ஒரு நாய்க்கவிதை
நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.
வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.
ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.
கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.
'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.
நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.
வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.
ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.
கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.
'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.
கணம்~
6 comments:
புரியலையே? அதனால லொள் லொள்
நாய்க்கு ஏன் போர் தேங்காய்?
ஒண்ணும் புரியலை :~). தொடரட்டும் திருப்பணி.
எழுதினதுக்கு விளக்கம் சொல்வது அவநிலையிலே இழிநிலை..... ம்ம்ம்ம்ம். ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் உள்ளன. ஒன்றைச் சொல்லலாம். சிபிச்செல்வனின் கறுப்புநாய் கவிதைத்தொகுதியை நேற்று வாசிக்க நேர்ந்தது. தலைப்பிலே கறுப்புநாய் என்றிருந்தாலும் பாம்புக்கவிதைகளும் இருந்தன. அதனாலே தொகுதியைக் கறுப்புநாய்த்தொகுதி என்று மட்டும் சொல்லமுடியாது; வேண்டுமானால், பொதுவான வாலை முன்னிறுத்திய கவிதை என்று சொல்லலாமோ என்று பட்டது... எழுத்தொன்று; அதற்கோர் இழவு விளக்கமென்று ;-))
வேற்றோர் கவிதைசொல் இறைச்சி செரிந்தாற்றான்
கூற்றோ குரங்கோ கவடாடி முன்வரினும்
போற்றாமற் போற்றுமிவ் வகையரியா மாந்தர்முன்
மாற்றார் கவிதையை வை
:-)
அருள்
/மாற்றார் கவிதையை வை/வைத்தாலும் வைதலே வள் ;-)
/வரவர கவிதைகள்- பொதுவா எல்லாரோடதுமே- படுத்தற பாடு தாங்கலை./இப்படியே சொன்னால், பேசாமல், கற்றதும் பெற்றதும் கடைசி வரிகளிலே ஸ¤ப்ரீம் ஸ்டார் ரைட்டர் வித் நைன் இன்ஞ் கலிபர், அல்லது கொய்ஸன் - ஆன்ஸர்ஸ் இண்டர்வ்யூ மெகா மோகனர் ஸ¥ப்பர் என்று சொல்லி எடுத்துப் போட்ட கவ்விதையை "சிபார்சு சாரேதான்" ன்னு சர்னு எடுத்துச் கிங்·ப்ஸர் எறகா இங்கே செருகிவிடுவேன். பிறகு, தமிழ் இலக்கிய மெகா சாரு (அந்தச் சாரு இல்லை, இந்த Sir) சொல்றதுக்கு மாற்று எவ(ன்) சொல்றா(ன்)னு பாக்குறேன்? :-)
Post a Comment