Tuesday, May 30, 2006

இடைநிறுத்தம்

ஸ்ரீரங்கன் தன்மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதுகாரணமாகப் பதிவு இடமுடியாதிருக்கின்றதென்பதாகச் சொல்லி தன் பதிவினை நிறுத்தியிருக்கின்றார். அவரின் கருத்துச்சுதந்திரத்திற்கும் உயிருக்கும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இடரினையும் தடையினையும் கண்டித்து அவருக்குத் தார்மீக ஆதரவு காட்டுமுகமாக ஸ்ரீரங்கனுக்கு மீண்டும் பதிவு எழுதத்தொடங்கும் களமும் காலமும் உளநிலையும் ஏற்பட்டுப் பதிவேறும்வரை அலைஞனின் அலைகள் பதிவுகள் எழுதப்படா.

-/பெயரிலி. இது தவிர சொந்தமாக வேறேதும் பதிவு எழுதிக்கொண்டிருக்கவோ, தொடங்கவோ மாட்டான் என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

விழியிலே கூட்டுப்பதிவிலிடும் படங்கள் மட்டும் தொடரும்.

"I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it."
Quoting Voltaire for the umpteenth time.

11 comments:

SnackDragon said...

பெயரிலி, உங்கள் முடிவை ஆதரிக்கிறேன், என் ஆதரவையும் இங்கே பதிகிறேன்.

Anonymous said...

காலம் ஒரு நாள் மாறும்...
:-(
..aadhi

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் கருத்துக்களையும் தார்மீக ஆதரவையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்த இடைநிறுத்தம் தேவையில்லை என்பது என் கருத்து. எனக்குப் புரியாமல் அதனால் வேறு பயன் விளையும் என்றால் சரி.

Anonymous said...

சிறி ரங்கணுக்கு நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் எந்தளவுக்கு உண்மையானது? அதுகும் ஐரொப்பிய சூழலில் ....
ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்யப்போகிறது என்ற செய்திகள் நாளாந்தம் வெளியாகி கோண்டிருந்த வேளையில் புலிகள் சார்பில் செயற்படுபவர்கள் இப்படி முன் யோசனையற்று செயற்படுவார்களா? என்பது செஇந்திக வேண்டியது.....

இந்த தருணத்தில் அவர்களின் பெயரிற்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்றே மற்றவர்களால் திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகள் இலகுவில் மேற்கொள்ளப்பட முடியும்.

உங்களது தீர்மானத்தை மாற்றவோ அல்லது நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானம் சரியானது /பிழையானது என சொல்லவோ விரும்பவில்லை...
பொதுவாக இணைய உலகில்
ஆனால் இணையத்தி புலிகளை அதீதமாக அதரித்தோ/ அல்லது எத்ரித்தோ/ நல்லது தாம் நடுநிலையாளர்கள்/ புரட்சிகர சிந்தனையாளர்கள் என்றோ சொல்லுவோரை தனிப்பட்ட எனது கருத்தில் சொல்வதானல் அவர்களை நம்புவது இல்லை

Anonymous said...

PLEASE DO IT BECAUSE YOUR WRITING ARE TOO BORING

PEEYARLEE DID YOU DO ANYTHING ABOUT TAMIL MEDIA REPORTERS SIVARAM, VIMALARAJAN, NADESHAN ETC.. KILLED BY SRILANKAN GORVERNEMNET

DID YOU DO ANYING ABOUT UTHAYAN NEWS PAPER AND TINAKURAL PAPER ATTACLED BY SRILANKAN GOVERNMENT

-/பெயரிலி. said...

கார்த்திக், ஆதி நன்றி.
செல்வராஜ், அவருக்கு உறுதியான ஆதரவை அவ்வாறே தரமுடியுமெனத் தோன்றியது. இல்லாவிட்டால், சில நாட்களிலே இப்படியாக அவரின பதிவும் பின்விளையும் இருந்ததே மறந்துவிடும். "தோன்றியது" என்று சொல்வதற்குக் காரணம், அவர் ஏற்கனவே இப்போது ஒரு பதிவு இட்டிருக்கின்றார். அதனால், என் பதிவினைத் தொடர்வதிலே சிக்கலில்லை.

யாரொ நீங்கள் யாரோ தெரியாது. ஆனால், எனது முதற்பதிவினைப் பார்த்தால், என்ன நிலைப்பாட்டிலிருந்து என்ன விதத்திலே இந்நிகழ்வினை அணுகியிருக்கின்றேனெனத் தெரியும். உங்களின் நம்பிக்கைக்கு நான் பாத்திரவான் ஆகாததால், ஏதும் இழப்பு இருவருக்குமே இல்லையெனத் தோன்றவில்லையா? பிறகென்ன பிரச்சனை?

anonymous,
kid
1. go and read my whole blog (though it is boring ;-)),
2. grow up, and
3. learn how hygenically excrete and pass urine. ;-)

Srikanth Meenakshi said...

பெயரிலி,

இதுவரை உங்கள் பதிவுகளில் பின்னூட்டமிட்டதில்லை. இருப்பினும், இந்தப் பதிவின் பின்னிருக்கும் உங்களது தார்மீக நிலைப்பாட்டினை மிகவும் மதிக்கிறேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நீங்கள் இருவருமே மீண்டும் எழுதத் துவங்கும் நாளினை எதிர்நோக்குகிறேன்.

நன்றி.

-/சுடலை மாடன்/- said...

வன்முறை வழியில் செல்லாத, ஆயுதமேந்தாத, தன் நோக்கத்திற்காக மற்றவரை வன்முறையில் ஈடுபடுத்தாத எந்த ஒரு மனிதரையும் வன்முறையால் அழிக்க நினைப்பதோ, வன்முறையைக் காட்டி எச்சரிப்பதோ கூட மனிதத்தன்மையற்ற செயல், அதை அனைவரும் கண்டிக்க வேண்டும். சில நேரங்களில் திரு.ஸ்ரீரங்கன் யாருக்காக எழுதுகிறார் என்ற கேள்விகள் எழுந்தாலும், அவர் சொல்ல வந்த விசயங்கள் பல சிந்திக்க வைப்பவை. அவற்றைப் பிடிக்காதவர்கள் பொருட்படுத்தாமல் செல்லுவதே சரி. அதை விட்டு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது, அது புலிகளின் தலையில் இருந்து உதித்தாலும் சரி, வால்களில் இருந்து உதிர்ந்தாலும் சரி.

இலங்கை வரலாற்றின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் - இலங்கை அரசு-இராணுவமானாலும் சரி, சிங்கள அரசியல் கட்சிகளானாலும் சரி, தமிழ்ப் போராளிக் குழுக்களானாலும் சரி, அல்லது மோப்பமிட்டுக் கொண்டிருக்கும் ரா-உளவினராலும் சரி - எந்தப் பாம்பு, எந்தப் புற்றிலிருந்து கிளம்பி, எந்த நேரத்தில் யாரைக் கொலை செய்து அல்லது கொலை செய்யத் தூண்டி/மிரட்டி யார் மீது பழியை வீசும் என்பது தெரியாது. தடயங்களை விட பொய்களையும், பிரச்சாரங்களையும் நம்பியே பழக்கப் பட்டு அனைத்து தரப்பினருமே இரத்த வெறியர்களாக மாறிக்கொண்டிருப்பது தான் மிச்சம். அதுவும் குறிப்பாக தமிழர்களுக்குள்ளாக நடந்து வரும் இத்தகைய கொலைகள்/முயற்சிகள் ஈழமக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விடுதலையைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி பின்னூட்டத்துக்கு நன்றி. அவரின் அரசியல்நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறேனோ இல்லையோ, இந்த அளவுக்கேனும் அவருக்கு என்னாலியியன்ற ஆதரவு காட்ட முடிவது குறித்து மகிழ்ச்சி.

என் பதிவொன்றுக்கு நீங்கள் பின்னூட்டமிடுவது இதுவல்ல முதற்றடவை. தமிழிணையத்திலே 'ஊர்' இற்கு '97 இலே இட்டிருக்கின்றீர்கள்.

சங்கரபாண்டி முழுதாக ஒத்துப்போகிறேன்.

-/பெயரிலி.

கார்திக்வேலு said...

//இலங்கை வரலாற்றின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் - இலங்கை அரசு-இராணுவமானாலும் சரி, சிங்கள அரசியல் கட்சிகளானாலும் சரி, தமிழ்ப் போராளிக் குழுக்களானாலும் சரி, அல்லது மோப்பமிட்டுக் கொண்டிருக்கும் ரா-உளவினராலும் சரி - எந்தப் பாம்பு, எந்தப் புற்றிலிருந்து கிளம்பி, எந்த நேரத்தில் யாரைக் கொலை செய்து அல்லது கொலை செய்யத் தூண்டி/மிரட்டி யார் மீது பழியை வீசும் என்பது தெரியாது. தடயங்களை விட பொய்களையும், பிரச்சாரங்களையும் நம்பியே பழக்கப் பட்டு அனைத்து தரப்பினருமே இரத்த வெறியர்களாக மாறிக்கொண்டிருப்பது தான் மிச்சம்//
I dont have much background information on the political scenario in SL , but the above comment echoes the results of decades of struggle and how and how it affects the collective psyche of the socio/political setup and the general population

தமிழரங்கம் said...

சிறிரங்கன் மீதான எதிர்வினைகள் மீது
பி.இரயாகரன்
31.05.06

சிறிரங்கனை அடிபணிய வைக்கவும், புலிகளின் ஏக பிரநிதித்துவத்தை பாதுகாக்கவும், விடப்படும் மிரட்டலின் ஒரு வடிவம் தான் இது. இது ஒன்று ஆச்சரியமானதல்ல. புலியின் தேசிய மொழியே, அவர்களின் பண்பாடே இது தான். ஆயிரம் ஆயிரம் உயிர்களை இப்படி பலியெடுத்தவர்கள், பலியெடுக்க அதற்குரிய சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள். இதற்கு வெளியில் புலி தேசிய அரசியல் என்பதே கிடையாது. இதை சிறிரங்கன விடையம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

இந்த அரசியல் செய்தி சிறிரங்கன் பதிவாக கொண்டு வந்தவுடன் பலர் பதறிப் போகின்றனர். மோட்டுக் கூட்டம் என்று மனதுக்குள் திட்டுகின்றனர். இதற்கு எப்படி பதிலளிப்பது என்று மண்டையை போட்டு குடைகின்றனர். பதிலளித்தோரின் கருத்துக்கள் சில இழிவானவை, நரித்தனமானவை. இது எப்படி இருந்தது என்றால், ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருந்தது.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், இந்த ஆணாதிக்க (தமிழ்) சமூக அமைப்பு பெண்ணை மீளவும் கூண்டில் ஏற்றி மீள மீள எப்படி கற்பழிக்கின்றனரோ அதே போன்றதே இது. ஆணாதிக்கத்தை விமர்சிக்காத, ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்ற வடிவத்தில் இது கையாளப்பட்டது. எப்படி சமூகத்தின் பல்வேறுபட்ட பாத்திரங்கள் இதை அணுகுகின்றதோ, அப்படித் தான் இதுவும் கையாளப்பட்டது. இங்கு ஆணாதிக்கத்தின் இடத்தில் புலித் தேசியம் அவ்வளவே. வழக்கம் போல் பாசிசத்தின் தசையாட, உரோமங்கள் ஆட்டுவிக்கப்படுகின்றது.

1. நடந்த சம்பவத்தில் புலிகளின் தலைமையின் நேரடியான உத்தரவுக்கு அமைய இது நிகழவில்லை என்பதே சரியானது. உள்ளுர் அளவில் இது நிகழ்ந்த சாத்தியக் கூறே அதிகமானது. குறிப்பட்ட பிரதேசத்தை சேர்ந்தோர், தன்னியல்பாக இதை செய்திருக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. இருந்தபோதும் இது புலிகளின் அரசியலுக்கு முரணானதல்ல. தலைமை இதுவாக இருப்பதால், அதில் பொறுக்கித் தின்னும் அணிகள் துள்ளிக் குதிக்கின்றனர்.

சிலர் வன்னி தலைமையுடன் தொடர்பு கொண்டு, இதை அணுக கோருகின்றனர். இப்படிக் கோருபவர்கள் ஒன்றில் அப்பாவிகளாக இருக்கவேண்டும் அல்லது நரித்தனம் கொண்ட சதியாளராக இருக்க வேண்டும். பொதுவாக தலைமை சரியாக உள்ளது, அணிகள் தான் தவறு இழைக்கிறனர் என்ற புலியின் வழமையான பிரச்சார உத்தியைச் சார்ந்தது. மற்றறொரு விதமாகவும் கூறலாம். ஜெயதேவனின் அண்ணன் எழுதியது போல், கீழ் அணியில் உள்ள இழிந்த சாதிகள் தான், இதைச் செய்கின்றது, மேலே உள்ள உயர்சாதிகள் இப்படி ஈடுபடுவதில்லை என்ற யாழ் மேட்டுக் (மோட்டுக்) குடியின் புலித் தேசிய வகைப்பட்டதாகவும் விளக்கலாம்.

வன்னியை அணுகுங்கள் என்பது, வன்னித்தலைமை இதை வேறுவிதமாக அணுகும் என்று நம்புவதே நம்ப வைப்பதே முட்டாள்தனம் தான். அவர்களின் அறியாமையின் உள்ளகத்ததையே இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கம் வன்னியுடன் தொடர்பு கொண்டு, மேலும் பலத்த மிரட்டலைப் பெற்று அடங்கியொடுங்கிப் போங்கள் என்ற உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது.

வன்னித் தலைமையின் வழி தான், அவர்கள் அணிகள் இழிந்து சீரழிந்து இயங்குகின்றனர். மாற்றுக் கருத்தை புலிகள் எப்படி எதிர்கொள்வர்! கொலை, கைது, சித்திரவதையின்றி புலியின் தேசிய கட்டமைப்பே இயங்கவில்லை. இது தான் ஏகப் பிரதிநித்துவம்.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அணுகுமுறைக்கு உட்பட்டுத் தான் கீழ் அணிகள் இயங்குகின்றன. தலைமை எப்படியோ, அப்படித் தான் அணிகள் இயங்குகின்றன. தலைமையுடன் பேசி இந்த விடையத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நம்புவோம் என்றால், எமது மண்ணில் இவ்வளவு அவலங்கள் நிகழ்ந்து இருக்காது. அதாவது மக்கள் தலைமையாக இருந்திருந்தால், எங்கேயாவது ஒரு தவறு நிகழும் போது அதை திருத்தியிருக்க முடியும். தலைமையே கொலைக் கலாச்சாரத்தில் வாழ்கின்ற போது, மாற்றுக் கருத்தை எதிர்கொள்ள வக்கற்ற ஒரு நிலையில் இருக்கின்றது. அதன் பொது அணுகுமுறையே, விதிவிலக்கின்றி கொலை தான் அதன் தேசிய மொழியாகின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையில் பரிமாறப்படும் மொழியே கொலைதான். மக்கள் வாயைப் பொத்தி, காதுக்கு பஞ்சை அடைந்து, கண்ணை மூடிக் கொண்டு வாழ்வதே வாழ்வு, இது தான் புலித் தேசியம்.

2. இது உண்மையாக நடந்ததா என்று ஒரு குதர்க்கம். ஒவ்வொரு தமிழ் மக்களும் இது போன்ற ஆயிரம் சம்பவங்களை சொந்த அனுபவத்தில் அறிவர். புலிக்கு பின்னால் கொடி பிடிக்கும் குருபக்த கும்பலுக்கும் கூட இது தெரியும். எம்மண்ணில் அன்றாடம் நடக்கும் புலி அல்லாத கொலைகளைக் கூட, நடக்கவில்லை என்று மார்பில் தட்டி சொல்பவர்கள் தான் புலிகள். நாங்கள் யாரை இதுவரை கொலை செய்தோம் என்ற கேட்பவர்கள் தான் இந்தப் புலிகள். ஆனால் எம் மண்ணின் நிகழ்வுகள், உயிருள்ள சாட்சியாக இந்த பொய்யையும் புரட்டுகளையும் எதார்த்தமாக இயல்பாகவே எல்லாவற்றையும் மறுக்கின்றது.

ஆயிரம் ஆயிரம் கொலைகள், புலிசெய்யாத கொலைகளாகவே காட்டப்படுகின்றது. யாரும், ஏன் அவர்களே நம்புவதில்லை. அப்படி இதை மீறி கூறினால் மரண தண்டனைதான் பதிலாக எதார்த்தத்தில் கிடைக்கின்றது. எமது தமிழ் சமூக அமைப்பில் இது போன்ற மிரட்டல் நேரடியாக வருகின்றதோ இல்லையோ, அந்த ஆணைச் சார்ந்து வாழும் பெண்ணும், உற்றார் உறவினரும் புலியை விமர்சிப்பதை நிறுத்த நச்சரிக்கின்றனர். அவர்களுக்கு நன்கு தெரியும் இதன் விளைவை. எம் மண்ணில் மூச்சுக்கு மூச்சு நடக்கும் கொலைகள், இதைவிட வேறு எதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. தாய்மையும், தாய்மை சுமந்த தனது குழந்தைகளுடன் வாழும் எந்தப் பெண்ணும் மகனுக்காக, தனது கணவருக்காக இந்த மாதிரியான கொலைகாரக் கும்பலுக்கு அஞ்சி சதா அழுகின்றது. குறிப்பாக சமூக ரீதியான ஆணாதிக்க மற்றும் சமூக ஒழுக்குமுறையால் சமூகம் பற்றிய பின்தங்கிய பார்வை, அச்சத்தையும் அவர்களையே சிதைக்கும் அளவுக்கு புலி தேசிய கொலைக் கலாச்சாhரம் பரிச்சயமானதே.

தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த மொழி கூட கொலைதான். புலியை விமர்சித்தாலோ, அது எதார்த்த உண்மையாகிவிடுகின்றது. இதற்கு சாட்சியம், உண்மை பொய் என்ற விதண்டாவாதம் எல்லாம் கொலைகார பாசிசக் கும்பலின் கைதேர்ந்த தொழில்முறை மூடிச்சுமாற்றிகளுக்கு நிகரானது.

இந்த நிகழ்வை உண்மையா என்று கேட்பதும், பின் கொல்லப்பட வேண்டும் என்று கூறுவதும் கூட பாசித்தின் வக்கிரம் தான். இதையும் கருத்திட்டோர் இடையே நாம் காண்கின்றோம். என்ன வக்கிரம். புலித் தேசிய நாற்றம் தாங்க முடியாது, இணைய விவாதத் தளமே நாறுகின்றது.

சிறிரங்கன் பற்றி எழுதிய அவதூறுகள், அவர் மீதான அச்றுத்தலை மீண்டும் தெளிவாக உறுதி செய்கிறது. கொல்வோம் என்று கூறுவது கூட இங்கு பதியப்படுகின்றது. இது தான் அவர்கள். இது தான் புலித் தேசியம். அவர்கள் அதை பதிவிலேயே இட்டுள்ளதுடன், இப்படி அவரை குதர்க்கம் செய்வது அவர்களின் தேசியத்தில் சாதாரணமானது. யாருக்குத் தான் அவர்கள் பட்டம் கட்டவில்லை. பொம்பளைப் பொறுக்கி முதல் ஆயிரம் பட்டங்கள் எப்போதும் புலித் தேசிய மூளையில் தயாராகவே வைத்திருப்பவர்கள். இதையெல்லாம் தமது சொந்த நடத்தைகளில் இருந்து, மற்றவன் மீது காறித் துப்புவது தான்.

ஊரார் பணத்தில் சொகுசாக வாழும் கும்பல், மற்றவன் சொகுசாக வாழ தங்களைப் போல் இழிந்து வாழ்வதாக கூறுவது எதிரொலிக்கின்றது. சிறிரங்கன் ஒரு தொழிலாளியாக உழைத்து வாழும் ஒருவர். உங்களைப் போல் தண்டல் சோறு உண்டு, தூசணத்தால் சமூகத்தை புணர்ந்த விபச்சாரம் செய்பவரல்ல. அது உங்கள் தேசிய குலத் தொழிலாகிவிட்டது. காட்டுமிராண்டிகளாக இழிந்து போன, பண்பற்ற நீங்கள் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று கூறுவதை, எந்த தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதே கிடையாது. உங்களைப் போல் பொறுக்கித் தின்னும் கும்பல் மட்டும் தான் உங்கள் பின் அரோகரா போடுகின்றது.

தமிழ் மக்கள் வாயைப் பொத்தி, அடக்கவொடுக்கமாக ஏகபிரதிநிதிகளுக்கு கால்தூசு துடைத்து அடங்கி வாழும் பாசிச சர்வாதிகார அமைப்பை யாரும் திரிக்க முடியாது. அது அவர்களின் சொந்த நடத்தையால், அவர்களின் சொந்த அரசியல் நெறியால் நிர்வாணமாகவே உள்ளது. சிறிரங்கன் போல் ஆயிரம் ஆயிரம் பேர் இந்த அனுபவத்தையும் துன்பத்தையும் சதா அனுபவித்தபடி தான் வாழ்கின்றனர். இதற்கு யாரும் விளக்கு பிடித்து காட்ட வேண்டியதில்லை. அதை புலிகளே யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் போது தெளிவாக கூறியுள்ளனர்.

''விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய, மேலும் இரு கோரிக்கைகள் வெகுஜன அமைப்பின் மூலம் எம்முன் கொண்டு வரப்பட்டு பேச்சுவார்த்தை தொடரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது." என்று புலிகள் அறிவித்து நிராகரித்த அந்த இரு கோரிக்கை

1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.

2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.

இந்தக் கோரிக்கை "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறிய போது, பாசிசம் குதிராட்டம் போடுவதையே காணமுடியும். எந்த வகையிலும் இதை மக்களுக்கு நிராகரிக்கும் உரிமை புலிகளுக்கு கிடையாது. மக்கள் விரோதியான புலிகள் இதை மக்களுக்கு மறுத்தார்கள். இந்த உரிமை மக்களின் அடிப்படை உரிமையாகும். இதை நிராகரிக்கும் புலிகளின் வக்கிரமான மக்கள் விரோத போக்கு, வரலாறு காணாத வகையில் அனைத்து துறையிலும் விசுவரூபம் எடுத்துள்ளது. இன்று வரை இது தான் புலிகளின் அரசியலாக, ஒழுக்கமாக, படுகொலையாக நீடிக்கின்றது. சர்வாதிகார பாசிச மக்கள் விரோத வன்முறை அரசியலே, எப்போதும் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிக்கின்றன. புலிகள் அதன் ஒட்டு மொத்த மக்கள் விரோதிகளாக இருப்பதையே, அவர்களின் துண்டுப்பிரசுரம் அன்றே அம்பலமாக்கியது. மக்கள் மக்கள் என்று வாய் கிழிய பிதற்றும் புலிகளின் உண்மை முகம், மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பதை ஆதாரமாக கொண்டே எழுகின்றது. இவற்றை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக்குகின்றன.

மக்களின் உரிமைகள் புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடக் கூடியது என்றால், மக்கள் விரோத கொடூரத்தை நாம் அவர்களின் சொந்த கூற்றின் ஊடாகவே புரிந்து கொள்ளமுடியும். அதி புத்திசாலியாக தனிமனித வழிபாட்டின் மூலம் நிறுவ முனையும் புலிகளின் தேசிய "மேதகு" தலைவர் பிரபாகரனினதும், புலிகளினதும் "தணியாத தாகமான தமிழீழக் கோரிக்கை" தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திர மறுப்பில், அதன் கல்லறையின் மீதே கோரப்படுகின்றது. தமிழீழம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, புலிகளை அரசியல் அநாதையாக்கி விடுமல்லவா. அதனால் புலிகள் தமது பாசிச தனிமனித சர்வாதிகார அதிகாரத்தில் மக்களை துப்பாக்கி முனையில் மந்தைகளாக, வாய்பொத்தி கைகட்டி தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். இதைததான் ஏகபிரதிநிதித்துவம் என்கின்றனர்.