Friday, December 11, 2015

பீப்பா!

"பீப் ஸாங்க், மட்ட(ன்)ஸாங்க், சிக்கன் ஸாங்க், ப்ளீட் ஸாங்க், ப்ளீப் ஸாங்க்" என்று இந்த சாயாத கொம்பிரண்டிருந்தும் மேயாத மான், வுமான் ஸாங்கு எத்தனை ஸாங்குகளடி!!


'ஆனைக்கோட்டை'க்கு 'ஆனைக்கொட்டை' என்று ஆதார தமிழ்ச்சுருதி சுத்தமாக பிராய்டின் வழுக்கற்பஞ்சமத்திலே பேஸ்புக்கிலே எழுதின கைக்கிளை, கைப்புள்ள எல்லாம் சிம்புவின் **டை இற்கு எதிராகப் பொங்கி எழுவதைத்தான் 'செலக்டிவ் எமோசனலோசனலோ அம்னீசியா' என்ற தென்னிந்தியக்கதாநாய்களுக்குமட்டுமே கிளைமாக்ஸ், துணைமாஸ், பெற்றோல்மாக்ஸி,மிடிகளிலே இருமல், குக்கல், கக்கலுடன் கூடி வரும் அடுத்தார் அண்டமுடியாப் பெருவியாதி என்று கலாசலாகல்சலாக்காற்சராய்க்கமிசார்களின் எதிர்ப்புரட்சியாளர்கள் தமிழ்த்திரைப்பட ஞாபகத்திலே எழுதிப்போட்டால், உடனே பொங்கி எழுகிறவர்தாம் "முத்துச்சிப்பி வாய்திறந்து மோகம் கொண்டு களித்திருக்க,
கொட்டும் பனித்துளி விழுந்து கொஞ்சக்கொஞ்ச என்ன வரும்?.... முத்து ஒன்று பிறந்து வரும்" என்பதற்கு "ஆ!ஆவ்!" என்று ஏப்பத்துடன் ஏழு லைக், மூன்று சேரிடம் சேறு 'சேர்' நாலு பேரிலே இட்ட பேஸ்புக்மேய்மான்களும் ஊதுகுழல்மேய்ப்பர்களும்.



டாஸ்மாக் வாசலிலே குவிந்த பிரமிட் ஸ்கீமாகச் சரிந்து கிடக்கும் பேசாமடந்தைகள், பேஸ்புக் சிம்புவம்புதும்பு சண்டைக்காட்சிகள், தத்துவவிசாரங்கள் அனைத்தும் சிதைந்த சென்னை சிங்காரவழமைக்குச் சீறித் திரும்பியதைத் தெரிவிக்கின்றன. வாழ்த்து! கங்க்ராஜுலேஜன்ஸ் பார் யுவர் ஸ்பீட்டு ரிக்கவரீ& கந்துவட்டீ! வாட் எ டே! வாட்ஸ் ஆப் அக்கெய்ன் ஃபங்ஷன்டே!



கனடா வந்திருக்கும் பீப்பீ அநிருத்திடம் நேயர்விருப்பமாக பீப் ஸாங்க் கேட்கவிருக்கும் கொலைவெறி இரசிகர்களுக்கு "ஒய் திஸ்?" என்று குதர்க்கமாகக் கேட்காமலே முன்னேற்பாடான முற்கூட்டிய முற்போக்குவாழ்த்து! அல்லாரும் சைல்ட்கெரில்லாவின் கொரில்லா **டை படியுங்கோ! போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகத்தைச் சரியாகப் புரிந்து காணவும் வட்டக்குதத்தை வடிவேலும் சூரியும் காக்கவும் சேவற்கொடியோன் தாமரைச்சேவடிகளை, கார்த்திகைப்பெண்கள் காலடிகளை அம்முகட்சி அரசியல்வாதிகள்போல எட்டங்கம் நிலம்பட முட்ட நெடுஞ்சாண்கிடையாய்க் கடையேன் வீழ்ந்து வணங்கி விலகுகிறேன்.

பிகு:
1. 'சிம்புவின் **டை' என்று எழுதியதற்கு அன்னாரின் அவர் அப்பாரின் உயிருள்ளவரை உஷாவின் இரசிகர்கள் "யாரு ஊட்டுல பாட்டி? எங்க சுவத்துல பார்ட்டி!" என்று குதித்து மந்திக்கலம்பகம் பண்ணக்கூடாது. "அமைதிக்குப் பெயர்தான் சாந்தி" என்பதை நினைவிலே கொள்க.

2. தர்மவடிகளைத் தரவிரும்பும் திருவடிகள், முற்போக்குத்தமிழ்த்தேசியத்தின் பேரிலே அடியோலைகளை, குடவோலைகளை செல்லும் கையொப்பங்களோடு இடவும். நன்றி. மீண்டும் தருக.

3. திரைப்பட உலகத்தைச் சார்ந்த இந்நாள் & முன்னாள் பிரபல நடிகைகளை அரசியல்ரீதியாக விமர்சித்த சாதாரணர்கள் பெண்களென்பதாலேயான பாலியல் அவதூறு செய்தார்களென்று விசாரணை செய்ய அடைக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் அரசும் அதன் கைதியந்திரமும் அதேதிரைப்படப்பிரபலங்களுக்கு என்ன செய்யப்போகின்றன என்பது சுவராசியமானது. சில ஆண்டுகளுக்குமுன்னால், புவனேஸ்வரி உட்பட்ட சின்னத்திரைநடிகைகளை "தொலைக்காட்சி நடிகைகள் மட்டுமே விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், சினிமா நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லை"  என்று மட்டப்படுத்திய அகலத்திரைக்காந்தங்களிலே ஒன்றுகூட அரசசிறைப்பிடியியந்திரங்களைக் கவரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 

 Tourette syndrome is an individual disease, Anirudh-Simbu(-Who wrote this Mas(sdis)turbating piece of Sh it? Kabilan?) syndrome is a social disease.

-/.
டிசம்பர் 11, 2015.

நொண்டும்நாய்க்கு உதைதல்

பேஸ்புக்கிலே ஒரு துண்டுவிழியம். ஒரு பிச்சைக்காரச்சாமியாரை மாடுதுரத்தும் படம் உள்ளடங்கியது. இதிலே நடக்கும் சாமியார் ஆர் எஸ் எஸ் காரரோ இல்லை மாட்டிறைச்சி உண்டவரைக் கொன்றவர்களை ஆதரிப்பவரோ என்று நமக்குத் தெரியாது. அந்நிலையிலே இந்தபடத்துக்கு "வாய் இல்லாத ஜீவனுக்கும் தெரிந்து விட்டது இவர்களைப்பற்றி" என்று போடுகின்றவருக்கும் மாட்டிறைச்சி உண்டதாகச் சொல்லிக் கொன்ற கொடியவர்களுக்கும் என்ன வேறுபாடு? இருவருமே ஒற்றைப்படையாகத்தான் போட்டடிக்கின்றார்கள். "ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரம்" என்ற ஏ-ரணத்தின்படி இதனைப் பகிர்ந்து சமத்துவம் பேசும் பகுத்தறிவுப்பெட்டகங்கள், பொதுவுடமைப்புளியோதரைகள் இன்னொரு கொடுமை.

இவர்களைப் போன்றவர்களே, நடந்து செல்லும் ஆடையற்ற ஆண்டியை மூன்று சீக்கியர்கள் போட்டடிக்கும் படத்தினைப் பகிர்ந்துகொண்ட ஆட்களும். (ஆடையற்று வீதியிலே நடக்கிறவரை அகௌரவமெனச் சொல்லும் சட்டத்தின்கீழே பிடிப்பது வேறு; வீதியிலே தர்ம அடி கொடுப்பது வேறு).
மற்றைய மதத்தினரின்/நிலைப்பாட்டுடையவர்களின் கருத்துகளை வெளியே சொல்லவிடாமல் அமுக்குவது எதிர்க்கப்படவேண்டியது; ஆனால், அதேநேரத்திலே அப்படியாக அமுக்குவதிலே சம்பந்தப்படாத மற்றைய மதத்தவர்களை/கருத்துள்ளவர்களைப் போட்டடடிப்பது என்பது கையாலாகாத்தனமானது; நாமும் அதேபோல பொறுப்பற்று மற்றவர்களின் கருத்துக்காக அவர்கள் அடிவாங்கவேண்டுமென்பதாகவோ அமுக்கப்படவேண்டுமென்பதாகவோ வன்முறை எண்ணம் கொண்டது. இதற்கு விருப்புவாக்கிடுவதும் அதேவழியைக் கொண்டதுதான். மூடத்தனமான கருத்துகளை விமர்சிப்பது என்பது வேறு, அதனைக் கொண்டிருக்கக்கூடாது என்பது வேறானதில்லையா? கடித்த வெறிநாய்க்கு அடிக்கமுடியாமல், படுத்திருக்கும் நொண்டிநாய்க்கு உதைக்கும் வீரம் என்ன இழவு பகுத்தறிவோ? பொதுவுடமையோ? நடுநிலைமையோ?

-/.
நவம்பர் 16, 2015

தமிழினி மெல்லச் செத்தது

திருமாவளவன், டேவிற் ஐயா போலவே வாசித்ததிலும் கேள்விப்பட்டதிலுமே தெரிந்தவர் தமிழினி. 


பேஸ்புக்கிலே வேறொரு பெயரிலே ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் போர் கொன்று குவித்ததுதான் அதிகம் என்பதாகவும் மக்களுக்குத் தேவையானது சமாதானம் என்பதாகவும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிலே அவர் யாரென்றே தெரியாமல், இன்றைக்கும் அரசியலளவிலே ஒத்துப்போகமுடியாத (ஒரு கட்டத்திலே என்னைத் தன் நண்பர் பட்டியலிலிருந்து தடைசெய்த) கட்டித்த அரசியற்பார்வையுடனான எதிர்க்கருத்தினை எதிர்கொள்ளமுடியாது தடுத்துவிட்டுப்போகும் ஜெயன் தேவாவின் மனைவியார் என்ற புரிதலிலே அவர்போன்றே ஆரம்பம்முதலே அரசியல் அவருக்குண்டு என்பதாக அவருடனும் அ. ராமசாமியுடனும் வாக்குவாதப்பட்டேன். தொடர்ச்சியாக யேசு தேவனின் மகிமை பற்றி அவர் எழுதிக்கொண்டிருந்தபோது, இத்தனை நிகழ்ந்ததுக்குத் தேவன் என்னத்தைப் பண்ணினார் என்ற உணர்வேயிருந்தது. 


அந்நிலையிலே அவர் விடுதலைப்புலிகளின் மகளிரணி அரசியற்பொறுப்பாளாராக இருந்த தமிழினி என்றும் தெரியாது; அவருக்குப் புற்றுநோயிருந்தது பற்றியும் தெரியாது (தொடர்ச்சியாகப் புற்றுநோய் சம்பந்தமாகப் பதிவிட்டுக்கொண்டிருந்தார்). பிறகொரு தருணத்திலே அவர் இன்னாரென்று தெரிந்தபோது, எதற்கு அவரிலேற்பட்ட மாற்றமென்று புரியக்கூடியநிலையும் ஒரு வகையிலே ஏமாற்றமும் - நியாயமான போராட்டம் கடைசியிலே ஒரு முழுச்சுற்றுக்கு வந்து, போராடியவர்களை ஏமாற்றத்திலும் கையறுநிலையிலும் விட்டிருக்கின்றதே என்பதாலும் போராடியதே தவறு என்பதாகத் தோற்றங்காட்டச் செய்திருக்கின்றதே என்பதாலும்- ஜெயன் தேவா குறித்த இன்னொரு மரியாதைக்குரிய பார்வையும் உண்டானது.


தம்மை மையப்படுத்தித் தமிழ்க்கவி, சாத்திரி, கருணாகரன் போன்றோர் திரும்பிய நூற்றெண்பது பாகைச்சுற்றுக்குத் தமிழினி ஒருபோதும் போனதில்லை என்றே தோன்றியது- போராட்டம் குறித்துக் கடைசிக்காலத்திலே அவரின் அரசியல் நிலைப்பாட்டிலே எத்துணை மாற்றத்தினைக் காலமும் களமும் கொணர்ந்தபோதுங்கூட. அவருடைய நூல் வெளிவரவேண்டும்; அதுகூட, நாம் விரும்புகின்றதற்கு முழு எதிர்நிலையிலே போராட்டம் குறித்துச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், அதனைக் கருத்துநிலைக்கப்பால் தனியாளைக் குறிவைத்து விமர்சிக்கும் தகுதி ஒரு துப்பாக்கிக்குண்டைக்கூட அருகிலிருந்து பார்க்காமல், இன்னொரு நாட்டிலிருந்து ஈழமென்று விமர்சிக்கின்றவர்களுக்கு இருக்கமுடியாது. அதேநேரத்திலே ஒத்தோடி அரசியல் கொண்டவர்கள் இதனை எப்படியாக வைத்துத் தமது வாகனத்தை இன்னும் சில மைல்களுக்கு ஓட்டக்கூடும் என்பதினையும் அறிவேன். சாத்திரி இன்று காலையே தமிழினியின் இறப்பிற்கான காரணத்தைத் தமிழ்த்தேசியத்திலே திட்டித்தள்ளித் தன் அண்மைய அரசியல் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார்.


ஆனால், செய்தோம் நாமென்று ஆர்ப்பாட்டச் சத்தமின்றியே இழந்து போன இப்படியானவர்களின் -டேவிற் ஐயா, தமிழினி- நினைவுகள் சுயவிமர்சனத்தினைச் செய்துகொள்ளவும் சத்தமின்றியே செய்துகொண்டிருக்கவும் அங்குசமாகக் குத்துவன. எத்தனையை எத்துணை இழந்தோமென உணரவைப்பன; குற்றவுணர்வுகளிலே நள்ளிரவுகளிலே குத்திக்கிழிப்பன. அதேநேரத்திலே, ஏதோவகையிலே நிகழ்வதை நேர்படுத்தவும் முடுக்குவன.iஇணையத்திலும் முப்பது, நாற்பதாண்டு காலமாக நானறிந்த நண்பர்கள் - அனைத்து வகை இயக்கங்களிலும் பொறுப்பிலும் போராளிகளாகவுமிருந்தவர்கள்- சிலர் இணையத்திலே சத்தமேயின்றி தம்மாலானதைத் தனிப்படவோ வேறுவகையிலோ (அதிலே எனக்கு ஒப்புதலோ இல்லையோ என்பது வேறுவிடயம் ) செய்துகொண்டிருக்கையிலே வெறும் பேச்சைமட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியம் பேசுகையிலே சங்கடமாகவும் குற்றமாகவுமிருக்கின்றன. துரோகிகள், தியாகிகள் பட்டங்களை இதனாலேயே எவரிலும் அவர்களின் இன்றைய நிலைப்பாடுகளை வைத்துக்கொண்டு சுமத்த முனைவதில்லை. அவ்வகையிலே தமிழினியின் அறுதிக்காலநிலைப்பாடு அவரின் போர் காட்டிய துன்பம், ஆயுதப்போராட்டம் முடிந்த வாய்க்காற்புள்ளி, பற்றிய நோய் கொண்டு என்னைப் போன்றவர்கள் எதிர்பாராததாய் முற்றிலும் அரசியல்சார நியாயம் தரக்கூடியதென ஏற்றுக்கொள்ளமுடியாததாயிருந்தாலுங்கூட
அவரும் அவரினைச் சார்ந்தாரும் தேசியம், போராட்டம் என்பதன்பேரிலே கொடுத்த விலையிலே நுண்பங்கினைக்கூடக் கொடுத்திலோர் என்னைப் போன்றோர். 


அறுதிக்காலத் தமிழினி குறித்த வேறுவிம்பத்தினைச் சிலருக்குக் கொடுத்துவிடுவோமோ என்ற பேரச்சம் உள்ளே அழுத்துவதாலே இக்குறிப்பினைக்கூட இவ்வவக்கணத்திலே எழுதியிருக்கவேண்டுமோ தெரியவில்லை. ஆனால், எழுதாதிருந்திருப்பின், இன்றிரவும் நேற்றையதைப்போலொரு குற்றமும் வருத்தமும் நிறைந்த அவஸ்தையுடனானதாகவே இருந்திருக்கும். தற்காலிகமாகவேனும் பெயரளவிலேயும் செய்தியிலும்மட்டுமே நானறிந்த தமிழினி அவர்களுக்கான -சில நண்பர்களிடையேமட்டுமான- இவ்வஞ்சலிக்குறிப்பு அவ்வவஸ்தையைக் குறைக்கட்டும். 



-/.
நவம்பர் 18, 2015

பொருந்துகையை மீறிய பொருத்துகை


ஒன்றுதான் சொல்லத்தோன்றுகின்றது; 'இந்து'ப்பெண்களே, அடுத்தவர் சொல்லி நீங்கள் கேட்க உங்களுக்கு அறிவேதும் மங்கலில்லை என்றபோதும் சுட்டச் சொல்லவேண்டியதாய்க் கிடக்கிறது. முதலிலே ஶ்ரீனிவாஸன் ஶ்ரீனிவாஸன் போன்ற இந்துத்துவாக்களின் இலங்கை ஏஜென்றுகளிடம் உஷாராகவிருங்கள். 

சுயத்திலே பாதியை அஜித், விஜய்க்கும் மீதியை அனுமான், ஐயப்பனுக்கும் இறக்குமதிக்கும் சேர்த்து வரிகட்டிவிட்டு மற்றவர்களைப் பிழை சொல்லி என்ன பயன்?

எப்போதுமே இந்தியாவின் அடியைத் தண்ணீராலோ கண்ணீராலோ கழுவிக்கொண்டேயிருக்க, வாழைப்பழத்திலே ஊசி நுழைக்கும் இந்துயாவின் அடுத்த கட்டமே பாலாபிஷேகமும் புதுத்திரைப்படமும் புதுச்சாமிப்பாடமும். அடுத்தவீட்டுக்காரர் தன்வீட்டு நாய் மலம் கழிக்க ஏன் உங்கள் வீட்டுப்புற்றரை முன்றலைக் கேட்கின்றார் என்று எண்ணக்கூடாதா?

திருகோணமலை இந்து இளைஞர் அமைப்பு இந்துயாவின் புரட்சிப்படைக்கு ஆட்சேர்க்கவா இயங்குகின்றது? மத்தியகிழக்கிலே போராட ஐஎஸ்ஐஎஸ் இற்கு ஶ்ரீலங்காவிலே ஆட்சேர்க்கின்றவர்களுக்கும் இலங்கையிலே இந்துப்புரட்சிப்படைக்கு இந்திய தொலைபேசி இலக்கங்களோடு துண்டறிக்கை பேஸ்புக்கிலே பகிரும் உங்களுக்கும் என்னதான் வேறுபாடு? 
-/.
நவம்பர் 18, 2015

போலித்தமிழ்த்தேசியவாதிப்பூச்சாண்டி

"எல்லாரும் ஆளுக்காள் அஞ்சு நிமிசத்துக்கொருக்கால், திட்டித்திட்டிக்கதைக்கிறாங்களே அந்தப்புலம்பெயர் போலித்தமிழ்த்தேசியவாதி நாய் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமே? வடுவா ராஸ்கல் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறானெண்டு வாயாலை சொல்லவுமேலாது ரைப் பண்ணிப் போஸ்ற் பண்ணவுமேலாது. அத்தினை பொய்பிரட்டும் சூதுவாதும்!" எண்டு இண்டைக்கு ஒருவர் மினக்கெட்டு இலண்டனிலை இருந்து போனடிச்சு என்னட்டைக் கேட்டார்.
"உந்தப் புலன்பெயரிற அரசியல் இடியம் தெரியாமல், நாளையான் இடியப்பத்துக்கு மாவாட்ட வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கத்துக் கனவான் நான் எங்கையப்பனே தெரிஞ்சு எதையணை உங்களைப் போல அறிஞ்ச தலையளுக்குச் சொல்லுறது?" எண்டன்.

"நீங்கதான் எப்பவுமே குண்டியைக் கதிரைக்குள்ளை குத்திவச்சுக்கொண்டு பேச்சுப்புக்குக்குள்ளை மேஞ்சு மேஞ்சு வாசிச்சு ஒண்டுமில்லாத துண்டுச்சார ஊர்த்துழவாரங்களுக்கெல்லாம் ஒண்டரை லைனிலை லைவ் கொமென்றி மாஞ்சு மாஞ்சு குடுத்துக்கொண்டிருக்கிறியள் . உங்களுக்குத் தெரியாதே?" எண்டார்.

சும்மா வாற விருதையும் எருதையும் மெடலையும் மடலையும் வேண்டாமெண்டு திருப்பிக் குடுக்கிறதே எண்டு, அப்போதைக்கு, "புலம்பெயர் தமிழ்த்தேசியவாதிகள் ஆரெண்டு சொல்லுறது கஷ்டம்; ஆரில்லை எண்டு சொல்லுறது சுகம், ஆரில்லையெண்டால், அசலிலும் அசலான இடதுசாரிப்பேரியக்கம் ரெலோவிலையிருந்து உடைஞ்சுபோய் ஆளுக்காள் பேனையோ போனையோ தூக்கிக்காட்டிற எட்டுப்பேரையும் சுமந்திரன்ரை விசிலடிச்சான் குஞ்சுகளையும் எந்த இயக்கமுமில்லையெண்டு கொண்டு, கட்டுறவளின்ரை சீலைக்கலர் இயக்கத்துக்கு எதிரான சொந்தப்புத்தகம் புரமோட் பண்ணுற ஒற்றைப்புத்தக எழுத்தாளர்களும் பழைய வரிப்புலிப்புதுச்சிங்கங்களும் தேசியப்போராட்ட பஸ்ஸை ஓட்டோ ஓட்டெண்டு பருத்துறை யாப்பாணம் தட்டிவான்போல புட்போட் தட்டி பெட்டி எல்லாத்திலையும் ஏத்தியோட்டிக் களைச்சுப்போய்ப் பிரேக் டவுனாக்கிப்போட்டு குதிச்சிறங்கி அங்கேயே பொத்தெண்டு விட்டுப்போட்டு வர்க்கப்போராட்ட இன்ரர்சிற்றியிலையும் தலித்தியப்போராட்டசேனா ரயிலிலையும் புதுசாத் தொத்திக்கொண்டவையும்..." எண்டு பந்தி பந்தியா இழுக்க, அவருக்கு விசர் பத்திப்போட்டுது.


"இதென்ன உங்கடை ஒண்டரைப்பக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளிச் சிறுகதையே? சுருக்கமாச் சொல்லுங்கோண்ணை" எண்டு பொடியர் கடுப்பேறினாரோ, "உன்னையும் என்னையும் மாசத்துக்கொரு மதுச்சந்திப்புச் செய்யாதவையையும் பேஸ்புக்பத்திப்பந்தி, கைச்சஞ்சிகைப்போராட்டம் நடாத்தாத புலம்பெயர்ந்தவையையும் விட்டு மிஞ்சின புலம்பெயர்ந்த குஞ்சு குருமான் கருமுட்டை சூலுள்ளிட்ட அத்தனையுமேதான்" எண்டுபோட்டுப் பொக்கெண்டு போனை வச்சிட்டன்.


இனி நம்பரைப் பாத்துத்தான் போனை எடுத்து, "கல்லோ" சொல்லோணும். அறுவாங்கள்; என்ரை இடியப்ப நேரத்திலை அவனுகளின்ரை ரைம்பாசுக்கு மண்ணைப்போடுறாங்கள். போய் ஜோன் ஒலிவற்றை ரண்டம் குவோட் ஜெனரேட்டரிலை ஒண்டைத் தேடிப் புடுங்கிப் புலம்பெயர் போலித்தமிழ்த்தேசியவாதிக்குப் பூருதோண்டு பாருங்களனடா! உங்கட பில் இந்த பிளாங்க்ஸ் கட்டுரைக்குச் சொல்லுத் தேட என்ரை போன் நம்பரே அத்திலாந்திக்குச் சமுத்திரம் கடந்து உங்களுக்குக் கிடைச்சுது? இவனுகளுக்கு தங்கடை "லைக்" அரசியல்செய்யிற புத்திசீவிகள் எத்தனையோ மேலை! ம்ற்றவைக்கு அலுப்புத்தராமல், வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் நல்லபிள்ளைப்பரிசை வாங்கிக்கொண்டு போயிடுவாங்கள்.

எமது நீற்றுப்பூசணிக்காய்

தமிழினியை வைத்துப் புலம்பெயர்ந்த போலித்தமிழ்த்தேசியவாதிகள் என்று சொல்லியே தம்மை மனித உரிமைப்போராளிகளாகக் காட்டப் புறப்பட்டவர்களெல்லாம் இத்தனை நாள் தமிழினியைப் பற்றி எதற்காகப் பேசாதிருந்தார்களோ தெரியவில்லை. உங்கள் அரசு, உங்கள் ஒத்தோட்டம். போய் இலக்கியச்சந்திப்பும் ராஜபக்சவோடு படம்பிடிப்பும் என்று நின்றிருந்த உங்களுக்கு அப்போதெல்லாம் இது தெரியவில்லையாக்கும். இப்போதுதான், மசிர் சிலிர்த்துக்கொண்டு மனிதநேயம் தமிழினி பேரைக்காணும்போதெல்லாம் பெருகி ஓடுகிறதோ? 


கிளிநொச்சி-பளை புதுவிதானை கருணாகரனும் மச்சான் சந்திரகுமாரும் இத்தனை நாளும் குருடுகளாக இருந்தார்களா? பிள்ளையானைப் பிடித்ததன் நிலையை இல்லையென்று நிறுவத்துடிக்கும் ஆலோசர் ஸ்டாலின் ஞானம் தமிழினிக்கு உருகி கருணாகரனின் துண்டுப்பந்தியைப் பகிர்கிறார். தமிழினிக்கு உருகும் இந்தாளுக்கு ரிஆர்ஓ பிரேமினியை தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் வன்புணர்ந்து கொன்றதைப் பற்றி எதுவும் சொல்லத் தோன்றாது ஏன்? இனியொரு நாவலன் பந்தியை வெட்டி அரூப புலம்பெயர்போலித் தமிழ்த்தேசியவாதிகளோடு காற்றிலே பந்தாடுகின்றார். த. ஜெயபாலனின் தாயகத்திலிருந்து விமர்சனத்தோடு தமிழினி குறித்துப் பகிரும் பௌஸர் இதுவரை ஒருநாள் அஷ்ரப் குறித்தும் அவர்காலத்து முஸ்லீம் காங்கிரஸ் குறித்தும் மட்டக்கிளப்பிலே காத்தான்குடிக்கொலைக்கீடாக முஸ்லீம் ஊர்காவற்படைகள் செய்வதை குறித்தும் விமர்சிப்பதில்லை. இதைவிட மோசமானவர்கள் தமிழினி குறித்து அழும் வேறு சில ஒத்தோடிகள்; தங்கவேலாயுதம் மாஸ்ரரின் நினைவுக்கூட்டப்புத்தகவெளியீடு குறித்து அவசரமாகப் பதிவிட்டுக் கத்தியதும் முன்னாலே தமிழ்த்தேசியவாதிகள் கிணற்றிலே நஞ்சூட்டியதாகச் சொல்லிவிட்டுக் கடைசியிலே அவர்களுக்குத் தகவல் தந்தவரே நஞ்சூட்டியதாகக் குற்றம் சாட்டப்பின்னாலே மன்னிப்புக்கூடக் கேட்காமலே ஒளிந்ததும் போன்ற சில்லறைத்தனமான காரியங்களிலே ஈடுபடுகின்றவர்கள். சாத்திரியார் எல்லாவற்றையும்விட மேல்; எப்பவுமே சமயம் மாறுகிறவன்தான் தலைமுறைதலைமுறையாகச் சமயத்திலே இருக்கிறவனைவிடத் தன்ரை புதுச்சமயத்தை மற்றவன் தலையிலை திணிப்பான். அந்தக்கதை இந்தாளின்ரை. 


இப்படியான சைனீஸ் ஃபவ்ஃபே வகையறாகூட்டம், ஓரிடத்திலே "தமிழினியின் தாயார் கச்சான் விற்றுக் கஷ்டப்பட்டார், சுற்றவரக் கல்வீடிருந்தும் அவர்கள் குடிசையிலே வாழ்ந்தார்கள்" என்றும் "புலம்பெயர்ந்த தமிழ்தேசியவாதிகள் கவனிக்கவில்லை" என்றும் முதலைக்கண்ணீர் விட்ட கையுடனேயே ஜெயன் தேவா இலண்டனிலிருந்து மணந்தவர் என்பதையும் சொல்லவேண்டும்; தமிழினியின் தங்கை ஸ்கண்டிநேவியன்நாடொன்றிலே இருக்கின்றார் என்பது ஃபேஸ்புக்கிலும் தமிழினியின் மரண அறிவித்தலிலுமே தெரிகின்றது. தமிழினியோடு தொடர்பிலிருந்த ஒருவர் அவருக்கு இந்தியா கொண்டு செல்லவும் மருத்துவவசதிக்கும் உதவி செய்யப்புலம்பெயர்ந்த சிலர் முயன்றனர் என்று ஓரிடத்திலே பின்னூட்டத்திலே சொல்லியிருந்தார். இதெல்லாம், இவர்களுக்கு முக்கியமில்லை - தமிழினி இறக்கும் நிலையிலே என்ன உளநிலையிலே இருந்தார் என்று அறியாத வலதுசாரித்தமிழ்த்தேசியவாதிகளைப் போல. ஆக, தமிழ்த்தேசியத்தை அடிக்க எங்கே ஒரு வாய்ப்பு தமக்குக் கிட்டும் என்பதுதான் முக்கியம்.


குறைந்தளவு தமிழ்த்தேசியம் என்பதையேனும் ஒருகூட்டுக்குள்ளே அடைக்காமல் அதனிலும் வேறுபாடுகள் இடதிலிருந்து வலதிலிருந்து என்றேனும் குறைந்தளவு பிரித்தறிந்து பேசமுடியாது, தமிழினி என்ற பேரைவைத்துக்கொண்டு கலெக்சன் வியாபாரம் பண்ணத்தானே நீங்களும் திரிகின்றீர்கள்? அடுத்தவனைத் தவறு என்பதாலே நீங்கள் எப்படி நியாயவாதிகள் ஆகின்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.


ஜெயன் தேவா ஃபேஸ்புக்கில் என்னைத் தடைசெய்திருந்தபோதுங்கூட, இவர்கள் எல்லோரையும் பார்க்கும்போது, அந்தாளின் அரசியல் ஒவ்வாதபோதுங்கூட, மனுசன் என்பேன்.


கொஞ்சமாவது, இரு புறத்தாருக்கும் சொல்வதுபோலக் கரிசனையும் மரியாதையுமிருந்தால், செத்த தமிழினியைத் துரியோதனன் சபையிலே நிறுத்திவைத்துத் துச்சாதனனாகவும் பீமனாகவும் மல்லுக்கட்டாமல் ஒதுங்குங்கள் பார்க்கலாம்.
-/.
ஒக்ரோபர் 22, 2015

பேரா. மகாலிங்கம்

தன் மூதாதையினரின் பூமியான அளவெட்டியிலே இறுதியிலே ஓய்வான மலேசியாவிலே வளர்ந்து கொழும்பிலே கற்று, மேற்படிப்பின்பின்னே பேராதனையிலேயே பெரும்வாழ்க்கையைக் கண்டுவிட்ட ஒருவர் இத்துணை இனம், மொழி சார்ந்த கலவரபூமியிலும் தன்னை அறிவியலுக்கும் பொறியியலுக்கும் அப்பாலே அடையாளப்படுத்தாமலே வாழ்ந்துபோக எப்படியாக முடிந்தது என்பது பேராதனையிலே இருந்த காலத்திலும் சரி, பின்னாலும் சரி எப்போதேனும் தோன்றும் கேள்வியாகவேயிருந்தது. ஒரே பீடத்தின் ஒரே துறையிலேயே ஒரு மகாலிங்கமும் ஒரு சிவசேகரமும் குறைந்தது மூன்று தசாப்தங்கள் அருகருகேயிருந்தது வியப்பைத் தருவது.
பேரா மகாலிங்கம் அவர்கள் ஒரு கனவான் என்ற குறிப்பினைப் பார்க்கும்போதெல்லாம், அதனை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்திலே தனியுணர்வினையும் தான் வாழும் நாட்டிலே மொழி, இனம் சார்ந்த அடையாளம் குறித்த புறவயமான சிக்கல் தனியாட்களுக்கு உண்டு என்பதை உணர்ந்துகொண்டவருமேதானா என்ற கேள்வி இறந்த இந்நாளும் உறுத்தவே செய்கின்றது. 

83 கலவரத்தின்போது, ஹில்டா விடுதிக்கு முன்னாலேயிருந்த அவர் வீட்டுக்குத் தஞ்சத்துக்கு ஓடிய தமிழ்மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று 84/85 ஆண்டுக்காலத்திலே பொறியியற்பீடத் தமிழ்மாணவர்களிடையே ஒரு பேச்சிருந்தது. எத்துணை உண்மையென்று அறியேன். ஆனால், அவர் குறித்த அறிமுகம் பேராதனையிலே எண்பத்திமூன்று முடிந்த கையோடு அப்படியாக அவரின் ஆய்வுகூடக்கட்டடத்திற்குள்ளே நுழையமுன்னே கிட்டியதாலே, சென்றவாண்டு அவரின் மனைவியின் இறப்புச்செய்தியைக் கேட்டபோதும் இன்று அவரின் இறப்புச்செய்தியைக் கேட்டபோதும், அவர் குறித்த முதற்படிவே முன்னெழுகின்றது. 

பொறியியற்பீடத்தின் நெடுநடைபாதையிலே புத்தகக்கட்டினை அணைத்துக்கொண்டு, நிமிர்ந்தபடி எவர் கண்ணிலும் தன் கண் பொருந்திக்காணாது ஆனால், முகத்திலே முறுவலுடன் நடக்கும் பேராசிரியர் ஞாபகத்துக்குப் பின்னாலேயே வருகின்றார். எண்பதின் பின்னிறுதியிலே மாணவனாகவும் தொண்ணூறிலே கற்கையுதவுனனாகவும் மார்க்கஸ் பெனார்ண்டோ விடுதியிலேயிருந்தபோது, மாலைகளிலே தன்வீட்டிலிருந்து அதேவிரைநடையோடு ஜேம்ஸ் பீரிஸ் விடுதிக்கும் மார்க்கஸ் விடுதிக்கும் இடையேயான மலைப்பாதையிலே உடற்பயிற்சிக்காக அவ்வயதிலும் அதே கண்ணைப்பார்க்காமலே பொதுவிலே புன்முறுவலைப் போகின்றவர்களுக்குச் சிந்தி நடக்கும் பேராசிரியரும் பின்னாலேயே வருகின்றார். இவ்விடத்திலே "யாழ்ப்பாணத்திலே பொறியியற்பீடம் கட்டிப் படிக்க விரும்புவதாலே, பேராதனையிலே இருந்து திரும்பிப்போக எண்ணுகிறோம்" என்று சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்கு, ஆதாரமான கருத்தினைக் கேட்கப்போய் வீட்டுக்கதவைத் தட்டியபோது, தூசுதட்டிக்கொண்டிருந்த கோலத்திலே தோன்றி, "தமிழியக்கங்கள் யாழ்ப்பாணத்திலேதான் படிக்கவேண்டுமென்று திரும்பிப்போகச் சொல்லினவா?" என்று அரசியல்வகுப்பு மீவத்துற பேராசிரியர் குடியிருப்பிலே எடுத்து, போன நாலைந்து பேரெம்மைக் "கதிகலங்க" வைத்த சிவசேகரம் சமாந்திர முரணாக அதே எந்திரவியற்பொறியியலின் இன்னொரு பேராசிரியராக நினைவுக்கு வருவார்.


இவ்வாண்டு இலங்கை சென்றிருந்தபோது, ஆளரவமேயற்ற ஒரு மந்தார மழை ஞாயிறுமாலையிலே நித்திலனுக்கும் சாகரி, ஜஸ்மிதாவுக்கும் அவர் பேரைச் சொல்லும் ரோல்ஸ் ரோய்ஸ் எந்திரத்தினைக் காட்டிப் படமெடுத்துக்கொண்டபோதும், புறா மேய்ந்த நீர்ப்பொய்கைக்குப் பின்னாலிருந்த அவரின் எந்திரவியல் ஆய்வுகூடக் கட்டிடத்தினைக் கடந்தபோதும் நான் காணாத எண்பத்துமூன்றின் பேராதனையிலே "பாதுகாப்புக்கு ஓடிவந்த மாணவர்களைத் தன் வீட்டினுள்ளே வரவிடாமற் தவிர்த்தவர்" என்ற ஆதாரமற்ற கதையாக வந்து சேர்ந்த அறிமுகமே ஏனோ தலைக்குள் வந்து தொலைந்தது.


ஆனால், கடந்த எட்டாண்டுகளாக ஒவ்வோராண்டும் கோடையிலே ஐந்து வார, "போக்குவரத்து: அறிமுகம்" பயிற்சிமுகாமுக்காக என்னிடம் வந்துசேரும் பாடசாலைமாணவர்களுக்கான பாலங்கள் குறித்த அறிமுக வகுப்பின்போது, நாற்பதுகளிலே அதிர்விலே உடைந்து நொருங்கிய வோஷிங்டன் மாநிலத்தின் தக்ககோமா பாலத்தினைப் பற்றிய விபரத்தினையும் அது குறித்த உயூரியூப் குறுவிவரணத்தினையும் காட்டும்போதெல்லாம், பேராசிரியர் மகாலிங்கத்தின் எந்திரவியல் ஆய்வுகூடத்திலே முதன்முதலிலே கண்ட வரைசட்டமிட்ட தக்ககோமா பாலம் எண்ணத்திலே வந்து நின்று அப்பல்கலைக்கழகத்துக்கும் அவரைப் போன்ற பேராசிரியர்களுக்கும் இன்றைக்கு என்போல்வார் தம் வாழ்வுகளைக் கொண்டு செல்ல வழிவகுத்ததுக்காக எத்துணை கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை முப்பதாண்டுகளுக்கப்பாலும் சுட்டிக்காட்டுகின்றது.
-/,
நவம்பர் 3, 2015

* பிற்குறிப்பு: மேலே எழுதிய குறிப்பின் பின்னாலே, இன்று தி ஐலண்ட் சஞ்சிகையிலே Newton Wickramasuriya எழுதிய இக்குறிப்பினைக் காண நேர்ந்தது. மேலே கேள்விப்பட்ட பேரா. மகாலிங்கமும்1983 உம் பற்றிய குறிப்பு தவறோ என்று உணர்கின்ற மாதிரியான குறிப்பு இது. இதனையும் இங்கே பதிவு செய்தலே முறையெனக் கருதுகிறேன்-அதுகூட அவரின் சூழ்சமூகம் சார்ந்த ஒட்டாத மேல்நிலைப்பார்வையைச் சுட்டினாலுங்கூட /...During the disastrous 1983 riots, his wife and he were compelled to move next door, to the Hilda Obeysekera Hall, for security. This was an unforgettable but a very sad situation for them. When I rushed there, with my wife, to look into their welfare at that time, he narrated the sorry state of affairs at the Hilda Obeysekera Hall and how he had to join a queue with others to use the wash room and toilets which brought tears to our eyes.../ /...Emeritus Professor S. Mahalingam passed away in Alakollai, Alaveddy in Jaffna on November 3, 2015, at the age of 89, far away from his beloved Peradeniya and Kandy./

பாதுகை: குறியும் குறியீடும்

உலகறிய ஆயிரம் கொலைகளை பின்நின்று நடத்திவிட்டு அகதிகளைக் காக்க அவதாரமெடுகின்ற "முதியோர்கள்" இனை விடவா தன் இயலாமையிலே ஆத்திரத்தினைத் தன்னாலான செருப்பெடுத்து அடித்த ஓர் இளைஞன் நாகரீகமற்ற மோசக்காரனாகிவிடுகின்றான்? இதே இளைஞன் தன் கருத்தைக் கட்டுரையாக எழுதினால், இந்து ராமோ அவரின் ஒன்றாய்ப்பிறந்த & ஒன்றுவிட்ட உடான்ஸ்பிறப்புகளோ தம் இந்துவிலோ ப்ரொண்ட்லைனிலோ அதிகம் வேண்டாம் அவ்விந்துவின் சொட்டிலே பிழைக்கும் சம்ஸின் தமிழ் இந்துவிலோ வெளியிடுவார்களா? உடனடியாக, "The Tamil Outfit" என்று எழுதி பயங்கரவாத முத்திரை அடித்துக்குத்திவிட்டுப்போய்விடுவார்கள். அல்லது பார்ப்பனியகாந்'தீ'யம் போதிப்பார்கள். இத்தனைநாள் இலங்காரத்னாவையும் சுப்பிரமணியசுவாமியின் நண்பர் சந்திரகாசனையும் 'குமரன்' கணேசலிங்கத்தையும் இலங்கை-இந்திய அரசியலிலே உழப்பார்த்துவிட்டோம். நாராயணன், நம்பியார் கும்பல்களையும் நாடுலாவக் கண்டுவிட்டோம். 

அறம் தாங்கி பிரபாகரன் செய்தது சரியா தவறா என்பதை நாம் விமர்சிக்கும்போது, இதே இராமின் தாளிகை, சஞ்சிகைகள் பலஸ்தீனிய இன்பாட்டா சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்துக்கும் குடியேற்றக்காரர்களுக்கும் கல்லெறிவதை (இன்னமும் கத்தியாலே குத்துவதை விதந்தோத்தி எழுதவில்லை என்று நம்புகிறேன்) மென்மைப்போக்குடனேயே போராட்டகுணமாக அணுகும் நிலையுடனேயே காட்டுகின்றன என்பதையும் கவனத்திலே கொள்ளவேண்டும். இங்கே மட்டும் இரட்டைக்குவளை மனப்பான்மை இந்துவின் உணவகம் போல அதற்கு வந்துவிடும். இதே கௌரவ புத்திசீவி ஈழத்தமிழர்கள்தாம் செருப்பாலடிப்பது எம் கௌரவத்தினைக் குறைப்பதாகக் கொண்டுவிடுகின்றோம். ஆனால், இதே ஆட்களே, பத்தாண்டுகளுக்கு முன்னாலே கொலம்பியா பல்கலைக்கழகத்திலே சீன ஆதரவு திபெத்தினை ஆதரிக்கும் ராமினைத் திபெத்திய அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்து எதிர்த்தபோது, அவர் பின்னங்கதவாலே பத்திரமாகச் செல்ல அனுப்பப்பட்டதை ஆதரித்து இணையத்திலே எழுதியிருந்ததை எழுதியவர்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. 

அறம் தாங்கி, பிரபாகரனின் செருப்பாலடித்த செயலை அஃது ஊடகபலம் ஆளும் வர்க்கம்/சாதி/குழுமம் கையிலே கொண்ட தமிழ்நாடு, இந்தியா இவற்றிலே எத்துணை தமிழர்களின் உளநோவினைக் கேலிச்சித்திரம்போல பிதுக்கிக் கோணலாகவும் கொடூரமாகவும் காட்ட உதவும் என்பதாலே ஒத்துக்கொள்ளமுடியவில்லை. (ஏற்கனவே, ஒரு முரளிதரன் காசி விசுவநாதன் என்ற பிபிசியின் தமிழ்ச்செய்தியாள மஹானுபாவன் பிரபாகரன் பதியப்பட்ட ஆதரத்துடனான விழியத்திலே, "தமிழ்நாட்டின் சொல்லைக் கேட்காமலே செய்ததாலே..." என்று சொல்வதை, "அம்மா நிறைவேத்தின தீர்மானத்தை மதிக்கல" என்று சொன்னதாக எழுதி இரட்டை இலை ஆங்கிலத்திலே ஓங்கிக்குத்திவிட்டார்). இந்த நீயாநானா சிறப்புவிருந்தினர் ஶ்ரீதர் சுப்பிரமணியம் என்பவரும் ஹிந்துவும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். 

[மஹா உத்தமர் கேணி ஞானி (சிங்கள சினிமாவின் சாத்தியங்களைப் பேசிய இவ்வறிஞருக்கு 2009 முழுக்க பயங்கரவாதமேதான் காரணம்), புதுச்சாதிமான் ரவிக்குமார் (சிறுத்தையாகப் பேசுகிறாரா திமுகவாகப் பேசுகின்றாரா என்று கட்டுரை முடிவிலேதான் மர்மம் கலைத்துக் கொஞ்சக்காலம் வெளியிட்டுக்கொண்டிருந்தார்; என்ன இருந்தாலும், பெரியார் பற்றிக் காலச்சுவட்டிலே தடம் பதித்த உத்தமராச்சே!), இந்துவிலே உழைக்கும் சமஸ் (அன்னாரின் 2009 இற்குப் பின்னான அருட்பேருரைக்கட்டுரையை இனியும் யாம் மறப்போமா?), பாதிநேரவியாபாரி & பகுதிநேர நிழலரசாங்கவிகடகவி மனுஷ்யபுத்திரன் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமேதான். 

சின்னையா சாருவும் பெரியய்யா மோருவும் எப்போ அறிக்கைப்பத்தை ரீலீஸ் ஆக்குவாங்களோ தெரியவில்லை தம்தகரடப்பாக்கருத்தை. நடுவைய்யா ராமு இன்னமும் மதின்மேற்பூனை; கருத்தைத் தொகுத்துக்கொண்டேயிருப்பார் (அரசியல், சமூகவியல் பேசும் நேரத்துக்கு இரண்டு தொகுப்புகள் போடலாம் சார்!!). அன்புச்சகோதரர்கள் கோணங்கி, தமிழ்ச்செல்வன், முருகபூபதி, முத்தமிழ்களிலும் மும்முரம்; கடினகவிதையோ தடவிச்செல்லும் கண்டன அறிக்கையோ, நடுக்காட்டுநாடகமோ நாலு மாசம் கழித்து சாம்ராஜ் கண்ட பிரபாகரனின் செருப்பு ராஜ்யம் என்ற தலைப்பிலே வரலாம். நல்ல காலத்துக்கு சோஜீ இன்னும் பஜ்ஜி சொஜ்ஜி தின்று இதையெல்லாம் வாசிக்கும் நிலைக்கு மீண்டு வந்துவிட்டாரோ தெரியவில்லை. துக்ளக் துர்வாசர் வண்ணநிலவனைக் கேட்டாச்சும் ஏதாச்சும் கருத்தினைப் பிரபாகரனின் பிய்ந்த செருப்பினைப் பற்றிப் போடவேண்டும்.] 

ஆனால், "அ. மார்க்ஸ் என்ற பழைய பெருச்சா.. சே! பெரும்போராளி, பீ துடைத்தனுப்பிய இந்தியா ருடே" என்று போராட்டப் பெருமிதம் பேசியவர்களெல்லாம் காலவோட்டத்திலே மையநீரோட்டமாசாய்க் கலந்து காந்'தீயமும் கத்தரிக்காயும் கலந்த சாம்பாரை ஊற்றிப் பிசைந்து "செருப்பாலடிப்பது இழிவு" என்று வர்ணம் தீட்டும் காலம் நமது.
வாஞ்சி சாதிவெறிகொண்டு ஆஷ்துரையைக் கொன்றால், தேசியவீரவாஞ்சி; "எடுடா கொடுவாளை" என்ற பாரதிதாசன் பாடலை நினைவுநாள் மாறாது போட்டு, தர்மாவேசமானால், சமூகவலைத்தள+நீயாநானா இணையச்சமூகப்போராளி. நாற்பதினாயிரம் மக்கள் சாகும்போது, அந்தப்புறம் திரும்பிக்கொண்டு கருணாநிதியின் தமிழ்மகாநாட்டிலே கணியம் பேசினால், தமிழறிஞர். ஆனால், எதுவும் கைவசமில்லாது, இருந்த செருப்பாலே, ஒருவன் தர்மாவேசத்தோடு அடித்தால், "முதியோரை அடித்து என்ன பெருமையோ?" டால்ஸ்டாயிஸதாதாயிஸம்!! இதற்குள்ளே "அந்தப்பிரபாகரன் என்ன பண்ணியிருப்பார்? இந்தப்பிரபாகரன் மாதிரியாகவா பண்ணியிருப்பார்?" போன்ற படிச்ச மேட்டுக்குடி ஈழப்போராட்டப்பவிசுத்தனம், "What will Jesus do?" பாவனையிலே விழிசொருகி. எத்தனை நாட்கள்தாம் தலையை இங்கும் வாலை அங்கும் காட்டுவீர்களோ? இதுவும் கடந்துபோம்!
தொடர்ச்சியாக, தமிழ்த்தேசியமென்றால், ஒரு பெட்டியைப் போட்டுக்கொள்வது. அதற்குள்ளே சீட்டுகளிலே அதற்கான அவரவர் கிணற்றுத்தாவலுக்கெட்டிய வரைவிலக்கணங்களாக, திராவிட எதிர்ப்பு, புலம்பெயர்பொழுதுபோக்கு, சாதியம், பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஆயுதக்கும்பல், ராஜீவ்கொலை, யாழ்முஸ்லீம் வெளியேற்றம், பார்ப்பனியஎதிர்ப்பு, வெற்றுக்கூச்சல்,,,,, என்று ஆசுகவிப்பட்டியல் எழுதிப் போட்டுக் குலுக்கி, தத்தமக்குவேண்டிய வகையிலே எதிர்க்கவேண்டுமே என்று தேர்ந்தெடுத்து, பட்டம் கட்டி, வாலும் குஞ்சமும் போட்டு ஏற்றும் வேளையிலே, தாங்கள் தாங்கள் சார்ந்த நிலைப்பாட்டிலே எத்துணை அயோக்கியத்தனமும் இரட்டைநிலைப்பாடுகளும் கண்மூடித்தனமான மாற்றாநம்பிக்கை & சகுன_நிர்க்குணங்களும் கொண்டிருக்கின்றோம் என்று சுயவிமர்சனத்துக்கு முனைவதில்லை. 

நீங்கள் சார்ந்த அத்தன கும்பல்களிலும் கள்ளக்குணங்களும் வல்லமுகமூடிகளும் கொண்டவர்களிருப்பதுபோலத்தான் தமிழ்த்தேசியத்திலும் இருப்பார்கள்; ஆனால், உங்க்ளைப் பொறுத்தமட்டிலே, உங்கள் அம்மா மெஸ் சாம்பாருக்கும் ஒத்தோடும் கொத்துரொட்டிக்கும் எப்பங்கமுமில்லை; எப்போதுமே சுத்தவசுத்தம் தவிர் நிர்க்குணசுவை நிரம்பித்ததும்பும் தத்துவக்கொத்தவை. ஆக, பங்கப்பட்டிருப்பதெல்லாம் அந்தப்பிரபாகரனின் துவக்குக்கும் இந்தப்பிரபாகரனின் செருப்புக்குமேதான். இவனாவது இந்தச்செருப்பைத் தூக்கினான்; நீங்கள் என்னதான் தூக்கினீர்கள்? புத்தகவெளியீட்டு மேடையிலேயும் நீயா நானாவிலும் மைக்கையும் குரலையும். என்ன சமூகசேவையோ? உங்கள் மூஞ்சி மேடைவெளிச்சத்திலே நாலுபேருக்குத் தெரியுமென்றால் எல்லாம் நியாயமேதான். நாட்டுக்கு நல்லது சொல்வதும் செய்வதுமான அந்த நாலுநாயகர்கள் நீங்கள்தாம் பாருங்கள்.

ஆனால், எழுத்துவன்முறையாளர்களுக்கு, கொல்லரசியலியந்திரம் இயக்குவன்முறையாளர்களுக்கு ஒரு செருப்பாலடிக்கும் ஒரு சாதாரணமானவனை விமர்சிக்க என்ன வக்கிருக்கின்றதென்று தூங்கப்போகும் நேரத்திலேனும் அவர்களின் மனைவியரிடமும் கணவர்களிடமும் கேட்டுக்கொள்ளவேண்டும். நான் கேட்பது மனச்சாட்சி என்று ஒன்று இணையத்திலே பத்திரமாக & பத்தியமாக ஏற்றிக்காட்டும் 'பிம்'பத்துக்கும் அப்பாலே இருப்பவர்களிடமேதான்... மற்றவர்கள் அலட்டியே கொள்ளாதீர்கள்... நேரடியாக, அடுத்த அகழ்வாராய்ச்சிக்கோ புத்தகவெளியீட்டுக்கோ நீயாநானா சிறப்பு விருந்திற்கோ போய்க் குந்திக்கொள்ளுங்கள்.

-/.
நவம்பர் 5, 2015

பாதுகை ஓர் அடையாளமே

/எதிர் தரப்பு மீது இனி செருப்பு - கல் - கடப்பாரை - துவக்கு பாயும் என்ற வகையில்தான் இந்நிகழ்வு நகர்ந்து கொண்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். -வளர்மதி / 

சிறுசலசலப்பாக ஒரு பரிவதிர்வாக சிறுகாலகட்டத்துக்கு இது நிகழலாம். இதை மறுக்கவில்லை; ஆனால், அறந்தாங்கி பிரபாகரனின் எதிர்ப்பினை வெறும் உசுப்பலின் விளைவாக மட்டுமே எண்ணிவிட்டுப்போவது முறையல்ல; இதுவரை மாற்றூடகமாக எதைத் தமிழகத்திலே தமிழ்த்தேசியநிலையிலே நிற்பவர்கள் உறுதியாக வைத்திருக்கின்றார்கள்? 

ஒன்றை அவதானிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட சாரார் சமூகவலைத்தளங்களிலேகூட இதுவெல்லாம் தமக்குச் சாராதவைபோல, மேலிருந்து கீழே எள்ளிப்பார்த்துவிட்டுப்போகும் உளநிலையிலேயே இன்னும் இருக்கின்றார்கள் என்றால், அதற்கு, அவர்களுக்கு ஊடகமும் அராஜகமும் தம்கையிலேயே எப்போதுமென்று தெரிவதாலேயேதான்.
இவர்களுக்குச் சாமரம் மென்மையாக வீசிக்கொண்டிருக்கும் அவரல்லாத கூழைக்கும்பல் எதற்கெடுத்தாலும் தனக்குப் பாதுகாப்பாகவும் தன்பேரைப் பிரகாசிக்கவும் தட்டிலே மண்டேலாவையும் 'முதியவர்'களையும் ஏந்திக்காட்டுகின்றது. திராவிடக்கும்பல்களின் கையிலிருக்கும் ஊடகங்கள் எல்லாம் மோடியையும் மத்தியையும் வாழ்த்துப்பா பாடும் செய்தியாளர்களையே வைத்திருக்கும் அவநிலைக்கு வந்திருக்கின்றன. திராவிடநாடு கேட்டவர்களின் வாரிசுகள் இன்றைக்குத் தமிழ்த்தேசியமென்றாற்கூட -வேண்டாம், தம்கட்சியினை விமர்சித்தாலேகூட- தேசியப்பிரிவினைக்கானது என்று உள்ளே போடு என்று சிபிஐ, சென்னைக்குற்றவிலாகா கண்ணைத் திருப்பமுன்னரே விரல்சுட்டிக் காட்டிக்கொடுத்துக் கயிற்றாற்றிலே தூக்கிலே தொங்கப்போட அலைகின்றார்கள். 

இத்துணை கோரத்துக்குமேலே, சாதியமும் பெண்ணையமுக்கலும் நிச்சயமாக உணர்வு கட்டன்றிப் பொங்கும் தன்மையும்வேறு ஊடுருவி, தமிழ்த்தேசியமென்றால் இவைதாம் என்பதுபோல ஊடகங்களைக் கைக்கொண்டிருக்கும் தேசிய, விதேசிய, திராவிடக்கும்பல்கள் ஊதிப்பெருக்க வழிவகுக்கும் நிலை. இந்நிலையிலே, இதுவரை நாள் தமிழ்த்தேசியம் என்பது ஒரு முற்போக்கான அமைப்பாகவோ ஒன்றுபட்ட அமைப்பாகவோ அமையமுடியாமலே தள்ளாடுவது ஒரு பக்கமிருக்கட்டும், தனக்கென ஒரு காத்திரமான ஊடகத்தைக் கொணரக்கூட, தன் பக்கக்குரலைச் சாயமில்லாமலே கேட்கும்வண்ணம் வெளிக்காட்டமுடியாத நிலையிலே நிற்கின்றது. 

இந்நிலையிலே அறந்தாங்கி பிரபாகரன் போன்றோருக்குத் தம் கருத்தினைக் கொணர வேறு வழியென்னவென்று எண்ணுகின்றீர்கள்? எப்படியும் சமூகவலைத்தளத்திலிருக்கும் படித்த பெருமக்கள், செங்கொடி முத்துக்குமார் எரிந்துசெத்தாலும் தங்கள் தண்டவாளத்திலே தலையை வைத்த கதையை இன்னமும் வண்டவாளமாய்க் கொண்டை அவிழ்ந்தபின்னும் விளாசிக்கொண்டே, "தமிழ்த்தேசிய உணர்வு கொல்முட்டாள்கள்" என்பார்கள்; ஆயுதம் தாங்கிய போராட்டம் முடிந்தாலும் மண்டேலாவை பார் என்பார்கள். இதுவென்ன சிந்துவெளிநாகரீகத்திலே சில்லோட்டும் ஆய்வா, எவருக்கும் நோகாமலே கருத்தைத் தெரிவிக்க? அடிக்கருத்து இதுதான்; எப்படியும் ஆட்சியும் சாதியும் கண்ணசைத்தால் தடா, பொடா, மடா, கடா என்று விரும்பியவகையிலே பாயும் தேன்நாடாம் நும்நாடு. 

பாட்டுப்பாடினாலே, இரண்டு சமூகங்களிடையே சண்டையை மூட்டியதாகக் கைது செய்யலாம்; ஒடுக்குமுறை பற்றிப் படம் எடுத்தாலே நாட்டின் நட்புநாடுகளைவிமர்சித்ததெனத் தடைசெய்யலாம்; இதிலே ஒரு செருப்பு எறிந்ததாலேமட்டும் திடீரென எதிர்வினை நீங்கள் சொல்வதுபோல, புதிதாய்க் கிளம்பி "எதிர் தரப்பு மீது இனி செருப்பு - கல் - கடப்பாரை - துவக்கு பாயும் என்ற வகையில்தான் இந்நிகழ்வு நகர்ந்து கொள்ளுமா, என்ன? 

மாடு கொல்தல் பாவம் என்பதை ஆளைக் கொன்று நிரூபித்த இந்திய பொதுப்புத்தி, இன்றைக்கு(க்) கிறீன்பீஸைத் தடை செய்திருக்கின்றது. இப்படியான நாட்டிலே எல்லாவற்றுக்குமேதான் எதுவும் ஆட்சியிலே இருப்பவர் அதிகார,புளி, உப்புவிசயங்கள், விசங்கள் எல்லாவற்றுக்குமாக எல்லாம் பாயும். எதிர்த்தரப்புகள் மீது செருப்பு பாய்ந்தால், அறந்தாங்கி பிரபாகரனே பொறுப்பாவார் என்றால், சிதம்பரம் மீது பாய்ந்த செருப்பின்பின்னாலே, எத்தனை செருப்புகள் இத்தனை நாள் பாய்ந்து செருப்புவியாபாரம் நெருப்பாயிருந்திருக்கவேண்டும்? 

சட்டையைப் பிடித்திழுக்கும் இலக்கியபூமியும் சீலையைப் பிடித்துரியும் சட்டசபையும் நிறைந்தநன்நாட்டிலே ஓர் ஒற்றைச்செருப்பா ஓடுபோக்கை மாற்றுமென்கின்றீர்கள்? 'சைக்கிள் செயின்', 'கோலிசோடா பாட்டில்' குண்டாக்களிலிருந்து ஏகே 47, ரிஆர் 56 தாதாக்கள் அரசியல்வாதிகளாலே இயக்கப்படும் காலமெல்லாம் வந்தபின்னால், ஓர் ஒற்றைச்செருப்பிலே தொற்றிக்கொண்டிருக்கின்றீர்களே? 

இரகுகுல பரதனுக்குமட்டுமல்ல அறந்தாங்கு பிரபாகனுக்கும் பாதுகை ஓர் அடையாளமே!
-/.
நவம்பர் 6, 2015

முற்போக்குத்தமிழ்த்தேசியம்

அடிப்படையிலே சுமந்திரனிலும் நாராயணனிலும் அவர்களின் பின்புலம்சார்ந்து எனக்கு ஒவ்வாமையுண்டென்றபோதிலுங்கூட, இன்றைக்கு முற்போக்குத்தமிழ்த்தேசியத்தின் முதன்மையான முட்டுக்கட்டைகள் சுமந்திரனோ நாராயணனோ அல்லவென்பதிலே தெளிவாயிருக்கின்றேன். இஃது எவ்வகையிலும் அவர்க்கான எதிர்ப்புக்குரல்களை மறுப்பதாகவோ இல்லாமலிருக்கவேண்டுமென்பதாகவோ சொல்வதல்ல. நிச்சயம் இருக்கவேண்டும். ஆனால், இவ்விருநிகழ்வுகளிலே நாராயணனுக்குக் காட்டியவகையிலே குறியீட்டுநீதியும் சுமந்திரனை அளவுக்கதிகமாகவே குறியீடாகக் கண்டுகொண்டு அநீதியும் நிகழ்ந்ததாகவே தனிப்படக் கருதுகிறேன்.

முற்போக்குத்தமிழ்த்தேசியத்துக்கு இப்போதைக்கு அவசியமாக வேண்டியவை:

1.ஒழுங்காக அடிப்படையமைப்பிலே காரணகாரியங்களை வைத்து வகுக்கப்பட்ட தமிழ்பேசுதேசியத்துக்கான முற்போக்குமுதுகெலும்புத்தத்துவம்

2. அதன் அடிப்படையிலே, நமது வீச்சும் ஆழமும் உணர்ந்த, சமூக, அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப, சூழலிய அமைவுகளைச் சீர்படுத்தி அல்-பழையன விலத்தி, நல்-புதியன புகுத்திக் கட்டியமைக்கப்பட்ட நடைமுறைக்கொவ்வும் செயற்றிட்டம்

3. அமைந்திருக்கும் சூழலுக்கமைய தத்துவத்தையும் செயற்றிட்டத்தையும் பரப்புதலுக்கான வலுத்த ஊடக அமைப்புகள்

4. சம்பந்தப்பட்ட மக்களிடையே போய்ச்சேர்ந்து, அவர்களின் அன்றாட நிலையிலும் பங்குகொள்ளும் வகையிலே தொடர்ந்து இயங்கவேண்டிய பங்குதாரர்கட்டமைப்பும் கூட்டுச்செயற்பாடும்

5. தொடர்ச்சியான தம்செயற்பாடுகளை விமர்சிக்கவும் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவுமான திறந்த, ஜனநாயக அமைவிலான பொறிமுறையும் எண்ணக்குதங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளெழுந்துவரும் எதிர்க்கருத்துகளை எதிரிக்கருத்துகளாக எண்ணி அடித்தொழிக்காது மாற்றுக்கருத்துகளாக முன்வைத்து விவாதித்து, அப்புனலிலே மேழெழுந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மையும்

6. முதன்மைநோக்கினையும் அடிப்படைமுதுகெலும்புத்தத்துவத்தினையும் மாற்றாவகைக்குச் செயற்றிட்டங்களையும் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வகித்துப் பலப்படுத்துதனையும் கூறுகளாய்க் கொண்டமைந்த தக்கிக்கும்தன்மையும் அதற்கான வழிமுறைகளும்

7. இதற்கான பரந்துபட்ட தோழமைகளை இதுபோன்ற சமாந்திர குழாங்களிலே அடையாளம் கண்டுகொள்தலும் செயலடிப்படையிலே சேர்ந்தியங்குதலும்

8. தனியாள் தன் நாளாந்த வாழ்விலே தனக்கான சின்ன எல்லைக்குள்ளுக்கும் சிற்றளவிலே விடாது செயற்பட்டுக்கொண்டிருந்தலும்

9. எல்லாவற்றிலும்மேலாக, இதுவரை நாள் தமிழ்த்தேசியம் என்பதன்பேரிலே, இழந்தவர்களின் இருப்புகளை இந்நாளிலும் இனிவருநாளிலும் இலகுவாக்கலுக்காக இயன்றவரை செயற்படுதலும்
இவற்றைவிட்டுவிட்டு, சுமந்திரனையும் நாராயணனையும் தாக்குதல் மட்டுமே எல்லையென்று ஒடுங்கிவிட்டால், இச்சிறுசாககச்செயல்கள், ஸொரோவின் வாள்வீச்சு Z ஆகமட்டுமே மூன்று கோடுகளிலே பளிச்சிட்டு முடிந்துவிடும்.

முதிர்ச்சி என்பது எல்லைகளை உணர்ந்துகொள்தல்; முற்போக்கு என்பது கருத்திலே முயங்கிக் கட்டித்துவிடாது செயலிலே முயன்றிருந்தல். இவையிரண்டும் இல்லாமல், முற்போக்குத்தமிழ்பேசுதேசியம் என்பது சமூகவலைத்தளங்களில் சில இடுக்குமூலைகளுக்கப்பாலே எவ்விடத்திலும் சாத்தியமில்லை.

தன் நோக்கும் அதற்கான தத்துவப்போக்குமில்லாமல், வெறுமனே எதிரிகளின் செயற்பாடுகளுக்கான எதிர்வினைகளே தன் செயற்பாடுகளாக வரையறுக்கவிட்ட எப்போக்கும் தான் போய்ச்சேரவேண்டிய இலக்கைச் சேர்ந்தடைந்ததாக வரலாறு காட்டியதில்லை.

நம்போக்கே நற்போக்கு; கேட்டுக்கொள் பிற்போக்கு!

நாராயணனை அறந்தாங்கி பிரபாகரன் வேறெப்படி எதிர்கொள்ள வழியிருக்கின்றது என்று கேட்டாலும் பிற்போக்குவாதி!
சுமந்திரனைக் கேள்விகேட்டாலும் பிற்போக்குவாதி!
ஹரி ஆனந்தசங்கரி எதற்காக பகவத்கீதையிலே "தமிழர்பாரம்பரியமாக"ச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் என்று கேட்டாலும் பிற்போக்குவாதி!
பிரெஞ்சுக்கொடியிலே தோய்த்து முகப்படத்தைப் போடாவிட்டாலும் பிற்போக்குவாதி!

முன்னரெல்லாம் தம்மோடு சற்றே ஒற்றாதவர்களைப் பிற்போக்குவாதிகள் என்னும் உத்தி கட்டித்த கட்சி மார்க்ஸியர்களுக்கு மட்டுமே இருந்தது; இப்போதெல்லாம், பழம்புலிகள், புதுமிதவாதிகள், பழம்புலி புளியாய்ச் சுழிப்பவர்கள் எல்லாருமே கும்பலிலே ஒன்றுகூடி ஜெபிக்கக்கிளம்பியிருக்கின்றார்கள் என்பதாகத் தோன்றுகின்றது.
பிற்போக்கு,முற்போக்கு, நற்போக்கு வியாக்கியானங்களைக் கேட்டே வயிற்றுப்போக்குவலியாகிவிடுவதுதான் விதி.
 
நிகழ்ந்த பிரெஞ்சுப்படுகொலைகள் விமர்சனமின்றிக் கண்டிப்புக்குரியவை, நிகழும் பலஸ்தீன, ஈழ, குர்திஷிய, காஷ்மீரிய, கடலோனியப்படுகொலைகள்போலவே! நியாயமின்றி விழுத்தப்படும் ஒவ்வொரு கொலையும் பெருங்கொலையே; நெருக்கமான கொலைகளுக்கே நிறம் தோய்த்துக்கொடி முகப்பிட வக்கும் வாய்ப்பும் நீதியுமற்ற நாம் பிரெஞ்சுக்கொலைக்காகமட்டும் முந்நிறச்சாயம் தோய்த்திட எண்ணுகையிலே குற்றவுணர்வு நிறைய உறுத்துகிறது. பிரெஞ்சுச்சாந்து போடுகிறவர் போடட்டும்; போடாதார் விடட்டும். அதைவைத்தே, "பிற்போக்கு".எதிர்."நற்போக்கு" என்று மெல்லியமிரட்டலிட்டால் எப்படி?
நியாயமின்றி இருபதாண்டுகள் சொரியும் ஒளியும் சுத்த வளியும் உள்ளிருப்பதற்கா ன காரணத்தைச் சுட்டவேண்டிய விசாரணையும் இன்றி அடையுண்டிருக்கும் ஒவ்வொரு சிறைக்கைதியின் நிச்சயமற்ற வாழ்வும் அப்பெருங்கொலைக்கு நிகர்த்த கொடுவவலவாழ்வே! அதுக்கே ஆதரவு காட்ட, கொடிகட்ட அச்சமாகவிருக்கின்றது, எவர் பிற்போக்குவாதியென்பார், எவர் எவ்வித அடையாளத்தைச் சொல்லிற்குத்திக் காவத்தருவாரென எண்ணி.
-/.
நவம்பர் 14, 2015

"எனக்கும் கறுப்பு நண்பர்கள் உள்ளார்கள்; ஆனால்,...."

"எனக்கும் கறுப்பு நண்பர்கள் உள்ளார்கள்; ஆனால்,...." என்று நழுவும் வெள்ளைக்காரர்கள்போன்றவர்களை மாவீரர் தினங்களிலே பேஸ்புக்கிலே காணலாம்.


மாவீரர் தினமென்பது எல்லா இயக்கங்களிலும்போய் சுயநிர்ணய உரிமையின் பேரிலே கொல்லப்பட்ட அத்தனை ஆயுத, கருத்துப்போராளிகளுக்கும் உரிமையானதும் நினைவுகூர்வதுமானதாகும். அனைவருக்குமான பொதுநாளென்று ஒன்றை ஏற்படுத்த இவர்களிலே எவருமே ஒத்துவரப்போவதில்லை என்பதாலே இருக்கின்ற இந்நாளிலேயே அவர்களை நினைவுகூர்ந்துவிட்டுப்போக என்னைப்போன்றவர்களுக்கு முடியும்.
ஆனால், குறிப்பிட்ட சிலர் தொடர்ச்சியாக மாவீரர்தினமென்றால், புலிகளின் வாலைப் பிடித்திழுக்கும் நோயாலே "மற்றவர்களும் மாவீரர்களே!" என்ற எதிர்வாதங்களை வைப்பதையே முன்னிலையிலே நிறுத்துகின்றனர். இதை வரட்டுத்தனமான புலியாதரவாளர் சிலர், "துரோகி-தியாகி" முரணிலைவாதிகள் எதிர்த்துக்கூவினாலும் நிதானமான முற்போக்குத்தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கமாட்டார்கள். 


ஆனால், இந்த "புலியெதிர்ப்பே புகல்தத்துவம்" என்றுநிற்கின்ற வரட்டுத்தனமான புலியெதிப்பாதரவாளர்கள், "மாவீரர்கள் என்போர் கொண்ட நோக்கின்பேரிலே கொல்லப்பட்ட எல்லோருமே" என்று இன்று கட்டம்போட்டு எழுதுவதைப் பத்மநாபாவின் நினைவுகூர்தல் நிகழ்ந்த சில நாட்களின் முன்னாலும் உமா மகேஸ்வரனின் நினைவுகூரல் நிகழ்ந்த சில மாதங்களின் முன்னரும் எவருமே குறிப்பிடவில்லை. மாவீரர் தினம் வரும்போது மட்டுமே "போலித்தமிழ்த்தேசியவாதிகள்", "புலம்பெயர்தமிழ்த்தேசியவாதிகள்" என்ற பட்டியலிலே திட்டித்தீர்ப்பதும் தமிழினி, இசைப்பிரியா குடும்பத்தினரின் துயர்களைச் சுட்டுதலும் நிகழ்கின்றது. இத்தனை செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாகக் காணப்படும் தமிழ்த்தேசியம் என்பதை முதன்மைப்படுத்தும் எதனையும் குற்றமுள்ளதாகவே அடித்துக்கூட்டி ஒன்றாய் அடைத்துப்போடும் இவர்களின் தன்மை மிகத்திட்டமிடப்பட்டதாகவே தோன்றுகின்றது. 


1. தமிழினி, இசைப்பிரியா உட்படப் படம்போட்டு அறைகூவி ஈழம் விற்றுப் பேசிக்கொண்டிருக்கும் பழைய "மாற்றுக்கட்சி மாறாத ஈழப்புலிகள்" எத்தனை பேர், சத்தம்போடாமலே செயற்படுகின்றவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கினை இப்படியாகக் குறிப்பிட்டு, எங்கு பட்டாலும் "வள்"ளென்று காலைத்தூக்கும் நடராஜர்கள் எழுதியிருக்கின்றார்களா?


2. "தமிழினி, இசைப்பிரியா போன்றோர்களுக்கு என்ன செய்தீர்கள்?", "பாதிக்கப்பட்ட புலிகளின் இன்றைய வாழ்க்கைக்கு என்ன செய்தீர்கள்?" என்று படங்களோடு பேஸ்புக் அறிக்கைகளும் சுவரொட்டிகளும் விடும் புலிகளல்லாத மாற்றியக்கங்களிலிருந்தவர்களும் பழையபுலி_புதியகவிகளும் என்ன செய்தீர்கள்? செய்கின்றீர்கள்?
இவற்றைப் பட்டியலிடவேண்டும்; தனிப்பட்ட அறிக்கையிட்டோ, புத்தகம்போட்டோ இவற்றைச் செய்தோம் என்று மிருதங்கமோ உடுக்கோ பறையோ பகிரங்கத்திலே பேஸ்புக்கிலே அடிக்காத தனிப்பட்ட புலியாதரவாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள் போல அப்படியாக ஊருக்கும் உலகுக்கும் ஒலியெழுப்பாத புலியெதிர்ப்பாளர்களும் பழம்புலி_புதுக்கதைஞர்களுமிருக்கலாம். 

3. சிரியன் குழந்தைக்காகச் சொட்டுக்கண்ணீரும் பாரிஸ் எரிவதற்கு மூவண்ணப்பட்டைகளும் பேஸ்புக்கிலே போடுகின்றவர்கள், இத்தனை நாளும் ஏன் இன்றைக்குங்கூட நீங்கள் செய்வது, ராஜபக்‌ஷ, வாசுதேவவினை வரவேற்ற பெருநிலையிலிருக்கின்றவர்கள், குர்திஷ் பெண்போராளிகளை முகப்பிலே வைத்துக் காதலிக்கின்ற டம்மி ஐரோப்பிய, கனடா ரைப்பிஸ் மார்க்சிஸ்ருக்கள் முள்ளிவாய்க்காலிலே தலை பிளந்த குழந்தைப்படம், முலை கருங்கிய தாயின்படம்போட்டபோது மட்டும் ஶ்ரீலங்கா இராணுவத்தையும் அரசினையும் வளமாகவிட்டுவிட்டு, புலிவாலை முறுக்குவதிலேயே மும்முரமாக நிற்கும் பொய்விளையாட்டாளிகள் உங்களுக்கும் நீங்கள் திட்டும் காசுபதுக்கிய புலம்பெயர்பினாமிப்புலிகளும் என்ன வேறுபாடு உண்டெனக் கருதுகின்றீர்கள்? இரு சாராருமேதான் மாவீரர்தினத்தை வைத்து உங்கள் பிசினஸை அமோகமாக உங்களின் விசிறிவாழைகளிடையே நடத்திவைக்கின்றீர்கள். பிறகெதற்கு பால்வெள்ளை நான், தயிர்வெள்ளை நீ என்ற தனகலும் தள்ளுப்பாடும் வெள்ளைவேட்டிக்கள்ளத்தனமும்?

ஓ! ரசிகர் சீமானே வா!

in the defense of Seeman & co. let me be the devil's advocate.

சீமானுடனான நம் அரசியலைவிட்டுவிட்டலாம். ஆனால், வாக்கிலே பதவியைப் பிடித்துக்கொண்ட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் எம்பி தம்பி கம்பி தும்பி டம்பி எல்லாம் பொத்திக்கொண்டிருக்கின்றவேளையிலே பாண்டவரணி, பேண்டவரணி, "அரசுதான் செயலாற்றவேண்டும்! நடிகர்களல்ல!" என்று பிருஷ்டத்தைமட்டும் திறந்துகாட்டும் பொழுதிலே, முகத்தையேனும் காட்டும் சீமான், வைகோ போன்றோரைப் பிடித்துக்கொள்வது சரியில்லை என்றே தோன்றுகின்றது. 


தமிழ்த்தேசியத்துக்குக் குரலைக் கொடுக்கின்றவர்களின் படங்களைமட்டுமே அட்டணையாக ஆக்கி, ஈழத்தமிழர்களுக்காக மட்டும் கத்தும் இவர்கள் இப்போது தமிழகத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் ஒளிந்துகொள்வது எங்கே என்று புலம்பெயர்நாடுகளிலிருந்து தட்டச்சிலே மட்டும் மார்க்ஸியபானம், மனிதநேயம், சுமந்திரம் விற்கின்ற வாய்ப்பேச்சாளர்களிடலும்விட, சீமானோ வைகோவோ குறைந்தளவு காட்சியிலேனும் நிற்கின்றார்கள். இதைத் தவிரவும், திருமுருகன், எழிலன் போன்றோரும் (இவர்களுடனான மற்றைய தமிழ்த்தேசியவாதிகளின் உட்பிரச்சனைகளை இப்போதைக்குப் பேசவில்லை) காட்சியிலே நிற்கின்றார்கள். எதையுமே பேசாத,பேசவேண்டிய கடப்பாடுள்ள பேரரசியல்வாதிகள் வலுக்கட்டாயமாக தன்னார்வர்களின் தொண்டுகளிலேயே தங்கள் படங்களை அதிகாரமாகப் பொதித்துப் பொறித்தபின்னரே செயற்படவிடும்நிலையிலே, இந்நேரத்திலேனும் சீமானைப் பிடித்துப் பிராண்டுவதைத் தவிர்க்கக்கூடாதோ எனத் தோன்றுகின்றது. 


சீமான் உட்படத் தமிழ்த்தேசியம் (அனைத்துவகையும்) பேசுகின்றவர்களெல்லாம் வெறுமனே முட்டாள்களாகவும் முற்றிலும் சுயநலமிகளாகவும் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும்வேளையிலே வாக்கிலே பதவிக்கு வந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் வெறுமனே தட்டச்சுச்செய்தே போராளிகளாகக் காட்டிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தட்டச்சுமார்க்ஸிய சதிக்கருத்தாக்கம் முற்போடும் பிற்போக்குவாதிகளும் சுலபமாகத் தப்பிப்போய்க்கொண்டிருப்பதாகவே படுகின்றது. தமிழ்நாட்டின் தொலைக்காட்சிக்கும் சஞ்சிகைகளுக்கும் "ஈழப்போராட்டத்திலே எனது ஸ்ரண்ட்" செவ்விகளும் தொடர்கட்டுரைகளும் விடும் ஈழக்குஞ்சுகள் (புலம்பெயர்ந்த ரீபோமெற்றறட்) இந்நேரம் பார்த்து, புலம்பெயர், ஈழம்வாழ்தமிழர்கள் தமிழ்நாட்டின் வெள்ளம் குறித்துக் கரிசனமும் ஆதங்கமும் தெரிவித்து அணிலுதவிப்பாலம் இக்கரையிருந்து அக்கரைக்கு அக்கறையிலே செய்யக் குரல் கொடுப்பதைப் பகிடி செய்யவோ அல்லது யாழ்ப்பாணம், வவுனியாவிலும் வெள்ளம் என்று திசைதிருப்பி அம்மழைக்குட்டையிலே காக்காய்க்குளிப்புச் சிலிர்த்தாடுவது அவற்றின் புதுச்சாயத்தைக் கரைத்துக் காட்டியிருக்கின்றது.


இதற்காக, சீமானுடனும் நாம் தமிழருடனும் அவர்களின் தூயதமிழ்த்தேசியத்துடனோடோ உடன்பாடு என்று கொள்ளத்தேவையில்லை. 


பேயென்று நீங்கள் கருதினாலும், அதற்கான நீதியைக் கொடுங்கள்; குறிப்பாக, பிசாசுகள் சுலபமாகத் தப்பிப்போகின்ற வேளையிலே. 85 இன் துப்பாக்கியோடு போஸ்கொடுக்கும் சீமோனையும் 15 இன் தண்டோடு போஸ் கொடுக்கும் சீமானைப் போலவே நிகழ்வுக்குச் சரி நியாயமின்றி எட்டிநின்று விமர்சித்துவிட்டு யாரும் போனாலும், இதேபோலத்தான் எதிர்க்கேள்வி எழுப்பத்தோன்றும்.


எண்ணினால், இத்தனியாள் அரசியலை குறைந்தளவு வெள்ளநிலை சீரடைந்துவிடும்வரையிலேனும் விடுத்து,இப்போதைய தேவைகளைக் காணுதலே முதன்மையாகத் தோன்றுகின்றது; செயற்படவேண்டிய பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளினையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்பது வேறு, பதவியிலே இருக்காத அரசியல் செய்கின்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று கேட்பது வேறு (நடிகர்கள் அவர்கள் சங்கங்கள் உட்பட).


பட்டதைச் சொன்னேன். தவறெனில், சுட்டிக்காட்டுங்கள் (வெள்ளம் கட்டுக்கடங்கி, நிலமை சீரான பின்னால்).
-/.
டிசெம்பர் 4, 2015

கலக்கு! கலக்கு! நல்லாக் கலக்கு! கலக்கிட்டியா? அதிலை ஒரு நூறு கிராம் பார்சல் பண்ணு

நைத்திரேற்றுக்கும் கல்சியம் காபனேற்றுக்கும் கிணற்றிலே கழிவுநெய் இருக்கின்றதுக்கும் என்ன சம்பந்தம்? சுன்னாகத்தை வைத்து அரசியல்வாதிகள் முதல் அறிவியலாளர்வரை எல்லோருமே குழப்புகின்றார்களோ என்று படுகிறது.

நைத்திரேற்று பசளைகளோடு சம்பந்தப்பட்ட ஊட்டம் (nutrients) மிகைத்த பிரச்சனை; அதியூட்டநிலை (eutrophication) நீர்நிலைகளிலே ஏற்பட்டு, பாசியதிவளர்ச்சியடைதலுக்கும் (algae bloom) ஒட்சிசன்குறைபடுதலும் (hypoxia) நீருயிரிகள் ஒழிந்துபோதலுக்கும் காரணமாவது நைத்திரேற்று. இது யாழ்க்குடா நீர் சார்ந்த பிரச்சனைகளிலே ஒரு கூறு. யாழ்க்குடாவிலேயிருக்கும் சுண்ணாம்புப்பாறைகளினாலே (limestone) நிலத்தடி நீர் (groundwater) வெள்ளைபடியும் சவர்க்காரம் நுரைக்கவைக்காத வன்நீராக (hard water) இருக்க வழிவகுப்பது கல்சியம் காபனேற்று. இது யாழ்க்குடா நிர் சார்ந்த பிரச்சனைகளிலே இன்னொரு கூறு.

(இவற்றைவிட, கடல்நீர் உட்புகுவதாலே (Seawater intrusion) நிலத்தடிநீரும் நிலமும் உப்பேறுவதும் இன்னொரு நீர் சார்ந்த பிரச்சனை.
வழுக்கியாறு போன்ற மழைக்காலத்திலேமட்டும் படுக்கைபார்த்து ஓடும் மாயவாறுகள் தவிர்த்த வானம்பார்த்த பூமியிலே அளவுக்குமீறி, நிலத்தடிநீரினை வறுகியிறைப்பது, நிலத்தடிநீர்மட்டம் (water table level) தாழ வைப்பது மற்றுமொரு நீர் சார்ந்த சிக்கல்)

கடைசியான பிரச்சனை, இந்த எரிநெய்க்கசிவு காணும் கிணற்றுநீர்ப்பிரச்சனை.

ஆனால், நைத்திரேற்று, காபனேற்றுகளை அளந்துகொண்டு, கிணற்றிலிருப்பதாகச் சொல்லப்படும் எரிநெய்க்கசிவின் தாக்கத்தை (impacts of oil pollution) நைத்திரேற்றுத்தான் அகற்ற உதவும் எனும் இரசவாதத்தை என்ன சொல்வது?

யாழ்க்குடா நீரிலிருக்கும் எல்லா வகை -நீரளவு, நீர்த்தரம், நீர்ப்பகிர்வு- பிரச்சனைகளுக்கும் ஒரே பொறியிலே ஐந்து எலி பிடிக்கும் வழிமுறையை மீண்டும் மீண்டும் சொல்வதை என்ன சொல்வது? அதுகூட, நடைமுறையிலே பரீட்சித்துப் பார்த்த தொழில்நுட்பத்தீர்வாகவில்லாமல், ஆய்கூடத்திலே பரிசோதிப்புநிலையிலே பல கட்டுப்பாடுகளுடனான மாதிரிப்பொறியிலே சிற்றளவிலே (controlled experiments in/on prototypes at the pilot-scale) செய்து காட்டுவது எவ்வகையிலே பயனாகும்? மாதிரிகளுக்கு பயன்படளவு சார்ந்த எல்லைகளுண்டு.

நிலத்தடி நீர் பரவும் பகுதி சீரான மண்ணமைவோடிருப்பதில்லை; பல்வகை மண்பருக்கைக்கூறுகளின் சேர்வும் (composition of soil particles) அதுசார நீரூடுதன்மையும் (permeability) மாசு பரவும், வடிகட்டப்படும் (contaminant dispersion and filtration) பொறிமுறையும் ஆய்வுகூடப்பரிசோதனை வெற்றிகளைக்கூட இலகுவிலே நடைமுறையிலே செயற்படுத்தவிடா.
"கலக்கு! கலக்கு! நல்லாக் கலக்கு! அதுலருந்து ஒரு நூறு க்ராம் பார்சல் பண்ணு!" தொழில்நுட்பம், அறிவியலா? அவியலா?
சத்து அசத்தைச் சாராது; அசத்து அறியாது

டிசெம்பர் 7, 2015

சின்ன சமஸ்தானங்களின் சில்லறைவருத்தங்கள்

சமஸ் என்பவர் ஒரு கட்டுரை அவர் ஆசிரியாகவிருக்கும் தமிழ் இந்துவுல எழுதியிருக்கிறார், "நமக்குள் ஒரு தலைவன்!" என்ற தலையங்கத்தின் கீழே.

அதிலே சில துண்டங்கள்:

== கட்டுரைப்பகுதி உள்ளீடு===
 ""தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. .... இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

பாலஸ் தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் தானே இலங்கையில் இறுதிப் போர் அவலங்கள் உச்சம் நோக்கி நகர்ந்தன. ஏன் இலங்கை உள்நாட்டுப் போர் கொடூரங்கள் பெரும் செய்திகள் ஆகவில்லை?

நினைவில் கொள்ளுங்கள், காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ இந்தி பேசா மாநிலங்கள் மீது திணிக்கும் வஞ்சனையை நம்மைவிட மோசமாக காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் எதிர்கொள்கின்றன.

...; ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தன்னலம் பார்க்காமல் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கும் ‘உதவும் கைகள்’ தேவைப்படுகின்றன. முக்கியமாக அரசியலுக்குத் தேவைப்படுகிறது. தலைவன் வெளியே எங்கிருந்தோ வர மாட்டான்; அவன் உள்ளுக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறான்!"
==== உள்ளீடு முடிவு======

இது பொருந்தாக்காலப்புள்ளியென்றபோதுங்கூட, இந்த எழுத்தாளியின் முடுக்கலைப் பற்றி 2009 இலிருந்து கண்டதாலே சுட்டவேண்டியிருக்கின்றது. மன்னிக்கவேண்டும்.

2009 மே இலே ஈழத்தமிழர் நொருங்கியபின்னால், காந்தியம் பற்றி, பொருந்தாத்தலைமை, பயங்கரவாதம் பற்றி எடுத்துரைத்த பல தமிழக எழுத்துச்சரக்கு விற்பனையாளர்களிலே தமிழ் இந்துவிலே ஆசிரியரான இந்தாளும் ஒருவர். வழக்கம்போல இலவசமாகப் போராடுவது பற்றிய அறிவுரை கா(இ)ந்தியகாருண்யபானம் வடித்துத்தந்தவரோ அவர் சார்ந்த இந்து நிறுவன ஊடகங்களோ தலைமைகளோ 2009 இலே மக்கள் கொல்லப்பட்டபோது எதனைப் பேசினார்கள் என்பதையோ பேசாமலேயிருந்தார்கள் என்பதையோ இவ்விடம் மேலே அவர் தமிழ் இந்துவிலேயே எழுதிய "ஏன் இலங்கை உள்நாட்டுப் போர் கொடூரங்கள் பெரும் செய்திகள் ஆகவில்லை?" வரிகளை வாசிக்கும்போது கேட்கத்தோன்றியது. "விடு-தலை" பெற்ற கிளிநொச்சிக்கு முதன்முதலிலே ஶ்ரீலங்கா அரசினாலும் இராணுவத்தாலும் விசேடமாக ஆகாயத்தாலே அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர் அதைக் கட்டுரையாக வெளியிட்ட அவர் சார்ந்த ஊடகம் லங்காரத்னாவின் ஊடகமில்லையா?


கூடவே, சரியாகப் பத்தாண்டுகளுக்குமுன்னாக ஆழிப்பேரலையிலே வடகிழக்கு இலங்கை அமிழ்ந்தபோது, சமஸ் விமர்சிக்கும் விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் எடுத்துக்கொண்ட, விரைந்து செயற்படுத்திக்காட்டிய கட்டுக்கோப்பானதும் பயனானதுமான நிர்வாக, நிவாரணப்பணிகளையும் இவ்விடத்திலே "நமக்குள் ஒரு தலைவன்" என்பதை வாசிக்கும்போது நினைவுகூர்ந்தேன். ஆனால், அச்செயற்பாடுகளை அக்காலகட்டத்திலே பத்திரிகையாளர் சமஸோ ரிப்லிகேன் பப்ளிஸர்ஸோ குறிப்பிட்டார்கள தெரியாது. இந்திய ஊடகங்கள் வெள்ளத்திலே குறிப்பிட்ட "ஒருவர்" செத்தார் என்பதான வதந்தியிலேமட்டும் மூழ்கிக்கிடந்தன என்ற ஞாபகம்.


"ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தன்னலம் பார்க்காமல் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கும் ‘உதவும் கைகள்’ தேவைப்படுகின்றன. முக்கியமாக அரசியலுக்குத் தேவைப்படுகிறது. தலைவன் வெளியே எங்கிருந்தோ வர மாட்டான்; அவன் உள்ளுக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறான்!" என்கிற சமஸின் கருத்தோடு முற்றாக ஒத்துப்போகிறேன். விமானத்திலிருந்து போட்டோசொப் பண்ண படம் காட்டுகின்றவரோ மாளிகைக்குள்ளேயிருந்து தொலைக்காட்சியிலே பார்த்துக்கொண்டு எடுபிடிகளை எதிர்க்கருத்துகளை நடிகர்களுக்கு அளிக்கவிடுகின்றவரோ அல்லர் தலைவர்; அறிக்கைகூட விடாது, முனைப்பாக தன் நிர்வாக அமைப்பும் நிர்வாகிகளும் தாமும் தண்ணீரிலே இறங்கிச் செயற்பட வழி காட்டுகின்றவனே தலைவன்.


பேய்க்கும் அதனிடத்தினைப் பெரியவாக்கள் பெரிய மனசு வச்சுக் கொடுக்கவேண்டும்.

Saturday, October 17, 2015

கலக்கப்போவது யாரு?

கோடம்பாக்கநடிகர்சங்கத்தேர்தலிலே இருபக்கத்தாரினதும் விழியங்களை உயூரியூப்பிலே இன்று தொடர்ந்து பார்த்தேன். 

தமிழ்ப்படங்களிலே கதாநாயகனின் தொந்தி, கதாநாயகியின் புடவைக்கட்டு, அப்பா பாத்திரத்தின் அரைப்பூசணிக்காய்த்தலை, அடைப்படைக்கதை லொஜிக் என்ற இறங்குவரிசையிலே எது சரிந்தாலும், எப்போதுமே நகைச்சுவை சரிவதேயில்லை என்பது பேஸ்புக் மீமீக்களிலேயே வழக்கமாக நமக்குத் தெட்டத்தெளிவு. இந்நடிகர்சங்கத்தின் தேர்தற்போட்டிப்பேச்சு, "எங்களுடன் நின்று கட்டிடம் கட்டினாயா? கிரிக்கெட் விளையாடினாயா? மாமனா? மச்சானா? உனக்கு எதற்கு வேண்டும் நாங்களே இன்றுவரை கண்டுகொள்ளாத நாடகநடிகர் வாக்கு? பாதுகாப்பு?" வகை அனல் பறக்கும் புனல் பொங்கும் விழியங்களிலே விழுந்து செவியிற் கலப்பது தமிழ்த்திரைப்படங்களின் உணர்வில் நிலைத்த நகைச்சுவைத்தரத்தினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

ஆனால்,இந்த ரியலிட்டி ஸோவிலே அடியோடி ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தமுறுஞ்சும் அட்டைகளாய் உறுத்திக்கொண்டிருப்பவை நிறைய இருக்கின்றன; கதாநாயகர்-நாயகி, நகைச்சுவை நடிகர்-நடிகை, வில்லர்-வில்லி, துணைநடிகர்-நடிகை, தொலைந்துபோனநடிகர், திடீரென நடிகராகத் தோன்றும் மனிதர் அத்தனை பேரும் அவர்கள் நடிக்கும் படவில்லர்களாகவே சொல்லுக்குச் சொல் பேசுகின்றார்கள்; தோன்றுகின்றார்கள். இத்தனை சாதியாக, பிரதேசமாக, மதமாக, "ஒண்டிக்கொண்டி ஆம்பிளையோடு மோதுடா; பொம்பளைகளோட மோதாதடா" ஆளுகளாய் வெளிவந்தவர்கள் அடுத்தடுத்த படங்களிலே எப்படியாக முகங்களை இத்தனையையும் எதிர்க்கும் ஆட்களாக அரிதாரத்தின் பின்னாலும் கேக்கின் பின்னாலும் மூடிமறைத்து வேஷம் கட்டப்போகின்றார்கள் என்பதுதான் வியப்பாகவிருக்கின்றது. இத்தனைக்குப் பின்னும் நம்பிக் காசையும் கட் அவுட்டையும் பாலையும் கோயிலையும் அங்கப்ப்ரதட்சணத்தையும் செய்யும் விசிறிகளின் பனைமட்டைவிசுவாசத்தின்மீது இவர்களுக்கு அத்தனை நம்பிக்கையிருக்கின்றதுமட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

"நடிகர் சங்கக்கட்டடத்தைக் காணோம்" வடிவேலு நகைச்சுவையை இன்னமும் எடுத்து விட்டாலும், அஃது அதைவிடவும் ஆழமாக ஷியாம் பெனகலின் Well Done Abba கிணற்றுக்கதையாக ஆகிவிடுகின்றது. ஆளுக்காள், "கட்டிடத்தைக் காணோம்" என்பதும் "அந்தக்கட்டடம்தாங்க இந்தக்கட்டடம்" என்று வாழைப்படக்கதை சொல்வதும் கட்டித்தருவோம் என்பதும் கோடி உழைக்கின்றவர்கள் "வியர்வை சிந்தி நடித்துக் கடன் அடைக்க ஆயிரம் தருவோம்" என்பதும் "நைஜீரியன் இளவரசியின் சொந்தாக ஆபிரிக்க வங்கியொன்றிலே இருக்கும் ஐநூறு மில்லியனை எடுக்க, நூறு டொலர் அனுப்பி உதவினால், ஐநூறு மில்லியன் கைக்குவந்ததும் ஐந்துவீதம் உங்களுக்கு" என்ற அளவுக்குக் கீச்சுக்கீச்சு மூட்டுகின்றது.

இவ்வகையிலே பார்த்தால், இவர்கள் அன்றைக்குப் படம் பார்க்கக்கொடுத்த காசுக்கு இன்றைக்காச்சும் நடிக்கின்றார்கள். ஆனால், நடிக்கவே வராத புலி, வேதாளம் வி..லா...ங்குகள்; மேடைக்கே வராமல் இன்னமும் வழுக்கிக்கொண்டே ஓடுகிறன. 

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை! நாளாந்த சூழ்நிலையிலே இருக்கின்ற அழுத்தத்தினைக் குறைத்துச் சிரிக்க உதவுகின்றதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், திருட்டுவிழியமாக ஏற்றப்படாமலே, ஆலிவுட்டு, ஈரான்புட்டு, கொரியன் உட்டு என்று ஆரும் காணாத நேரத்திலே அரைக்கிலோ கதை, காட்சி மூலத்திலிருந்து அள்ளிப்போடாமல், இலவசமாக இப்படியோர் அசல் கதைவசனம் இயக்கத்திலே வாரநீள அனைத்துநடிகர் சீரியல், பான்கேக்,, தோசை கணமும் மொறுமொறுவென்று எண்ணெய் ஒழுக ஒட்டத் தொய்யாமலே தருவது இன்னும் இரண்டு நாட்களிலே இல்லாமலே போகப்போகின்றது என்பதிலே மிகவும் வருத்தமே!. 

ஆனாலும், அதுவரை கண்டு க..............ழி........ப்போமே!

பிகு: அஹேம்! எல்லாம் அந்த ஶ்ரீலங்கா தமிழருக்காக ஆறுமணிநேர அரிதார உண்ணாவிரதம் இருக்கப்போகையிலே கண்ட காணாமற்போன கட்டடப்பிரச்சனைதான் என்பது நினைவிருக்கட்டும். ஆக்காங்! அப்பப்ப அப்படியொரு சிரங்கு, படைப்பிரச்சனை இருந்ததை ஞாபகம் கொள்றோம்பா! விஷால் ரொட்டி சார், கருணாஸ் டேவர் ஸார், சரத்குமார் நடுவார் ஸார், ராதாரவி நாய்த்ரீ ஸார், கார்த்தி கவுண்ட் ஸார், நாஸர் காக்கா ஸார், ஆர்ய சேகர் ஸார், மன்சூரு வென்னீரு ஸார், ஊர்வசி சாட்சி மேடம் அப்புடியே ஒங்களோட இம்மாம்பெர்ய ப்ராப்ளத்தை வெறும் நொறுக்கு அம்மாமி அப்ளாமாய் ரெண்டு விசிட்டுல நொருக்கி அமுக்கிவிட நீங்கள் நாடவேண்டிய ஒரேயொரு நம்பிக்கைக்குரிய வேறெங்கும் கிளைகளில்லாத் தனியாள் ஸ்தாபனம் எங்கடை அப்புக்காத்து சுமந்தி.... .:-)

Wednesday, October 14, 2015

அரிவாளாதிருப்பாரின் அறிக்கை

கிளிநொச்சி பிடிக்கப்பட்டவுடன், முதலிலே இராணுவமும் ஶ்ரீலங்கா அரசும் உலங்குவானூர்தியிலே கொண்டு சென்று காட்டி முதலிலே வெற்றிக்கட்டுரை எழுத வைத்த பத்திரிகை த ஹிண்டு. அதன் ஆசிரியர் நரசிம்மன் ராம் ஶ்ரீலங்காவுக்கான சேவைக்காக லங்கா ரத்னா வழங்கப்பட்ட மிகச்சிலரான வெளிநாட்டினரில் ஒருவர். சைவ உணவுகள் மட்டுமே சமைக்க வலியுறுத்தப்படும் உணவகத்தைக் கொண்ட பத்திரிகைநிறுவனத்திலே அடிப்படையிலே திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை ஆதரிக்கும் வண்ணமே தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வரைகிற கம்யூனிஸ்டு தோழர்.

ராஜபக்ச சகோதரர்களுக்குக் 'கௌரவ கலாநிதி' பட்டங்கள் கொடுத்த கொழும்புப்பல்கலைக்கழகத்தையே திரும்ப அவற்றைக் கொலைக்குற்றங்களின் பேரிலே பெற்றுக்கொள்ள முன்னர் கலாநிதிப்பட்டத்துக்குப் பிரேரித்த பேராசிரியர்தான் ஓய்வுபெற்றபின்னர் வெளிப்படையாகக் கொழும்பு ரெலிக்ராப்பிலே கேட்டு எழுதுகிறார்.

உலகநாடுகள் தத்தம் அரசியலுக்காக முன்னுக்குப் பின் மசுந்தினாலும், ஒப்பீட்டளவிலே பெருங்கொலைகள் இலங்கையிலே ஶ்ரீலங்கா அரசினாலே நடத்தப்பட்டதை ஒத்துக்கொண்டிருக்கின்றன; குறைந்தளவு, "உள்நாட்டிலாவது ஒப்புக்கு விசாரணை வை" என்றாவது சொல்கிறார்கள்.

இப்படியான நிலையிலே ஒரு நேர்மையான பத்திரிகையாளர் என்றால், லங்கா ரத்னாவை என். ராம் இந்தியாவின் படைப்பாளிகள் சிலர் தேசியவிருதுகளைக் குற்றம் கடிந்து திருப்பிக்கொடுத்ததுபோல ஶ்ரீலங்கா அரசுக்குத் திருப்பிக்கொடுத்திருக்கவேண்டாமா? கொடுக்கவில்லை; கொடுக்கக்கூடியளவு கொடுக்கிருக்கின்றதாகவும் தெரியவில்லை.

அந்நிலையிலே அவர் சார்ந்த அரசியற்கட்சியினைச் சேர்ந்த தமுஎகச தமிழ்ச்செல்வன் போன்றோர் சூடு சுரணையோடும் இதயசுத்தியோடும் விருது, எருது, கதிரு, குதிரு, அரிவாளு, சம்மட்டி எல்லாம் திருப்பிக்கொடுப்பார்கள் என்று நம் பேஸ்புக் நண்பர்கள் என்று எதிர்பார்ப்பதைப் பரிதாபமாகப் பார்க்காமல் வேறென்ன செய்வது?

கட்சிக்கம்யூனிசம் என்றாலே வெறும் கார்ல் மார்க்ஸ் கட்டுரைவரைதல்தாம் காண்! நடிகர் சங்கத்தேர்தலிலே நிற்கவேண்டியவர்களெல்லாம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே பதவிகளிலே நின்று காற்றிலே கைவீசிக் கறுப்பு, அறுப்பு அறிக்கைவிடுகின்றார்கள்.

இப்படியாக, பிழைப்புக்கு அரிவாளையும் சம்மட்டியையும் காட்டுகிறவர்களை, பெருங்கொலைகளை மேடைகளிலே கொட்டின இரத்தம் உறையமுன்னரே கிண்டல் செய்தவர்களை, ஒண்டிப்புலிக்கவிதைகளைச் செத்தபுல்மேய விட்டவர்களையெல்லாம் அறிக்கைக்குமேலே அரையங்குலம் நகர்வார்களென வாய்பார்த்து விருதைச் சகமனிதனுக்காக, படைப்பாளிக்காக விட்டெறி என்று எதிர்பார்ப்பதெல்லாம் "சாரி ரொம்ப ஓவர்!"

டேவிற் ஐயா










தென்னைமரத்து

சந்தனமேடை எம் இதயத்திலே (santhanamEdai em ithayaththilE

தண்ணிக் கை சப்பை

ஓர் அரசுசார்ந்த குழு என்பது நடுநிலையான, ஒழுக்கக்கோவையின் அடிபப்டையிலே, தொழில்சார்நெறியுடன் தொழிற்படவேண்டியது.
"போர்க்களத்திலே ஒரு பூ" என்ற படத்தினை எஸ். வி. சேகர் உள்ளடங்கிய தணிக்கைக்குழு "பெண்களுக்கு எதிரான பலர் உள்ளடங்கிய வன்முறை", "தாய்நாட்டுக்கோ அதன் நட்புநாட்டுக்கோ எதிரான கருத்துகள்:" என்பதன் அடிப்படையிலே தடை செய்தது (ஆதாரம்: எஸ். வி. சேகரின் ஊடகங்களுக்கான செவ்வி http://www.tamilwin.com/show-RUmtyJSZSVju2G.html
இயக்குநரின் செவ்வி: https://www.youtube.com/watch?v=H6CZr8ZMX4o ).
அதன் பின்னால், இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் 'போர்க்களத்திலே ஒரு பூ' இயக்குநர் கணேசனுக்குமான முரண்பாடு குடும்பத்தினரின் எதிர்ப்புக்கும் மாறாக கணேசன் படத்தினைத் தந்ததாக வெளிவந்த செய்தியிலிருந்தது.
(ஆதாரம்: https://www.youtube.com/watch?v=UubHl3jb8X0&feature=youtu.be )
இதிலே இரண்டாவது செய்தியை மட்டும் நாராயணமூர்த்தி தன் பேஸ்புக் செய்தியாக இட்டிருந்தார். அதிலே, அப்படத்தினைத் தடைசெய்த தணிக்கைக்குழு உறுப்பினர் எஸ். வி. சேகர் வந்து, என்று கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார். ( ஆதாரம்: https://www.facebook.com/moorthy.n.moo…/…/10153695975977490…{%22tn%22%3A%22R%22 }
ஒரு செய்தியை, தகவலை சட்டரீதியாகச் சம்பந்தப்படாதவர்கள் பகிரங்கமாக விமர்சிப்பது என்பது ஒரு விடயம், சட்டரீதியாக/தொழில்சார் ஒழுக்காற்றின்கீழே செயற்படவேண்டிய ஓர் அதிகாரி வந்து தன் தொழில்சார்ந்த எல்லைக்கு அப்பாலே இறங்கித் தனிப்பட விமர்சிப்பது என்பது வேறு. இரண்டாவது நிலை, சம்பந்தபப்ட்ட பாதிக்கப்பட்டவர் என்று தன்னைக் கருதக்கூடிய பட இயக்குநர் இப்படியான தனிப்பட்ட உணர்வு அடிப்படையிலே பகிரங்கமாக சமூகவலைத்தளங்களிலே கருத்து வெளியிடும் (ஆதாரம்: https://www.facebook.com/sve.shekher/posts/10153194966697496 ) தணிக்கை அதிகாரி அப்படியான தனிப்பட்ட அடிப்படையிலேயே தன்னைத் தடைசெய்ததாகச் சொல்லச் சட்டரீதியான வழக்குத்தாக்குதலுக்கு வழிவகுக்காதா?
தணிக்கைக்குழு அதிகாரிக்கு/உறுப்பினருக்குத் தனிப்பட்டவராகக் கருத்துகள் இருக்கும்; அதை மறுக்கமுடியாது. ஆனால், தனது அரசுக்குழுவின் செயற்பாடு சம்பந்தப்பட்ட சிக்கலிலே, வெளிப்படையாக வந்து, எடுக்கப்பட்ட தீர்வுக்குச் சொல்லப்பட்ட குழுவின் வரைமுறைக்கு அப்பாற்பட்ட கருத்துகளை உணர்வு அடிப்படையிலே பகிர்வது, அவ்வரசுக்குழுவின் நோக்கத்தினையும் செயற்பாடுகளையும் களங்கம் கொண்டவை என்று காட்டுவதாகாதா? இப்படியான உளநிலையிலேயே இத்தணிக்கைக்குழு செயற்பட்டிருக்குமானால், இத்தணிக்கைக்குழுவின் தொழில்சார்நெறி என்ன? இப்படியான செயற்பாடு, தணிக்கைக்குழுவின் இறைமையினைக் கேள்விக்குறிக்காக்காதா?
இயக்குநர் இசைப்பிரியா குடும்பத்துக்கு இழைத்தது சரியா என்பதும் 'போர்க்களத்திலே ஒரு பூ' இந்திய தணிக்கைச்சட்டத்தின்கீழே தடைசெய்யப்படச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவைதானா என்பதுவும் அல்ல இத்தாலே பேசப்பட்டவை.
ஒரு தணிக்கைக்குழுவின் தலைவர் சமூகவலைத்தளத்திலே தன் தணிக்கைக்குழு சார்ந்த தீர்ப்புக்குமப்பால், தனிப்பட்ட அளவிலே பாதிக்கப்பட்டதாகத் தன்னைச் சொல்லும் இயக்குநர் குறித்த கருத்துகளைப் பரப்புதல் தொழில்நெறிக்கு முரணானதும் சம்பந்தப்பட்ட தணிக்கைக்குழுவின் இறைமைக்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகாதா? இதனையே சம்பந்தப்பட்ட இயக்குநர் சுட்டிக்காட்டி வழக்குத் தொடரவோ, குறைந்தளவு (கருத்துக்கூறிய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்காத) மாற்றுத்தணிக்கைக்குழுவினைத் தன் படத்தினை மீளப்பரிசீலனை செய்யக்கேட்கவோ வழிவகுக்காதா?

டாக் டர்ர்ர்ர்ர்ர்ர்

தமிழ்த்திரைப்படத்துறைக்கு வக்காலத்து வாங்கும் ஆளாய்க் கடைசியிலே வந்து சேர்ந்திருக்கிறேன். அதன் குறைகளெனப் படுகின்றவற்றைச் சுட்டிக்காட்டும்வேளையிலே அதன் அடிமடியிலே குத்துகின்ற முறையற்றதையும் சுட்டவேண்டியதாகின்றது.

அப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம் பெயருக்கு முன்னாலே போட்டு மகிழ்ச்சியடைகின்றவர்கள் எல்லோரும் கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி, விஜய், விஜயகாந்த் இவர்களின் பெயர்களுக்கு முன்னாலே போட்டால்மட்டும் கிண்டல் செய்வது ஏனோ?

அவரவர் அவரவர் துறையிலே சிறப்பினைப் பெற்றால், கௌரவ டாக்டர் பட்டத்தை எவராவது எதற்காவது வழங்கித்தான் தீருவார். இதிலே கலாமுக்கு மட்டும் பயபக்தியோடும் கருணாநிதிக்கும் மற்றோருக்கும் பகிடியோடும் போட்டுப் பார்ப்பது, ஆக, போடுகின்றவர்களின் அரசியலைத்தான் காட்டும்.
அப்துல்கலாமின் கௌரவ முனைவர் பட்டங்கள் எத்தனை அரசியல் சார்ந்து கொடுக்கப்பட்டவை என்பதைக்கூட இவ்விடத்திலே விட்டுவிடலாம். ஆனால், திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட ஐந்து முதலமைச்சர்களைக் கண்டுவிட்ட தமிழ்நாட்டிலே, தமிழ்ப்படம் ஒவ்வொன்றின் வெளியீட்டையும் அதன் பாடல்வெளியீடு, பூஜைபோடுதல் இத்தனையையும் உடனுக்குடன் பெரும்படமாகவும் உரையாடலாகவும் நிகழ்த்திக்காட்டும் அதே கற்றார் சமூகம், ஒரே திரும்பலாக, அடுத்த கணத்திலே திரும்பி, அப்துல் கலாமின் கௌரவ டாக்டர் பட்டத்தை உச்சிமுகர்ந்தும் விஜயகாந்தின் கௌரவடாக்டர் பட்டத்தை எள்ளிநகையாடுவதும் என்ன நிலை?

கௌரவ 'டாக்டர்' பட்டங்களையும் கற்றுப்பெற்ற 'டாக்டர்' பட்டங்களையும் வேறுபடுத்த நாம் முனைவதில்லை. கற்காமலே ஒற்றை அறைக்கடதாசிப்பட்டம் விடும் பாழ்கலைக்கலகங்களிலிருந்து கற்றதாய்ப் பெற்ற டாக்டர் பட்டங்களைப் போட்டுக்கொள்ளும் 'டீ ஸ்வாமி'ஜீக்களைக்கூட அங்கீகரித்துவிடுகின்றோம். ஆனால், பத்துப்பேர் அவனை/அவளை/அவரை ஆய்வு செய்து பல்கலைக்கழகத்திலே 'டாக்டர்' பட்டம் பெற உதவுமளவுக்கு ஒரு நடிகர் பேரிலே இருக்கும் பட்டறிவினை, ஆகர்ஷத்தை வைத்து ஒரு கௌரவப்பட்டம் கொடுத்தால், அதுமட்டும் கிண்டலுக்குரியதாகிவிடுகின்றது.
சிவாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ராதா போன்றோர் மேற்கின் வகுப்பறை/அகடமி சார்ந்த பல்கலைக்கழகக்கல்வியைப் பெறவில்லை என்றபோது, அவர்கள் நாளும் நாடகக்குழுவிலேயே கிடந்து, உழன்று, கற்றவர்கள் என்பதைக் காணும்போது அவர்களின் பெற்ற அறிவும், பட்ட அறிவும் ஒரு பல்கலைககழக 'டாக்டர்' பட்டத்துக்குரிய ஆராய்ச்சிக்கும் மேலானவை; கௌரவ டாக்டர் பட்டத்துக்குரியவை.

நிச்சயமாக, இக்கௌரவ 'டாக்டர்' பட்டத்தைக் கொடுப்பவர்கள் யார், கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பவை ஆளுக்காள் மாறுபடும். இவை எல்லாவற்றையுமே நாம் நடிகர்களைக் கிண்டல் செய்யமுன்னால், எண்ணிக்கொள்ளவேண்டும்.

கனவுகள் மட்டுமே உச்சத்தை எட்ட உதவுமென்ற பார்வையிலேதான் கலாமும் கனவு காணச் சொன்னார்; விஜயின் கதாநாயகனும் கனவு காணச் சொல்கிறான்.

சொந்தமாக இசையமைத்த ராஜேந்தரைக் கிண்டல் செய்து கொண்டு, வேற்றிசைகளிலிருந்து நுள்ளி மெல்ல அள்ளிப்போடும் இசையமைப்பாளர்களுக்காக உருகும் உலகம் நமது. "என்ன இருந்தாலும் படித்தவர்களில்லையா?" ஆன நம்மிடமிருந்து உள்ளுக்கு இன்னும் "மழித்தலும் நீட்டலும் மயிர் ஓயாது விக்கிரமாதித்தன் முதுகுதொங்கு வேதாளமாய் வளர வளர" நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது.


[பிகு: தனிப்பட்ட அளவிலே 'கலாநிதி' என்பதையே Doctor(ate) என்பதற்கு ஈடான பதமாகத் தமிழிலே பயன்படுத்துகின்றபோதுங்கூட, இவ்விடத்தே இக்குறிப்புக்கான பின்புலத்தினையிட்டு, 'டாக்டர்' என்றே பயன்படுத்தியிருக்கின்றேன்.]

Tuesday, September 15, 2015

"போர்க்களத்திலே ஒரு பூ" மேலான காதுல பூ



இசைப்பிரியா தொடர்பான "போர்க்களத்திலே ஒரு பூ" படத்துக்கு எஸ். வி. சேகர், "கைய புடிச்சி இழுத்ததை பார்த்தியா?" என்பதுக்கும்மேலாக, வன்புணர்ச்சி நிகழ்ந்ததுக்கு விழிய ஆதாரம் கேட்டிருந்தார் என்றும் அதன்படியே அவர் உள்ளடக்கிய தணிக்கைக்குழு படத்தினைத் தடை செய்துவிட்டது என்றும் சொல்லப்பட்டது.

இதன் பின்னால், தான் சொன்னதைத் திரித்து எழுதியதாகவும் பேஸ்புக்கிலே தன்னைக் கிண்டல் செய்வதாகவும் தொலைபேசி செய்து பயமுறுத்தியதாகவும் எஸ். வி. சேகர் தமிழ்நாட்டு நகர்காவலர் நிலையத்திலே முறையிட்டிருக்கின்றார்.


எஸ். வி. சேகர், " பெண்களைஇழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்குஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல்வன்கொடுமையில் ஈடுபடுவது போலவோ காட்சிகளை அனுமதிக்கக்கூடாது என்று அந்தச் சட்டத்தில்உள்ளது. இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பைஏற்படுத்துவது, நட்பு நாடுகள் மற்றும்அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படி காட்சிகள் இருக்கக் கூடாது என்றும் அந்தச்சட்டம் சொல்கிறது. ஆனால், இவை எல்லாமே‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்றபடத்தில் உள்ளன. சட்டமன்றத்தில் தமிழகமுதல்வர் பேசியதை வியாபார நோக்கில்வெளியில் கொண்டுவரும்போது, அதற்கு தமிழக அரசின்அனுமதி வேண்டும். அதை அவர்கள் தரவில்லை.அந்தப் படத்தை எடுத்துள்ள கணேசன்என்பவர், குயுக்தியாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் சரிஎன்று நான் சொன்னதைப்போல சித்திரிக்கிறார்கள்.இசைப்பிரியாவுக்கு நடந்ததைப் போன்ற கொடுமை எந்தப்பெண்ணுக்கு ஏற்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியது.அதை யாரும் சரியென்று சொல்லவில்லை.ஆனால், தேவையில்லாமல் முகநூலில் என்னைத் திட்டுவதும், தொலைபேசியில்மிரட்டுவதும் நாகரிகமான செயல்கள் இல்லை. இதுதொடர்பாக போலீஸ்கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.


தொலைபேசியிலே மிரட்டும் செயல் நாகரீகமானதில்லை என்பதை எவரும் ஒத்துக்கொள்வார்கள் (கட்சி அரசியல்வாதிகளும் தொண்டர்களும் குண்டர்களும் ஒத்துக்கொள்வார்களா என்பதைமட்டும் நாம் நாகரீகமாக ஒரு பக்கம் விட்டுவிடலாம்). இப்படியாக உண்மையிலே யாரேனும் மிரட்டியிருந்தால், அது கண்டிக்கமட்டும் தக்கதல்ல, தண்டிப்புக்குமுரியது; கூடவே, அவர்கள் எக்காரணத்துக்காக வெஞ்சினம் கொண்டு மிரட்டிக் கண்டிக்கின்றார்களோ அதன் நோக்கத்துக்கும் எதிரானதாகவே இம்மிரட்டல் தொழிற்படும் என்பதையும் இப்படியானவர்கள் உணரவேண்டும். அதேநேரத்திலே தொலைபேசியிலே மிரட்டும் செயலே நாகரீகமில்லை என்று கருதும் எஸ். வி. சேகர் என்ற தணிக்கைக்குழு உறுப்பினர் எப்படியாக ஒரு பெண்ணினைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதையோ எல்லாம் பேசாமலே போவதுதான் தன்நாட்டினதும் அந்நாட்டிலே உருவாகும் கலைப்படைப்பினதும் நாகரீகம் என்று சட்டத்தின்கீழே ஒளித்துவிளையாடுகின்றவர் போல எண்ணுகின்றாரோ தெரியவில்லை.

ராஜ்பாபர், பத்மினி கோலாபூரி நடித்த ‘Insaaf Ka Tarazu‘ வெளிவந்த 1980 இற்கு முன்னான காலத்திலேகூட, ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதுபோன்ற காட்சிகளை நிறையப் படங்களிலே பட மையக்கருத்துக்கும் காட்சிக்கும் சம்பந்தப்படாமலே காட்டியபோதே ஏற்றுக்கொண்டோமே! இப்போதுங்கூட, பாலியற்சொன்வன்முறைக்கு நாயகர்களும் அவர்களின் நண்பர்களும் உள்ளாக்கும்போதுகூட அவற்றையெல்லாம் நாயககுணாம்சயமென்றோ 'நகைச்சு-வை' -பண்பாடு என்றோ ஏற்றுக்கொண்டோமே அப்போதெல்லாம் இப்பெண்மீதான வன்முறை எவ்வகையிலும் பிரச்சனையாகவில்லை; "போர்க்களத்திலே ஒரு பூ" என்ற இப்படத்தின் மையப்புள்ளியே இசைப்பிரியா என்ற பெண் இராணுவவன்முறையின் பாற்பட்ட துயரையும் அவர் பெற்ற துன்பமுடிவினையும் சொல்லி அதனூடாக ஒரு மொழிபேசும் இனம் கண்ட அவக்காலத்தைச் சொல்லவருவதே; இதிலே எவ்வண்ணம் பாலியலின் துன்புறுத்தலுக்கு அப்பெண் உள்ளாகவேயில்லை என்று காட்டிப்போவது? வேண்டுமானால், இந்தியப்படங்களிலே மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகள் வரும்போது கூடவே கீழே "செய்யாதீர்கள்" என்றோ "கேடாகலாம்" என்றோ வேண்டுகோளோடு தோன்றுவதுபோல வன்புணர்ச்சி நிகழ்வதாக மறைமுகமாகச் சுட்டும் காட்சி வரும்போது, “" பெண்களை இழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவததுபோலவோ காட்டுவது நாட்டின் இறையாண்மைக்கும் உள ஒழுக்கத்துக்கும் உகந்ததல்லஎன்று துணையெழுத்தோடவிட்டால், பாராளுமன்றத்திலேயே உட்கார்ந்திருந்து வரவுசெலவுத்திட்டவிவாதத்தின்போது தூங்காத வேளையிலே செல்பேசியிலேபிட்படக்காட்சி கண்டு களிக்கும் நாடாளுமன்ற.உறுப்பினர்கள் சரி என்று சொல்லிவிடமாட்டார்களா என்ன?

ஒரு நிராயுதபாணியான பெண்ணை இராணுவம் கூட்டுவன்புணர்ந்து கொன்றதை -அது தொடர்பான ஆடைகளற்ற அப்பெண்ணின் சீர்குலைந்த படங்களைத்தீவிர தமிழ்த்தேசியம்" பேசுகின்ற சிலரும் வலைத்தளங்களுமேகூட, அப்பெண்ணின் உற்றாரின் "வேண்டாமே!" என்ற வேண்டுகோட்களுக்கும் செவிமடுக்காது சமூகவலைத்தளங்களிலேயும் பரப்பிய, பரப்பும் துர்நிலையிலே,நேரடியானதற்றதாகச் சிலாகிக்கும் காட்சியாகச் சொல்வதை எப்படியாகச் சதையை வைத்துத் தர்ப்பைப்புல்யாகஹோமம் வளர்க்கும் அவநிலையை ஒவ்வொரு பாடற்காட்சியிலும் படுக்கைக்காட்சியிலும் காட்டும் திரைப்படங்களைத் தமிழ்|பாரதப்பண்பாட்டின்பேரிலே அனுமதிக்கும் ஒரு நாட்டின் தணிக்கைக்குழு தடை செய்கிறது?

எல்லாவற்றுக்கும்மேலாக, ஒரு பெண்ணை இராணுவவீரர்கள் வன்புணர்ந்துகொல்வதாகக் காட்டும் காட்சி எவ்வகையிலே இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும், நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படியுமான காட்சியாக ஆகிவிடுகின்றதெனப் புரியவில்லை. குறைந்தளவு இப்படம் 'இந்திய அமேதிகாக்கும் படையும் பிரம்படி ஒழுங்கையும்' பற்றிப் பேசும் படங்கூடயில்லையே! இதன்மூலம் என்ன உன்னத கருத்தினைச் சேகர் அங்கம் வகிக்கும் தணிக்கைக்குழு எல்லோருக்கும் சொல்லவருகின்றது? இல்லை, இங்குக் குறிப்பிடப்படும் ஒவ்வாத திரைக்காட்சிகள் -வன்புணராத,- இந்தியாவினையோ ஶ்ரீலங்காவினையோ விமர்சனம் செய்யும் வேறு காட்சிகள்தாமென்றாலுங்கூட, இதன் மூலம் சொந்த நாட்டின் மற்றைய படைப்பாளிகளுக்கும் கருத்தாளர்களுக்கும் இத்தணிக்கைக்குழு சொல்ல வருவது என்ன? “சொந்தநாட்டையோ அதன் நட்புநாட்டினையோ விமர்சிக்கும் எக்கருத்தும் அனுமதிக்கப்படாது; அனுமதிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகமானதுஎன்ற வரிகள்தானா? பருப்புமூட்டைக்குள் மூட்டைப்பூச்சியை விட்ட பாக்கிஸ்தான் தீவிரவாதியைத் தேடும் விஜயகாந்த், அர்ஜுன் வகையறாக்கள்கூட இத்தகாவரிகளைப் பேசியதில்லையே! எவ்விதமான மிஸா(ரி) சமுதாயநீதி இது? (இங்கு எப்படியாக 'ரெரரிஸ்ட்', 'மட்ராஸ் கபே' போன்ற படங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது வியப்புக்குரியதல்லவே!)

பேஸ்புக்கிலோ ட்வீற்றரிலோ அல்லது வேறெந்த சமூகவலைத்தளத்திலோ விமர்சனமே வரக்கூடாது, தொடர்ச்சியாகப் பாராட்டுகளே வரவேண்டுமென்று விரும்பும் முதலாவது தமிழ்நாட்டுத்திரையுலகப்பிரபலம் சேகரில்லை; சின்மயி, சுகாசினி, விஜயகாந்த் போன்ற சிலர் ஏற்கனவே சென்னை இணையக்குற்றத்தடுப்புநகர்காவலரிடம் முறையிட்டோ வெளிப்படையாகத் தம் செயல்களையோ தம் படைப்புகளையோ கிண்டல் செய்யக்கூடாதென்றோ காராசாரமாகச் சொல்லியிருந்தார்கள். கிண்டல்கள் வரையறைமீறிய இடங்களுமில்லாமலில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால், முறையீடுகள் மிகத்தேர்ந்தெடுத்தே கவனத்திலே முறையீடு பெறுவோரிடமிருந்தும் பெறப்படுவதாகத் தோன்றுகின்றது. (இங்கே, டி. ராஜேந்தர், பவர் ஸ்டார், விஜய் போன்றவர்களின் உன்னதம் நம்மவர்களுக்குத் தெரியவேண்டும். எத்தகைய அடிகளையும் தாங்கிக்கொண்டு, நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் அவர்கள்; சொல்லப்போனால், "கலக்கப்போவது யாரு?" முதல் எத்தனையோ தொலைக்காட்சிநிகழ்ச்சிகளுக்கு வராமலே வாழவைத்துக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அவர்கள். இவர்களைக் கிண்டல் செய்யும் 'நகைச்சுவையாளர்களை' எவர்களும் சட்டத்தின்கீழே கொணர்வதில்லை; 'கறுப்பு', 'குண்டு', 'மனைவி', 'கணவன்' என்று நகைச்சுவையின்பேரிலே இழிவுபடுத்துகின்றவர்களும் கைதட்டையும் காசைத் தட்டிலும் வாங்கிப்போய்விடுகின்றார்கள்.)

அரசியல்வாதிகளினையும் திரைப்படமுகங்களையும் அவர்களின் செயற்பாட்டுக்காக விமர்சனம் சமூகவலைத்தளத்திலே செய்தாலுங்கூட, கிண்டல் செய்வதாகவோ சட்டத்தின் துணையோடு உள்ளே தூக்கிப்போட்டு மிரட்டிக் கருத்தை அமுக்குவதாலேமட்டும் இறைமையினையும் நேர்மையினையும் நிலைக்குத்தாக நிறுத்திச் சூரியநமஸ்காரம் செய்ய வைத்துக்கொள்ளமுடியுமா, சுதந்திரதினத்திலே தேசியக்கொடியினை ஏற்றுமிடத்திலேயே செருப்பாலே தமக்குள்ளே அடிபட்டுச் சமூகவலைத்தளங்களிலே துண்டவிழியமாகக் கட்சிப்பிரமுகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிலே?

ஆனால், முதலிலே ஈழம் தொடர்பான படத்துக்கு இப்படியான குதர்க்கம் செய்து தடை செய்த தனியாளோ குழுவோ எஸ். வி. சேகரோ, அவர் அங்கம் வகிக்கும் தணிக்கைசபையோ அல்ல(ர்). இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புகழேந்தி தங்கராஜின் "காற்றுக்கென்ன வேலி?" இனைத் தணிக்கைக்குழு தடைசெய்திருந்தது. (அதன்பின்னாலே, தணிக்கையதிகாரி ராஜுவுக்கும் புகழேந்திக்குமான விவகாரம் விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுபடம் எடுத்தார் என்று புகழேந்தியைப் பற்றி ராஜு சொல்லி அவதூறு வழக்கானது இன்னொரு கிளைக்கதை.) இதேநேரத்திலே, சந்தோஷ் சிவனின்ட்ரெரரிஸ்ட்’, ‘மல்லி’, ‘இனம்’, ஜான் ஆப்ரஹாமின்மெட்ராஸ் கபேபோன்ற படங்கள் இவை போன்ற எத்தொற்றுவியாதியும் கொண்ட படங்களாகக் காணப்படாது, தேசபக்தியையும் சுண்டுவிரல் இறையாண்மையையும் விண்டுகொண்டு பிறந்தபொன்னாட்டுக்குப் பிளட்டினவாடை போர்த்தும் படங்களாக விளம்பரமாக்கித் தணிக்கைக்குழுவின் தாராளவாதத்தினாலே ஓடவிடப்பட்டன என்பதையும் கவனிக்கவேண்டும்.

முடிவாக, தொடர்ச்சியான வன்புணர்வுகளைப் பெண்கள் எதிர்கொள்ளும் நாட்டிலே, பெண்களின் தனிப்பட்ட ஆடையணி, உணவு விருப்புவெறுப்புகளை, யாருடன் எப்போது எங்கே நடமாடுவது என்பதை அவர்கள் அறியாத தாமேதோன்று மதக்கல்சுரல்கமிசார்களும் கட்சித்தொண்டர்களும் நாட்டின் புராதனப்பண்பாட்டின் அடிப்படையிலே தீர்மானித்துத் தண்டனை வழங்கும் நாட்டிலே, பெண்களுக்கு நிகழும் வன்புணர்வு பற்றிய வெளிநாட்டுவிவரணங்கள் நாட்டினை இழிவுபடுத்துகின்றன, இறையாண்மையைக் குத்திக் குதறுகின்றன என்பதன்பேரிலே தடை செய்யப்படும் பொதுச்சிந்தைப்போக்கிலே, “ஈழம் தொடர்பான இந்திய ஆதரவுப்பதிப்பாளர்களின் பரபரப்புப்புத்தகங்களை விற்பதைக்கூட நாட்டின் இறையாண்மைக்கு எதிராகக் கருதும் சகபதிப்பாளர்கள், சங்கங்கள்தம் செயற்பாடுகள் சரியேதான் என்று அடுத்த புத்தகக்கடைக்கு வீரப்பன்வதம் பற்றிய புத்தகம் வாங்க நகர்ந்துபோகும் மக்களின்மனப்பாங்கிலே எஸ். வி. சேகரின் கருத்தினைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. பாமினி எழுத்துரு சம்பந்தமாகப் பேசும்போதுகூட தமிழ்-பார்ப்பனர் என்று தொடர்பின்றி நகைச்சுவையை அசர்ப்பந்தமாக நுழைக்க முடிகின்றவர்கள், அவர்களின் நகைச்சுவைக்குச் சிரிக்கின்றவர்கள்கூட தொடர்ச்சியாகவே இப்படியான சந்தர்ப்பங்களிலே கருத்தினைச் சொல்லாமலே சுயதணிக்கை செய்துகொள்கின்றபோது தாம் சொல்லாது விலகியிருப்பதிலேயே தம் கருத்தினை வெளிப்படையாகச் சொல்லிவிடுகின்றார்கள் என்று சொல்லமுடிகின்றது.

இவ்வகையிலே பார்த்தால் . ஆர். ரஹ்மானுக்கும் மஜீதிக்கும் மதத்தினை முன்னிறுத்திப் படத்தினை எடுத்ததற்காகப் பத்வா விதித்த மும்பாய் அமைப்புக்கும் எஸ் வி சேகரின் தணிக்கைக்குழுவுக்கும் எந்த வேறுபாட்டினையும் காணமுடியவில்லை. எல்லாம் தமக்கான திருப்திக்கான விதிகளைக் கண்டுபிடித்து நூலாலே தலையையும் வாலையும் கட்டித் தொடர்பு கண்டு கருத்துத்தடைசெய்யும் வன்மமே மிஞ்சுகின்றது.

ஆனால், ஒன்று; இத்தகைய நாட்டின் கூட்டுமனப்பாங்கு இறையாண்மை வரைவிலக்கணத்தின்வழியிலே நீண்டகாலப்போக்கிலே பாதிக்கப்படுவது, இறந்துபோன இசைப்பிரியா இல்லை; இன்னமும் வாழப்போகும் இந்தியப்பெண்கள்தாம்; இறையாண்மையின் பேரிலே நட்புநாட்டின் கூட்டின்பேரிலே அத்தனை கொடுமைகளையும் அமுக்ககேட்பதினாலே நொருங்கிப்போவது, ஏற்கனவே நொருக்கப்பட்ட கூட்டுநாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகமல்ல; ஒருங்கிக்கொண்டிருக்கும் உள்நாட்டின் கருத்துவெளிப்பாடுதாம். துணுக்குத்தோரணங்களே நகைச்சுவையான நாட்டிலே ஸ்ராண்ட் அப் கொமெடியன்களே தேசிய கொடிகாத்த குமரர்களாகட்டும்.

வந்தே.. ஹும்.. வரவே வேண்டாம்! ஆசீர் எமக்கு! வாதம் உமக்கு!