மனுஷ்யபுத்திரன் என்ற எஸ் அப்துல் ஹமீது முன்வைத்திருப்பது குறித்து
சாகுல் ஹமீட் என்பது தவறாகவே நான் எழுதியிருக்கின்றேன். இது என் தவறு. மறுப்பதற்கில்லை.
இனி அவர் எழுதியது குறித்து:
அப்துல் ஹமீது சொல்லியிருப்பவை // இன் உள்ளே
/என்மீதும் இளைய அப்துல்லாஹ்மீதும் காட்டும் வெறுப்பிற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வெறுப்பிற்கு இந்தியாவில் ஒரு காரணம் இருக்கிறது. இலங்கையில் வேறொரு காரணம். /
இவர் இலங்கையிலே என்ன காரணம் என்று எண்ணுகின்றாரோ அது எனக்குப் புரிகின்றது. என்னைத் தனிப்படத் தெரியாமல், அந்தக்காரணமெதுவென்று இவராகக் கற்பனை செய்துகொண்டால் நான் சொல்வதற்கேதுமில்லை. [என்னைத் தனிப்படத் தெரிந்தவர்களூக்கு, இவர் சுட்டும் இலங்கையின் வேறொரு காரணம் ஏன் எனக்குப் பொருந்தாது என்று தெரியும்; குறைந்தபட்சம் அண்மையிலே விகடன் பதிவின் பின்னூட்டத்தினையாவது ஒரு குறைந்த அளவுக்குக் காணலாம்] அதனாலே அவர் கூறுவதையே எனக்கும் நான் சொல்லிக்கொள்ளலாம்:
ஆனால் அது என்னை உணர்வுபூர்வமாகத் தூண்டாது.. ஏனெனில் நான் மத நம்பிக்கைககளையோ சிறுபான்மை அடையாளத்தினையோ பின்பற்றுகிறவன் அல்ல.

5 comments:
//நான் ஒரு ஈழதமிழனாய் இருந்து, அப்படி தோன்றியிருந்தால் நிச்சயம் அதை அவருக்கு சொல்லகூடும். இந்திய தமிழனாய் அதை மெல்லியதாய் இங்கே மட்டுமே சொல்லமுடியும்.//
என்று நான் சொன்னது 'இந்தியத்தமிழன் - ஈழத்தமிழன் என்று பார்த்து அடிக்க' கூடும் என்பதால் அல்ல. அது குறித்து நான் கவலைபட்டிருந்தால் விகடன், ஈழநாதனுடன் பேச புகுந்திருக்க மாட்டேன். எனக்கு மிகையாகவும், பெரிதுபடுத்த தேவையற்றதாகவும் (இந்திய தமிழனாய்)தெரிவது, (ஈழதமிழனாய்) உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை என்பதாலேயே. 'தேவையற்றது' என்றவகையில் கருத்துவதெல்லாம் திடமான கருத்துக்கள் அல்ல. ஒரு மேலோட்டமான தோன்றுதல். உதாரணமாய் முஸ்லீம்கள் விரட்டப் பட்டது போன்ற பிரச்சனைகள் குறித்து பேசும்போது திடமாய் ஒரு கருத்து சொல்லலாம். இது பொத்தாம் பொதுவாய் தோன்றுவது. இதை உங்களிடம் என்னால் வலியுறுத்தி கொண்டிருக்க முடியாது எனபதே நான் சொன்னது.
ஏற்கனவே சொன்னது போல் மனுஷ்யபுத்திரன் வலைபதிய புகுந்ததை ஆரோக்கியமானதாய் பார்கிறேன். அதனால் இந்த பிரச்சனை அவர் ஸெட்டிலான பின் எழுப்பப் பட்டிருக்கலாம் என்று மீண்டும் மேலோட்டமாய் தோன்றிய கருத்தைத்தான் 'சற்று தள்ளி வெளிபடுத்தியிருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது' என்று சொன்னேன். உங்களை போல பல இலக்கிய நிகழ்வுகளை பின்பற்றுவதில்லை என்ற காரணத்தினால் கூட இப்படி தோன்றியிருக்கலாம். (குறிப்பிடும் உயிர்மை தலையங்கத்தை படித்திருந்தாலும்).
வலதுகைப் பக்கம் இருக்கும் 'கூழ்,அகழ்..' என்று தொடங்கி வரும் பல இணைப்புகளை சுட்டினால் 'page can not be displayed' என்று வருகிறதே. ஏதாவது பிரச்சனையா, அல்லது அங்கு ஒன்றும் இல்லையா? (அப்படி ஞாபகம் இல்லையே!)
hi ramani,
can ya gimme ur email id or shoot a mail to suvadushankar@yahoo.com?
/ஏதாவது பிரச்சனையா, அல்லது அங்கு ஒன்றும் இல்லையா/
இனித்தான் கடை திறக்கவேண்டும்.
முதற்கூறியது புரிகின்ரது. விளக்கத்துக்கு நன்றி.
சங்கர், மின்னஞ்சல் முகவரி அனுப்பினேன்; கிடைத்ததா?
கிடைத்தது ஐயா! அஞ்சல் அனுப்பியிருக்கிறேன்
Post a Comment