Saturday, February 26, 2005

கணம் - 458

போலச் செய்யேன்

புள்ளிகள் எனது
கோடுகள் உமது
கோலம் எமது.

அனுபவம் எனதில்
உமது அனுபவம்
எமது அறிதல்.

புதிதுயிர்க்கப் பல
புள்ளி தேடிப் போவேன்;
கொணர்ந்தபின், நீங்கள்
நீட்டலாம், நெளிக்கலாம்
கோடு.

அள்ளி வரும்வரை
புள்ளி,
அண்ணாந்து விண் பார்த்து
கூட்டி மீன் கோர்த்து
கரடி கலப்பை
கற்றிருப்பீராக.

'05 பெப்., 26 சனி 12:15 கிநிநே.

1 comment:

Thangamani said...

//அள்ளி வரும்வரை
புள்ளி,
அண்ணாந்து விண் பார்த்து
கூட்டி மீன் கோர்த்து
கரடி கலப்பை
கற்றிருப்பீராக//

எதையும் கற்காமல் மீன் பார்த்து கரைந்துபோனால்

:)