Wednesday, July 13, 2005

குவியம் - 8

முகமூடிகளின் தேடுகை

அவர்கள்
முதலில் தலித்துகளைத் தேடிக் கலைத்தார்கள்
நான் தொடங்கிப் பேசினேன்
நான் தலித் இல்லை

தொடர்ந்து
முஸ்லீங்களைத் தேடி வளைத்தார்கள்
நான் இன்னும் பேசினேன்
எனக்கு மதம் இல்லை

பின்னர்
தமிழைத் தேடி அழித்தார்கள்
நான் தொடர்ந்து பேசினேன்
நான் தமிழ்த்தேசத்திலேயே இல்லை

அடுத்து
மறையா மனிதர்களில் கறை தேடி வந்தார்கள்
நான் விடாமற் பேசினேன்
நான்தான் மனிதனே இல்லையே

கடைசியாக,
களைக்காமல் களை பிடுங்கிப்பேசுகிறவனுக்கு
புலி வரியிழுத்து வால் பூட்ட வந்தார்கள்
எனக்காகப் பேச அப்போதும் தெருவில்
கலைந்த தலித்துகள் இருந்தார்கள்
அழிந்த தமிழ்த்தேசியர் இருந்தார்கள்
வளைந்த முஸ்லீங்கள் இருந்தார்கள்
அடிபட்டும் அசையா
ஆயிரம் முழுமனிதர் நின்றிருந்தார்
முஷ்டி மடித்து முழக்கி,
"சங்கே முழங்கு!
பொங்கு மானுடத்துக்கு நன்றே வாழ்வென்று
முழங்கு வெண்சங்கே முழங்கூஉ!"

46 comments:

-/பெயரிலி. said...

தாங்சூ கோயிஞ்சாமி-9D(alit)T(amil) Camp ;-)

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
சன்னாசி said...

ம்?
ஏதோ விளங்குவது போலிருக்கிறது. நீங்கள் பதிலளிக்கச் சிரமப்பட வேண்டாம் ;-)

SnackDragon said...

puriyalaiyee enna thidiirnu?

Anonymous said...

இதன் பல்வேறு வடிவங்களை வலையில் படித்தேன். ஆனால் இதுதான் உள்ளதிலேயே சிறப்பானது என்று கூற நான் தயங்கமாட்டேன். ஏனெனில் இது ஒரு அதிநவீனத்துவக் கவிதை... :)

-/பெயரிலி. said...

கோயிஞ்சாமி கூடாரம் சொன்னா கரீட்டுத்தான். மந்திர்ஸ்வாமி உதிர்த்தால் மட்டுமே ஒரு தடவை சொன்னால் ஆயிரம் தடவை சொன்னதுபோல அவதானமாக யோசிக்கவேண்டும்
9D(alit)T(amil) Camp ;-)

SnackDragon said...

கோயிஞ்சாமிகள கீசறதுக்குன்னு ஒரு அகாலித்தளமோ காலித்தளமோ ஆரம்பிக்கபோறன் பாத்துக்கிட்டே இருங்க.. :-) சரி எதோ நடக்கட்டும் நல்லதுன்னா சரிதான்.

-/பெயரிலி. said...

/கோயிஞ்சாமிகள கீசறதுக்குன்னு ஒரு அகாலித்தளமோ காலித்தளமோ ஆரம்பிக்கபோறன் பாத்துக்கிட்டே இருங்க.. /

தம்பீ! பார்த்துப்பார்த்து... ஆறுதலாக... சொல்ற வேகத்தைப் பார்த்தால், அகாலதளத்திலே கால் நின்று பேசுகிற மாதிரியான பயம் வருகிறது.

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

தலித், முஸ்லிம், தமிழ், மனிதம் -> இதையெல்லாம் பேசுவதற்கு காரணம் நீங்கள் வரியுடன் களைக்காமல் களைப்பிடுங்கிப்போடும்போது வருவார்கள் என்ற காரணத்திற்காகத்தானோ? ;)

அப்புறம் ஊதற சங்கு யாருக்குன்னு தெரிந்தும் வைத்துகொள்ளுங்கள். எந்த புத்துல எந்த பாமோ? :))

.:டைனோ:.

-/பெயரிலி. said...

வாங்க டைனோ,
நான் உடைத்து வரிவரியாகச் சொன்னதை நீங்கள் சேர்த்து ஒரே வரியாக ஆமோதித்த பிறகு, நீங்க சொல்லி நான் என்னத்தை மறுப்பது?! ;-) நீங்கள் சொன்னால் தவறிருக்காது.

SnackDragon said...

/இதன் பல்வேறு வடிவங்களை வலையில் படித்தேன்./

நீங்க எதைத்தான் படிக்கல.
தங்கமணி, இது என்ன பெரிசு இன்னும் அதிதீவிரமுன்நவீனத்துவமா எளுத முடியுமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் நான்.

SnackDragon said...

/அப்புறம் ஊதற சங்கு யாருக்குன்னு தெரிந்தும் வைத்துகொள்ளுங்கள். எந்த புத்துல எந்த பாமோ? :))/
எனக்கு இதுல ரெண்டு சந்தேகம்
ஒன்னு, பாம்புக்கு மகுடிதானே சாதாரணமா வாசிப்பாங்க... சங்கு என்று டைனோ சொன்னாலும் குற்றம் குற்றமே!!!
ரெண்டு, இந்த மாதிர் அந்தகாலத்துல டைனோவுக்கு ஊத ஏதாவ்து இருந்திருக்குமா?

Anonymous said...

>>>>பாம்புக்கு மகுடிதானே சாதாரணமா வாசிப்பாங்க

பாம்புக்கு மகுடி அத ஏமாத்தறதுக்குதான்... ஆனா சங்கு எல்லோருக்கும் பொது!
அப்புறம் அது 'பாம்பு' அல்ல 'பாம்'. :)

>>>>அந்தகாலத்துல டைனோவுக்கு ஊத ஏதாவ்து இருந்திருக்குமா?

இதை டைனோசாரைப்பத்தி ஆராய்ச்சி செய்யறவங்கதான் சொல்லணும்!

.:டைனோ:.

SnackDragon said...

டைனோ,
அப்படியே கொஞ்சம் கண்ண மூடிகிட்டு , ஒரு பெரிய போஸ்ட்கம்பம் சைஸ் குழல் ஒன்ன 10 பேர் ஊதற மாதிரியும், ஒரு ஆயிரம் பேருக்கு நடுவுல நடுசென்டர்ல ஒரு டைனோ அப்படியே இசைய கேட்டு மயங்குறாப்புலையும் கற்பனை பண்ணி பாருங்களேன். அடடா.. இந்த ஐடியாவ மட்டும் ஸ்பீல்ப்ர்க் கிட்ட வித்திருந்தன்னா என்னிக்கோ மில்லினர் ஆயிருப்பேன். :-)))

-/பெயரிலி. said...

/அப்புறம் அது 'பாம்பு' அல்ல 'பாம்'. :)/
இந்தப் பாம்(பு)குழப்பத்துக்கே என் நெத்திக்கு பாம்குழம்பி தேவைப்படுகுது. குழப்பாதீங்கையா... பிறகு
அவர்கள்
இடையில் பாமைத் தேடிவந்தார்கள்.
நான் படமெடுத்துப்பேசினேன்
நான் பாம்புகூட இல்லை

என்கிற ரேஞ்சில அடுத்த போஸ்டு அசல் பிட் நெய்யில ரோஸ்டு பண்ணி, இண்டர்நெட் சூப்பர் ஹைவே ரைவேல போட்டுடுவேன். கபதார்.
;-)

5:31 PM

SnackDragon said...

/பாம்குழம்பி தேவைப்படுகுது./
குழப்புறது நீங்கதான் அண்ணே ..இது என்னது?

Sri Rangan said...

இரமணி,வணக்கம்!கவிதை நன்றாகவுள்ளது.

-/பெயரிலி. said...

/வணக்கம்!கவிதை நன்றாகவுள்ளது./

ஸ்ரீரங்கன், இஃது உங்களுக்கே நல்லாக இருக்கிறதா? எத்தனை காலம் இந்தக் கவிதையின் மூலத்தை அப்படியே பேசிப்பேசி அலுத்திருப்போம். இங்கு நான் ஊற்றியதிலே ஒத்திக்கொண்டதைப் பார்த்து நன்றாக இருக்கின்றதென்பது மூலக்கவிஞருக்கு இரத்தம் கொட்டும் வகையான அவமானமல்லவா? :-(

SnackDragon said...

இன்னும் 10 நிமிசம் ஆபீஸ்ல உட்காரணும். :-( அதுவரை,

/அவர்கள்
இடையில் பாமைத் தேடிவந்தார்கள்.
நான் படமெடுத்துப்பேசினேன்
நான் பாம்புகூட இல்லை /

அவர்கள்,
இடையில் குழலெடுத்து ஊதினார்கள்
நான் ஐடிசி-ல் வேலைசெய்யவில்லை
நான் லைட்டர் கூட வச்சுக்கல்லை!!

-/பெயரிலி. said...

/பாம்குழம்பி/ என்றால் paste ஆக இருக்கும் (Tiger) balm. தமிழிலேயே TigerBalm என்பதை எழுதியிருப்பேன். ஏற்கனவே நாட்டுமக்கள் அப்பாவித் தமிழ்க்குடிமகன் மீது சுமத்திய வரி போதுமையா போ..டும்.

SnackDragon said...

அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்
எனக்கு தலைவலித்துக்கொண்டே இருந்தது
நான் புலிக்குழம்பி கூட இல்லை. ... போ (கிறேன்) :-)))

-/பெயரிலி. said...

புலிக்குழம்பியா? தப்பினேன். நல்ல காலம் திரும்ப பாடலின் ஆரம்பத்துக்கே பதின்மூன்றாம் பின்னூட்டத்துக்கே போய் டைகர் பாம் என்று தொடங்காமல் விட்டீர்களே அதுபெரிசு.
;-)

Anonymous said...

>>>>...இசைய கேட்டு மயங்குறாப்புலையும் கற்பனை பண்ணி பாருங்களேன்.

அட இதுகூட பாக உந்தி!

>>>>என்னிக்கோ மில்லினர் ஆயிருப்பேன்.
இப்பகூட லேட் இல்ல... ஸ்டிவன் ஸ்பீல்ப்ர்க் இல்லாட்டாகூட ஒரு ஸ்டிவன் சைய்கல் கட்டாயம் உங்களை மில்லிநார் ஆக்குவார்!

>>>>குழப்பாதீங்கையா

நானா? உங்களையா? கார்திக்ராமாஸ்... நீங்களாவது கேக்கக்கூடாதா இந்த அநியாயத்தை?
தேவுடா... தேறுடா! :)

>>>>பாம்குழம்பி
அதிலும் வரியுண்டா? (அதற்கும் 5% வரியுண்டென்றுவிடாதீர்!)

.:டைனோ:.

-/பெயரிலி. said...

தேறுற கேஸா? வெறிக்க வெறிக்க அத்தனை மூடியும் உடைத்துக்குடிக்கவேண்டிய கேஸ் அண்ணே

-/பெயரிலி. said...

இத்தோட இருபத்தி எட்டாம் கொமண்ட். அப்பிடியே போய் செல்வராசு அண்ணை ரைவ் இன் பொதுக்கூட்டத்திலே குடுத்த தசரதசத்தியத்தைக் கேட்ட கைகேயிக்காக எடுக்க முதலிலை, நான் என்ரை பழைய ரெக்கோட்டு 2115 பின்னூட்டத்தையெண்டாலும் தாண்டவேணும். பின்னூட்ட எண்ணிக்கைதான் முக்கியம் முக்குறோம் முக்...

Anonymous said...

2115 ? ஜுஜூபி!

.:டைனோ:.

-/பெயரிலி. said...

/2115 ? ஜுஜூபி!/

ஹிஹி.. சரிதான்; இதெல்லாம் ஜுஜூபி, முழு ஜிலேபியே இருக்குதுங்குறது உங்களுக்குத் தெரியாதா?

(ஜூஜூபி என்றால் என்ன? பத்துத்தரத்துக்குமேலை நானும் இந்தச்சொல்லைப் பாவிச்சிட்டன். ஆனால், சத்தியமாக என்ன அர்த்தமெண்டு தெரியாது. கறுப்பி போடுகிற (*_*) போல, இதுக்கும் எனக்கு அர்த்தம் ஆயி இல்லா :-(()

Anonymous said...

ஜுஜூபி எண்டால் ஜிலேபியென்று கதைக்கிறீர்களே. இடியாப்ப சிக்கல், ஆளைவிடுங்கள்! :)

(*_*) -> பெண்ஈய குறியீடா இருக்குமெண்டு நினைக்கேன்!

ஆனாலும் ஜுஜூபியை கறுப்பியிண்ட ஸ்மைலிக்கு கொம்பேர் செய்வது த்ரீ மச்!

.:டைனோ:.

-/பெயரிலி. said...

தாங்க் யூ வெரி மச் விளக்கத்துக்கு. இந்த ஜுஜூபி விளக்கத்துக்கு ஜவ்வுமிட்டாயே மேல் ;-)

SnackDragon said...

ஜுஜுபி என்றால் என்ன?
ஆகா..ச்ச்ச்..ச்ச் காலையில் வேலைக்கு வந்தவுடன் மூளைக்கு வேலை.

அதாகப்பட்டது ஜு ஜு பி யிலே, முதல் Z00 வில் இருக்கும் மிருங்கங்களை குறிக்கும். இரண்டாவது ஜு ..ஜூமாக்ஸ் காட்டுகின்ற மனிதனைக் (ஐ.. மனிதா?) குறிக்கும். 'பி' இரண்டையும் "பி"ரித்து அறியக்கூடிய அறிவைக் குறிக்கும். அதாவது , மனிதன் விலங்கிருந்து வந்தாலும் , ஒரு சமூக விலங்காக இருந்தாலும்,
சில நேரங்களில் "மனிதன்" விலங்கைவிட கேவலமாக அறிவிழந்து போகிறான் என்பது பொருள். எனவே மனித ரூபத்தில் இருக்கும் விலங்கை பிரித்தறி(ரி)ய வேண்டியுள்ளது.

ஒரு சோடா குடுங்கப்பா...

இதிலே கவு(னி)க்க வேண்டிய 2.

1. தனித்தமிழ் பாவிப்பவர்கள் "சுசுபி" என்றுதான் எழுதவேண்டும்.
2. சுசுபி யை வன்மையாக பயன்படுத்த வேண்டுவோர் "சுசுபீ" என்றும் எழுதலாம்.

:-))))

கறுப்பி said...

சுசுபி என்பது ஒரு சாப்பாட்டு வகையா கார்த்திக்? செய் முறை தெரியுமா? அர்றா! அர்றா! அர்றா.

மாயவரத்தான் said...

ஆக மேலே உள்ளது என்ன கண்றாவி கவிதையாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். (தமிழிலே எழுதுங்கன்னு சொன்னா கேட்டாதானே?!)

எங்கள் தங்கத்தலைவரின் கண்டுபிடிப்பான 'ஜுஜுபி'யை ஆளாளுக்கு ஜிலேபி ரேஞ்சில் பிய்த்துப் பிடுங்க வேண்டாம் என்று வேண்டி விரும்பு கேட்டுக் கொள்கிறேன்.

எங்க ஏரியாவிலே தண்ணீர் மட்டத்துக்கும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப மேலே வரைக்கும் தாமரைக்கு ______ம், தண்ணீருக்கும் கீழே ரொம்ப _____________ வரைக்கும் தாமரை இலையும் உண்டு தெரிய்மா பெயரிலி சார்..?! (பின்னூட்டங்களில் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுக்க ஆரம்பித்ததே நான் தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். - எதிலும் நம்பர் 1... மாயவரத்தான் வலைப்பூ... படித்து விட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?)

மாயவரத்தான் said...

கேட்க மறந்திட்டேனே... பின்னூட்டம் நம்பரை எப்படிய்யா பத்தாயிரக்கணக்கிலே காட்ட வைக்கிறீய்ங்க?!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

டைகர் பாம்
இது பாஸ்டனில் கிடைக்கிறதோ இல்லையோ பால்டிமோர் செர்ரிக்கு இப்போது உடனடி தேவை :)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

'தங்க தலைவர்' - அவரே ஒரு ஜுஜிபி :)

-/பெயரிலி. said...

/தமிழிலே எழுதுங்கன்னு சொன்னா கேட்டாதானே?/
தமிழுக்குத் தார் பூசாம, கன்னடம், மராத்தி கத்துக்கிற நேரத்துக்குத் தமிழை ஒழுங்கா வாசிக்கக் கத்துக்குங்க கத்துக்குங்கன்னு தொண்டையில தண்ணி வத்துற அளவுக்கு டாக்டர் ஐயாவும் தொல். திருமா அண்ணனும் சொன்னா கேட்டாத்தானே? :-(


/பின்னூட்டம் நம்பரை எப்படிய்யா பத்தாயிரக்கணக்கிலே காட்ட வைக்கிறீய்ங்க?!/
ஐயோ ஐயா தெரியாதையா நீர் இப்டி கேப்பீருன்னு..... -/பெயரிலி. வேஷம் போட்டான்; விளங்காம தமிழு குடுத்தான்; ஆனா இந்த வித்தைய கத்துக்கலையே கத்துக்கலையே!1 நானுந்தான் நடந்த வித்தைக்குக் காரணம் தேடுறேன் தேடுறேன் தேடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனா, பதில் தெரியல்லய்யா தெரியல்லையே!! என்னூட்டப்பதிவிலே பின்னூட்ட நம்பரு (எண்ணிக்கை என்போமா?) சரியாகத்தான் காட்டுகிறது. சிலவேளை தமிழ்மணம் என்றால் அதுதான் வலைப்பதிவு என்று எண்ணிக்கொள்கின்றவர்களிலே நீங்களும் ஒருவரா, சார்?

/பின்னூட்டங்களில் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுக்க ஆரம்பித்ததே நான் தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். - எதிலும் நம்பர் 1... மாயவரத்தான் வலைப்பூ./
பூவோ புழுவோ.. ஹுஸேனையும் தீபா மேத்தாவையும் ஆபாசம் பரப்புகின்றவர்களென்று அடித்து நொருக்கின தாமரைப்பூவாய் விரிந்திருக்கும் ஆளுங்கையா நீங்க. உங்க கூட வலைப்பூவில ஒண்ணுக்கிருக்க நானெல்லாம் போட்டிபோடமுடியுமா?
நானோ வென்றேன்? நீரே வென்றது!! இதுக்கெல்லாம் முலை திருகிக் குவியத்தைக் கொளுத்தாதீர்

;-)

மாயவரத்தான் said...

ஹலோ... நீங்களாவே எதையாச்சும் நெனச்சு அள்ளி வீசக்கூடாது. (அது சரி.. யாரந்த ஹுசைன், தீபா மேத்தா?)

பதிலுக்கு நீங்க 'அடித்து நொறுக்கின' ஆளுங்களையெல்லாம் எடுத்து வீசினா பூ எது புழு எதுன்னு நாறிடுமில்ல?!

ரவி சீனிவாசு அண்ணாச்சி.. தங்கத் தலைவர் ஜுஜுபியா? ஸொடமக் அல்சருங்கோவ்..!!

-/பெயரிலி. said...

/பதிலுக்கு நீங்க 'அடித்து நொறுக்கின' ஆளுங்களையெல்லாம் எடுத்து வீசினா பூ எது புழு எதுன்னு நாறிடுமில்ல?!/

அப்பாடா இத்தனை நாள் நெத்தலிப்பயில்வான் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அடித்து நொருக்கின ஆளுங்க பட்டியல்போட்டால் எனக்கு இனி அடித்து நொருக்கப்போகும் ஆட்களுக்குப் பந்தா & பாவ்லா காட்டிப் பயமுறுத்த வசதியாக இருக்கும். இதுக்கெல்லாம் நானே என் பொன்னான நேரத்தைச் செலவழிக்க எங்கே கிடைக்கிறது? தண்ணீரையும் தாமரைப்பூத்தண்டையும் அளந்து நேர் நிமித்திய தண்டுயரம் நீரின் ஆழமாம் என்று நீட்டலளவை அத்தாட்சிப்பத்திரம் கொடுக்கவே பெண்டெடுக்குதுங்க. உங்களைப்போல வாலண்டியர், வாலண்டைன்கள் பார்த்துப் பட்டியல் போட்டுக்குடுத்தா, மேயாவரம் பேரைச் சொல்லி யூஸ் பண்ணிக்குவனில்லே?

நாற்றம் நல்லதுக்குமாகும் கெட்டதுக்குமாகும். (இதுக்குத்தான் ராமதாஸ் ஐயா சொல்றதைக் கேட்டு இராம.கி ஐயா போன்றவர்களிடம் தமிழ்ப்பதம் கத்துக்கச்சொல்றோம். "தினம் ஒரு கடலை" என்றாவது யாராவது ஒரு தமிழ்நாய் ஒரு கடலை பதம் பார்த்துப் போடலாமேயென்று எமக்கு நிறையத் தவலை.. அடச்சீ! கவலை உண்டு). எதுக்கும் மூக்கைச் சளி கிலி பிடிக்காமல் வைச்சுக்கிட்டீரென்றால், நாற்றத்தில் நல்லது/கெட்டது பகுக்க ஆகுமன்றோ?

-/பெயரிலி. said...

/ஹலோ... நீங்களாவே எதையாச்சும் நெனச்சு அள்ளி வீசக்கூடாது./
அடடா! கிள்ளிப்போட்டதை வள்ளென கௌவிக்கொண்டு, நீங்களாகவே எதையோ நெனைச்சு இடிச்சு அள்ளி வீச்(ங்)க்கூடாது

/(அது சரி.. யாரந்த ஹுசைன், தீபா மேத்தா?)/
வரப்பனையது வெள்ளம்
வெள்ளத்தனையது தண்டு

for some people, Ignorance is a bliss
(இந்த இங்கிபிலீசாச்சும் வெளங்கித்தொலைக்குமான்னு பாக்குறேன்).

வெகுசூன்யமே பரிநிர்வாணம்.
கொழந்தே நன்னாயிரு!

-/பெயரிலி. said...

தமிழ்மணம்-மன்றம் பகுதியிலே .:டைனோ:. இட்ட கீழ்வரும் குறிப்புக்கான என் பதிவு.

dyno எழுதியது: வியாழன் ஜூலை 14, 2005 9:45 am அஞ்சலின் பொருள்: வலைப்பதிவர்களின் கவனத்திற்கு!

--------------------------------------------------------------------------------

அன்பு பதிவர்களே!

வலைப்பதிவு இடும் உங்கள் நேரம் எத்தனை பொன்னானதோ அதைப்போலவே மறுமொழியிடும் என்னைப்போன்ற வாசகர்களின் நேரத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். போலி பின்னூட்டங்களையோ, ஆபாச பின்னூட்டங்களையோ நீக்குவது நீக்காதது அவரவர் விருப்பம். ஆனால் கண்ணியமான முறையில் உங்கள் கருத்திற்கு மாற்றாக இடப்படும் பின்னூட்டங்களை நீக்கும் போது பின்னூட்டமிட்டவருக்கு அதைப்பற்றி தெரிவிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரீகத்தை கடைபிடிக்கவேண்டும். நேரமிருப்பின் அதை நீக்கியதிற்கான காரணத்தையும் குறிப்பிடல் இன்னும் சிறப்பு.

ப்ளாக்கர் பதிவுகளில் பின்னூட்டம் நீக்கப்பட்டால் அந்த இடத்தில் நீக்கப்பட்டது என்ற அறிவிப்பாவது இருக்கும். ஆனால் வோர்ட் பிரஸ் போன்ற செயலிகளை பாவிப்பவர்களுக்கு அந்த வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால் அச்செயலிகளை உபயோகிக்கும் பதிவர்கள் பின்னூட்டம் நீக்கப்பட்டால் அதை அறிவிக்க வேண்டியது நாகரீகமான செயலாக இருக்கும்.

இந்த குறைந்தபட்ச நாகரீகத்தைகூட உங்களிடம் எதிர்பார்ப்பது தவறெனில் தாமரைத்தண்டின் உயரம் தண்ணீறளவே!


.:டைனோ:.

------------
என்னுடைய இந்தப்பதில் தமிழ்மணம்-மன்றத்தின் நோக்குக்கும் எல்லைக்கும் அடங்கக்கூடியதில்லை என்பதால், இங்கே பதிவு செய்திருக்கின்றேன்.

/தாமரைத்தண்டின் உயரம் தண்ணீறளவே!/

இந்தச்சொற்றொடர் ஒத்த சொற்றொடரை -/பெயரிலி. ஆகிய நானும் பயன்படுத்தி, சந்தர்ப்பவசமாக .:டைனோ:. ஆகிய அன்பரும் என்னுடைய [u]அலைஞனின் அலைகள்: குவியம் - முகமூடிகளின் வருகை[/u] [url]http://wandererwaves.blogspot.com/2005/07/blog-post_13.html [/url] பதிவிலே நேற்று பின்னூட்டமிட்டிருப்பதால், மேலிருக்கும் .:டைனோ:. இன் வேண்டுகோள், சிலருக்கு .:டைனோ:. இன் பின்னூட்டம் எதையாவது நான் மேற்கூறிய என் முகமூடிகளின் வருகை பதிவிலே அழித்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தினைத் தரலாம்.

அப்படியாக எந்தவிதமான அழித்தல் ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை (நான் வேறு சில என் பதிவுகளிலே நீக்கிய, மனிதன் என்ற பெயரின் கீழ் வந்த "ஆ!பாச"ப்பின்னூட்டங்கள் இட்டவர் .:டைனோ:. இல்லை என்ற நம்பிக்கையிலே எழுதுகிறேன்) என்று இத்தால் உறுதியளிக்கின்றேன்.

முகமூடி said...

// முகமூடிகளின் தேடுகை // காப்பிரைட் வாங்கப்பட்ட என்னோட பேர இந்த மாதிரி நீங்க பாட்டுக்கு எனக்கென்னான்னு எழுதிடறீங்க... சில அறிவு மேதைங்க என்னோட பேரத்தான் சொல்றீங்கன்னு என்கிட்டே கேள்வி கேக்குதுங்க... இனியாச்சும் முகமூடிங்கறதுக்கு பதிலா பெயரிலின்னு சொல்லி பழகுங்க...

புதிய தலைப்பு // பெயரிலிகளின் தேடுகை //

-/பெயரிலி. said...

சாரா, வாங்க; நன்றி.

முகமூடி,

/புதிய தலைப்பு // பெயரிலிகளின் தேடுகை ///
what's in the NAME OF THE ROSE? THE SECRET STORY OF THE PROTOCOLS OF THE ELDERS OF ZION is that all are for
THE MYSTERIOUS FLAME OF QUEEN LOANA

பெயரிலிகளுக்கு ஆட்சேபணையிருந்தாலும் இல்லாவிட்டாலும் இனி தலைப்பு, "பெயரிலிகளின் தேடுகை" சொல்லிக்கொள்வோமே. ;-)

-/பெயரிலி.

மாயவரத்தான் said...

அது சரி... அதான் உள்ளே நுழைஞ்சிட்டோமில்லே... அப்புறம் என்ன கீழே கவுண்ட்டரிலே உள் நுழைவதும்,நுழையாததும் உங்கள் விருப்பம்ன்னு ஒரு உதாரு?!

அப்புறம் இன்னொரு மேட்டரு... எங்களுக்கு இங்கிலிபீசுலே சொன்னா வெளங்காது...ஹிந்தியிலே சொல்லுங்க. எங்க பரம்பரையே ஹிந்தி எதிர்ப்பு பரம்பரை. அதனால எனக்கு ஹிந்தி தான் நல்லா வரும். இப்போ லேட்டஸ்டா இங்கிலீஸ்க்கு எதிரா தற்ச் சட்டியை எடுத்திருக்கிறதால என்னோட வாரிசுகளுக்கு இங்கிலீஸ் நல்லா வரும். பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே என் மகனுக்கு மந்திரி பதிவி உண்டுங்கோவ்.. (இல்லாட்டி பேரனுக்கு!)

-/பெயரிலி. said...

/அப்புறம் என்ன கீழே கவுண்ட்டரிலே உள் நுழைவதும்,நுழையாததும் உங்கள் விருப்பம்ன்னு ஒரு உதாரு?!/

அட நீங்க ஒருத்தரு. இண்டார்நாசனலு லாயரு சீனிவாசு சாரு போட்டாத்தான் பொருத்துமுங்கிறாரு. நீங்க மூன்று முகத்தில நெத்திக்கண் எரிச்சு, "இன்னா உதாரு"இன்னு ஒதைக்குறீங்க. அய்யா, இடைல சும்மா தம்பாட்டுக்கு பன்னு துன்னுக்கிட்டிருந்த பன்னி சடையன் நான் இன்னா பண்ணுவேன்? பீச்சாங்கைப் பக்கம் ஓடுவனா? பீச்சாங்கரைப்பக்கம் ஓடுவனா? கொழப்புறீங்களே!

பிரிட்டன் பாழிமெண்டலிலே உங்க பேரனுக்கு சும்மா மந்திப்பதவியும் கெடைக்கட்டும்; அவரோட பேனுக்கு பிரதம மந்திப்பதவியும் கெடக்கட்டும். நானா வேணான்னேன். ஒங்க துட்டில லண்டனில நாஷ்டா பண்ண பன்னி சடையனுக்கு பன்னும் டீயும் வாங்கித் தருவீங்கன்னா, பேரனுக்கு நூறு அவரோட பேனுக்கு ஆயிரமுன்னே எலெச்சன் நோட்டிசும் ஒட்டி, கட்டவுட்டும் போட்டு திருட்டுவாக்கும் போட்டு வர்றான். துன்ன பன்னும் டீயும் பீடியும் கட்டிக்க கைலியும் குடுக்கிறியா நய்னா, தோ, மூணாம் பெருஞ்சதுரம் நாலாம் சிற்சதுரதுலருந்து பன்னி சடையன் லண்டனுக்கு ரெடி.

SnackDragon said...

ஒன்னுமில்ல சும்மா 50 வது பன்னு என்னுது :-)