Wednesday, June 15, 2005

தெறிப்பு - 22


Frederick Douglass - Mural/Wall Art, Boston


'06 ஜூன், 15 புத. 12:30 கிநிநே.
பிரெட்ரிக்கு இடக்லாஸ் சுவரோவியம், பொஸ்ரன் நகர்


12 comments:

கறுப்பி said...

சுவர்களில் எவ்வளவு கச்சிதமாகவும் பிரமாண்டமாகவும் வரைகின்றார்கள். உண்மையிலேயே திறமைசாலிகள் தான்

டிசே தமிழன் said...

இன்றைய படம் அவ்வளவு குளிர்ச்சியாக இல்லை :-(. ஏன் இன்றைக்கு போஸ்ரனில் வெயில் 'அடிக்கவில்லையா' :-) ?
கறுப்பி, சுவரிருந்தால்தான் சித்தரம் வரையமுடியும் என்று சும்மாவா சொன்னார்கள்? அதுசரி, நீங்கள் பாட்டுபாடி அந்த சுவர் மனிதனுக்கு உயிர் கொடுங்கோவன். பாவம் அவர், ஏவ்வளவு காலத்துக்குத்தான் சுவரோடு கிடப்பார்?

KARTHIKRAMAS said...

ஓவியத்தை விடவும் , அந்தச்சேதி அருமை.

கறுப்பி பாடிதான் டக்ளஸ் இந்தக் கதிக்கு ஆளானார் என்று காற்று வாக்கில் கேட்டேனே?

-/பெயரிலி. said...

/சுவர்களில் எவ்வளவு கச்சிதமாகவும் பிரமாண்டமாகவும் வரைகின்றார்கள். உண்மையிலேயே திறமைசாலிகள் தான்/

கறுப்பி,
இதை நீங்கள் இருபத்தேழு வருசத்துக்கு முன்னாலை என்ரை மரவேலை மாஸ்ரரிட்டைச் சொல்லியிருக்கவேணும். நானும் இன்னொரு பொடியனும் உதைவிடபெரிசாய், வடிவா, தெளிவா, கரியால பள்ளிக்கூடச்சுவரில, காளிகோயில் பூங்காவனத்தண்டைக்கு இரவு அவற்றை மூஞ்சியையும் இன்னொரு ஆளின்ரை (பால் சொல்ல மாட்டன்) மூஞ்சியையுங் கீறி என்ன தொடர்பு எண்டு எழுதினதுக்கு உளியாலயும் சுத்தியலாலயும் வாங்கிக்கட்டினனாங்கள். நீங்கள் என்னவெண்டால், இப்ப வந்து ஆரோ கீறினதுக்கு அப்பளாசுறீங்கள். உது சரியோ முறையோ தர்மந்தானோ?

டிஜே தம்பி, புனலும் தணலும் காண்பவன் கண்ணையும் Ray Ban கண்ணாடியையும் பொறுத்தது காண். (காண ஏலாட்டித் தடவப்பு)

டிசே தமிழன் said...

//கறுப்பி பாடிதான் டக்ளஸ் இந்தக் கதிக்கு ஆளானார் என்று காற்று வாக்கில் கேட்டேனே?//
ஓ....அதுவா வரலாற்று உண்மை :-).

-/பெயரிலி. said...

/கறுப்பி பாடிதான்../
அய்யோ அய்யோ! கறுப்பி, நீங்கள் தற்கொலை செய்வியள் செய்வியளெண்டு பாத்துப் பாத்துக் களைச்சுப்போய், கதிர்காமாஸ் உசிரோட இருக்கேக்கையே கறுப்பி பாடிதான் எண்டு உயிரை விட்டுட்டுச் சொல்லுறார். பாவிபீடியே இது சரியா? ;-)

அருள் செல்வன் கந்தசுவாமி said...

நல்ல படம். எந்த ஆண்டில் போட்டது இது?

-/பெயரிலி. said...

அருள் தெரியவில்லை; ஆனால், இந்த வாக்கியங்கள் பொஸ்ரனில் 1860 இல் இடக்லாஸ் வெளியிட்ட பேச்சுச்சுதந்திரத்துக்கான விண்ணப்பத்திலே இருப்பது

கறுப்பி said...

கொஞ்சம் சீரியஸா ஓவியத்தை ரசிச்ச மாதிரிக் காட்டி கொமெண்ட் போடவும் விடமாட்டீங்கள் போல.. அடுத்த கிழமை நான் பாடிய "இஞ்சி இடுப்பழகா" வலைப்பதிவிற்கு வரும். ரசிக்கிறாக்கள் ரசியுங்கோ சிரிக்கிறாக்கள் சிரியுங்கோ எனக்கென்ன வந்தது.

பெயரிலி ஊரில சுவரில எழுதிற நல்ல ஊத்தை வேலையெல்லாம் பாத்திருக்கிறீங்கள் என்ன. எங்கட ஊர் கோயில்ல எழுதினதும் நீங்களோ?

-/பெயரிலி. said...

இல்லை; ஆனால், மெய்யாகச் சொன்னால், இப்படியான வீதிவரைவுகளையும் தீந்தைக்கிறுக்கல்களையும் படம் பிடித்து ஒரு பதிவு வைக்கும் எண்ணத்திலேதான் "தெறிப்பு" இனைத் தொடங்கினேன். இவை வரலாற்றினையும் கருத்தினையும் சமூகச்சிக்கல்களையும் சிறப்பாக வெளிப்படுத்துவன. ஆனால், நாடிருக்கும் நிலையிலே படம் பிடிப்பதென்பது, ஆளைக் கம்பியெண்ண வைக்கும் வேலையென்பதாகத் தெரிவதாலே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கின்றது.

கறுப்பி said...

ரொறொண்டோவிலும் நல்ல பல சுவர் ஓவியங்கள் இருக்கின்றன. கடந்து போகும் போது சிறிது நேரம் நின்று பார்ப்பதுண்டு. சில நேரங்களில் வியப்பாக இருக்கும். சட்டத்திற்குப் புறம்பான ஒரு விடையத்தை இரவு நேரங்களில் அனேகமாக ஸ்பிரே பெயிட்டை உபயோகித்து எப்படி இப்படிக் கச்சிதமாக வரைகின்றார்கள் என்று. வருமானம் கூட இதனால் அவர்களுக்கு இல்லை. பல செய்திகளை அந்த ஓவியங்கள் தாங்கி நிற்பதுண்டு.

Thangamani said...

நல்ல படம் ரமணீ! நன்றிகள்!