Wednesday, June 29, 2005

கணம் - 472


'05 யூன் 27, திங். 11:05 கிநிநே.

கடந்த பாதையில் கழுத்தெறிந்து தழை
அறுந்த மரம் போல் விரிந்து கிடந்தாள்.

நாள்,
ஒன்றில் ஆட்டும் காற்று
இரண்டில் தோல் சுருக்கும்
மூன்றில் மணக்கும் மூக்கு
மிதித்தும் உதைத்தும்
சிதைந்தழியும் சிறகு.

சிதை உச்சி வெயில்.

உறைந்து
ஒடுங்கும் விரல்கட்குள்
நன்னும் எறும்பு கிள்ளக்
கொஞ்ச இரை.

சின்னக் குருவி சில
தின்னும் திசை தேடி
இன்னும் காத்திருக்குமோ?

அடி
விரைந்து
நடப்பேன்
வீட்டுக்கு.
'06 ஜூன், 29 புத. 12:53 கிநிநே.

4 comments:

SnackDragon said...

//சின்னக் குருவி சில
இன்னும் காத்திருக்குமோ
தின்னும் திசை தேடி?
// touching.

aazhiyaal said...

"உறைந்து
ஒடுங்கும் விரல்கட்குள்
நன்னும் எறும்பு கிள்ளக்
கொஞ்ச இரை" வரிகள் பிடித்துள்ளன. உங்கள் கண்ணில் பட்டது மாதிரி எத்தனை பேரின் கண்ணில் பட்டு படமும், கவிதையும், கதையுமாகி பலதாய் உயிர்த்திருப்பாள் (gender நீங்க போட்டதுதான்)

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி. (ஆஹா! என்ன பவ்வியம் என் குரலிலே! அடடா!!)
ஆனால், நேற்றைக்கும் அதன் உடலம் அதே இடத்திலே கிடக்கின்றது :-(
ஒரு வீட்டுக்கு முன்னாலே கிடப்பதினைத் தூக்கி எடுக்கக் குனிவதும் எடுப்பதும் மிகவும் சிக்கலான நிலையுள்ள காலம்

arulselvan said...

நன்று ரமணி.