Tuesday, June 07, 2005

கணம்-470


'05 யூன் 03, வெள். 10:34 கிநிநே.

இந்தச்சட்டைதான் என்றல்ல, எந்தச்சட்டையுமே நான் கேட்டிருக்கமுடியா "வயது,
ஐந்திலேதான் வாங்கித் தந்தேன்" என்றதைச் சொன்ன அப்பப்பா செத்துப்போனார்;
செத்துப்போனார் வாழ்ந்தபோது சிறுபொய் சொன்னதில்லை.

"உனக்குப் பிடித்த சட்டை" என அவர் சொல்லித் தெரியும். ஆனால்,
எனக்குப் பொருந்திய சட்டையா எனச் சொல்லமுன், பொக்கைவாய்ச்
சிரிப்புங் கழறாமற் செத்துப்போனார். பொருந்தித்தான் இருக்கவேணும்;
பொருந்திக்கொண்டிருந்ததாற்றான் பிடித்திருக்கவேண்டும் புள்ளிச்சட்டை;
செத்துப்போனார் வாழ்க்கையிலே சொன்னதில்லை சிறுபொய்.

தூசுப்பழசாய்ப் போனது காலம்; பூச்சட்டை இனி, பொருந்தா தெனக்கென்று,
புதுச்சட்டை விரும்பி எடுத்துப் போட்டாலும், அப்பப்பா சட்டை அதே சிறப்பு.
பக்கத்துவீட்டுப் பாலனுக்குப் பைப்பரிசு, "என் அப்பப்பா பேர் சொல்லிப் போடு;
உனக்குப் பிடிக்கும் இச்சட்டை"; பொருந்தாதென்றான்; எம்குடிப் பெருந்தன்மை
புரிய பொய்க் கைத்துப்பாக்கியும் போர்விமானப்பொம்மையும் கொடுத்தேன்.

"எனக்குப் பிடித்த சட்டை" என்றான் சுழன்று பறந்து மனை சுட்டுக்கொண்டே.

செத்துப்போனவர்போல சிறுபிள்ளைகளும் சொல்வதில்லையாம் சிறுபொய்
'05 ஜூன், 07 செவ். 12:56 கிநிநே.

2 comments:

SnackDragon said...

சட்டையை கொடுத்தீரே?
அசட்டை செய்யாமுடியாத
நினைவைக் கொடுத்தீரா?
தைத்துக்கொண்டு விட்டது சட்டை
தலைக்குள்ளே
அதே வண்ணம்
அதே பொருத்தம்.
பொய்யாப் பிள்ளை
அந்தச் சட்டை கொடுவென்றால்
எப்படித் தருவீர் ஈந்து?

-/பெயரிலி. said...

ஐயோ/யா தெரியாதையா நீர் இப்படியெல்லாம் கேப்பீரென்று!