உலோவலிலே பாஸ்டன் பாலாஜி வீட்டில் முதல்நாளும் நாஸுவாவிலே மெய்யப்பன் வீட்டிலே அடுத்த நாளும் போன ஆண்டுக்கடைசியிலே சந்தித்தோம்; மெய்யப்பன் வீட்டிலே சந்தித்து வீடு வந்து பின்னிரவு என்னைச் சேர்த்துவிட்டு பாலாஜி திரும்பிப்போனார்; நான் பிபிஸி பக்கத்தினையும் தமிழ்நெற் பக்கத்தினையும் பார்த்துவிட்டுத் தூங்கப்போவோமென்று திறந்தால், ஊழியலை அநர்த்தம். அத்தோடு அச்சந்திப்பினைக் குறித்த பதிவினை எல்லோரும் மறந்துவிட்டோம். காசி ஞாபகப்படுத்தியிருக்கின்றார்.
சரி படங்களைப் போட்டாலாவது நான் விளக்கிச் சொல்லி வாசிக்கின்றவர்களைக் குழப்பும் தேவை இல்லாமலே போகுமென்று பட்டதால், அதற்காக இந்தப்படப்பதிவு. படத்திலே தோன்றியவர்களுக்குப் படம் பகிரங்கமாகவது ஆட்சேபணை இருக்குமென்றால், அகற்றிவிடலாம் (குறிப்பாக, செர்ரிப்பூவின் இரவுநேரத்திலும் அணியும் சூரியவெளிச்சத்தை மறைக்கும் நிறக்கண்ணாடிக்கு :-)).
காசி & பேனா
நவன் & பேனா, காசியின் கால்வாசிக்கை
செர்ரிப்பூவும் தலைக்குமேலே எரியாத மேசைவிளக்கும்
அப்பாக்களும் பிள்ளைகளும்
காசி, 'பாஸ்டன்' வேல்முருகன், செர்ரிப்பூ, பாஸ்டன் பாலாஜி, நாஸுவா மெய்யப்பன் மற்றும் இரு தேனீர்க்கோப்பைகள், சில கண்ணாடிகள் & பல விம்பங்கள்
பேச்சாளரும் பேச்சிலரும்
உலோவல், நாஸுவா, காசியின் காலுறை & செர்ரீயின் பின்தலைப்பிம்பம்
மெய்யப்பன், காசி, செர்ரிப்பூ & குளிர்க்கண்ணாடி, பாலாஜி, வேல்முருகன்
செர்ரிப்பூவின் பின்புறம், பாலாஜி புத்திரி, பாலாஜி, நவன், காசி, வேல்முருகன்
மெய்யப்பன், காசி, செர்ரிப்பூ & அதே குளிர்க்கண்ணாடி, -/., வேல்முருகன்
Cherry Stoned to his Basic Instinct Pose
37 comments:
தேங்ஸ¤ங்கோவ்...
நல்லாருக்கு, கா.ரா வுக்கு பேரமாத்தீட்டாங்களா?
அது பார்வை-மெய்யப்பனா?
நல்ல படங்களும், வசனங்களும்.
அப்பப்பா... கடைசியிலே போட்டோலே இருக்கிற எல்லார் மூஞ்சிம் தெரிஞ்சிடிச்சுங்கோ.
பெயரிலி/- உங்க எழுத்தை வச்சி பார்த்து 70 வயது கிழவன் என்று நினைத்தேன். இவ்வளவு இளமை புதுமையா இருக்கீங்க. காசி ஒவ்வோர் படத்துல ஒவ்வோர் விதமா இருக்காரு. நவன் என்ன ஒரே போஸ் தான் கொடுத்தாரா? போஸ்டன் கருப்பு வெள்ளை படத்துல charcoal பண்ணி profile-ல போட்டிருந்தாரு, இப்போ தான் கலரா தெரியுறாரு. செர்ரி யாரு கார்த்திக்கா. கூலிங்கிளாஸை கண்ணுல போட்டுக்கவே இல்ல போல.
அறி(முக)த்திற்க்கு நன்றி.
பெயரிலி, உமக்கு போட்டி நான் மட்டும்தானய்யா!
அறிமுகத்துக்கு நன்றிங்க பெயரிலி.
காசி ஒவ்வோர் படத்துல ஒவ்வோர் விதமா இருக்காரு.
அதான்ன...:)
பெயரிலி/- உங்க எழுத்தை வச்சி பார்த்து 70 வயது கிழவன் என்று நினைத்தேன். இவ்வளவு இளமை புதுமையா இருக்கீங்க.
--Paandi
//Cherry Stoned to his Basic Instinct Pose//
ஹிஹி; குசும்பு கொஞ்சமா நஞ்சமா!!
வாங்க...வாங்க... அவங்களைப் போல, இவங்களைப்போல என்ற comparision வேண்டாம் பாலாஜி... நீங்கள் உங்களைப்போல், உங்களுக்குத் தெரிந்ததை, உங்களுக்குப் பிடித்ததை, உங்கள் பாரியில்..oopppsss....பாணியில் எழுதுங்கள். ரசிக்க நாங்க ரெடி !!!!
oooppppsssssssssss....பெரியவாள் தப்புக்கு மன்னிக்கனும்...........திருப்பிப்பார்த்தல் ஒரு சுகமான அனுபவம்தான்...காசி முகத்தை உத்து உத்து பார்த்தேன் - காரணம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் எங்கூட படிச்சவரா இருந்திருப்பாரோ என்ற யோசனையில்தான்...ம்ம்ம்... ஒரு முடிவுக்கும் வர முடியல போங்க !
என் முன்னாடி நொறுக்குதீனி இருக்கும்போது கரெக்டா படம் பிடிச்சிட்டீங்களே ;-)
"பேச்சாளரும் பேச்சிலரும்"
படத்தில செர்ரிப்பூவப் பாக்க என்ன ஞாபகம் வருது? ஜெயலலிதா முன்னாடி நிக்கிற மாதிரி இல்ல?
//(குறிப்பாக, செர்ரிப்பூவின் இரவுநேரத்திலும் அணியும் சூரியவெளிச்சத்தை மறைக்கும் நிறக்கண்ணாடிக்கு :-)). //
அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே இன்னும் என்ன ஆட்சேபனை.
நண்பர்களுக்கு, நண்பர்களின் ஆர்வத்தோடு விளையாடவில்லை, சுமாராய் சென்ற ஆண்டின் இறுதியிலே, ஜெயமோகன் - கலைஞர் மோதலிலே , சூடு பறக்கும் போதே கலைஞரை கடித்து(பதிவுகளிலே) ஒரு கவிதை எழுதியிருந்தேன். திண்ணை அதை வெளியிட பயந்து வெளியிடவில்லை (என்றுதான் நான் புரிந்து கொண்டேன்;திண்ணை டான் -இடமிருந்து மீண்டும் பதில் இல்லை)அதுசமயம், ஜெயமோகன் தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதிலே, தான் சொல்லவந்ததை பெரும்பாலும் யாரும் சரியாய் புரிந்துகொள்ளவில்லை என்றும், அதன் பின்னணி அரசியல் பற்றியும் பதில் எழுதியிருந்தார். அதனாலே , இந்தியா போகும் திட்டம் இருந்ததாலே ,இணையத்திலே அடையாளத்தை தவிர்ப்பது நல்லது என்று ஒரு மேலோட்ட கவனமாய் தவிர்த்து வந்தேன். இப்போது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.
பெரிய பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்; நண்பர்களுடன் மறைக்க ஏதும் இல்லை; மேலும் 70 வயதுக்கு மேல் எழுதுவது போல் ஒரு தோற்றம் இருந்தால் நல்லதுதானே என்று நினைத்திருந்தேன்.
செர்ரியின் கேசிலே பெயரிலி என்ற பிரதிவாதியையும் சேர்க்கப்போகிறேன்.
//Cherry Stoned to his Basic Instinct Pose//
இதுக்கு இருக்கு உங்களுக்கு பால்டிமோர் பக்கம் வராமலா போய்டுவீங்க? :-)
//பெயரிலி/- உங்க எழுத்தை வச்சி பார்த்து 70 வயது கிழவன் என்று நினைத்தேன். //
என்ன அல்வா, எழுத்திலே மட்டும்தான் முகமூடி போட முடியும் என்று நினைத்தீரா? நிஜத்திலே முடியாதா என்ன? :P
அதெல்லாம் சரி யார் அந்த Camera man?.
காசி மட்டும் தான் சிரிக்கிறார் மற்றவர்களுக்கு என்ன நடந்தது? உம் எண்டு கொண்டு.
பெயரிலி நீங்க ரொம்ப சின்னப் பையனா இருக்கிறீங்கள்.
//அது பார்வை-மெய்யப்பனா?//
தங்கமணி , அது நாசுவா, கஞ்சிச் சித்தர் "பார்வை மெய்யப்பனே" தான்; ஆளை வலையிலே பார்க்கவே முடியவில்லையே?
காசி, ஏன் இப்படி ஒவ்வொரு போட்டோவிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறீங்க? :P
//காசி & பேனா//
ஆட்சியை பிடிச்சுட்டோம்ல :)
//நவன் & பேனா, காசியின் கால்வாசிக்கை//
இந்தக் கேமராவிலே தமிழ் எழுத்து வருமா?
//செர்ரிப்பூவும் தலைக்குமேலே எரியாத மேசைவிளக்கும்//
இரண்டு புலிகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட இடிச்சப் புளி
//அப்பாக்களும் பிள்ளைகளும்//
குழந்தையை அடிக்கும் போதெல்லாம் போட்டோ எடுக்கிறீர்களே ?
//காசி, 'பாஸ்டன்' வேல்முருகன், செர்ரிப்பூ, பாஸ்டன் பாலாஜி, நாஸுவா மெய்யப்பன் மற்றும் இரு தேனீர்க்கோப்பைகள், சில கண்ணாடிகள் & பல விம்பங்கள்//
(மேலே உள்ள அதே வரிசையில்)
ஒருவர் ஓடிவிடலாமா? என்று,ஒருவர் கால் நகத்தைப் ப்ய்த்துக்கொண்டு, ஒருவர் மவுனி, ஒரு பாகவதர், ஒரு இசைக்கடலில் "மிதப்பவர்" .
//பேச்சாளரும் பேச்சிலரும்//
ஏய் நாங்க யாரு தெரியுமில்லே?, சரிந்தாங்கண்ணே அப்படியே செய்ஞ்சிட்றேன்
//உலோவல், நாஸுவா, //,
//இசைக்கடலை திறக்க்முடியாமல் கஷ்டப்படும் பாகவதர், மூழ்கியவர்//
//
மெய்யப்பன், காசி, செர்ரிப்பூ & குளிர்க்கண்ணாடி, பாலாஜி, வேல்முருகன்//
எனக்குள் ஓர் உலகம், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், எனக்கேன் வீம்பு, அட போட்டா எடுய்யா சீக்கிரம், கர கர சஙர,
அவ்வளவுதான்... :)
தங்கமணி அது நான் தான் . அல்லது நான் அது தான் ;-)
புகைப்படங்களை இட்டதற்கு நன்றி. மாண்டி சொன்னதை வழிமொழிகிறேன் ;-). கோடைகாலம் வரப்போகிறது. அடுத்த சந்திப்பு
எப்பொழுது.
//ஆளை வலையிலே பார்க்கவே முடியவில்லையே?//
கார்த்திக், சட்டியில் இருந்தால் வந்துவிடும் ;-).
கார்த்திக், தங்கமணி, சு.ரா மாதிரி, கா.ரா என்றும், பெயரிலி செரிப்பூ என்றும் ஒரு 'இலக்கியவாதியின்' ரேஞ்சியிற்கு உங்களை உயர்த்தப்பார்க்கின்றனர். இந்தச் சூழ்ச்சியிற்கு எல்லாம் மயங்கிவிடாதீர்! திருமணஞ்செய்தாப்பிறகுதான் 'இலக்கியவாதி'க்கு மதிப்பு. முதலே இப்படி என்று தெரிந்தால் ஒருவர் கூட பெண்கூடத்தரமாட்டீனம் (உமது பாலிசி 'மனைவியைக் காதலி' என்றிருப்பதாலும்) பிறிதொருகாலத்தில், சந்திரமுகி வடிவேல் மாதிரி, 'வைச்சிட்டங்களய்யா ஆப்பு' என்று நீர் கவலைப்படகூடாது என்பதாலும், நகுதல் பொருட்டன்று நட்பு மிகுதிக்கண் என்று வள்ளுவனாரும் கூறியிருப்பதாலும் இதை எழுதுகின்றேன். (பக்கத்து இலைக்கு பாயசம் என்று ஏனய்யா டிசே இப்படி அலைகின்றீர் என்று அவுஸ்திரேலியாவிலிருந்து வசந்தன் முணுமுணுப்பதும் எனக்குக் கேட்கிறது :-) )
......
மேலே பின்னூட்டம் இட்டவர்கள், பெயரிலியிற்குப் 'புகழ்' மாலை சூட்டியிருப்பதால் அவருக்கு இனி ஒருவாரத்திற்கு தூக்கம் வராது என்பது புரிகின்றது. ஆனால் அதற்காய் ஒரு உண்மையை மறைக்கமுடியாது. பெயரிலியின், மேலேயுள்ள படம், பெயரிலி பதினைந்து வருடஙக்ளுக்கு முன் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படித்தபோது எடுக்கப்பட்டது. அதைத்தனது வழமையான வெட்டி ஒட்டி திறமையால், தற்போதைய தோற்றத்தை மறைத்து இங்கே பொருத்தியிருக்கின்றார் :-). இந்த உண்மையை நேரில் கண்டறிந்த கார்த்திக், இது குறித்து எதுவும் கூறாது
மெளனஞ்சாதிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்!
டிசே பக்கத்து இலைக்கு பாயாசம்தான். நீங்கள் கலியாணத்துக்கு அலையோ அலையெண்டு அலையிறதைப் பாத்தா (முதல் கலியாணம் தானே?) நீங்களும் கொஞ்சம் சின்னப்பெடியனாத்தான் இருப்பீங்கள் எண்டு நம்பிறன். அதுசரி கனடாவிலும் புளொக்குக் கூட்டம் ஒண்டு கூட்டுறதுதானே?
<:((((> நாங்களும் கொஞ்சம் படம் எடுத்து புளொக்கியல போடலாம். ஆனால் பெயரிலி வந்தா அவற்ர கையில கமெரா குடுக்கக் கூடாது. எல்லாம் ஒரே கறுப்புக் கறுப்பா எடுத்திருக்கிறார். பிறகு கறுப்பி படித்துக்க வராமல் போயிடுவன்.
now we know who is (not) who :)
//Cherry Stoned to his Basic Instinct Pose//
Super! :p
பெயரிலித் தாத்தா ஊரையே ஏய்க்கிறார் போலக் கிடக்கு!
//பெயரிலியின், மேலேயுள்ள படம், பெயரிலி பதினைந்து வருடஙக்ளுக்கு முன் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படித்தபோது எடுக்கப்பட்டது. அதைத்தனது வழமையான வெட்டி ஒட்டி திறமையால், தற்போதைய தோற்றத்தை மறைத்து இங்கே பொருத்தியிருக்கின்றார் :-). //
இப்ப விளங்குது. நன்றி டிஜே.
அந்த வித்தையை எங்களுக்கும் சொல்லிக்கொடுத்தால் நாங்களும் டொரோண்டோவில சந்திக்கேக்க ஏதாவது செஞ்சு ஊரை ஏமாத்தலாம்!
//இந்த உண்மையை நேரில் கண்டறிந்த கார்த்திக், இது குறித்து எதுவும் கூறாது
மெளனஞ்சாதிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்! //
செர்ர்ர்ர்ர்ரி,
என்னப்பா லஞ்சம் கொடுத்தார். இப்படி வாய்க்குள் கொழுக்கட்டை வைத்ததுபோல இருக்கிறீரே?
ரமணிக்குப் பிடித்த :சுவரில் முட்டிக் கொள்கிறேன்:
தமிழ் இணைய ்ஷாரன் ஸ்டோன் உண்மையச் சொன்னாத் தேவலை!
[பை த பை, புதுப் படப்பிடிப்பு எப்படிப் போகிறது? ;)]
//
//செர்ரிப்பூவும் தலைக்குமேலே எரியாத மேசைவிளக்கும்//
எரிந்திருந்தால் தலைக்குப் பின் ஒளிவட்டம் பிரகாசித்திருக்கும்போல!
//பை த பை, புதுப் படப்பிடிப்பு எப்படிப் போகிறது? ;)//
ஒன்னும் சரியாப் போகல; என்ன டமாரம் பலமா அடிப்பதா முடிவா? கனடாவிலே எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் , என்ன செய்யலாம்?
////இந்த உண்மையை நேரில் கண்டறிந்த கார்த்திக், இது குறித்து எதுவும் கூறாது
மெளனஞ்சாதிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்! ////
அட, நானே முதலில் ஆளைப்பார்த்தவுடனே இதைத்தான் விசாரிச்சேன். அண்ணே, அந்த இளமையின் ரகசியத்தை காதுல கொஞ்சம் கடியுங்களேன்னு. ஆள் அம்புட மாட்டேன்னுட்டார். கந்தையரிடம் தனிமடல் எழுதனும் போல் இருக்கே?
//முதலே இப்படி என்று தெரிந்தால் ஒருவர் கூட பெண்கூடத்தரமாட்டீனம் //
அடக்கடவுளே , அப்படியா நிலமை உங்களுக்கு?
அடப்பாவி மக்கா...
இங்கன பெரிய கலாட்டா நடக்குதா....
பெயரிலி: போட்டீங்களே ஒரு போடு..போட்டோ மூலமா..
கார்த்திக்://ஒன்னும் சரியாப் போகல; என்ன டமாரம் பலமா அடிப்பதா முடிவா? கனடாவிலே எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் , என்ன செய்யலாம்?//
ஒண்ணும் செய்ய முடியாது. இப்போ செர்ரி"பூவை" பிடிக்க ஆரம்பிச்சது உலகத்துக்கே தெரியும் ராசா...
//தேனீர்க்கோப்பைகள், சில கண்ணாடிகள் & பல விம்பங்கள்//-ன்னு உக்கார்ந்துட்டு சீட்டாட்டமெல்லாம் ஒன்னுமில்லையா? ;-)) [இந்த மாதிரி மக்கள் வட்டமா உட்கார்ந்திருக்கறதக் கண்டதும் எங்கூர் பக்கம் பார்க்கற சீட்டாட்டம் ஞாபகம் வந்துருச்சு அவ்ளோதான்! :-)]
படங்களுக்கு நன்றி!
//சுமாராய் சென்ற ஆண்டின் இறுதியிலே, ஜெயமோகன் - கலைஞர் மோதலிலே , சூடு பறக்கும் போதே கலைஞரை கடித்து(பதிவுகளிலே//
மேலே நான் சொல்லியிருந்ததில் 2 தகவல் பிழைகள் இருப்பதாய் நினைக்கிறேன்.
1. அது சென்ற ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் இறுதி என்று நினைக்கிறேன்.
2. பதிவுகளிலே என்பது பதிவுகள் விவாத் களத்திலே என்று இருக்க வேண்டும்.
அவசரகதியில் எழுதியதால் வந்தது. மன்னிக்கவும்.
ஆர் அடிக்கிறாங்கள் ஆர் அணைக்கிறாங்கள் எண்டு தெரியாமல், கருத்து விழுந்திருக்கு. அடியெண்டால், சந்திப்புக்கு வந்த எல்லாருக்கும்; அணைப்பெண்டால், எனக்குமட்டும்.
ஆஹா.. இதை எப்படியய்யா விட்டேன் நான். இப்பத்தான் பார்த்தேன். இன்னாய்யா, அமெரிக்காவில ஒரு 'குடி' மகனும் இல்லையா, இல்ல இமேஜ்க்காக டீக் கோப்பையில் பக்கார்டி ரம்மா ;-) சரி விடுங்க. உங்க எல்லாரையும்விட நான் சின்ன பையன்தான் (எவன்லே குரல் கொடுக்கறது ஊடால, போட்டோலாம் கிடையாது... இகாரஸ் பிரகாஷ் மனசு வைக்கணும் :) )
//ஆர் அடிக்கிறாங்கள் ஆர் அணைக்கிறாங்கள் எண்டு தெரியாமல்,//
அடிக்கக் கூட சிலர் வரலையே அது போதாதா? தெரிந்து கொள்ள ;-)
எழுத்துக்கும் வயதுத் தோற்றத்துக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை என்பது இப்போதுதான் புரிகிறது.
ஹி! ஹி!! வயதும் தோற்றமும் வேறைவேறை; கமராவால் காண்பதும் பொய்; கார்த்திக்கிடம் கேட்டாலும் பொய்; தீர விசாரிச்சும் அறியவெண்டால், விடுவனோ நான்? பிறகு, உம் கண் உம்மை ஏமாற்றினால், என்மேல் கோபம் உண்டாகக்கூடாது.
கமராவால் காண்பதும் பொய்; கார்த்திக்கிடம் கேட்டாலும் பொய்; தீர விசாரிச்சும் அறியவெண்டால், விடுவனோ
எது உண்மை...?
போட்டா எல்லாம் நல்லா இருக்குங்க.
///பாலு மணிமாறன் கருத்து:
oooppppsssssssssss....பெரியவாள் தப்புக்கு மன்னிக்கனும்...........திருப்பிப்பார்த்தல் ஒரு சுகமான அனுபவம்தான்...காசி முகத்தை உத்து உத்து பார்த்தேன் - காரணம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் எங்கூட படிச்சவரா இருந்திருப்பாரோ என்ற யோசனையில்தான்...ம்ம்ம்... ஒரு முடிவுக்கும் வர முடியல போங்க !//
பாலுமணிமாறன்,
காசிக்கு ரொம்ப பக்கத்துல வந்துட்டிங்க போலிருக்கே.காசி பொள்ளாச்சியில் படித்தது படிச்சது அந்தப் பாலிடெக்னிக்லில்தான்.
http://kasiblogs.blogspot.com/2004_01_01_kasiblogs_archive.html#107427546478798871
Post a Comment