Wednesday, May 10, 2006

குவியம் - 27

Climax
Britney's orgasmic climax
Blaine's oopsgasmic anticlimax

What changed in the tiny red cells?

CWould the sprinkled strains
from the dirty auto that
got blasted on my home
tell me?
Or cwould
the forgotten bunch of five
banana under the noon sun?

Tell me,
what got changed in those tiny red cell counts!


'06 May 10, Wed. 13:36 EST
Photo Courtesy: Yahoo!News

7 comments:

இளங்கோ-டிசே said...

:-(((

SnackDragon said...

பெயரிலி உங்கள் வீட்டை இப்படிப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும் என்று சிறிதும் நினைக்கவில்லை..

-/பெயரிலி. said...

கார்த்திக்,
முச்சக்கரவண்டியிலே வந்து இறந்துபோன ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்களினை எண்ணிப்பார்க்கையிலே வீட்டுச்சேதமொன்றும் வருத்தத்துக்குரியதல்ல. (அப்படி வருத்தம் வருமானால், வெட்கப்படத்தான் வேண்டும்)

சொல்லப்போனால், அதிலே உற்றார்கள் உயிர்பிழைத்ததற்கும் அதன் பின்னான இராணுவச்சுற்றிவளைப்பிலே எதுவிதமான அனர்த்தமும் நிகழாததை எண்ணி மகிழ்ச்சியடையவேண்டும்.

நமக்கென வரும்வரைக்கும் இதுபோன்ற செய்திகளைப் பற்றி மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பிளே(ய்)னின் நீர்ச்சாகசம் தோற்றதையும் பிரிட்டனி இரண்டாம் முறை கருத்தரித்ததையும் 'உடையும் செய்திகளிலே' (breaking news ;-)) பார்த்துக்கொண்டு அடுத்த வேலை/வேளைக்கு நகரும் மனப்பாங்கிலே ஒரு வெடிப்பு இப்படியான தருணத்திலேதான் வருகிறது. சேரனின் உயிர்பிழைக்க ஓடுகின்றவர்கள் குறித்த கவிதை ஒன்று கடைசியிலே "உலையிட்ட அரிசி"யைப் பற்றின குறிப்போடு முடியும். இப்படியான கவிதைகளுக்கான கள/உளக்காலம் எண்பதுகளோடு முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தேன். ஆனால், எண்பதுகளோடு நாட்டினை விட்டு நீங்கிவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு அந்த மனநிலையிலிருந்து இப்படியான குருதி, வாழைப்பழச்சிதறல்களைக் காணுகையிலே அம்மனநிலை அகலாதது உணரக்கூடியதாகவிருக்கிறது.

SnackDragon said...

வீட்டின் சேதம்பற்றி பெரிதாக நானும் எண்ணவில்லை. ஆனாலும் ஒரு குண்டு வெடிப்போடு,வாசலில் ரத்தப்பூச்சோடு முதன் முறை பார்க்கக்கூடிய இலங்கையின் சாத்தியத்தைச் சொன்னேன். மேலும் இச்சம்பவத்தில் (அல்லது இது போல்) குழப்பக் குண்டுகளுக்கிடையில் மாட்டிக்கொள்பவர்களை பற்றி ஒரு குழப்பமான கவலையுறுதல் மனநிலையே உருவாகிறது. முழுமனதால் நினைத்தாலும் அதைத்தவற ஒன்றும் செய்யவியலாத நிலை. :-(

இதற்கிடையில், தமிழக தேர்த்லைஒட்டி தமிழர்சார்பாக தமிழக தொலைகாட்சி அலைவரிசைகள் காட்டிக்கொண்டு ஒட்டு சேகரிக்கும் கே(அ)வலம் வேறு. எருதும் காக்கையும் என்றுமே அப்படித்தான் போல கிடக்கு. :-(

SnackDragon said...

//இதற்கிடையில், தமிழக தேர்த்லைஒட்டி இலங்கைத்தமிழர்சார்பாக // என்று வாசிக்கவும்

Thangamani said...

solvathaRku ethuvum iruppathillai sila nerangalil. appadiththaan ippoothum. :-(((

Anonymous said...

:( பல சந்தர்பங்களில் ... அனைத்தையும் பார்த்துவிட்டு மௌனமகி, .... கனத்த நினைவுகளுடன் இருந்துவிட தான் முடிகிறது...
நாளந்தம் ... இழக்கப்படும் உயிர்களும்... தெருவில் பொகும் போது எப்பொது எது நடக்கும் என்றே தெரியாத ஒரு நிலையும்...
:(