Thursday, May 04, 2006

கணம் - 483


'06 ஏப்ரல் 29 சனி மாலை

கவலைப்படாதீர்கள்; மிக இலகு.

விதைகளை நாட்டவேண்டாம்;
விடிகாலை நீர் ஊற்றவேண்டாம்;
உரங்களைச் சேர்க்க வேண்டாம்;
மரங்களைக் காக்கவேண்டாம்;
பழங்களை,
......................பார்க்கவே வேண்டாம்.

பொடிநடையில், கடையிற் கிடைக்கிறது
பொதிபடுரசப்பொடி; கனியே சேரா
வேதிம நறுமணப்பொடி; தோடை தொட்டுத்
தூரியன்வரை, பல பள பழப்படம் முகம்
தாங்கிப் பக்குவமாய்ப் பெட்டியுள்ளே.

விருந்தினரை எண்ணிக்கொள்ளுங்கள்.
வெறும் நீரை முகந்தோ முகராமலோ
இறைந்து நிறையுங்கள்; அளந்து சீனி
கலந்து கொள்ளக் கைநுனியிற் கரண்டி;
விருந்தினர் தேர்வில், விரும்பின தேர்வில்,
ஒரு சிட்டிகை தோடம்பொடி
..................................தூரியன்பொடி
.................................புளிப்பொடி
................................ப்ரூன்பொடி.

வரும் விருந்துக்குப் பழரசம் பரிமாறுவது இலகு.

~~

அரசியற்கட்டுரை அமைப்பது அடிப்படையிற் சுலபம்;
மனிதநேயக்கட்டுரையுங்கூட.

ஒரு சிட்டிகை பாசிசப்பொடி
..................................தேசியப்பொடி
..................................புலிப்பொடி
..................................புனுகுப்பொடி

'06 மே 04 வியாழன் 04:05 கிநிநே.

6 comments:

Anonymous said...

படம் அருமை !

-/பெயரிலி. said...

பரணீ, நன்றி.

இளங்கோ-டிசே said...

/அரசியற்கட்டுரை அமைப்பது அடிப்படையிற் சுலபம்;
மனிதநேயக்கட்டுரையுங்கூட.

ஒரு சிட்டிகை பாசிசப்பொடி
..................................தேசியப்பொடி
..................................புலிப்பொடி
..................................புனுகுப்பொடி/
ரெசிப்பியிற்கு நன்றி. இந்தக் கோடைகாலத்தில் அரசியல்பழச்சாறு த்யாரித்து பலரது (மற்றும் எனதும்) தாகத்தைத் தீர்ப்பதாய் தீர்மானித்துள்ளேன் :-).

SnackDragon said...

மனிதநேயப்பொடியைப் போடவே கூடாது என்பது சப் டெக்ஸ்டூவா? :-)
கவி நன்று.

கொழுவி said...

அடுத்தது என்ன?
"கொலை செய்வது எப்பிடி?" யா?
அதுகூட மிகச்சுலபமாயிற்றே?

-/பெயரிலி. said...

இரத்தவிடாயோ தாகம் தீர்க்க காகமா அலையிறீர்?

மனிதநேயப்பொடி மர்ஜுவானாபொடியிலும்விட மதிமயங்கச்செய்யும் த்ம்ப்ரீ. அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

பொடி கொழுவி மண்டையில போடுவதுக்கு மிகவும் முக்கியமானது மண்டையா மம்பெட்டியா எண்டு எழுதத்தான் இருக்கிறன்