Friday, April 29, 2005

கணம் - 462

செய்விதி



பின்னால்,
"சிந்தாதீர் கண்ணீர், தோழர்களே"
என வந்ததொரு சலன விவரணம்.

இடைப்போதில்,
கன(க) விருதுகள் சொரிந்தன,
உள்ளூரிலும் உலகளாவியும்.

அதற்கும் முன்னாலிருந்து,
அவனுக்கும் ஒரு குடும்பம்;
அவன் காண, கதைக்க,
அவன்போல் பேனை சில
இருந்தன; இருந்தாற்போல்,
இறந்தன.

ஆதியிலிருந்து
அடித்துக்கொண்டே
எமதலை ~ எதிரலை.

எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்

முன்னொரு விதி செய்தோம்;
அஃது எந்நாளும் எமை
இடறி முறிக்கக்கண்டோம்.

பேசி முடிந்த
பின்னாளும் வரும் - பார்,
பிறனொருவனுக்கு
இப்பேய்ப்பொழுது
-'பின்னால்,
"சிந்தா......


'05 ஏப், 29 வெள் 11:32 கிநிநே.

8 comments:

Sri Rangan said...

//எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்

முன்னொரு விதி செய்தோம்;
அஃது எந்நாளும் எமை
இடறி முறிக்கக்கண்டோம்.//




உண்மை,உண்மையிலும் உண்மை!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
SnackDragon said...

/பேசி முடிந்த
பின்னாளும் வரும் - பார்,
பிறனொருவனுக்கு
இப்பேய்ப்பொழுது
-'பின்னால்,
"சிந்தா...... /

இதை உறுதியாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வராமலும் போகலாம். நீங்கள் சொல்வது போல் நடந்தால் நல்லதுதான்.

மற்றபடி, "பின்னாள்" என்று நீங்கள் பாவித்து இப்பொழுதுதான் பார்க்கிறேன். நல்லது.
கவிதை வழக்கம் போலவே நன்று.

-/பெயரிலி. said...

கார்த்திக், நான் "(நாம்) பேசி முடிந்த பின்னால்" என்ற அர்த்தத்திலே எழுதவில்லை, "(அவன்) பேசி, முடிந்த பிறகு ரப்போகும் நாள் (இதுபோல)" என்ற அர்த்தத்திலே 'பின்னாளும்' எழுதினேன். ஆனால், "நாம் பேசி முடிந்த பின்னால்" என்பதும் இன்னொரு வகையான அர்த்தத்தைத் தருகின்றது.

SnackDragon said...

நன்றி, இன்னொரு முறை வாசிப்பேன். :-)

சுந்தரவடிவேல் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு தருணத்தில் வருகிறேன். கனக்கிறது.

Thangamani said...

//எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்//

:(

SnackDragon said...

//நீங்கள் சொல்வது போல் நடந்தால் நல்லதுதான்.//
என்பது, நாம் உணர்வது போல் அவனும் உண்ர்வான், உணர்ந்தாலும் உணராலாம்;உணராமலும் போகலாம். உணர்ந்தால் நல்லதுதான்;நீங்கள் சொன்னது போல் என்று சொல்ல வந்தேன். உங்கள் வாசிப்பு இப்போது பிடிபடுகிறது.