ஒரு புத்தகம் தாருங்கள்
தரவிரும்பினால்,
ஒரு புத்தகம் தாருங்கள்.
தூக்கத்துக்குத் தூக்கிக்கொள்வேன்;
முடிந்தால், துக்கத்திலுங்கூட.
ஒரு புத்தகம்;
எழுதினார் இன்னாரென்றிலாமல்;
எழுதியது இதைத்தான் என்று
இன்னொருத்தர் முன்னிருந்து சொல்லாமல்;
'இட்டார் இவர்; இது பற்றி
எவரெவர் புட்டுப்போட்டார்' என்ற
பெரும்புள்ளிவிபரமேதும் புதைத்திராமல்,
ஒரு சின்னப்புத்தகம்.
அட்டை கிழிந்த, பத்துப்பக்கப்
புத்தகமானாலும் பாவமில்லை;
அப்படியொரு புத்தகம்
அன்புகூரத் தாருங்கள்.
புரட்டிப்புரட்டிப் படித்து முடித்தபின்னும்,
அணைத்துக்கொண்டு தூங்குவேன் அதை;
விடியும் வெளி.
'05, பெப். 24 வியா 12:19 மநிநே.
தரவிரும்பினால்,
ஒரு புத்தகம் தாருங்கள்.
தூக்கத்துக்குத் தூக்கிக்கொள்வேன்;
முடிந்தால், துக்கத்திலுங்கூட.
ஒரு புத்தகம்;
எழுதினார் இன்னாரென்றிலாமல்;
எழுதியது இதைத்தான் என்று
இன்னொருத்தர் முன்னிருந்து சொல்லாமல்;
'இட்டார் இவர்; இது பற்றி
எவரெவர் புட்டுப்போட்டார்' என்ற
பெரும்புள்ளிவிபரமேதும் புதைத்திராமல்,
ஒரு சின்னப்புத்தகம்.
அட்டை கிழிந்த, பத்துப்பக்கப்
புத்தகமானாலும் பாவமில்லை;
அப்படியொரு புத்தகம்
அன்புகூரத் தாருங்கள்.
புரட்டிப்புரட்டிப் படித்து முடித்தபின்னும்,
அணைத்துக்கொண்டு தூங்குவேன் அதை;
விடியும் வெளி.
'05, பெப். 24 வியா 12:19 மநிநே.
கணம்~
15 comments:
அட்ரஸ்சைத் தாருங்கள் அனுப்பி வைக்கிறேன். போஸ்ரல் செலவு யாருடையது?
//புரட்டிப்புரட்டிப் படித்து முடித்தபின்னும்,
அணைத்துக்கொண்டு தூங்குவேன் அதை//
Nice! :)
//அட்டை கிழிந்த, பத்துப்பக்கப்
புத்தகமானாலும் பாவமில்லை;//
அப்படியெண்டால், கொஞ்சம் பொறுங்க , நித்திலன் தருவான்.
//முடிந்தால், துக்கத்திலுங்கூட//
நல்லா இருக்கு.
/போஸ்ரல் செலவு யாருடையது? /
?
/Nice!/ & /நல்லா இருக்கு./
!
/அப்படியெண்டால், கொஞ்சம் பொறுங்க , நித்திலன் தருவான். /
.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
ஜெ!: அட! வந்துருச்சா? ஊருக்குப்போறதுக்கு முந்தி வந்துரணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.
ரமணி: கவிதை அருமை. :)
நித்திலன் வளந்து உழைத்து பரவாயில்லை பொறுக்கிறேன்
பெரியம்மா?????
/பெரியம்மா?????/
"பெண்களுக்கு இருக்கிற துணிவு வரவர ஆண்களிட்ட இல்லாமல் போகுது. நான் கறுப்பி என்ர "X" ஐப்பற்றித் துணிவா புளொக்கில வந்து எழுதிறன். பெயரிலி இந்தப் பயப்பிடு பயப்படுறார்." ;-)
பெரியம்மா?? எனக்கு இன்னும் doubt ஆகத்தான் இருக்கு. உங்கள் எழுத்தில் கொஞ்சம் “ஆண் வாடை” அடிக்கிறதே hmmm
உண்மைதான் பெயரிலி. புத்தங்கங்களை (ஏன் மனிதர்களைக் கூட) எந்த முன்முடிவுகள் அன்றி வாசித்தல் இனி அரிது போலத்தானிருக்கிறது.
...
இங்கே கருத்துக்களை எழுதியவர்கள் எல்லாம் இந்தக்கவிதை அருமை,நன்றாக விளங்குகிறது என்று எழுதிய கோபத்திலோ என்னவோ பெயரிலி தனது அடுத்த கவிதையை புதிராக்கி எனக்கு விளங்கமுடியாமற் செய்துவிட்டார். ஆகவே நண்பர்களே அடுத்த முறை கருத்துச் சொல்லும்போது, அருமைக்கு பதிலாக பெயரிலி குறிப்பிடும் 'எருமை'க்கு வாக்களித்து தொடர்ந்து எனக்கு விளங்கக்கூடிய கவிதைகளை பெயரிலி எழுத ஊக்குவிக்க்கும்படி பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
....
பி.கு: இந்த 'எருமை' உஷா ராமச்சந்திரன் குறிப்பிடும் கழுதையாக இருந்து மாறிய எருமை அல்ல என்பதையும் இத்தால் உறுதிசெய்கின்றேன். எனக்கு எதுக்கடாப்பா பிறகு வம்பு?
அன்பு டி.சே, என் பெயர் ஆர். உஷா, அதாவது இன்சியல் ஆர் என்பது தந்தை பெயர் ராமசந்திரன். ஆக ராமசந்திரன் உஷா. பாஸ்போர்ட் பெயர் சரியா? ஆனால் வீட்டுக்காரர் பெயர் வேறு வீட்டுக்காரர் பெயர் பின்னால்தான் வரும் (!).
கழுதையும், எருமைகளும் உங்களை அதிகம் டிஸ்டர்ப் செய்யுதுப் போல இருக்கே??????
உஷா
அலைஞியின் அலைகள் என்று தங்கள் தளத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
/தனது அடுத்த கவிதையை புதிராக்கி எனக்கு விளங்கமுடியாமற் செய்துவிட்டார்./
டிசே, புரியாததற்குப் புதுவிளக்கம் அங்கே கொடுத்திருக்கிறேன் :-)
எருமையை இங்கிழுத்து வந்து எனக்குப் பெருமை செய்ததற்கு நன்றி :-)
/அலைஞியின் அலைகள் என்று தங்கள் தளத்தை மாற்றிக் கொள்ளுங்கள்./
விட்டால், சூசன் என்கிறவளை சூசி என்றே மாற்றிச் சாப்பிட்டுவிடுவீர்கள்போல இருக்கிறதே!
ராமசந்திரன் உஷா,
தவறைத் திருத்தியமைக்கு நன்றி. ஏற்கனவே உங்களின் இந்த விளக்கத்தை எங்கையோ வாசித்ததாயும் நினைவு. நான், இங்கே உள்ளவர்கள் எழுதுவதுமாதிரி first name and then last name (ஆணா, பெண்ணா, திருமணஞ் செய்தவரா இல்லையா என்ற துப்பறியும் விபரங்கள் எதுவும் இல்லாமல்) வரிசைப்படி உங்கள் பெயரையும் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன்.
//கழுதையும், எருமைகளும் உங்களை அதிகம் டிஸ்டர்ப் செய்யுதுப் போல இருக்கே??????//
அப்படி என்று ஒன்றுமில்லை. நானே அவ்வப்போது கழுதையாகவும், பன்றியாகவும், எருமையாகவும் விரும்பியும், சிலவேளைகளில் வலைப்பூ 'நண்பர்களால்' நிர்ப்பந்திக்கப்பட்டும் இருந்திருக்கின்றேன். எனவே எனக்கு இது ஒன்றும் distrub செய்யாது. கண்ணை, காதை, வாயைப் பொத்திக்கொண்டு மனுச பாசை அறியாமல் அந்த உலகத்தில் இருப்பது எவ்வளவு கொடுப்பினை.
...
Peyarili, Thanx for your explanation to your poem :-).
Post a Comment