Wednesday, May 31, 2006

அள்ளல் - 5

ஸ்ரீரங்கன் மீண்டும் பதிவிட்டிருப்பதால், அலைஞனின் அலைகள் மீளப் பதிவு கொள்கிறது.



வாலில்லாக் குரங்குக்குக் கவிதை எழுதக் கற்றுத்தருவதில்
அவர்களுக்கு ஒன்றும் அதிகச் சிரமம் இல்லை;
முதலில் அவர்கள் குரங்கை நாற்காலியோடு பிணைத்தார்கள்
பின் பென்சிலை அதன் கையைச் சுற்றிக் கட்டினார்கள்
(காகிதம் ஏற்கனவே ஆணியடித்து மாட்டப்பட்டிருந்தது)
அதன்பின் டாக்டர் ப்ரூபியர் அதன் தோளோடு சாய்ந்து நின்று
காதுகளில் குசுகுசுத்தார்:
"ஒரு கடவுள்போல் அமர்ந்திருக்கிறாய்.
ஏன் நீ ஏதேனும் எழுத முயலக்கூடாது?""

ஜேம்ஸ் தற்றே
தமிழில்: பசுவய்யா எ. சுந்தரராமசாமி
காலச்சுவடு, இதழ் 30, ஜூலை-ஆகஸ்ட் 2000

1 comment:

கார்திக்வேலு said...

//"ஒரு கடவுள்போல் அமர்ந்திருக்கிறாய்.
ஏன் நீ ஏதேனும் எழுத முயலக்கூடாது?""//

படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
நல்ல கவிதைத் தேர்வு.