Thursday, July 07, 2005

கந்தை - 29


Chain Gang of Eight


நேற்றிரவு இதனைப் பதிவிலே போட முயன்று, Hello ஒத்துழைக்காததால் விட்டுப்போய், காலையிலே போட வந்தால், கீறியிருந்த ஒற்றை இரத்தத்துளிக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கிறது :-(

14 comments:

SnackDragon said...

/ இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கிறது :-(/
அது என்ன?

-/பெயரிலி. said...

/அது என்ன?/
இந்த G-8 இனையும் ஒலிம்பிக் 2008 தேர்வினையும் முன்னிறுத்தியதிலே உலகக்கவனத்தினை ஈர்த்திருந்த இலண்டன்மீது திட்டமிட்டு நடந்திருப்பதாகத் தெரியும் குண்டுவெடிப்பின் இரத்தத்துளி :-(

முன்னர் நான் குறிப்பிட வந்த இரத்தத்துளி G-8 இன் இதுவரைகால நடைமுறையினைக் குறியீடாக்குவது. ஆனால், நிகழ்ந்திருப்பது, இலண்டன் மாநகரிலே சிந்திய இரத்தத்தினைக் குறிப்பதாகிவிட்டது.

SnackDragon said...

புரிகிரது.
//G-8 இன் இதுவரைகால நடைமுறையினைக் குறியீடாக்குவது.//
நேரமிருந்தால் இது பற்றி சிறிய பதிவு ஒன்று எழுத வேண்டிக்கொள்கிறேன்.

இளங்கோ-டிசே said...

படமும், சொல்லவந்த கருத்தும் நல்லாய்த்தானிருக்கின்றது.இதைப் பார்க்கும்போது ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. படித்துக்கொண்டிருக்கையில், Gang of Four என்ற நால்வர் எழுதிய புத்தகம், Architecture and Designல் மாற்றத்தைக் கொண்டுவந்ததாய் கேள்விப்பட்டேன். அந்த புத்தகத்தோடு பின்நவீனத்துவத்தையும் தொடர்புபடுத்தி எங்கையோ வாசித்ததாய் நினைவு. ம்...படிக்கிற காலத்தில் ஒழுங்காய் படித்திருந்தால், இப்படி பெயரிலி, கார்த்திக் போன்றோருடன் 'கூலியில்லாமல்' மாரடிக்காமல் இருந்திருப்பேன். எல்லாம் காலம் செய்த அநியாயம் :-).

-/பெயரிலி. said...

கார்த்திக், G-8 பற்றி விரித்தோ சுருக்கியோ எழுதுமளவுக்குப் பொருளாதார அறிவு எனக்கு இல்லை.

"நைன் இலெவின்" என்ற பதம்போல, "செவன்செவன்" என்ற பதத்தினை உருவாக்கி மந்திரமாய் உருப்போட்டுப்போட்டு என்னென்ன எதிர்காலத்திலே அரசியல், ஆக்கிரமிப்பு என்ற தளங்களிலே நகருமென எண்ண இன்னும் பயமாகவிருக்கின்றது. G-8 இன் முக்கியமான முடிவுகளுக்கு முக்கியத்துவமில்லாமலே அமுங்கிப்போகப்போகிறது.

கறுப்பி said...

பெயரிலி, கார்த்திக் போன்றோருடன் 'கூலியில்லாமல்' மாரடிக்காமல் இருந்திருப்பேன். எல்லாம் காலம் செய்த அநியாயம் :-)
Good one DJ (*_*)

-/பெயரிலி. said...

இத்தால், டிசே தனது புதிய ப்ளொக்கர் குறியீடான படத்தினைக் கழற்றவேண்டுமென வன்மத்துடன் வற்புறுத்துகிறேன்.

SnackDragon said...

நல்லது பெயரிலி.G-8 பற்றி இணையத்தில் ஏதேனும் கண்ணில் பட்டால் உங்களுக்கும் சொல்கிறேன்.

//ம்...படிக்கிற காலத்தில் ஒழுங்காய் படித்திருந்தால்//
ஒழுங்காய் படித்திருந்தால் இப்படி காதல் தோல்விக்கவிதைகள் எழுதிதிரிந்துக்கொண்டிருக்கவேண்டாம். :-P

இளங்கோ-டிசே said...

//ஒழுங்காய் படித்திருந்தால் இப்படி காதல் தோல்விக்கவிதைகள் எழுதிதிரிந்துக்கொண்டிருக்கவேண்டாம்//
கார்த்திக், நீர் எனக்கு இரகசியமாகச் சொன்ன உமது கதைகளை அல்லவா நான் கவிதை'கள்' என்று கிறுக்கிக்கொண்டிருக்கின்றேன் :-).
.....
பெயரிலி,
எத்தடை வரினும் இப்படம் தொடரும் :-). நான் காசு கொடுத்து வாங்கின ரீசேட்டில் உள்ள படத்தைத்தான் போட்டனான்.

-/பெயரிலி. said...

/நான் காசு கொடுத்து வாங்கின ரீசேட்டில் உள்ள படத்தைத்தான் போட்டனான்./
ரீ சேட்டில போட்டிருக்கிற படத்துக்கே எடுத்தவரிட்டைக் காசு குடுத்து எடுத்துப்போடயில்லையெண்டு ரவிஸ்ரீனிவாஸ் உயிர்மையாய்ச் சொல்லுறார். நீரென்னவெண்டால் ப்ரோ, களவெடுத்த சாமானுக்குக் காசு குடுத்து வாங்கினதால, உம்மடைதானெண்டு நிக்கிறீர். 'சே'யைத் தமக்கென அடையாளப்படுத்தும் எல்லோரிலும் ஒருவரைத் தவிர, மற்ற எல்லோருக்கும் பெயரிலி எதிர்ப்புத் தெரிவிப்பான் ;-)

இளங்கோ-டிசே said...

//'சே'யைத் தமக்கென அடையாளப்படுத்தும் எல்லோரிலும் ஒருவரைத் தவிர, மற்ற எல்லோருக்கும் பெயரிலி எதிர்ப்புத் தெரிவிப்பான் ;-)//
Bro யார் அது, சித்தார்த்த 'சே' குவேரா வா :-)?

.:dYNo:. said...

Olympic 2012 Not 2008.

.:dYNo:.

-/பெயரிலி. said...

dYNo, thanks for the correction

SnackDragon said...

// ஒருவரைத் தவிர // + // பெயரிலி எதிர்ப்புத் தெரிவிப்பான் //சந்தேகமே இல்லை. இது சந்திரமுக_புலாவ்_ஆளுமையேதான். :-)