Monday, October 08, 2007

தமிழச்சி மீதான சொல்வன்முறைகளும் தமிழச்சியின் கருத்துச்சறுக்கல்களும்

அரைகுறை - 14

தமிழச்சி, நான் வாசித்தவரையிலே இராயகரன் + சத்தியக்கடதாசி போன்றோர் விரித்துக் காட்டியதுபோல, திட்டமிட்டு ஓர் ஈழத்தமிழர் அமைப்பு சார்ந்து ஆதரித்தோ, இன்னோர் ஈழத்தமிழர் அமைப்பினை வெறுத்து எதிர்த்தோ பதிவுகளைப் போடவில்லை என்று நம்புகிறேன்.

தமிழ்ச்சோலையைப் பின்னிருந்து யார் நடத்துவது என்பது இரயாகரன் சொல்லும்வரை எனக்குத் தெரியாது. தமிழ்ச்சோலை என்று ஒன்றிருப்பதோ, அதிலே நிகழ்ந்து குறித்து, தமிழச்சி பதிவு போட்டதுங்கூட இரயாகரன் பதிவிலே கண்டதுதான். ஆனால், தமிழ்சோலையிலே நிகழ்ந்ததாகத் தமிழச்சி சொல்வது அவ்வாறுதான் நிகழ்ந்திருந்தால், தமிழச்சி கேட்கும் நியாயம் அதன் பின்னால், யாரிருப்பினும் கேட்கப்படவேண்டியதே. அவருடைய ஒரே நோக்கம், அவர் சொல்லும் பெரியாரியத்தினது பிரசங்கமும் பரப்பலுமே என்றே தோன்றுகின்றது. இரயாகரன் + சத்தியக்கடதாசி ஆகியோர் அவரின் பதிவுகளிலேயிருந்து தமக்குத் தேவையான வகையிலே விரித்து அர்த்தம் தோன்றும் வண்ணம் எழுதியிருக்கின்றார்கள் என்பதும் என் உணர்தல்.

அதன் பின்னால், இரயாகரன் + சத்தியக்கடதாசி ஆகியோரை அமைப்பு ரீதியிலே முரண்படுகின்றவர்களிலே ஈழத்தமிழர் சிலர் தமிழச்சியினையும் மிகவும் தவறாக இலக்காகக் கொண்டு தாக்க முயல்கின்றனர் என்றே படுகின்றது. சாத்திரியின் கடைசி இரு இடுகைகளும் மிகவும் பொருந்தாதவை என்பதிலே எனக்கேதும் மாற்றுக்கருத்தில்லை. அதுவும் தமிழச்சி பதிவாகவே "எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம்" என்று எழுதி தன் பதிவினைப் பற்றிய இரயாகரன் போன்றோரது விளக்கம் தவறென்று சொன்னபின்னரும் இப்படியாக சாத்திரி எழுதியது மிகவும் முறையல்ல. தமிழச்சியின் பதிவிலேயே வேறு யாரோ அநாநி அவருக்குப் பின்னூட்டம் மிகவும் கேவலமாக, யாழ்ப்பாண வழக்கிலேயே எழுதியிருந்தார். சாதி, பால், மதம், வாழ்வளம், மொழி சார ஏற்றவிறக்கம் சுட்டி இகழ்ச்சியாகவோ சொல்வன்முறைகொண்டோ தாக்குவதிலே உடன்பாடில்லை. தாக்குவதிலே தமிழன் என்று வந்து சேர்ந்த அடையாளத்தை என்னிலே பொதுவிலே அவ்வகையிலே பாதிக்கப்படாவிடத்திலே திணித்துக்கொள்ள விரும்பாவிட்டாலுங்கூட, இவ்விடத்து ஈழத்தமிழன் என்ற அச்சி(லுவையி)னை ஏற்றிக்கொண்டு, தமிழச்சியிடம் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

இது தமிழச்சி போன்றவர்களை ஈழத்தமிழர்களுக்காகக் குரல் எழுப்புவதைத் தடுக்க மட்டுமே வழி செய்யும் என்ற பக்கவிளைவுகளைக்கூட ஈழத்தமிழர் தாம் என்ற எண்ணத்திலே தாக்குகின்ற ஓரிருவர் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுவும் இவை எதற்கும் சம்பந்தப்படாத, ஆனால், இருசாராருக்குமே எதிரான, பின்னூட்ட 'பலான வாலா'க்கள், வளர்மதி-சுகுணா திவாகர் பிரச்சனையிலே, தமிழ்பித்தன் - தமிழச்சி பிரச்சனையிலே புகுந்து தமது திசைதிருப்பலுக்காக, எண்ணெய்..... இல்லை இல்லை பசு நெய் ஊற்றி விளையாடியதுபோல, இப்போதும் தமிழச்சி போன்ற ஈழத்தமிழ் ஆதரவாளர்களையுங்கூட ஈழத்தமிழரிலிருந்து பிரிக்க, "ஈழத்தமிழன்", "தமிழ்நாட்டுப்பெரியார்த்தமிழன்" வடிவங்களாக அவ்வப்போது கரிசனப்பின்னூடங்கள் வந்து கொட்டுகிறன. மாசிலாவுக்கு ஈழத்தமிழன் பின்னூட்டி எரிவதுக்கும் முண்டை மாசிலாவுக்கு ஈழத்தமிழன் பின்னூட்டுவதற்கும் வித்தியாசம் எழுதும் "ஈழத்தமிழிலேயே" தெரிந்துவிடும். இப்படியான நிலைகளையும் சாத்திரி போன்றோர் அந்நியமாக்குதலின்போது எண்ணிப்பார்ப்பதில்லை.


சபேசனின் ஐரோப்பாவின் மாற்றுப்பெரியாரியக்கம் நோக்கு, எவ்வகையிலும் ஆக்கபூர்வமானது. தலித் பெரியாரியக்கம் என்ற பதாகையின்கீழே புலியெதிர்ப்பினைச் சிலர் செய்கின்றார்கள் என்று அவர் கருதுவதால், மாற்றாக புலிகளுக்கு ஆதரவான பெரியாரியக்கம் என்று அவர் ஒன்றை அமைத்திருப்பது மிகவும் ஒழுங்கான சரியான முறையிலான எதிர்கொள்தல். அதை வரவேற்கலாம். தமிழச்சி போன்றோர்கூட, பெரியார் கொள்கைக்காக ஆங்கே சேர்ந்தியங்கும் வாய்ப்புண்டு.

இவ்வகையிலே ஈழத்தமிழரோ எத்தமிழரோ தமிழச்சியினைக் கேவலமாகத் தாக்கிப் பின்னூட்டுவதையும் பதிவிடுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதே நேரத்திலே, கொழுவி் தமிழச்சிக்காக வரிசைப்படுத்தியிருக்கும் கேள்விகள் நியாயமானவையும் தமிழச்சி சொல்லிக்கொள்ளும் பெரியாரியப்பார்வைக்கும் அவரது சொற்செயற்பாடுகளுக்கும் இடையே மிகமுரண் கொண்டவையுமாகக் கருதுகிறேன். இவை தமிழர் என்ற வடிவிலேயே வரவில்லை. தொழில்சார்நிலைவன்மம், பால்வடிவவன்மம் என்பவற்றின் பாற்பட்டவை; கொழுவி நிதானமாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் கேட்டிருக்கின்றாரென்று படுகின்றது, அதற்குரிய நேர்கொள்ளும் திறனுள்ள தமிழச்சி் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.

18 comments:

Anonymous said...

குட்டை குழப்பாதேயென்றொரு பின்னூட்டத்தைக் கொழுவிக்கு இட்டுவந்துபார்த்தால் தமிழிச்சியைப் பதிலளிக்கக் கேட்ட்ப் முழுப்பதிவொன்றையே எழுதி முடித்திருக்கிறீர்கள் இரமணி... உங்கள் சின்னத்தோழர் வளர்ந்து உங்களை வசமாகக் கேள்விகேட்குமட்டும் நீங்கள் இணையமெல்லாம்திரிந்து எல்லோருக்கும் அலுப்புக் குடுக்கப் போகிறீர்களென்பதுமட்டும் வெளிச்சம். இன்ஷா அல்லா சின்னத் தோழர் விரைவில் வளரட்டும்.

கொழுவிக்குச் சொன்னவை
//தமிழிச்சி நிறைய வம்புதும்புகளில் மாட்டி குழம்பியுள்ளார். குட்டையை மேலும் குழப்பாமலிருப்பது நல்லது. தமிழிச்சி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே பால்நிலை சார்ந்து தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்திருக்கிறார். ஈழத்துச் சாதியமைப்புத் தொடர்பில் அவருக்குப் போதிய விளக்கம் யாராவது பதிவாகக் கொடுப்பது நல்லது. ஆதாரங்கள் இல்லாமல் இணையப்புரட்சித் தோழர்களின் கருத்துக்களை மட்டும் நம்புவது தமிழிச்சியின் பிழைமட்டுமல்ல. ஈழத்துச் சாதியமைப்புத் தொடர்பில் தமிழகத்தவர் விளங்கிக் கொள்ளவில்லையென மீண்டும் மீண்டும் கூப்பாடுபோடும்நாம் ஏதாவது கட்டுரைகளை எழுதுவது நல்லது.

சாதி, பால்நிலை சார்ந்து உள்ள தவறான கண்ணோட்டம் என்பது பல்லாண்டுகளாகக் கடத்தப்பட்டு வந்துள்ளது. எமது கலாசார அம்சங்களிலும், மொழியிலும், சிந்தனையிலும் அவை பின்னிப் பிணைந்துள்ளன. பகுத்தறிவு வழிநின்று அவற்றைக் கடக்க நாம் நினைத்தாலும் சில சமயங்களில் (தமிழிச்சி உணர்ச்சி வசப்படுவது போன்ற) நம்மையறியாமல் வெளிவந்து விடுகிறது. நமக்குள்ளே உள்ள அழுக்குகள் படிப்படியாக அகற்றப்படல் வேண்டும். சில தலைமுறைகளின் பின்னராவது கலாசாரத்திலும் மொழியிலும் சிந்தனைமுறையிலுமிருந்து அந்த அழுக்குகள் அகற்றப்படும் என நம்புவோம்.

அவ்வாறு அகற்றப்படுவதற்கு பெரியாரியத்தைப் பரப்புவதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழிச்சி போன்றோரது பங்களிப்பு அவசியமானது. அவசரப்பட்டு முத்திரைகள் குத்துவதும் குற்றங்காணப்தும் பயனளிக்காது. தமிழிச்சி சிந்திப்பார் என நம்புவோம்.

வணக்கம்
//

theevu said...

என்னடாப்பா தட்டுக்கழுவியெல்லாம் ஒரேநாளில் பெரியாரிடம் சரண்டரோ என நினைத்தேன்.

புற்றுக்குள் இருந்து புடையன் கிளம்புவதுபோல் கருத்துக்கள் இப்போது பதிவுகளாக வருகின்றன..
மகிழ்ச்சி


தமிழச்சி பற்றிய பெரியார் பிம்பங்கள்
சரிந்துகொண்டெ போகின்றன.

உணர்வு சார்ந்து கொள்கையிலிருந்து தவறப்பார்க்கிறார்.
கொள்கையில் தெளிவு வேண்டும்.

தட்டுக்கழுவிக்கும் தட்டேந்திக்கும் வித்தியாசம் பார்க்கும் மனப்பான்மை வரவேண்டும்.


இதனை மனதில் கொண்டுதான் ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி பெண்ணே என்பதுபோல் தட்டுக்கழுவி என்று ஒரு பதிவு போட்டிருந்தேன்.

சிலருக்கு எம்மவருக்கு தட்டுக்கழுவி என்ற பதம் கோபத்தை ஏற்படுத்தவில்லை.அவர்கள் தாம் வெள்ளாளர் என்று ஏற்கனவே இணையத்தில் பட்டவர்த்தனமாக நோட்டீஸ் போட்டமையினாலோ தெரியவில்லை.

சபேசன் திடீரென ஆரம்பித்த பெரியார் கழக நுண்ணரசியல் புரியவில்லை.

அதிலும் தமிழ்ச்சோலை
பற்றிய குறிப்பு இடறலுக்குள்ளாகிறது.

தமிழச்சி கூறிய குற்றச்சாட்டுக்கு தமிழ்ச்சோலை விளக்கம் கொடுக்கவேண்டும்.

அதுவும் ஒருவரது அனுமதியில்லாமல் அவர் பேசிக்கொண்டதை மறைமுகமாக ஒலிப்பதிவு செய்வது மிகக்கேவலம்.

யார் அதில் தவறு செய்தார்கள் என்பதை விட இதுபோன்ற நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனம்.


என்னத்தை எழுதி...

வவ்வால் said...

பெயரிலி,

உங்கள் பதிவுகளைப்படிப்பதுண்டு ஆனால் எதுவும் பின்னூட்டம் போடுவதில்லை, காரணம் உங்கள் தமிழ்(தவறு இல்லை எனக்கு புரிய கடினம்) மேலும் அடைப்புக்குறிக்குள் ,வெளியில் என நீங்கள் பிரயோகிக்கும் நுண் வார்த்தைகளின் அர்த்தம் கொண்டு பேச வேண்டும், என்பதால் ஒதுங்கி விடுவேன்! :-))

தமிழச்சியின் செயல்பாடுகளை ஆதரித்தே இப்பதிவு இருப்பினும் , அவருக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் எனவும் தலைப்பு பேசுகிறது(பெரிதாக சறுக்கியும் விடவில்லை). ஏற்கனவே கொழுவிப்பதிவில் சொன்னது போல தமிழச்சியின் சொல்லாடல்களில்(தட்டுக்கழுவி, ஒருவனுக்கு பிறந்தவனா போன்றவை ) சில சறுக்கல் இருந்தாலும் அவரை அது போன்ற நிலைக்கு தள்ளிக்கொண்டு போனது சிலரின் கைங்கர்யம் என்பதே எனது எண்ணம்.

பெண்ணாக , தனியாக அவர் செய்வதைப்பார்க்கையில், அவர் மீது பலர் தாக்குதல் தொடுக்கையில் சமாளித்து நிற்பதை பார்க்கும் போது சில சமயம் அவரின் வார்த்தை அத்து மீறல்களை பொறுத்து போகலாம் என தோன்றுவதால் , அவரின் அத்துமீறல் வார்த்தை பிரயோகத்தை நான் சொல்ல நினைத்தும் சொல்வதில்லை.உங்களுக்கும் அத்தகைய எண்ணம் இருக்கிறது என்பது தெரிகிறது.

உதாரணமாக ஈழத்தமிழர்கள் சார்பாக நடக்கும் தலித் மாநாடு என்பதன் பின் புலன் என்னவென எல்லாருக்கும் தெரியுமா, அல்லது அதன் மீது இத்தகைய கருத்தேற்றம் சொல்பவர்கள்(சாத்திரி போன்றோர்)நம்பகத்தன்மை என்னவென எப்படி எடுத்துக்கொள்வது.

அந்த நிகழ்வு தவறென சொல்பவர்கள் சரியானவர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி. சாத்திரி என்ற பெயரில் ஈழத்தமிழர் என்று சொன்னாலே ஒருவர் தலையாட்டி விட வேண்டுமா?

எனவே கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு விழா அழைப்பிதழை அவரது பதிவில் போடுவது தவறா? விழா அழைப்பிதழ் எனக்கே கிடைத்து இருந்தால் அத்தகவலை அந்நிகழ்சியின் பெயரில் இருக்கும் கருத்தின் அடிப்படையிலே ஆதரிக்கும் எண்ணம் வந்து இருக்கும்.

தமிழச்சி தனது சொல் பிரயோகத்தில் சறுக்கி இருக்கலாம் ஆனால் அவரையே குறிவைத்து பலரும் தாக்கும் போது ஏற்படும் அழுத்தமே அதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஏன் நீங்கள் கூட ஈழம், ஈழத்தமிழர் என வந்தால் மட்டும் அதிக அக்கரையோடு போய் எப்படி எனக்கேட்கிறீர்கள், ஆனால் மற்ற உலகப்பொதுவான பதிவுகளில் உங்கள் குரல் கேட்பதில்லை, அது தவறென சொல்லவில்லை,இயல்பே, அப்படி தான் தமிழச்சியும் சாதியம் ,ஒடுக்கு முறை எனப்பார்த்தால் ஈர்க்கப்பட்டு சென்றுவிடுகிறார் அதனால் அவர் செயல்பாடே தவறென கொள்ள முடியாதே!

Sri Rangan said...

//சிலருக்கு எம்மவருக்கு தட்டுக்கழுவி என்ற பதம் கோபத்தை ஏற்படுத்தவில்லை.அவர்கள் தாம் வெள்ளாளர் என்று ஏற்கனவே இணையத்தில் பட்டவர்த்தனமாக நோட்டீஸ் போட்டமையினாலோ தெரியவில்லை.//

தீவினது இக் கூற்றுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் சாதியமைப்பும் தேசியவிடுதலைப் போராட்ட அவநம்பிக்கைகளும்,தலித்துக்களும் எனும் எனது கட்டுரை பதிலளிக்கும்.இன்றும் நாளையும் தொடர்ந்தெழுதிப் பதிவேற்றுகிறேன்.தீவுக்குத் தட்டுக் கழுவி உறைக்கலாம்.ஆனால்,தாழ்தப்பட்டவனுக்கு அதுவல்ல முக்கியம்.ஏனெனில், அவனை இன்னும் மலமள்ளவும்,மோச்சடியில் பிணம் காக்கவும் வைத்தவர்கள் நாம்.அதை(சாதி சொல்லியதாக...) இணையத்தில் பட்டியலிட்டதென்று புடுங்கிற தீவுக்குப் பதில் விரைவில்.

theevu said...

Sri Rangan
//ஏனெனில், அவனை இன்னும் மலமள்ளவும்,மோச்சடியில் பிணம் காக்கவும் வைத்தவர்கள் நாம்.அதை(சாதி சொல்லியதாக...) இணையத்தில் பட்டியலிட்டதென்று புடுங்கிற தீவுக்குப் பதில் விரைவில்.//

எனது பயோடாற்றாவில் சாதி சொல்லாமலே மலமும் அள்ளியுள்ளதாக
குறிப்பு உண்டு

எனவே அதனையும் உங்கள் கட்டுரையில் கவனத்திலெடுக்க..

-புடுங்காத தீவு -

Anonymous said...

அடப் பாருங்கோ!

சிறிரங்கன் பதிவு போடப் போகின்றாராம். எல்லோரும் வேலைக்கு லீவைப் போட்டு விட்டு தமிழ் மணத்தை செக்கனுக்கு செக்கன் புதுப்பித்துக் கொண்டிருங்கள்.

எங்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று அலையும் எலும்புநக்கிகள், சிறிரங்கனுக்கும், இராயகரனுக்கும் சுறாவே மாட்டிவிட்டதாக நினைப்பு.


தமிழ் சமூகத்தைத் எந்த வகையிலும் பிரிக்க வேண்டும் என்ற சிங்கள அரசின் சிந்தனைக்கு தூபம் போடும் நச்சுக்கள் தான் தலித் மாநாடு தொடர்பாகவும் கூத்தடிக்கின்றார்கள்.

Sri Rangan said...

//எங்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று அலையும் எலும்புநக்கிகள், சிறிரங்கனுக்கும், இராயகரனுக்கும் சுறாவே மாட்டிவிட்டதாக நினைப்பு.//

உங்கட அநுபவம் எலும்பை நக்கியாக்கும் ஆனால், என்னுடைய அநுபவம் தசையை(மெல்லிய சவ்வு,பற்றியிழுக்குங்கால் பற்களில் படுவதும் பின் விலகுவதாகவும்...) நக்கியது பாருங்க:-))ஆக,நாமிருவருக்கும்(இரயாகரன் சுத்த சைவம்...) குழம்பிய குட்டையில்(எவ்வளவுகாலத்துக்குத்தாம் இந்தக் குழம்பிய கு(பனங்)கொ)ட்டைக்குள் தோண்டுவது?வாருங்களேன் பெரிய க(கு)டலிலை கையைப் போட்டுத் துழாவிப் பிடிப்பம்!) மீன் பிடித்தனுபவமில்லையா?தலித்து நடாத்தும் மாநாடு சிங்கள அரசோடிணைந்தது.ஆமா, ஒ(ஓ)த்துக்கிறோம்! ஏனங்க நீங்கள் உலகம் ப+ராகவுஞ் சிங்கள அரசோடு பறந்து திரிந்தால் அஃது தமிழரின் விடிவுக்கானதாங்க?இருக்கும்.வல்லவன் வைத்ததே சட்டம்.நீங்க சொன்னாத் தப்பாது பாருங்க!ஏனென்றால்,படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் இல்லைத்தானே?விடுங்க> இது நம்மட பழைய வேலைகளிலொன்று(பழக்க தோசம்)படுத்து எப்பவும்.வாலிபத்தில ஆடினதில்லையோ முதுமையிலும் நாவுங் காலுங் கடுக்கியபடி துடிக்குதெல்ல!

sathiri said...

அய்யா மண்டை காயிது தமிழிச்சின் தலித் மகாநாடுபற்றிய பதிவிற்கு அதற்கான விளக்கம் கொடுத்தும் பின்னர் நான் அவரது தொலைபேசி இலக்கம் கேட்கவில்லை என்கிற விளக்கத்தையும் சம்பத்த பட்ட இடங்களில் பின்னூட்டடம் இட்டிருந்தேன் ஆனால்அவற்றை அவர் வெளியிடவில்லை அதன் பின்னர் தான் அவரின் மீதான நம்பிக்கையும் அவரின் பெரியாரிச போக்கிலும் நம்பிக்கை இழந்தேன் அது மட்டுமல்ல ஒரு அப்பனிற்கு என்கிற அவரது கருத்தால்தான் அவரும் ஒரு சராசரி ஆணாதிக்க போக்கிற்கு ஆமா போடும் ஒரு பெண் என்ககிற காரணதத்தால்தான் அவரை தம்பி என்றேன்அது அவரிற்கு மிக பெரிய பாலியல் துன்புறுத்தலாகி விட்டது அதன் பின்னரும் இன்னொரு பின்னுட்டத்தில் என்னுடைய தொலைபேசி இலக்கத்தையும் போட்டு உங்களால் முடிந்தால் உங்கள் பிரச்சனையை பேசி தீர்க்கலாமெண்டும் எழுதியயிருந்தேன் காரணம் என்னால் அவரது தெதாலைலபேசி இலக்கம் எடுத்து அவருடன் கதைப்பது என்பது சுலபமானது ஆனால் அதை வைத்தே அவர் பரபபரப்பு உண்டாக்கி தன்னை பெரியாளாக்கி விடுவவார் நினைத்துதான் எனது இலக்கத்தை கொடுத்தேனன் ஆனால் அவர் தொடர்பு கொள்ளவும் இல்லை அந்த பின்னூட்டத்தை இணைக்கவும் இல்லை . அவரிற்கு அவகாசம் கொடுத்து அவற்றை பின்னர் நானே இணைக்கிறேன்

ரவி said...

உங்கள் பதிவில் எப்போதும் இருக்கும் கருத்து நேர்மை, தெளிவான உரைவீச்சும் இந்தப்பதிவிலும் இருக்கிறது...

வரவேற்க்கிறேன்....

தமிழ்நதி said...

"இவ்வகையிலே ஈழத்தமிழரோ எத்தமிழரோ தமிழச்சியினைக் கேவலமாகத் தாக்கிப் பின்னூட்டுவதையும் பதிவிடுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்." நானும் கண்டிக்கிறேன்.

கருத்து, வார்த்தைச் சறுக்கல்கள் எவருக்கும் நிகழ்வதே. கோபத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் தம்மளவில் முழு அர்த்தப்பாடுடையவையல்ல. அந்த வகையிலேதான் 'ஒரு அப்பனுக்கு'மற்றும் 'தட்டுக் கழுவுதல்'சொல்லப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. எழுத்தில் வரும்போது அவர் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். இதைக் காரணம் காட்டி தமிழச்சியைத் தாக்கிப் பின்னூட்டமிடுவது வரவேற்கத்தக்கதல்ல. எவரையும் கருத்துக்களால் வகைப்படுத்தலாமேயன்றி 'ஈழத்தமிழன்' - 'இந்தியத்தமிழன்'என்று வகைப்படுத்தல் நியாயமல்ல. ஆனால் 'துருத்திக் காண்பித்தல்'என்று மற்றவர்கள் சொல்லுமளவிற்கு ஏன் நடந்துகொள்கிறார் என்ற விசனம், அவருடைய தலையங்கங்கள் சிலவற்றைப் பார்க்கும்போது எனக்குள்ளும் எழுந்ததுண்டு.

Anonymous said...

//எனக்கொரு 'ஸ'ந்தேகம்.
"புடுங்கின தீவு" தான் பிறகு மருவி "புங்குடு தீவு" ஆனதோ?//

பெயரிலி,
இப்ப உங்கட முறை, நாளொரு கட்டுரை வெளுத்துக் கட்டுங்கோ...

தமிழச்சி தமிழ்ச்சோலை பற்றி வைச்ச குற்றச்சாட்டுக்கு 'சபேசன்' பதிலளிக்கும் 'தார்மீக' பொறுப்பு இருப்பதாகவே எனக்கும் படுகிறது. தமிழச்சி கிளப்பிய பிரச்சினைதான் அவரின் புதிய இயக்கம் தொடங்குவதற்குரிய முதன்மை ஊக்கியாக இருந்திருக்கிறது என்பது அவரின் கட்டுரை தொடர்பில் எமது புரிதல். எனவே இக்குற்றச்சாட்டுப் பற்றியும் சபேசன் கவனமெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கீரைக்கடைக்கு எதிர்க்கடை என்பதாகத்தான் இந்த இயக்கம் இருக்கும்.

லக்கிலுக் said...

//சபேசனின் ஐரோப்பாவின் மாற்றுப்பெரியாரியக்கம் நோக்கு, எவ்வகையிலும் ஆக்கபூர்வமானது. தலித் பெரியாரியக்கம் என்ற பதாகையின்கீழே புலியெதிர்ப்பினைச் சிலர் செய்கின்றார்கள் என்று அவர் கருதுவதால், மாற்றாக புலிகளுக்கு ஆதரவான பெரியாரியக்கம் என்று அவர் ஒன்றை அமைத்திருப்பது மிகவும் ஒழுங்கான சரியான முறையிலான எதிர்கொள்தல். அதை வரவேற்கலாம். தமிழச்சி போன்றோர்கூட, பெரியார் கொள்கைக்காக ஆங்கே சேர்ந்தியங்கும் வாய்ப்புண்டு. //

அண்ணன் சபேசன் அவர்களின் புதிய இயக்கத்தை வரவேற்கிறேன்.


//இவ்வகையிலே ஈழத்தமிழரோ எத்தமிழரோ தமிழச்சியினைக் கேவலமாகத் தாக்கிப் பின்னூட்டுவதையும் பதிவிடுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

நானும் கண்டிக்கிறேன்.


ஒரு பார்வையாளனாக நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஒன்று தெளிவாகிறது. தமிழச்சியை நன்றாக குழப்புகிறார்கள்! :-))))))

Anonymous said...

தமிழச்சி பதிவிலே போட்ட பின்னூட்டம். அவர் அனுமதிப்பாரோ தெரியவில்லை. இங்கும் பதிகிறேன்.

தமிழச்சி அம்மா மாநாடு காட்சிகளும் கட்சிகளும் ஜோர். போகும் இடமெல்லாம் ப்பொரொபசனலா ஒரு போட்டாகிரப்பரை கூட்டிக்கிட்டே போறீங்களான்னு தெரியல்ல. தமாசுதான் கோச்சுகிடாதீங்க. இப்போ சீரியசா ஒரு கேள்விங்க. முதலில் பிரான்சில் நடப்பது எந்த ஆட்சி என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது அப்படீன்னு சொல்லிருக்கீங்க. பிரைவேட்டு ஆசாமிங்களோட கருவறை உள்ளாற தடுப் திடுப்புன்னு ஆளை பாலை தள்ளிகிட்டு தட்டிக்கிட்டு சொல்றமாதிரியே நொழைச்சீங்கன்னு வெச்சுக்குவோம். அவுங்களும் ஒங்களுக்கு பிரான்சில் நடப்பது எந்த ஆட்சி என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது அப்படீன்னு சொல்லாமலே அள்ளிக் குடுத்துட்டாங்கன்னு வெச்சுக்குவோம். சிக்கலாயிடாதா? ஏற்கனவே பொறுக்கிகள் தொல்லை தாங்காம பொலிஸ் பாதுகாப்பு கேட்டிருக்காங்களோ தெரியல்லே. கோயில் கருவறைல்லாம் பிரெஞ்சு பொலிஸ் கண்காணிப்புல இப்போ இருக்குதோன்னும் தெரியல்லே. ஒங்களுக்கு பிரான்சில் நடப்பது எந்த ஆட்சி என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது அப்படீன்னு ஏதோ பட்டத சொல்லிட்டோம். தப்பா எடுத்துக்காதீங்க.


மாசிலா அய்யா மொரோக்கொ, அல்ஜீரியா. ருவாண்டா, கொங்கோ இங்கல்லாம் பிரெஞ்சுஆர்மியா இவுங்க வெள்ளையரோடூ கைகூப்பி சேவுகம் செய்யலன்னு நம்புறோம். நம்பிக்கைல ஒரு பிடி மண்ணை போட்டுறாதீங்க

-/பெயரிலி. said...

M. Ile de france
தமிழச்சியின் வீட்டுக்குப்பைத்தொட்டியா அல்லது அலுவலகமா என் பதிவு? அங்கே போட்டதற்கு இங்கே ஒரு கார்பன் கொப்பி போடுகிறீர்கள்? அவருடனான உங்கள் Tour de France ஓட்டத்துக்கு நானா மத்தியஸ்தம்? பிறகு ஸ்ரரொயிட் அப்படி இப்படி பிக்கல் பிடுங்கல் ஆச்சுதெண்டால் நானென்னோ கோடேற வேணும்? என்ரை பதிவு வேற பிரெஞ்சுப்பொலிஸ் கண்காணிப்பிலை ஏற்கனவே இருக்கோ தெரியேல்லை :-( விட்டுப்போடும் ராசா. எனக்குப் பெண்கள் சந்திச்சதும் வேணாம் சந்திக்காததும் வேணாம். பெஞ்சாதிபிள்ளைக்காரன். வேறையாராச்சும் பிள்ளையில்லாக்குட்டிக்காரன் பதிவைத் தபால் பெட்டீயாப் பாவிக்க ஏலாதோ? முயற்சி செய்து பாருமென்ன?

கொழுவி said...

//வேறையாராச்சும் பிள்ளையில்லாக்குட்டிக்காரன் பதிவைத் தபால் பெட்டீயாப் பாவிக்க ஏலாதோ?//

Sorry I have closed the door

Anonymous said...

//கொழுவி said...
//வேறையாராச்சும் பிள்ளையில்லாக்குட்டிக்காரன் பதிவைத் தபால் பெட்டீயாப் பாவிக்க ஏலாதோ?//

Sorry I have closed the door//

கொழுவியின் இந்தச் செயல், பாசிசமா அல்லது தமிழச்சி பாசமா?

Anonymous said...

அட! நியாயமாத்தான் இருந்திருக்கிங்க... திடீரென வெறுப்பாக காரணம் என்ன?

-/பெயரிலி. said...

ஏன் பாரிசு, உங்களின் இந்தக்கேள்வி நியாயமா?