Wednesday, June 22, 2005

பின்னம் - 6

டயப்பர் லிங்க் - 348
Diaper Diaboloque - 348

வருடம் 2005. என்னுடன் ப்யூர் ஹம்பக் என்பவர் மளிகைக்கடைக்கு வருவார். அவருடன் ஒருநாள் குஜராத்தி குரோஸரிஸ் கடையில் பேசிக்கொன்றிருந்தேன்.

தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவரென்றும் தன் மனைவியும் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவரென்றும் கூறினார். உடனே என் வயிற்றுக்குள் வழக்கமான அஸிட் அரித்தது போன்ற உணர்ச்சி.

நான் (=தமிழ் நாய்): "நீங்கள் 2000-ல் குழந்தைப்பேறுக்காக குறை எட்டு மாதத்திலேயே அல்டிமேட் அல்ப்ஸிலேதானே குழந்தைப் பெற்றீர்கள்?"

ஹம்பக்: "ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"

நாய்: "அதன் பிறகு குழந்தை ஐசியூவிலே இருந்தது அல்லவா?"

ஹம்பக்: "ஆமாம், ஆனால் ஏன் இது உங்களுக்கு...?"

நாய்: "அதே போல நர்ஸரியிலும் இருந்தது அல்லவா?"

ஹம்பர்க்: "முதலில் உங்களுக்கு ஏன் தெரியவேண்டும் என்று கூறுங்கள்"

நாய்: "பிறகு சொல்கிறேன். உங்கள் குழவி பிழைக்குமா என்று மெகா ப்ராட்டிடம் கேட்ட போது, அவர் உங்களிடம் "விழகு திருப்பிப் போட்டால் குழவி என்று வருகிறது. முயற்சி செய்" என்று கூவினார் அல்லவா?"

ஹம்பக் (பொறுமை இழந்து) : "இதற்கு மேல் உங்களுடன் பேச வேண்டுமானால் இதெல்லாம் உங்களுக்கு ஏன் தெரிய வேண்டும் என்பதைக் கூற வேண்டும்!"

நாய்: இதைப் பற்றியெல்லாம் நீங்கள் 2004-ல் பபில் டோக்கில் எழுதியிருந்தீர்கள். அதை ரிட்டயர் ஆகி வேறே வேலையிலாமல் வீட்டிலே ஈஸி சேர்ல உக்காத்திருக்குற நான் படித்தேன்."

ஹம்பக்: "அதைப் பற்றி நானே மறந்து விட்டேன். நீங்கள் எதற்கு வேறு வேலையில்லாமல் நினைவில் வைத்து என்னையும் அறுக்கிறீர்கள்?"

நாய்: "அந்தக் கட்டுரையில் மேலே கூறியதையெல்லாம் எழுதிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு வீட்டுக்கருகாமையில் கிண்டர்கார்டினில் போதுமான காலியிடம் இல்லாததால் தொலைவிலே சைல்ட் கேர் இலே சேர்த்துக் கொள்ளவேண்டியிருந்தது என்றும் கூறினீர்கள். உங்கள் குழந்தையின் கிண்டர்கார்டினில் இருந்த இன்னொரு குழந்தையின் அம்மாவை இருவரும் விவாகரத்துப் பெற்றபின் மணம் புரிந்ததாகவும் கூறினீர்கள். இப்போது பேசுகையில் நீங்கள் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவர் என்றும் உங்கள் மனைவியும் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவர் என்றும் கூறினீர்கள். காக்கா இருக்க, பனம்பழம் விழுவதுண்டல்லவா? உடனே நான் படித்த உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்து ஆள் அகப்பட்டால் அறுக்காமல் விடாதே என்றது. ஆகவே கெட்டேன்."

காலன் வரிசைப்படிப் பார்த்தால் இது என் நினைவிலிருக்கும் முன்னூத்தி நாப்பத்தெட்டாவது டயப்பர் லிங்க் ஆகும். டயப்பர் லிங்குக்கான சொற்கல் இங்கு: "நான் ப்யூர் ஹம்பக், என் மனைவி ந்யூ பபில்"

மேலும் பிராண்டுவேன்.

(என்றென்றும்) வம்புடன்
தமிழ்நாய்.
6 comments:

KARTHIKRAMAS said...

/ "நான் ப்யூர் ஹம்பக், என் மனைவி ந்யூ பபில்"/
நான் சொல்லவேண்டும் என்று வந்தேன் , அதற்குள் திருத்திவிட்டீர்.
ப்யூர் ஹம்பக். :-) 347 - ம் எங்கே?

Thangamani said...

:))))))

dondu(#4800161) said...

என்னுடையப் பதிவுக்கு (பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/2.html#comments) நீங்கள் இட்ட இப்பதிவு மிக அருமை. நன்கு சிரித்தேன்.

ஆனால் ஒன்றை மட்டும் கூறிவிடுகிறேன். என்னுடைய ஹைப்பெர்லிங்குகள் எல்லாமே உண்மையாக நடந்தவை. என் அடுத்த லிங்கிற்கு ஒரு சக வலைப்பதிவரே சாட்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

-/பெயரிலி. said...

நன்றி டோண்டு ஐயா அவர்களே,
விசுவாமித்திரர் வாயாலேயே இராசரிசி பட்டம் கிடைத்ததுபோல ;-)

ஆனால், சத்தியமாக, இந்த ஹைபர்லிங்க் என்ற சொல்லின் அடிப்படையே எனக்குப் புரியவில்லை. ஏன் ஹைப்பர் லிங்க ஹைப்பர்லிங்க் என்ற ஹைப் கொடுக்கிறீர்கள்?

எனக்குக்கூட பூர்ணிமா ஜெயராம் சிறுமியாக பம்பாயிலே நடன அரங்கேற்றம் நடத்திய செய்தியைப் மிகப்பழைய கல்கியிலே வாசித்திருந்தேன். பூர்ணிமா பிரபல நடிகையான பிறகு அது தெரிந்தது. அவரது நடன அரங்கேற்றம்--> பாக்கியராஜ் திருமணம் ஹைப்பர்லிங்க் என்று எழுதினால், அதிலே என்ன அர்த்தமும் தேவையும் இருக்கிறது என்று தெரியவில்லை. விளக்கினால், பற்றிக்கொள்வேன்

மு. சுந்தரமூர்த்தி said...

//இராசரிசி//
இது என்ன புது அரிசி? இதுவும் குஜராத் க்ரோஸரீஸ் கடையில் கிடைக்குமா? 20 பவுண்ட் மூட்டை எவ்ளோ?

dondu(#4800161) said...

"விசுவாமித்திரர் வாயாலேயே இராசரிசி பட்டம் கிடைத்ததுபோல"
வசிஷ்டர் வாயால் ஐயா, விசுவாமித்திரர் இல்லை. அதுவும் பிரும்மரிஷி, ராஜ ரிஷி இல்லை. மற்றப்படி உங்கள் கூற்றில் தவறில்லை!

சரி, ஹைப்பெர் லிங்கில்தானா பிரச்சினை? விளக்கினால் போயிற்று.

பத்மா சந்திரசேகரன் விஷயத்தையே எடுத்து கொள்வோம். அவர் தன்னைப் பற்றிப் பேசும்போது குறிப்பிட்ட வாக்கியங்களில் ஒன்றுதான் "நான் ஐ.ஏ.& ஏ.எஸ், என் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ்". இது சாதாரண வாக்கியம்தானே. ஆனால் அதுவரை நினைத்தும் பார்க்காத, 1961-ல் பத்மா அவர்கள் எழுதிய அந்தக் குமுதம் கட்டுரை உடனே (அந்த நொடியே) ஏன் ஞாபகத்துக்கு வர வேண்டும்? இம்மாதிரித் தருணங்களில் எனக்கே பிரமிப்பாக இருக்கும். அவரிடம் அவர் வாழ்க்கையை பற்றி நான் கேள்விகள் இட்ட போது என்னில் ஒரு பகுதி மூன்றாம் மனிதனாக நின்று கொண்டு கவனித்து கொண்டிருந்தது போலத் தோன்றியது. கேள்வி கேட்டது நான், ஆனால் அது வேறு யார் குரலாகவோ என் காதுக்கு கேட்டது. அத்தருணத்தில் என் ஆழ் மனது என் கட்டுப்பாட்டில் இல்லை என்றே எனக்கு தோன்றியது.
நம் கோப்புகளில் வரும் ஹைப்பர் லிங்குகளும் எலிக்குட்டியை க்ளிக்கியதும் வேறு பக்கத்துக்குத் தாவுவதில்லையா? அதே போலத்தானே இப்போதும் நடந்தது? ஆடு துறை ரகு நிகழ்ச்சியும் அதே போலத்தான். நான் அடுத்ததாகக் கூறப்போகும் ஹைப்பர் லிங்குக்கு சக வலைபதிவர் ஒருவரே சாட்சி. சில மாதங்கள் முன்புதான் நடந்தது.
இம்மாதிரி ட்ரிக்கெர் செய்யும் வாக்கியங்களை நான் ஹைப்பெர் லிங்க் என்று அழைக்கிறேன். நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? மேலும் உதாரணங்களைப் பார்க்கத்தானே போகிறீர்கள், அப்போது பார்க்கலாம். ஆனால் ஒன்று பூர்ணிமா ஜெயராம் விவகாரம் இங்கு பொருந்தாது.

ஆனால் இங்கு வேறு மாதிரியான ஹைப்பெர் லிங்குகளைப் பார்க்கிறேன். ஆடுதுறை ரகு விவகாரத்தில் ஒருவர் ஷட்டகர் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நான் ஐயங்கார் என்பது நினைவுக்கு வந்து விட்டது (ஆனால் மறந்தால்தானே நினைவுக்கு வரும்? யாருமே மறக்கவில்லை என்று நினைக்கிறேன்). உடனே என் அறிவைப் பற்றியெல்லாம் கருத்து கூற ஆரம்பித்தார். அவருக்கு முதலில் கோபமாக பதிலளித்த நான், பிறகு பொறுமையாக விளக்க, அவரும் ஏற்று கொண்டு சமாதானம் வந்தது). பத்மா அவர்கள் விஷயத்தில் பத்மா 100% பிராம்மணர் என்பது இன்னொருவர் துணிபு. வலைப்பூவில் எல்லோரும் இவ்வாறு ஜாதி ஃபிக்ஸேஷனுடன் அலைகிறார்களே என்பது வேடிக்கையாக இருக்கிறது.

"//இராசரிசி// இது என்ன புது அரிசி? இதுவும் குஜராத் க்ரோஸரீஸ் கடையில் கிடைக்குமா? 20 பவுண்ட் மூட்டை எவ்ளோ?"
இது ஆடுதுறை 88 மற்றும் பொன்னி 101 நெல்லை க்ராஸ் செய்து விளைவிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் மரைக்காயர் ஸ்டோர்ஸில் 50 கிலோ மூட்டைக்கு 1000 ரூபாய் விலையில் கிடைக்கும். டோண்டு ராகவன் உங்களை அனுப்பினார் என்றால் ஒரு மூட்டை வாங்கினால் கடை முதலாளியே மூட்டையைத் தன் தலையில் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் போடுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)