோ .

Thangamani said...

நல்ல வாத்து!!

KARTHIKRAMAS said...

அதாகப்பட்டது, சும்மா இருந்த என்னை, 2 வாரங்களுக்கு முன்னால் சென்றிருந்த எகிப்திய அருங்காட்சியக படங்களை இனி வரும் எனது பதிவில் இட என்னை தூண்டிவிட்டு விட்டீர்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். ஜாக்கிரதை!

/Noise Evaporation
படக்கருவி உபயம்: டிஜே தமிழர்
/
இதற்கு நாய்ஸ் evaporation என்றே சொல்லியிருக்கலாமே, எல்லா நாய்களும் ஓடியிருக்குமே.

-/பெயரிலி. said...

குளக்காடன், நன்றி.

பரணீ, வண்ணத்தினை உயர்த்தியிருக்கிறேன்.

தங்கமணி, டிஜேயினை வாத்து என்பதை நான் தண்மையாகக் கண்டிக்கிறேன்.

காமாஸ், "எல்லா நாய்களும் ஓடின" என்று ஓடிப்போன ராகுவையும் கேதுவையும் மறைமுகமாகச் சொல்வதை தன்மையாகக் கண்டிக்கிறேன்.

KARTHIKRAMAS said...

பெயரிலி இப்படியே கண்டித்துக்கொண்டே இருங்கள், ராகுவும் கேதுவும் தவறாமல் உங்களை பிடிக்க வரும் கூடிய விரைவில்.

கரிகாலன்-karikaalan said...

ஆகா அருமையான படம்.

மாலைக்கருக்கலில்
ஏரிக்கரையில்
மடி மீது நங்கை
சாய்ந்திருக்க கதைபேசும்
யுவனைக் கண்ட வாத்து
தலைசாய்த்து தன்
உறவைச் சொல்ல
துணையைத் தேடிவிரைகிறதோ?

பெயரிலி!
டீ.சே தமிழனின் பெயரை உச்சரித்தாலும் உச்சரித்தீர்கள் பாருங்கள்
எனக்கும் கவிதை?? வந்து கொட்டுகிறதே.

சன்னாசி said...

நல்ல படம். வாத்துக்கள்!

அருள் செல்வன் கந்தசுவாமி said...

முக்கோணத்தின் மறைக்கப்பட்ட மற்ற இருமுனைகளில் என்னவோ?

-/பெயரிலி. said...

Wild West கண்ட எங்கள் புகழ்ச்சீத்தலைவர் கார்த்திக்குக்கு இன்றைய காலைவேளையிலே தொண்டன் என் சமர்ப்பணம்

கரிகாலருக்கு வார்த்தை முட்டிக் கவிதை கொட்ட வைக்கும் 'குணா' ப்ரோ கவிதை வாழ்க. சிலர் கவிதை எழுதினால், வாசிக்கிறவருக்கு தலைமயிர்தான் கொட்டும்.

சந்நியாசி, க்வா! க்வா!!

அருள், முக்கோணத்தின் அடுத்த இரண்டு மூலைகள் அந்தப்புறம்

;-)

டிசே தமிழன் said...

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுக்கமுடியாமல், 'நாட்டுக்கொரு உண்மை சொல்ல இந்த நாகரீகக்கோமாளி வந்துவிட்டான்'.
நடந்தது இதுதான் ......
புல்லாகி புழுவாகி பலவேறு ரூபங்கள் எடுத்த கார்த்திக், வாத்தாய் எம்மை வாழ்த்த Bostonனில் நின்றசமயம் விசுவரூபம் எடுக்கையில் எடுக்கப்பட்ட படம்தான் மேலே உள்ளது. ஆனால் இந்தப்படம் எடுக்க நாம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. கார்த்திக்கைப் பார்த்து, ஒரு பெண்வாத்து 'இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ' என்று அன்பொழுகக் கூப்பிட அவர் எங்களைக் கவனியாது நீந்திக்கொண்டிருக்கையில், நானும் பெயரிலியும், கார்த்திக் 'இஞ்சை பாரும் இஞ்சை பாரும்' என்று அழாக்குறையாக குரல்கொடுத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தோம். இதைத்தான் கார்த்திக் noise pollution செய்ததாய் குறிப்பிடுவதை நண்பர்கள் வாசித்து எது உண்மை என்று இலகுவாய் புரிந்துகொள்ளமுடியும்.
.....
பெயரிலி அவர்கள், என்னை படப்பெட்டி உதவி என்று குறிப்பிட்டபடியால், அவர் என்னைத் தனது assistant cameramanயாய் இனி ஏற்றுக்கொள்ளவேண்டும் (WARNING:Peyarili,when you're hiring next assistant, that person must be a woman, otherwise i will quit my job). இல்லாவிட்டால், எனது கமராப்பெட்டிக்கான காசுப்பெட்டியாவது தரவேண்டும். மேலும் நான் கார்த்திக்கிற்காய் எழுத இருந்த கவிதையை கனவினிலேயே வந்து களவெடுத்துப்போட்ட கரிகாலரையும் கண்(ண)டிக்கின்றேன் :-). அதே சமயம் ஒரு வாத்துப்படம் மேலே போட்டிருந்தாலும் இரண்டு வாத்துக்கள் கண்ணுக்குத் தெரிந்து //வாத்துக்க்கள்// என்று பின்னூட்டம் எழுதி, கார்த்திக்கை 'இஞ்சாருங்கோ' என்றழைத்த பெண்வாத்தையும் அருவமாய் கண்ட சன்னாசியின் தொலைநோக்குப் பார்வையையும் மெச்சுகின்றேன் :-).

சுந்தரவடிவேல் said...

சன்னாசி சொல்லித்தான் இவ்வாத்தைப் பாக்குறேன். என்னே ஒத்துமைன்னு தோணிணாலும் இதுவே செவ்வாத்து!
டிசே, காரா போன்ற சின்னப் பிள்ளைகளைக் குஷிப்படுத்த மேலும் பல வாத்து, கொக்கு, முயல், கார் படங்களைக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
பெயரிலி, உங்க மறுமொழி ஒவ்வொன்னையும் படிக்க இப்பவெல்லாம் அஞ்சு நிமிடமாகுது!

KARTHIKRAMAS said...

பெயரிலி, இப்பத்தான் இந்தப்பாட்டை(காலங்காத்துல இம்சை பண்ணாத) முதல் தடவை கேக்குறன் .