Thursday, February 10, 2005

குவியம்

ஆண்டவருக்குத் தோத்திரம்

கொஞ்சநாட்களாகவே பெயரிலிக்குக் பெரிய பிரச்சனையொன்று சித்தருக்குச் சிந்தை ஓட்டுக்குள்ளே தேரை பூந்திருந்து முறுக்கியதுபோல சித்திரவதை செய்துகொண்டிருந்தது. ஆயிரத்தெட்டுப் பதிவுகளைத் தொடங்கி வைத்துக்கொண்டிருந்தாலும், இன்னும் முகமூடி அடாவடித்தனம் பண்ணுவதற்கு அட்டகாசமான புதுப்பெயர்கள் அகப்படாதுபோனதுதான். இராப்பூரா நித்திரையில்லை; "அன்னந்தண்ணி"யில்லை; காலையிலே எழும்பிப்பார்த்தால், எங்கும் நிறைந்த கடவுள் இணையத்திலேயும் புகுந்து அநாமதேய அவாதாரத்திலே "பித்தா பிடித்துக்கொள்ளடா" என்று எடுத்துத்தந்திருக்கிறார். கடவுளென்றால், அப்படித்தான் நாலுந்தான் சாடைமாடையாய்ச் சொல்லுவார்; அதிலே நல்லது கெட்டதை சாமான்யர் நாங்கள்தான் தமிழ்ப்பதிவுகள் மாதிரிப் பிரிச்சுப்பார்த்து எடுக்கவேண்டும். அது கடவுள் ஆளின் அறிவைத் தடுத்தாட்கொள்ளத் தருகிற சோதனை என்றுதான் கொள்ளவேண்டும். அப்படியாக, நாலு அடாவடிநாமங்களை இந்த இரண்யகசிபுவுக்கு இராவணனடிப்பொடிக்கென்று ஒதுக்கியிருப்பதாகச் சொன்னார்; அரைகுறை, தோழன், எடுபிடி, பொடிச்சி. அதிலே கடவுளின் சோதனையைக் கண்டுபிடிக்க அந்தளவு கடினமாய் இருக்கவில்லை. பொடிச்சியும் தோழனும் ஏற்கனவே இருக்கிறார்கள். கடவுள் வழக்கம்போல, காட்சிப்பிறழ்வு பண்ணி பொடிச்சியும் தோழனும் பெயரிலியேதான் என்ற தங்க வெள்ளி மாயைகளை எடுத்து விசுக்கிப்பார்த்தார். பெயரிலிக்கு மாமதயானை மலையை மறைக்காததாலே, "இந்த இரண்டும் என் கோடாலிகள் இல்லையே சுவாமி" என்று சொல்லி, எடுபிடியையும் அறைகுறையையும் அப்படியே அள்ளிக்கட்டி, சைபர்ச்குவாட்டியிட்டேன். குந்தென்றால், அப்பிடியொரு குந்து. பின்னாலே யாருக்கும் ஊன்றிக் குத்துறதுக்கென்ற குந்து. எடுபிடி இங்கே; அரைகுறை அங்கே. சாமி இந்தா பிடி என்று வரம் தரும்போது, வேண்டாமென்கிறது சரியில்லை; பிரயோசனப்படுமென்கிறதாலே எடுத்துக்கொண்டேன். யாராவது குத்துச்சண்டைப்பயில்வான் பயிலமுயல்வாளுக்கு வேண்டினால், அவர் தந்த அப்பத்தைப் பங்கிட்டுத்தருகிறேன். அதேநேரத்திலே, பொடிச்சி, தோழன் செயற்பாடுகளை அவற்றின் பெறுதிகண்டு ஆரத்தழுவ உளமும் கரமும் துடித்தாலுங்கூட, அன்னாரின் சொத்துக்கும் சொத்தைக்கும் அன்னாரே பாக்யதைப்பட்டிருக்கின்றார் என்ற ஆண்டவரின் தேவ உச்சரிப்பை எண்ணி விட்டுவிடுகின்றேன். முன்னரும் பெயரிலி இப்படியாகத்தான் தனக்குப் பாக்யதை இல்லாதவற்றை உரித்தானவர்க்கே உடைத்து என்று உடையாமலே கொடுத்த சாமான்யன் என்பதையும் இதனூடாக ஆண்டவனுக்கு உணர்த்தி தேவக்ருபையைப் பெற்றுக்கொள்ள விழைவுண்டு. ஆண்டவருக்கு அநேக தோத்திரம்! அநாமதேய அவதாரத்திலே வந்து சாமான்ய தரித்திர அமானுச்யபுழு என்னைக் கடைத்தேறி இரண்டு இல்லளித்துச் சென்றதற்குத் தேவனுக்குப் பெருந்தோத்திரம்.

இதெல்லாம் ஒரு பதிவென்று மற்றவர்கள் நேரம் செலுத்தக்கூடாதென்று நானே ஒரு எருமைமுட்டு முட்டப்போகிறேன்.

19 comments:

வசந்தன்(Vasanthan) said...

உங்கள் கலகம் நன்றாக உள்ளது. கடவுள்கள் உங்களுக்கு இன்னும் நிறையப் பெயர்கள் கொடுப்பார்கள். “பொழப்பு கெட்டுப்போயிடும் எண்டு பயப்படுகிறானுகள்” என்று ஒரு கடவுள் அந்தப் பதிவில் சொல்லியுள்ளார். யாருடைய பிழைப்புக் கெட்டுப்போயிடும் என்று யார் பயப்படுவது. அவர்கள் வீசும் சாமரங்கள் எதற்காகவாம்? கண்ணன் ஒரு முறை “அவர்களின் டாலர்கள் பின்னே ஓடவேண்டியுள்ளது” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
இன்னொரு கடவுள் நற்கீரன் என்று ஒரு பெயர் தந்துள்ளாரே, மறந்து விட்டீர்களா? அப்பெயரில் ஏற்கெனவே ஒருவர் இருக்கிறார் போலுள்ளது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

:)

இளங்கோ-டிசே said...

பெயரிலி, பெரு மழையொன்று அடித்து கொட்டிவிட்டு சற்று ஓய்ந்துவிட்டது போலக்கிடக்கு.
அதுசரி, அந்த கீழே எழுதியிருக்கிற, அருமை, எருமைற்கு copy-rights உண்டா? இல்லை நானும் ஒருக்கா எடுத்து பாவிக்காலம் என்டு ஒரு ஆசையில கேட்கிறன்.

-/பெயரிலி. said...

வசந்தன் அப்படியாக நற்கீரனையும் கண்டுபிடித்திருக்கின்றார்களா? ஆண்டவர்கள் சொன்னால், அ·தெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும். ;-)

மதி, சிரிக்கின்றதைப் பார்த்தால், நீங்கள்தான் ஒரு பொடிச்சிபோலக் கிடக்கிறது. உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டீர்களென்றால், பெயரில்லாதவர்கள் பிழைத்துக்கொள்ளுவார்களே! :-)

டிஜே, அருமையான உட்கணிக்கோட் காசியினுடையது; எருமையான வெளித்தமிழ்க்கோட்தான் என்னுடையது. அருமைகோட்டை அவரைக் கேட்டு அறுக்காமலே தூக்கத்தான் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.; எருமைக்கோட்டை என்னைக் கேட்காமலே தூக்குங்கள். தமிழின் அருமை-எருமைக்கெல்லாம் பதிப்புரிமை நான் கொள்வது, கேஸருக்கு SUN காப்புரிமை வைத்திருந்ததுபோலத்தான். ஆளைவிடும்.

ROSAVASANTH said...

'அருமை'க்கு எதிர்மையாக 'எருமையை' சொல்வதை நான் எருமைகளின் சார்பாய் எதிர்பு தெரிவிக்கிறேன்.

உங்களுக்கு ஒரு பதில் உயிர்மையில் இட்டிருக்கிறேன்.

ROSAVASANTH said...

'அருமை'க்கு எதிர்மையாக 'எருமையை' சொல்வதை நான் எருமைகளின் சார்பாய் எதிர்பு தெரிவிக்கிறேன்.

உங்களுக்கு ஒரு பதில் உயிர்மையில் இட்டிருக்கிறேன்.

-/பெயரிலி. said...

வசந்த், உங்கள் உயிர்மைப்பின்னூட்டத்தைப் பார்த்தேன். எங்கே பதிலைப் போடுவதென்ற குழப்பமாயிருந்தௌ. இங்கே குறித்தீர்களா? இங்கையே போட்டுவிடுகிறேன்.

நான் உங்கள் பெயரைக் குறித்தது, சுதர்ஸனுக்கு நீங்கள், "ஒருவருக்கு இன்னொருவரைத் தன் நெறிக்கோப்பின்படி பார்த்துச் சரிபிழை சொல்வது முறையல்ல" என்ற பொருட்படச் சொன்னது பாலாவிற்குச் சுட்ட உதவியதாலே சொன்னேன். மீதிப்படி உங்களை இழுக்கும் நோக்கல்ல.

ஜால்ரா, டிஜே, எம்டி இதெல்லாம் பொதுமைப்படுத்திச் சொல்கின்றவர்களை நீங்களோ நானோ என்ன செய்யலாம்? சொல்லலாம்? திண்ணை, பதிவுக்களங்களைப் பாருங்களென்றுமட்டுமே சொல்லலாம்.

ஆத்மாநாம் வருவதையிட்டு மகிழ்ச்சி; தூக்கமற்ற இரவுகள் இன்னொருவருக்கு ஏற்படப்போவதுகுறித்தும். ஹி ஹி!! :-)

ரூமி ஆப்தீன் பின்னூட்டத்துக்குப் பின்னால், பின்னூட்டத்தையே கழற்றிவிட்டாரா? அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா? உங்கள்மீது ஆப்தீனின் கோபத்தினைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால், (நான் இணையத்திலே-ராகாகியிலே வாசித்துப்புரிந்துகொண்டவரையில், ரூமியிடம் இருக்கும் ஒருவிதமான மத அடிப்படைவாதம் அவரிடமில்லை என்ற உணர்வினாலே) ஒரு விதமான மரியாதை அவரிடம் இருந்தது.)

suratha yarlvanan said...

பெயரிலியின் புதினம்பார்க்க என்று எப்ப வந்தாலும் ஒரு படம் போட்டு பேக்காட்டிவிடுவீர்கள்.:) அதன் பிறகு
வருவதேயில்லை:)

மீண்டும் அந்த விடுபட்டுபோன
ஒரு 25 வருடத்திற்கு முந்தைய தமிழை
தரிசிக்க வருவேன்.

ஆமென்

Thangamani said...

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நடத்துங்க!

ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணாச்சி மீண்டும் வழமைக்குத் திரும்பியாச்சுப் போல கிடக்கு.அந்த நாவலர் கதை பற்றி நானும் சொல்வதற்காக பதிவுகளைக் கிண்டிக்கொண்டிருக்கிறேன் ஏதாவது அகப்பட்டால் இன்றிரவு பார்க்கலாம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பெயரிலி,

இந்த லொள்ளுதானே வேணாமெண்டுறது. ஏதோ நான் எண்ட பாட்டில கிறுக்கியண்டு கிடக்கிறது பிடிக்கேல்லையோ. நானும் ஒரு பெட்டிச்சிதான். :D

ஆனா அந்தளவு பெரிய 'பொடிச்சி' எல்லாம் இல்லையெண்டு சொல்லத்தான் வேணுமே!

பிறகேன் கொடுப்புக்குள்ள சிரிப்பெண்டு நீங்க கேக்குறதுக்குள்ள முந்திர்ரன். பெயரிலி ஒரு ·போர்முக்கு வந்திட்டேர். நமக்கு அந்த துள்ளியோடி வருகிற தமிழைத் துள்ளித்துள்ளியண்டு வாசிக்க விஷயம் கிடைக்கும் எண்ட குதூகலந்தான்!

சரி, சரி இப்பிடிச் சொன்னோட நிப்பாட்டிராம தொடர்ந்து எழுதுங்க.

வசந்தன்(Vasanthan) said...

பெயரிலி! உங்களுக்கு ஊஸ் ஏத்தி விடுகினம். கவனமாயிருக்கோணும். அவயளுக்கென்ன, உங்கட தமிழ் படிக்கிறதெண்ட சாக்கில சண்டய ரசிக்கத்தான் நிக்கினம். அந்தப் புத்தி போகாதெல்லே. (எனக்கும்தான்). அதென்ன வழமைக்குத் திரும்பீற்றாரெண்ட கத. அப்பிடியென்ன வழமைக்கு மாறா குழப்படி விட்டனியள்?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வசந்தன்,

கொஞ்சக் காலமா இங்க படங்காட்டுறதத் தவிர வேறென்ன செஞ்சவரெண்டு சொல்லுங்க பாப்பம். அதான், ஏதோ எழுதத் தொடங்கிற்றேரெண்டு ஒரு அல்ப சந்தோ்ஷம்.

மற்றும்படி பிறத்தியார் சண்டையைப் பிராக்குப் பாக்கிறது மாதிரி வேறொண்டுமில்லையெண்டதும் உண்மைதான்.

சரி சரி, நாம இப்பிடியே கதைச்சண்டிருந்தா எப்படி, எல்லாருமாச்சேந்து அடுத்த கதை எப்பயெண்டு கேளுங்கப்பா. கண்ணில் தெரியுது வானம் கிழிஞ்சுபோறமாதிரி வந்திற்றுது.

ROSAVASANTH said...

//ஆத்மாநாம் வருவதையிட்டு மகிழ்ச்சி; தூக்கமற்ற இரவுகள் இன்னொருவருக்கு ஏற்படப்போவதுகுறித்தும். ஹி ஹி!! :-)//

அதற்குத்தானே தூங்காமல் இத்தனை நாள் காத்திருக்கிறேன்.

//ரூமி ஆப்தீன் பின்னூட்டத்துக்குப் பின்னால், பின்னூட்டத்தையே கழற்றிவிட்டாரா? அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா? உங்கள்மீது ஆப்தீனின் கோபத்தினைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. //

ஆபிதீனுக்கு நான் சாருவிற்கு இலக்கிய மதிப்பு கொடுத்து எழுதிய பதிவில் பயங்கர கோபம் என்று தெரிகிறது. அந்த பதிவை படிக்கிற எவருக்கும் நான் சாருவை திட்டியுள்ளது கண்ணில் படாமல் போகாது. அதை மீறி சாருவின் எழுத்திற்கு முக்கியத்துவம் இருப்பதாக சொன்னதே ரொம்ப கோபம். ரூமி மாமாவிடம் அதை கொட்டியிருக்கிறார், 'மடையன், மயிரு..' போன்ற வார்த்தைகளையும் விட்டு. என் பெயரை சொல்லாவிட்டாலும் என்னை பற்றியே சொல்வதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். இதன் பிண்ணணி தெரியாமல் அதை மறுமொழியாய் ரூமி வெளியிட்டுவிட்டார். (அதாவது ரூமி சொல்வதை நம்பி ஏற்றுகொண்டு பார்த்தால் இதுதான் நடந்திருக்கிறது, இடையில் ஆபிதீனே கூட மறுமொழியை நீக்க கேட்டிருக்கலாம், யார் கண்டது?) நான் அதற்கு பதிலளிப்பேன் என்று கெடு வைத்து வில்லங்கத்தை கிளப்ப, ஆபீதீனுடன் அனைத்து பின்னூட்டமும் அவுட்!

இதை ஓரளவு எதிர்பார்த்து ஆபிதீன் எழுதியதை சேமித்து வைத்திருக்கிறேன். பிறகு யோசித்து ஒரு வழியாய் இது குறித்து எதுவும் விரிவாய் எழுதுவதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.

ஆனால் சாருவின் கயமைத்தனமே, நானே சொன்னது போல, ஆபிதீன் விவகாரத்தை மௌனத்தால் எதிர்கொள்வது. இப்போது ஆபிதீனும் இந்த விவகாரத்தை மௌனத்தால் எதிர்கொள்வார் போல் தெரிகிறது. சிக்கல் வந்தால் அது சிறந்த வழிமுறையாயிற்றே! நாளை இங்கே எழுதியதையே ஒரு பதிவாய் என் கணக்கில் எழுதக்கூடும்.

SnackDragon said...

அடடே மக்களே ,
இங்கேதான் குவியத்திலே கும்பலாய் கும்மியா? ஆண்டவருக்கு தோத்திரம் அற்புதம். பெயர்கள் தான்
கொஞ்சம் "பரவாயில்லை" மாதிரி; நியாயமாய்ப்பார்த்தால் "அடிபிடி" என்றும் "அறைவிடு" என்றும் இருந்திருந்தால் அதிகபட்ச இலக்கிய வானின் நட்சத்திரத்தை பைக்குள்ளே போட முயற்சித்திருக்கும். :)

ஆனா, மக்களே நீங்க பண்ற தப்பு என்ன தெரியுமா? எதோ பெயரிலி ஒரு பதிவு போட்டவுடனே , தொடர்ந்து எழுதப்போறாப்புல நாக்கை தொங்கப்போடுறீங்களே, அதுதான். அடுத்து அல்லாவுக்கு புகழ் என்று ஒன்று,அம்மன் சாமிக்கு வேப்பிலை என்று ஒன்று போட்டு முடித்துவிட்டு காணாமல் போயிடப்போகிறார் பாருங்கள்.

இளங்கோ-டிசே said...

//டிசேவாக டிசே....//
Being DJ and hitting clubs are much better than to replying your 'intellectual' comment. All I can say now to you is,
"We just came to party
We ain't comin' here to start s*** wid nobody" {Young Zee)
---------------------
Neither my comment realated to that topic nor Manusha Puthiran, I stopped posting it in Manusha Puthiran's blog. But since you guys were talking about this anonymous, I did paste here what I wanted to say to that guy.
.........
//கொஞ்சக் காலமா இங்க படங்காட்டுறதத் தவிர வேறென்ன செஞ்சவரெண்டு சொல்லுங்க பாப்பம். //
U 2 Peyarili :))

-/பெயரிலி. said...

சே எனக்கு விழுகிற தர்ம அடிகளிலே இரண்டு மூன்றை அங்கேயும் இங்கேயும் பகிர்ந்து கொடுப்போமென்றாலும் விடுகிறார்கள் இல்லையே! இலவசமாய்க் கொடுப்பையும் வாங்கா என்ன விந்தை உலகமடா!

தங்கமணி, இது வால்; தலை சுந்தரராமசாமிக்கு ஆத்திரம் வருவதிலே ஆடுகிறது. தலை மட்டும் ஆடவில்லை தங்கமணியையுந்தான் ஆட்டியிருக்கிறார் ஒருவர் அங்கே. ;-)

மூர்த்தியண்ணா, நீங்கள் சொல்கிற மாதிரியே அச்சாப்பிள்ளையாக ஒரு கடவுள் வாழ்த்து போட்டுவிடுகிறேன்.

கடவுள் வாழ்த்து படம் பார் பாடம் படி என்றுதான் சொல்லித் தந்திருக்கின்றார்களேயழிய, தலைகீழாக இல்லையே!

ரோசா வசந்த் விபரமாகப் பின்னர்.

Mookku Sundar said...

ரமணி,
சொன்ன வார்த்தைக்கு "கடவுள்" மட்டுமே காரணமில்லை. அந்தக் கடவுள் எல்லோர் மண்டையிலும் என்ன பேன் ஊர்கிறது என்று பார்க்கும் கடவுளில்லை. ஏற்கனவே முகமூடி விளையாட்டு விளையாடி பெயரெடுத்தவர் என்கிறபடியால், எதாவது நக்கல் தொனிக்க புதுப்பூ மலர்ந்தால், கடவுள் இப்படி உங்களோடு பொருத்திப் பார்ப்பது வழக்கம். அதற்குப் பாதி காரணம் நீங்கள். மீதம் கடவுளுக்கு உங்கள் மீதுள்ள பிரேமை :-)

ஆனால் எடுபிடியிலும், அரைகுறையிலும்தான் உங்கள் பெயரை முதல் பதிவிலேயே பொறித்திருக்கிறீர்கள். எனவே அவை "உங்கள் வகை"யில் அடங்கா...:-)

கடவுளுக்கு இங்கே வக்காலத்து வாங்க விழையவில்லை. உங்களுக்கு சொன்னேன் அவ்வளவே.

Anonymous said...

அடக்கடவுளே! அப்படியா சங்கதி; புரியுது. :-)
எதுக்கும் 'அருணனிண் தூரிகை'யை 'அருணனின் தூரிகை' ஆக்கிங்க சாமி. :-) மக்கள் பிறகு ஆண்டவர் நீங்கள்தான் என்று தாவினாலும் தாவிவிடுவார்கள்.