Tuesday, September 13, 2005

படிமம் - 160


(Over)Exposed



தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

அறியாதார் அவலங்களுடன் விடிகிறது காலை
அறியாதார் கொய்த தேயிலைத்துளிருடன்
அறியாதார் வனைத்த கோப்பைப்பிடியுடன்
அறியாதார் எழுதிய அறிவியற்கட்டுரையுடன்
அறிந்தும் -
அறியாதான்போல் (சு)வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
அதிகாலையை

5 comments:

இளங்கோ-டிசே said...

அறி ஆமை கொடுப்பு வினையாம்!!

Alex Pandian said...

என்னங்க இது - இவ்ளோ பெரிய கோப்பையிலையா தேத்தண்ணி (டீ) குடிக்கறீங்க ?

சொன்னபடி - ஒங்க ஐட்டம் ஒண்ணு (சின்ன மாமியே..) எடுத்து வுட்டுருக்கேன். ஒங்க வூட்டுல இப்படியெல்லாம் கட்டுப்பாடு

>>>>>>>> என் வீட்டில் இது கேட்பதும் ஆங்கிலப்படம் பார்ப்பதும் சீட்டுக்கட்டு எனப்படும் cards விளையாடுவதும் இன்னும் ஒரு சரியான கன்னிக்கு வாழ்க்கைப்படாத ஆண்கன்னன் (ஒத்த ஓட்டைக்குடையே இல்லை அதற்குள்ளே கொடை) செய்கிறவேலை இல்லை என்று தடை இருந்ததால், >>>>>>>>>>>>

இருந்தது என்பது சர்ப்ரைஸ் :-)

- அலெக்ஸ்

SnackDragon said...

எனக்கு அறியாததோர் எறும்பையும் சேர்க்கும் ஒரு பெயரிலியைத் தெரியும் ;-)

Anonymous said...

//அறியாதார் கொய்த தேயிலைத்துளிருடன்//
Nice

-/பெயரிலி. said...

அறி ஆமை பற்றி அறியாமல் சும்மா சொல்லக்கூடாது; அந்த அரியே ஆமையாக வந்திருக்கானாக்கும்.

அலெக்சூ, சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு! சர்ப்ரைஸ் எல்லாம் அதையெல்லாம் தடுத்தும் ஆட்கொள்ளமுடியாமல், எப்படி இவன் செய்கிறான் என்று வீட்டுக்காரர்களுக்குத்தான் ;-)
அது தேத்தண்ணி கப் இல்லை; தேர்ந்த தண்ணீ கப்புத்தான்

ஓர் எறும்பு என்று -/பெயரிலி.யைக் குறைத்து மதிப்பிடும் காமாஸினை நாங்கள் வெம்மையாகக் கண்டிக்கிறோம்.

nice ஊடாகத் தலையிலே ice வைத்த தங்கமணி வாழ்க!!